புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காடும் காடர்களும் - Page 3 Poll_c10காடும் காடர்களும் - Page 3 Poll_m10காடும் காடர்களும் - Page 3 Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen
காடும் காடர்களும் - Page 3 Poll_c10காடும் காடர்களும் - Page 3 Poll_m10காடும் காடர்களும் - Page 3 Poll_c10 
5 Posts - 13%
heezulia
காடும் காடர்களும் - Page 3 Poll_c10காடும் காடர்களும் - Page 3 Poll_m10காடும் காடர்களும் - Page 3 Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
காடும் காடர்களும் - Page 3 Poll_c10காடும் காடர்களும் - Page 3 Poll_m10காடும் காடர்களும் - Page 3 Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
காடும் காடர்களும் - Page 3 Poll_c10காடும் காடர்களும் - Page 3 Poll_m10காடும் காடர்களும் - Page 3 Poll_c10 
3 Posts - 8%
Raji@123
காடும் காடர்களும் - Page 3 Poll_c10காடும் காடர்களும் - Page 3 Poll_m10காடும் காடர்களும் - Page 3 Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
காடும் காடர்களும் - Page 3 Poll_c10காடும் காடர்களும் - Page 3 Poll_m10காடும் காடர்களும் - Page 3 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காடும் காடர்களும் - Page 3 Poll_c10காடும் காடர்களும் - Page 3 Poll_m10காடும் காடர்களும் - Page 3 Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
காடும் காடர்களும் - Page 3 Poll_c10காடும் காடர்களும் - Page 3 Poll_m10காடும் காடர்களும் - Page 3 Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
காடும் காடர்களும் - Page 3 Poll_c10காடும் காடர்களும் - Page 3 Poll_m10காடும் காடர்களும் - Page 3 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
காடும் காடர்களும் - Page 3 Poll_c10காடும் காடர்களும் - Page 3 Poll_m10காடும் காடர்களும் - Page 3 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
காடும் காடர்களும் - Page 3 Poll_c10காடும் காடர்களும் - Page 3 Poll_m10காடும் காடர்களும் - Page 3 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
காடும் காடர்களும் - Page 3 Poll_c10காடும் காடர்களும் - Page 3 Poll_m10காடும் காடர்களும் - Page 3 Poll_c10 
7 Posts - 2%
prajai
காடும் காடர்களும் - Page 3 Poll_c10காடும் காடர்களும் - Page 3 Poll_m10காடும் காடர்களும் - Page 3 Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
காடும் காடர்களும் - Page 3 Poll_c10காடும் காடர்களும் - Page 3 Poll_m10காடும் காடர்களும் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காடும் காடர்களும் - Page 3 Poll_c10காடும் காடர்களும் - Page 3 Poll_m10காடும் காடர்களும் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காடும் காடர்களும் - Page 3 Poll_c10காடும் காடர்களும் - Page 3 Poll_m10காடும் காடர்களும் - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காடும் காடர்களும்


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Sat 7 Apr 2018 - 2:29

First topic message reminder :

தோழமைக்கு வணக்கம்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு என் எழுத்தைப் பதிவிட  வந்துள்ளேன். பணி மாறுதல்  மற்றும் அதுசார்ந்த பல்வேறு பணிகளில் என் கட்டுரையைத் தொடர முடியவில்லை. தற்பொழுது என் எழுத்தைத் தொடரும் சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கின்றேன். அது மட்டுமல்ல புதிய தொடர் ஒன்றையும் எழுதும் சூழல் வாய்த்திருக்கின்றது.

நான் ௨௦௦௭ இல் வால்பாறைக் கல்லூரியின் தமிழ்த்துறையில் உதவிப்பேராசிரியராகப் பணியேற்றபோது அங்கு வாழும் பழங்குடியின மக்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் ஒரு மாணவியின் உதவியோடு முதலில் வில்லோனி நெடுங்குன்றம் செட்டில்மெண்ட் என்று சொல்லப்படுகின்ற இடத்தில் வாழும் காடர்களை அடர்ந்த காட்டிற்குள் சென்று சந்தித்தேன். சென்ற பாதையின் தன்மை என்னைப் பயப்படுத்தினாலும் ஆர்வத்தில் சென்றது தான். அம்மக்கள் முதலில் என்னைச் சந்திக்க மறுத்தாலும் என்னை அழைத்துச் சென்ற பெண் அவர்களைப் பற்றி அறிந்திருந்ததால் முதலில் மூப்பரைச் சந்தித்துப் பேச அனுமதி பெற்றுத் தந்தார். மூப்பரிடம் என்னால் அவர்களுக்கு எவ்விதத்திலும் துன்பமில்லை என்பதை உணர்த்தி அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்திலேயே இவ்வளவு தூரம் வந்திருப்பதாகவும் என் பெயர் நான் பணியாற்றும் கல்லூரி முதற்கொண்டு என்விவரங்களைத் தெரிவித்த பிறகே என்னிடம் அன்பாகப் பேசினர். அதன்பிறகு மூப்பர் அங்குள்ள மக்களில் சிலரை எனக்கு அறிமுகப்படுத்த, அவர்கள் எனக்கு  மாங்காயும் தேனும் கொடுத்து உபசரித்தனர். ஒருமணி நேரத்திற்குப் பின்னர் அடர்ந்த காட்டிற்குள் தனியே வருவது பாதுகாப்பல்ல என்று கூறி எச்சரித்து நாங்கள் திரும்பும்போது எங்களோடு துணைக்கு ஒருவரையும் அனுப்பி வைத்தார்கள்.

வீட்டிற்கு வந்த பிறகு அம்மக்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததே தவிர அதை எப்படி செயற்படுத்துவது என்பது எனக்குத் தெரியவில்லை. எனக்குப் புரிபடாத போது அவ்வனத்தில் இருந்த ஓராசிரியர் பள்ளியின் ஆசிரியர் அண்ணன் இளங்கோ அவர்கள் எனக்கு அறிமுகமானார்.

அம்மக்களைப் பார்த்துவிட்டு வந்த சில நாட்களில் அம்மக்கள் என்னைப் பற்றி அவரிடம் தெரிவிக்க, வால்பாறை நகராட்சி சிறுபகுதி என்பதாலும் நான் கல்லூரியில் பணியாற்றுகிறேன் என்று கூறியிருந்ததாலும் என்னைக் கண்டறிந்து அறிமுகமாவது அண்ணாவிற்கு  எளிமையாக இருந்தது. அவரிடம்  அம்மக்களின் வாழ்க்கையை அறிந்து கொள்ளவேண்டும் என்ற என் ஆர்வத்தை வெளியிட்டபோது அவ்வளவு எளிதாக யாரிடமும் அவர்கள் தங்களைப்பற்றி வெளியிடுவதில்லை. தனியே சென்று அவர்களைப்  பார்ப்பது பாதுகாப்பானதும் அல்ல. ஏனென்றால் அடர்ந்த காடு என்பதால் இடைவழியில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறி அங்குள்ள ஓராசிரியர் பள்ளியில்தான் நான் பணியாற்றுகிறேன் என்றும் அங்குப் பயிலும் குழந்தைகளுக்குச் சீருடை இல்லை. அவர்களுக்குத் தங்களால் இயன்ற உதவியைச் செய்ய இயலுமா? என்றும் கேட்டார்.  

ஏற்கனவே அக்காடர் இன மக்களும் அன்பாய் என்னிடத்து தனியே வரவேண்டாம் என்று கூறியது போலவே இந்த ஆசிரியரும் கூறுகின்றாரே  என்று முதலில் நினைத்தாலும் அவர்கள் சொல்வதும் உண்மைதானே என்றிருந்தது. என்றாலும் அம்மக்களோடு ஓர் உறவை ஏற்படுத்திக் கொள்ள அவர்களுக்குச் செய்யும் இவ்வுதவிகள் எனக்குப் பேருதவியாக இருக்கும் என்று கருதி சரி என்று கூறி அங்குள்ள குழந்தைகளுக்குச் சீருடை  வாங்கிக் கொடுத்தேன். அண்ணன் இளங்கோ அவர்கள் சீருடைகளை நான் தான் அக்குழந்தைகளுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தேன் என்பதை அம்மக்களிடம் தெரிவிக்க அம்மக்களுக்கு என்மீது நல்ல மதிப்பு ஏற்பட அதுவே காரணமாயிற்று. அதன்பிறகு தொடர்ந்து அக்குழந்தைகளுக்குக் குறிப்பேடுகள், எழுதுகோல்கள் என வாங்கிக் கொடுத்தேன். பள்ளி ஆண்டுவிழாவிற்கு என்னைச் சிறப்பு அழைப்பாளராக வரவழைத்து அம்மக்களுடன் ஒரு நெருக்கமான உறவை இளங்கோ அண்ணா ஏற்படுத்திக் கொடுத்தார். அவர்கள் வீட்டுத் திருமணத்திற்கு என்னை என் இருப்பிடம் வந்து அழைத்துச் செல்லுமளவிற்கு அவர்களுடன் ஒரு நெருக்கமான உறவு ஏற்பட்டது. அவர்களைப் பற்றி முடிந்தவரை அங்குச் சென்றபோதெல்லாம். அறிந்து கொண்டேன். அறிந்ததை எழுதியும் வைத்தேன். ஆனால் எதுவும் முழுமை அடையவில்லை.

திருமணம் ஆனபிறகு என்னால் இப்படி  சென்று தகவல்களைப் பெறமுடியவில்லை. அவர்களைப் பற்றி அறியும் வாய்ப்பும் குறைந்து போனது. வார நாட்களில் சந்தையின் போது காடர் இனமக்களைப் பார்க்கும் போது அவர்களை நலம் விசாரிப்பதோடு சரி. அவர்கள் பார்த்தாலும் மறவாது என்னை நலம் விசாரித்துச் செல்வர்.

இடையில் குழந்தைப்பேறு மற்றும் பணிமாறுதல் எனப் பலவிஷயங்களுக்கிடையில் மீண்டும் நான் வால்பாறையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. என் துறையில் இரண்டாமாண்டு பயிலும் மாணவி பெயர் து. சரண்யா.

அவர் வால்பாறையில் உள்ள வில்லோனி நெடுங்குன்றத்தின் பழங்குடியினப் பெண்.அவரைப்பார்த்ததும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென்ற நோக்கத்தில் காட்டிற்குள் சென்று களப்பணியை மேற்கொண்ட அனுபவமே என்முன் நின்றது.  குடும்பம், பணிமாறுதல் எனப் பல்வேறு  காரணங்களுக்காக தொய்வுற்ற என் ஆர்வம் தற்பொழுது மீண்டும் எழுந்துள்ளது. எனக்குள்ள ஆர்வத்தை வகுப்பறையில் அவ்வப்போது பகிர்ந்து கொள்வேன். என் துறையிலேயே அப்பழங்குடியினப்பெண்ணும் படிப்பதால் அவர்களைப்பற்றி அறிந்து கொள்வது எனக்கு எளிதாக இருக்கின்றது. அது மட்டுமல்ல. ௧௦ ஆண்டுகளுக்கு முன்பு அவர்களின் குடியிருப்புப் பள்ளிக்கு நான் சென்று உதவியபோது உதவிபெற்றவர் என்பதும் அவள்பேச்சில் அறிந்து கொண்டேன். அன்றைய நாட்களின் புகைப்படங்களைக் காட்டியபோது அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சி. புகைப்படங்களில் இருப்பவர்களில் சிலர் இன்று உயிருடன் இல்லை என்றபோது அவள் முகத்தில் ஒரு ஆதங்கம். அன்றைக்கு எனக்குத் தகவல் வழங்கியதில் சரண்யாவின் அம்மாவும் ஒருவர். தன் அம்மாவை இளம்வயது தோற்றத்தில் பார்த்தவுடன் அவளுக்கு ஒரு நெகிழ்ச்சி. இப்படி எங்களுக்குள் ஒரு  புரிதல் வந்தவுடன் பணியேற்ற பத்து மாதங்களுக்குப் பிறகு அவர்களைப் பற்றி எழுதவேண்டும் என்ற என் ஆர்வமும் மேலோங்கியிருக்கிறது. சரண்யாவின் துணையுடன் அம்மக்களின் வாழ்க்கையைத் தங்கள் இதழில் வெளியிட விரும்புகிறேன்.

தகவல்களைத் திரட்டி முறைப்படுத்தி எழுதுவது நானாக இருந்தாலும் தகவல்களை முழுமையாக எனக்குத் தருவது மாணவி சரண்யாதான். அவர் தரும் தகவலில் எனக்கு ஏற்படும் ஐயங்களைத் தன் குடில் பெரியவர்களிடம் கேட்டறிந்து  போக்குவதும் அவள்தான். ஆதலின் அவள் பெயரும் இத்தொடரில் இடம்பெறும். நாங்கள் இருவராக இணைந்து இத்தொடரை எழுத விரும்புகிறோம். அதற்கு அனுமதி வழங்கும்படி தங்களை இதன்வழி கேட்டுக் கொள்கிறேன். என் பழைய தொடரும் இனி தொடரும்..

நன்றி. வணக்கம்.



ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri 29 Jun 2018 - 13:01

மலையாணிப் பிள்ளை கதை அருமை ... தொடருங்கள் கைக்கு மொட்டாளி கதையையும் ... காடும் காடர்களும் - Page 3 3838410834



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Fri 29 Jun 2018 - 16:45

கதையின் தொடர்ச்சி

உடனே கிழவன் ஏன் நீ உடும்பு முட்டை, ஆமை முட்டை , எல்லாம் பார்த்ததே கிடையாதா? என்று கிழவியை அமர்த்தினான். இருவரும் வீட்டை அடைந்தனர். வீட்டிற்குப் போனவுடன் மனைவியின் தங்கை, கிழவியை அழைத்து கைக்குழந்தையைக் குளிக்க வைக்க வேண்டுமெனக் கூறினாள். கிழவி குழந்தையைக் குளிக்க வைக்கப் போனவுடன் கிழவன், அந்தச் சிறுமியை அழைத்து ஒரு பாத்திரத்தைக் கொண்டு வருமாறு கூறினான். சிறுமி பாத்திரத்தை எடுத்து வந்தாள். பாத்திரத்தில் அந்த முட்டைகளை எல்லாம் உடைத்து ஊற்றிவிட்டு, முட்டை ஓடுகளை மண்ணைத் தோண்டிப் புதைத்தான் கிழவன்.

அந்த முட்டையைப் பொறித்து தன் அக்காவிற்கு மட்டும் கொடுக்க வேண்டுமென அந்தச் சிறுமியிடம் கிழவன் கூறினான். சிறுமியும் அதற்கு இசைந்தாள். அந்த முட்டையைப் பொறித்துக் கொடுத்தவுடன் இளைஞனின் மனைவி அதை முழுமையாக உண்டாள்.

அன்று இரவு முழுவதும் இளைஞனின் மனைவி தூக்கமின்றி அவதிப்பட்டாள். அவள் உடம்பில் ஏதோ ஊர்ந்து செல்வதை உணர்ந்தாள். அவளுடைய தங்கையிடம் தன் மேனியைத் துடைக்குமாறு கூறினாள். தங்கையும் அன்று இரவு முழுவதும் தன் சகோதரியின் உடம்பைத் துடைத்துக் கொண்டே இருந்தாள். சற்று நேரம் அவள் கண் அயர்ந்தாள். அப்பொழுது இளைஞனின் மனைவி கழுகாக மாறி பறந்தாள். அதைக்கண்ட சிறுமி அலறினாள். கைக்குழந்தையைக் காலால் தள்ளிவிட்டு தாய் பறந்தவுடன் குழந்தை அழத் தொடங்கியது. கழுகாக மாறிய தாய் கூரையின் மேல் அமரும்பொழுது மாயமாகக் குழந்தைக்குப் பால் கிடைத்தது. பாலைப் பருகிய குழந்தை உறங்கத் தொடங்கியது. அவ்வேளையில் தாய் பல நாடுகளையும் கடல்களையும் கண்டுவரப் பறந்தாள்.


முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Fri 29 Jun 2018 - 17:10

கதையின் தொடர்ச்சி

  குரங்கிருக்கும் குட்டாஞ்சேரி பின்விட்டு நான் போடா
அரணகளிக்கும் ஆயினிப் பாடம் பின் விட்டு நான் போடா
கரையாத கிட உண்ணி கரையாத கிடாகே.

             (குரங்கிருக்கும் குட்டாஞ்சேரி - குரங்குகள் இருக்கும் வீடு அல்லது பொந்து , அரணகளிக்கும்  - அரணை, ஒருவகை விலங்கு, ஆயினிப் பாடம் - ?, கரையாத - அழாதே, உண்ணி - குழந்தை, கிடாகே - இரு  )

என்று பாடிக் கொண்டே பறந்து சென்றாள். கழுகாக மாறிய அந்தப் பெண் தன்னுடைய தாய் தந்தையர் இருக்குமிடத்திற்குச் சென்று அங்கே இருந்த மரக்கிளையின் மேல் அமர்ந்து
பச்சரணையக் கொத்தித் தின்று நான் போடா
பச்சோந்தியைக் கொத்தித் தின்று நான் போடா
கரையாத கிட உண்ணி கரையாத கிடாகே.

                                     (போடா - சென்று கொண்டிருக்கிறேன்.)

என்று பாடியது. இதைக் கேட்ட அவர்கள் பறவை பாடுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Tue 3 Jul 2018 - 22:01

கதையின் தொடர்ச்சி

தான் போகும் வழியெல்லாம் குழந்தை அழக்கூடாது என்பதற்காகப் பாடிக் கொண்டே பறந்து சென்றாள் இளைஞனின் மனைவி.
தென்கடல் கப்பலக் கண்டுவருவன் நான்போடா
வடகடல் கப்பலக் கண்டுவருவன் நான் போடா
கரையாத கிட உண்ணி கரையாத கிடாகே.
என்று பாடிக்கொண்டே பறந்தாள்.

உப்பாற்றிற்குச் சென்ற இளைஞன் தெள்ளியை விற்று வீட்டிற்குத் தேவையான பொருட்கள் மற்றும் கணவன், மனைவி, குழந்தை தாய், தந்தை, மனைவியின் தங்கை என அனைவருக்கும் புத்தாடைகளையும் வாங்கி வீட்டை நோக்கி விரைந்தான். வரும் வழியில் பசியின் மிகுதியால் ஒரு ஆற்றின் ஓரமாய்ப் போய் அடுப்பு வைத்து சோறு சமைத்தான். அந்தச் சோற்றில் காய் கறிகளையும் போட்டுச் சமைத்தான். சமையல் முடிந்தது. அவன் அந்த உணவை உண்ணத் தயாரானான். அவ்வேளையில் அவனுடைய மனைவி பறந்து சென்று ஒரு மரக்கிளையில் அமர்ந்து
நம் உண்ணி கரவுடா
நம் உண்ணி கரவுடா
தெதேரப் போய்க் கொள்ளு நங்கே

       (உண்ணி- குழந்தை, கரவுடா - அழுதல், தெதேர - வேகமாக, நங்கே  - பெண்)

என்று தன் கணவனைநோக்கிப் பாடினாள். அதைக் கேட்ட அவன் வீட்டில் ஏதோ ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. ஆகவே இவ்வாறு அந்தப் பறவை என்னிடம் வந்து பாடுகிறது என எண்ணிய அவன் வீட்டை நோக்கி விரைந்தான்.
தொடரும்...

முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Tue 3 Jul 2018 - 22:05

கதையின் தொடர்ச்சி

கழுகின் முட்டையை உண்டதனால் மருமகள் கழுகாக மாறி பறந்து விட்டாள் இதற்குக் காரணம் கிழவனும் கிழவியும்தான் என மகனுக்குத் தெரிந்தால் இருவரையும் வெட்டிக் கொன்றுவிடுவான் என்ற பயத்தினால் கிழவன் வீட்டைவிட்டுப் போய்விடலாம் எனக் கிழவியிடம் கூறினான். ஆனால் கிழவியோ அந்தப் பச்சிளம் குழந்தையையும் சிறுமியையும் தனியாகக் காட்டில் விட்டு வரமாட்டேன் என்றாள்.
இருப்பினும் கிழவன் கிழவியை அடித்து இழுத்துச் சென்றுவிட்டான். பச்சிளம் குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டு வாடினாள்.

இளைஞன் தன் வீட்டை அடைந்தான். அங்கே அந்தக் குழந்தையும் சிறுமியும் மட்டும் இருந்தனர். அவனைக் கண்ட அந்தச் சிறுமி நடந்தவற்றைக் கூறினாள். அவன் உடனே தன் குழந்தையை அவனிடம் கொடுக்குமாறு கூறினான். சிறுமியும் அதன்படியே செய்தாள். தன் குழந்தையுடன் அந்த இளைஞன் தான் வந்த வழியிலேயே படுத்து உறங்கினான். அவ்வேளையில் அவன் கனவில் முன்னோர்கள் தோன்றி கவலை கொள்ளாதே உன் மனைவியைக் குணமாக்குவதற்கு நாங்கள் வழி சொல்கிறோம் என்றனர். மேலும் அவர்கள் அவனிடம் மகனே நீ வந்த பாதையிலேயே திரும்பிச் செல். அவ்வழியின் கிழக்கே ஒரு ஓடையின் அருகே ஆண்மரம் பெண்மரம் என இரண்டு மரங்களும் எதிரெதிரே நின்று கொண்டிருக்கின்றன. அவற்றின் பட்டையை வெட்டி அரைத்து நீரில் கலக்கி உன் மனைவியின்மேல் தெளித்தால் போதும். அவள் குணமடைந்து விடுவாள் என்று கூறி மறைந்தனர். இளைஞன் விடுக்கென கண் விழித்தான்.
கைக்கு மொட்டாளி கதை ... தொடரும்..

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat 7 Jul 2018 - 20:03

காடும் காடர்களும் - Page 3 103459460 காடும் காடர்களும் - Page 3 103459460 :நல்வரவு:



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Tue 10 Jul 2018 - 15:14

கதையின் தொடர்ச்சி..

குழந்தை, சிறுமியை அழைத்து அவளுடைய கையில் கொடுத்துவிட்டு வேகமாக தான் வந்த பாதையில் கையில் ஒரு கத்தியையும் எடுத்துக் கொண்டு நடந்தான். இதைக் கண்ட அந்தச் சிறுமி அவன் தற்கொலை செய்துகொள்ளப் போகிறான் போலும் மனைவி கழுகாக மாறிப் போன காரணத்தால் எங்களைத் தனியே இந்தக் காட்டில் விட்டுச் சென்றுவிடுவானோ என்று எண்ணி அழுதாள். அவளுக்கு ஆறுதல் உரைத்த பின்னர் தான் அந்த இரு மரங்களையும் தேடிப் புறப்பட்டான். அந்த இரண்டு மரங்களையும் கண்டுபிடித்து அவற்றின் பட்டைகளை எடுத்து அரைத்து ஆண்மரத்தின் பட்டையை ஒரு கிண்ணத்திலும் பெண்மரத்தின் பட்டையை வேறொரு கிண்ணத்திலும் அரைத்து கலக்கி வைத்தான்.

இளைஞனின் மனைவி கழுகினுடைய உருவம் கொண்டு பறந்து வந்து வீட்டின் மேற்கூரையில் வந்து அமர்ந்தாள். அந்த வேளையில் இளைஞன் முதலில் ஆண்மரத்தின் பட்டையிலிருந்து எடுத்து அரைத்திருந்த அந்த நீரை தெளித்தான். உடனே அவள் உடல் வலுவிழந்து பறக்கமுடியாமல் படபடவென அடித்து தரையில் விழுந்தாள்.

அவள் தரையில் விழுந்தவுடன் பெண்மரத்தின் பட்டையிலிருந்து அரைத்தெடுத்த நீரை அவள்மீது தெளித்தான். அவள்மேல் இருந்த சிறகுகள் எல்லாம் உதிர்ந்து போய் பிறந்த மேனியாய்க் கிடந்தாள். உடனே இளைஞன் அந்தச் சிறுமியை அழைத்து அவளுக்கு ஒரு ஆடையை அணிவிக்குமாறு கூறினான். சிறுமி வேகமாக ஆடைகளை எடுத்து வந்து அணிவித்தாள். சிறிது நேரம் கடந்தவுடன் இளைஞனின் மனைவி வாந்தியெடுக்கத் தொடங்கினாள்.

கழுகின் உருவிலிருந்த போது அவள் உண்ட பாம்பு, தேள், பூரான் போன்ற பூச்சிகளை எல்லாம் வாந்தியெடுத்தாள். வாந்தி, மயக்கம் தெளிந்தவுடன் தான் அந்த வீட்டில் இருக்க விரும்பவில்லை என்று கூறினாள். உடனே இளைஞன் வேகமாக வேறொரு குடிலை அமைத்தான். அங்குத் தன் மனைவியையும் குழந்தையையும் அந்தச் சிறுமியையும் குடி அமர்த்தினான்.


முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Tue 10 Jul 2018 - 15:26

கதையின் தொடர்ச்சி..

       
பின்னர் தன்னுடைய தாய் தந்தையரைத் தேடிச்சென்றான். கிழவன் சென்ற பாதையில் ஒரு பெரிய மானை செந்நாய்கள் கொன்று கிடத்தியது. அதைக் கண்ட கிழவன் மான் இறைச்சியை எடுத்துச் சுட்டுத் தின்று உயிர் வாழ்ந்தான். அவ்விறைச்சியைக் கிழவிக்கும் கொடுத்தான். ஆனால் கிழவி காட்டில் தனியாக விட்டுவந்த சிறுமியையும் குழந்தையையும் நினைத்து கவலையுற்றிருந்தமையால் உணவு, நீர் எதுவும் வேண்டாமெனச் சினந்தாள். ஒருவாறாக தன் தாய் தந்தையரை இளைஞன் கண்டுபிடித்துவிட்டான்.

            இருவரையும் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். தன் மனைவியை இந்த நிலைக்கு ஆளாக்கியதற்காக அவர்கள் இருவர்மீதும் கடுங்கோபத்துடன் இருந்தான். தன்னுடைய மனைவி இளைஞனின் தாய் தந்தையுடன் இருப்பது அவளுக்குப் பாதுகாப்பாக இருக்காது என்று எண்ணிணான் . ஆகையினால் அவளுடைய பெற்றோரிடம் ஒப்படைத்துவிடலாம் என எண்ணினான். இறுதியாக இளைஞன் தன் மனைவியைக் குணமடையச் செய்தவுடன் அனைவரும் இளைஞனின் மனைவியின் பெற்றோரிடம் அழைத்துச் சென்றான். அங்குச் சென்ற பின்னர் சிறுமி காட்டில் நடந்தவற்றை எல்லாம் தன் பெற்றோரிடம் கூறினாள்.  தலி (சகோதரி) கழுகாக மாறியதையும் அவளைக் குணமாக்கிய கதையையும் அவள் கூறினாள். அதற்காக இளைஞன் தலி மனைவியைப் பெற்றோரிடம் விட்டுச் செல்லத்தான் வந்திருக்கிறான் என்று அனைவரும் உணர்ந்தனர்.

பின்னர் மனைவியின் பெற்றோர் இளைஞனிடம் வந்து தங்கள் மனைவி கழுகாக மாறினாலும் அவளை மீண்டும் மனிதனாகவே மாற்றி உயிருடன் அழைத்து வந்த உங்களிடம் எங்கள் மகள் இருப்பதைவிடவும் வேறு பாதுகாப்பு அவளுக்கு இல்லை என்று கூறிய அவர்கள் இளைஞனுடனே அவன் மனைவியையும் குழந்தையையும் சந்தோஷமாகச் சேர்த்து வைத்தனர். மேலும் அனைவரும் கூட்டுக்குடும்பமாகவே வாழ்வோம் நீங்கள் இருவரும் தனியே எங்கும் செல்லவேண்டாம் என்று கூறி அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்.
இரண்டாம் கதை முற்றும்.

மூன்றாம் கதை - குட்டாங் குடுங்கல் தொடரும்


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed 11 Jul 2018 - 13:23

தொடருங்கள் தொடருங்கள் ... காடும் காடர்களும் - Page 3 3838410834



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Wed 11 Jul 2018 - 13:34

மூன்றாம் கதை

குட்டாங் குடுங்கல்
(குட்டாங் - குற்றுதல் , குடுங்கல் - அம்மிக்குழவி)

ஒரு காட்டில் மூதாட்டி ஓருவர் தனியே ஒரு குடில் அமைத்து வசித்து வந்தார். அம்மூதாட்டி வறுமையில் வாடினாள். சொந்தமெனக் கூறிக் கொள்ள அந்த மூதாட்டிக்கு எவரும் இல்லை. ஒருநாள் மூதாட்டி மண்பாண்டங்களை எடுத்துச் சென்று ஒரு ஓடையில் நீர் எடுத்து வந்தாள். அந்த நேரத்தில் அவள் காலின் மேல் குட்டாங் குடுங்கல் உருண்டு போய் சாய்ந்தது. மூதாட்டி அந்தக் கல்லைத் தள்ளிவிட்டு பானையில் நீர் முகந்து தன் தலையில் சுமத்திக் கொள்ள முயன்றாள். மீண்டும் அந்தக் கல் அவள் காலின்மேல் வந்து உருண்டு சாய்ந்தது. மூதாட்டிக்கு கல்லைக் கண்டு கோபம் எழுந்தது.ஆகையினால் அவள் அந்த குட்டாங்குடுங்கலைப் பார்த்து என்ன திமிர் உனக்கு என்றாள்.அத்துடன் அந்தக் கல்லைக் கொண்டு சென்றால் தேங்காய் அரைக்கவும் மிளகாய் அரைக்கவும் அம்மிக்குழவியாகப் பயன்படுத்தலாம் என்று நினைத்து அதை தன் முந்தானைச் சீலையில் போட்டபடியே பானையில் நீர் எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றாள்.

குடுங்கலைக் கொண்டு போய் அந்த மூதாட்டி ஒரு பெரிய பானையில் போட்டுவிட்டு அதனை மூடி வைத்தாள். பின்பு வெளியே சென்ற அவள் வீட்டுவாசலைப் பெருக்கினாள்.அப்போது திடீரென ஒரு ஆண்குரல் அவள் வீட்டில் இருந்து ஒலித்தது. அது

பாட்டி குடி குடி!
பாட்டி குடி குடி! (குடி - மனைவி)

பாட்டி எனக்கு மனைவி வேண்டும் என்னும் ஒலி கேட்டது. இதைக் கேட்ட அந்த மூதாட்டி வேகமாக வந்து அந்தப் பானையைப் பார்த்தாள். அந்தப் பானையில் போட்ட குடுங்கல் அழகிய ஆண்மகனாக உருபெற்று இருந்ததைக் கண்ட மூதாட்டி மனம் மகிழ்ந்தாள். காரணம் தனக்குப் புதிதாக ஒரு பேரன் கிடைத்துவிட்டான் என்று.

தொடர்ச்சி......




Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக