புதிய பதிவுகள்
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:42

» புன்னகை
by Anthony raj Today at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:37

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 21:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:47

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 21:39

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:37

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 21:12

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 20:54

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:53

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu 4 Jul 2024 - 18:56

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:29

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed 3 Jul 2024 - 18:03

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_c10கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_m10கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_c10 
77 Posts - 46%
ayyasamy ram
கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_c10கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_m10கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_c10 
52 Posts - 31%
i6appar
கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_c10கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_m10கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_c10 
11 Posts - 7%
Anthony raj
கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_c10கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_m10கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_c10கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_m10கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_c10கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_m10கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_c10கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_m10கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_c10கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_m10கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_c10கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_m10கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_c10 
1 Post - 1%
prajai
கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_c10கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_m10கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_c10கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_m10கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_c10 
77 Posts - 46%
ayyasamy ram
கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_c10கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_m10கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_c10 
52 Posts - 31%
i6appar
கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_c10கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_m10கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_c10 
11 Posts - 7%
Anthony raj
கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_c10கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_m10கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_c10கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_m10கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_c10கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_m10கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_c10கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_m10கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_c10கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_m10கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_c10கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_m10கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_c10 
1 Post - 1%
prajai
கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_c10கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_m10கீரை வகைகளும்   அதன் பயன்களும் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கீரை வகைகளும் அதன் பயன்களும்


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed 16 Dec 2009 - 6:33

அண்ணாஸ் & மற்றவர் உதவ முடியுமா?

எனக்கு கீரையின் புகைப்படமும் ( எல்லா கீரையும் )

மீன்கலின் புகைப்படமும் ( எல்லா மீன்கலும் )

கிடைக்குமா பிலீஸ்....

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed 16 Dec 2009 - 7:41

சாம்பிராணி இலை எப்படி இருக்கும் படம் இருந்தால் போட முடியுமா பிலீஸ்... கீரை வகைகளும்   அதன் பயன்களும் 838572

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Wed 16 Dec 2009 - 7:49

தாமு wrote:சாம்பிராணி இலை எப்படி இருக்கும் படம் இருந்தால் போட முடியுமா பிலீஸ்... கீரை வகைகளும்   அதன் பயன்களும் 838572


கீரை வகைகளும்   அதன் பயன்களும் Salad-spinachலெட்டூஸ்

கீரை வகைகளில் சிறந்த உணவாக லெட்டூஸ் கருதப்படுகிறது. இது இலைக்
கீரையாகும். இதனை பச்சடிக்கீரை, சாலட்டுக் கீரை என்றும் கூறுவர். இதன்
பிறப்பிடம் இந்தியாதான். இந்தியர்களை விட இக்கீரையை ஐரோப்பியர்களே அதிகம்
பயன்படுத்துகின்றனர். இந்தக் கீரையானது இமயமலைச் சாரலில் ஏராளமாக
தன்னிச்சையாக வளரக் கூடியது. பூப்பதற்கு முன்னுள்ள இலைகளே உணவுக்காக
பயன்படுத்தப்படுகிறது. இலைகள் நீண்ட முட்டை வடிவமுள்ளதாய் இருக்கும். சில
வகைகள் சுருள் சுருளான இலை அமைப்பை பெற்றிருக்கும். இலைகள் தடிப்பாக
இருக்கும். சாறு நிறைந்து மிக மென்மையாக இருக்கும்.
பச்சை நிறம் கீரைவகையைச் சார்ந்தது. சாலட்டுகளில் அழகுக்காக
சேர்க்கப்படுவது எனினும் வைட்டமின் ‘ஈ’ சத்தும், அதிகப்படியான தாது
உப்புக்களும் நிறைந்து காணப்படுகின்றன. புற ஊதாக்கதிர் மற்றும்
சூரியக்கதிர் தாக்கத்திற்குட்படும் சருமத்திற்கு நிவாரணமளிக்கிறது.
புரதம், தாது உப்புகள், வெப்ப ஆற்றல் முதலியன மிகுந்த கீரை, சிவப்பு
அணுக்களைத் தோற்றுவிக்கும் ஒருவித சத்து இக்கீரையில் இருக்கிறது. இது
சமையலில் இனிய மணத்துக்காகவும், சுவைக்காகவும் பலர் இதனை விரும்பி
உண்கின்றனர். முதிர்ந்த இலைகளைக் கால்நடைகள் விரும்பி உண்கின்றன.
இக்கீரை உடலுக்கு குளிர்ச்சியையும், உற்சாகத்தையும் தரவல்லது.
முச்சிரைப்பு நோயான ஆஸ்துமாவைக் கண்டிக்க வல்லது. இதிலுள்ள மாவுச் சத்து
காரணமாக உடல்பருமனைக் குறைப்பதற்கு இந்தக் கீரையை உணவுடன் சேர்த்துக்
கொள்வார்கள். நிரிழிவு நோய்க்கு நல்ல பத்திய உணவு இக்கீரை.
அழகுக்கூடும்…

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Wed 16 Dec 2009 - 7:54

தண்டாயுதபாணி wrote:
தாமு wrote:சாம்பிராணி இலை எப்படி இருக்கும் படம் இருந்தால் போட முடியுமா பிலீஸ்... கீரை வகைகளும்   அதன் பயன்களும் 838572


கீரை வகைகளும்   அதன் பயன்களும் Salad-spinachலெட்டூஸ்

கீரை வகைகளில் சிறந்த உணவாக லெட்டூஸ் கருதப்படுகிறது. இது இலைக்
கீரையாகும். இதனை பச்சடிக்கீரை, சாலட்டுக் கீரை என்றும் கூறுவர். இதன்
பிறப்பிடம் இந்தியாதான். இந்தியர்களை விட இக்கீரையை ஐரோப்பியர்களே அதிகம்
பயன்படுத்துகின்றனர். இந்தக் கீரையானது இமயமலைச் சாரலில் ஏராளமாக
தன்னிச்சையாக வளரக் கூடியது. பூப்பதற்கு முன்னுள்ள இலைகளே உணவுக்காக
பயன்படுத்தப்படுகிறது. இலைகள் நீண்ட முட்டை வடிவமுள்ளதாய் இருக்கும். சில
வகைகள் சுருள் சுருளான இலை அமைப்பை பெற்றிருக்கும். இலைகள் தடிப்பாக
இருக்கும். சாறு நிறைந்து மிக மென்மையாக இருக்கும்.
பச்சை நிறம் கீரைவகையைச் சார்ந்தது. சாலட்டுகளில் அழகுக்காக
சேர்க்கப்படுவது எனினும் வைட்டமின் ‘ஈ’ சத்தும், அதிகப்படியான தாது
உப்புக்களும் நிறைந்து காணப்படுகின்றன. புற ஊதாக்கதிர் மற்றும்
சூரியக்கதிர் தாக்கத்திற்குட்படும் சருமத்திற்கு நிவாரணமளிக்கிறது.
புரதம், தாது உப்புகள், வெப்ப ஆற்றல் முதலியன மிகுந்த கீரை, சிவப்பு
அணுக்களைத் தோற்றுவிக்கும் ஒருவித சத்து இக்கீரையில் இருக்கிறது. இது
சமையலில் இனிய மணத்துக்காகவும், சுவைக்காகவும் பலர் இதனை விரும்பி
உண்கின்றனர். முதிர்ந்த இலைகளைக் கால்நடைகள் விரும்பி உண்கின்றன.
இக்கீரை உடலுக்கு குளிர்ச்சியையும், உற்சாகத்தையும் தரவல்லது.
முச்சிரைப்பு நோயான ஆஸ்துமாவைக் கண்டிக்க வல்லது. இதிலுள்ள மாவுச் சத்து
காரணமாக உடல்பருமனைக் குறைப்பதற்கு இந்தக் கீரையை உணவுடன் சேர்த்துக்
கொள்வார்கள். நிரிழிவு நோய்க்கு நல்ல பத்திய உணவு இக்கீரை.
அழகுக்கூடும்…

அண்ணா சாம்பிராணி இலை படம் இல்லை

சாம்பிராணி இலை
இது சிறிய செடியாக இருக்கும். தண்டு எளிதில் உடையும் தன்மை வாய்ந்தது.
இலைகள் வெளிர்பச்சையாக வெற்றிலை வடிவத்தில் இருக்கும். இலை இரண்டு
மில்லிமீட்டர் கனம் உள்ளதாக இருக்கும். இலையின் மேலும், கீழும் நுண்ணிய
துணை இலைகள் படர்ந்திருக்கும். இந்த இலையைக் கசக்கினால் நல்ல வாசனை வரும்.
இந்தியா முழுவதும் குறிப்பாக ராஜஸ்தான், தென்னிந்தியாவிலும்,
காடுகளிலும் வளர்கிறது. வீடுகளிலும் விரும்பி மருந்திற்காக
வளர்க்கப்படுகிறது. சதைப்பற்று மிக்க, மணமிக்க காம்புகளையுடைய சிறிய
புதர்ச்செடி இது.


இதன் இலைகள் மருத்துவத்தில் அதிகம் பயன்படுகின்றன. கை
வைத்தியமாகவும், மக்களால் பயன்படுத்தப்படுகிறது. பித்தப்பை கல் உண்டாவதைத்
தடுக்கும் குணம் கொண்டது.
தசைகள் சுருங்குவதைத் தடுக்கும். நாள்பட்ட இருமல், அஜீரணம், வயிறு
சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு நல்ல மருந்தாக இலைச்சாறு பயன்
தருகிறது. கண் அழற்சிக்கு இதன் சாறு மேல் பூச்சாக தடவ பயன்படும்.
இதில் இரண்டு வகை உண்டு. அடி வரை வளரும் வேர்கள், அதன் ஆழம் செல்லாமல் கொத்து வேராகவே இருக்கும்.
மருத்துவத் துறையில் இது நரம்புகளுக்குச் சத்து மருந்தாகிறது. மனக்
கோளாறுகளைச் சரி செய்யவும், சிறுநீரை எளிதில் வெளிக் கொணரவும்
பரிந்துரைக்கப்படுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தும் தாவரமாகவும்
கருதப்படுகிறது.
தேமல் உள்ள இடங்களில் காலையும், மாலையும் வெந்நீரால் கழுவிச் சுத்தம்
செய்து அதன் மேல் சாம்பிராணி இலைச் சாற்றைத் தேய்த்து வந்தால் தேமல்
மறையும்.
தலைவலி தோன்றிய நேரத்தில் சாம்பிராணி இலையைக் கசக்கி அதன் சாறை நெற்றிப் பொட்டில் கனமாகப் பூசி வந்தால் தலைவலி குணமாகும்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed 16 Dec 2009 - 8:00

நன்றி நண்பா இது எனக்கு தெயும் படித்த தால் தான் கேக்குரேன்.. படம் பார்க்க அந்த இலை எப்படி இருக்கும் என்று கீரை வகைகளும்   அதன் பயன்களும் 865843

இருந்தாலும் எனக்கா தேடி பார்த்ததுக்கு நன்றி தம்பி.... கீரை வகைகளும்   அதன் பயன்களும் 678642

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Wed 16 Dec 2009 - 9:27

தாமு wrote:நன்றி நண்பா இது எனக்கு தெயும் படித்த தால் தான் கேக்குரேன்.. படம் பார்க்க அந்த இலை எப்படி இருக்கும் என்று கீரை வகைகளும்   அதன் பயன்களும் 865843

இருந்தாலும் எனக்கா தேடி பார்த்ததுக்கு நன்றி தம்பி.... கீரை வகைகளும்   அதன் பயன்களும் 678642


சிறுகீரை








கீரை வகைகளும்   அதன் பயன்களும் Ht188


தண்டுக்கீரை இனத்தைச் சேர்ந்த சிறுகீரை நிறைய கிளைகளுடன் சுமார் 20 செ.மீ.
உயரம் வரை செங்குத்தாக வளரும். இந்தச் செடி மெல்லிய தோற்றமுடையது.

சிறுகீரை
சுமார் 10 செ.மீ. உயரம் வளர்ந்தவுடன் அதைப் பறித்து உணவுக்குப் பயன்படுத்த
வேண்டும். இதைப் பருப்போடு சேர்த்து சாம்பார், கூட்டு, பொரியல் போன்ற கறி
வகைகளைச் செய்து சாப்பிடலாம்.

முளைக்கீரையைப் போலவே, சிறுகீரையின் இலைகளையும், தண்டையும் உணவு தயாரிக்கப் பயன்படுத்தலாம். இதன் விதையும் உணவாகப் பயன்படுகிறது.

சிறுகீரையில்
இரும்புச் சத்து அதிக அளவில் உள்ளது. இந்தக் கீரையைத் தினமும் சாப்பிட்டு
வந்தால் இதிலுள்ள இரும்புச் சத்து உடலில் இரத்தத்தைப் பெருக்கும். இது வாத
நோயை நீக்குகிறது. அதோடு, இந்தக் கீரை கல்லீரலுக்கும் நன்மை செய்கிறது.
பித்த சம்பந்தமான நோய்களை இது குணப்படுத்துகிறது. நஞ்சு முறிவாகப்
பயன்படுகிறது. அதோடு சிறுநீரகம் தொடர்பான குறைபாடுகளையும் நீக்குகிறது.

கண்
நோய்களுக்கு சிறுகீரை கை கண்ட மருந்து. காசம், சோகை, மூலம், வாயு, உடல்
எரிச்சல், தாவரங்களினனால் ஏற்படும் நஞ்சு ஆகியவற்றை இது நீக்கும்.
சிறுகீரை சுவையையும், பசியையும் தூண்டி உடலுக்கு வலுவைக் கொடுக்கும்.
சிறுகீரையை வீட்டுத் தோட்டத்திலும், தொட்டிகளிலும் மிக எளிதாக வளர்க்கலாம்.

சிறுகீரையை தினமும் உணவுடன் சாப்பிட்டு வந்தால் நோய்கள் யாவும் குணமாகி உடலினுடைய அழகும், வனப்பும் அதிகரிக்கும்.

வல்லாரை








கீரை வகைகளும்   அதன் பயன்களும் Ht187


வல்லாரை கால்வாய் மேட்டிலும், குளக்கரைகளிலும், ஆற்றோரங்களிலும், வயல்
வரப்புகளிலும் தானாக வளர்ந்து கிடப்பதைக் காணலாம். நீர் பிடிப்புள்ள
இடங்களில் இது கொடியாகப் படர்ந்து கிடக்கும்.

இந்தக்
கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன. பொதுவாக இது
உணவாகப் பயன்படுவதைவிட மருந்தாகப் பயன்படுவதுதான் அதிகம்.

வல்லாரைக் கீரையைச் சமைக்கும்போது புளி சேர்க்கக்கூடாது. புளி சேர்த்தால் அதன் சுவையும், மருத்துவக் குணமும் கெட்டுவிடும்.

வல்லாரையுடன்
வெங்காயம், மிளகு, சீரகம் சேர்த்து சாம்பார் செய்து சாப்பிடலாம். உளுந்தை
வறுத்து அதனுடன் வதக்கிய வல்லாரை, தேங்காய், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துத்
துவையல் அரைக்கலாம். பாசிப்பருப்புடன் சேர்த்துக் கூட்டாக வைக்கலாம்.

இந்தக்
கீரையை சாம்பார் செய்து சாப்பிடுவதன் மூலம் உடல் எரிச்சல், மூட்டு வலி,
வீக்கம், சிறுநீர் மஞ்சள் நிறமாகப் போதல் போன்ற நோய்கள் குணமாகும்.
வல்லாரைத் துவையல் மலச்சிக்கலை அகற்றும்.

வல்லாரை இலையை வாயில் போட்டு மென்று விழுங்கினால் குடல் புண், குடல் நோய், வாய்ப்புண், வாய் நாற்றம் ஆகியவை அகலும்.

சொறி,
சிரங்கு, மாரடைப்பு, மாலைக்கண், நீரிழிவு, காக்கை வலிப்பு, காய்ச்சல்,
பைத்தியம் போன்ற நோய்களையும் வல்லாரை குணப்படுத்துகின்றது.

வல்லாரை கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து அது இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

வல்லாரைக்
கீரை பொதுவாக மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. ஞாபக சக்தியை வளர்க்கிறது.
நரம்புத் தளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. இருதய பலத்துக்கும், தாது
விருத்திக்கும் உதவுகின்றது. குடல் புண், காமாலை, தொழுநோய், வாதநோய்,
நீரிழிவு, சளி, சிறுநீர் தகராறு, யானைக்கால் நோய், காய்ச்சல் ஆகியவற்றைக்
குணப்படுத்துகிறது.

வல்லாரை வைத்தியம்

1. அதிகாலையில்
நான்கு வல்லாரை இலைகளைப் பறித்து நன்றாக மென்று தின்று அடுத்த நான்கு மணி
நேரத்திற்கு எதுவும் சாப்பிடாமல் இருந்தால், எந்த விதமான அச்சம், பயம்
போன்ற பல வகையான மனநோய்களும் விலகும்.
2. தினமும் நான்கு வல்லாரை
இலையுடன் இரண்டு பாதாம் பருப்பு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் உடல்
வலிமை பெறும். இனிமையான குரல் வளம் உண்டாகும்.

3. வல்லாரை இலை 4,
அக்ரூட் பருப்பு 1, பாதாம் பருப்பு 1, ஏலக்காய் 3, மிளகு 3 ஆகியவற்றை
ஒன்றாகச் சேர்த்து அரைத்து கொஞ்சம் கற்கண்டோடு அதிகாலையில் சாப்பிட்டு
வந்தால், கடுமையான இதய நோய்கள் குணமாகும்.

4. வல்லாரைச் சாறு 15
மி.லி., கீழாநெல்லி இலைச்சாறு 15 மி.லி., பசும்பால் 100 மி.லி. ஆகியவற்றை
ஒன்றாகக் கலந்து, அதிகாலையில் சாப்பிட்டு வந்தால், முற்றிய மஞ்சள் காமாலை
கூட குணமாகும்.

5. வல்லாரைச் சாறில் திப்பிலியை ஊற வைத்து
உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் ஒரு கிராம்
அளவுக்குத் தேனில் கலந்து சாப்பிட்டால் சளி, கபம், இருமல் போன்றவை விலகும்.

6.
வல்லாரைச் சாறில் பெருஞ்சீரகத்தை ஊற வைத்து எடுத்துப் பொடியாக்கி, தினமும்
இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் சரியாகும்.

7.
வல்லாரை இலை, பொடுதலைக் கீரை இரண்டையும் நிழலில் தனித்தனியே உலர்த்திப்
பொடியாக்கி, சம அளவு எடுத்து ஒன்றாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும்
இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகும்.

முருங்கைகீரை








கீரை வகைகளும்   அதன் பயன்களும் Ht183


பச்சைக் கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம்தான்
அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி
சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள். கீரை வகைகளில் இரும்புச் சத்து
கணிசமாக உள்ளது.அந்த வகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப்
பார்ப்போம்.முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப்
பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை
குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும்
மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது
முருங்கைக் கீரை.

சாதாரணமாக
வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம்
என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில்
மருந்தாகிறது. அதுபற்றி சற்று விரிவாக காண்போம்.

இது ஒரு
சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம்
சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும்
பெருகும். எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது.
கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய்
சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம்.
முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங் களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம்.
முருங்கை
இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து
சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும்
நீங்கும். அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும்.
முருங்கை இலைகளில்
இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை
நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர் களின் உடம்பில் நல்ல
ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும்.
முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து.
கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து.

முருங்கைக்
காயை வேக வைத்து கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். முருங்கைக் காய்
சாம்பார் எல்லோருக்கும் பிடித்த மானதே. இந்த சாம்பார் சுவையானதாக மட்டும்
இருந்து விடாமல் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு
மருந்தாகவும் பயன்படுகிறது.
வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ
முருங்கை காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன.
வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப்
காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.
முருங்கை விதையைக் கூட்டு
செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். தாது விருத்தியை
உண்டு பண்ணும். ஆனால் மலபந்தத்தைச் செய்வதில் முருங்கை விதைக்கு முதலிடம்
தரலாம்.

முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் பிசின் நல்ல
டானிக்குகள் செய்ய பயன்படுகிறது. பச்சைப் பிசினை காதில் ஒரு சொட்டு
விட்டால் போதும், காது வலி உடனே நின்று விடும்.

இந்த மரத்தின்
வேர் மற்றும் பிசின் சம்பந்தப்பட்ட டானிக்குகளை அல்லது லேகியங்களை
அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரை சீக்கிரம் வராமல் தள்ளிப்போகும்.

மேலும்
இந்தப் பூவுக்கு தாது விருத்தி செய்யும் குணம் உண்டு. முருங்கைப் பூ
உஷ்ணத்தை உண்டு பண்ணக் கூடியதுதான் என்றாலும் அதனால் கெடுதல்கள் எதுவும்
இல்லை. முருங்கைப் பிசினில் அரை லிட்டர் நீர் விட்டு புதுப் பாண்டத்தில்
வைத்திருந்து காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச்
சாப்பிட்டால் தாது கெட்டிப்படும்.
முருங்கை இலை சாறுடன் பால் கலந்து
குழந்தைகளுக்கு தந்தால்,இரத்த சுத்தியும்,எலும்புகளையும் வலுப்படுத்தும்.
இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம்,அயம்,வைட்டமின் உள்ளது.

கர்ப்பையின்
மந்தத் தன்மையை பேக்கி,பிரசவத்தை துரிதப்பட்த்தும்.இதன் இலையை கொண்டு
தயாரிக்கப்படும் பதார்தம்,தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும்
ஆஸ்துமா,மார்சளி,சயம் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை சுப்
நல்லது. முருக்கைப் பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப் செக்ஸ்
பலவீனத்தைப் போக்கும்.ஆண்,பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும்.
முருங்கை இலை இரத்த விருத்திக்கும்,விந்து விருத்திக்கும் சிறந்தது.

முருங்கை
இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும்.
முருக்கைகாய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன்,இருதய நோய்களை போக்கி
இரத்தவிருத்தி தாதுவிரித்திசெய்யும். முருங்கை இலை சாறுடன் தேனும், ஒரு
கோப்பை இளநீரும் கலந்து பருக மஞ்சகாமாலை,குடலில்ஏற்படும்
திருகுவலு,வயிற்றுப்போக்கு கட்டுபடும். விதையில் இருந்து என்னை தயாரித்து
வாயுப்பிடிப்பு,மூட்டுவலி களில் பயன் படுத்தலாம் முருக்கைவேரில் இருந்து
சாறெடுத்து பாலுடன் செர்த்துப பருகிவர காசநோய்,கீழ்வாயு,முதுகுவலி
குணப்படும்.

வைட்டமின்கள் : முருங்கை இலை 100கிராமில் 92 கலோரி உள்ளது.

ஈரபதம்-75.9%
புரதம்-6.7%
கொழுப்பு-1.7%
தாதுக்கள்-2.3%
இழைப்பண்டம்-0.9%
கார்போஹைட்ரேட்கள்-12.5%
தாதுக்கள்,வைட்டமின்கள்,
கால்சியம்-440 மி,கி
பாஸ்பரஸ்- 70மி.கி
அயன்- 7 மி.கி
வைட்டமின் சி 220 மி.கி
வைட்மின் பி காம்ப்ளக்ஸ் சிறிய அளவில்


பருப்புக் கீரை




கீரை வகைகளும்   அதன் பயன்களும் Ht158


நல்ல சத்துள்ள கீரைகளுள் பருப்புக் கீரையும் ஒன்று. நீண்ட காலமாக இந்தக்
கீரையைப் பருப்புடன் சமைத்து உண்ணும் வழக்கம் இருந்து வருவதால் இதற்குப்
பருப்புக் கீரை என்னும் பெயர் ஏற்பட்டுள்ளது.

பருப்புக்
கீரையின் இலைகள் நீளவட்ட வடிவத்தில் பசுமை நிறமுடையதாகவும், தடிப்பாகவும்
இருக்கும். இந்தக் கீரைச் செடி சுமார் 15 செ.மீ. உயரம் வரை வளரும். இந்தச்
செடி நன்கு வளரத் தண்ணீர் அதிகம் தேவைப்படும். விதைகள் மூலமும், தண்டுகளை
நட்டும் இந்தக் கீரையை இனவிருத்தி செய்யலாம்.

பருப்புக் கீரையில்
வைட்டமின்களும் தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன. இந்தக் கீரையின் இலை,
தண்டு அனைத்தையும் உணவாகப் பயன்படுத்தலாம். இதைப் பருப்புடன் சேர்த்து வேக
வைத்துக் கடைந்து சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். பொரியலும் செய்யலாம்.

பருப்புக்
கீரையை அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால் வேனிற்காலத் தலைவலி, சூட்டால்
உண்டாகும் தலைவலி ஆகியன குணமாகும். இந்தக் கீரையைச் சாப்பிடுவதால்
கல்லீரல் நோய்கள் தீரும். செயல் இழந்துபோன கல்லீரலை மீண்டும் செயல்படச்
செய்ய மஞ்சள் கரிசலாங்கண்ணியைப் போலவே பருப்புக் கீரையையும்
பயன்படுத்தலாம்.

பருப்புக் கீரையை வேறோடு பிடுங்கி, புளியங்கொட்டை
அளவு மஞ்சள் சேர்த்து அரைத்து எலுமிச்சங்காய் அளவு எடுத்துத் தயிரில்
கலந்து 40 நாட்கள் காலையில் மட்டும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்
கல்லீரல் மரத்தல், கல்லீரல் புண், கல்லீரல் பெருத்தல் போன்ற நோய்களும்
மண்ணீரல் நோய்களும் நீங்கிவிடும்.

பருப்புக் கீரையின் தண்டை
அரைத்து அடிவயிற்றில் பற்று போட்டால் வேர்க்குரு, கைகால் எரிச்சல்,
சிறுநீர் எரிச்சல் ஆகியவை குணமாகும். இந்தக் கீரையின் விதையை அரைத்து
இளநீரில் கலக்கி உள்ளுக்குக் கொடுத்தால் சீதபேதியால் ஏற்படும்
வயிற்றுளைச்சலும், முக்கலும் விலகும். மூத்திர எரிச்சலும்
வெள்ளைப்படுதலும் கட்டுப்படும்.

இந்தக் கீரை குடல் புழுக்களை
அகற்றுகிறது. மூல நோய் உள்ளவர்களுக்கு மலம் வலியில்லாமல் எளிதாகக் கழிய
பருப்புக் கீரை உதவுகின்றது. இது சிறுநீரைப் பெருக்கும். மூலநோயைக்
குறைக்கும்.

பருப்புக் கீரையின் சாற்றைப் பிழிந்து 50 முதல் 100
மி.லி. அளவு வரை தினமும் காலை, மாலை ஆகிய இரண்டு வேளைகளும் வெறும்
வயிற்றில் பருகி வந்தால் இரத்தபேதி, சீதபேதி, மூத்திரத் தடை, வெப்பம்,
நீர்ச்சுருக்கு ஆகிய நோய்கள் நீங்கி உடல் சூடு தணியும்.

பருப்புக்
கீரை இலையை அரைத்துத் தீப்புண், கொப்புளம், வெந்நீர்க் கொப்புளம்
ஆகியவற்றின் மீது பூசினால் எரிச்சல் தணிந்து புண் விரைவில் ஆறும்.

மஞ்சளுடன் இக்கீரையைச் சேர்த்து அரைத்துக் கட்டிகளில் பூசினால் கட்டிகள் உடைந்து சீழ் வெளியேறி புண் ஆறும்.


முளைக் கீரை








கீரை வகைகளும்   அதன் பயன்களும் Ht150


கீரைத் தண்டாக வளரும் தண்டுக்கீரையின் இளஞ்செடியே முளைக் கீரையாகும்.

முளைக் கீரை எங்கும் தாராளமாகக் கிடைக்கும். வருடம் முழுவதும் தடையின்றி கிடைக்கும்.

முளைக்கீரையை
விதைத்த பின்னர் 45 நாட்களில் அறுவடை செய்ய வேண்டும். அதற்கு மேல் வளர
விட்டால் கீரை முதிர்ந்து தண்டு நார் பாய்ந்துவிடும். உண்ணுவதற்கு
அதிகமாகப் பயன்படுத்தப்படும் கீரைகளில் முளைக்கீரையும் ஒன்று.

முளைக்கீரையில் வைட்டமின்களும், தாது உப்புக்களும் அதிக அளவில் இருக்கின்றன. குறிப்பாக சுண்ணாம்புச் சத்து நிறைய இருக்கிறது.

நல்ல மலமிளக்கியாகவும் அது விளங்குகிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்தக் கீரையைத் தொடர்ந்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

முளைக்கீரையைப் பருப்புடன் நன்கு வேக வைத்து மசித்துக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

முளைக்கீரை
உணவுக்குச் சுவையூட்டுவதுடன் பசியையும் தூண்டுகிறது. முளைக்கீரையை நன்கு
கழுவிச் சிறிது வெங்காயம், புளி, பச்சை மிளகாய், உப்பு ஆகியவை சேர்த்து
வேக வைத்துக் கடைந்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் உட்சூடு, ரத்தக்
கொதிப்பு, பித்த எரிச்சல் ஆகிய நோய்கள் குணமாகும். அதோடு கண்ணும்
குளிர்ச்சியடையும்.

முளைக் கீரையைத் தொரர்ந்து சாப்பிடுவதால், சொறி, சிறங்கு முதலிய நோய்கள் குணமாகின்றன. இந்தக் கீரை வெப்ப சுரத்தைத் தணிக்கிறது.

முளைக்
கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான
வைட்டமின்களும் தாதுப் பொருட்களும் உடலுக்குப் போதிய அளவில் கிடைக்கும்.
முளைக் கீரையில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிர சத்துக்கள் இரத்தத்தை
சுத்தி செய்து உடலுக்கு அழகையும் மெருகையும் ஊட்டுகின்றன.

இக்கீரையில்
மட்டுமே எல்லா விதமான தாது உப்புக்களும் உள்ளதால் இதை நாள்தோறும் உணவுடன்
சேர்த்துக்கொண்டால் ஒரு பரிபூரண உணவுக்குரிய எல்லாச் சத்துக்களையும் நாம்
பெற முடியும்.

முளைக்கீரை காச நோயின் துன்பத்திலிருந்து விடுபட வைக்கும்.

கொடிப் பசலைக் கீரை








கீரை வகைகளும்   அதன் பயன்களும் Ht139


கொடி வகையைச் சேர்ந்த இக்கீரை கொம்புகள், வேலிகளைச் சுற்றிப் படரும்.
இக்கீரை இனிப்புச் சுவை கொண்டது. தேகச் சூட்டைத் தணித்து உடலுக்கு நல்ல
குளிர்ச்சியைத் தரும்.

இக்கீரையை நன்றாக நசுக்கி, தலையில் வைத்துக் கட்டினால் உடலில் ஏற்படும் மிதமிஞ்சிய உஷ்ணத்தைப் போக்கும்.

இதன்
இலைகளை நெருப்பிலிட்டு வதக்கி, வீக்கங்கள், கட்டிகள் ஆகியவற்றின் மீது
வைத்து கட்டினால் விரைவில் குணம் கிட்டும். உடல் வறட்சியைப் போக்கும்.
நீர் தாகத்தைத் தணிக்கும்.

மலத்தை இளக்கி, மலச்சிக்கலைப் போக்கும்.

குழந்தைகளுக்கு
நீர்கோத்திருந்தால், பசலைக் கீரையைச் சாறு பிழிந்து அதில் கற்கண்டு கலந்து
ஒரு வேளை ஒரு ஸ்பூன் வீதம் ஓரிரு நாட்கள் குடிக்கத் தந்தால் போதும். குணம்
கிட்டும்.

உடலுறவு இச்சையைத் தூண்டும்.

கொடியில் அல்லாமல் தரையில் படரும் பசலையும் உண்டு. இது தரைப் பசலைக் கீரை என்று அழைக்கப்படுகிறது. இரண்டு கீரைக்கும் ஒரே பலன்தான்.

இக்கீரை அதிக குளிர்ச்சித் தன்மை உடையது. எனவே குளிர்ச்சித் தேகம் கொண்டவர்கள் அதிகம் உண்ணக்கூடாது. கபம் கட்டும்.
கொத்தமல்லிக் கீரை








கீரை வகைகளும்   அதன் பயன்களும் Ht135


கொத்தமல்லிக் கீரை வீட்டுத் தோட்டங்களிலும் மட்டுமின்றி சிறு தொட்டிகளில்
கூட வளர்க்கலாம். வழக்கமாக ரசம், சாம்பார் போன்றவற்றில் மணத்திற்காக
இக்கீரையைப் பயன்படுத்துவார்கள்.

கொத்தமல்லிக் கீரை உப்புச் சுவையுடையது. உஷ்ணமும் குளிர்ச்சியும் கலந்த தன்மை உடையது.

கொத்தமல்லிக்
கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் காய்ச்சல் குணமாகும். வாதம், பித்தம்
நீங்கும். உடல் பலம் பெறும். தாது விருத்திக்கும் நல்லது.

இக்கீரை பசியைத் தூண்டும் சக்தி படைத்தது.

இக்கீரையின் சாறு பிழிந்து பித்தத் தழும்புகள் மீது பூசினால் விரைவில் குணம் கிடைக்கும்.

இக்கீரையை எண்ணெயில் சிறிது வதக்கி, கட்டிகள், வீக்கங்களின் மீது வைத்துக் கட்டினால் குணம் கிட்டும்.

கொத்தமல்லிக் கீரையைத் துவையல் செய்து சாப்பிடலாம். தினமும் இக்கீரையை உணவில் சேர்த்து வந்தால் சிறுநீர் எளிதாய் பிரியும்.

பற்களுக்கு உறுதியை அளிக்கும். பல் சம்பந்தமான எல்லா நோய்களும் இக்கீரையை உண்டுவரக் குணமாகும்.

முதுமைப் பருவத்தில் ஏற்படும் தோல் சுருக்கத்தைப் போக்கி தேகத்திற்கு அழகையும் மினுமினுப்பையும் தரும்.






முடக்கத்தான்








கீரை வகைகளும்   அதன் பயன்களும் Ht129


முடக்கத்தான் வேலிகளில் காட்டுச் செடியாக வளர்ந்து கிடக்கும் ஒரு வகைக் கீரை. இதன் இலை துவர்ப்புச் சுவையுடையது.

முடக்கத்தான்
கீரையை எண்ணெயில் வதக்கி மிளகாயும், உப்பும் சேர்த்துத் துவையல் அரைத்துத்
தொடு கூட்ட¡கப் பயன்படுத்தினால் சுவையாக இருக்கும்.

இந்தக்
கீரையைச் சன்னமாக நறுக்கி வெங்காயம் அதிகமாகச் சேர்த்துப் பொரியல்
செய்தும் சாப்பிடலாம். கொடியை மிளகு, சீரகத்துடன் சேர்த்து ரசம் வைக்கலாம்.

துவரம்
பருப்பு, பாசிப்பருப்பு மற்றும் வேறு பருப்புகளுடன் இந்தக் கீரையைச்
சேர்த்துக் கூட்டும் செய்யலாம். அதோடு, அடை செய்வதற்கும், தோசை மாவை
புளிக்க வைப்பதற்கும் இந்தக் கீரையை அரைத்துச் சேர்த்துக்கொள்ளலாம்.

முடக்கத்தான்
கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன.
முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம்
மலச்சிக்கல், மூல நோய், கரப்பான், கிரந்தி, பாதவாதம் போன்ற நோய்கள்
குணமாகின்றன.

இந்தக் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி உண்டால்
மூட்டுவலி, கைகால் வலி, முதுகு வலி, உடல் வலி ஆகிய அனைத்து வலிகளும்
அகலும். முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி
உட்கொண்ட¡ல் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

இந்தக் கீரையின் சாற்றைக் காதில் விட்டால் காது வலி நிற்கும். கட்டிகளில் வைத்து கட்டினால் அவை உடைந்து புண் ஆறும்.

வாய்வுத்
தொல்லையுடையவர்கள் முடக்கத்தான் கீரையை சாப்பிட்டால் நல்ல பலன்
கிடைக்கும். மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு இந்தக் கீரை
நல்லது. பெண்களின் மாதவிடாய் தொடர்பான பிரச்னைகளுக்கு இந்தக் கீரையின்
சாறு ஒரு மேஜைக்கரண்டி போதும். இந்தக் கீரையை அரைத்து கர்ப்பிணிப்
பெண்களின் அடிவயிற்றில் கட்டினால் சுகப்பிரசவமாகும்.


கீழாநெல்லிக் கீரை








கீரை வகைகளும்   அதன் பயன்களும் Ht120


நீர் நிறைந்த சதுப்பு நிலங்களிலும், வயல் மற்றும் கால்வாய் ஓரங்களில் வளரும் இக்கீரை எளிதில் கிடைக்கும்.
கீழாநெல்லி, கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி ஆகிய பெயர்களில்
அழைக்கப்படுகிறது. இக்கீரையில் கிட்டத்தட்ட அனைத்துச் சுவைகளும்
அடங்கியுள்ளன. புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, இனிப்பு ஆகிய நான்கு
சுவைகளும் உண்டு. இக்கீரை குளிர்ச்சித் தன்மை உடையது.
இக்கீரையின் தளிர்களை அரைலிட்டர் தண்ணீரில் இட்டுக் காய்ச்சி, வடிகட்டி
தண்ணீரை மட்டும் குடித்து வந்தால் சீதபேதி உடனே மாறும். இரத்த சோகையால்
உடல் வெளுத்துக் காணப்படுபவர், மேகநோயால் அவதிப்படுபவர் இதை நன்றாக
அரைத்து பசுவின் தயிரில் கலந்து நாள்தோறும் காலையில் பருகி வந்தால் நல்ல
பலன் கிட்டும்.
மஞ்சள் காமாலையைக் குணப்படுத்த இக்கீரையைத் தவிர வேறு மருந்து
கிடையாது. கீழாநெல்லிக்காய்களே ஆங்கில மருத்துவத்திலும் மஞ்சள்
காமாலைக்குப் பயன்படுத்தப் படுகிறது.
கீழாநெல்லி, தும்பை இலை, கரிசலாங்கண்ணி இவைகளை சம அளவு எடுத்து நன்றாக
அரைத்து, காலை, மாலை சுமார் பத்து நாட்கள் உண்டு வந்தால் காமாலை நோய்
பூரணமாகக் குணமாகும். பெரியவர்கள் நெல்லிக்காய் அளவும், சிறியவர்கள்
சுண்டைக்காய் அளவும் உட்கொண்டால் போதுமானது. காரம், புளியைத் தவிர்த்து,
வழக்கத்திற்கு பாதி உப்பு சேர்த்து, பால்சோறு அல்லது தயிர்சோறு மட்டும்
சாப்பிட்டு வர வேண்டும்.
தாது பலம் இழந்து மனம் மற்றும் முகவாட்டத்துடன் இருக்கும் ஆண்கள்
இக்கீரையுடன் ஓரிதழ் தாமரை இலையையும் சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு
தினமும் சுமார் நாற்பது நாட்கள் உண்டால் போதும். இழந்த உயிர்சக்தியை
மீண்டும் பெறலாம். ஆண்மை மிகும்.
இக்கீரை பசியை நன்றாகத் தூண்டும்.
சொறி, சிரங்குகளுக்கு இக்கீரையை உப்புடன் சேர்த்து அரைத்துப் பூசினால்
நல்ல பலன் கிட்டும். காயங்களுக்கு உப்பு சேர்க்காமல் வெறுமனே இக்கீரையை
அரைத்து, பற்றுப் போட்டால் காயங்கள் விரைவில் ஆறும்.
மாதுளைக் கொழுந்தும், இக்கீரையையும் சம அளவில் கலந்து அரைத்து, பசுவின்
தயிர் அல்லது மோரில் கலந்து ஓரிரு நாட்கள் குடித்தால் போதும், சீதபேதி
குணமாகும்.
கண் பார்வை மங்குதல், மாலைக் கண் போன்ற கோளாறுகளுக்கு,
கீழாநெல்லிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரையை சம அளவு எடுத்து நன்றாக அரைத்து
காலை, மாலை புளித்த மோரில் கலந்து தொடர்ந்து நாற்பது நாட்கள் பருகினால்
போதும். பார்வை மிகும். கண்பார்வை கூர்மை பெறும்.











கீரைத்தண்டு








கீரை வகைகளும்   அதன் பயன்களும் Ht118


சாதாரணமாக கீரைத்தண்டு தோட்டங்களில் விளைகிறது. இதில் செங்கீரை, வெண்கீரை
என்று இரண்டு வகை உண்டு. கீரைத்தண்டின் இலை, தண்டு, வேர் அனைத்தையும்
சமைத்து உண்ணலாம். இக்கீரைத் தண்டு இனிப்புச் சுவை உடையது.கீரைத்தண்டை
சமைத்து உண்டால் சிறுநீர் வெளியேறும் போது உண்டாகும் எரிச்சல், வெள்ளை
ஒழுக்கு, இரத்த பேதி போன்றவை குணமாகும். வயிற்று வலிக்கும் நல்லது.

வாய்வுத்
தொல்லையும் மாறும்.செங்கீரைத் தண்டு தேகச்சூட்டை மாற்றும். காய்ச்சலுக்கு
நல்லது. தீராத பித்தத்தைக் குணமாக்கும். மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு
அதிக இரத்தப் போக்கைக் கட்டுபடுத்தும்.

கீரைத்தண்டு நார்ச்சத்து
மிகுந்தது. எனவே மலத்தை இளக்கும். மலச்சிக்கலைப் போக்கும். மலம் கழிக்கும்
போது ஆசனவாயில் உண்டாகும் எரிச்சலைத் தணிக்கும். மூலநோயைக்
குணப்படுத்தும்.கீரைத்தண்டை வெறுமனே தண்ணீரில் போட்டுக் காய்ச்சிக்
குடித்தாலும் நிரம்ப பலன் உண்டு. தேகம் குளிர்ச்சி பெறும். சமைத்தும்
உண்ணலாம்.
கரிசலாங்கண்ணி








கீரை வகைகளும்   அதன் பயன்களும் Ht109


சிகப்பு, மஞ்சள், நீலம், வெள்ளை என்னும் நான்கு வகைகள் இருப்பினும்
வெள்ளைக் கரிசலாங்கண்ணியே அதிகம் கிடைக்கும். இது மேட்டுநிலங்களிலும்
மலையடிவாரங்களிலும் தானாகவே வளரும்.கரிப்பான், கைகேசி, கையாந்தகரை,
தேகராஜம், பிருங்கராஜம், கரிசனாங்கண்ணி, கரியசாலை, கையான், கரிசாலை,
கைவீசி இலை போன்ற பல பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. கையாந்தகரை
எல்லோருக்கும் தெரிந்த பெயர்.

கசப்புச்
சுவையுடைய இக்கீரை அதிக உஷ்ணம் கொண்டது. இக்கீரையைச் சமைத்து உண்டால்
குஷ்டம், காமாலை வீக்கங்கள், பாண்டு போன்ற நோய்கள் குணமாகும்.

மஞ்சள் கரிசலாங்கண்ணியைச் சமைத்து உண்டால் தேக மினுமினுப்பு கூடும். கண் பார்வை மிகும்.

குன்ம நோயால் உண்டாகும் கட்டிகள் உடையும். மூளைக்கும் நல்லது.

பாம்புக்கடி விஷம் நீங்க, இக்கீரையைச் சாறு பிழிந்து மூன்று அல்லது நான்கு தேக்கரண்டி சாப்பிட்டால் போதும்.

சிறு
குழந்தைகளுக்கு அடிக்கடி ஜலதோஷம் பிடித்தால், இக்கீரையைச் சாறு பிழிந்து
இரண்டு துளிகளும், சுத்தமான தேன் ஏழு துளிகளும் கலந்து குடிக்கத் தரவும்.
ஜலதோஷம் மாறும்.

காதுவலிக்கும் இக்கீரையின் சாற்றை ஓரிரு துளிகள் காதில் விடலாம்.

தலைக்கு
எண்ணெய் காய்ச்சும்போது அதில் கரிசலாங்கண்ணி கீரையைப் போட்டுக் காய்ச்சித்
தேய்த்தால், தலைமுடி கருகருவென்று வளரும். இளநரையும் மாறும். கண்ணுக்கும்
குளிர்ச்சி தரும்.

இக்கீரையின் வேர்களைப் பொடித்து உண்டால், மண்ணீரல், கல்லீரல் சம்பந்தமான நோய்கள் மாறும்.
அகத்திக் கீரை










கீரை வகைகளும்   அதன் பயன்களும் Ht40


செடி இனத்தைச் சேர்ந்த அகத்தி, தோட்டங்களில் குறிப்பாக நீர் தேங்கிய
நிலங்களிலும், வெற்றிலைக் கொடிக் கால்களிலும் விளையும். அகத்தியில் சாழை
அகத்தி, சிற்றகத்தி, சீமை அகத்தி என்ற சில வகைகள் உண்டு.
பொதுவாக அகத்தி வெள்ளை நிறத்தில் பூக்கும். சிவப்பு நிறத்தில் பூக்கும்
அகத்தி சிவப்பகத்தி என்று அழைக்கப்படுகிறது.
சிறிது உப்பு சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்ட இக்கீரையை வேறு
மருந்துகள் உண்ணும் காலங்களில் உண்ணக் கூடாது. ஏனெனில் மருந்துகளின்
வீரியத்தை அகத்திக் கீரை குறைக்கவும் அழித்துவிடம் செய்யும்.
இக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் இரத்தம் கெட்டுப் போகும்
வாய்ப்புண்டு. சொறி, சிரங்கும் தோன்றலாம். இரத்தம் குறைந்து இரத்த சோகை
ஏற்படலாம். வயிற்று வலியும் பேதியும் உண்டாகலாம்.
காய்ச்சல் நேரத்தில் இக்கீரையைப் பிழிந்து அதன் சாற்றில் இரு துளி
மூக்கில் விட்டால் காய்ச்சல் நீங்கும். அகத்தி இலைச் சாற்றை நெற்றியில்
தடவி நெற்றியை இலேசாக அனலில் காண்பிக்க கடுமையான தலைவலி நீங்கும்.
சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ நிறைய உள்ளது. போதுமான பால் சுரக்காத
தாய்மார்கள் தொடர்ந்து அகத்திக் கீரையைச் சாப்பிட நன்கு பால் சுரக்கும்.
இக்கீரை சமைக்கும்போது நன்றாக வேக வைத்து உண்ண வேண்டும். வயிற்றில் உள்ள
புழுக்களை வெளியேற்றும் சக்தி இக்கீரைக்கு உண்டு. மலச்சிக்கல் நீங்கும்.
குழந்தைகளுக்கு நீர் கோர்த்துக் கொண்டால், இக்கீரையின் சாற்றை ஐந்துக்கு
ஒரு பங்கு தேன் கலந்துதலை உச்சியில் தடவினால் நீர்க்கோவை மறையும். இது
வாயுவை உண்டாக்கும் இயல்புடையது. எனவே வாய்வுக் கோளாறு உள்ளவர்கள்
இக்கீரையை உண்ணக் கூடாது.
அரைக்கீரை








கீரை வகைகளும்   அதன் பயன்களும் Ht39


இக்கீரை சற்று தித்திப்புச் சுவையுடையது. உஷ்ண சக்தி கொண்டது.
அரைக்கீரையுடன் சிறிது நெய் சேர்த்து உண்டால் உஷ்ணத்தை உண்டாக்காது.
மருந்துகள் உண்ணும் காலத்தில் இக்கீரை பத்தியமாகப் பயன்படுகிறது.
அரைக்கீரையைத் தொடர்ந்து உண்டு வந்தால் ஜலதோஷம், சளி, இருமல், கப ஜீரம்,
குளிர் ஜீரம், வாத ஜீரம், ஜன்னி, பாத ஜீரம், போன்றவை குணமாகும்.
அரைக்கீரை தேகத்தில் அழகை அதிகரித்து பொலிவுறச் செய்யும். தாது விருத்தி
ஏற்பட்டு ஆண்மை அதிகரிக்கும். உடலுக்கு வலிமை சேர்க்கும். அரைக்கீரையை
நெய்யில் வதக்கி நாள்தோறும் காலை ஒரு வேளை மட்டும் தொடர்ந்து உண்டு
வந்தால் நாற்பது நாட்களில் ஆண்மை பெருகும். நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
நோய் நீங்கிய பின் உடலில் இருக்கும் பலவீனத்தை அகற்றி, புது ரத்தம் பெருக
அரைக்கீரை உதவும். வாத நீர்களைக் கட்டுப்படுத்தும் இக்கீரை நரம்புகளையும்
பலப்படுத்தும். உடல்வலி நீக்கும். நீர்க் கோர்வை, சளிப்பிடிப்பு, இருமல்
விலகும். பெண்களுக்குத் தலைமுடியை நன்றாகக் கருத்தும், அடர்த்தியாகவும்
வளரச் செய்யும். இளநரையை நீக்கும். இக்கீரையுடன் புளி சேர்த்து சாப்பிட
நாக்கிற்கு நல்ல ருசி ஏற்படும். பசி மந்தமும் நீங்கும்.

















மணத்தக்காளி








கீரை வகைகளும்   அதன் பயன்களும் Ht38


வாய்ப் புண் உள்ளவர்களுக்கு வயிற்றிலும் புண் இருக்கும். இந்த பிரச்னைக்கு
நல்ல மருந்து மணத்தக்காளி கீரை. இக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர
வாய்ப் புண்ணும், வயிற்றுப் புண்ணும் குணமாகும். மூலநோய்க்கும் குடல்
பிரச்னைக்கும் இந்த கீரை நல்ல மருந்து. மேடைப் பேச்சாளர்கள்,
பாடகர்களுக்கு தொண்டைக் கட்டிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம். இவர்கள்
மணத்தக்காளி கீரையை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed 16 Dec 2009 - 9:38

தண் நான் படம் மட்டும் தான் கேட்டேன்... கீரை வகைகளும்   அதன் பயன்களும் Icon_lol

நீங்க எனக்கு கீரையும் அதன் பயனும் தந்து உதவியதுக்கு ரொம்ப நன்றி தம்பி.... கீரை வகைகளும்   அதன் பயன்களும் 677196 கீரை வகைகளும்   அதன் பயன்களும் 677196 கீரை வகைகளும்   அதன் பயன்களும் 678642


எனக்கா தேடி பார்த்ததுக்கு நன்றி தம்பி.... கீரை வகைகளும்   அதன் பயன்களும் 678642

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Wed 16 Dec 2009 - 9:39

கீரை வகைகளும்   அதன் பயன்களும் 678642 கீரை வகைகளும்   அதன் பயன்களும் Icon_smile கீரை வகைகளும்   அதன் பயன்களும் 154550

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed 16 Dec 2009 - 9:43

தண் கீரை வகைகளும்   அதன் பயன்களும் 942 கீரை வகைகளும்   அதன் பயன்களும் 102564 கீரை வகைகளும்   அதன் பயன்களும் 678642

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed 16 Dec 2009 - 11:59

தாமு அண்ணா, தண்டாயுதபாணி மூலம் கீரை வகைகளை தெரிந்து கொண்டேன்.
மிக்க நன்றி இருவருக்கும்.


கீரை வகைகளும்   அதன் பயன்களும் 677196 கீரை வகைகளும்   அதன் பயன்களும் 677196 கீரை வகைகளும்   அதன் பயன்களும் 677196 கீரை வகைகளும்   அதன் பயன்களும் 677196 கீரை வகைகளும்   அதன் பயன்களும் 755837

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக