புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:13 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:13 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:38 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:37 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 3:00 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 2:54 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 2:52 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 12:23 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 11:27 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 5:52 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:39 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 9:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 7:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 3:12 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:10 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காடும் காடர்களும் - Page 2 Poll_c10காடும் காடர்களும் - Page 2 Poll_m10காடும் காடர்களும் - Page 2 Poll_c10 
63 Posts - 56%
heezulia
காடும் காடர்களும் - Page 2 Poll_c10காடும் காடர்களும் - Page 2 Poll_m10காடும் காடர்களும் - Page 2 Poll_c10 
32 Posts - 29%
mohamed nizamudeen
காடும் காடர்களும் - Page 2 Poll_c10காடும் காடர்களும் - Page 2 Poll_m10காடும் காடர்களும் - Page 2 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
காடும் காடர்களும் - Page 2 Poll_c10காடும் காடர்களும் - Page 2 Poll_m10காடும் காடர்களும் - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
காடும் காடர்களும் - Page 2 Poll_c10காடும் காடர்களும் - Page 2 Poll_m10காடும் காடர்களும் - Page 2 Poll_c10 
3 Posts - 3%
Guna.D
காடும் காடர்களும் - Page 2 Poll_c10காடும் காடர்களும் - Page 2 Poll_m10காடும் காடர்களும் - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
காடும் காடர்களும் - Page 2 Poll_c10காடும் காடர்களும் - Page 2 Poll_m10காடும் காடர்களும் - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காடும் காடர்களும் - Page 2 Poll_c10காடும் காடர்களும் - Page 2 Poll_m10காடும் காடர்களும் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
காடும் காடர்களும் - Page 2 Poll_c10காடும் காடர்களும் - Page 2 Poll_m10காடும் காடர்களும் - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
காடும் காடர்களும் - Page 2 Poll_c10காடும் காடர்களும் - Page 2 Poll_m10காடும் காடர்களும் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காடும் காடர்களும் - Page 2 Poll_c10காடும் காடர்களும் - Page 2 Poll_m10காடும் காடர்களும் - Page 2 Poll_c10 
58 Posts - 56%
heezulia
காடும் காடர்களும் - Page 2 Poll_c10காடும் காடர்களும் - Page 2 Poll_m10காடும் காடர்களும் - Page 2 Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
காடும் காடர்களும் - Page 2 Poll_c10காடும் காடர்களும் - Page 2 Poll_m10காடும் காடர்களும் - Page 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
காடும் காடர்களும் - Page 2 Poll_c10காடும் காடர்களும் - Page 2 Poll_m10காடும் காடர்களும் - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
காடும் காடர்களும் - Page 2 Poll_c10காடும் காடர்களும் - Page 2 Poll_m10காடும் காடர்களும் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
காடும் காடர்களும் - Page 2 Poll_c10காடும் காடர்களும் - Page 2 Poll_m10காடும் காடர்களும் - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காடும் காடர்களும் - Page 2 Poll_c10காடும் காடர்களும் - Page 2 Poll_m10காடும் காடர்களும் - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
காடும் காடர்களும் - Page 2 Poll_c10காடும் காடர்களும் - Page 2 Poll_m10காடும் காடர்களும் - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
காடும் காடர்களும் - Page 2 Poll_c10காடும் காடர்களும் - Page 2 Poll_m10காடும் காடர்களும் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
காடும் காடர்களும் - Page 2 Poll_c10காடும் காடர்களும் - Page 2 Poll_m10காடும் காடர்களும் - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காடும் காடர்களும்


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Sat Apr 07, 2018 2:29 am

First topic message reminder :

தோழமைக்கு வணக்கம்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு என் எழுத்தைப் பதிவிட  வந்துள்ளேன். பணி மாறுதல்  மற்றும் அதுசார்ந்த பல்வேறு பணிகளில் என் கட்டுரையைத் தொடர முடியவில்லை. தற்பொழுது என் எழுத்தைத் தொடரும் சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கின்றேன். அது மட்டுமல்ல புதிய தொடர் ஒன்றையும் எழுதும் சூழல் வாய்த்திருக்கின்றது.

நான் ௨௦௦௭ இல் வால்பாறைக் கல்லூரியின் தமிழ்த்துறையில் உதவிப்பேராசிரியராகப் பணியேற்றபோது அங்கு வாழும் பழங்குடியின மக்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் ஒரு மாணவியின் உதவியோடு முதலில் வில்லோனி நெடுங்குன்றம் செட்டில்மெண்ட் என்று சொல்லப்படுகின்ற இடத்தில் வாழும் காடர்களை அடர்ந்த காட்டிற்குள் சென்று சந்தித்தேன். சென்ற பாதையின் தன்மை என்னைப் பயப்படுத்தினாலும் ஆர்வத்தில் சென்றது தான். அம்மக்கள் முதலில் என்னைச் சந்திக்க மறுத்தாலும் என்னை அழைத்துச் சென்ற பெண் அவர்களைப் பற்றி அறிந்திருந்ததால் முதலில் மூப்பரைச் சந்தித்துப் பேச அனுமதி பெற்றுத் தந்தார். மூப்பரிடம் என்னால் அவர்களுக்கு எவ்விதத்திலும் துன்பமில்லை என்பதை உணர்த்தி அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்திலேயே இவ்வளவு தூரம் வந்திருப்பதாகவும் என் பெயர் நான் பணியாற்றும் கல்லூரி முதற்கொண்டு என்விவரங்களைத் தெரிவித்த பிறகே என்னிடம் அன்பாகப் பேசினர். அதன்பிறகு மூப்பர் அங்குள்ள மக்களில் சிலரை எனக்கு அறிமுகப்படுத்த, அவர்கள் எனக்கு  மாங்காயும் தேனும் கொடுத்து உபசரித்தனர். ஒருமணி நேரத்திற்குப் பின்னர் அடர்ந்த காட்டிற்குள் தனியே வருவது பாதுகாப்பல்ல என்று கூறி எச்சரித்து நாங்கள் திரும்பும்போது எங்களோடு துணைக்கு ஒருவரையும் அனுப்பி வைத்தார்கள்.

வீட்டிற்கு வந்த பிறகு அம்மக்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததே தவிர அதை எப்படி செயற்படுத்துவது என்பது எனக்குத் தெரியவில்லை. எனக்குப் புரிபடாத போது அவ்வனத்தில் இருந்த ஓராசிரியர் பள்ளியின் ஆசிரியர் அண்ணன் இளங்கோ அவர்கள் எனக்கு அறிமுகமானார்.

அம்மக்களைப் பார்த்துவிட்டு வந்த சில நாட்களில் அம்மக்கள் என்னைப் பற்றி அவரிடம் தெரிவிக்க, வால்பாறை நகராட்சி சிறுபகுதி என்பதாலும் நான் கல்லூரியில் பணியாற்றுகிறேன் என்று கூறியிருந்ததாலும் என்னைக் கண்டறிந்து அறிமுகமாவது அண்ணாவிற்கு  எளிமையாக இருந்தது. அவரிடம்  அம்மக்களின் வாழ்க்கையை அறிந்து கொள்ளவேண்டும் என்ற என் ஆர்வத்தை வெளியிட்டபோது அவ்வளவு எளிதாக யாரிடமும் அவர்கள் தங்களைப்பற்றி வெளியிடுவதில்லை. தனியே சென்று அவர்களைப்  பார்ப்பது பாதுகாப்பானதும் அல்ல. ஏனென்றால் அடர்ந்த காடு என்பதால் இடைவழியில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறி அங்குள்ள ஓராசிரியர் பள்ளியில்தான் நான் பணியாற்றுகிறேன் என்றும் அங்குப் பயிலும் குழந்தைகளுக்குச் சீருடை இல்லை. அவர்களுக்குத் தங்களால் இயன்ற உதவியைச் செய்ய இயலுமா? என்றும் கேட்டார்.  

ஏற்கனவே அக்காடர் இன மக்களும் அன்பாய் என்னிடத்து தனியே வரவேண்டாம் என்று கூறியது போலவே இந்த ஆசிரியரும் கூறுகின்றாரே  என்று முதலில் நினைத்தாலும் அவர்கள் சொல்வதும் உண்மைதானே என்றிருந்தது. என்றாலும் அம்மக்களோடு ஓர் உறவை ஏற்படுத்திக் கொள்ள அவர்களுக்குச் செய்யும் இவ்வுதவிகள் எனக்குப் பேருதவியாக இருக்கும் என்று கருதி சரி என்று கூறி அங்குள்ள குழந்தைகளுக்குச் சீருடை  வாங்கிக் கொடுத்தேன். அண்ணன் இளங்கோ அவர்கள் சீருடைகளை நான் தான் அக்குழந்தைகளுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தேன் என்பதை அம்மக்களிடம் தெரிவிக்க அம்மக்களுக்கு என்மீது நல்ல மதிப்பு ஏற்பட அதுவே காரணமாயிற்று. அதன்பிறகு தொடர்ந்து அக்குழந்தைகளுக்குக் குறிப்பேடுகள், எழுதுகோல்கள் என வாங்கிக் கொடுத்தேன். பள்ளி ஆண்டுவிழாவிற்கு என்னைச் சிறப்பு அழைப்பாளராக வரவழைத்து அம்மக்களுடன் ஒரு நெருக்கமான உறவை இளங்கோ அண்ணா ஏற்படுத்திக் கொடுத்தார். அவர்கள் வீட்டுத் திருமணத்திற்கு என்னை என் இருப்பிடம் வந்து அழைத்துச் செல்லுமளவிற்கு அவர்களுடன் ஒரு நெருக்கமான உறவு ஏற்பட்டது. அவர்களைப் பற்றி முடிந்தவரை அங்குச் சென்றபோதெல்லாம். அறிந்து கொண்டேன். அறிந்ததை எழுதியும் வைத்தேன். ஆனால் எதுவும் முழுமை அடையவில்லை.

திருமணம் ஆனபிறகு என்னால் இப்படி  சென்று தகவல்களைப் பெறமுடியவில்லை. அவர்களைப் பற்றி அறியும் வாய்ப்பும் குறைந்து போனது. வார நாட்களில் சந்தையின் போது காடர் இனமக்களைப் பார்க்கும் போது அவர்களை நலம் விசாரிப்பதோடு சரி. அவர்கள் பார்த்தாலும் மறவாது என்னை நலம் விசாரித்துச் செல்வர்.

இடையில் குழந்தைப்பேறு மற்றும் பணிமாறுதல் எனப் பலவிஷயங்களுக்கிடையில் மீண்டும் நான் வால்பாறையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. என் துறையில் இரண்டாமாண்டு பயிலும் மாணவி பெயர் து. சரண்யா.

அவர் வால்பாறையில் உள்ள வில்லோனி நெடுங்குன்றத்தின் பழங்குடியினப் பெண்.அவரைப்பார்த்ததும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென்ற நோக்கத்தில் காட்டிற்குள் சென்று களப்பணியை மேற்கொண்ட அனுபவமே என்முன் நின்றது.  குடும்பம், பணிமாறுதல் எனப் பல்வேறு  காரணங்களுக்காக தொய்வுற்ற என் ஆர்வம் தற்பொழுது மீண்டும் எழுந்துள்ளது. எனக்குள்ள ஆர்வத்தை வகுப்பறையில் அவ்வப்போது பகிர்ந்து கொள்வேன். என் துறையிலேயே அப்பழங்குடியினப்பெண்ணும் படிப்பதால் அவர்களைப்பற்றி அறிந்து கொள்வது எனக்கு எளிதாக இருக்கின்றது. அது மட்டுமல்ல. ௧௦ ஆண்டுகளுக்கு முன்பு அவர்களின் குடியிருப்புப் பள்ளிக்கு நான் சென்று உதவியபோது உதவிபெற்றவர் என்பதும் அவள்பேச்சில் அறிந்து கொண்டேன். அன்றைய நாட்களின் புகைப்படங்களைக் காட்டியபோது அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சி. புகைப்படங்களில் இருப்பவர்களில் சிலர் இன்று உயிருடன் இல்லை என்றபோது அவள் முகத்தில் ஒரு ஆதங்கம். அன்றைக்கு எனக்குத் தகவல் வழங்கியதில் சரண்யாவின் அம்மாவும் ஒருவர். தன் அம்மாவை இளம்வயது தோற்றத்தில் பார்த்தவுடன் அவளுக்கு ஒரு நெகிழ்ச்சி. இப்படி எங்களுக்குள் ஒரு  புரிதல் வந்தவுடன் பணியேற்ற பத்து மாதங்களுக்குப் பிறகு அவர்களைப் பற்றி எழுதவேண்டும் என்ற என் ஆர்வமும் மேலோங்கியிருக்கிறது. சரண்யாவின் துணையுடன் அம்மக்களின் வாழ்க்கையைத் தங்கள் இதழில் வெளியிட விரும்புகிறேன்.

தகவல்களைத் திரட்டி முறைப்படுத்தி எழுதுவது நானாக இருந்தாலும் தகவல்களை முழுமையாக எனக்குத் தருவது மாணவி சரண்யாதான். அவர் தரும் தகவலில் எனக்கு ஏற்படும் ஐயங்களைத் தன் குடில் பெரியவர்களிடம் கேட்டறிந்து  போக்குவதும் அவள்தான். ஆதலின் அவள் பெயரும் இத்தொடரில் இடம்பெறும். நாங்கள் இருவராக இணைந்து இத்தொடரை எழுத விரும்புகிறோம். அதற்கு அனுமதி வழங்கும்படி தங்களை இதன்வழி கேட்டுக் கொள்கிறேன். என் பழைய தொடரும் இனி தொடரும்..

நன்றி. வணக்கம்.



முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Tue Jun 26, 2018 2:23 pm

ஐயா வணக்கம்.

காடும் காடர்களும் எனும் தலைப்பில் வில்லோனி நெடுங்குன்றம் குடில் மக்களிடமிருந்து தொகுக்கப்படும் பாடல்கள், கதைகள், சடங்குகள் என அனைத்தையும் பதிவு செய்ய விரும்புகிறேன். தகவல்களைப் பதிவு செய்யும்போது தொடர்புடைய புகைப்படங்களைப் பதிவிடும் முறை தெரியவில்லை. அதனால் தான் மேலுள்ள காடர் இனப் பாடலைப் பதிவு செய்யும்போது படங்கள் பெரிதாக பதிவுசெய்யப்பட்டுவிட்டன. ஒரே மாதிரியான படங்கள் இருமுறை பதிவுசெய்யப்பட்டுவிட்டன. அதை என்னால் மாற்றவும் முடியவில்லை. உதவவும்

நன்றி.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Jun 26, 2018 6:41 pm

தொடருங்கள் முனைவர் அவர்களே.. அருமையான நடையில் சென்று கொண்டு இருக்கிறது ...
இருமுறை பதிவதால் தவறு ஒன்றும் இல்லை...மீதி கதையையும் பதிவிடுங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் ...

படங்களை பதிவேற்றம் செய்ய host an image என்ற ஐகானை கிளிக் செய்து அங்கு படத்தின் அளவை மாற்றி கொள்ள இயலும்.. வேண்டிய படங்களை தேர்வு செய்து insert  all என்பதனை தேர்வு செய்யுங்கள் ...

800  pX
காடும் காடர்களும் - Page 2 Temp11
1024  px
காடும் காடர்களும் - Page 2 Temp10

முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Wed Jun 27, 2018 3:24 pm

நன்றி ஐயா.

முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Wed Jun 27, 2018 3:27 pm

கதையின் தொடர்ச்சி

மாலையில் வேட்டைக்குச் சென்றிருந்த புலிப்பொன்ப கியத்தி வீடு திரும்பினாள் புலிக்குப்பாயம் அணிந்திருந்த அவள் ஒரு பெரிய மானை வேட்டையாடி கவ்வியபடி வந்தாள். தன் மகள் சமைத்த உணவை உண்டாள். குப்பாயத்தைக் கழற்றி ஓரமாக வைத்தாள். தன்னுடைய மகள் தன்னுடன் சேர்ந்து அன்று இரவு உண்ணாதது ஏன் எனக் கேட்டாள். அதற்கு அவள் மகள் தான் மேல் மெத்தைக்குச் சென்று உண்பதாகக் கூறுகிறாள். புலிப்பொன்ப கியத்தியும் சரியென மொழிந்தாள்.

அன்று இரவு முதல் புலிப்பொன்ப கியத்தியின் மகளும் மலையாணிப் பிள்ளையும் கணவன் மனைவியுமாக வாழ்ந்தனர். மறுநாள் காலையில் தான் வேட்டையாடிக் கொண்டு வந்த மானைச் சுத்தம் செய்யுமாறு புலிப்பொன்ப கியத்தி தன் மகளிடம் கூறினாள். உடனே தன்னால் முடியாது என மறுத்தாள் மகள். மான் இறைச்சியைச் சுத்தம் செய்ய மலையாணிப்பிள்ளையை அழைப்பது போல அழைத்து தன் தாயிடம் அறிமுகம் செய்துவிட வேண்டும் என நினைத்தாள். பின்பு புலிப்பொன்ப கியத்தியிடம் அவள் அம்மா ஒரு செய்தி கூறுவது அந்தச் செய்தி நல்லதாக இருந்தாலும் கேள் பொல்லாத செய்தியாக இருந்தாலும் கேள் என்றாள். இல்லையெனில் தான் விட்டத்தில் இருக்கும் ஆயுதத்தின் மேல் விழுந்து இரண்டு துண்டாகப் போய்விடுவேன் எனக் கூறினாள். அதற்குப் புலிப்பொன்ப கியத்தி வேண்டாம் நீ அவ்வாறு ஏதும் செய்துவிடாதே என்று கூறினாள்.

இம்மொழியைக் கேட்டு ஐயம் தணிந்த அவள் மலையாணிப் பிள்ளையைக் கீழே வருமாறு அழைத்தாள். மேல்மெத்தையில் இருந்து மலையாணிப்பிள்ளை இறங்கி வருவதைக் கண்ட புலிப்பொன்ப கியத்தி மனம் நெகிழ்ந்தாள். தன் மகளை நோக்கி மலையாணிப்பிள்ளையை நோக்கி குட்டியப்பா குட்டியப்பா (இளைய தந்தை) என அழைக்குமாறு கூறினாள். உடனே அவள் ஐயோ ! அம்மா அது என்னால் முடியாது. மலையாணிப் பிள்ளை நம் வீட்டுக்கு வந்து மூன்று நான்கு நாள்கள் கழிந்தன. நாங்கள் இருவரும் கணவன் மனைவியாகத்தான் இருக்கிறோம் என்றாள். இதைக்கேட்ட புலிப்பொன்ப கியத்தி சினந்தாள்.


முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Wed Jun 27, 2018 3:30 pm

கதையின் தொடர்ச்சி

பின்பு மலையாணிப் பிள்ளையைத் தான் வேட்டையாடி கொண்டுவந்த மானை சுத்தம் செய்யுமாறு புலிப்பொன்ப கியத்தி கூறினாள். மலையாணிப் பிள்ளை அந்த மானை வெட்டி எலும்பைத் தனியாகவும் சதையைத் தனியாகவும் பிரித்து எடுத்து வைத்தான். அவன் அந்த மானைச் சுத்தம் செய்வதைக் கண்கொட்டாமல் குப்பாயம் (புலிவேடம்) பார்த்து மலையாணிப்பிள்ளையின் இரத்தம் முழுவதையும் உரிஞ்சியது. உடனே மலையாணிப் பிள்ளை மயங்கி விழுந்தான். அதைக் கண்ட புலிப் பொன்ப கியத்தியின் மகள் பதறி அழுதாள். அவள் அழுவதைக் கண்ட புலிப்பொன்ப கியத்தி புலிக்குப்பாயத்தின் முன் ஒரு கிண்ணத்தை வைத்து அதில் மலையாணிப்பிள்ளையின் இரத்தத்தைக் கக்குமாறு கூறினாள். அதைக் கேட்ட புலிக்குப்பாயம் அந்தக் கிண்ணத்தில் தான் குடித்த இரத்தத்தை முழுவதும் கக்கியது. அந்த இரத்தத்தை எடுத்து மலையாணிப் பிள்ளையின் வாயிலும் மூக்கின் துளைகளிலும் ஊற்றினாள் புலிப்பொன்ப கியத்தியின் மகள். சற்று கணங்களுக்குள் அவன் தும்மியபடியே எழுந்தான்.

மறுநாள் காலையில் மலையாணிப் பிள்ளை கிழங்கை அகழ்ந்து ஒரு மூங்கில் துண்டில் போட்டு உடும்பு முட்டையை உடைத்து ஊற்றி தீயில் சுட்டு புலிப்பொன்ப கியத்திக்கும் அவள் மகளுக்கும் கொடுத்தான். அந்தக் கிழங்கின் சுவையை உணர்ந்த புலிப்பொன்ப கியத்தி தான் கண்ட கிழங்கையும் எடுத்து அதைப் போன்றே செய்து தருமாறு கூறினாள். மலையாணிப் பிள்ளையும் சரியென மொழிந்தான். தான் கண்ட கிழங்கை அகழ்வதற்காக மலையாணிப் பிள்ளையை அழைத்துச் சென்றாள். அங்கேயே அவனைக் கொன்றுவிட வேண்டுமென நினைத்தாள் புலிப்பொன்ப கியத்தி. அவளுடைய தந்திர வேலைகளை மலையாணிப் பிள்ளை உணர்ந்தான்.


முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Wed Jun 27, 2018 4:41 pm

கதையின் தொடர்ச்சி

அந்தக் கிழங்கு இருக்கும் இடத்தைக் காண்பித்தபடியே வேட்டைக்குச் சென்றாள் புலிப்பொன்ப கியத்தி மலையாணிப் பிள்ளை அந்தக் கிழங்கு இருந்த இடத்தைச் சுற்றியும் பெரிய பெரிய மரங்களை ஊன்றி, தடுப்புச் சுவரை எழுப்பி அதன் உள்ளே அமர்ந்து கிழங்கைத் தோண்டினான். மலையாணிப் பிள்ளையைக் கொல்ல வேண்டுமென்ற வெறியுடன் புலிப்பொன்ப கியத்தி காற்று வேகம், கடல் வேகம் கொண்டு வந்தாள். அப்போது அவன் கட்டியிருந்த தடுப்புச் சுவறின் மேல் மோதி திரும்பினாள்.

மலையாணிப் பிள்ளை அந்தக் கிழங்கை முழுவதுமாகத் தோண்டி அந்தப் பள்ளத்திலேயே இட்டு புதைத்தான். பின்னர் தான் இருந்த இடத்தை விட்டு அருகே இருந்த ஒரு பெரிய மரத்தின்மீது ஏறினான். மீண்டும் ,புலிப்பொன்ப கியத்தி வேகமாக வந்தாள். அந்த இடத்தில் அவனைக் காணாததால் தேடி அலைந்து மலையாணிப் பிள்ளை இருந்த மரத்தின் அடியில் சென்று நின்றாள். சற்று மேலே நிமிர்ந்தாள். மலையாணிப் பிள்ளை மரத்தின் மேல் இருப்பதைக் கண்டாள்.


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Jun 27, 2018 5:55 pm

அருமை தொடருங்கள் ... காடும் காடர்களும் - Page 2 3838410834



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Thu Jun 28, 2018 11:46 am

கதையின் தொடர்ச்சி

புலிப்பொன்ப கியத்தி மலையாணிப் பிள்ளையை நோக்கி நீ எப்படி இந்த மரத்தில் ஏறினாய்? எதற்காக ஏறினாய்? என்றாள். அதற்கு மலையாணிப் பிள்ளை நான் இந்தப் பெரிய மரத்தில் ஒரு உடும்பை ஏற்றினேன் அதைப் பிடிக்கத்தான் ஏறினேன். நான் இந்தப் பெரிய மரத்தில் தலைகீழாகத்தான் ஏறிவந்தேன் என்றான். அதைக் கேட்ட புலிப்பொன்ப கியத்தி தானும் தலைகீழாக ஏறுவதாகக் கூறி அவ்வாறே செய்தாள். தன்னைக் கொல்ல நெருங்கிய புலிப்பொன்ப கியத்தியைத் தான் முதலில் கொன்றுவிடவேண்டும் என நினைத்து அவள்மீது அம்பை ஏவினான். அக்கணமே மரத்தின் அடியில் பிணமாக விழுந்தாள் புலிப்பொன்ப கியத்தி. அப்போது அவள் கையில் இருந்த கணையாழி மோதிரம் கழன்று சென்று புலிப்பொன்ப கியத்தியின் மகளின் கையில் விழுந்தது. அதைக் கண்ட மகள் தன் தாய் இறந்த செய்தியை உணர்ந்தாள்.

தன் தாயைக் கொன்ற மலையாணிப் பிள்ளையைப் பழிவாங்க வேண்டும் என்று நினைத்துத் தானும் புலியாக உருமாறினாள். தன் வாலில் வளையல்களைக் கோர்த்து இருட்டு அறையில் சென்று படுத்து தன் வாலை தறையில் முட்டினாள். அந்தச் சத்தமானது நெல் குத்துவது போல் இருந்தது. அந்தச் சத்தத்தைக் கேட்டு மலையாணிப் பிள்ளை ஏமாந்து வீட்டிற்கு உள்ளே சென்றால் மலையாணிப் பிள்ளையைக் கடித்துக் கொன்றுவிடலாம் என்று எண்ணினாள். ஆனால் மலையாணிப் பிள்ளை வீட்டிற்கு உள்ளே செல்லாமல் அவள் படுத்திருந்த அறையின் மேல் கூரையில் ஏறி ஓடுகளை அகற்றினான். அவள்மீது சூரியனின் வெளிச்சம் பட்டவுடனே அவள் கண் இமைக்கும் முன் அவள் கண்களில் அம்பு தொடுத்தான். அம்பு பட்டவுடனே புலிப் பொன்ப கியத்தியின் மகளும் இறந்து போனாள்.



முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Thu Jun 28, 2018 11:58 am

கதையின் தொடர்ச்சி

இருவரையும் கொன்றுவிட்டு மலையாணிப் பிள்ளை தன்னுடைய அம்பைத் தேடினான். அவனுடைய அம்பு அவன் எய்த ஓங்கலின் உடம்பிலேயே இருந்தது. தன்னுடைய அம்பையும் அந்த  வீட்டில் தனக்குத் தேவையானப் பொருள்களையும் எடுத்து தன் புறையில் போட்டான் அவன் வந்த வழியில் ஏழு மாடங்களிலும் உலர்த்திய இறைச்சியையும் எடுத்து புறையில் போட்டுக் கொண்டு தன் வீட்டிற்குச் சென்றான்.

மலையாணிப் பிள்ளைக்கு ஒரு மகன் பிறந்து அவனும் ஓடிவிளையாடும் பருவமடைந்த போது தான் மலையாணிப் பிள்ளை தன் வீட்டை அடைந்தான். மலையாணிப் பிள்ளை அம்பைத் தேடிச் சென்று பல (ஆண்டுகள்) நாள்கள் கழிந்ததால் அவன் இறந்துவிட்டதாக அனைவரும் நினைத்தனர். மலையாணிப்பிள்ளை வீட்டை நோக்கிச் சென்றதைக் கண்ட அனைவரும் வியந்தனர். மலையாணிப் பிள்ளை தான் கொண்டு சென்ற ஓங்கல் கறியைத் தன்னுடைய மனைவியின் தாய்க்குச் சமைத்துக் கொடுத்தான். அந்த ஓங்கல் கறியை முழுதும் அந்த மூதாட்டி உண்டாள். மறுநாள் காலையில் அந்தக் கிழவி தான் விரும்பிய கறியை உண்ட மனநிறைவோடு இறந்தாள் என்று கதை முடிவடைகிறது.
(தகவல் - து. சரண்யா , மங்கம்மாள் பாட்டி, வயது. 72. வில்லோனி செட்டில்மெண்ட்.)

இரண்டாம் கதை தொடங்குதற்கு முன் காடர்களிடையே வழங்கும் கதைகளின் சிறப்பு குறித்த சிறு அறிமுகம் உங்கள் கருத்துக்கு இங்கே.

இந்தக் கதை இரவு நேரங்களில் குழந்தைகளுக்காகவும் பெரியோர்களின் பொழுது போக்கிற்காகவும் காடர்களால் வழிவழியாகச் சொல்லப்பட்டு வருகின்றது.

இந்தக் கதையில் வரும் அம்பட்டாஞ்சேயார் மலையாணிப் பிள்ளை என்னும் கதாபாத்திரம் ஒரு கற்பனைக் கதாபாத்திரம் என்பர்.

இக்கதை ஒவ்வொரு குடும்பங்களிலும் பேசப்பட்டு வருகின்றது. இதைக் கேட்கும் குழந்தைகள் தங்களின் விளையாட்டில் இந்தக் கதையைப் பயன்படுத்துவர். அப்போது அதில் தவறாக ஏதேனும் ஒருசில கருத்துக்களை மாற்றினாலும் அதைப் பெரியவர்கள் திருத்துவர் என்று சொல்லப்படுகின்றது. இந்தக் கதையை இப்படித்தான் கூறவேண்டும் என்ற வரைமுறை காடர் இன மக்களிடையே காணப்படுகிறது.
கதையில் நிகழ்வுகள் தொகுத்துச் சொல்லப்படும் முறையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டாலும் அவை பின்னர் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.

இனி இரண்டாம் கதை

கைக்கு மொட்டாளி




முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Fri Jun 29, 2018 12:02 pm

தொடர்ச்சி

இரண்டாம் கதை

கைக்கு மொட்டாளி (கழுகு முட்டை)

ஒரு இளைஞனின் குடும்பம் தனியாகக் காட்டில் வாழ்ந்து வந்தது. அவனுடைய குடும்பத்தில் தாய், தந்தை, மனைவி, மகன்(கைக்குழந்தை) மனைவியின் சகோதரி ஆகியோர் வாழ்ந்தனர். இளைஞனுடைய மனைவியின் பெற்றோர் வேறொரு காட்டில் வாழ்க்கை நடத்தி வந்தனர்.

அந்த இளைஞன் தினமும் தெள்ளிமை (குங்குலியம்) எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அந்தத் தெள்ளியை ஒரு மூட்டையளவு சேகரித்ததும் விற்க உப்பாற்றிற்குச் செல்ல முனைந்தான். அவ்வேளையில் இளைஞனின் மனைவிக்குச் சரியான காய்ச்சல். அன்றிரவு அவள் உணவு அருந்தாமலேயே படுத்துவிட்டாள். மறுநாள் காலையில் அந்த இளைஞன் உப்பாற்றிற்குச் செல்லக்  கிளம்பினான். அதற்கு முன் தன் தாயிடம் அவன்தன் மனைவிக்கு ஆற்றில்போய் நண்டோ அல்லது சேம்பையோ (சேம்பங்கீரை) எடுத்து வந்து சமைத்துக் கொடுக்குமாறு கூறிச் சென்றான்.

அதைக் கேட்ட இளைஞனின் தாய் தன் கணவனுடன் ஆற்றிற்குச் சென்றாள். ஆனால் கிழவன்(இளைஞனின் தந்தை) ஆற்றிற்குப்போய் சேம்பை எடுக்காமல் குன்றின்மேல் ஏறி அலைந்து திரிந்தான். அங்குக் கிடைத்த கழுகின் முட்டைகளை எடுத்து தன் தோள் துண்டில் மூட்டை கட்டியபடி எடுத்து வந்தான். அதைக்கண்ட கிழவி ஆற்றில்போய் நண்டு பிடிக்க வேண்டும் என்று தானே இங்கு வந்தோம் என்று கிழவனைக் கடிந்து கொண்டாள். ஆனால் கிழவன் அவளுடைய பேச்சை சற்றும் பொருட்படுத்தாமல் நடக்கத் துவங்கினான். கிழவனின் தோள் துண்டில் முட்டைகள் மூட்டைக் கட்டியிருப்பதைக் கண்ட கிழவி
சான்றி மொட்டை காட்டு
                       சான்றி மொட்டை காட்டு

(சான்றி - கிழவன் , மொட்டை (மொட்டு) - முட்டை)

என அம்முட்டைகளைக் காட்டும்படி கேட்டாள் .

தொடரும்..

Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக