5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» தலையில் கூடை சுமந்து சாதாரண வேலையாள் போல தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறித்த பிரியங்கா காந்தி..!!by சக்தி18 Today at 1:12 am
» அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்
by சக்தி18 Today at 1:09 am
» நின்னயே ரதி என்று நினைகிறேனடி கண்ணம்மா!
by சக்தி18 Today at 1:08 am
» பல்சுவை - இணையத்தில் ரசித்தவை
by T.N.Balasubramanian Yesterday at 10:15 pm
» சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்று தான்..!
by ayyasamy ram Yesterday at 10:09 pm
» - பொய் சொல்லக்கூடாது காதலி...
by ayyasamy ram Yesterday at 9:41 pm
» தமிழகத்தில் ஹேமமாலினி பிரசாரம்; பா.ஜ., திட்டம்
by krishnaamma Yesterday at 8:45 pm
» 37 வருடங்களுக்கு பின் ‘முந்தானை முடிச்சு’ படம் மீண்டும் தயாராகிறது
by krishnaamma Yesterday at 8:34 pm
» மகிழ்ச்சியே இளமையின் ரகசியம்
by krishnaamma Yesterday at 8:33 pm
» எதுக்கும் ஐ ஏ எஸ் தேர்வுக்கு பீஸ் கட்டி வைப்போம்..!!
by krishnaamma Yesterday at 8:19 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» செல்வராகவன் இயக்கியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை வெளியிட இடைக்கால தடை...!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» வரும் 22ம் தேதிக்குள் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தர வேண்டும்: கட்சிகளுக்கு சத்ய பிரதா சாகு உத்தரவு
by ayyasamy ram Yesterday at 4:07 pm
» நேரு உயிரியல் பூங்கா எங்குள்ளது? (பொது அறிவு-கேள்விகள்)
by சக்தி18 Yesterday at 2:05 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கனிந்த சாறு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:08 pm
» கேர் ஆஃப் காதல் - விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (379)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 pm
» ஆரோக்கியமான உடல் தான் சிறந்த செல்வம்..!!
by ayyasamy ram Yesterday at 12:50 pm
» சரியானவற்றைச் செய்ய, எந்த நேரமும் சரியான நேரமே!
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» லெட்டர்பேடு கட்சிகளுக்கு மானியம்...!!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:36 pm
» பொது அறிவு தகவல்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:35 pm
» பெட்ரோல், டீசல் விலை உயர்வு தர்ம சங்கடம் என்றால் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும்; சிவசேனா வலியுறுத்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:28 pm
» உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை!
by ayyasamy ram Yesterday at 12:17 pm
» பஞ்சாப் முதல்வரின் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமனம்
by T.N.Balasubramanian Yesterday at 10:31 am
» 7 வாரங்களுக்கு பிறகு உலக அளவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 10:27 am
» பதுங்கு குழிகளைச் சுற்றி என்ன வெள்ளை வட்டம்?
by ayyasamy ram Yesterday at 9:29 am
» இனிய பாட்டு! -
by ayyasamy ram Yesterday at 9:24 am
» நகை - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am
» சொத்து - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:55 am
» துரோகம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:54 am
» மருமகள் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:03 am
» முடிவு - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:00 am
» பாஸ்வேர்ட் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:58 am
» நயன்தாராவுக்கு விரைவில் திருமணம்
by ayyasamy ram Yesterday at 6:14 am
» நான் விஜய்க்கு ஜோடியா? பூஜா ஹெக்டே விளக்கம்
by ayyasamy ram Yesterday at 6:11 am
» யோகி பாபு படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 am
» புதுவை ஆரோவில் சர்வதேச நகர உதய தினம்; தீ மூட்டி வெளிநாட்டினர் கூட்டு தியானம்
by ayyasamy ram Yesterday at 5:59 am
» ஓட்டின் மகிமையை என்று உணர்வார்களோ..
by ayyasamy ram Mon Mar 01, 2021 10:30 pm
» மைசூர்பாகு ! - சிறு கதை !
by krishnaamma Mon Mar 01, 2021 9:25 pm
» நிர்ஜல ஏகாதசி ! - மஹா பெரியவா....
by T.N.Balasubramanian Mon Mar 01, 2021 8:57 pm
» சுரங்க பாதை அமைத்து 400 கிலோ வெள்ளி கொள்ளை
by T.N.Balasubramanian Mon Mar 01, 2021 8:52 pm
» துரோகி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Mar 01, 2021 8:49 pm
» கடன் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Mar 01, 2021 8:48 pm
» பெருந்தன்மை - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Mar 01, 2021 8:46 pm
» யார் கிட்ட??? நாங்க கும்பகோணத்துகாரங்க :)
by T.N.Balasubramanian Mon Mar 01, 2021 8:44 pm
» ஒரு பத்து நிமிடங்கள் முன்னதாக......
by ayyasamy ram Mon Mar 01, 2021 8:08 pm
» அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு.......
by ayyasamy ram Mon Mar 01, 2021 8:06 pm
» ரஜினி முதலமைச்சரானா என்ன பண்ணுவீங்க?
by krishnaamma Mon Mar 01, 2021 7:11 pm
» ஸ்ரீரங்கத்தில் கணக்கூடிய அதிசயம் !
by krishnaamma Mon Mar 01, 2021 6:59 pm
Admins Online
குறட்பாவில் நாட்டு நடப்பு "
Page 1 of 2 • 1, 2
குறட்பாவில் நாட்டு நடப்பு "
ரமணியன் ஐயா கேட்டுக்கொண்டதற்கிணங்க , " குறட்பாவில் நாட்டு நடப்பு " என்ற இந்தத் திரியைத் தொடங்குகிறேன் . நாட்டிலே அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளைக் குறட்பாவில் வடிப்பதே இந்தத் திரியின் நோக்கமாகும் . அதே சமயத்தில் குறட்பாவை எவ்வாறு எழுதுவது என்றும் தெரிந்து கொள்ளலாம் .
குறட்பா , வெண்பாவின் இலக்கணத்தின் அடிப்படையில் அமைந்த ஈரடிச் செய்யுளாகும் . இதைக் கற்றுக்கொண்டால் வெண்பா எழுதுவது மிகவும் எளிது . அனைவரும் இதில் பங்கு கொள்ளவேண்டும் என்பதே என் அவா ! தவறுகள் இருப்பின் திருத்திக் கொள்ளலாம் !
தற்காலத்தில் , கவிதைகள் என்ற பெயரில் ,வருவன எல்லாம் கவிதைகள் அல்ல ! அவையெல்லாம் வார்த்தை ஜாலங்களே தவிர வேறல்ல ! சினிமாக் கவிதைகள் போன்று அவையெல்லாம் , காலப்போக்கில் மறைந்துவிடும் .மரபுக் கவிதைகள் மட்டுமே நிலைத்து நிற்கும் ; நிலையான இன்பத்தைத் தரும் .
சரி , இப்போது ஒரு குறட்பாவைப் பார்ப்போமா !
நாட்டிலுள்ள வெற்றிடத்தை நானே நிரப்பிடவே
ஓட்டளிப்பீர் என்றும் எனக்கு .

M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482
Re: குறட்பாவில் நாட்டு நடப்பு "
பட்டப் பகலில் பருவப்பெண் கத்தியால்
வெட்டிக் கொலையுண்டாள் நேற்று .
திருக்குறளின் இலக்கணம் கற்க
திரு . பழ.மு.ரா . அவர்களின் " திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம் " என்ற திரியையும் , என்னுடைய " புள்ளி இல்லாத வெண்பா " என்ற திரியையும் நோக்கவும் .
வெட்டிக் கொலையுண்டாள் நேற்று .
திருக்குறளின் இலக்கணம் கற்க
திரு . பழ.மு.ரா . அவர்களின் " திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம் " என்ற திரியையும் , என்னுடைய " புள்ளி இல்லாத வெண்பா " என்ற திரியையும் நோக்கவும் .
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482
Re: குறட்பாவில் நாட்டு நடப்பு "
நடு என்று நவிலும் இடவலது
நமக்கிடர் என்றே நவில்.
இதனை தயவு கூர்ந்து நல்ல இலக்கண வடிவம் கொடுங்கள் ஐயா.
நமக்கிடர் என்றே நவில்.
இதனை தயவு கூர்ந்து நல்ல இலக்கண வடிவம் கொடுங்கள் ஐயா.
krishnanramadurai- பண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
மதிப்பீடுகள் : 56
Re: குறட்பாவில் நாட்டு நடப்பு "
நடு என்று நவிலும் இடவலதும்
நமக்கிடர் என்றே நவில்.
என்றெழுதியிருக்கவேண்டும் என தோன்றுகிறது பொருள் கொண்டு மட்டும். இலக்கணம் எனக்கு இன்னும் தெரியவில்லை.
நமக்கிடர் என்றே நவில்.
என்றெழுதியிருக்கவேண்டும் என தோன்றுகிறது பொருள் கொண்டு மட்டும். இலக்கணம் எனக்கு இன்னும் தெரியவில்லை.
krishnanramadurai- பண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
மதிப்பீடுகள் : 56
Re: குறட்பாவில் நாட்டு நடப்பு "
நடுவென்று நாட்டும் இடவலதும் ஒன்றாய்
நமக்கிடர் என்றே நவில்
விக்கி துணையுடன் எந்திருத்தம் இது. ஐயா தயவு செய்து சரி பார்க்கவும்.

மேற்கோள் செய்த பதிவு: 1261942@krishnanramadurai wrote:நடு என்று நவிலும் இடவலது
நமக்கிடர் என்றே நவில்.
இதனை தயவு கூர்ந்து நல்ல இலக்கண வடிவம் கொடுங்கள் ஐயா.
முதலில் தாங்கள் கூறவந்த பொருள் என்னவென்று சொல்லவும் . பிறகு இலக்கணவடிவம் கொடுக்கிறேன் .
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482
Re: குறட்பாவில் நாட்டு நடப்பு "
வலதுசாரி, இடதுசாரி அரசியல் இரண்டும் மக்களுக்கான நடுநிலை வாதிகள் என்று சொன்னாலும் அவை நம் வளர்ச்சிக்கு இடைஊராக உள்ளன.
நடுவென்று நாட்டும் இடவலதும் ஒன்றாய்
நமக்கிடர் என்றே நவில்
விக்கி துணையுடன் என் திருத்தம் இது. ஐயா தயவு செய்து சரி பார்க்கவும்.
நடுவென்று நாட்டும் இடவலதும் ஒன்றாய்
நமக்கிடர் என்றே நவில்
விக்கி துணையுடன் என் திருத்தம் இது. ஐயா தயவு செய்து சரி பார்க்கவும்.
krishnanramadurai- பண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
மதிப்பீடுகள் : 56
Re: குறட்பாவில் நாட்டு நடப்பு "
இடதும் வலதும் இடும்பை தருமே
நடுநிலை யல்ல அது .
முதல் சீரும் , மூன்றாம் சீரும் " இ " என்னும் எழுத்தில் தொடங்கி மோனை இன்பம் தருகிறது .
முதல் சீரும் , ஐந்தாம் சீரும் இரண்டாம் எழுத்து ( ட , டு ) ஒன்றி எதுகையின்பம் தருகிறது .
நடுநிலை யல்ல அது .
முதல் சீரும் , மூன்றாம் சீரும் " இ " என்னும் எழுத்தில் தொடங்கி மோனை இன்பம் தருகிறது .
முதல் சீரும் , ஐந்தாம் சீரும் இரண்டாம் எழுத்து ( ட , டு ) ஒன்றி எதுகையின்பம் தருகிறது .
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482
Re: குறட்பாவில் நாட்டு நடப்பு "
மிக்க நன்றி ஐயா.
தங்கள் வெண்பா அளவிற்கு சற்றேனும் அருகில் வர எனது கிறுக்கலை திருத்தவும், விமர்சிக்கவும் வேண்டுகிறேன்.
இதை நான் பயன்படுத்தலாமா? நன்றி விக்கிபீடியா.
வெண்பாவுக்கான யாப்பிலக்கணம்
யாப்பிலக்கண நெறிமுறைகள் மிகவும் கட்டுக்கோப்பானவை என்றும் அதனால் அவற்றை ஒரு இடம் சாரா இலக்கண முறையில் எழுத முடியும் என்றும் நிறுவப்பட்டுள்ளது. அந்நெறிமுறைகள் பின்வருவன:
சீர்களுக்கான நெறிகள்
வெண்பா ஈரசைச் சீர்களான மாச்சீரையும், விளச்சீரையும் பெற்று வரும்.
மூவசைச் சீர்களில் காய்ச்சீர் மட்டுமே வெண்பாவில் வரும்; கனிச்சீர் வராது.
நிலைமொழியீற்றசையைப் பொருத்து வருமொழி முதலசை அமைய வேண்டுமென வலியுறுத்தும் தளை நெறிகள்
வெண்பாவுக்கான தளைகள் இயற்சீர் வெண்டளை மற்றும் வெண்சீர் வெண்டளை ஆகும்.
இயற்சீர் வெண்டளை - நிலைமொழி ஈற்றில் மாச்சீர் வர வருமொழி முதலில் நிரையசையே வர வேண்டும்; நிலைமொழி ஈற்றில் விளச்சீர் வர வருமொழி முதலில் நேரசையே வர வேண்டும்.
வெண்சீர் வெண்டளை - நிலைமொழி ஈற்றில் காய்ச்சீர் வர வருமொழி முதலில் நேரசையே வர வேண்டும்.
வெண்பா செப்பலோசை பெற்று வரும்.
வெண்பாவுக்கான மேலெ தரப்பட்டுள்ள யாப்பிலக்கண நெறிகளுக்கு இணையான இடம் சாரா இலக்கணம் பின்வருமாறு:
<வெண்பா> → <அடி><ஈற்றடி>
<அடி> → <சீர்> <சீர்> <சீர்> <சீர்>
<ஈற்றடி> → <சீர்> <சீர்> <ஈற்றுச்சீர்>
<சீர்> → <ஈரசை> | <மூவசை>
<ஈற்றுச்சீர்> → <நாள்> | <மலர்> | <காசு> | <பிறப்பு>
<ஈரசை> → <தேமா> | <புளிமா> | <கருவிளம்> | <கூவிளம்>
<மூவசை> → <தேமாங்காய்> | <புளிமாங்காய்> | <கூவிளங்காய்> | <கருவிளங்காய்>
<தேமா> → <நேர்> <நேர்>
<புளிமா> → <நிரை> <நேர்>
<கருவிளம்> → <நிரை> <நிரை>
<கூவிளம்> → <நேர்> <நிரை>
<தேமாங்காய்> → <தேமா> <நேர்>
<புளிமாங்காய்> → <புளிமா> <நேர்>
<கருவிளங்காய்> → <கருவிளம்> <நேர்>
<கூவிளங்காய்> → <கூவிளம்> <நேர்>
<நாள்> → <நேர்>
<மலர்> → <நிரை>
<காசு> → <நேர்> <நேர்>
<பிறப்பு> → <நிரை> <நேர்>
<நேர்> → <குறில்> | <நெடில்> | <நேர்> <ஒற்று>
<நிரை> → <குறில்> <குறில்> | <குறில்> <நெடில்> | <நிரை> <ஒற்று>
<குறில்> → {குறுகிய ஒலியுடைய உயிர் எழுத்து அல்லது உயிர்மெய் எழுத்து}
<நெடில்> → {நெடிய ஒலியுடைய உயிர் எழுத்து அல்லது உயிர்மெய் எழுத்து}
<ஒற்று> → {மெய்யெழுத்து}
தளைகளுக்கான இலக்கண நெறிகள்:
இயற்சீர் வெண்டளை (மா முன் நிரை, விள முன் நேர்)
<வெண்பா> → |
→ <தேமா>
→ <கூவிளம்>
→ <புளிமா>
→ <கருவிளம்>
→ <நாள்> | <காசு>
→ <மலர்> | <பிறப்பு>
வெண்சீர் வெண்டளை (காய் முன் நேர்)
→ <தேமாங்காய்>
→ <கூவிளங்காய்>
→ <புளிமாங்காய்>
→ <கருவிளங்காய்>

<வெண்பா> →
வெண்சீர் வெண்டளை (காய் முன் நேர்)
krishnanramadurai- பண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
மதிப்பீடுகள் : 56
Re: குறட்பாவில் நாட்டு நடப்பு "
வெண்பாவுக்கான இலக்கணம் தந்தமைக்கு நன்றி !
தங்களின் கிறுக்கலை ஓரளவுக்குச் செம்மை செய்துள்ளேன் .
நடுவென்று நாட்டும் இடவல தென்றும்
இடும்பை தருமே இயம்பு .
தங்களின் கிறுக்கலை ஓரளவுக்குச் செம்மை செய்துள்ளேன் .
நடுவென்று நாட்டும் இடவல தென்றும்
இடும்பை தருமே இயம்பு .
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482
Re: குறட்பாவில் நாட்டு நடப்பு "
சனியனெனத் தாய்மொழியைச் சொல்லுதல் பாவம்
கனிமொழியைத் தூற்றாமல் போற்று .
கனிமொழியைத் தூற்றாமல் போற்று .
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482
Re: குறட்பாவில் நாட்டு நடப்பு "
மத்திய அரசு கல்வி வாரியமான சிபிஎஸ்இயில் 6ம் வகுப்பு மாணவர்களுக்கான கேள்வித்தாளில் வர்ணாசிரமத்தின்படி கீழ் சாதி எது என்று கேட்கப்பட்டுள்ள கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வர்ணாசிரமத்தின்படி கீழ் சாதி எது என்று மாணவர்கள் மனதில் சாதிய சிந்தனைகளை வளர்க்கும் வகையில் விஷத்தை விதைக்கும் விதமாக கேட்கப்பட்டுள்ள இந்த கேள்வியால் சர்ச்சை எழுந்துள்ளது. சிபிஎஸ்இ 6ம் வகுப்பு சமூக அறிவியல் வினாத்தாளில் இந்துமத வர்ணாசிரமத்தின் படி மிகத்தாழ்ந்த சாதி எது என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இந்தக்கேள்விக்கான விடைகளாக பிராமணர்கள், சூத்திரர்கள், ஷத்ரியர்கள், வானப்ரஸ்தா என்று கொடுக்கப்பட்டுள்ளன .
என்னே அக்கிரமம் ! பிஞ்சுகள் உள்ளத்திலே சாதி என்னும் நஞ்சை விதைக்கலாமா ?
குறட்பா :
=========
சாதி இரண்டொழிய வேறில்லை என்கின்ற
நீதியை நெஞ்சில் நிறுத்து .
பொருள்
=========
சிறு குழந்தைகள் மனத்தில் , " இவன் உயர்ந்த சாதி ; இவன் தாழ்ந்த சாதி " என்ற பாகுபாட்டை நாம் விதைக்கலாகாது .
அய்யன் வள்ளுவனின் , " பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் " என்கின்ற உன்னத தத்துவத்தை பிள்ளைகளின் உள்ளத்திலே விதைக்கவேண்டும் . கல்வி நிறுவனங்களே சாதியைப்பற்றிப் பேசலாமா ?
என்னே அக்கிரமம் ! பிஞ்சுகள் உள்ளத்திலே சாதி என்னும் நஞ்சை விதைக்கலாமா ?
குறட்பா :
=========
சாதி இரண்டொழிய வேறில்லை என்கின்ற
நீதியை நெஞ்சில் நிறுத்து .
பொருள்
=========
சிறு குழந்தைகள் மனத்தில் , " இவன் உயர்ந்த சாதி ; இவன் தாழ்ந்த சாதி " என்ற பாகுபாட்டை நாம் விதைக்கலாகாது .
அய்யன் வள்ளுவனின் , " பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் " என்கின்ற உன்னத தத்துவத்தை பிள்ளைகளின் உள்ளத்திலே விதைக்கவேண்டும் . கல்வி நிறுவனங்களே சாதியைப்பற்றிப் பேசலாமா ?
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482
Re: குறட்பாவில் நாட்டு நடப்பு "
சாதி இரண்டொழிய வேறில்லை என்கின்ற
நீதியை நெஞ்சில் நிறுத்து .
ஒரு விதத்தில் சரியே.
இருப்பினும் இப்போது பரவலாக மூன்றாவது ஜாதியும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
.
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Tue Mar 13, 2018 6:30 am; edited 1 time in total (Reason for editing : deletion)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 28207
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10074
Re: குறட்பாவில் நாட்டு நடப்பு "
சாதியை ஒழிக்க வள்ளுவர் சொன்ன இருஜாதிகள் இட்டார் மற்றும் இடாதார். அதிலும் இடாதார் இழிகுலம் அதலால் அனைவரும் இட்டார் என்ற ஓர் அணி சேர்வார் என நினைத்தார். நான்கு வர்ணங்களை ஏற்ற வள்ளுவர் இப்படி சொல்ல, நாம் அழிக்க முடியாத மூன்று சாதிகளை நெஞ்சில் நிறுத்த திரும்பவும் சதவிகித போட்டி ஆரம்பம்தான்.
krishnanramadurai- பண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
மதிப்பீடுகள் : 56
Re: குறட்பாவில் நாட்டு நடப்பு "
" இட்டார் பெரியோர் : இடாதோர் இழிகுலத்தோர் " என்று சொன்னது ஒளவைப் பாட்டி ; வள்ளுவர் அல்ல !
நான்கு வருணங்களை வள்ளுவர் ஏற்றாரா ? ஆதாரம் காட்டுங்கள் !
நான்கு வருணங்களை வள்ளுவர் ஏற்றாரா ? ஆதாரம் காட்டுங்கள் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|