புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோல்வியைத் தவிர்க்க.... Poll_c10தோல்வியைத் தவிர்க்க.... Poll_m10தோல்வியைத் தவிர்க்க.... Poll_c10 
44 Posts - 41%
heezulia
தோல்வியைத் தவிர்க்க.... Poll_c10தோல்வியைத் தவிர்க்க.... Poll_m10தோல்வியைத் தவிர்க்க.... Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
தோல்வியைத் தவிர்க்க.... Poll_c10தோல்வியைத் தவிர்க்க.... Poll_m10தோல்வியைத் தவிர்க்க.... Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
தோல்வியைத் தவிர்க்க.... Poll_c10தோல்வியைத் தவிர்க்க.... Poll_m10தோல்வியைத் தவிர்க்க.... Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
தோல்வியைத் தவிர்க்க.... Poll_c10தோல்வியைத் தவிர்க்க.... Poll_m10தோல்வியைத் தவிர்க்க.... Poll_c10 
5 Posts - 5%
Raji@123
தோல்வியைத் தவிர்க்க.... Poll_c10தோல்வியைத் தவிர்க்க.... Poll_m10தோல்வியைத் தவிர்க்க.... Poll_c10 
3 Posts - 3%
prajai
தோல்வியைத் தவிர்க்க.... Poll_c10தோல்வியைத் தவிர்க்க.... Poll_m10தோல்வியைத் தவிர்க்க.... Poll_c10 
3 Posts - 3%
Saravananj
தோல்வியைத் தவிர்க்க.... Poll_c10தோல்வியைத் தவிர்க்க.... Poll_m10தோல்வியைத் தவிர்க்க.... Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
தோல்வியைத் தவிர்க்க.... Poll_c10தோல்வியைத் தவிர்க்க.... Poll_m10தோல்வியைத் தவிர்க்க.... Poll_c10 
2 Posts - 2%
Barushree
தோல்வியைத் தவிர்க்க.... Poll_c10தோல்வியைத் தவிர்க்க.... Poll_m10தோல்வியைத் தவிர்க்க.... Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தோல்வியைத் தவிர்க்க.... Poll_c10தோல்வியைத் தவிர்க்க.... Poll_m10தோல்வியைத் தவிர்க்க.... Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
தோல்வியைத் தவிர்க்க.... Poll_c10தோல்வியைத் தவிர்க்க.... Poll_m10தோல்வியைத் தவிர்க்க.... Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
தோல்வியைத் தவிர்க்க.... Poll_c10தோல்வியைத் தவிர்க்க.... Poll_m10தோல்வியைத் தவிர்க்க.... Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
தோல்வியைத் தவிர்க்க.... Poll_c10தோல்வியைத் தவிர்க்க.... Poll_m10தோல்வியைத் தவிர்க்க.... Poll_c10 
21 Posts - 5%
prajai
தோல்வியைத் தவிர்க்க.... Poll_c10தோல்வியைத் தவிர்க்க.... Poll_m10தோல்வியைத் தவிர்க்க.... Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தோல்வியைத் தவிர்க்க.... Poll_c10தோல்வியைத் தவிர்க்க.... Poll_m10தோல்வியைத் தவிர்க்க.... Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தோல்வியைத் தவிர்க்க.... Poll_c10தோல்வியைத் தவிர்க்க.... Poll_m10தோல்வியைத் தவிர்க்க.... Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தோல்வியைத் தவிர்க்க.... Poll_c10தோல்வியைத் தவிர்க்க.... Poll_m10தோல்வியைத் தவிர்க்க.... Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தோல்வியைத் தவிர்க்க.... Poll_c10தோல்வியைத் தவிர்க்க.... Poll_m10தோல்வியைத் தவிர்க்க.... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தோல்வியைத் தவிர்க்க.... Poll_c10தோல்வியைத் தவிர்க்க.... Poll_m10தோல்வியைத் தவிர்க்க.... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோல்வியைத் தவிர்க்க....


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Dec 14, 2009 12:31 pm



தோல்வியைத் தவிர்க்க....










ஒருவரின் வெற்றிக்குத் தேவையான குணங்கள் என சிலவற்றைக் குறிப்பிடுகிறோம்.
அதே போல் ஒருவர் தோல்வியடைவதற்கும் அவருடைய சில குணங்களே காரணமாகின்றன.
ஒருவருடைய அறிவுக்கூர்மையும், கடின உழைப்பும் மட்டும் அவரது வெற்றி
தோல்வியை நிர்ணயிப்பதில்லை. அவருடைய மற்ற குணநலன்களே பெரும்பாலும்
வெற்றிக்கோ தோல்விக்கோ வித்திடுகின்றன. எப்படி வெற்றிக்கான குணங்களை
வளர்த்துக்
கொள்வது
முக்கியமோ, அதே போல் தோல்விக்கான குணங்களைக் கிள்ளியெறிவதும்
முக்கியம். என்னென்ன குணங்கள் ஒருவருடைய தோல்விக்கு வித்திடுகின்றன என்று
தெரிந்துகொள்வோமா?

தோல்வியைத் தவிர்க்க.... Avoid-failureஎவரையும் எளிதில் நம்பிவிடுதல் அல்லது பிறர் மீது நம்பிக்கையின்மை:
எந்த
ஒரு தொழிலையும் ஒருவர் தான் மட்டுமே செய்ய இயலாது. இந்த உலகம் முழுமையும்
எல்லாச் செயல்களுக்கும் ஒன்றையொன்று சார்ந்திருப்பதை நாம் அறிவோம்.
அதனால்தான் மனிதனை ஒரு சமூக விலங்கு என்கிறோம். அப்படியிருக்க ஒருவர்
மீதும் நம்பிக்கை வைக்காவிடில் காரியம் எப்படி நடக்கும்? அதே நேரம்,
எல்லோரையும் எல்லாவற்றையும் நம்பிவிடுவதும் பெரும் அபாயத்துக்கு
இட்டுச்சென்றுவிடும்தானே? அதைத்தான் தெய்வப்புலவர் திருவள்ளுவர்,
'தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.'

என்கிறார்.
(குறள் எண்-510-தெரிந்து செயல்வகை) அதாவது, ஒருவரை ஆராயாது நம்புதலும்,
அவ்வாறு ஆராய்ந்து நம்பியவனைப் பின் சந்தேகப்படுதலும் மிக்க துன்பத்தைத்
தரும் என்பது இதன் பொருள். மேலும் அவர்
' தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.'

என்றும்
சொல்கிறார். (குறள் எண்-509-தெரிந்து செயல்வகை) அதாவது அயலார் எவரையும்
ஆராயாது நம்புதல் கூடாது. அவ்வாறு ஆராய்ந்து நம்பியபின் அப்பொருளை நம்ப
வேண்டும். என் நண்பர் ஒருவர் சொல்வார் 'வீட்டைப் பூட்டிவிட்டுக்
கிளம்புகையில் பூட்டை ஓரிருமுறை இழுத்துப்பார்த்தால் அது
புத்திசாலித்தனம். இழுத்து இழுத்து சரிபார்த்தவாறே நின்றுகொண்டிருப்பது
கிறுக்குத்தனம்' என்று. ஒருவர் நல்லவரா, கெட்டவரா என்று சில நிகழ்ச்சிகள்
மூலம் தெரிந்துகொண்டு அவர் மீது நம்பிக்கை வைக்கவேண்டும். எடுத்த
எடுப்பிலேயே நம்பிவிடுவதும், எவ்வளவு பழகியவராயிருந்தாலும்
சந்தேகப்படுவதும் வளர்ச்சியடைய உதவாது. வீழ்ச்சியடையவே காரணமாகிவிடும்.

பேராசை:
'பேராசை பெருநட்டம்' என்பது பழமொழி.

'அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும்
நற்பாலவை' என்கிறது திருக்குறள். முதலில் பேராசைப்பட்டு பிறருக்குத்
துன்பம் விளைவித்து அல்லது பிறரை ஏமாற்றி சேர்த்த செல்வமானது, அப்படிச்
செய்தவரை அழவைத்து, அதாவது துன்பமடையச் செய்து அவனை விட்டு நீங்கும்
என்கிறது தெய்வப் புலவர் வாக்கு.

பொறாமை:

பிறரைக்கண்டு
பொறாமைப்படுகின்றவர், தான் செய்யும் செயலில் ஈடுபாடு காட்டமாட்டார்கள்.
அவர்களது அறிவு, ஆற்றல் எல்லாமே பிறரைக் கெடுக்கவே பயன்படுத்தப்படுமே
அன்றி தன்னுடைய முன்னேற்றத்திற்குச் செலவிடப்படமாட்டாது. அவர்களது தோல்வி
பிறரால் ஏற்படக்கூடியத் தேவையில்லை. அவர்களே அவர்களது தோல்விக்குக்
காரணமாகிவிடுவார்கள். வள்ளுவர் பொறாமைக்குணத்தின் தீமையை ஒரு அதிகாரம்
முழுவதும் வலியுறுத்துகிறார்.
'அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.'

(அழுக்காறாமை- குறள் எண்- 167) என்ற குறளில், பொறாமை உடையவனிடம் உள்ள
திருமகள் அவனை விட்டு ஒதுீங்கி தனது தமக்கையை அவனுக்குக் காட்டிவிடுவாள்
என்கிறார் திருவள்ளுவர். அதாவது, அவனது செல்வம் அவனை விட்டு நீங்கி வறுமை
அவனை வந்து அடையும் என்பது அவர் குறிப்பு. அது மட்டுமல்ல
'அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.'

(அழுக்காறாமை-
குறள் எண்- 168) பொறாமை என்ற பாவி யாரிடம் தங்குகிறானோ, அவனிடம் உள்ள
செல்வத்தைக் கெடுத்து தீமையில் தள்ளிவிடுவான் என்று பொறாமையின் தீமையை
வலியுறுத்திக்கூறுகிறார் அவர். பொறாமையின்மை என்ற ஒரு பண்பு ஒருவர்
பெறக்கூடிய செல்வங்களில் சிறந்தது எனவும் கூறுகிறார் அவர்.
'விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.'

(அழுக்காறாமை- குறள் எண்- 168) என்ற குறள் இதை விளக்குகிறது.

பிறரை ஏமாற்றுதல், வஞ்சித்தல்:
பிறரை ஏமாற்றி வஞ்சித்துப் பெறும் வெற்றி எதுவாக இருப்பினும், அது நீண்ட நாள் நிலைக்காது. இதைத்தான் வள்ளுவர்
'களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.'
(குறள் எண் 284 - கள்ளாமை)
என்கிறார்.
பிறர் பொருளை வஞ்சித்து ஏமாற்றி தனதாக்கிக்கொள்ள ஒருவர் விரும்பினால்
அந்த விருப்பம் நிறைவேறிய பின் அப்பொருளாலேயே மிகுந்த தீமை உண்டாகும்
என்பதே இதன் பொருள்.

கோபம், கடுமையான பேச்சு:

எதற்கெடுத்தாலும்
கோபப்படுதலும், பிறரைக்கடுமையாகப் பேசுதலும் ஒருவனுக்கு அழிவைத்தான்
உண்டாக்கும். ஆயிரம் நல்ல உதவிகளை, கோபத்தில் சொல்லும் ஒரு சொல்
மறக்கச்செய்துவிடும்.
'தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே
கொல்லும் சினம்.' என்பது வள்ளுவர் வாக்கு. (வெகுளாமை - குறள் எண்-305)
ஒருவன் தான் நன்கு வாழவேண்டும், தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ள
வேண்டுமென்று விரும்பினால், அவன் கோபமடையாமல் இருக்கவேண்டும். அப்படி
அவன் சினத்தின் வசப்படுவானாயின், அந்தச் சினமே அவன் அழிவுக்குக்
காரணமாகிவிடும். அது மட்டுமல்ல,

'ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.'

(குறள் எண்-128 - அடக்கமுடைமை) என்ற குறளின் மூலம் ஒருவன் கடுமையான
சொற்களைப் பேசுவதனால் ஏற்படும் தீமையானது அவனுடைய மற்றெல்லா நன்மைகளையும்
சேர்த்துக் கெடுத்துவிடக்கூடியது என்று கடுமையாகப் பேசுவதன் தீமையை
அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறது பொதுமறை.

முயற்சியின்மை மற்றும் சோம்பல்:

'பொயியின்மை யாருக்கும் பழியென்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி.'
என்ற குறளும் (குறள் எண் - 618 - ஆள்வினையுடைமை)

'மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்.'
என்ற குறளும் (குறள் எண் - 608 - மடியின்மை)

ஒரு
செயலைச் செய்யத்தொடங்கியபின், அதை விடாமுயற்சியுடன் தொடராமல் கைவிடும்
தன்மைதான் ஒருவருக்குக் கேவலமேயன்றி, ஒருவர் உடல் ஊனம் அன்று என்று கூறும்
வள்ளுவர், ஒருவனுடைய குடும்பத்தில் சோம்பல் என்ற வியாதி புகுமானால்,
அக்குடும்பமே துன்பத்தை அடைந்து, அடிமையாகும் என்று முயற்சியின்மை மற்றும்
சோம்பலினால் ஏற்படும் விளைவுகளை எடுத்துரைக்கிறார்.

அளவுக்கு மீறிய அச்சம் அல்லது அளவு மீறிய துணிச்சல்:
எந்த
முயற்சியை மேற்கொள்ளப் பயப்படுபவரும், எதைப்பற்றியும் யோசிக்காமல்
அளவுக்கு மீறிய துணிச்சலுடன் ஆழமறியாமல் காலை விடுபவரும் கண்டிப்பாக
வெற்றி காண இயலாது. இதையே வள்ளுவர்
'அஞ்சுவது அஞ்சாமை பேதைமை' என்று குறிப்பிடுகிறார்.

இவை
மட்டுமல்ல, உயர்வு மனப்பான்மை, தாழ்வு மனப்பான்மை இவை இரண்டுமே மிகுந்த
கேட்டை விளைவிக்கக் கூடியவை. அவ்வாறே, பிறரிடம் எதற்கெடுத்தாலும் குற்றம்
சொல்வது, பொய் பேசுவது போன்ற தோல்விக்கு வித்திடும் இத்தகைய குணங்களை
நம்மிடம் இருந்து அகற்றினால், வெற்றி மாளிகையின் கதவுகள் நமக்காகத்
திறந்து வழிவிடும் என்பதில் சந்தேகமே இல்லை.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக