புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதிச்சநல்லூரில் வளர்ச்சியடைந்த பழந்தமிழர் நாகரீகம்: முடிவுறா தொல்லியல் ஆய்வுகள் Poll_c10ஆதிச்சநல்லூரில் வளர்ச்சியடைந்த பழந்தமிழர் நாகரீகம்: முடிவுறா தொல்லியல் ஆய்வுகள் Poll_m10ஆதிச்சநல்லூரில் வளர்ச்சியடைந்த பழந்தமிழர் நாகரீகம்: முடிவுறா தொல்லியல் ஆய்வுகள் Poll_c10 
30 Posts - 50%
heezulia
ஆதிச்சநல்லூரில் வளர்ச்சியடைந்த பழந்தமிழர் நாகரீகம்: முடிவுறா தொல்லியல் ஆய்வுகள் Poll_c10ஆதிச்சநல்லூரில் வளர்ச்சியடைந்த பழந்தமிழர் நாகரீகம்: முடிவுறா தொல்லியல் ஆய்வுகள் Poll_m10ஆதிச்சநல்லூரில் வளர்ச்சியடைந்த பழந்தமிழர் நாகரீகம்: முடிவுறா தொல்லியல் ஆய்வுகள் Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
ஆதிச்சநல்லூரில் வளர்ச்சியடைந்த பழந்தமிழர் நாகரீகம்: முடிவுறா தொல்லியல் ஆய்வுகள் Poll_c10ஆதிச்சநல்லூரில் வளர்ச்சியடைந்த பழந்தமிழர் நாகரீகம்: முடிவுறா தொல்லியல் ஆய்வுகள் Poll_m10ஆதிச்சநல்லூரில் வளர்ச்சியடைந்த பழந்தமிழர் நாகரீகம்: முடிவுறா தொல்லியல் ஆய்வுகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதிச்சநல்லூரில் வளர்ச்சியடைந்த பழந்தமிழர் நாகரீகம்: முடிவுறா தொல்லியல் ஆய்வுகள் Poll_c10ஆதிச்சநல்லூரில் வளர்ச்சியடைந்த பழந்தமிழர் நாகரீகம்: முடிவுறா தொல்லியல் ஆய்வுகள் Poll_m10ஆதிச்சநல்லூரில் வளர்ச்சியடைந்த பழந்தமிழர் நாகரீகம்: முடிவுறா தொல்லியல் ஆய்வுகள் Poll_c10 
72 Posts - 57%
heezulia
ஆதிச்சநல்லூரில் வளர்ச்சியடைந்த பழந்தமிழர் நாகரீகம்: முடிவுறா தொல்லியல் ஆய்வுகள் Poll_c10ஆதிச்சநல்லூரில் வளர்ச்சியடைந்த பழந்தமிழர் நாகரீகம்: முடிவுறா தொல்லியல் ஆய்வுகள் Poll_m10ஆதிச்சநல்லூரில் வளர்ச்சியடைந்த பழந்தமிழர் நாகரீகம்: முடிவுறா தொல்லியல் ஆய்வுகள் Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
ஆதிச்சநல்லூரில் வளர்ச்சியடைந்த பழந்தமிழர் நாகரீகம்: முடிவுறா தொல்லியல் ஆய்வுகள் Poll_c10ஆதிச்சநல்லூரில் வளர்ச்சியடைந்த பழந்தமிழர் நாகரீகம்: முடிவுறா தொல்லியல் ஆய்வுகள் Poll_m10ஆதிச்சநல்லூரில் வளர்ச்சியடைந்த பழந்தமிழர் நாகரீகம்: முடிவுறா தொல்லியல் ஆய்வுகள் Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
ஆதிச்சநல்லூரில் வளர்ச்சியடைந்த பழந்தமிழர் நாகரீகம்: முடிவுறா தொல்லியல் ஆய்வுகள் Poll_c10ஆதிச்சநல்லூரில் வளர்ச்சியடைந்த பழந்தமிழர் நாகரீகம்: முடிவுறா தொல்லியல் ஆய்வுகள் Poll_m10ஆதிச்சநல்லூரில் வளர்ச்சியடைந்த பழந்தமிழர் நாகரீகம்: முடிவுறா தொல்லியல் ஆய்வுகள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதிச்சநல்லூரில் வளர்ச்சியடைந்த பழந்தமிழர் நாகரீகம்: முடிவுறா தொல்லியல் ஆய்வுகள்


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 14, 2018 8:01 am

ஆதிச்சநல்லூரில் வளர்ச்சியடைந்த பழந்தமிழர் நாகரீகம்: முடிவுறா தொல்லியல் ஆய்வுகள் EeVhwfrT1GiI8HkwwNlq+1907527916169488183590022127095094njpg

தென் தமிழகத்தில் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில், ஸ்ரீவைகுண்டம் அருகே அமைந்துள்ளது ஆதிச்சநல்லூர். உலகின் பல நாகரீகங்களுக்கு முந்தையது என வர்ணிக்கப்படும் ஆதிச்சநல்லூர், 150 ஆண்டுகளாக உலகம் முழுவதும் உள்ள தொல்பொருள் அறிஞர்கள் மற்றும் மானுடவியலாளர்களின் ஆய்வுக்களமாக விளங்கி வருகிறது. அங்கு தோண்டி எடுக்கப்பட்ட எலும்புகள் மற்றும் கலைப்பொருட்கள் பழந்தமிழர் நாகரீகம் மிகவும் நுட்பமாகவும், தொன்மையாக  இருப்பதை எம்.கல்யாணராமன் பதிவு செய்துள்ளார்.


ஆதிச்சநல்லூரில் வளர்ச்சியடைந்த பழந்தமிழர் நாகரீகம்: முடிவுறா தொல்லியல் ஆய்வுகள் SwoB4U5CTDKYS91effC3+TH13-GROUNDZERO-KALYANjpg

ஆதிச்சநல்லூரில் பழங்கால இடுகாடு   -  ஷேக்மொய்தீன்


     
 
ஆதிச்சநல்லூரில் 2004 பிப்ரவரியில் நடந்த அகழ்வாய்வில் மிகப் பழமையான புதைப்பொருட்கள் கண்டுபிடிக்ககப்பட்டன. அதிலிருந்து தொல்குடி முதுமக்கள் தாழிகள், தொல்பொருள்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.


இங்கு, நடந்த பல கட்ட அகழ்வாய்வுகளுக்கு பின், கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருள்கள் சென்னையிலும், வெளிநாடுகளிலும் உள்ளன. இந்த ஆய்வுகள் குறித்து தொல்லியல்துறை சார்பில் முழுமையான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும் அங்கு சென்று வரும் ஆய்வாளர்கள் பலர் பல்வேறு தகவல்களையும் பதிவு செய்து வருகின்றனர்.





நன்றி
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 14, 2018 8:04 am

ஆதிச்சநல்லூரில் வளர்ச்சியடைந்த பழந்தமிழர் நாகரீகம்: முடிவுறா தொல்லியல் ஆய்வுகள் 3svksMmJR5SIppwNH7Rg+TH13-GROUNDZERO-KALYAN2jpg
ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பெண் தெய்வத்தின் உருவம்   -  படம்: ஜோதி ராமலிங்கம்
நாகரீகத்தின் முன்னோடி


பல நாகரீகங்களுக்கு முன்னோடியாக விளங்கிய நாகரிகம் ஆதிச்சநல்லூர் என கூறப்படுகிறது. இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் ‘மெசபடோமியா’ பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடுகளை ஒத்துள்ளதாகவும் சில ஆய்வுகள் கூறுகிறது.


இங்கு எடுக்கப்பட்ட பித்தளையால் ஆன பெண் தெய்வத்தின் உருவம் சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதில் அந்த பெண் தெய்வத்தின் உடல் கூறுகளில் இருந்து ஓட்டியானம் எடுக்கப்பட்டது.


இது மிகவும் நேர்த்தியான அணிகலனாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த பெண் திருநெல்வேலி பகுதியில் பாரம்பரிய அமைப்புடன் இருப்பதை பார்க்க முடிகிறது. அந்த உருவத்தின் செழிமையை வைத்து அக்கால நாகரீக மக்களின் செழிப்பான வாழ்வை அறிய முடிகிறது என்கிறார் ஓய்வுபெற்ற மானுடவியல் ஆய்வுத்துறை அறிஞர் மகேஸ்வரன். இதுமட்டுமின்றி ஆதிச்சநல்லூரில் பனை ஓலை வடிவில் பித்தளை பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது, கிமு 1,500 ஆண்களுக்கு முந்தையது என்கிறார் தொல்லியல் அறிஞரும், தொல்லியல் துறை முன்னாள் கண்காணிப்பாளருமான சத்தியமூர்த்தி.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 14, 2018 8:06 am

ஆதிச்சநல்லூரில் வளர்ச்சியடைந்த பழந்தமிழர் நாகரீகம்: முடிவுறா தொல்லியல் ஆய்வுகள் IXYoMREHQRuzptEl23xs+TH13-GROUNDZERO-KALYAN3jpg

ஆதச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட நெற்றியில் சூட்டும் தங்க ஆபரணம்- எழும்பூர் அருங்காட்சியகம்   -  படம்: ஜோதி ராமலிங்கம்


 
 


சங்க காலம்


ஆதிச்சநல்லூரில் மொத்தம் நான்கு கட்ட ஆய்வுகள் நடந்துள்ளன. ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் பி்ன்னர் இந்தியர்களும் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய நூற்றுக்கணக்கான முதுமக்கள் தாழி, எலும்பு கூடுகள், இரும்பு மற்றும் பித்தளை பொருட்கள், கலைப்பொருட்கள், ஆயுதங்கள், தங்க ஆபரணங்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. இவை அனைத்தும் தற்போது சென்னை, கொல்கத்தா மற்றும் பெர்லின், பாரிஸ் நகரங்களில் உள்ளன.


இவை அனைத்தையும் மீண்டும் ஆதிச்சநல்லூரக்கு கொண்டு வந்து அங்கு சமீபத்தில் கட்டப்பட்ட அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. வரலாற்றிஞர்கள் மட்டுமின்றி, தமிழ் ஆர்வலர்கள், திராவிட இயக்க ஆதரவாளர்கள் ஆகியோர் இந்த கோரிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.


குறிப்பாக சிவகங்கை மாவட்டம் கீழடி ஆய்வுக்கு பின் இந்த கோரிக்கை வலுத்து வருகிறது. கீழடியில் தமிழர் நாகரீகத்திற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதை போலவே, ஆதிச்சநல்லூர் ஆராய்ச்சியை தொடர்வதன் மூலம் தமிழர்களின் பழங்கால நாகரீகத்தின் தொன்மங்கள் வெளியாகும் என அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இந்த பழந்தமிழர் நாகரீகம் என்பது வேத நாகரீக வரலாற்றுக்கு மாற்றாக, சாதி பிரிவினையற்ற தமிழர் சமூகம் இருந்ததை நிலை நிறுத்தும் என தமிழக அரசின் தமிழ் சொல்லிலக்கண அதிகார திட்ட இயக்குநர் மதிவாணன் போன்றார் வலியுறுத்துகின்றனர்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 14, 2018 8:07 am

ஆப்பிரிக்க தொடர்பு


இங்கு கண்டெடுககப்பட்ட எலும்புகள் குறித்த முழுமையான ஆய்வுகள் நடைபெறவில்லை. எனினும் இந்த முக தாடைகள், தென் தமிழக மக்களை விடவும், ஆந்திரரேலிய மற்றும் ஆப்ரிக்க கறுப்பினத்தை ஒட்டியாக கூறப்படுகிறது. முக எலும்புகளில் கண் குழிகள் போன்றவை கிழக்கு ஆப்ரிக்க மக்களை ஒத்துப்போவதாகவும், அதுபோலவே நெற்றியும் வெளிநாட்டைச் சேர்தவர்களுடன் ஒத்துபோவதாகவும் சில மானுடவியலாளர்கள் கூறுகின்றனர்.


ஆனால் இவை 3,000 முதல் 4,000 ஆண்டுகள் தொன்மையானவை என்பது உறுதி செய்யப்படுகிறது. சிந்து சமவளியில் ஆய்வு நடத்திய பலர் அவர்களின் உடல் அமைப்பு ரீதியாக அவர்கள் திராவிட நாகரீகத்தை சேர்ந்தவர்கள் எனக் கூறினர். ஆனால், ஆதிச்சநல்லூரில் இந்த தொடர்புகள் இதுவரை கிடைக்கவில்லை.


  
வெளிநாட்டினருக்கு என்ன வேலை?


ஆனால் பி.ராகவன் போன்ற மானுடவியல் ஆய்வாளர்கள் இந்த கூற்றை திட்டவட்டமாக மறுக்கின்றனர். இவை கிபி 500 ஆண்டுக்கு முந்தையது என்றும், தமிழர் நாகரீகத்துடன் தொடர்புடையது என்றும் கூறுகின்றனர். அங்கு கண்கெடுக்கப்பட்ட சில எலும்புகள் வெளிநாட்டினரின் தோற்றத்துடன் ஒத்துப்போகிறது என்றால் அவர்கள் வெளிநாட்டினராக தான் இருக்க வேண்டும் என்கின்றனர். ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், ஆதிச்சநல்லூரில் வெளிநாட்டினருக்கு என்ன வேலை? என்ற கேள்வியும் முன் வைக்கப்படுகிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 14, 2018 8:10 am

ஆதிச்சநல்லூரில் வளர்ச்சியடைந்த பழந்தமிழர் நாகரீகம்: முடிவுறா தொல்லியல் ஆய்வுகள் RkLbdOqRQu6cRdQms305+TH13ThoothkudiMAPcoljpg
ஆனால், ஆதிச்சநல்லூரில் 2004 -2005ம் ஆண்டுகளில் நடந்த ஆய்வுகளின் படி, அவை இரும்பு காலத்தின் இடுகாடாக இருக்காலம். அங்கு பழங்கால மக்கள் வசித்துள்ளனர் என்பதை மட்டுமே உறுதி செய்ய முடிவதாக வேறு சில அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் இங்கு பழங்காலத்தின் சுரங்கம் மற்றும் உலோக மாதிரிகள் இங்கிருந்து கிடைக்கப்பட்டதாக 2010ம் ஆண்டு வெளியான ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அதேசமயம் அருகில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியிலும் உலோக பொருட்கள் கிடைத்துள்ளதையும் பலர் சுட்டிக்காட்டுகின்றனர்.


எனினும் ஆதிச்சநல்லூரில் முடிவுறாத ஆய்வுகள் இன்னமும் இருக்கின்றன. அவற்றை வெளிக்கொணர வேண்டும் அப்போது மட்டுமே ஆதிச்சநல்லூர் மட்டுமின்றி பழந்தமிழர் நாகரீகத்தையும் உறுதிப்படுத்த முடியும்.

நன்றி
தி இந்து

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jan 14, 2018 3:49 pm

ஆதிச்சநல்லூரில் வளர்ச்சியடைந்த பழந்தமிழர் நாகரீகம்: முடிவுறா தொல்லியல் ஆய்வுகள் 3838410834 ஆதிச்சநல்லூரில் வளர்ச்சியடைந்த பழந்தமிழர் நாகரீகம்: முடிவுறா தொல்லியல் ஆய்வுகள் 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 14, 2018 6:51 pm

Dr.S.Soundarapandian wrote:ஆதிச்சநல்லூரில் வளர்ச்சியடைந்த பழந்தமிழர் நாகரீகம்: முடிவுறா தொல்லியல் ஆய்வுகள் 3838410834 ஆதிச்சநல்லூரில் வளர்ச்சியடைந்த பழந்தமிழர் நாகரீகம்: முடிவுறா தொல்லியல் ஆய்வுகள் 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1256769
நன்றி


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக