புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெட்டி வேரின் பயன்கள் Poll_c10வெட்டி வேரின் பயன்கள் Poll_m10வெட்டி வேரின் பயன்கள் Poll_c10 
44 Posts - 41%
heezulia
வெட்டி வேரின் பயன்கள் Poll_c10வெட்டி வேரின் பயன்கள் Poll_m10வெட்டி வேரின் பயன்கள் Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
வெட்டி வேரின் பயன்கள் Poll_c10வெட்டி வேரின் பயன்கள் Poll_m10வெட்டி வேரின் பயன்கள் Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
வெட்டி வேரின் பயன்கள் Poll_c10வெட்டி வேரின் பயன்கள் Poll_m10வெட்டி வேரின் பயன்கள் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
வெட்டி வேரின் பயன்கள் Poll_c10வெட்டி வேரின் பயன்கள் Poll_m10வெட்டி வேரின் பயன்கள் Poll_c10 
5 Posts - 5%
Raji@123
வெட்டி வேரின் பயன்கள் Poll_c10வெட்டி வேரின் பயன்கள் Poll_m10வெட்டி வேரின் பயன்கள் Poll_c10 
3 Posts - 3%
prajai
வெட்டி வேரின் பயன்கள் Poll_c10வெட்டி வேரின் பயன்கள் Poll_m10வெட்டி வேரின் பயன்கள் Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
வெட்டி வேரின் பயன்கள் Poll_c10வெட்டி வேரின் பயன்கள் Poll_m10வெட்டி வேரின் பயன்கள் Poll_c10 
2 Posts - 2%
Barushree
வெட்டி வேரின் பயன்கள் Poll_c10வெட்டி வேரின் பயன்கள் Poll_m10வெட்டி வேரின் பயன்கள் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
வெட்டி வேரின் பயன்கள் Poll_c10வெட்டி வேரின் பயன்கள் Poll_m10வெட்டி வேரின் பயன்கள் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெட்டி வேரின் பயன்கள் Poll_c10வெட்டி வேரின் பயன்கள் Poll_m10வெட்டி வேரின் பயன்கள் Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
வெட்டி வேரின் பயன்கள் Poll_c10வெட்டி வேரின் பயன்கள் Poll_m10வெட்டி வேரின் பயன்கள் Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
வெட்டி வேரின் பயன்கள் Poll_c10வெட்டி வேரின் பயன்கள் Poll_m10வெட்டி வேரின் பயன்கள் Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
வெட்டி வேரின் பயன்கள் Poll_c10வெட்டி வேரின் பயன்கள் Poll_m10வெட்டி வேரின் பயன்கள் Poll_c10 
21 Posts - 5%
prajai
வெட்டி வேரின் பயன்கள் Poll_c10வெட்டி வேரின் பயன்கள் Poll_m10வெட்டி வேரின் பயன்கள் Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
வெட்டி வேரின் பயன்கள் Poll_c10வெட்டி வேரின் பயன்கள் Poll_m10வெட்டி வேரின் பயன்கள் Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
வெட்டி வேரின் பயன்கள் Poll_c10வெட்டி வேரின் பயன்கள் Poll_m10வெட்டி வேரின் பயன்கள் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வெட்டி வேரின் பயன்கள் Poll_c10வெட்டி வேரின் பயன்கள் Poll_m10வெட்டி வேரின் பயன்கள் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வெட்டி வேரின் பயன்கள் Poll_c10வெட்டி வேரின் பயன்கள் Poll_m10வெட்டி வேரின் பயன்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வெட்டி வேரின் பயன்கள் Poll_c10வெட்டி வேரின் பயன்கள் Poll_m10வெட்டி வேரின் பயன்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெட்டி வேரின் பயன்கள்


   
   
udhayam72
udhayam72
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 348
இணைந்தது : 26/09/2013

Postudhayam72 Tue Aug 07, 2018 8:25 pm

வெட்டி வேரின் பயன்கள்

வந்த முகப் பருக்களை விரட்டியடிப்பதிலும், பரு வராமலே தடுப்பதிலும் ஒரு எக்ஸ்பர்ட் வெட்டிவேர்!

முகம் முழுக்க அடிக்கடி பருக்கள் தோன்றி அவதிப்படுகிறவர்களுக்கு, அருமருந்தாக திகழ்கிறது இந்த வெட்டிவேர் விழுது...

சிறு துண்டுகளாக்கின வெட்டிவேர் \ ஒரு டீஸ்பூன், கொட்டை நீக்கியகடுக்காய் & 1... இந்த இரண்டையும் முந்தின தின இரவே கொதிநீரில் ஊறவையுங்கள். மறுநாள் இதை அம்மியில் அரைத்து, அந்த விழுதை பருக்கள் மீது முழுவதுமாக மறைப்பதுபோல் தடவுங்கள்.

ஒருநாள் விட்டு ஒருநாள் இப்படிச் செய்து வந்தாலே பருக்கள் உதிர்ந்து விடும். பருக்கள் இருந்த வடுவும் தெரியாது என்பதுதான் இந்த சிகிச்சையின் சிறப்பம்சம்!

பழைய பருக்கள் ஏற்படுத்திவிட்டுப் போன தழும்புகளால், சிலருக்கு முகம் கரடு முரடாக இருக்கும். அதற்கான நிவாரணம் இதோ...

ஒரு பிடி வெட்டிவேரை சிறு துண்டுகளாக்கி வெந்நீரில் போட்டு மூடுங்கள். ஒரு இரவு இது ஊறட்டும். மறுநாள் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விடுங்கள். முந்தின நாள் ஊறவைத்த வெட்டிவேரையும் தண்ணீரையும் தனியே பிரித்து வையுங்கள்.

இப்போது கொதிநீரில் வெட்டிவேரைப் போட்டு ஆவி பிடியுங்கள். அப்படியே முகத் தைத் துடைக்காமல், வெட்டிவேர் ஊறின தண்ணீரில் சுத்தமான வெள்ளைத் துணியை அமிழ்த்தி,பிழிந்துமுகத்தை ஒற்றி எடுங்கள்.

வாரம் இருமுறை இப்படிச் செய்து வந்தால், தழும்புகள் மறைந்துவிடும்.

சிலர் எப்போது பார்த்தாலும் வியர்வையில் குளித்திருப் பார்கள். அதனாலேயே பருக்களும் அதிகமாக இருக்கும். அவர்களுக்கான ஒரு ஸ்பெஷல் ‘பேக்’ இது...

வெட்டி வேர், ரோஜா மொட்டு, மகிழம்பூ, செண்பகப்பூ, சம்பங்கி விதை... இவற்றை சம அளவு எடுத்து மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள் (இவற்றை எவ்வளவுதான் அரைத்தாலும் திப்பி திப்பியாக இருக்கும். இதை நன்றாக சலித்து, நைஸான பவுடரை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்). இந்தப் பவுடரை தண்ணீரில் குழைத்து முகத்தில் பூசி, கழுவுங்கள்.

வெட்டிவேர் முகத்தில் உள்ள எண்ணெய்பசையை எடுத்துவிடும். சம்பங்கி விதை முகத்துக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். சோர்வைப் போக்கி நிறத்தைக் கொடுக்கிறது ரோஜா மொட்டு. மகிழம்பூவும், செண்பகப்பூவும் வியர்வை நாற்றத்தைப் போக்கி வாசனையை கொடுக்கிறது.

சிலருக்கு தோள்பட்டையிலும் முதுகுப் புறங்களிலும்பரு போன்ற சிறு கட்டிகள் இருக்கும். சில ஆண் களுக்கு உடலில் வரி வரியாக இருக்கும்.

இந்த இரு பிரச்னை களுக்குமான ஒரே தீர்வு வெட்டி வேரில் இருக்கிறது.

பச்சைப் பயறு & 100 கிராம், சிறு துண்டுகளாக்கின வெட்டிவேர் & 50 கிராம்... இந்த இரண்டையும் சேர்த்து நன்றாக அரையுங்கள். இந்தப் பவுடரை உடலுக்குத் தேய்த்துக் குளியுங்கள்.

தினமும் இப்படி குளித்து வந்தாலே சிறுகட்டிகளும் வரிகளும் ஓடிப் போகும். சருமமும் மிருதுவாகும்.

அப்போதுதான் குளித்துவிட்டு உற்சாகமாக வந்தாலும் முகம் முழுக்க எண்ணெய் வழிந்து உங்களை டல்லாக்குகிறதா? வாரம் இருமுறை தலைக் குளியலுக்கு இந்த வெட்டிவேர் பவுடரை உபயோகியுங்கள். உடனடியாக வித்தியாசம் தெரியும்.

வெட்டிவேர் & 100 கிராம், வெந்தயம் & 100 கிராம்... இரண்டையும் சீயக்காய் மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் தேய்த்து குளிக்கும் போதெல்லாம் சீயக்காய்க்குப் பதில் இந்த பவுடரை பயன்படுத்துங்கள்.

தொடர்ந்து இதைச் செய்தாலே முகத்தில் எண்ணெய் வழியாது. அதோடு, உங்கள் கூந்தலின் நறுமணத்தால் ஏரியாவே மணக்கும்!

udhayam72
udhayam72
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 348
இணைந்தது : 26/09/2013

Postudhayam72 Tue Aug 07, 2018 8:26 pm

கருப்பட்டியின் பயன்கள்:

பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால்… இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.

சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத்
தொல்லை நீங்கும்.

குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.

ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு. காபிக்கு சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால்… உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.

சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்… சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது.

udhayam72
udhayam72
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 348
இணைந்தது : 26/09/2013

Postudhayam72 Tue Aug 07, 2018 8:26 pm

சிவப்பணுக்களை உருவாக்கும் லிச்சி பழம் !!

லிச்சி பழம் நாம் அதிகம் அறியப்படாத பழம். சீனாவை பூர்வீகமாக கொண்ட இந்த பழம் இந்தியா, வங்கதேசம் போன்ற நாடுகளில் அதிகமாக கிடைக்கிறது.

லிச்சி பழம் சிவப்பு நிறத்தில் ஒரு பெரிய விதை போல மூடபட்டு இருக்கும் அதனுள்ளே வெள்ளை நிறத்தில் பழம் உள்ளது. முட்டை வடிவத்தில் இருக்கும். இது பல ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது. லிச்சிபழம் வெப்ப மண்டல பகுதிகளில் காணப்படுகிது.

எதற்காக லிச்சி பழத்தை உடல் நலம் தரும் பழம் என கருதுகிறோம்?

லிச்சி பழத்திலிருந்து கிடைக்கும் கலோரி 76. புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கால்ஷியம், மாவுச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு, தையாமின், ரிபோப்ளோவின், நியாசின், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.

மலச்சிக்கலை கட்டுப்படுத்தி குடலின் தசைநார்களை சீராக இயங்க வைக்கும். நார்ப்பொருள் 0.5 கிராமும், எலும்பு, பல் பலம் பெற உதவும் கால்சியம் 10 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 35 மிகி, இரும்பு சத்து 0.7 மிகி உள்ளது என்கிறார்கள் உணவுச் சத்து நிபுணர்கள்.

இதயமும், ஈரலும் உடலின் பிரதான பாகங்கள். இந்த இரண்டு உடல் உறுப்புகளையும் ஆரோக்கியமாக வைப்பதில் லிச்சிக்கு முதலிடம்.

பொதுவாக லிச்சி மரத்தின் பழம், விதை, பூ, வேர்ப்பட்டை ஆகிய அனைத்துக்கும் மருத்துவ பயன்பாடு அதிகம்.

லிச்சி பழத்தை தினமும் உண்டு வந்தால் இதயம் நல்ல ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாப வேலை செய்யும். லிச்சியின் பழச்சாறு ஈரலுக்கு உரம் ஊட்டும். தாகத்தை தணிக்கும்.

6நோய் எதிர்ப்பு சக்தி:-

லிச்சி பழம் வைட்டமின் சி யை ஆதாரமாக உள்ளது. இதில் வைட்டமின் சி, மற்றும் ஆண்டியாக்ஸிடண்ட்களை கொண்டுள்ளதால் நோயை எதிர்க்க கூடிய ஆற்றலை பெற்றுள்ளது.

இது இருமல், சளி, காய்ச்சல், போன்ற பொதுவான நோய்களுக்கு எதிராக போராடி உடலுக்கு தேவையான பாதுகாப்பை அளிக்கிறது.

மேலும் நோய் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கும் சிறந்த பழமாகும்.

ரத்த உருவாக்கத்தை அதிகப்படுத்துகிறது:-

தினமும் ஒரு லிச்சி பழம் சாப்பிட்டு வந்தால் ரத்த உருவாக்கம் அதிகமாகும்.

ஏனெனில் சிவப்பணுக்கள் உருவாவதற்கு தேவையான மாங்கனீசு, மெக்னீசியம், தாமிரம், இரும்பு மற்றும் ஃபோலேட் போன்ற அனைத்தையும் வழங்குகிறது.

மேலும் வைட்டமின் சி கொண்டுள்ளதால் இரும்பு சத்துகளை உரிஞ்சும் திறன் கொண்டு செயல்படுகிறது. தினமொரு லிச்சி பழத்தை சாப்பிட்டு உடலை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

udhayam72
udhayam72
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 348
இணைந்தது : 26/09/2013

Postudhayam72 Tue Aug 07, 2018 8:26 pm

விஷத்தை வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு

இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது. அதை முறையாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு அதில் உள்ள மருத்துவ குணங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

வேப்பிலை, வில்வம், அத்தி, துளசி, குப்பைமேனி, கண்டங்கத்தரி, கீழாநெல்லி, வசம்பு என சொல்லிக் கொண்டே போகலாம். இதில் பிள்ளை வளர்ப்பான் என்று அழைக்க கூடிய வசம்பின் மருத்துவ குணத்தைப் பார்க்கலாம்.

அகோரஸ் காலமஸ் (Acorus Calamus) என்ற அறிவியல் பெயர் கொண்ட இது ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக் (Sweet Flag) என்று அழைக்கப்படுகிறது. பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப்பது இந்த வசம்பைத் தான். கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது.

* சுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமிநாசினியாக பயன்படுத்தலாம்.

* வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

* இதில் முக்கிய விஷயமாக சொல்ல வேண்டுமென்றால் வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டுய, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் விஷம் வெளியே வந்து விடும்.

* கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது.

* பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பசியைக் கொடுக்கவும், சோம்பலை நீக்கவும் வசம்பு பயன்படுகிறது.

udhayam72
udhayam72
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 348
இணைந்தது : 26/09/2013

Postudhayam72 Tue Aug 07, 2018 8:27 pm


மூலிகை நீர் - இய*ற்கை வைத்தியம்:

ஆவாரம்பூ நீர்:

“ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்ட துண்டோ” என்ற பழமொழிக்கு ஏற்ப நீரிழிவுக்கு ஆவாரைப்பூவின் அற்புதத்தை அறியலாம். மஞ்சள் நிறமுள்ள இப்பூ தங்கச்சத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆவாரம்பூ சுவை நீர் நீரிழிவு, பெரும்பாடு, குடற்புண், நீர்க்கடுப்பு, வெள்ளைப்போக்கு ஆகியன வராமல் தடுக்கிறது. நூறு மில்லி நீரில் பத்து ஆவாரம் பூக்களை போட்டு காய்ச்சி, வடிகட்டி காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து தேவையெனில் காபித்தூள் அல்லது டீத்தூள் கஷாயத்தில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் குடிக்கவும்.

கரிசாலை நீர்:

சிறுநீரக செயலிழப்பு, அதிக இரத்தக் கொதிப்பு, புற்றுநோய், காச நோய், வெண்புள்ளி, எலும்பு தேய்மானம் ஆகியன வராமல் கரிசாலை சுவைநீர் தடுக்கிறது. மேற்சொன்ன ஆவாரம்பூ சுவை நீர் தயாரிப்பதுபோல் ஆவாரம்பூத் தூளுக்குப் பதிலாக கரிசாலைதூளை இரண்டு கிராம் போட்டுக் கொள்ளவும். தினசரி காலையில் மட்டும் கரிசாலைச்சுவை நீர் அருந்தி வரவும்.

செம்பருத்தி நீர்:

செம்பருத்தி பூ நீர் இதய சுவர் ஓட்டை, இதய வால்வு, தேய் மானம், வழுக்கை, இரத்த சோகை ஆகியன வராமல் தடுக்கிறது. இது மாதவிடாய் கோளாறுகளை சரி செய்கிறது. குடல் இறக்கம், கர்ப்பப்பை இறக்கம் ஏற்படாதும் தடுக்கிறது.
காய்ச்சிய பாலை அடுப்பிலிருந்து இறக்கி வைத்து அதில் அடுக்கு செம்பருத்திப்பூ இதழ்கள் ஐந்து போட்டுப் பத்து நிமிடம் பாலை மூடி வைத்து பின் வடிகட்டி விட வும். பால் சிவப் பாகி இருக்கும். இனிப்பு சேர்த்து வடிகட்டி காலையிலும், மாலையிலும் குடிக்கவும். சளி தொந்தரவு உள்ளவர்கள் பால் காய்ச்சும் போது தோல் நீக்கிய சிறு துண்டு இஞ்சியை நசுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

நன்னாரி நீர்:

“தோன்றும் மழலைகள் உத்தாமணி வேரால், தோல் நோய்கள் மடிவது நன்னாரி வேரால்” என்பதன் மூலம் நன்னாரியின் நற்பண்பை நவிலலாம். நூறு மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து உபயோகிக்கவும்.

துளசி நீர்:

குடல் காய்ச்சல், மஞ்சள் காமாலை, மலேரியா, காலரா நோய்கள் வராமல் துளசி சுவை நீர் தடுக்கும். மேலும் குடல்வால் அழற்சி ஏற்படாது. காய்ச் சிய நூறு மில்லி சூடான பாலில் இரண்டு கிராம் துளசி இலை பொடியைக் கலந்து, மூடி வைத்து பத்து நிமிடங்கள் சென்று இனிப்பு சேர்த்து,தேவை யெனில் காபி அல்லது டீ கஷாயம் சேர்த்து வடிகட்டி தினசரி காலையில் மட்டும் குடிக்கவும். அடிக்கடி பல ஊர்கள் தண்ணீர் குடிப்போரும், தொற்று நோய்கள் பரவும் காலங்களிலும் இந்த துளசி சுவை நீரை பயன்படுத்தி பலன் பெறலாம்.

வல்லாரை நீர்:

யானைக்கால், வலிப்பு, மலடு, பக்கவாதம், மூலம், மூட்டுவலி, இரத்தக்குழாய் தடிப்பு போன்ற நோய்கள் வராமல் வல்லாரை சுவை நீர் தடுக்கும். “காய சித்திக்கு புளியாரை„ கபால கோளாறுக்கு வல்லாரை” என்பார்கள். வல்லாரை இலைப்பொடி இரண்டு கிராம் எடுத்து மேற்கண்டுள்ள துளசி சுவை நீர் தயாரிப்பதுபோல் வல்லாரை சுவை நீர் தயாரித்துக் கொள்ளவும். காலை, மாலை இருவேளையும் குடிக்கவும். எல்லோருக்கும் என்றும் ஏற்றது வல்லாரை சுவை நீராகும். இச்சுவை நீர்கள் குறிப்பிட்டுள்ள நோய்கள் வராமல் தடுக்கவும், குணப்படுத்தவும் கூடியது. எனவே நோயுள்ளோரும், பயன்படுத்தி பயன் பெறலாம்.

udhayam72
udhayam72
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 348
இணைந்தது : 26/09/2013

Postudhayam72 Tue Aug 07, 2018 8:27 pm

(1) கரு உற்பத்தி(Baby form)
=============================================
=============================================

கருத்தோன்றும் சுக்கில நியாயம் யாதெனில்
========================================:- சுக்கிலம் இரண்டரை வராகனெடை யளவா யிருக்கும். அதில் விஷபாகமாகிய சத்தி 1; சாதாரண மென்னும் பூதமாகிய அறிவு 1; அசாதாரண அமுத மாகிய விந்து அரை - ஆக - இரண்டரை. இதுபோல் பெண்பாலிடத்தும் சுரோணிதமுளது. மேற்கண்ட சுக்கில சுரோணித மிரண்டினும் கடவுள் ஆவியுள்ளது. கோசத்தின் முன் விஷம், அதை அடுத்து பூதம், அதற்கு மேல் அமுதம் உண்டு. இவ்வாறு பெண்பாலிடத்து முண்டு.

முன்னுள்ள விஷபாகம் புணர்ச்சிக் காலையில் வெளிப்பட்டால் தேகநஷ்டம்; பூதம் வெளிப்பட்டால் வியாதி; அமுதம் வெளிப்பட்டால் சந்ததி விருத்தி. கடவுளருளால் காலச்சக்கரம் போல் ஏகதேசத்தில் கோச உபஸ்தங்களின் அமுதபாக நாடியை முன்னே தள்ளி, விஷாதிகளைப் பின்னே சேர்த்துக் கருத்தரிக்கச் செய்விப்பார். இந்த நியாயத்தால் இடைவிடாது புணருகிறவர்களுக்குக் கர்ப்பமில்லை. மேலும், விந்து வளம், இடவளம், வன்னி, கிருமி, மோக விசேடம் - இவற்றாலுங் கர்ப்ப மில்லை.
======================================================
======================================================
(2)சுக்கிலம் உண்டாவதற்குக் காரணம்:Reason for sperm creation )
====================================================
======================================================தினம் ஆகாரங்கொண்டால் அவ்வாகாரம் மார்பிடத்தில் ஓர் தட்டில் தங்கும். அந்தத் தட்டின் மேல் கடவுள் கடவுளி என்றிரண்டாகி யிருக்கிறது. உண்ட அன்னத்தை இரண்டரை நாழிகையில் - அந்த அன்னத்திலுள்ள அமுதைப் பிரித்து, ஊட்டவேண்டிய தத்துவத்திற்கு ஊட்டுகின்றது. மறுபடியும் ஐந்து நாழிகைக்குள் மேற்படி அன்னத்தினது மத்திய தரமாகிய நெகிழ்ச்சியைக் குறித்துச் சுக்கிலமாக்கி, இரண்டரை வராகனெடையில் கோசநுனியில் ஒன்றும் நாபியில் ஒன்றும் பிரமரந்திரத்தில் அரையுஞ் சேர்த்து, மற்றவைகளைக் கொண்டு அங்கங்கு விளக்கத்தை யுண்டு பண்ணி ஈளை குரும்பை நகத்தூசு தொப்புளழுக்கு கண்பீளை முதலான அழுக்கை வெளிப்படுத்துகின்றது. மேற்படி அன்னத்தை ஏழரை நாழிகைக்குள் - அதிலுள்ள திரவாம்சத்தைப் பிரித்து, உதிரமாக்கி யூட்டுகின்றது. ஏழரைக்குமேல் மேற்படி சக்கையை மலபாகத்தில் தள்ளி விடுகின்றது. இதுபோல் எந்த வஸ்துக்களையும் பிரிக்கின்றது. ஆதலால், ஆகாரங்கொண்ட ஏழரை நாழிகைக்கு மேல் ஆகாரங் கொள்ளவேண்டும்.

======================================================
=======================================================

மேற்கண்ட விபரம் வள்ளலார் அருளிய உபதேசக் குறிப்புகள் ஆகும் .

udhayam72
udhayam72
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 348
இணைந்தது : 26/09/2013

Postudhayam72 Tue Aug 07, 2018 8:28 pm

80 வகை வாத நோய்களும். அவற்றை தீர்க்கும் மூலிகைகளும்.

http://siddhasvirtualspritualwisdom....015/04/80.html



வாதம், பித்தம், கபம். மூன்றையும் சீராக வெய்க்க சீராண வழி

http://siddhasvirtualspritualwisdom....g-post_30.தம்ள
https://redirect.viglink.com/?format=go&jsonp=vglnk_153365391382844&key=6586e3f2fcdfbe565ade4db6185ef23d&libId=jkjtl4st0102ezra000DAn04278e2&loc=https%3A%2F%2Fwww.skyscrapercity.com%2Fshowthread.php%3Ft%3D1793525%26page%3D17&v=1&out=http%3A%2F%2Fsiddhasvirtualspritualwisdom.blogspot.in%2F2015%2F04%2F80.html&ref=https%3A%2F%2Fwww.skyscrapercity.com%2Fshowthread.php%3Ft%3D1793525%26page%3D18&title=%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20-%20Page%2017%20-%20SkyscraperCity&txt=http%3A%2F%2Fsiddhasvirtualspritualwisdom....015%2F04%2F80.தம்ள
https://redirect.viglink.com/?format=go&jsonp=vglnk_153365392419646&key=6586e3f2fcdfbe565ade4db6185ef23d&libId=jkjtl4st0102ezra000DAn04278e2&loc=https%3A%2F%2Fwww.skyscrapercity.com%2Fshowthread.php%3Ft%3D1793525%26page%3D17&v=1&out=http%3A%2F%2Fsiddhasvirtualspritualwisdom.blogspot.in%2F2015%2F04%2Fblog-post_30.html&ref=https%3A%2F%2Fwww.skyscrapercity.com%2Fshowthread.php%3Ft%3D1793525%26page%3D18&title=%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20-%20Page%2017%20-%20SkyscraperCity&txt=http%3A%2F%2Fsiddhasvirtualspritualwisdom....g-post_30.html

udhayam72
udhayam72
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 348
இணைந்தது : 26/09/2013

Postudhayam72 Tue Aug 07, 2018 8:29 pm

சிவன் எனும் ஓசையல்லது அறையோ உலகில் திருநின்ற செம்மை உளதே!’

நாவுக்கு அரசராம் அப்பர் பெருமானின் திருவாக்கு இது. சிவன் எனும் ஓசை அல்லாது உலகில் வேறொரு செம்மை உளதோ? இல்லை. முத்தி தரும் செம்பொருள் அவன் ஒருவனே. சிவநாமமே முழக்கத்துக்கு உரியது. அது செம்மையானது என்று அறிவுறுத்துகிறார் அவர்.

சிவம் என்ற சொல்லுக்கு அன்பு, உயர்வு, கடவுள், பிரம்மம், மகிழ்ச்சி, நித்ய யோகம், நன்மை, பசு, வேதம், மங்கலம் ஆகிய பல பொருள்கள் உண்டு. இப்படிப் பரவலாக இருக்கும் ஒன்றை- ஒரு பொருளை- இறை வனை 'சிவம்’ என்ற சொல்லால் அழைத்தனர். தோற்றம், பிறப்பு, அவதாரம், வளர்ப்பு, பால் வேறுபாடு போன்ற மாசு மலங்கள் இல்லாமல், எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட தூய்மையான - மங்கலமான செம்பொருளே சிவபெருமான்.

இப்படி எல்லாமுமாகி நிற்கும் பரம்பொருளுக்கு லிங்க வடிவம் எதற்கு? அதன் அரும்பெரும் தத்துவம்தான் என்ன?

உலகங்களுக்கு கருணை செய்யவே சிவபிரான் லிங்க வடிவில் விளங்குகிறார். உருவ திருமேனிக்கும், கண்ணுக்குப் புலப்படாத அருவ திருமேனிக்கும் மூலமான சிவபெருமானை வழிபடுவதற்கு, ஓர் அடையாளமாக விளங்குவது சிவலிங்கம்.

லிங்கம் என்றால் குறியீடு அல்லது சித்திரித்தல் என்று பொருள். லிங் - லயம்; கம் - தோற்றம். அதாவது, உலகம் தோன்றி ஒடுங்கும் இடம். உலக முடிவில் அண்டசராசரங்களும் லயிப்பதற்கு உரிய இடம் என விளக்குகின்றன ஞானநூல்கள். லிங்கம் என்பதற்கு பிரகாசம் என்றும் பொருள் உண்டு. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் பஞ்ச கிருத்தியங்களால்- ஐந்து தொழில்களால் உலகைப் பிரகாசிக்கச் செய்வது. எனவே, லிங்க வடிவம் என்பது சிவபரம்பொருளுக்கு உரிய அடையாளம்.

லிங்க வழிபாடு இந்தியாவில் மாத்திரம் காணப்படுவது அன்று. முற்காலத்தில் உலகின் எல்லாப் பகுதிகளிலும் சிவலிங்க வழிபாடு சிறப்புற்றிருந்தது.

'தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என்பது மாணிக்கவாசகரின் அருள்வாசகம். விச்வேச்வரன் சர்வேச்வரன் என்ற திருப்பெயர்கள் உலகத்துக்கெல்லாம் இறைவனாக, எல்லோருக்கும் கடவுளாக ஈசன் விளங்குவதை வலியுறுத்துகின்றன.

பாரத நாடு ஜம்புத் தீவின் ஒரு பகுதி என்று வடமொழி ஸ்லோ கம் கூறுகிறது. 'ஜம்பூத்வீபே - பாரத வர்ஷே - பரதக் கண்டே...’ என்று சங்கல்பத்தில் வருகிறது அல்லவா?

இந்திய நாட்டோடு தொடர்புற்று, தெற்கே விரிந்து அகன்று மேருவை மையத்தில் உடையதாகக் கொண்டு திகழ்ந்த நிலப்பரப்புக்கு**ஜம்பூத்வீபம் - சம்புத்தீவு என்று பெயர். ஜம்புத்தீவை நாவலம் தீவு என்கின்றன தமிழ் இலக்கியங்கள். அதாவது இன்றைய ஆசியாவும், ஐரோப்பாவும் சேர்ந்த பகுதியான யூரேஷியா, அன்றைய ஜம்புத் தீவாக விளங்கியது. இந்த சம்புத் தீவு என்பது சிவன் தீவு என்பதாகும். சம்பு - சிவன்.



வட அமெரிக்காவில் கொலராடோ என்னும் ஒரு ஆறு ஓடுகிறது.

நிலத்தை ஒரு மைல் ஆழம் வரையில் அரித்து ஓடிக் கொண்டிருக்கிறது. இதன் கரையில் உள்ள குன்றின் மீது சுமார் 10,000 ஆண்டுகள் பழைமையான ஒரு சிவாலயத்தை, 1937-ம் ஆண்டில் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். இந்த ஆலயம் குறித்த கட்டுரைகள் லண்டன், அமெரிக்கா, இலங்கை, முதலான நாடுகளில் உள்ள செய்தித்தாள்களில் வெளிவந்துள்ளன. 'பிமிழிஞிஹி கிவிணிஸிமிசிகி’ என்னும் நூலை எழுதிய 'சமன்லால்’ என்பவர், அமெரிக்காவின் பல பாகங்களிலும் இன்னும் சிவலிங்க வழிபாடு இருப்பதை நன்கு எடுத்து விளக்கியுள்ளார்.

சிவன் வழிபாடு மேற்கு ஆசியா, கிரீஸ், ரோம் ஆகிய நாடுகளில் மிகப் பழங்காலத்திலேயே பரவியிருந்தது. பின்லாந்தில் வாழும் துரானிய வகுப்பைச் சார்ந்த மக்களின் காத்தற் கடவுள் சிவன். பண்டைய நாட்களில் எகிப்து, பாபிலோன், கிரீஸ், ரோம் முதலான நாடுகளில் லிங்கங்கள் தீவினையை ஓட்டும் அணிகலன்களாக அணியப்பட்டன. பெரும்பாலும் பெண்களே லிங்கங்களை அணிந்தனர். இதனால் மலட்டுத்தன்மை நீங்கும் என்றும், தீய ஆவிகள் அணுகாது என்றும் மக்கள் நம்பி வந்தார்கள்.

ரோமரும் எகிப்தியரும் சிவலிங்கங்களை 'பிரியாபஸ்’ என்ற பெயரில் வணங்கினர். 'பிரியாபஸ்’ எனும் சிவலிங்கங்களை நாட்டி கோயில் அமைத்தார்கள். இஸ்ரேலியர்கள் சிவலிங்கத்துடன் நந்தியையும் வழிபட்டிருக்கிறார்கள்.

லிங்க வழிபாடு ரோமானியர்களுடன் பிரான்சுக்கும் சென்றது. இன்றும் லிங்கங்களின் வடிவங்களை அங்குள்ள கிறிஸ்து ஆலயக் கட்டடங்களில் காணலாம். அலெக்சாந்தரியாவில் 'தாலமி’ என்பவர் நடத்திய விழாவில், 129 முழம் உயரமுடைய லிங்கம் வீதிவலம் கொண்டு செல்லப்பட்டதாம். கிரேக்க நாட்டில் 'பக்கஸ்’ என்ற சமய விழாவில் லிங்கத்தை வீதி வலமாகக் கொண்டு சென்றிருக்கிறார்கள். இந்த விழா இத்தாலியிலும் பரவியிருந்தது. பக்கஸ் என்னும் கடவுளுக்கு, இடபமும் புலியும் மிகவும் பிரியமானவை. பக்கஸ் கடவுள் புலித் தோலை உடுத்தி, கையில் திரிசூலத்தையும் வைத்திருப்பார். அவர் கையில் கபாலமும் உண்டு என்ற தகவல் வியப்பளிக்கிறது.

மேற்கு ஆசிய நாடுகளில் இடபம் (நந்தியும்) வழிபாட்டில் இருந்துள்ளது. கிரேக்கர்களின் 'தயோனிசிஸ்’ எனும் கடவுள் இடப கடவுளாகவே இருந்தார்.

நமது ஜோதிட சாஸ்திரத்தில் இடபம் என்பது வைகாசி மாதத்தைக் குறிக்கும் சொல்லாகும். கிரேக்கர்கள் இடபத்தை 'எபாபஸ்’ எனும் பெயரால் வழிபட்டனர். இவ்வடிவம் அவர்களின் பழைய நாணயங்களிலும், கட்டடங்களிலும் காணப்படுகிறது. அமேனியரின் 'மொலொச்’ எனும் கடவுள் வடிவம் இடபமாகும். யூத மக்களும் ரிஷபத்தை வணங்கியுள்ளனர். இவ்வாறு மத்திய தரைக்கடலைச் சூழ்ந்த எல்லா நாடுகளிலும் இடபம் வழிபடப் பெற்றது.

சிரியா மக்கள், தாங்கள் முழுமுதலாக வழிபட்ட தந்தைக் கடவுளுக்கு 'அதாத்’ (ஆதி) என்று பெயரிட்டு வணங்கினர். அந்தக் கடவுள் தாடியுடையதாகவும் இடபத்தின் மேல் அமர்ந்த நிலையிலும் காணப்படுவார். வலது கையில் மழுவையும் இடது கையில் சூலத்தையும் வைத்திருப்பார். இடபத்தின் நெற்றியில் பூமாலை காணப்படும். சிரியாவுக்கு வடக்கே உள்ள நாடு ஹெய்ட்டி. இந்நாட்டு மொழிக்கும் தமிழுக்கும் மிகவும் தொடர்பு உண்டு. அங்கு பழைய இடிபாடுகளில் உள்ள ஓவியங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. சிரியாவின் 'அதாத்’ கடவுள் போன்று, இடபத்தின் மேல் அமர்ந்த நிலையில் உள்ள வடிவம் கையில் மழுவும் கேடயமும் கொண்டு காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

இடப வழிபாடும், பாம்பு வழிபாடும் இவ்வுலகத்தின் எல்லாப் பகுதிகளிலும் காணப்பட்டுள்ளன. சூரிய வழிபாடும் சிவலிங்க வழிபாடும் உள்ள எல்லா நாடுகளிலும் பாம்பு வழிபாடும் இருந்தது.

சிவனைக் குறிக்கும் பசுபதியின் வடிவம் இரண்டு கரங்களுடன் காணப்படுகிறது. கி.பி. 50 வரை வட இந்தியாவில் அச்சடிக்கப்பெற்ற பொற்காசுகளில் காணப்படும் சிவன் வடிவமும், இரண்டு கரங்கள் உள்ளனவாகவே காட்டப்பட்டுள்ளது. ஆஸ்திரியாவில் கிடைத்த சிற்பங்களில் 'சாஸ்தியன்’ எனும் கடவுள் மூன்று தலையுடைய சூலத்தைக் கையில் பிடித்திருப்பதாகவும், சூலத்தின் கைப்பிடியினின்றும் மழைத்துளி மானின் வாயில் விழுவதாகவும் காட்டப்பட்டுள்ளன.

'சிந்தோயிஸம்’ என்னும் ஜப்பானிய மதத்தில் சிவலிங்கம் முதன்மையானது. மெக்சிகோ, பெரு, ஹெய்ட்டி முதலான நாடுகளிலும் சிவலிங்க வழிபாடு இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. ஸ்பானிஷ் (SPAIN) மக்கள் முதன் முதலில் அமெரிக்கா சென்றபோது, அங்கு சிவலிங்கங்களை வைத்து வழிபட்டதைக் கண்டார்களாம். 'முக்கேசி’ என்பவர் எழுதிய 'இந்திய நாகரிகமும் அதன் பழைமையும்’ என்ற நூலில் மேற்படி விவரம் காணப்படுகிறது.

ஜப்பானிய மக்களின் பழைய தெய்வங்களில் ஒன்று 'சிவோ’ என்றழைக்கப்பட்டது. வேட்டையாடும் மக்களைப் பாதுகாக்கும் கடவுள் அது என்று கருதினார்கள். சொரியா நாட்டினின்றும் சென்று ஜப்பான் தீவுகளில் குடியேறியவர்கள், சிவலிங்கங்களை முச்சந்தி, நாற்சந்திகளில் வைத்து நட்டு வழிபட்டனர்.

மேற்கு ஆசிய மக்களின் ஆண்டின் மூன்றாவது மாதம் 'சிவன்’ என்ற பெயர் உடையது. சிவன் மாதம் 'சிமானு’ எனவும் அழைக்கப்பட்டது.

கம்போடியா நாட்டில் பாலவர்மன் என்ற அரசன் மிகச் சிறந்த சிவபக்தன். இவன் கி.பி. 616-இல் 'கம்பீரவாணன்’ என்னும் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. கம்போடியாவில் சிவவழிபாடே முதன்மை பெற்றிருந்தது. அங்கு பல இடங்களில் காணப்படும் திருவுருவங்கள் சிவன் இடபத்தில் வீற்றிருக்கும் அமைப்பிலே உள்ளன. இத்தாலியில் உள்ள ரோம் அருங்காட்சியகத்தில் இன்றும் ஒரு சிவலிங்கம் காணப்படுகிறது.

இவ்வளவு தகவல்களையும் அறியும்போது, மணிவாசகப் பெருமானின் அருள்வரிகள் எவ்வளவு அற்புதமான ஆழமான பொருளுடையவை என்பது நன்கு புலப்படுகிறது.

தென்னாடுடைய சிவனே போற்றி*
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Aug 07, 2018 8:35 pm

மகா பதிவை படிக்க பொறுமை ஆவல் வேண்டும்.
புத்தகம் படிப்பதுபோல்லன்றி இருத்தலே நல்லது..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக