ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!
by mohamed nizamudeen Yesterday at 11:58 pm

» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Yesterday at 11:56 pm

» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Yesterday at 11:52 pm

» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Yesterday at 11:47 pm

» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Yesterday at 6:07 pm

» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by mohamed nizamudeen Yesterday at 3:20 pm

» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Yesterday at 3:18 pm

» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Yesterday at 3:17 pm

» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Yesterday at 1:16 pm

» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 13/08/2022
by mohamed nizamudeen Yesterday at 9:03 am

» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Yesterday at 9:00 am

» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Yesterday at 6:40 am

» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Yesterday at 6:37 am

» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 6:33 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:46 pm

» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:44 pm

» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Fri Aug 12, 2022 1:52 pm

» புத்தகம் தேவை
by lakshmi palani Fri Aug 12, 2022 1:20 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Aug 12, 2022 12:20 pm

» வெளிச்சம் உள்ள இடத்தில் தானே தேட வேண்டும்…!!
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:34 am

» சினிமாவில் கதாநாயகிகளுக்கு மதிப்பே கிடையாது! – தமன்னா
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:27 am

» சிறுவர் பாடல் – கறுப்புயானை
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:03 am

» இந்தியில் யாஷிகா படம்
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:01 am

» உலகநாதர்
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:54 am

» கவிஞனின் பேராசை – சிறுவர் கதை
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:51 am

» ஏமாறிய கழுகு – சிறுவர் கதை
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:50 am

» லெமன் இஞ்சி ரசம் – டாக்டர் சாந்தி விஜய்பால்
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:47 am

» நெல்லிக்காய் ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:46 am

» வரிப்பணம் எங்கே செல்கிறது: மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கேள்வி
by ayyasamy ram Fri Aug 12, 2022 5:45 am

» பொறுமை – ஒரு பக்க கதை
by mohamed nizamudeen Thu Aug 11, 2022 11:54 pm

» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Thu Aug 11, 2022 11:51 pm

» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:25 pm

» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:23 pm

» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:21 pm

» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Thu Aug 11, 2022 4:00 pm

» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:41 pm

» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:40 pm

» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:39 pm

» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:37 pm

» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:36 pm

» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:34 pm

» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:32 pm

» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:39 am

» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:39 am

» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:38 am

» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:37 am

» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:18 am

» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:16 am

» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:08 am

நிகழ்நிலை நிர்வாகிகள்


பாரம்பரிய உணவுகளுடன் தமிழ் புத்தாண்டை தொடங்குவோம்!

பாரம்பரிய உணவுகளுடன் தமிழ் புத்தாண்டை தொடங்குவோம்! Empty பாரம்பரிய உணவுகளுடன் தமிழ் புத்தாண்டை தொடங்குவோம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Apr 14, 2018 8:04 am

பாரம்பரிய உணவுகளுடன் தமிழ் புத்தாண்டை தொடங்குவோம்! VjQ33N8SqKoN2earlVGC+7bcfa85937ce719c264840b81d1894da
பாரம்பரியம் பற்றிய விழிப்புணர்வு தற்போது தமிழர்களுக்கு வந்துகொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக உணவு விஷயத்தில் நம்முடைய பாரம்பரிய சிறுதானியம் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளதை காணமுடிகிறது. ஆனாலும், பண்டிகை என்றாலே கேசரி, பொங்கல், வடை இல்லாமல் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. வட இந்திய இறக்குமதியான ரவையைத் தவிர்த்துவிட்டு, நம்ம ஊர் பனிவரகு, நாட்டு சர்க்கரை உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி எளிய உணவுகளை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
பனிவரகு ரவை கேசரி
தேவையானவை: பனிவரகு ரவை - ஒரு கப், சர்க்கரை - இரண்டரை கப், தண்ணீர் - 4 கப், முந்திரி - 5, திராட்சை - 10, ஏலக்காய் - 2, நெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: கடாயில் நெய் ஊற்றி, மிதமான தீயில் பனிவரகு ரவையை வறுக்கவும். பிறகு, கொதிக்கவைத்த நீரில் ரவையைக் கொட்டிக் கிளறவும். ரவை வெந்ததும், சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும். நெய்யில் முந்திரி, திராட்சை, ஏலக்காயை வறுத்துச் சேர்த்து, கிளறி இறக்கவும்.
நன்றி
Newstm
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

பாரம்பரிய உணவுகளுடன் தமிழ் புத்தாண்டை தொடங்குவோம்! Empty Re: பாரம்பரிய உணவுகளுடன் தமிழ் புத்தாண்டை தொடங்குவோம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Apr 14, 2018 8:06 am

பாரம்பரிய உணவுகளுடன் தமிழ் புத்தாண்டை தொடங்குவோம்! 8qzEx9ewTum86qbd3Jli+f6f5031d6389fb09e85eb994356b5d1e

அக்கார அடிசல்
தேவையானவை: பச்சரிசி - 250 கிராம், பால் - முக்கால் லிட்டர், நாட்டுச்சர்க்கரை - 400 கிராம், நெய் - 2 டேபிள்ஸ்பூன், பாசிப்பருப்பு - 200 கிராம், முந்திரி (பொடித்தது) - 5, கிஸ்மிஸ் (திராட்சை) -சிறிதளவு, ஏலக்காய்ப்பொடி - ஒரு டீஸ்பூன்
செய்முறை: நன்கு சுத்தம் செய்த பச்சரிசியை பாலில் வேக வைக்கவும் (பாலுடன் சிறிது தண்ணீரும் சேர்த்துக்கொள்ளலாம்). அரிசி வெந்தவுடன் பாசிப்பருப்பைச் சேர்த்து மீண்டும் குழைய வேகவைக்கவும். பொடித்த நாட்டுச்சர்க்கரையை இத்துடன் சேர்த்து நன்கு கிளறவும். வாணலியில் நெய் சேர்த்து முந்திரி, கிஸ்மிஸ் (திராட்சை), ஏலக்காய்ப்பொடியை வதக்கி, அதை வேக வைத்த அரிசியில் சேர்த்துக் கிளறவும். அக்கார அடிசிலை ருசித்துப் புசிக்கவும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

பாரம்பரிய உணவுகளுடன் தமிழ் புத்தாண்டை தொடங்குவோம்! Empty Re: பாரம்பரிய உணவுகளுடன் தமிழ் புத்தாண்டை தொடங்குவோம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Apr 14, 2018 8:07 am

பாரம்பரிய உணவுகளுடன் தமிழ் புத்தாண்டை தொடங்குவோம்! LOYquM9QACsKIY7kWdPy+7bacceae1731fde9a2770ef5403ff81d

நவதானிய அடை
தேவையானவை: (சூரியன்) கோதுமை, (சந்திரன்) அரிசி, (செவ்வாய்) துவரம் பருப்பு, (புதன்) பச்சைப்பயிறு, (வியாழன் – குரு) கொண்டைக்கடலை, (வெள்ளி – சுக்ரன்) மொச்சை, (சனி) எள்ளு, (ராகு) கறுப்பு உளுந்து, (கேது) கொள்ளு.
இந்த ஒன்பது தானியங்களும் தலா ஒரு கைப்பிடி, காய்ந்த மிளகாய் – 3 அல்லது 5, இஞ்சி – ஒரு பெரிய துண்டு, மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – 2 ஆர்க்கு, உப்பு, நல்லெண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: முந்தைய நாள் இரவே நவ தானியங்களையும் ஊறவைக்கவும். ஊறவைத்த தானியங்களை, எண்ணெய் தவிர்த்து மற்ற பொருட்களோடு சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். இந்த மாவை, தோசைக்கல்லில், அடையாக வார்த்து, இருபுறமும் நல்லெண்ணெய் ஊற்றி வேகவிடவும். அடையின் நடுவில் துவாரம் செய்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, மொறுமொறுவென்று பொன்னிறமாக எடுக்கவும்.
இந்த அடைக்கு இஞ்சிச் சட்னி தொட்டுச் சாப்பிட்டால்… அருமையாக இருக்கும்.
பலன்கள்: புரதச்சத்து முதல் அத்தனைவித வைட்டமின்கள், தாது உப்புக்கள் நிறைந்த உணவு. அனைவருக்கும் ஏற்றது. 
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

பாரம்பரிய உணவுகளுடன் தமிழ் புத்தாண்டை தொடங்குவோம்! Empty Re: பாரம்பரிய உணவுகளுடன் தமிழ் புத்தாண்டை தொடங்குவோம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Apr 14, 2018 8:09 am

பாரம்பரிய உணவுகளுடன் தமிழ் புத்தாண்டை தொடங்குவோம்! SiA9xRkTdq5IdwSBYiUr+6a7c98ee33567cb3b029725c3571b8b5

முக்கனிப் பழக்கலவை
தேவையானவை: மாம்பழம் – 3, வாழைப்பழம் – 5, பலாச்சுளை – 10, தேன் – தேவையான அளவு.
செய்முறை: மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம் ஆகிய மூன்றையும் நன்றாக மசித்துக்கொள்ள வேண்டும்.  பலாச்சுளை நன்கு பழுத்த பழமாக இருக்க வேண்டும். அதனுடன் தேன் சேர்த்து சாப்பிடும்போது மேலும் சுவையாக இருக்கும்.
பலன்கள்: வைட்டமின் ஏ, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் என அத்தியாவசதிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. அதிக கார்போஹைட்ரேட் உள்ளதால் குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை நோயாளிகள் மிகக் குறைவாக எடுத்துக்கொள்ளலாம். அதற்கு ஏற்றார்போல், அன்றைய தினத்தின் டயட்டில் சிறிது மாற்றம் செய்துகொள்வது நல்லது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

பாரம்பரிய உணவுகளுடன் தமிழ் புத்தாண்டை தொடங்குவோம்! Empty Re: பாரம்பரிய உணவுகளுடன் தமிழ் புத்தாண்டை தொடங்குவோம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Apr 14, 2018 8:10 am

பாரம்பரிய உணவுகளுடன் தமிழ் புத்தாண்டை தொடங்குவோம்! G4FnmeHSQAyRFMXwktOI+09ce843d9bc57ec6d30448b8f3864ac9

கதம்பக்காய்க் கூட்டு
தேவையானவை: சுரைக்காய், பீர்க்கன், புடலை, மஞ்சள் பூசணி, வெள்ளைப் பூசணி, அவரைக்காய், தக்காளி, கொத்தவரை, காராமணி, சின்ன வெங்காயம் (நறுக்கியது) – 100 கிராம், பாசிப்பருப்பு – 200 கிராம், நல்லெண்ணெய் – 3 மேசைக்கரண்டி, கடுகு, உப்பு – சிறிது, உளுந்து, கடலைப் பருப்பு – 2 தேக்கரண்டி, பச்சைமிளகாய் – 5, மஞ்சள் தூள் – சிறிது, இஞ்சி, பூண்டு விழுது – இரண்டு மேசைக்கரண்டி, கல் உப்பு – தேவையான அளவு.
செய்முறை: எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு இவற்றைத் தாளித்து, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். மற்ற காய்களைச் சேர்த்து வதக்கி, வெந்ததும், வேகவைத்த பாசிப்பருப்பைச் சேர்த்துப் பரிமாறவும்.
பலன்கள்: கோடைக்காலத்துக்கு ஏற்ற நீர்க்காய்கறிகள் கலவை. நீர்ச்சத்து, நார்ச்சத்து, புரதம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. உடலுக்கு புத்துணர்வு தரும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

பாரம்பரிய உணவுகளுடன் தமிழ் புத்தாண்டை தொடங்குவோம்! Empty Re: பாரம்பரிய உணவுகளுடன் தமிழ் புத்தாண்டை தொடங்குவோம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை