ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» காவல் தெய்வம்- குறும்பட விமர்சனம்
by T.N.Balasubramanian Yesterday at 8:52 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm

» டோக்கியோ ஒலிம்பிக் 2020
by T.N.Balasubramanian Yesterday at 6:39 pm

» திரைத்துளிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அஜீத்தின் வலிமை படத்தின் “நாங்க வேற மாதிரி” பாடல் எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» அசோக மரத்தின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 3:05 pm

» யூ டியூப் ஸ்டார்
by ayyasamy ram Yesterday at 3:04 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 2:50 pm

» சப்பாத்தி மீந்து விட்டால்..
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» ஒரு புதிய ஏற்பாடு
by T.N.Balasubramanian Yesterday at 2:01 pm

» அழிவின் விளிம்பில் உள்ள தேவாங்கு விலங்கை காப்பாற்ற வேண்டும்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:54 am

» செய்தி துளிகள் -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாலடியார் பாடல் 148 - விளக்கம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா!
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by aanmeegam Tue Aug 03, 2021 9:23 pm

» பரம(ன்) இரகசியம் அமானுஷ்யன் நாவல்கள்
by shivi Tue Aug 03, 2021 6:49 pm

» கணவன் கையில் காப்பு கட்டப்படுவது…
by T.N.Balasubramanian Tue Aug 03, 2021 4:37 pm

» அறிவு ஆறு அல்ல, பத்து (திருமூலர் அற்புத பாடல்)
by T.N.Balasubramanian Tue Aug 03, 2021 4:22 pm

» சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்!
by T.N.Balasubramanian Tue Aug 03, 2021 4:17 pm

» மலேசிய செய்திகள்
by T.N.Balasubramanian Tue Aug 03, 2021 4:02 pm

» கடைசியில் இவ்வளவு தானா?
by T.N.Balasubramanian Tue Aug 03, 2021 3:49 pm

» உங்கள் உடல் தோஷத்தைக் கண்டறிந்து கமெண்ட் செய்யுங்கள் ..
by curesure4u Tue Aug 03, 2021 8:41 am

» என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை
by ayyasamy ram Tue Aug 03, 2021 7:52 am

» இனிப்பான தேங்காய் போளி செய்வது எப்படி
by பழ.முத்துராமலிங்கம் Tue Aug 03, 2021 7:24 am

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Mon Aug 02, 2021 10:14 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Mon Aug 02, 2021 10:13 pm

» சிவகங்கை மாவட்டச் செய்திகள்
by சிவா Mon Aug 02, 2021 10:11 pm

» மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது?
by சிவா Mon Aug 02, 2021 9:19 pm

» நட்பு – கவிதை
by T.N.Balasubramanian Mon Aug 02, 2021 5:20 pm

Admins Online


தூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு

தூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு Empty தூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு

Post by ayyasamy ram Tue May 22, 2018 1:42 pm

தூத்துக்குடி:

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி
மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து
போராட்டம் நடைபெற்று வருகிறது.

இன்று மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பாக கலெக்டர்
அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக
அறிவிக்கப்பட்டது. இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும்
ஊர்வலமாக செல்ல திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில்
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் அனைத்து
பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால் தடையை
மீறி இன்று பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் போராட்டக்காரர்கள் ஒரு குழுவினர் பேரணியாகப்
புறப்பட்டு கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றவர்களை
போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் செல்லும்
இடங்களில் எல்லாம் கற்களை வீசி தாக்கினர். வங்கி கட்டிடத்தின்
கண்ணாடியையும் கற்கள் வீசி உடைத்தனர்.
இதனால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.

இதற்கிடையே மற்றொரு குழுவினர் தொடர்ந்து முன்னேறி
கலெக்டர் அலுவலகத்தை நோக்கி சென்றனர். போலீசாரின்
தடுப்பையும் மீறிச் சென்ற ஆயிரக்கணக்கான
போராட்டக்காரர்கள், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அப்போதும் போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாரை தள்ளிவிட்டு
உள்ளே நுழைந்த போராட்டக்காரர்கள், கலெக்டர் அலுவலக வாயில்
கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். வாகனங்களுக்கு
தீ வைத்தனர். டயர்களுக்கு தீ வைத்தனர். இதனால் அப்பகுதியில்
கடும் புகை மூட்டம் எழுந்தது.
-
ஏராளமானோர் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்ததால்
நிலைமை கட்டுக்கடங்காமல் போனது. எனவே, கூட்டத்தைக் கலைக்க,
போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

கண்ணீர் புகை குண்டுகளை வீசியதுடன், துப்பாக்கிசூடும் நடத்தினர்.
இதனால் போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர். இதில் பலர்
காயமடைந்திருக்கலாம் என தெரிகிறது.

போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதால் மேலும் ஆத்திரமடைந்த
போராட்டக்குழுவினர் சாலைகளில் மரங்களை வெட்டிப் போட்டு
போக்குவரத்தை தடை செய்தனர்.

இதனால் அந்த பகுதியில் பதற்றமாக சூழல் காணப்படுகிறது.
மதுரை, விருது நகர் மாவட்டங்களில் இருந்து கூடுதலாக
2000 போலீசார் தூத்துக்குடிக்கு விரைந்துள்ளனர்.
-
----------------------------------
மாலை மலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 69513
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13133

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு Empty Re: தூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு

Post by SK Tue May 22, 2018 2:23 pm

மக்களை காக்க போலீசா இல்லை மக்களை தாக்க போலீசா
SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1784

Back to top Go down

தூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு Empty Re: தூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு

Post by SK Tue May 22, 2018 2:24 pm

மக்கள் பணத்தில் சம்பளம் வாங்கும் அரசாங்கத்தின் அடியாட்கள் 
இவர்களும் கூலிப்படை தான்
SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1784

Back to top Go down

தூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு Empty Re: தூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு

Post by பழ.முத்துராமலிங்கம் Tue May 22, 2018 4:27 pm

@SK wrote:மக்களை காக்க போலீசா இல்லை மக்களை தாக்க போலீசா
மேற்கோள் செய்த பதிவு: 1269339
மக்கள் அராஜகம் செய்தால் போலீஸ் பார்த்து
கொண்டு கை கட்டி நிற்குமா அவர்கள் எதிர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
வன்முறை எதற்கும் தீர்வு ஆகாது.
இது நடந்தேறியது வருந்தத்தக்கது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15344
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

தூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு Empty Re: தூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு

Post by ayyasamy ram Tue May 22, 2018 5:05 pm


தற்போதைய செய்தி
-
மே 22, 2018 13:02
-
துப்பாக்கி சூட்டில் போராட்டக்குழுவை சேர்ந்த 9 பேர் பலியானதாக
தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலருக்கு காயம் ஏற்பட்டது.

ஜெயராமன், கிளாட்சன்,கந்தையா,வினிஸ்டா,தமிழரசன்,சண்முகம்,
மணிராஜ் உள்ளிட்ட 9 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
மேலும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில மணிநேரத்திற்கு பின்னர் திரேஸ்புரம் பகுதியில் மீண்டும்
போலீசார் போராட்டக்காரர்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு
நடத்தினர்.

இந்த போராட்டம் காரணமாக தூத்துக்குடி பகுதி முழுவதுமே
போர்க்களமானது. இந்த போராட்டங்களால் தூத்துக்குடி நகர்
முழுவதுமே பதட்டம், பரபரப்பாக காணப்பட்டது.
-----------
மாலை மலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 69513
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13133

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு Empty Re: தூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு

Post by ayyasamy ram Tue May 22, 2018 5:14 pm

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்னிக்கை
10-ஆக உயர்வு

---

தூத்துக்குடி : தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர்
எண்னிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது.

மேட்டுப்பட்டி கிளாஸ்டன், தூத்துக்குடி கந்தையா,
குறுக்குச்சாலை கிராமம் தமிழரசன், ஆசிரியர் காலனி
சண்முகம், அந்தோணி ராஜ் மற்றும் தூத்துக்குடி தாமோதர்
நகர் மணிராஜீம் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் கல்வீச்சில் 20 போலீஸ் உள்பட 65 பேர் காயமடைந்து
உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
-
------------------------
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 69513
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13133

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு Empty Re: தூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு

Post by ayyasamy ram Tue May 22, 2018 5:14 pm

சென்னை:

ஸ்டெர்லைட் எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு
நடத்தியதற்கு நடிகர் ரஜினி கண்டனம் தெரிவித்துள்ளார்.

வன்முறை, பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே
பொறுப்பு. போராட்டத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது
மிகவும் வருந்தத்தக்கது என அவர் தெரிவித்துள்ளார்.
-
--------------------
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 69513
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13133

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு Empty Re: தூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை