உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm
» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm
» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm
» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm
» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 9:57 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 17/08/2022
by mohamed nizamudeen Yesterday at 9:51 am
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm
» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm
» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm
» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm
» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm
» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm
» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm
» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm
» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm
» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm
» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm
» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm
» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm
» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm
» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm
» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm
» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm
» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm
» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm
» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm
» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
கண்ணன் |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!

கடலூர் மாவட்டம், வடலூர் பகுதியில் இடைக்கால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்களை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
வடலூர் வழியாகச் செல்லும் கும்பகோணம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பழைமையான காளி கோயில் அருகே கள ஆய்வு நடத்தப்பட்டது. இதில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் இடைக்கால மக்கள் வாழ்ந்த வாழ்விடப் பகுதியை ஆத்தூர் அரசுக் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் ஜெ.ஆர். சிவராமகிருஷ்ணன், கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமத் தலைவர் இரா.கோமகன் ஆகியோர் கண்டறிந்தனர்.
காளி கோயில்: வடலூர் காளி கோயிலில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கொற்றவை சிற்பம் உள்ளது. இந்தச் சிற்பமானது 4 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்ட நீள் செவ்வக வடிவ கற்பலகையில் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.
சிலையின் தலைப் பகுதியானது ஜடாமகுடத்துடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நெற்றியில் கல்மணிகளால் அழகுபடுத்தப்பட்ட நெற்றிச் சுட்டியும், கழுத்தில் கண்டிகை, சரப்பளி ஹாரம் போன்ற அணிகலன்களும், கைகளில் காப்பும், மார்பு கச்சையின் கீழ் வயிற்றுப் பகுதியில் வீர சங்கிலியும் காணப்படுகிறது. மேலும், கொற்றவையின் முகம் நீள் வட்ட வடிவில் சதைப் பற்றுடன் சாந்த நிலையில் காட்சியளிக்கிறது. இந்தச் சிற்பத்தின் தோள் பகுதி அகன்றும், இடை சிறுத்தும் உள்ளது.
நன்றி
தினமணி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
Re: வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
கொற்றவையின் வலது கரங்கள் மேலிருந்து கீழாக சக்கரம், வாள், கபாலம் போன்றவைகளை தாங்கி உள்ளன.
ஒரு கை உடைந்துள்ளது. இடது கரங்கள் சங்கு, வில், கேடயம் போன்ற ஆயுதங்களை தாங்கியவாறும், கீழ்கரம் தர்ஜனீகஸ்தத்துடன் எதிரியை அச்சுறுத்தும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. சிலையின் முதுகுப்புறத்தில் அம்புத்தூரிகை உள்ளது.
கொற்றவையின் இடுப்பில் அணியப்பட்டுள்ள இடைக் கச்சையானது குஞ்சங்களுடன் அலங்கரிக்கப்பட்டு, எருமைத் தலை மீது ஒரு காலை நிலையாக ஊன்றியும், மற்றொரு காலை சற்று மடக்கி வைஷ்ணவ ஆசனத்தில் நின்றவாறும் பக்தர்களுக்கு காட்சியளிப்பதாக உள்ளது.
இந்தச் சிலையின் முகத்தில் பல்லவர் கால கலைப் பாணியும், உடல் பகுதியில் முற்கால சோழர் கலைப் பாணியின் தாக்கமும் உள்ளதால் இதன் காலம் கி.பி. 9 - 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்.
பல்லவர்களுக்குப் பிறகு தமிழகத்தை ஆட்சி செய்த சோழர்கள் பல்லவ கலைப் பாணியை அப்படியே ஏற்றுக்கொண்டு, தங்களது கலைப் பாணியில் சிறு, சிறு மாற்றங்களைச் செய்து சோழர்கலை மரபு என்ற தனி கலைப் பாணியை உருவாக்கினர் என்பதற்கு இந்தச் சிற்பமே சிறந்த சான்றாக உள்ளது.

கட்டடப் பகுதிகள்: வடலூர் காளி கோயிலில் இருந்து கிழக்கு - மேற்காக சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் பெரிய பண்பாட்டுப் பகுதி கண்டறியப்பட்டது. இந்தப் பகுதியில் வீடு கட்டுவதற்காகத் தோண்டப்பட்ட பள்ளங்களில் இருந்து 27 ஷ் 17 ஷ் 7 செ.மீ. அளவுள்ள செங்கற்கள் வெளிப்பட்டன. இதே அளவுள்ள செங்கல்கள் தாராசுரம் அகழாய்வில் கிடைத்துள்ளன. மேலும், காளி கோயிலின் கிழக்குப் பகுதியில் இருந்து சுமார் 100 அடி தொலைவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மழை நீரை வெளியேற்றுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கட்டடத்தின் தரைதளப் பகுதி வெளிப்பட்டது. இதில் 24 ஷ் 12 ஷ் 4 செ.மீ. அளவுள்ள செங்கல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இதே அளவுள்ள செங்கல்கள் பழையாறை அகழாய்விலும் கண்டறியப்பட் டுள்ளன. மேலும், தரைத் தளத்தை ஒட்டியவாறு வடக்கு - தெற்காக 2 அடி அகலத்தில் மிகப்பெரிய செங்கற்சுவர் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தப் பள்ளத்திலிருந்து இடைக்காலத்தைச் சேர்ந்த சிவப்பு நிற பானையோடுகள், கூரை ஓடுகள் போன்றவை கிடைத்துள்ளன. இந்த கூரையோடுகள் கங்கைகொண்டசோழபுரம் மாளிகைமேடு அகழாய்வில் கிடைக்கப்பட்டுள்ள ஓடுகளின் அமைப்பை ஒத்துள்ளன. மேலும் காளி கோயில் பகுதியில் கிடைக்கப்பட்டுள்ள சான்றுகளை ஆய்வு செய்ததில், கி.பி. 9-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 13-ஆம் நூற்றாண்டுவரை இந்தப் பகுதியில் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.
இந்தப் பள்ளத்திலிருந்து இடைக்காலத்தைச் சேர்ந்த சிவப்பு நிற பானையோடுகள், கூரை ஓடுகள் போன்றவை கிடைத்துள்ளன. இந்த கூரையோடுகள் கங்கைகொண்டசோழபுரம் மாளிகைமேடு அகழாய்வில் கிடைக்கப்பட்டுள்ள ஓடுகளின் அமைப்பை ஒத்துள்ளன. மேலும் காளி கோயில் பகுதியில் கிடைக்கப்பட்டுள்ள சான்றுகளை ஆய்வு செய்ததில், கி.பி. 9-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 13-ஆம் நூற்றாண்டுவரை இந்தப் பகுதியில் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
Re: வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
சோழர் கால நாணயங்கள்: வடலூர் காளி கோயிலின் கிழக்கு, தெற்குப் பகுதிகளில் நடைபெற்ற கள ஆய்வில், மண்ணின் மேற்பரப்பிலிருந்து இராஜராஜ சோழன் காலத்தில் வெளியிடப்பட்ட 12 செப்பு நாணயங்கள் கிடைத்தன. இந்த நாணயங்களின் முன் பகுதியில், நிற்கும் மனித உருவமும் அதன் இடதுபக்கத்தில் விளக்கு ஒன்றும் உள்ளது. பின் பகுதியில் அமர்ந்த மனித உருவத்தின் கையருகே "ஸ்ரீராஜராஜ' என்று நாகரி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இதை ஈழக்காசு என்று அழைப்பர்.
இந்த நாணயங்கள் ஒவ்வொன்றும் 8 கிராம் எடை கொண்டது. கி.பி. 985 முதல் கி.பி.1014-ஆம் ஆண்டு வரை சோழப் பேரரசின் மாமன்னராக விளங்கிய முதலாம் இராஜராஜ சோழனது காலத்தில் வெளியிடப்பட்ட இந்த நாணயங்கள் அதிக எண்ணிக்கையில் வடலூர் பகுதியில் கிடைத்துள்ளதால் சோழர் காலத்தில் இந்தப் பகுதி சிறப்பு வாய்ந்ததாக இருந்திருக்க வேண்டும்.
வடலூர் பகுதியில் இதுவரை சோழர் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் எதுவும் கிடைக்கவில்லை.
ஆனால், வடலூர் அருகே உள்ள சந்தவெளிப்பேட்டை, கீழூர் ஆகிய கிராமங்களில் சோழர் காலத்தைச் சேர்ந்த 3 கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன.
மேலும் வடலூரைப் போன்று அதைச் சுற்றியுள்ள ஊர்களான மருவாய், சந்தவெளிப்பேட்டை , பெரியகோயில்குப்பம் , பூசாளிக்குப்பம் போன்ற ஊர்களில் கி.பி. 9-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 13-ஆம் நூற்றாண்டு வரை மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளன என்றார் வரலாற்று ஆய்வாளர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்.
இந்த நாணயங்கள் ஒவ்வொன்றும் 8 கிராம் எடை கொண்டது. கி.பி. 985 முதல் கி.பி.1014-ஆம் ஆண்டு வரை சோழப் பேரரசின் மாமன்னராக விளங்கிய முதலாம் இராஜராஜ சோழனது காலத்தில் வெளியிடப்பட்ட இந்த நாணயங்கள் அதிக எண்ணிக்கையில் வடலூர் பகுதியில் கிடைத்துள்ளதால் சோழர் காலத்தில் இந்தப் பகுதி சிறப்பு வாய்ந்ததாக இருந்திருக்க வேண்டும்.
வடலூர் பகுதியில் இதுவரை சோழர் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் எதுவும் கிடைக்கவில்லை.
ஆனால், வடலூர் அருகே உள்ள சந்தவெளிப்பேட்டை, கீழூர் ஆகிய கிராமங்களில் சோழர் காலத்தைச் சேர்ந்த 3 கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன.
மேலும் வடலூரைப் போன்று அதைச் சுற்றியுள்ள ஊர்களான மருவாய், சந்தவெளிப்பேட்டை , பெரியகோயில்குப்பம் , பூசாளிக்குப்பம் போன்ற ஊர்களில் கி.பி. 9-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 13-ஆம் நூற்றாண்டு வரை மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளன என்றார் வரலாற்று ஆய்வாளர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|