புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:11 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Thu Nov 21, 2024 2:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 2 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 2 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 2 Poll_c10 
87 Posts - 67%
heezulia
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 2 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 2 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 2 Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 2 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 2 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 2 Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 2 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 2 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 2 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 2 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 2 Poll_c10 
3 Posts - 2%
sram_1977
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 2 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 2 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Shivanya
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 2 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 2 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 2 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 2 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 2 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 2 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 2 Poll_c10 
423 Posts - 76%
heezulia
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 2 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 2 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 2 Poll_c10 
75 Posts - 14%
mohamed nizamudeen
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 2 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 2 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 2 Poll_c10 
18 Posts - 3%
E KUMARAN
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 2 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 2 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Dr.S.Soundarapandian

6 Posts - 1%
prajai
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 2 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 2 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 2 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 2 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 2 Poll_c10 
3 Posts - 1%
sram_1977
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 2 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 2 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 2 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 2 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Feb 20, 2018 1:47 pm

First topic message reminder :

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
=====================================
உனது முகமோ உதய நிலவு
மனது முழுது முனது - நினைவே
உனது பிரிவா லுருகு மெனது
மனதை யறியாயோ நீ !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Feb 21, 2018 7:20 am

M.Jagadeesan wrote:முதலில் நேரிசை வெண்பாவைப் பார்ப்போம் .

பேருந்துக் கட்டணத்தைப் பேயரசு மாற்றியதால்
ஊருக்குச் செல்வோர் உழல்கின்றார் - பாருக்குள்
இல்லாத கூத்தெல்லாம் இங்கே நடக்குதடா
நல்லோர்க்கு வாழ்வில்லை இங்கு .

நேரிசை வெண்பா நான்கு அடிகளைக் கொண்டதாகும் . முதல் மூன்று அடிகள் அளவடியாகவும் ( நான்கு சீர்கள் கொண்ட அடியை அளவடி என்போம் . ) நான்காம் அடி சிந்தடியாகவும் ( மூன்று சீர்கள் கொண்டது சிந்தடி ) இருந்து தனிச்சொல் பெற்றுவரும் . இந்த வெண்பாவில் தனிச்சொல் " பாருக்குள் " என்பதாகும் .

இன்னிசை வெண்பா என்பது தனிச்சொல் பெறாமல் வருவது .
மேற்கோள் செய்த பதிவு: 1260111
நேரிசை வெண்பாவில் பேருந்து கட்டண உயர்வை வயிற்று எரிச்சலுடன் -' பாருங்கள்' என்ற தனிச்சொல்
விளக்கம் அருமை
நன்றி ஜெகதீஷ்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Feb 21, 2018 7:27 am

M.Jagadeesan wrote:மருட்பா
========
வெண்பாவும் , ஆசிரியப்பாவும் கலந்து வருவது மருட்பா எனப்படும் .

பொய்களைச் சொல்லாதே ! பாவங்கள் சேர்க்காதே !
பொய்களினால் நன்மை பிறந்திடு மென்றாலும்
மெய்யே வலிதாகும் ; மேன்மைகள் தந்திடுமே !
உய்யும் வழிக்குன்னை உந்துமே ஆதலினால்
மனத்துடன் வாய்மை மொழிந்தால்
மற்றொரு மகாத்மா உன்றன் உருவே !
மேற்கோள் செய்த பதிவு: 1260103
மருட்பா, அதிமுக ஆட்சியாளர்களுக்கு
பொருந்தியுள்ளது.
பொய்யா?
மெய்யா? உண்மையில் பொய்யே!!
அருமை நன்றி ஜெகதீஷ்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Feb 21, 2018 8:24 am

குறளில் குற்றம் காணாதீர் ( நேரிசை வெண்பா )
===================================================
குறளின்பம் துய்க்காது குற்றங்கள் காணுவது
அறமல்ல என்ப தறிவீர் - திருமகளே !
அப்பத்தைத் தின்னாது ஆழ்குழி எண்ணுவது
தப்பன்றோ சான்றோர் தமக்கு .

பொருள் : சுவையான அப்பம் கிடைத்தால் , அதை ருசித்து சாப்பிடவேண்டுமே தவிர , அதிலுள்ள குழிகளை எண்ணிக்கொண்டு இருப்பது மடமையாகும் . அதுபோல திருக்குறளைப் படிக்குங்கால் , அதன் சொற்சுவை , பொருட்சுவை மற்றும் இலக்கியச் சுவையை அனுபவிக்கவேண்டுமே தவிர , குற்றம் காணுதல் சான்றோர்க்கு இழுக்காகும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Feb 21, 2018 8:31 am

தமிழ்த் தாத்தா உ .வே .சா
==============================
ஓடினாய் ஓடினாய் ஓலைச் சுவடிகளைத்
தேடியே உன்றன்கால் சலித்தாய் - வாடும்
பயிருக்குப் பெய்த மழைபோல் தமிழின்
உயிர்செழிக்க வந்தவனே வாழ்க !

இந்த நேரிசை வெண்பா " வாடும் " என்ற தனிச்சொல் பெற்று வந்துள்ளது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Feb 21, 2018 8:41 am

பாயில் படுக்கும் சுகம் :
========================
மெத்தையில் தூங்கினால் மேனிக்குக் கேடாகும்
நித்திரை வேண்டா நிலம்தன்னில் - முத்தே நீ
நோயில் படுத்தாலும் நோக்காடு போய்விடுமே
பாயில் படுத்த பொழுது .

பொருள் : முத்துப் போன்ற அழகிய பெண்ணே !
=========
மெத்தையில் தூங்குவது உடல்நலத்திற்கு துன்பம்தரும் . வெற்றுத் தரையிலும் படுத்து உறங்கக்கூடாது . தரையிலே பாய் விரித்துப் படுத்தால் , நோயினால் ஏற்படும் துன்பங்களெல்லாம் போய்விடும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Feb 21, 2018 8:50 am

வேம்பின் மகிமை ( நேரிசை வெண்பா )
==========================================
வேம்பிற் கிணையுண்டோ வேறொரு பற்பசை
ஓம்புக நித்தம் ஒருவேளை - தேம்பாவாய்
கல்லையும் மெல்லக் கடித்துப் பொடியாக்கும்
பல்லைக் கொடுக்குமே பார் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
Guest
Guest

PostGuest Wed Feb 21, 2018 11:49 am

நன்றி ஐயா.கேட்டதை விட அதிகமாகவே அள்ளித் தந்திருக்கிறீர்கள்.சந்தேகம் பல.
வெண்பா என்றால் என்ன? அதற்கு ஏன் வெண்பா என பெயர் வைத்தார்கள்.
குறளையும் வெண்பா என்கிறார்களே.அப்படியானால் வெண்பாவில் எத்தனை வகை உண்டு.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Feb 21, 2018 12:21 pm

வெண்பா
 
குறள் வெண்பா
சிந்தியல் வெண்பா
நேரிசை வெண்பா
இன்னிசை வெண்பா
பஃறொடை வெண்பா
கலிவெண்பா

என்று பலவகைப்படும் .

வெண்பா = வெண் + பா என்று பிரிக்கலாம் . வெண்மை என்றால் தூய்மை .

எனவே வெண்பா என்றால் வெள்ளைப்பா என்றும் தூய்மையான பாட்டு என்றும் குறிப்பிடலாம் .
வெண்பா இலக்கணம் திருக்குறளுக்கும் பொருந்தும் . நான்கடிகளில் இருந்த வெண்பாவைச் சுருக்கி இரண்டடிகளாக்கிக் கவிதை உலகில் புதுமை செய்தவர் வள்ளுவர் .

வெண்பாவிற்கு உரிய ஓசை செப்பலோசை ஆகும் . ஒருவர் மற்றவர்க்குச் சொல்வதுபோல வெண்பா  இருப்பதால் , இதன் ஓசை செப்பலோசை ஆகும் . செப்பு என்றால் சொல்லு என்று பொருள் . தெலுங்கு மொழியிலும் செப்பு என்றால் சொல்லு என்று பொருள்படும் .

வெண்பா இலக்கணம் எளிது என்றாலும் , சிறிது கவனக் குறைவாக இருந்தால் , நம்மைக் கவிழ்த்துவிடும் . கிரிக்கெட் விளையாட்டை A Game of rules என்று குறிப்பிடுவார்கள் . அது வெண்பாவிற்கும் பொருந்தும் .இலக்கண விதிகள் நிரம்ப உண்டு . அவற்றையெல்லாம் பின்வரும் பதிவுகளில் பார்க்கலாம் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
Guest
Guest

PostGuest Wed Feb 21, 2018 7:37 pm

நன்றி ஐயா. கொஞ்சம் முரண்டு பிடிக்கிறது. ஈற்றடி என்றால் இறுதி-கடைசி அடியாக கொள்ளலாமா?

அடி என்றால் வரியாக கொள்ளலாமா? அப்படியானால் சீர் என்பது என்ன? முச்சீர் நாற்சீர் என்கிறார்களே! சீர் என்று நீங்கள் குறிப்பிட்டது என்ன? சீர் என்றால் ஒழுங்கான/சொல் என்று பொருள் அகராதியில் சொல்லப்படுகிறது.ஆனால் விக்கிபீடியாவில் சீர் என்றால் ஓரசைச்சீர்,ஈரசைச்சீர்,மூவசைச்சீர்,நாலசைச்சீர் என சொல்லப்படுகிறது.

வெண்பா நான்கு அடிகளை வரிகளை மட்டும் கொண்டதாக இருக்குமா? மேலே பஃறொடை  என சொல்லப்பட்டதே.அகராதியில் பஃறொடை என்பதற்கு பல அடிகள் என காட்டப்பட்டுள்ளது. அப்படியானால் பஃறொடை வெண்பாக்கள் என்றால் பல அடிகளைக் கொண்ட வெண்பாக்கள் என பொருள் கொள்ளலாமா?

பஃறொடை  க்கு பொருள் தேடியபோது, சவலை வெண்பா என ஒன்று காட்டப்பட்டுள்ளதே. அது என்ன? சவலை என்றால் அகராதிப்படி ஊனம் என பொருள் சொல்லப்படுகிறது.

சிந்தியலில் இன்னிசை,நேரிசை இருப்பது போல் மற்றைய வெண்பாக்களிலும் இன்னிசை,நேரிசை என உண்டா?

ஒரு சந்தேகம், தனிச்சொல் வருவது நேரிசை வெண்பா என்றால்,இரண்டு குறள் வெண்பாக்களை பொருத்தமான தனிச்சொல் சேர்த்து நான்கு அடிகளைக் கொண்ட நேரிசை வெண்பாவாக மாற்ற முடியுமா?

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Feb 21, 2018 11:40 pm

ஒவ்வொன்றாகப் பார்ப்போம் .

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா .

இது ஒரு நேரிசை வெண்பாவாகும் . ஈற்றடி என்பது இறுதியில் உள்ள அடியாகும் .
" சங்கத் தமிழ்மூன்றும் தா " என்பது ஈற்றடியாகும் . ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்கள் இருக்கும். இறுதி அடியில் மட்டும் மூன்று சீர்கள் இருக்கும் .

சீர் என்றால் ஒழுங்கு என்று பொருள் .ஒவ்வொரு சீரும் பல அசைகளால் ஆனது . உதாரணமாக
பாலும் என்ற சொல்லில் இரண்டு அசைகள் உள்ளன. " பா " ஒரு அசை " லும் " மற்றோர் அசை .
தெளிதேனும் என்ற சொல்லில் மூன்று அசைகள் உள்ளன. அதாவது தெளிதேனும் என்ற சொல்லைச் சொல்வதற்கு நாம் மூன்று முயற்சிகள் மேற்கொள்கிறோம் என்பது பொருள் .

இதுபோல வெண்பாவில் ஈரசைச் சீர் , மூவசைச் சீர் பயின்று வரும் . நாலசைச் சீர் வெண்பாவில் வராது . ஈரசைச் சீரை தேமா என்றும் , புளிமா என்றும் , கருவிளம் என்றும் கூவிளம் என்றும் சொல்வோம் . வெண்பாவில் பயின்று வரும் மூவசைச் சீர் காய்ச்சீர் மட்டுமே . அதாவது
தேமாங்காய் , புளிமாங்காய் , கருவிளங்காய் , கூவிளங்காய் என்பன. கனிச்சீர் வெண்பாவில் பயின்று வராது . மற்றவை பிறகு சொல்கிறேன் .

முதலில் குழப்பமாக இருந்தாலும் , சிறிது ஊன்றிப் படிக்கத் தொடங்கினால் யாப்பிலக்கணம் எளிமையே !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக