புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_c10 
25 Posts - 39%
heezulia
திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_c10 
4 Posts - 6%
Raji@123
திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_c10 
1 Post - 2%
Barushree
திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_c10 
1 Post - 2%
M. Priya
திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_c10 
7 Posts - 2%
prajai
திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 10 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைப் பிரபலங்கள்


   
   

Page 10 of 12 Previous  1, 2, 3 ... 9, 10, 11, 12  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Dec 16, 2017 9:52 pm

First topic message reminder :

16.12.2017

அப்போ நாடங்களில மனோரமா ஹீரோயினா நடிச்சிட்டு இருந்தாராம். மணிமகுடம் நாடகத்ல அவர் நடிப்பை ஒரு பிரபலர் பார்த்தாராம். மாலையிட்ட மங்கை படத்தில நடிக்க சொன்னாராம். ஆனா ஹீரோயினா இல்ல, காமெடியனா. வந்ததே .............. ரோஷம் மனோரமாவுக்கு. “என்னான்னு நெனச்சுகிட்டீங்க, நான் நாடகத்தில ஹீரோயினாத்தான் நடிச்சிருக்கேன். தெரியும்ல. நீங்க என்னை இப்போ காமெடியனா நடிக்க சொல்றீங்க.” ன்னுட்டாராம். அந்தப் பிரபலர் , “இத பாரும்மா, படத்தில நீ ஹீரோயினா நடிச்சா, ரெண்டு வருஷமோ மூணு வருஷமோ, அவ்வளவுதான். அதுக்கப்புறமா சினிமாவில ஹீரோயினா நெலச்சு நிக்க முடியாது. காமெடியனா நடிச்சேன்னு வச்சுக்கோ, காலாகாலத்துக்கும் நடிச்சுட்டே ................ இருக்கலாம்” னு சொன்னாராம். அது போலத்தானே இருந்தார் ஆச்சியம்மா நாலு தலைமுறையா.

Baby Heerajan
 மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Apr 08, 2018 5:05 pm

08.04.2018

விஜயசாந்தி

சூப்பர் ஸ்ட்டார் யார்னு கேட்டா, ஒட்................டனே ரஜினிகாந்த்னு எல்லாரும் சொல்லிர்வோம். சூப்பர் ஸ்ட்டாரினி யார் தெரியுமோ? அதுவும் எல்லாருக்கும் தெரிஞ்சவங்கதான். விஜயசாந்தி. 

ஆதி காலத்தில, ஹிந்தியில நாதியா, தமிழ்ல KT ருக்மணி சூப்பர் ஸ்ட்டாரா இருந்தாங்க. ஆம்பளைங்கள மாதிரி சண்டை காட்சியில ஜோ................ரா நடிச்சாங்க. அப்புறமா ஜோதிலட்சுமி வந்தாங்க, ரிவால்வர் ரீட்டா, கன்ஃபைட் காஞ்சனா படங்கள்ல. அதுக்கப்புறம்தான் லேடி ஜேம்ஸ்பாண்ட் விஜயசாந்தி வந்தாங்க. இவருக்கு லேடி அமிதாப்பச்சன், இந்திய சினிமாவின் பெண் ஜாக்கி சான்னு பேரும் இருக்காமே.

தெலுங்கிலேயும், தமிழ்லயும் நடிச்ச விஜயலலிதா இவரோட சித்தியாம். சித்தியோடு ஷூட்டிங்க்கு போனார். பிரமிப்பா எல்லாத்தையும் பார்த்தார். ஆனா சினிமாவில நடிக்கணும்னு ஆசை வரல. டாக்டர் ஆகணும்னுதான் கனவு கண்டுட்டு இருந்தார். கனவு நனவாகாமலே போயிருச்சு. ஆந்திராவில பிறந்தாலும், சென்னைலதான் வளர்ந்தார்.

1990களிலேயே ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய முதல் நடிகையாமே. 1980ல கல்லுக்குள் ஈரம் படத்தின் மூலமா சினிமாவுக்கு வந்தார். அந்த படத்தின் ஹீரோயினோட தோழி ரோல் முக்கியமானது. அதுக்கு ஒரு புதுமுகத்தை பாரதிராஜா தேடிட்டு இருந்தார். பட அதிபர் விஜயன் ஒரு ஸ்டூடியோல விஜயசாந்தியின் ஃபோட்டோவை பார்த்தார். பாரதிராஜாட்ட சொன்னார். பாரதிராஜா அந்த போட்டோவில் உள்ள விஜயசாந்தியை தேட ஆரம்பிச்சுட்டார். அப்டீ................... இப்டீன்னுட்டு வீட்டை கண்டுபுடிச்சு, பாரதிராஜா பேசினார்.

அப்போ விஜயசாந்தி எட்டாப்பு படிச்சிட்டு இருந்தார். பாரதிராஜா பேசின பிறகு, விஜயசாந்தி மனசில கொஞ்சம் கொஞ்சமா சினிமா ஆசை வந்துசுசு. பாரதிராஜா படத்தல நடிக்க சான்ஸ் கெடக்காதா...........................ன்னு ஏங்கிட்டு இருந்தாங்க. இப்ப தானாவே சான்ஸ் வீடி தே....................டி வந்திருக்கு. விடுவாரா விஜயசாந்தி? “ம்ம்ம்” சொல்லிட்டார். கல்லுக்குள் ஈரம் படத்ல, ஹீரோயின் அருணாவுக்கு, தோழியா நடிச்சார். இந்தப் படம் நல்லா ஓடலேன்னாலும், நல்ல படம்னு நிறைய பேர் பாராட்டினாங்க.

என்னதான் தமிழ் படத்தில அறிமுகம் ஆனாலும், தெலுங்கிலதான் பேரு கெடச்சுது. தெலுங்கில ஹீரோயினா நடிச்சார். 1988ல ‘பிரதிகடனா’ங்கற படத்ல, புரட்சி பெண்ணா நடிச்சு, அவர் புகழ் உச்சத்துக்கு போயிருச்சு. இந்தப் படம் தமிழ்ல, ‘பூ ஒன்று புயலானது’ படமாச்சு. தமிழ் படம் 100 நாளுக்கு மேல ஓடுச்சு.

விஜயசாந்திக்காகவே........................... அடிதடி உள்ள கதைகளை எழுத ஆரம்பிச்சாங்க. சண்டை படங்கள்ல, சுறுசுறுப்பா நடிச்சு, பாராட்டுகளை பெற்றார். போலீஸ் அதிகாரி கிரண் பேடி, பூலாந்தேவி இவங்க வாழ்க்கையை பற்றி எடுத்த வைஜெயந்தி IPS, அடிமைப்பெண் போன்ற சினிமாக்கள்ல நடிச்சார். ரெண்டுமே நல்லா ஓடுச்சு.

விஜயசாந்தி நடிச்சு, அடிமைப்பெண்னு ஒரு படம் வந்துச்சா?

இவர் நடிச்ச வேற சில படங்கள், முதலமைச்சர் ஜெயந்தி, கவுண்டர் பொண்ணா கொக்கா, மறவன் மகள், போலிஸ் லாக்கப், லேடி பாஸ், ஸ்ட்ரீட் ஃபைட்டர், ஆட்டோ ராணி போன்ற படங்கள் விஜயசாந்தி நடிச்சு வெற்றி பெற்று, அவருக்கு புகழை தந்த படங்கள்.

போலிஸ் லாக்கப் படத்ல, துடுக்கு பொண்ணாவும், அப்பாவிப் பொண்ணாவும் ரெட்டை வேஷத்ல நடிச்சிருப்பார். தமிழ்ல dub செய்யப்பட்ட படங்கள்ல, விஜயசாந்திக்கு நடிகை சரிதா குரல் கொடுத்தார்.

ரொம்ப நா.......................ள் கழிச்சு நடிச்ச படங்கள்ல, ரஜினி கூடவும் நடிச்சிருக்கார். மன்னன் படம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தினு நடிச்சிருக்கார். தேசிய விருது ஒரு தடவையும், ஆந்திர மாநில அரசின் விருது நாலு தடவையும் வாங்கியிருக்கார்.  


- ரமணி

Heezulia  மீண்டும் சந்திப்போம்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Apr 15, 2018 5:12 pm

15.04.2018 

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்

பாசவலை படத்துக்காக எம்.எஸ்.வி. ம்யூசிக். யாரை பாட்டெழுத   வைக்கலாம்னு யோசிச்சிட்டு இருந்தாங்க. அந்த சமயத்தில பட்டுக்கோட்டையார் போயிருக்கார். விஷயத்தை மேனேஜர் எம்.எஸ்.வி.ட்ட சொன்னார்.

“நமக்கு நாள் பத்தாது. இதுல புதுசா யாரையாவது பாட்டு எழுத வைக்க முடியாது. கண்ணதாசனையோ, மருதகாசியையோ எழுத வைங்க” சொல்லிட்டு கோபமா போய்ட்டார். ஏன்னா அந்த சமயத்தில அவங்கதான் ஹை ................. பீக்ல இருந்தாங்க. மேனேஜர் சொன்னதை கேட்ட கல்யாணம் ,

“எனை பார்க்க வேணாம். என் கவிதையை மட்டும் படிக்க சொல்லுங்க”ன்னு சொல்லி எழுதி வச்சிருந்த கவிதையை கொடுத்தனுப்பினார்.

“இவன் விடமாட்டான் போலியே. ஒரு டைப்பான ஆள்தான்”னு யோசிச்சிட்டே, அவர் கொடுத்த கவிதை வரிகளை எம்.எஸ்.வி.ட்ட போய் காட்டினார் மேனேஜர். எம்.எஸ்.வி. கவிதையை வாங்கி படிச்சார்.

குட்டி ஆடு தப்பி வந்தா,
குள்ளநரிக்கு சொந்தம்,
குள்ளநரி மாட்டிகிட்டா,
கொறவனுக்கு சொந்தம்”

இந்த வரிகள்தான். எம்.எஸ்.வி. இதை படிச்சு நெகிழ்ந்து போனார்.

அப்புறமா ஒரு நாள் எம்.எஸ்.வி. சொன்னாராம், 

“பட்டுக்கோட்டையார் கவிதையை முதல் முதல்ல நான் பார்த்தபோ, அன்னிக்கி முழுசும் என்னால சாப்ட முடியல. சாமி ரூம்லயே உக்காந்திருந்தேன்.”ன்னு நெனச்சுட்டு அவரயே அவர் திட்டிகிட்டாராம்.

“டேய் விஸ்வநாதா, உனக்கு ஏண்டா இந்த ஆணவம், அகம்பாவம்? மத்தவங்களை பற்றி மட்டமா நெனைக்காதே. நீ என்ன அவ்ளோ பெரிய ஆளா? எவ்வளவு பெரிய திறமைசாலி அவர். அவரை நான் அலட்சியபடுத்தியிருக்கேனே”ன்னு வருத்தப்பட்டு, சாமிட்ட மன்னிப்பு கேட்டாராம். பாசவலை படத்லே இருந்துதான் பட்டுக்கோட்டையாரின் பாட்டுக்கள் புகழ் பெற ஆரம்பிச்சுது. 
 
பாவேந்தர் பாரதிதாசன்ட்ட தமிழ் படிச்சவர். அவரோட குயில் இதழ்ல, உதவி ஆசிரியராக இருந்தவர். பாரதிதாசன்ட்ட சிஷ்யனாக சேர்ந்த புதுசு. தனக்கு கவிதை எழுத தெரியும்னு பாரதிதாசன்ட்ட நேரடியா சொல்ல பயம். அகல்யாங்கற பேர்ல கவிதை எழுதி காட்டினார். பாரதிதாசன் படிச்சு பார்த்துட்டு பாராட்டினார். அதுக்கப்புறம்தான் பட்டுக்கோட்டையாருக்கு தைரியம் வந்து, அது தன்னோட கவிதைன்னு சொன்னார்.
1955ல வந்த படித்த மனைவி படத்லதான் இவர் முதல் பாட்டு எழுதினார்னு படிச்சேன். இல்லேன்னா மகேஸ்வரியா,  எது சரி?  

சினிமாவுக்குள்ள நுழையணும்னு சென்னைக்கு வந்த இவர், சக்தி நாடக சபாவில் சேர்ந்தார். ‘கவியின் கனவு’ங்கற நாடகத்தில் நடிச்சார்.  எல்லாரும் அவர் நடிப்பை பாராட்டினாங்க.

அதுக்கப்புறமா சகஸ்ரநாமத்தின் நாடக குழுவில சேர்ந்தார். அங்க வானவில்ங்கற நாடகத்தில நடிச்சார். என்ன ரோல் தெரியுமா?

சொன்னாத்தானே தெரியும்?

முதலமைச்சர்.

மொதல்ல நாடகத்துக்குத்தான் பாட்டு எழுத ஆரம்பிச்சார். ஆகஸ்ட்டு ஒண்ணாம் தேதி, திண்டுக்கல்ல தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாடு நடந்துச்சு. அப்போ, ‘கண்ணின் மணிகள்’னு ஒரு நாடகத்தை நடத்தினாங்க. அதுக்கு பட்டுக்கோட்டையார்  பாட்டு எழுதினார். மாநாட்டுக்கு தலை தாங்கினவர், “மக்கள் கவிஞருக்குரிய தரம் அவர் பாட்டுகள்ல இருக்கு”ன்னு பேசினார்.  

- விகடன்
- கீற்று

Heezulia மீண்டும் சந்திப்போம்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Apr 16, 2018 11:33 am

குட்டி ஆடு தப்பி வந்தா,
குள்ளநரிக்கு சொந்தம்,
குள்ளநரி மாட்டிகிட்டா,
கொறவனுக்கு சொந்தம்”

திரைப் பிரபலங்கள்  - Page 10 3838410834 திரைப் பிரபலங்கள்  - Page 10 3838410834 திரைப் பிரபலங்கள்  - Page 10 3838410834



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Apr 16, 2018 2:05 pm

16.04.2018

இதை நிஜம்...................மா  நான் எழுதல.  

Heezulia 

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Apr 16, 2018 3:10 pm

அது தெரிந்தது தானே



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Apr 16, 2018 3:34 pm

16.04.2018

கண்டுபுடிச்சிட்டீங்களா? சூப்.........................பர் செந்தில். 

Heezulia 

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue May 01, 2018 6:01 pm

01.05.2018 

TK கலா 

இவர் பின்னணி பாடகி, நடிகை, டப்பிங் கலைஞர்.  12 வயசிலிருந்தே   மேடை கச்சேரிகள்ல பாட ஆரம்பிச்சுட்டார். இவரோட அம்மாவும், அப்பாவும் கூட நாடகத்தில், சினிமாவில நடிச்சவங்களாம்.  அம்மா T சண்முகசுந்தரி, காமெடி நடிகையாம். கலா 750 படங்கள்ல நடிச்சார். MGR கூட என் அண்ணன், கணவன், இதயக்கனி, நீரும் நெருப்பும், கண்ணன் என் காதலன்,  படங்கள்ல நடிச்சிருந்தார். 

சிவாஜி கூட லட்சுமி கல்யாணம், வடிவுக்கு வளைகாப்பு படங்கள்ல, ஜெமினி கூட மாலதி படத்ல,  விஜய் கூட குருவி, கில்லி படங்கள்ல நடிச்சார். விக்ரமின் அம்மாவா ஐ படத்ல நடிச்சார்.  ஒரு மரத்து பறவைகள், மொட்டு மல்லி, மகிழ்ச்சி, நீ உன்னையறிந்தால், பிரிவோம் சந்திப்போம், வெயில்  போன்ற 20க்கும் அதிகமான படங்கள்ல நடிச்சார். 

கலா நல்லா பாடுவார்னு எப்டியோ AP நாகராஜனுக்கு தெரிஞ்சுது.  அவர் அந்த சமயத்தில அகத்தியர் படத்தை டைரக்ட் செஞ்சுட்டு இருந்தார். இந்தப் படத்தில ஒரு பிரபலமான பாட்டு இருக்குல்ல.
 
"தாயிற் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை"

படத்தில மாஸ்டர் சேகர் இந்த பாட்டை பாட்ற மாதிரி வரும்.  சேகருக்காக அந்த பாட்டை கலாவை  பாட வச்சது டைரக்டர்  நாகராஜன்.  பாடியது மட்டுமில்ல.  சேகருக்காக டப்பிங் வாய்ஸ் கொடுத்ததும் கலாதான். 

கலாவின் திறமை MGR கா...................து வரைக்கும் போயிருக்கு போல. அதனாலதான், தான் நடிச்ச பல்லாண்டு வாழ்க படத்ல "போய் வா நதியலையே" பாட்டை ஜேசுதாஸுடன் கலாவை பாட வச்சார்.  உழைக்கும் கரங்கள் படத்ல  "வாரேன் வழி பார்த்திருப்பேன்" பாட்டை TMS உடன் பாடினார். ரெண்டு பாட்டும் பிரபலம். அதனால கலாவும் பிரபமாயிட்டார். 

கலா பாடிய சில பாட்டுக்கள் : 

முறுக்கு கை முறுக்கு - ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது 
ஒரு காதல் சாம்ராஜ்யம் [ஜெய்சந்திரனுடன்]  - நந்தா என் நிலா 
கள்ளிமர காட்டில் கண்ணி வச்சேன் [TL மகாராஜனுடன்] - பாப்பாத்தி 
இந்தப் பாட்டு அப்பப்போ இலங்கை ரேடியோல போட்டாங்களாம்.
குன்றிலாடும் குமரனுக்கு [கிருஷ்ணமூர்த்தியுடன்] - பாலாபிஷேகம் 
ராஜகோபாலா நல்ல தோசை [ராக்கெட் ராமநாதன், தீபன் சக்கரவர்த்தி, சசிரேகாவுடன்] - ஸ்பரிசம்

கல்தானா நீ கடவுள் இல்லையா - பிள்ளையார் 
குளிச்சா குற்றாலம் கும்பிட்டா [SPB யுடன்]- டூயட் 
மாமா மனசில ஒளிஞ்சிருக்குது - கீதா ஒரு செண்பகப்பூ 
செங்காத்தே செங்காத்தே - தாஜ்மஹால் 
ஆடிப்பாரு மங்காத்தா - மே மாதம் 
ஆராரோ ஆரிரரோ - கருத்தம்மா 
பொறந்திருச்சு காலம் பொறந்திருச்சு - சிவப்பதிகாரம் 
சின்ன பொண்ணு ராசாத்தி - சந்தித்த வேளை 

இதை தொடர்ந்து, ரஹ்மான் மியூசிக்ல,  கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா, மே மாதம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட படங்கள்ல  பாடியிருக்கார்.  

KV மகாதேவன்,  MSV, குன்னக்குடி வைத்தியநாதன், V குமார், சங்கர் கணேஷ், தேவா, ரஹ்மானின் அப்பா RK  சேகர்,  சூலமங்கலம் ராஜலட்சுமி, வித்யாசாகர், ஸ்ரீகாந்த் தேவா இவங்க ம்யூசிக்லல்லாம்  பாடியிருக்கார். தமிழ் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகள்ல ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாட்டுக்களை பாடினார். 

இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கனடா, ஸ்விச்சர்லாந்து, ஃபிரான்ஸ், தென்னாப்பிரிக்கா, ஆஸ்த்ரேலியா உட்பட்ட வெளிநாடுகளுக்கும் போய்  பாடினார். 

DK பட்டம்மாளை கலாவுக்கு ரொம்ப பிடிக்குமாம்.  

நாடகம், சினிமா துறைகள்ல சிறந்து விளங்கியதுக்காக, தமிழக அரசால  இவருக்கு கலைமாமணி விருதுகொடுக்கப்பட்டுச்சு. 

Heezulia 

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jul 19, 2020 7:31 pm

19.07.2020

ஜெய்சங்கர்

திரைப் பிரபலங்கள்  - Page 10 NRsNhrJScqmlGI1xa8cc+jeishankar
ஜெயசங்கரோட இயற்பெயர் சங்கர்.
இவர் அறிமுகமான 'இரவும் பகலும் [1965]' பட இயக்குனர் ஜோசஃப்
தளியத் தான் சங்கர்ங்கிற இவர் முன்னால ஜெய்னு சேத்து ஜெய்சங்கர் னு பேர் வச்சார்.

'மக்கள் கலைஞர்', 'தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்'னு ரசிகர்களால செல்லமா அழைக்கப்பட்டவர். சின்ன MGRனு கூட சொல்வாங்களாம். இருநூறுக்கும் மேற்பட்ட படங்கள்ல நடிச்சிருக்கார்.

ஏழை மக்களுக்கு நிறைய உதவி செஞ்சாராம். நலிந்த, நஷ்ட்டப்பட்ட படத்தயாரிப்பாளர்களை தேடி போய், படங்களை நடிச்சு குடுத்தார். ஏதோ ஒரு படத்ல கண்ணு தெரியாதவரா நடிச்சாராமே. அந்த படத்ல நடிக்கும்போது, கண்ணு தெரியாதவங்களோட கஷ்ட்டம் தெரிஞ்சு, தன் மகனை கண் டாக்ட்டர் ஆக்கிட்டார். அவர் இறந்த பிறகு அவர் வீட்ல நிறைய ரிட்டன் ச்செக் கண்டுப்பிடிச்சாங்களாம்.

அப்போ உள்ள தயாரிப்பாளர்களுக்கு, MGRஐ வச்சு படம் எடுக்கணும்னு பெரும் கனவா இருக்குமாம். ஆனா அவருக்கு சம்பளம் ஜாஸ்த்தி. பெரீய பட்ஜெட் வேற.

அந்த சமயத்ல ஜெய்சங்கர்தான் அவ்ங்களுக்கு இலுப்பைப்பூ. கொடுத்த சம்பளத்த வாங்கிட்டு MGR நடிக்க வேண்டிய கதைகளை நடிச்சு கொடுத்தார். அந்த படங்களும் சக்சஸ். அதனால அவர் தயாரிப்பாளர்கள் மத்தீல சின்ன MGRனுட்டாங்க.

மாடர்ன் தியேட்டர்ஸ் இவரை தென்னகத்து ஜேம்ஸ்பாண்டாக அறிமுகம் செஞ்சு வச்சுது. MGR, ரஜினிகாந்த் இவங்கல்லாம் ஜேம்ஸ்பாண்டாக நடிச்சாலும் ஜெய்சங்கர் இடத்தை யாரும் பிடிக்க முடியல.

இவரோட முதல் படமே ஓஹோ. பாட்டெல்லாம் ஆஹா ஆஹா. C வசந்தானு ஒருத்தர் ஹீரோயின். இதே வருஷம் ரிலீஸ் ஆன பஞ்சவர்ணக்கிளி படத்ல KR விஜயா கூட வித்தியாசமான வில்லத்தனமான ரோல்ல ஆக்ட் குடுத்து வெளுத்து வாங்கியிருப்பார். படம் 100 நாள் ஓடுச்சு.

இதே வருஷத்ல ஜெயலலிதா கூட நடிச்ச முதல் படம் நீ. ரெண்டு பேரும் ஒரே வருஷத்லதான் அறிமுகமானாங்க.

இந்த வருஷத்ல AVM நிறுவனம் கண்ல பட்டுட்டார். இவர் ஹீரோவா நடிச்ச மூணாவது படம் AVMஇன் குழந்தையும் தெய்வமும்.

இவருக்கு 'வெள்ளிக்கிழமை ஹீரோ'னு ஒரு பட்டபேர் உண்டாம். ஏன்னா இவரோட படங்கள் அநேகமா வெள்ளிக்கிழமைல ரிலீஸ் ஆகும்.

ஜெய்சங்கரின் ஆஸ்த்தான ஹீரோயின் ஜெயசித்ரான்னு கொஞ்ச வருஷம் ஓடுச்சு. ஸ்ரீப்ரியா கூட நடிச்ச படங்கள் ஓஹோன்னு ஓடுச்சு.

பொதுவா வில்லனா நடிச்சிட்டுதான் ஹீரோவா நடிப்பாங்க. ஆனா இவர் என்னான்னா ஹீரோவா நடிச்சிட்டு 'முரட்டுக்காளை' மூலமா வில்லனா மாறியவர். அதுக்கப்புறமா, வில்லனாவும், குணசித்திர ரோல்லயும் நடிச்சார்.

ஆனா அவர் நிஜ வாழ்க்கையில ஹீரோவாவே வாழ்ந்தவராம். இதுதான் அவரோட பெருமை.

அனேகமா நடிகர்கள் அவங்கவங்க பிள்ளைங்கள வாரிசு நடிகர்களாக்கணும்னு நினைப்பாங்க. ஆனா ஜெயசங்கர் அவரோட மகன் விஜய் சங்கரை டாக்டராக்கிட்டாராம்.


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 19, 2020 10:04 pm

15 படங்களில் நடித்து சாதனை :

தொடர்ந்து சில ஆண்டுகள் வருடத்துக்கு
முக்கால் டஜன் படங்களை தந்த ஜெய்சங்கர் 1972-ம் ஆண்டில் மட்டும் 15
படங்களில் நடித்து சாதனை படைத்தார். குறுகிய காலத்திலேயே நூறு படங்களை
கடந்தார்.

சிவாஜிகணேசனுடன் ஜெய்சங்கர் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்.
எம்.ஜி.ஆருடனும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு மலர்ந்தது. ஆனால் அந்த படம்
வளரவில்லை.

இவரது சமகால நடிகர்களான முத்துராமன், ரவிச்சந்திரன் போன்றோருடனும்
இவர் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்.

நூறு படங்களுக்கும் மேல் தொடர்ந்து கதாநாயகனாகவே நடித்த ஜெய்சங்கர்
பிறகு வில்லன் வேடத்தையும் ஏற்று அதனை சிறப்பாக செய்தார்.
---
திரைப் பிரபலங்கள்  - Page 10 Folder
-
திரைப் பிரபலங்கள்  - Page 10 Murattu-kaalai-movie

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jul 19, 2020 10:18 pm

19.07.2020

இதை நீங்க எழுதுவீங்கன்னு தெரியும் சார். நான் எழுதும்போது இதையும் சேத்துதான் படிச்சேன்.

பேபி




heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 10 of 12 Previous  1, 2, 3 ... 9, 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக