புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 16:39

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 16:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 16:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 15:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 15:27

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 15:22

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 15:14

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 15:11

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:03

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 14:39

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 14:38

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 14:35

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 14:32

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 14:29

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 14:27

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:22

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:19

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:54

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 13:28

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 13:26

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:21

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 21:16

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 20:20

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 19:45

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 14:51

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 14:48

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:44

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 14:40

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:42

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 23:47

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:36

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:34

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:33

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:07

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:06

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:07

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:04

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:35

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:33

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:30

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யோகக் கலை Poll_c10யோகக் கலை Poll_m10யோகக் கலை Poll_c10 
60 Posts - 40%
heezulia
யோகக் கலை Poll_c10யோகக் கலை Poll_m10யோகக் கலை Poll_c10 
46 Posts - 30%
Dr.S.Soundarapandian
யோகக் கலை Poll_c10யோகக் கலை Poll_m10யோகக் கலை Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
யோகக் கலை Poll_c10யோகக் கலை Poll_m10யோகக் கலை Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
யோகக் கலை Poll_c10யோகக் கலை Poll_m10யோகக் கலை Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
யோகக் கலை Poll_c10யோகக் கலை Poll_m10யோகக் கலை Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
யோகக் கலை Poll_c10யோகக் கலை Poll_m10யோகக் கலை Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யோகக் கலை Poll_c10யோகக் கலை Poll_m10யோகக் கலை Poll_c10 
311 Posts - 50%
heezulia
யோகக் கலை Poll_c10யோகக் கலை Poll_m10யோகக் கலை Poll_c10 
193 Posts - 31%
Dr.S.Soundarapandian
யோகக் கலை Poll_c10யோகக் கலை Poll_m10யோகக் கலை Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
யோகக் கலை Poll_c10யோகக் கலை Poll_m10யோகக் கலை Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
யோகக் கலை Poll_c10யோகக் கலை Poll_m10யோகக் கலை Poll_c10 
21 Posts - 3%
prajai
யோகக் கலை Poll_c10யோகக் கலை Poll_m10யோகக் கலை Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
யோகக் கலை Poll_c10யோகக் கலை Poll_m10யோகக் கலை Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
யோகக் கலை Poll_c10யோகக் கலை Poll_m10யோகக் கலை Poll_c10 
2 Posts - 0%
Barushree
யோகக் கலை Poll_c10யோகக் கலை Poll_m10யோகக் கலை Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
யோகக் கலை Poll_c10யோகக் கலை Poll_m10யோகக் கலை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யோகக் கலை


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat 12 Dec 2009 - 9:31

யோகக் கலை Ht26


யோகம் பயில்வதற்கு ஆசனப்பயிற்சி இன்றியமையாது. யோகப் பயிற்சிகளில் யோகாசனம் முக்கியமானது. யோகம் ஒரு கலை. கல்வி பயில்வதற்கு எவ்வளவு இன்றியமையாததோ, அவ்வளவு இன்றியமையாதது யோகம் பயில்பவர்களுக்கு யோகாசனம் பயில்வது என்று கூறினால் அது மிகையாகாது.

யோகம் என்றால் என்ன?

யோகம் என்ற சொல் யுஜ் என்ற சமஸ்கிருத மொழியில் உள்ள சொல்லின் வழியே பிறந்ததாகும்.

யோகம் என்ற சொல்லுக்கு “ஒருங்கிணைத்தல்” அல்லது “எல்லாவற்றையும் எந்தவிதமான வேறுபாடுமின்றி முழுமைப்படுத்துதல்” என்றும் பொருள் கூறுகின்றனர். யோகம் என்றால் அலையும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயல் என்று எளிமையாகவும் உரைக்கின்றனர்.

யோகம் தமிழில் தவம் அல்லது ஜெபம் எனப்படும். அறிவியல் கலை யோகம் என்பது மக்கள் தம் உடலையும் உள்ளத்தையும் அடக்கியாளக் கண்ட ஓர் அறிவியல் கலையாகும். யோகப் பயிற்சியில் சித்தி பெற்ற அறிஞர்கள் இயற்கையைத் தன்வயப்படுத்தும் ஆற்றலை அடைவார்கள். யோகக் கலை சாகாக் கலை என்று பல அறிஞர்கள் கூறுவர். யோகப் பயிற்சியால் நீண்ட நாள் வாழலாம்.

யோகம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றிய கலையாகும். சிவயோகம் இந்த யோகம் என்னும் அரும்பெரும் ஆன்மீகக்கலை நம் முன்னோர் இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்ட அரும்பெரும் கலை. இக்கலை இன்று சைவ சமய சாத்திரங்களில் அழகுற மிக நுணுக்கமாக எடுத்துக் காட்டப் பெற்றுள்ளது. யோகத்தை சிவயோகம் என்பதும், இது சிவனார் மக்களுக்கு உபதேசித்துக் கொடுத்த கலை என்பதும் தெறிந்ததே.

உலகிலே முதன் முதலாக யோகக் கலையைக் கண்டவர்கள் சிவனை வழிபடும் சிவனெறியாளர்களே. யோக முறை யோகாசன முறைகளை முறையோடு பின்பற்ற வேண்டும். உள்ளுறுப்புகள் தான் யோகாசனத்தில் முழுக்கப் பயன்படுகின்றன. உள்ளுறுப்புகள் தூய்மை பெறவும் வலிமை பெறவும் பயிற்சி செய்யும் நேரத்தில் மிகவும் நியமத்துடன் பயபக்தியுடன் நெறி பிறழாது செய்ய வேண்டும்.



யோகப் பயிற்சியின் சிறப்புகள்

1. தேகத்திற்கு வந்த நோய்களைப் போக்கியும் இனி நோய்கள் வராமல் காத்தும் ஒருவருக்கு உகந்த உன்னத உடலை உருவாக்குகிறது.

2.உள்ளுறுப்புகளையும் வெளியுறுப்புகளையும் தூய்மைப்படுத்தி அது தன் பணிகளை அருமையாகவும் திறமையாகவும் அயராமல் செயல்படுத்தத் தூண்டுகிறது.

3. சாதாரணமாகச் செயல்படும் ஒருவனுடைய செயலாற்றலை மிகுதிப் படுத்துவதுடன் உடல் நலமும், மனவளமும் பெற்று வாழ உற்சாகப்படுத்துகிறது.

4. அன்றாடம் உடலில் உண்டாகும் கழிவுப் பொருட்களை வெகு விரைவாக வெளிப்படுத்தவும், உடலைக் கசடற்ற முறையில் வைத்துக் காக்கின்ற சக்தியினையும் உடலுக்குத் தருகின்றது. அதாவது நரம்புகள், மூளை, நுரையீரல், இதயம், ஜீரண உறுப்புகள் மற்றும் குண்டிக்காய் போன்ற அவயவங்களுக்கு திறமையுடன் வேலை செய்கின்ற ஆற்றலை அளிக்கிறது.

5. நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வதற்குத் துணை புரிகிறது. மனதாலும், செயலாலும், உயர்ந்த வாழ்வு வாழத் தூண்டுகிறது. இவ்வாறு தேகநலனைப் பற்றியும், சிறந்த ஆரோக்கிய வாழ்வு முறையைப் பற்றியும் யோகமுறை உடற்பயிற்சி முறைகள் நிறைந்து செயல்படுகின்றன.



ஆசனம் செய்வதால் உண்டாகும் பயன்கள்:

1. ஆசனங்களை முறையோடு செய்து வந்தால் உடல்வளம் பெறுவதுடன், மிகவும் சுறுசுறுப்போடும் விரைவாகவும் அன்றாட வாழ்வில் இயங்க முடியும்.

2. முதுகெலும்பு எளிதில் வளைந்து இயங்கும் ஆற்றலைப் பெறுவதால், எதனையும் சிறப்பாகப் பணியாற்றும் வகையில் உடலில் ஒத்துழைப்பு உயர்ந்த அளவில் கிடைக்கிறது.

3. பசி நன்றாக எடுக்கிறது. உடலில் பற்றிக் கொள்கின்ற நோய்கள் தொடக்க நிலையிலேயே முறியடிக்கப்படுகின்றன.

4. மிகவும் முக்கிய உறுப்புகளான இதயம், நுரையீரல்கள் மற்றும் மூளைப்பகுதிகள் செழிப்படைந்து சிறப்புடன் பணியாற்ற முடிகிறது.

5. தங்கு தடை இல்லா இரத்த ஓட்டம் உடலெங்கும் இயல்பாக ஓடி, உடலைப் பூரணப் பொலிவு பெற வைக்கிறது.

6. உடல் அவயங்கள் எல்லாம் விறைப்பாக இருக்காமல், எளிதில் செயலுக்கு இணங்கும் தன்மையில் இருந்திட வழி அமைகிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக