புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசின் மீது அடுத்த புகார் : அதிர்ச்சியில் தமிழ் சினிமா


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 20, 2009 3:39 pm

அசின் மீது அடுத்த புகார் : அதிர்ச்சியில் தமிழ் சினிமா 226asin



நடிகை அசின் மீது ஏற்கனவே ஒரு பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாக கூறப்பட்ட புகாரைத் தொடர்ந்து, இப்போது வலுக்கட்டாயமாக அசின் அழைத்துச் சென்ற வாலிபரை என்று புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் தமிழ் திரையுலகமே அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறது.

கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வந்து விட்டு, பாலிவுட் ரசிகர்களை பதம் பார்க்க மும்பை பக்கம் சென்றிருக்கிறார் அசின். தமிழ் சினிமாவுக்கு மீண்டும் வர முடியாத அளவுக்கு அசினின் புகழ் இந்தியில் பரவிக் கிடக்கிறது. இந்நிலையில் சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டிடம், செங்குன்றத்தை சேர்ந்த சுடலை வடிவு என்பவர் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.

அசின் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை தெரிவிக்கும் அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

எனது கணவர் முத்துக்கருப்பன் இறந்துவிட்டார். அவர், தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசில் வேலை பார்த்தார். எங்களின் மகன் நல்லமுத்துக்குமார் (23). கடந்த சில ஆண்டுகளுக்கு முன், நடிகர் விஜயிடம் உதவியாளராக வேலை பார்த்து வந்தான். "போக்கிரி' திரைப்படத்திற்கான படப்பிடிப்பின் போது, நடிகை அசினுடன் எனது மகனுக்கு பழக்கம் ஏற்பட்டது. அதிக சம்பளம் கொடுப்பதாகக் கூறி, எனது மகனை உதவியாளர் வேலைக்கு அசின் வைத்துக் கொண்டார். கடந்த நான்கு ஆண்டுகளாக நடிகை அசினிடம் எனது மகன் உதவியாளராக வேலை பார்த்து வந்தான்.

கடந்த ஒன்றரை ஆண்டிற்கு முன், அசினுடன் படப்பிடிப்பு ஒன்றுக்கு சென்றான். அப்போது ஏற்பட்ட சாலை விபத்தில் எனது மகனின் இடதுகால் உடைந்தது. எனது மகனுக்கு மும்பையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.இந்த தகவலறிந்து, மும்பை சென்ற நான், அங்கு ஒன்றரை மாதம் தங்கியிருந்து, சிகிச்சை பெற்ற பின் அவனை சென்னைக்கு அழைத்து வந்தேன். இங்கு வந்த பின், அடிக்கடி எனது மகனை மொபைல் போனில் தொடர்பு கொண்ட நடிகை அசின், வேலைக்கு வரும்படி அழைத்தார். ஒரு கட்டத்தில் அந்த நடிகை அழைத்ததின்பேரில் எனது மகனும் மும்பை சென்றான். அங்கிருந்து என் மகன் தினமும் போனில் தொடர்பு கொண்டு பேசுவது வழக்கம். ஒரு நாள் அப்படி பேசிய போது, "இங்கு எனக்கு வேலை பிடிக்கவில்லை. நடிகை அசின் கடுமையாக நடந்து கொள்கிறார். நொண்டி என்று அடிக்கடி திட்டுகிறார்' என்று புலம்பி னான்."வேலை பிடிக்காவிட்டால் உடனடியாக சென்னைக்கு திரும்பி வந்து விடு' என்று மகனிடம் கூறினேன்.

அதன் பின், எனது மகனிடம் இருந்து போன் வரவில்லை. நான் அவனை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. வேதனையடைந்த நான், எனது சகோதரியுடன் மும்பைக்கு சென்றேன்.அங்கு எனது மகன் தங்கியிருந்த அறையில் விசாரித்தபோது, "முத்துவை பார்த்து 10 நாட்களுக்கு மேலாகிறது' என்றனர்.பின், நடிகை அசினின் கார் டிரைவர் முருகன் என்பவருடன் தொடர்பு கொண்டு, அசின் வீட்டிற்கு சென்றேன். படப்பிடிப்பிற்கு சென்றதால், அவரை தொடர்ந்து பல நாட்கள் பார்க்க முடியவில்லை.

அதன் பிறகு மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டேன்.அசினின் தந்தை ஜோசப் எடுத்து பேசியபோது, "உனது மகன் வேலையில் இருந்து நின்று விட்டான். அவனுக்கு சேர வேண்டிய பணத்தை கொடுத்து அனுப்பி விட்டோம்' என்றார். இதே பதிலை நடிகை அசினும் கூறினார். இருப்பினும் நான் மும்பையில் தங்கி எனது மகனை தேடினேன்.இது தெரிந்ததும் நான் தங்கியிருந்த இடத்திற்கு வந்த ஜோசப், ஒரு கடிதத்தை கொடுத்தார். பிறகு, எனது மகன் தாதா கும்பலில் சேர்ந்து விட்டான் என்று கூறினார். இதை மறுத்த நான், மும்பை போலீசாரிடம் புகார் கொடுக்கலாம் என்று கூறியதற்கு, "நீங்கள் சென்னை செல்லுங்கள்; உங்கள் மகனை தேடி பிடித்து வீட்டிற்கு அனுப்பி வைக்கிறோம்' என்று ஜோசப் கூறினார்.அவர் கூறியபடி இன்றுவரை எனது மகனை பற்றி எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. நடிகை அசின் மற்றும் அவரின் தந்தை ஜோசப்பை பல முறை தொடர்பு கொண்டும் மொபைல் போனை எடுப்பதில்லை.

எனவே, நடிகை அசின், அவரது தந்தை ஜோசப் மீது நடவடிக்கை எடுத்து எனது மகனை மீட்டுத் தர வேண்டும்.

இவ்வாறு சுடலைவடிவு கொடுத்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து விசாரிக்கும்படி செங்குன்றம் போலீசாருக்கு கமிஷனர் ஜாங்கிட் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த நரசம்மா என்பவர் தனது மகள் பிர்லாவை (22) நடிகை அசின் அடைத்து வைத்து கொடுமைப் படுத்துகிறார் என்று புகார் செய்தார். இதையடுத்து போலீசார் மும்பை சென்று விசாரணை நடத்தினர். அப்போது இளம்பெண் பிர்லா, தன்னை அசின் கொடுமைப் படுத்தவில்லை என்றும், அசினுடனேயே இருக்க விரும்புவதாகவும் கூறினார். இதையடுத்து அந்த வழக்கு முடிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அசினுடன் சென்ற வாலிபர் ஒருவரை காணவில்லை என்று புகார் வந்திருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசின் மீது அடுத்தடுத்து வரும் இதுபோன்ற புகார்கள் தமிழ் திரையுலக பிரமுகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அசின் மீது அடுத்த புகார் : அதிர்ச்சியில் தமிழ் சினிமா Cinema-logo


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக