புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நியூட்ரினோ ஆய்வகம் அமையும் இடமே அதன் அபாயத்தை உணர்த்தும் - 2


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Apr 04, 2018 12:52 pm

நியூட்ரினோ ஆய்வகம் அமையும் இடமே அதன் அபாயத்தை உணர்த்தும் - 2 JPFHdm9vQwqv0iEhhGzV+54918beebf54ea5078ce7ec317e56c44
நியூட்ரினோ என்றால் என்ன என்பது குறித்து முந்தைய கட்டுரையில் பார்த்தோம். தற்போது நியூட்ரினோ திட்டம் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
நியூட்ரினோ திட்டத்தை செய்பவர்கள் யார்?
நியூட்ரினோ ஆய்வகம் அமையும் இடமே அதன் அபாயத்தை உணர்த்தும் - 2 TyOpgHwbTAie3TwdnzFk+be69d450a9fbc71577d20ef43f4407ce
vivek
நியூட்ரினோ ஆராய்ச்சிக்கு தலைவர் பேராசிரியர் விவேக் M. தாதர், திட்டத் தலைவர் மற்றும் மூத்த விஞ்ஞானி ஆவார்.
டாடா அடிப்படை ஆய்வு மையம் தமிழகத்துக்கு செய்தது என்ன?
ஹோமி பாபாவால் நிறுவப்பட்டது டாடா அடிப்படை ஆய்வு மையம் (Tata Institute of Fundamental Research). இந்த நிறுவனம் சர் டொரப்ஜி டாடா டிரஸ்ட் (Sir Dorabji Tata Trust) ஆதரவு மற்றும் உதவியுடன் ஜூன் 1, 1945ம் ஆண்டு நிறுவப்பட்டது.
அதன்பின் கீழ்வரும் நிறுவனங்கள் துவங்கப்பட்டன:
1. பெங்களூரில் பொருந்தக்கூடிய கணிதவியல் மையம் (கேம்)
2. மும்பையில் ஹோமி பாபா மையம் அறிவியல் கல்வி (HBCSE)
3. பெங்களூருவில் உள்ள தியரிடிகல் சயின்சஸ் இன் சர்வதேச மையம் (ICTS)
4. பெங்களூரில் உள்ள தேசிய உயிரியல் அறிவியல் மையம் (NCBS)
5. புனேவில் வானொலி வானியல் ஆய்வு மையம் (NCRA)
6. ஹைதராபாத்தில் டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் பன்டெமெண்டல் ரிசர்ச் (IFR)
73 ஆண்டுகளில் 2018 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் ஒரு நிறுவனம் திறக்க மனதில்லை. ஆனால் இப்போது, தமிழ்நாட்டில் அபாயகரமான மற்றும் ஆபத்தான பரிசோதனை செய்ய விரும்புகிறது.
நன்றி
தினமணி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Apr 04, 2018 12:53 pm

நியூட்ரினோ திட்டத்தில் எத்தனை பேர் வேலை செய்வர்?
கட்டுமான பணியின் போது சுமார் 100 பேர் அங்கு வேலை செய்வர். இதில் கட்டடப் பொறியாளர்களும், வாகன ஓட்டுனர்களும், கட்டுமான பணியாளர்களும் அடங்குவர். இவர்களைத் தவிர அங்கு மண்ணியல் நிபுணர்களும், மின்சார பணியாளர்களும் மற்றும் சுற்றுச் சூழல் பொறியாளர்களும் இருப்பர். கட்டுமான பணி முடிந்தபின் சுமார் 20-30 விஞ்ஞானிகளும் மாணவர்களும் மட்டுமே ஆய்வகத்தில் இருப்பார்கள்.
நியூட்ரினோ ஆய்வகம் எவ்வாறு அமைய உள்ளது?
Pic:Neutrino lab-1
அம்பரப்பர் மலையை 2 கிமீ குடைந்து உள்ளே அமைய உள்ளது.
Pic:Neutrino lab-2
குகையின் பரிமாணங்கள்:
132 மீ × 26 மீ × 20 மீ
சுரங்கப்பாதையின் பரிமாணங்கள்
7.5 மீ × 7.5 மீ × 2 கிமீ
அறிவியல் கருவிகள் எடை - 50,000 டன் இரும்பு, மின் காந்தம். (உலகில் உள்ள மின்காந்த ஏற்பிகளில் இதுவே மிகப் பெரியதும் எடை அதிகமானதும் ஆகும் ). இக்கட்டுமானத்திற்குத் தேவையான சிமெண்ட், மணல் சுமார் - 37,000 டன்.
எவ்வளவு பாறைக்கழிவுகள் வெளியேற்றப்படும்?
வெட்டி எடுக்கப்படும் பாறைகளின் அளவு - 2,25,000 கன மீட்டர் அதாவது 7,50,000 கன அடி. சுரங்கப்பாதையின் முதல் பத்து மீட்டர் வரையிலான தூரம் 'உடைத்து மூடல்' முறையில் மேற்கொள்ளப்படும். இதிலிருந்து வரும் மேற்பரப்பு மண்ணைத் தனியாக சேர்த்து வைத்து பின்னர் குப்பை முற்றத்தை சமன்படுத்த மற்றும் பசுமைப்படுத்த பயன்படுத்தப்படும். பாறைக்கழிவுகள் பெரும்பாலும் சிறு கற்களை கொண்டவை. அவற்றை சாலைத்தளம் அமைப்பதிலும் கட்டுமானப்பணியிலும் பயன்படுத்தலாம். பாறைக்கழிவுகளின் மொத்த அளவு 224,000 கனசதுர மீட்டர் (18% வெற்றிடத்தையும் சேர்த்து ) என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆய்வகம் மற்றும் அதன் தரைத்தள வசதிகள் அமைக்க தேவையான மணல், பதப்படுத்தப்பட்ட பாறைக்கழிவுகளிலிருந்து எடுக்கப்படும் (சுமார் 80%). இவை அனைத்தும் மூன்று ஆண்டுகளில் கிடைக்கும் பாறைக்கழிவுகள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Apr 04, 2018 12:54 pm

இதில் 20% INO திட்டத்தில், தரைத்தளம் அமைத்தல், சமப்படுத்துதல் மற்றும் இன்னும் பிற கட்டட பணிகளில் பயன்படுத்தப்படும். கழிவு சேமித்தல் இடத்தை குறைக்க, இக்கழிவுகள் தோன்றும் போதே அப்புறப்படுத்த முயற்சிகள் எடுக்கப்படும்.
6) பாறைக்கழிவுகளை எங்கு சேர்த்து வைப்பீர்? ஆண்டின் 6 மாதங்கள் பலத்த காற்று வீசும் தருவாயில் சுற்றத்தில் உள்ள இடங்களை எங்கனம் பாதுகாப்பீர்?
அருகே உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க பாறைக்கழிவு சேமித்தல் இடத்தைச் சுற்றி சுவரொன்று எழுப்பப்படும். இச்சுவர், காற்றின் தாக்கத்தையும் குறைக்கும். தூசி பறப்பதைத் தடுக்க இச்சுவரின் மேல் பாகம் ஒரு தகடால் அல்லது துணியால் (கிராமப்புரங்களில் செய்வதைப் போல) மூடப்படும்.
நியூட்ரினோ திட்டத்திற்கு சட்டபோராட்டங்கள் செய்தவர்கள் யார் யார்..?
Pic: vai. ko
வைகோ சென்னை உயர் நீதிமன்றம் மதுரை அமர்வில் பிப்ரவரி 2015 ல் மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த, W.P. (MD) No.733 of 2015 INO மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி இல்லாமல் இந்த ஆராய்ச்சி வேலை துவங்குவதிலிருந்து இடைக்கால தடை உத்தரவுகள் விதித்தது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Apr 04, 2018 12:55 pm

Pic: Sundar rajan
பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த G.சுந்தர் ராஜன் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடர்ந்த Appeal No. 6 / 2015 வழக்கில், இந்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் தட்பவெட்பநிலை அமைச்சகம் வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்தது.
நியூட்ரினோவால் என்னென்ன பாதிப்புகள்
1. அணு உலைகளே பூமிக்கு வெளியில் அமைக்கும் பொழுது, நியூட்ரினோ ஆய்வகத்தை 2 கிமீ பாதுகாப்பான பாறைகளுக்கு நடுவே நடத்தப்படுவது மற்றும் அரசே ஒரு கிராமத்திற்கு 100 கோடி ரூபாய் செலவு செய்யாத நிலையில், இவர்கள் 100 கோடி ரூபாய் தருவதாக கூறியிருப்பதன் மூலம் இதன் ஆபத்தை உணரலாம்.
2. மேற்குத் தொடர்ச்சி மலை என்பது, பல்லுயிரியல் சூழலில் முக்கியமான பகுதி. நிறைய தமிழ்நாட்டு நதிகளின் பிறப்பிடமும் கூட. நீர் ஆதாரங்கள் பாதிக்கப்படும் அபாயம்.
3. அரிதிலும் அரிதான வன விலங்குகளின் வாழ்வாதாரமாக விளங்கும் முதுமலை காடுகளில் அழிவு எற்படும்.
4. அதேபோன்று, இத்திட்டம் அமைக்கப்போவதாக சொல்லுகின்ற 34 ஹெக்டேர் பகுதி, மக்களுடைய வாழ்வாதாரமாக இருக்கும் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலம் பாதிக்கப்படும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Apr 04, 2018 12:55 pm

5. 2.5 கி.மீ. சுரங்கம் தோண்டும் பொழுது உருவாகும் தூசி மண்டலம், அந்த பகுதியை கடுமையாக மாசுப்படுத்தும். உடைக்கப்பட்ட பாறைகளை அள்ளிக்கொண்டு நூற்றுக்கணக்கான சுமையுந்துகள் குறுக்கும் நெடுக்குமாக இயக்கப்படும் போது அந்தப் பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கை பல மாதங்களுக்கு பாதிக்கும்.
6. காவிரி டெல்டா விவசாயிகளைப்போல் அந்த பகுதி விவசாயம் முழுதும் பாதிக்கப்படும்.
7. நியூட்ரினோ ஆய்வகத்தை அமைப்பதற்கு மலையை குடைந்து சுரங்க பாதை அமைப்பதற்கு ஆயிரம் டன் வெடிபொருட்களை பயன்படுத்தி 12 லட்சம் டன் பாறைகள் தகர்க்கப்பட உள்ளதால், கேரளா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த முல்லை பெரியாறு அணை உட்பட 12 முக்கிய அணைகள் இடிந்து விழும் அபாயம் ஏற்படும்.
8. மலைகளுக்கும் காடுகளுக்கும் அப்பகுதியில் வாழும் பல் உயிரினங்களுக்கும் நிச்சயம் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.
9. அறிவியலாளர் வி.டி. பத்மநாபன் அவர்கள் ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருகிறார். அவரது கட்டுரைகளில், “சுமார் 1000 டன் ஜெலட்டின்களை பயன்படுத்தி 800 நாட்கள் தொடர்ச்சியாக 800 டன் பாறைகளை உடைக்க இருக்கிறார்கள். நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க இருக்கிற பகுதி நீர் அடுக்குகள் (Aquifer) நிறைந்த பகுதி. இவ்வாறாக, சுரங்கம் அமைக்க வெடி வைத்து பாறைகளையும் நிலத்தையும் தகர்க்கும்பொழுது அது புவிமேலோட்டுப் பேரியக்கத்தில் (tectonics) மாற்றம் நிகழ்த்தும். நீர் அடுக்குகளால் நிறைந்த பகுதி என்பதால் நீரியல் பூகம்பத்தை (hydro seismicity) எளிதில் ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு உள்ளது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Apr 04, 2018 12:56 pm

கதிர்வீச்சு அபாயம்:
10. வான்வெளி நியூட்ரினோவிற்கு நம் மண்ணில் பாதிப்பை ஏற்படுத்தும் வல்லமை இல்லை என்றாலும் செயற்கையாக உற்பத்தியாகும் நியூட்ரினோவிற்கு அத்தன்மை உண்டு. இரண்டிற்குமான ஆற்றல் வேறுபாடே அதன் இயற்பியல்/வேதியியல் தன்மைகளை மாற்றுகிறது. இயற்கை நியூட்ரினோவின் ஆற்றல் 2.2 எலக்ட்ரான் வோல்ட் (eV) முதல் 15 மெகா எலக்ட்ரான் வோல்ட் (MeV) வரை ஆகும். ஆனால், அமெரிக்க நியூட்ரினோ 500-1500 கிகா எலக்ட்ரான் வோல்ட் (GeV). செயற்கை நியூட்ரினோ 10 கோடி மடங்கு அதிகம் ஆற்றல் கொண்டது. இயற்கை நியூட்ரினோக்கள் தனித்தனியாக பயணிக்கக் கூடிய வல்லமை படைத்தது. ஆனால் செயற்கை நியூட்ரினோக்கள் அமெரிக்காவில் இருந்து அனுப்பப்படும்பொழுது அது நேர்திசையாக்கள் செய்யப்பட்டு கற்றைகளாக பயணிக்கும். அதனால் செறிவும் (Intensity) அடர்த்தியும் பன்மடங்கு கூடும்.
11. பிற்காலத்தில் ஜப்பான் மற்றும் அண்டார்டிக்காவில் இருந்தும் தமிழகம் நோக்கி இக்கதிர்வீச்சு அனுப்பப்படலாம். இது வெறும் யூகத்தின் அடிப்படையில் சொல்லவில்லை. ஏனைய நாடுகளின் அரசும் மக்களும் ஒருபொழுதும் தன் நாட்டின் மீது இத்தகைய கதிர்வீச்சு படையெடுப்பை அனுமதிக்க மாட்டார்கள். ஆனால், இந்திய துணைக்கண்டத்தில் இது முற்றிலும் சாத்தியம். உலகெங்கும் தடைசெய்யப்பட்ட பொருட்கள் இந்திய துணைக்கண்டத்தில் விற்பனை செய்யப்படுவது முற்றிலும் சாத்தியமே.

12. ஹிரோஷிமா நாகசாகி போல் ஒரு புல் பூண்டுகள் முளைக்காத பகுதியாக ஆக வாய்ப்பு அதிகம்.
13. யாரோ 20-30 அறிவியலாளர்களின் வெற்றிக்காக பல லட்சம் மக்களையும் உயிரினங்களையும் பலிகடாவாக்க முடியாது.
தொடரும்….

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Apr 04, 2018 1:36 pm

மக்கள் குறிப்பாக தமிழக மக்கள் மெது அக்கறை இல்லாத மத்திய மாநில அரசுகள் இதையெல்லாம் கருத்தில் கொள்ளாது



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 04, 2018 2:41 pm

அழிவு ஆரம்பமாகிறது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக