புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்ணாந்து பார்த்தால் ஆயிரம் ஆச்சர்யம் நெருப்பில்லாமல் புகையும் அதிரப்பள்ளி! Poll_c10அண்ணாந்து பார்த்தால் ஆயிரம் ஆச்சர்யம் நெருப்பில்லாமல் புகையும் அதிரப்பள்ளி! Poll_m10அண்ணாந்து பார்த்தால் ஆயிரம் ஆச்சர்யம் நெருப்பில்லாமல் புகையும் அதிரப்பள்ளி! Poll_c10 
68 Posts - 53%
heezulia

47 Posts - 36%
T.N.Balasubramanian

7 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
PriyadharsiniP
அண்ணாந்து பார்த்தால் ஆயிரம் ஆச்சர்யம் நெருப்பில்லாமல் புகையும் அதிரப்பள்ளி! Poll_c10அண்ணாந்து பார்த்தால் ஆயிரம் ஆச்சர்யம் நெருப்பில்லாமல் புகையும் அதிரப்பள்ளி! Poll_m10அண்ணாந்து பார்த்தால் ஆயிரம் ஆச்சர்யம் நெருப்பில்லாமல் புகையும் அதிரப்பள்ளி! Poll_c10 
1 Post - 1%
Guna.D

Shivanya

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 47%

210 Posts - 40%

20 Posts - 4%

15 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
Jenila

4 Posts - 1%
jairam

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணாந்து பார்த்தால் ஆயிரம் ஆச்சர்யம் நெருப்பில்லாமல் புகையும் அதிரப்பள்ளி!

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 31, 2017 10:39 am

அண்ணாந்து பார்த்தால் ஆயிரம் ஆச்சர்யம் நெருப்பில்லாமல் புகையும் அதிரப்பள்ளி! TueIIDBSNOPhSaC2jAC1+382bf9ced77a7901b2aa7c1314155740

Third party image reference
புரூஸ்லினா அடிக்கணும்; கமல்னா நடிக்கணும்; பாம்னா வெடிக்கணும்; காதலினா அணைக்கணும்; அருவினா..... குளிக்கணும்! ஆனால், ஓர் அருவி மட்டும் இதுக்குச் சரிப்பட்டு வராது. அது - அதிரப்பள்ளி. (Athirappally) "அப்புறம் என்னாத்துக்கு அங்க போகணும்" என்று இந்தக் கட்டுரையை முழுதாகப் படித்த பிறகும் உங்களுக்குத் தோன்றினால், உங்களுக்கு கவுன்சலிங் தேவை. கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் சாலக்குடி எனும் இடத்தில் உள்ள அதிரப்பள்ளியில், சுனாமியில் ஸ்விம்மிங் போடுறவங்களாலகூட குளிக்க முடியாது என்பதுதான் ஸ்பெஷல். ஆனால், தினசரி அதிரப்பள்ளிக்கு வருபவர்களின் எண்ணிக்கை, நம் தமிழ்நாடு டாஸ்மாக் வாடிக்கையாளர்களைவிட அதிகம்.

"நீங்க வந்தா மட்டும் போதும்" என்று சொல்லும் 'சிவாஜி' ரஜினிபோல், 'பார்த்தா மட்டும் போதும்' எனும் மயக்க நிலைக்கு நம்மைத் தள்ளுவது அதிரப்பள்ளி அருவியின் அம்சம். 'நெருப்பில்லாமல் புகைகிறது அருவி' என்று வைரமுத்து ஒரு கவிதை பாடியது, அதிரப்பள்ளிக்குப் பொருந்தும். வெள்ளையாகப் புகையும் அருவி மட்டும் இதற்குக் காரணமில்லை; அதிரப்பள்ளிக்குச் செல்லும் அதிரிபுதிரி ரூட்டும் ஒரு காரணம். 'பில்ட்-அப்பை விட்டுட்டு ரூட்டைச் சொல்லுய்யா' என்று பேட் வேர்ட்ஸில் நீங்கள் திட்டுவது கேட்கிறது. 

சில காட்டு வழிகள் போல் ஒன்வே இல்லை. அதிரப்பள்ளிக்கு சில பல ரூட்கள் வெவ்வேறு திசையிலிருந்து இருக்கின்றன. கொச்சியிலிருந்து ஒரு பாதை உண்டு. இது 72 கி.மீ. எர்ணாகுளத்திலிருந்து கேரள நெடுஞ்சாலையில் அங்கமாலி தாண்டி வலதுபுறம் அதிரப்பள்ளிக்குச் செல்ல ஓர் அருமையான ரூட் இருக்கிறது. கேரளா போய்த்தான் ஆக வேண்டும் என்று அவசியமில்லை; தமிழ்நாட்டிலிருந்து பொள்ளாச்சி, வால்பாறை, சோலையார் வழியாகவும் அதிரப்பள்ளிக்கு ஒரு க்ளீஷேவான ரூட் இருக்கிறது. நான் இதைத்தான் தேர்ந்தெடுத்திருந்தேன். 
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 31, 2017 10:41 am

பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை வழியாக அதிரப்பள்ளி போவதுதான் என் திட்டம். அதிரப்பள்ளியின் அழகைப் பற்றி ஏற்கெனவே பல கவிஞர்கள் வர்ணித்துத் தள்ளியிருந்ததை பல பிளாக்குகளில் வாசித்தது நினைவுக்கு வந்தது. 'Stop Wishing; Start Doing' என்று எனக்கு நானே வெறியேற்றிவிட்டுக் கிளம்பினேன். காலையில் ஆழியாரில் குரங்குகளோடு குரங்காய் ஒரு செல்ஃபி. அப்படியே ஆழியார் செக்போஸ்ட்டில் நுழைந்தபோது, வழக்கம்போல காரை சும்மானாச்சுக்கும் செக்கிங் பண்ணினார்கள். எதுவும் சிக்கவில்லை. 'எங்க? எதுக்கு? என்னைக்கு ரிட்டர்ன்? இதுக்கு முன்னாடி வந்திருக்கீங்களா? வேற யாரும் இல்லையா? கேமரா இருக்கா?' என்று மனைவியைவிடக் கேள்வி கேட்டார்கள். இங்கே 4 மணி வரைதான் என்ட்ரிக்கான அனுமதி கிடைக்கும். பெண்கள், குழந்தைகள் என ஃபேமிலியாக வந்தவர்களுக்கு மட்டும் செக்கிங் கிடையாது. ஆனால் மனைவியுடன் மட்டும் வந்தால், திருமண சர்ட்டிஃபிகேட்டெல்லாம் கேட்பார்கள் போல! தமிழ்நாடு ஃபாரஸ்ட் டூரிஸம் கடமை வியக்க வைத்தது.
[size=31]அண்ணாந்து பார்த்தால் ஆயிரம் ஆச்சர்யம் நெருப்பில்லாமல் புகையும் அதிரப்பள்ளி! FSUM0FQgRlybDLDfYKOw+ecbfea55e1546259589e142756c4d943
[/size]

Third party image reference
 
அதிகபட்சம் மாலை 4.30-க்குள் ஆழியார் செக்போஸ்ட்டில் கையெழுத்திடுவதுபோல் பார்த்துக்கொள்ளுங்கள். போகும் வழியிலேயே இடதுபுறம் அருமையான ஒரு வியூ பாயின்ட்டில் யானைகள் கும்பலாக மேய்ந்துகொண்டிருந்தன. ஒரு படத்தில் ஓப்பனிங் சாங்கே நம்மை உற்சாகமாக்கிவிட்டால், மொத்தப் படத்தையும் பார்க்க ஆர்வமாகி விடுவோமே... அதுபோல் அதிரப்பள்ளி டூர் இன்னும் வெறியேற்றியது. குழந்தைகள் கார்ட்டூனை ரசித்துப் பார்ப்பதுபோல், யானையார்களைத் தூரத்திலிருந்து பார்ப்பது செம ஃபன்னாக இருந்தது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 31, 2017 10:42 am

சிலருக்கு மலைப் பாதையில் காரில் செல்லும்போது தலைச்சுற்றல், வாந்தி, கூடவே பேதி எல்லாமே வான்டட் ஆக வண்டி ஏறும். இதற்கு 'Motion Sickness' என்று பெயர். கார் நகரும்போது தெரியும் காட்சிகளை பேலன்ஸ் செய்ய முடியாமல் மூளை திணறுவதுதான் 'மோஷன் சிக்னெஸ்'. இதற்கு ஒரு சரியான தீர்வு இருக்கிறது. டிரைவருக்குப் பக்கத்துச் சீட்டில் அமர்ந்து, பக்கவாட்டில் வேடிக்கை பார்க்காமல் நேராக ரோட்டைப் பார்த்தபடி பயணித்தால்... வாந்திக்கு வாய்ப்பிருக்காது. காரில் இருக்கும் ரப்பர், லெதர் வாசனையும் இன்னொரு காரணம். மலையில் செல்லும்போது, ஏ.சி போடாமல் கதவைத் திறந்துவிட்டு காட்டின் வாசனையை நுகர்வதுகூட நல்ல தீர்வு தரும்.

மலையேறும்போது, வாந்திக்கு இறங்குகிறீர்களோ இல்லையோ, குரங்கு அருவியில் இறங்கிக் குதூகலிக்க மறக்காதீர்கள். குரங்கு அருவியில் குளிக்க 30 ரூபாய் கட்டணம். இதில்கூட ஒரு ட்ரிக்கைக் கையாள்கிறது தமிழ்நாடு டூரிஸம். எப்படியென்றால், கீழே செக்போஸ்ட்டிலேயே குரங்கருவிக்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என்பதுதான் ரூல். உள்ளூர்க்காரனுக்குத்தானே ஊருணியின் ஆழம் தெரியும். என்போன்ற வெளியூர்வாசிகளுக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. குரங்கு அருவிக்குத் தாவிச்சென்ற என்னை மடக்கிப் பிடித்தனர் செக்யூரிட்டிகள். 

''சார், டிக்கெட்டு?''

''எவ்வளவு? இந்தாங்க... டிக்கெட் குடுங்க!''

''கீழேதான் எடுக்கணும் சார்.''

''எனக்குத் தெரியாதே.. யாரும் சொல்லவே இல்லையே!''

''கீழே போர்டு போட்டிருக்குமே.. பார்க்கலையா? போய் டிக்கெட் எடுத்துட்டு வந்துடுங்க!''

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 31, 2017 10:44 am

திரும்பவும் அரைமணி நேரம் கீழே இறங்கிப் போய் எடுத்துட்டு வரணுமா?''

''உங்க கஷ்டம் புரியுது. 50 ரூபாய் குடுங்க.. உள்ளே போய் ஜாலியா குளிச்சுட்டு வாங்க! அப்புறம், காரை லாக் பண்ணிடுங்க! குரங்குங்க தொல்லை அதிகம்!''

இப்படிப்பட்ட ஆஃபரை அறிவித்து, 'படித்துறை பாண்டி'போல் கலெக்ஷன் பண்ணிக் கொண்டிருந்தார்கள். 'போர்டுல எழுதியிருக்கே... பார்க்கலையா' என்று அந்த செக்யூரிட்டி சொன்னதை நினைவுபடுத்தி, டூர் முடியும்போது பார்த்தேன். நாளிதழ்களில் 'Classifieds' பகுதிக்கு விளம்பரம் கொடுப்பதுபோல் தேடித் தேடிப் படித்தேன். கிட்டப் பார்வை, தூரப் பார்வை எதுவும் இல்லாத எனக்கே படிப்பதற்குக் கஷ்டமாக இருந்தது. இந்த 50 ரூபாய் சிக்கல், குரங்கு அருவி அமைந்திருக்கும் அழகைப் பார்த்தால் மறந்து போகிறது. பைக்கின் டூயல் எக்ஸாஸ்ட்போல், இரண்டாக ஸ்ப்ளிட் ஆகி விழுகிறது குரங்கு அருவி. இலியானா இடுப்புபோல் ஸ்லிம் அண்ட் ஸ்லீக்காக ஒரு பக்கம் விழுந்து கொண்டிருந்த அருவியில் தலை கொடுத்தேன். குரங்கருவிக் குளியல் கிறங்கடித்தது. 
[size=31]அண்ணாந்து பார்த்தால் ஆயிரம் ஆச்சர்யம் நெருப்பில்லாமல் புகையும் அதிரப்பள்ளி! APT5tsQTeaRtKYU0ayMV+0e00ba24dfe058dd0082c55fc842fe09
[/size]

Third party image reference
 
40 கொண்டை ஊசிகள். ஏதோ ஒரு கொண்டை ஊசி வளைவில் நின்று கீழே பார்த்தேன். அழகாக வளைந்து அம்சமாக ரயில் பூச்சி போல் நெளிந்திருந்தது பாதை. வழிநெடுக வரையாடுகள், சாலையில் லஞ்ச் சாப்பிட்டுக் கொண்டிருந்தன. வால்பாறையில் சிறுத்தைகள் அதிகம் என்றார்கள். அதைவிட யானைகள் அதிகம் என்றார்கள். தேயிலைத் தோட்டத்தில் மூன்று பெண்களை மிதித்து அழிச்சாட்டியம் பண்ணிய யானைகளைப் பற்றிய நியூஸ் ஒன்றைப் படித்த ஞாபகம் வந்து 'டர்' அடித்தது. "ஆனையைப் பார்த்தா வயித்த நிரப்ப முடியாதே தம்பி" என்றார் ஒரு தேயிலை தேவதை.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 31, 2017 10:47 am

வால்பாறையில் ஸ்டே. இங்கே குட்டிக் குட்டி காட்டேஜ்கள், 700-ல் இருந்து 1,500 வரை செம சீப் அண்ட் பெஸ்ட்டாகக் கிடைக்கின்றன. சாதாரண வீட்டை காட்டேஜ்களாக மாற்றி வாடகைக்கு விடுகிறார்கள். கையைக் கடிக்காத விலையில் என்போன்ற 'யூத்!(!)'களுக்கு வால்பாறை ஒரு வரப்பிரசாதம்தான். என் நண்பன் ஒருவன், 7 பேர் கொண்ட கும்பலுக்கு ஒரு நாளைக்கு 500 ரூபாய்க்குத் தங்கிய கதையெல்லாம் சொல்லி வெறுப்பேற்றியிருக்கிறான். வால்பாறையில் இரண்டு நாள் தங்கி சுற்றிப் பார்க்க எக்கச்சக்க இடங்கள் உண்டு. பாலாஜி கோயில், எரச்சிப்பாறை நீர்வீழ்ச்சி, சின்னக் கல்லார் அணை, நீரார் அணை, வெள்ளை மலை, சோலையார் அணை, மயிலாடும் பாறை, சூஸைடு பாயின்ட், நல்லமுடி பூஞ்சோலை, கூழாங்கல் ஆறு, அக்காமலை புல்வெளி என்று எத்தனை இடங்கள்! டாக்ஸி பிடித்தீர்கள் என்றால், ஒரு நாளைக்கு 1,500 ரூபாய் கட்டணம் கேட்கிறார்கள். இரண்டு நாள் கவரேஜில் மொத்தத்தையும் என்ஜாய் பண்ணலாம். 

[size=31]அண்ணாந்து பார்த்தால் ஆயிரம் ஆச்சர்யம் நெருப்பில்லாமல் புகையும் அதிரப்பள்ளி! DYQzKYURlglcC7hUBsQ2+853c300a5a5678fa539621718f7e6fa3
[/size]

Third party image reference
 
வால்பாறைக்கு ஒரு சேப்டர் எல்லாம் போதாது. என் டார்கெட் இப்போது, அதிரப்பள்ளி மட்டுமே! 'இன்னொரு நாள் உன்னை வெச்சுக்குறேன்' என்று வால்பாறைக்கு 'Vengeance' வைத்துவிட்டுக் கிளம்பினேன். சோலையார் அணை வழியாகத்தான் அதிரப்பள்ளிக்குப் போக வேண்டும். மொத்தம் 85 கி.மீ. மூன்றரை மணி நேரம் ஆகும். வழியில் எங்காவது ரிலாக்ஸுக்கு இறங்கினீர்கள் என்றால், காரில் ஏறும்போது செக் செய்துவிட்டு காரைக் கிளப்புங்கள். அட்டைப் பூச்சி இருக்கலாம். போகும்போது 'நார்னியா' படத்தில் வரும் 'Beaver' போன்ற குட்டி விலங்கு பார்த்தேன். செம அழகு.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 31, 2017 10:49 am

சோலையார் அணை தாண்டி 7 கி.மீ-ல் ஒரு டிஃபன் கடை தெரிந்தது. இட்லி பார்சல் வாங்கிக் கொண்டேன். கேரளா செக்போஸ்ட்டில், ''பிளாஸ்டிக்குக்கு என்ட்ரி தரில்லா'' என்று கவரோடு இட்லியைப் பிடுங்கிக் கொண்டார்கள். வேட்புமனு நிராகரிக்கப்பட்ட விஷால் போல் அவமானமாக இருந்தது. கேரளாவில் பிளாஸ்டிக் கவர்கள், வாட்டர் பாட்டில்கள் எல்லாவற்றுக்கும் தடை. அதையும் மீறிக் கொண்டுபோனால், அடுத்த செக்போஸ்ட்டில் இதே ஐட்டங்களைக் காண்பிக்க வேண்டும். 

 அண்ணாந்து பார்த்தால் ஆயிரம் ஆச்சர்யம் நெருப்பில்லாமல் புகையும் அதிரப்பள்ளி! RrraaejtQwCQqVL0587B+34fac69b45b02bc4cc26bc70fb354f4a

Third party image reference
வால்பாறையில் இருந்து பார்க்க வேண்டிய இடங்கள்.. க்ளிக் செய்க...

இங்கே 6 மணி முதல் மாலை 4 மணி வரைதான் அனுமதி. "காரிலின்னு பொறத்தே இறங்காருதே.... மிருகங்கள்னு ஆகாரம் கொடுக்காருதே..." என்று ரசீதில் நேரம் போட்டுத்தான் அனுப்புகிறார்கள். 50 கி.மீ. பயணம். அதிகபட்சம் இரண்டரை மணி நேரம். அதற்குள் வளச்சல் செக்போஸ்ட்டில் கையெழுத்துப் போட வேண்டும். 2 மணி நேரத்தைக் கடத்திவிட்டு மொக்கையாக 2,000 காரணங்கள் சொன்னாலும், பல்க்காக 2,000 ரூபாய் அபராதம் கட்ட நேரிடலாம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 31, 2017 10:50 am

அதிரப்பள்ளி சாலை அத்தனை அற்புதமாக இருந்தது. திடீரென இரு பக்கமும் பசுமை, மொட்டையாக வந்த காடு, சரேலென உயர்ந்து நின்ற மரங்கள், திடும்மென மேடு, ஷார்ப் பெண்டுகள், ஊழல் இல்லாமல் கட்டப்பட்ட அச்சமுறுத்தும் பாலங்கள் என்று கமல் போல் எத்தனை கெட்-அப்! சில நேரங்களில் சூரிய வெளிச்சம்கூட விழவில்லை. நான் சாலையின் இருபக்கமும் பார்த்துக் கொண்டே காரோட்டினேன். அதிரப்பள்ளி சாலையில் அனிமல்ஸ் பார்க்க விரும்புபவர்கள் - செக்போஸ்ட் கேட்டைத் திறந்ததும், அதாவது 6 மணிக்குக் கிளம்புங்கள். அல்லது மாலை 4 மணி.

பட்டப்பகலில் அனிமல்ஸ் எல்லாம் ஊருக்குள் போயிடுதுங்க போல! குணச்சித்திர நடிகர்கள் மாதிரி எப்போதாவது சாலையில் ஹாய் சொன்ன மந்திகள், மான்கள், அணில்கள் பார்த்தேன். வால்பாறையோடு சரி; யானைகள் எல்லாம் யு-டர்ன் அடித்து டாப்ஸ்லிப் பக்கம் போயிருக்கலாம். நான் யானை நினைப்பாகவே பயணித்தேன். 'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்பதுபோல், எனக்குக் கறுப்பாக எதைப் பார்த்தாலும் யானையாகவே தெரிந்தது. சில பைக் ரைடர்கள் மென்மையாகக் குத்திய பனிக்காற்றை முகத்தில் வாங்கியபடி ஜாலி ரைடு போனார்கள். காரில் காட்டில் பயணம் போகும்போது இளையராஜா, ஏஆர் போன்ற மேதைகளுக்கு லீவு விட்டு விடுங்கள். காட்டுக்கென்று ஓர் இசை இருக்கிறது. கதவைத் திறந்து விட்டால் 100 இளையராஜா, 50 ஏஆர் ரஹ்மான்களுக்கு இணையாக இசை கேட்கிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 31, 2017 10:52 am

அண்ணாந்து பார்த்தால் ஆயிரம் ஆச்சர்யம் நெருப்பில்லாமல் புகையும் அதிரப்பள்ளி! 0J6uEf5NRHadGQsj7yWq+faf544ed15ead5322ec4e6bfdbb56ea6

Third party image reference
வால்பாறையில் இருந்து பார்க்க வேண்டிய இடங்கள்.. க்ளிக் செய்க...

வளச்சல் செக்போஸ்ட்டில், சரியான நேரத்துக்குள் ஜாமீன் வாங்கிய கைதிபோல் சைன் போட்டேன். அதிரப்பள்ளி அருவிக்கும் சேர்த்து இங்கேயே டிக்கெட் எடுத்துக்கொள்ளச் சொன்னார்கள். (வால்பாறை டூரிஸம்... நோட் பண்ணுங்க!) கடைகளில் விழாக்காலங்களில் ஆஃபர் தருவதுபோல் அதிரப்பள்ளிக்கு ஆஃபர் என்று இந்த வளச்சல் அருவியை வைத்துக் கொள்ளலாம். உள்ளே குழந்தைகளுக்கான பார்க்கில், குழந்தைகள் தெளிந்த நீரோடைபோல் விளையாடிக் கொண்டிருந்தார்கள். உயிரோட்டமாக இருந்தது. அதைத் தாண்டினால், ஒரு நிஜ நீரோடை. அதைவிட உயிரோட்டமாக இருந்தது. இதுதான் வளச்சல் என்றார்கள். அருவி என்றால், இதிலாவது குளிக்கலாம் என்று நினைத்தேன். குட்டி சுனாமி மாதிரி 'குய்'யென்ற சத்தத்துடன் வழிந்தோடிக்கொண்டிருந்தது வளச்சல். இந்த வளச்சல் பகுதிதான் வன விலங்குகள் வளமையாக வாழ வழி வகுக்கிறது என்றார்கள். கால்கூட நனைக்க முடியாதபடி பாதுகாப்பு வளையம் போட்டிருந்தார்கள். செல்ஃபிக்கள் மட்டும் எடுத்துக்கொண்டேன்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 31, 2017 10:55 am

அண்ணாந்து பார்த்தால் ஆயிரம் ஆச்சர்யம் நெருப்பில்லாமல் புகையும் அதிரப்பள்ளி! RwIkm5TrQ62u9ZBjtl32+e69aa965cc8d58b3d06d1289396a879a

Third party image reference
வால்பாறையில் இருந்து பார்க்க வேண்டிய இடங்கள்.. க்ளிக் செய்க...

மறுபடியும் காட்டுப் பயணம். இந்த முறை யானை பார்த்தே விட்டேன். ATM மெஷினில் பணம் எண்ணும் சத்தம் கேட்கும்போது ஒரு சந்தோஷம் வருமே... யானைகள் கிளையை முறிக்கும் சத்தம் எனக்கு அதற்கு இணையாக இருந்தது. தேங்க்ஸ் டு அதிரப்பள்ளி.

[size=31]அண்ணாந்து பார்த்தால் ஆயிரம் ஆச்சர்யம் நெருப்பில்லாமல் புகையும் அதிரப்பள்ளி! G9tip63hSVSQ7FzhOWeU+d178c6374d79c132ab4d628dd31f314b
[/size]

Third party image reference
வால்பாறையில் இருந்து பார்க்க வேண்டிய இடங்கள்.. க்ளிக் செய்க...

திடீரென வாகன இரைச்சலும், மனித நடமாட்டமும் தெரிந்தது. அதிரப்பள்ளி வந்துவிட்டதற்கான அறிகுறி. அதிரப்பள்ளியில் பார்க்கிங் இடத்துக்குப் பஞ்சமே இல்லை. கக்கத்தில் தோல் பையைச் செருகிக்கொண்டு, நாக்கைத் தடவி எச்சில் டிக்கெட் கிழித்துக் கொடுக்கும் எந்த அண்ணாச்சிகளும் இங்கே இல்லை. கிட்டத்தட்ட கி.மீ கணக்கில் காடு முழுக்க நெடுஞ்சாண்கிடையாக கார்களை பார்க் பண்ணியிருந்தார்கள். குழந்தைகளுக்குத் தலையைத் துவட்டும் தாய்மார்கள், ஈர உடம்பில் தங்கள் குல்ஃபிகளோடு செல்ஃபி எடுத்த காதலன்கள், கட்டுச்சோற்றைப் பிரித்து நம் நாக்கில் எச்சில் ஊறவைத்த கூட்டுக் குடும்பம் - எல்லாமே 'சொல்வனம்' கவிதைப் பகுதிக்கான விஷுவல்ஸ்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 31, 2017 10:56 am

ஹோ'வென பேரிரைச்சல். அதிரப்பள்ளிதான் அலறியது. காரிலிருந்தே மரங்களின் கிளைகளினூடே அதிரப்பள்ளியின் அழகைப் பார்த்தேன். நெருப்பே இல்லாமல் புகைந்து கொண்டிருந்தது அதிரப்பள்ளி. சுற்றிலும் வெள்ளைப் புகைமூட்டமாய் 'திக்' என்று மனதுக்குள் அதிர்ந்தது. ஆனாலும் 'எப்படா போவோம்' என்றிருந்தது. வீக் எண்ட் என்பதால், திமுதிமுவெனக் கூட்டம். அருவிக்குப் பக்கத்தில் யாரையும் விடாமல் கயிறு கட்டி அத்தனை பாதுகாப்பாய் வைத்திருந்தார்கள் அதிரப்பள்ளியை. ஒரு வகையில் நமக்கும் இதுதான் பாதுகாப்பு. 

கயிற்றையொட்டி நின்று அதிரப்பள்ளியை ரசித்தேன். இயற்கையின் பிரம்மாண்டம் குளிர்ச்சியோடு செல்லமாய் முகத்தில் அறைந்தது. சரிதான்; குளிக்கவெல்லாம் தேவையில்லை. சும்மா நின்றாலே, மூஞ்சியில் உடம்பில் மனதில் உடையில் சாரல் அடித்து நனைத்து விடுகிறது. டிரெஸ் சேஞ்ஜ் பண்ணியே ஆக வேண்டும்போல! ஏதோ ஸ்பா ட்ரீட்மென்ட் எடுத்ததுபோல் இருந்தது. எதுவுமே அனுபவிக்காத வரைதான் அதன் மீது ஆர்வம் இருக்கும் என்பது சரிதான். அதேநேரம், குளிப்பதற்கு இங்கே வேறு ஒரு ஆப்ஷன் இருந்ததை அப்போதுதான் நான் உணர்ந்தேன். இடது ஓரம் கெட்டிக் கிடந்த நீரோடையில், குடும்பம் குடும்பமாய்க் குளித்துக் கொண்டிருந்தார்கள். ஆற்றுக்குள் மீன்கள் 'கிச்சு கிச்சு' மூட்டின. தண்ணீர் கம்மியாக இருப்பதால், குழந்தைகள்கூட கும்மியடித்துக் குளித்து என்ஜாய் பண்ணினார்கள்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக