புதிய பதிவுகள்
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_c10 
54 Posts - 46%
ayyasamy ram
திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_c10 
48 Posts - 41%
prajai
திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_c10 
4 Posts - 3%
Jenila
திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_c10 
2 Posts - 2%
M. Priya
திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_c10 
1 Post - 1%
kargan86
திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_c10 
1 Post - 1%
jairam
திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_c10 
97 Posts - 56%
ayyasamy ram
திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_c10 
48 Posts - 28%
mohamed nizamudeen
திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_c10 
8 Posts - 5%
prajai
திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_c10 
6 Posts - 3%
Jenila
திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_c10 
4 Posts - 2%
Rutu
திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_c10 
1 Post - 1%
jairam
திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_c10திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_m10திரைப் பிரபலங்கள்  - Page 4 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைப் பிரபலங்கள்


   
   

Page 3 of 12 Previous  1, 2, 3, 4 ... 10, 11, 12  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4278
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Dec 16, 2017 9:52 pm

First topic message reminder :

16.12.2017

அப்போ நாடங்களில மனோரமா ஹீரோயினா நடிச்சிட்டு இருந்தாராம். மணிமகுடம் நாடகத்ல அவர் நடிப்பை ஒரு பிரபலர் பார்த்தாராம். மாலையிட்ட மங்கை படத்தில நடிக்க சொன்னாராம். ஆனா ஹீரோயினா இல்ல, காமெடியனா. வந்ததே .............. ரோஷம் மனோரமாவுக்கு. “என்னான்னு நெனச்சுகிட்டீங்க, நான் நாடகத்தில ஹீரோயினாத்தான் நடிச்சிருக்கேன். தெரியும்ல. நீங்க என்னை இப்போ காமெடியனா நடிக்க சொல்றீங்க.” ன்னுட்டாராம். அந்தப் பிரபலர் , “இத பாரும்மா, படத்தில நீ ஹீரோயினா நடிச்சா, ரெண்டு வருஷமோ மூணு வருஷமோ, அவ்வளவுதான். அதுக்கப்புறமா சினிமாவில ஹீரோயினா நெலச்சு நிக்க முடியாது. காமெடியனா நடிச்சேன்னு வச்சுக்கோ, காலாகாலத்துக்கும் நடிச்சுட்டே ................ இருக்கலாம்” னு சொன்னாராம். அது போலத்தானே இருந்தார் ஆச்சியம்மா நாலு தலைமுறையா.

Baby Heerajan
 மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4278
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Jan 08, 2018 7:09 pm

08.01.2018

அந்த அம்மா 2013லேயே அவுட். அப்படியே இருந்தாலும், படிப்பு வெலையெல்லாம் இப்போ கூடிப்போச்சு. அவரால படிக்க முடியாது.  பேரன் பேத்தீங்கல்லாம்  படிக்க வைக்க மாட்டாங்க. 

Heezulia 

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4278
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Jan 09, 2018 7:22 pm

08.01.2018

காளி N ரத்தினம் 


திரைப் பிரபலங்கள்  - Page 4 TRqWwz2ORAmd0N9Co9Kg+N.Raththinam


சபாபதி. இது ஒரு சமூக நாடகம். பம்மல் சம்பந்த முதலியார் எழுதியது. AVM செட்டியார் இந்தக் கதையை வாங்கி, 1941ல அதே பேர்ல படம் எடுத்தார். 

இந்தப் படத்தில நடிச்சவங்கள்ல, அதிகமா....................ன சம்பளம் வாங்கினது யார் தெரியுமோ? ரத்தினம், கதாநாயகனின் வேலைக்காரன்.  3,000/- ரூ...............பாய். மத்தவங்க சம்பளத்தையும் பாருங்க.

TR ராமச்சந்திரன் - 70/- ; கதாநாயகி பத்மா - 45/- ; தமிழ் வாத்தியார் சாரங்கபாணி - 2,000/- .

1940கள்ல சூப்பர் காமெடியன் ரத்தினம். சபாபதி படத்தில் இவர், CT ராஜகாந்தம் கூட அடிச்ச லூட்டி இருக்கே, லூட்டியோ............................லூட்டியாம். 

ஒரு தடவை சென்னையில சபாபதி நாடகத்தை ரத்தினம் பார்த்தாராம். இந்த நாடகத்தில், வேலைக்காரன் சபாபதியாக யார் நடிச்சாங்க  தெரியுமா? சாட்சாத் பம்மலார்தான். அதைப் பார்த்த ரத்தினம், அவர் திறமையை இன்னும் வளர்த்துக்கிட்டாராம். அப்படி நடிச்சிருக்கார் பம்மலார். 

ரத்தினம் நாலாப்பு வரைதான் படிச்சாராம். அதுக்கு மேல படிக்க வசதியில்லாததால, வேலைக்கு போக வேண்டியதாயிருச்சு. நாடகங்களில் நடிக்கிற ஆசையில பாய்ஸ் கம்பெனியில சேர்ந்துட்டாராம். இருபத்தே....................ழு வருஷம் நாடங்களில நடிச்சுட்டு இருந்தாராம். 1936ல அந்த கம்பெனி எடுத்த 'பதிபக்தி' படத்ல முதல் முதலா நடிக்க ஆரபிச்சாராம். 

தஞ்சாவூர்ல சில ஊர்களில, பங்குனி மாசத்துல திருவிழா தா............ ம்தூம்னு நடக்குமாம்.  அப்போ  தெய்வங்களுக்கு முன்னால காளியாட்டம் ஆடுற பழக்கம் இருந்துச்சாம். சுத்தியுள்ள ஊர்லே இருந்து ஜனங்கள் வந்து கலந்துக்குவாங்களாம். ஒரு  பூசாரி, காளி வேஷம் போட்டு வருவாராம் . 

1916ல நடந்த திருவிழாவில், கோவலன் நாடகம் நடஞ்சுச்சாம். அதில ஒரு நாடக நடிகர் காளி வேஷம் போட்டு வந்தாராம். அவர் பேர் அல்லி பரமேஸ்வரன் அய்யர்.  நாடகங்களில் கூட அவர் காளி வேஷத்திலதான் நடிப்பாராம். அம்புட்டு தத்ரூபமா இருக்குமாம், அவர் நடிப்பு. இதைப் பார்த்த ரத்தினமும், நாமளும் இப்படி நடிச்சா என்னான்னு ஆசைப்பட்டு, அந்த பரமேஸ்வரனை பார்த்து, பேசினாராம். அவரை குருவாக கொண்டு, காளியாக நடிக்க கத்துக்கிட்டாராம். அப்புறம் பார்த்தா, அவரை மாதிரி காளியாக யா........................ ராலயும்  நடிக்க முடியாதுன்னு சொல்ற அளவுக்கு நடிச்சாராம். 

ரத்தினத்தின் குரு அவரைப் பாராட்டி, வெள்ளி சூலம் பரிசாக கொடுத்து, அவருக்கு 'காளி' என்கிற பட்டத்தையும் கொடுத்தாராம். 

இப்படியாகத்தானே N ரத்தினம், காளி N ரத்தினம் ஆயிட்டா......................ர்.

இவர் 65 படங்களில நடிச்சாராம். இவருடைய நகைச்சுவை காட்சிகள் எல்லாமே, எல்.......................லாமே, வயிறு குலுங்க சிரிக்கfyingதான். 

சபாபதி படத்தில் ரத்தினத்தின்  ஒரு காமெடி ஸீன். 

முதலாளியின் மகன் TRR பேரும், வேலைக்காரன் ரத்தினம்  பேரும் ஒண்ணு, சபாபதி. அசடு சபாபதி, மண்டு சபாபதி.  ஒருநாள் TRR அவன் friendஸோடு டென்னிஸ் விளையாட போறான். அப்போ ரத்தினத்தை பார்த்து, 

TRR : டேய் சபாபதி, போய் என்னோட பூட்ஸை  கொண்டு வாடா.

ரத்தினம் ஏதோ கேட்க நினைக்கிறான். TRR அவனை பேச விடாம 

TRR : போய்க் கொண்டு வாடா

ரத்தினம் பூட்ஸை எடுத்துட்டு வர்றான். அதை பார்த்த TRR & கோ, கெக்கே..................பிக்கேன்னு சிரிக்கிறாங்க. அவங்க இப்படி சிரிக்கிற மாதிரி ரத்தினம் என்ன செஞ்சுட்டான்? வேற ஒண்ணும் இல்லேங்க. பூட்ஸை ஒரு வெள்ளி தட்டுல கொண்டு வந்து கொடுக்கிறான். இப்படி கொண்டு  வந்தா, பின்ன சிரிக்க மாட்டாங்க? 

T.R.R : என்னடா இது?

K.N.R : பூட்ஸ்..அப்பா


T.R.R. : என்னடா தட்ல  வச்சு கொண்டு வர்ரியே

K.N.R : நீதானப்பா சொன்னே.
 
T.R.R. : ப்ளடி ஃபூல்,  ஏதாவது தின்ற வஸ்துவை தட்ல வச்சுக் கொண்டாடான்னு சொன்னா, பூட்ஸை கூடவா தட்ல வச்சிக் கொண்டு வரச் சொன்னேன்.


K.N.R : இதெல்லாம் எனக்கு என்னம்மாப்பாத் தெரியும் - சொல்லிக் கொடுத்தாதானேப்பா தெரியும்.


T.R.R. : இதக்கூடவா சொல்லித்தரணும். இனிமே  பூட்ஸ்ஸ தட்ல வச்சுக் கொண்டு வராதே - போ

K.N.R : இனிமே பூட்ஸ தட்ல வச்சுக்கொண்டு வரலேப்பா. ஏம்பா - என்னமோ இங்கிலீஷ்ல ப்ளடி ஃபூல்,  என்னம்மோ சொன்னியேப்பா - அப்படின்னா - என்னப்பா?
 
T.R.R. : ப்ளடி ஃபூல்ன்னா,  ரொம்ப கெட்டிக்காரன்னு  அர்த்தம்,  ஆமாம்.

TRR  பூட்ஸ் அணிந்து விளையாட மைதானத்திற்கு செல்வதற்குள் மழை வந்துரும்.

T.R.R.: (மழை பெய்றத  பார்த்துகிட்டே) இன்னிக்கு டென்னீஸ் விளையாடின மாதிரிதான்.  வேறென்ன செய்யலாம் பிரதர்?

T.R.R.ன் நண்பர் : ஏன்,  கார்ட்ஸ் ஆடலாமே

T.R.R. :  டேய் சபாபதி,  போய் கார்ட்ஸ் கொண்டு வா.

K.N.R : கார்ட்ஸ் 

கார்ட்ஸ்னா  என்னான்னு  தெரியாத ரத்தினம்,  தபால் கார்டை கொண்டு வருவார். 
TRR : இத ஏண்டா கொண்டாந்தே?

K.N.R : நீ இங்கிலிஷீலே சொன்னப்பா!  எனக்கு எப்படி புரியும்பா! தமிழ்லே சொல்லப்பா!


T.R.R. என்ன சொல்றதுன்னு தெரியாம முழிக்கிறார்.  



நண்பர் : காய்த கட்டுப்பா பிரதர்.


K.N.R : (நண்பரை பார்த்து) சரியா.....ன ப்ளடி ஃபூல்பா. 


ரத்தினம்  சொன்னதை கேட்டு ரெண்டு பேருக்கும்  அதிர்ச்சி.


T.R.R : டேய் சபாபதி, அவரை ஏன் திட்டுற?

K.N.R : நீதானப்பா சொன்னே, ப்ளடி ஃபூல்ன்னா கெட்டிகாரன்னு. அதனாலேதான்பா... அப்படி சொன்னேன்பா.

T.R.R : சரி சரி, நீ வாய மூடிக்கிட்டு போய், காகித கட்டை கொண்டு வா.

வாயை மூடிட்டே ................... போய் பழைய நியூஸ்பேப்பர் கட்டை தூக்கி கொண்டு வந்து கொடுப்பார் ரத்தினம். அதுதான் அவருக்கு காகித கட்டு. 

T.R.R. : ஏண்டா இதபோய் தூக்கிக் கொண்டு வந்திருக்கியே,  உன்ன கொண்டு போய் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் தான் சேர்க்கணும்!

K.N.R : நான் எப்படிப்பா ஒண்டியா போறதுப்பா.  நீயும் என்னோட தொணைக்கு வாப்பா   போகலாம்.

T.R.R : (தன் தலையில் அடித்துக் கொண்டே) சீட்டுக்கட்டுப்பா! 



ரத்னம் ஒரு வழியாக சீட்டு கட்டை கொண்டு வந்து தருவார்.

படத்தில இந்த சீனை பார்த்து ராசிக்காதவங்களே இல்லையாம். பின்னே வேலைக்கார 'சபாபதி' ரத்தினத்தின் நகைச்சுவை நடிப்பை பார்த்தால் யாருக்குத்தான் சிரிப்பு வராது! 


இந்தப் படத்தில இன்னொரு ஸீன் எனக்கு பார்த்த ஞாபகம் வருது. TRR ரத்தினத்திடம் சோடா ஒடச்சு கொண்டு வர சொல்வார். ரத்தினம் சோடா பாட்டிலையே ஒடச்சு, தட்டிலே வச்சு கொண்டு வருவார். இந்தப் படத்தில் ரத்தினத்தின்   காமெடியைத்தான்  ஜனங்கள்  அதிகம் ரசிச்சாங்களாம். 

மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி. 1924. 7 வயசு பையன், தன் சகோதரனுடன் இங்க வந்து சேர்ந்தானாம். பின்னாளில் சினிமாவில புகழடையவும், சிறந்த நடிகனாகவும்  ஆவதுக்கு, சந்தேகமில்லா......................ம பாய்ஸ் கம்பெனிதான் காரணம்னு, அந்த சகோதரர்கள் ரெண்டு பேரும் சொன்னாங்களாம். அவங்கதான், அவங்கதா.................ன், MG சக்கரபாணியும், MGR ரும். 

இவங்க ரெண்டு பேரும் கம்பெனியில   சேர்ந்த சமயத்தில, பாய்ஸ் கம்பெனியின் நாடக  ஒத்திகை ஆசிரியரும், மேனேஜரும் யார் தெரியுமோ? ரத்தினம்தான். ரெண்டு பேருமே அறியாத வயசு. அவங்களுக்கு புரியுற மாதிரி நாடகத்தில் நடிக்கிறதுக்கு, பயிற்சி கொடுக்கணும். நாடக ஒத்திகை ஆசிரியருக்கு  அதுதானே வேலை.  ரத்தினமும் அதைத்தான் செஞ்சார். 

ரத்தினம் ரொம்...............ப  ஸ்ட்ரிக்ட். அதுக்காகவே, அந்த ரெண்டு பேரும் பயந்து பயந்து, முரண்டு பிடிக்கா.......................ம  எல்லா.......................த்தயும் கத்துக்கிட்டு இருந்தாங்க. 

பாய்ஸ் கம்பெனியில ஒரு நாடக அரங்கேற்றம். அதுல ஒரு ஸீன். அதுல என்னான்னா, சின்ன பையன் MGR தன் தாயை பார்த்து கதறி அழணும்.  MGR க்கு அழவே தெரியலியாம். அழுகையே வரல. சின்ன பையந்தானே, அழுது நடிக்கிறது கொஞ்சம் கஷ்டம்தானே. 

வாத்தியார் ரத்தினத்துக்கு ஒரு ரோசனை. நாடகமேடையின் திரையின் பின்னால, ரத்தினம் ஒளிஞ்சி நின்னுக்கிட்டாராம். MGR ஐ அவர் பக்கத்தில்கூப்பிட்டாராம். சின்ன MGR ம் ஓடிப்போனாராம். ரத்தினம் என்ன செஞ்சாராம்? 'ணங்க் ............' MGR தலைல ஒரு குட்..................................டு. வலி தாங்காம MGR அழுதுட்டே போயி, அழுதுட்டேநடிச்சாராம். அது இயற்கையாய் இருந்துச்சாம். நடிச்சு நடிச்சு பழக்கமான பின்னால,  இயற்கையாகவே அழுது நடிக்க பழகிட்டாராம், MGR. 

இதுலே இருந்து என்ன தெரியுது? MGR க்கு  நடிப்பூன்னு சொல்லிக்கொடுத்த வாத்தியாரே  காளி N ரத்தினம்தானே, இல்லியா?  MGRஐ வாத்தியார்னு சொல்வாங்களாமே. ஆனா இந்த வாத்தியாருக்கு வாத்தியாரே ரத்தினம்னு இப்போ தெரியுது இல்லியா? 

1936ல சந்திரகாந்தானு ஒரு படம். இந்தப் படத்தில ஒரு பாட்டு, "பெண்ணாகி வந்ததொரு மாயப் பிசாசாம் பிடித்திட்டென்னை ..."  ரத்தினம் பண்டாரமாக  நடிச்சு, இந்தப் பாட்ட பாடி,  சில பண்டாரங்கள் சைவ மடங்களில் செஞ்ச அநியாயங்களையும், அக்கிரமங்களையும் சொல்லி காட்டினாராம். இந்த ஸீனுக்காகவே, ரசிகர்கள் இந்தப் படத்தை திரும்ப போய் பார்த்தங்களாம். சில படங்களில் சொந்தக் குரலிலும் பாடி நடிச்சிருக்காராம். 

ஒரு தமிழ்ப்படம், ஒரே................... ஊர்ல, ரெண்...........டு  தியேட்டர்கள்ல ஓடியிருக்குல்ல.  முதல் முதலா இந்த புது பழக்கம் சந்திரகாந்தா படம்தான்   
தொடங்கி வச்சுதாம்.  எங்க? கும்பகோணத்திலதான். ரத்தினம் பிறந்த ஊர். காரணம் அந்தப் படத்தில  ரத்தினம் பேசிய "ஸ்வாமிகாள், யோகாப்பியாசம் ஆச்சா?" வசனமாம்.  இந்த வசனத்தில வரும் "ஸ்வாமிகாள்" வார்த்தைக்கு மட்டும்  போலீஸ் தடைகூட  போட்டுச்சாம். அதுக்கு அர்த்தமே வேற. நான் படிச்சேன். அதை இங்க எழுத முடியாது. 

காஞ்சிபுரம், கும்பகோணம், ஸ்ரீரங்கம் இந்த ஊர்ல இருந்த ஜனங்கள், குறிப்பா பிராமணர்களும்,  அந்த வசனத்துக்கு, குறிப்பா "ஸ்வாமிகாள்" வார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவிச்சாங்களாம். கோர்ட் வரைக்கும் கூட போனாங்களாம். நோ யூஸ்.  

1940ல வந்த உத்தமபுத்திரன் படத்திலதான், ரத்தினமும், ராஜகாந்தமும் ஜோடி சேர்ந்து நடிக்க ஆரம்பிச்சாங்களாம். NSK & மதுரம் ஜோடிக்கப்புறம், இவங்க ரெண்டு பேரையும்தான் ஜனங்கள் அதிகம் ரசிச்சாங்களாம். மாடர்ன் தியேட்டர்ஸின் அநேக படங்களில் ரத்தினம், ராஜகாந்தம் தான் சிரிப்பு ஜோடியாம். 

படங்களில நடிக்கிறதுக்கு முன்னால, ரத்தினம் தற்காப்பு கலையை கத்துக்கிட்டாராம். பாரம்பரிய விளையாட்டு சிலம்பு சுத்துறது, வாள்சண்டை, குத்துசண்டை இதிலெல்லாம் அவர் சேம்பியனாம். இவர்ட்ட இருந்து, இதையெல்லாம் கத்துக்கிட்டவங்கள்ல, ரொம்ப ரொம்ப முக்கியமானவர் யார் தெரியுமோ? யோசிங்க, யோசிங்க. 

நீங்க நினைக்கிறது சரியா தப்பான்னு எனக்கு தெரியாது. ஏன்னா, நீங்க என்ன நினைக்கிறீங்கன்னே எனக்கு தெரியாதே. சரி, சரி, சொல்லிர்றேன். மக்கள் திலகம், புரட்சி தலைவர், பொன்மனச்செம்மல், இதயக்கனி ஆமாங்க  இது எல்லா...................த்துக்கு சொந்தக்காரர் MGRதாங்க. MGR ரத்தினத்துக்கிட்டதான் அதை கத்துக்கிட்டாராம். ரத்தினத்தை தனது குருவாக நெனச்சுட்டு இருந்தாராம் MGR. 

ரத்தினத்துக்கு சினிமா சான்ஸ் கொறஞ்சிருச்சு.  MGR ஹீரோவாயிட்டார். ரத்தினத்தை MGR "அண்ணே" ன்னு மரியா..............தையா கூப்பிடுவாராம். அவங்க ரெண்டு பேரின் background தெரியாதவங்க, MGR, ரத்தினத்தை "அண்ணே"ன்னு கூபிடறதை பார்த்து ஆச்சரியப்பட்டாங்களாம். இப்பதாங்க தெரியுது, MGR க்கு எங்கேயிருந்து நடிப்பு, தற்காப்பு கலையெல்லாம் வந்தச்சூன்னு. 

ரத்தினம் ஆடம்பர செலவே.......... செய்யவே மாட்டாராம்.  ரொம்ப சிக்கனமாம். நாலு முழத் துண்டுதான் எப்பவும் உடுத்தியிருப்பாராம். டீ, காபி ஊஹூம். மோர் மட்டும்தானாம். நிறைய தெய்வ பக்தி உடையவராம். நெத்தியின் குறுக்கால, நீ........................ளமா தீட்டிய குங்கமம் இல்லாம அவரை பார்க்க முடியாதாம். நிரந்தரமான மொட்டை மண்டையாம். கெடச்ச வருமானத்தில் நிலபுலன்களை வாங்கி போட்டுருவாராம். 
- நிழல் மாத இதழ், விகடன், ஹிந்து 

Heezulia 

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 09, 2018 7:28 pm

திரைப் பிரபலங்கள்  - Page 4 3838410834 திரைப் பிரபலங்கள்  - Page 4 103459460 திரைப் பிரபலங்கள்  - Page 4 1571444738

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jan 10, 2018 9:48 am

sk wrote:வாத்தியாருக்கு வாத்தியாரே ரத்தினம்

திரைப் பிரபலங்கள்  - Page 4 3838410834



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4278
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jan 17, 2018 11:57 pm

17.01.2018


KR ராமசாமி 

இவர் பேரறிஞர் அண்ணாவின் செல்..................லப் பிள்ளையாம். அண்ணாதான் ராமசாமிக்கு 'நடிப்பிசை புலவர்'னு பட்டம் கொடுத்தாராம். வசன உச்சரிப்பு, பாட்டு பாட்றதுல தனக்கென ஒரு பாணி இவருக்கு. பழங்காலத்து நடிகர்கள் செஞ்ச மாதிரி, இவரும் பாய்ஸ் கம்பெனில சேர்ந்துட்டார். அங்க அவருக்கு சின்ன சின்ன வேஷங்கள்தான் கெடச்சுதாம். 

ராமசாமிக்கு நடிக்கணும்னு ஆச. ஆனா, சின்ன சின்ன வேஷங்களில நடிச்சாக்கா, நடிகனாக முடியாதுன்னு அவருக்கு தோணுச்சாம். அதனால அவரது 13 வயசில TKS சகோதரர்களின் நாடக குழுவில போய் சேர்ந்துட்டார். அங்க சேர்ந்ததால, ராமசாமி நடிப்பை நல்லாவே கத்துக்கிட்டார். TKS சகோதரர்களின் ரொம்ப முக்கியமான நடிகராயிட்டாராம். 

ஹேமநாதர் வேஷம், ராமாயணம் நாடகத்ல அனுமார் வேஷம் போட்டு எல்லாரையும் அசத்தினாராம். TKS சகோதரர்கள் நடிச்ச மேனகா, குமாஸ்தாவின் பெண் படங்களில இவர் நடிச்சார். குமாஸ்த்தாவின் மகள் படத்தில அவர் நடிப்பை பார்த்த கிருஷ்ணன் பஞ்சுவுக்கு, அவர் நடிப்பு ரொம்................ப  புடிச்சுப்போச்சாம்.   குமாஸ்தாவின் மகள் படத்துக்கு உதவி இயக்குனர், கிருஷ்ணன் பஞ்சு. 

அப்போதைய சூப்பர் ஸ்டார் MKT க்கு ஈக்.................குவலா ராமசாமி இருப்பதாக கிருஷ்ணன் பஞ்சு  நெனச்சாங்களாம். ராமசாமியை கதாநாயகனாக போட்டு ஒரு படத்தை டைரக்ட் செய்யணும்னு முடிவு செஞ்சாங்களாம். தயாரிப்பாளர்ட்ட சம்மதம் வாங்கினாங்க. 


1944. பூம்பாவைன்னு ஒரு படம்.  இந்தப் படத்தில ராமசாமி திருஞானசம்பந்தரா நடிச்சாராம். இந்தப் படத்தால ராமசாமிக்கு நல்..................ல  பேர் கெடச்சுதாம். அப்புறம் என்னாச்சோ ஏதாச்சோ, வேற படத்தில நடிக்க சான்ஸே..... கிடைக்கல. அதனால பழைய கெழவி, கதவ தொறடி. என்னாச்சு, மறுபடியும் நாடகத்தில் நடிக்க போய்ட்டார். ஆடின காலும், பாடிய வாயும் சும்மா இருக்காதாமே.


மனோகரா நாடகம். இதிலே மனோகராக நடிச்சது யா........................ர்? சாட்சா............த் ராமசாமிதான். மனோகராவின் அம்மா பத்மாவதியாம். இந்த வேஷத்தில் நடிச்சது யார், யார், யா.....................ர்? கணேசன். இவர்தானாம். யா.......................ரிந்த கணேசன். நீங்க நெனக்கிறது சரிதாங்க................., சரிதான். மனோகரா சினிமாவில, கலைஞரின் தீப்பொறி வசனங்களை பேசுவாரே, அதே ................. சிவாஜி கணேசன்தான். 

ஓர் இரவு, வேலைக்காரி, சொர்க்கவாசல், இதெல்லாம் அண்ணாவின் நாடகங்கள். இந்த நாடகங்கள் படமானபோது, அதில ராமசாமி சூப்..................பரா நடிச்சிருந்தாராம். லட்சுமிகாந்தன் கொலைவழக்கில், MKT ஜெயிலுக்கு போனதும்,  அவர் இடத்தில் ராமசாமி இருந்தாராம்.  

துளிவிஷம் படத்தில சிவாஜியோடும், நாடோடி, அரசகட்டளை, நம்நாடு படங்களில் MGR ஓடும் நடிச்சாராம். MGR நடிச்ச இந்த மூணு படத்தையும் பார்த்திருக்கேன். ஆனா KR யாருன்னுதான் தெரியாது. 

இவர் பாடிய பிரபலமான சில பாடல்கள் : 
இன்னமும் பாராமுகம் ஏனம்மா - வேலைக்காரி 1949
உள்ளம் தேடாதே என்று சொல்லுதே - எதையும் தாங்கும் இதயம் 1962
செந்தமிழ் நாட்டு சோலையிலே - சுகம் எங்கே 1954
கண்ணில் தோன்றும் காட்சி - சுகம் எங்கே 1954

- ரமணி 

Heezulia 

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 18, 2018 1:00 pm

திரைப் பிரபலங்கள்  - Page 4 3838410834 திரைப் பிரபலங்கள்  - Page 4 103459460 திரைப் பிரபலங்கள்  - Page 4 1571444738

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 18, 2018 3:32 pm

SK wrote:
sk wrote:ஒரு வருத்தம் இருந்துச்சாம், காலேஜ் படிக்கலேன்னு.

இப்போ படிக்கலாமே
மேற்கோள் செய்த பதிவு: 1256240

முடியாது SK ........அவர் நிலை அப்பிடி.! முடியவே முடியாது.!!
அல்லது very very long distance education ( வெகு தூர கல்வி)தான் படிக்கமுடியும்.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jan 19, 2018 9:56 am

T.N.Balasubramanian wrote:
SK wrote:
sk wrote:ஒரு வருத்தம் இருந்துச்சாம், காலேஜ் படிக்கலேன்னு.

இப்போ படிக்கலாமே
மேற்கோள் செய்த பதிவு: 1256240

முடியாது SK ........அவர் நிலை அப்பிடி.! முடியவே முடியாது.!!
அல்லது very very long distance education ( வெகு தூர கல்வி)தான் படிக்கமுடியும்.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1257150

அது சரி காலேஜ் படிக்கற மாதிரி நடிச்சாங்களா



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4278
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jan 19, 2018 2:20 pm

19.01.2018

கோவி.மணிசேகரன் 


ஃபோட்டோ போடலாம்னு நெனச்சேன். அதுக்கு கூட லிமிட் இருக்கு. சரி போகட்டும். என்னால் என்ன செய்ய முடியும்? 

முன்ன பின்ன கேள்விப்படா...................த பேரா இருக்கு. 

தமிழ் இலக்கியத்தின் மிகப் பெரிய ஜாம்பவான். இலக்கிய சாம்ராட் பட்டம் இவருக்கு உண்டு. ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள், 200 நாவலாக, 10 நாடகங்கள், பத்தாயிரம் கவிதைகள் இவ்ளத்தையும் எழுதியிருக்கார். 

இவருக்கு ரொம்ப நா......................ளா ஒரு ஆச, சினிமாவுக்குள்ள எப்படியாவது பூந்துறணும்னு. சண்டமாருதம்னு ஒரு சினிமா பத்திரிகை. சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நடத்தியது. இதுல கோவி. வேல செஞ்சுட்டு இருக்கும்போது, அவருக்கு சினிமாவில வேல செய்ற ஆர்வம் அதிகமாச்சு. அப்போ இந்த பத்திரிகைல கண்ணதாசன் ஆசிரியராக இருந்தாராம். 

கோவி. நல்லா பாடுவார். அதனால முறைப்படி சங்கீதம் கத்துக்கிட்டு பட்டம் வாங்கியிருக்கார். மந்திரிகுமாரி படத்திலுள்ள வசனங்களை கேட்டுட்டு, இப்படியும் வசனங்களை எழுத முடியுமான்னு ஆ......................ச்சரியப்பட்டு போனார். 

அப்டீ இப்டீன்னு அவரைத்தேடி ஒரு சான்ஸ் வந்துச்சு. அப்போ அவருக்கு 24 வயசு.  நல்லகாலம்னு [1954] ஒரு படம். MK ராதா ஹீரோ. இந்தப் படத்துக்கு கோவி வசனம் எழுதினார். 101 ரூபாய்  சம்பளம் கெடச்சுது. 

AM ராஜாவும், ராதாஜெயலட்சுமியும் பூலோக ரம்பையில் [1958] பாடிய ரெண்டு பாட்டு எழுதினார். அதுக்கு 1,000 ரூபாய் சம்பளம். இவரும், AMR ரும் ஒண்ணா சங்கீதம் படிச்சவங்க. அதுக்கப்புறம் கோவிக்கு எந்..............த  சான்ஸும் கிடைக்கல. 

மறுபடியும் இலக்கியம் பக்கம் போய்ட்டார். சினிமா ஆசைய ஒரு புறத்திலே வச்சுட்டு, நாடகங்களை எழுதினார். எழுதிய நாடகங்களை அரங்கேற்றினார். இவருடைய நாடகங்களுக்கு ம்யூசிக் போட்டது யார் தெரீமோ? பிற்காலத்தில இசைஞானியான, மேஸ்ட்ரோவான இளையராஜாதான்.  

இவருடைய நாடகங்கள் ஜனங்களுக்கு ரொம்ப புடிச்சு போச்சு. அந்த நாடங்களை பற்றி கேள்விப்பட்ட தயாரிப்பாளர்கள், அவர்ட்ட கதை கேட்க, போட்டி போட்டாங்க. ஆனா கோவியின்  badluck, அவருக்கு கதை சொல்ல தெரியாதாம்ல. ஐயோ பா....................வம்  கோவி. இவர் கதை சொன்ன விதம் தயாரிப்பாளர்களுக்கு பிடிக்காததால், யாரும் அவருடைய கதையை படமாக்க முன்வரல. 

சரி.................., இப்ப என்ன செய்றது? சினிமா பற்றிய நுணுக்கங்கள் பற்றி தெரியணும்னா, என்ன செய்யலாம்? முறைப்படி சினிமா டைரக் ஷன் பற்றி தெரிஞ்சுக்கணும்.  யாரா.............வது திறமையான ஒரு டைரடக்கரட்ட அஸிஸ்டண்ட்டாக சேரணும். யார்ட்ட போயி அசிஸ்டண்டாக சேர்ரது? கோவிக்கு யார் ஞாபகம் வந்துச்சு தெரீமா? இயக்குனர் சிகரம் பாலசந்தர். 

பாலசந்தரின் 'வெள்ளிவிழா' படம். இது ஓஹோன்னு ஓடுச்சு. அடுத்தாப்பல, 'அரங்கேற்றம்' படத்தை தயாரிக்க போவதாக பாலசந்தர் அறிவிச்சார். இந்த சமயத்தில கோவி, KB யின் வீட்டுக்கே போயி நின்னுட்டார். கோவி பற்றி, அவர் ஒரு இலக்கியவாதீன்னு கேள்விப்பட்டிருக்கிறார்போல KB. அவர் தன் வீட்டுக்கு வந்தது அவருக்கு ஆச்சரியம். 

"எங்க இந்தப் பக்கம்?" னு கேட்டார். 

கோவி அவருடைய ஆசையை சொல்லியிருக்கார். 

"நீங்க பெரீ ....................ய இலக்கியவாதி. உங்களுக்கு ஆயிரக்கணக்கா..........ன வாசகர்கள் இருப்பாங்களே" 

"அது சரிதான் சார். ஆனா சினிமா விஷயத்தில நான் உங்கள் ABCD ஸ்ட்டூடண்ட் சார்"

எப்படியோ KB யை கஜோல் பண்ணி, தாஜா பண்ணி, பேசி, கோவி அசிஸ்டண்ட் டைரடக்கராக சேந்துட்டா......................ர். என்னிக்கி? விஜயதசமி அன்னிக்கி.  

அப்டி இப்டீன்னு அரங்கேற்றம் படம் ரிலீஸ்  ஆச்சு. படத்தின் டைட்டில்ல கோவி பேரை 'டைரக் ஷன் உதவி  கோவி.மணிசேகரன்' ன்னு தனியா போட்டிருந்துச்சு. 
- ரமணி 

ஆனா படத்தின் டைட்டில் பார்த்தாக்கா, 'டைரக் ஷன் உதவி  கோவி மணிசேகரன் RB திலக்" ன்னு போட்டிருக்கு. இதுல எது சரின்னு தெரிஞ்சவங்கதன சொல்லணும்.  



மாலைமலர்ல வேற மாதிரி படிச்சேன். "அரங்கேற்றம் படத்தில ஒரு குடுகுடுப்பைக்காரன் வருவான். "நல்ல காலம் வருது, நல்ல காலம் வருது"ன்னு குலுக்கிட்டு வரும்போது, அவன் உருவத்தின் மேல 'துணை டைரக் ஷன் - கோவி மணிசேகரன்' னு தனி டைட்டில் கார்ட் போட்டிருக்கும்" னு வாசிச்சேன். 

இப்படி கோவி பேரை தனியாக போட்டது பற்றி, மற்ற உதவி டைரக்டர்கள், 
KB ட்ட போய் கேட்டாங்களாம். 


"அவர் இலக்கிய சாம்ராட் விருது வாங்கினவர். அவருக்கு மரியாதை கொடுக்கணும்ல. இல்லேன்னா அவருடைய வாசகர்கள் என்னை தப்பா நினைப்பாங்க. அதனால இதுதான் சரி " னு KB சொன்னதாகவும் மாலைமலரில் படிச்சேன்.  அதனாலேயே மற்றவங்க கோவி மேல எரிச்சல் பட்டாங்களாம். 

கோவியின் குடும்பச் சூழ்நிலையாலும், KB யின் முக்கிய உதவியாளராக இருந்த அனந்து கூட ஏற்பட்ட மனஸ்தாபத்தின் காரணமாகவும் KBட்ட இருந்து பிரிஞ்சு வந்துட்டாராம். 21  வருஷம் KBட்ட வேலை செஞ்சாராம். 

இதுக்கப்புறமா, கோவி வாழ்க்கையில ஒரு டர்னிங் பாயிண்ட். இவர் எழுதிய 'தென்னங்கீற்று' நாவல் புத்தகமாக வெளியாச்சாம். இந்த நாவலை பற்றி ஹிந்து பேப்பர்ல பாராட்டு விமர்சனமும் வந்துச்சாம். 

பெங்களூரை சேர்ந்த பாபா தேசாய்னு ஒரு தயாரிப்பாளர். இவர் கோவியை சந்திச்சு, தென்னங்கீற்று கதையை சொல்லசொல்லியிருக்கார். முந்தி அவர் கதை சொல்ல தெரியாம, பேந்த பேந்த முழிச்ச மாதிரி இல்லாம, இப்ப தயாரிப்பாளர்கள் மனசை கவர்ற மாதிரி கதை சொல்ல பழகியிருந்தார். இப்ப தென்னங்கீற்று கதையை இங்லிபீஸ்ல வேற சொன்னாராம். 

பாபாவுக்கு கதை புடிச்சு போச்சு. அவர் கன்னடத்தில் படமாக்க போவதாக சொல்லி, கதைக்கு விலையென்னனு கேட்டிருக்கார். 

ஆனா கோவி மறுத்துட்டாராம். "தமிழ்ல எடுக்கணுனா சொல்லுங்க. கதையை தர்றேன். அதுவும் நானே................ கதை வசனம் எழுதி, டைரக்ட் செய்றேன்"னு சொல்லிட்டாராம். 

"சரி, அப்பன்னா, தமிழல்லயும், கன்னடத்திலேயும் எடுப்போம். ஒரே நேரத்தில ரெண்டையும் எடுக்க உங்களால முடியுமா?" பாபா கேட்டிருக்கார். 

"ஏன் முடியாது, நான் ரெடி"
 
"அப்டீன்னா சரி, கதையை எழுத ஆரம்பிங்க" ன்னு சொல்லிட்டு, அக்ரிமெண்ட் போட்டு, அட்வான்ஸும் கொடுத்தாராம். 

எவ்வளவுக்கு எவ்வளவு சினிமாவுக்கு வரணும்னு ஆசைப்பட்டாரோ, அவ்வளவுக்கு அவ்ளோ தோல்விதான் அவருக்கு. அதனால TV க்கு தொடர்கள் எழுதி வெற்றி பெற்றாராம். இலக்கியத்திலும் கான்சென்ட்ரேட் செஞ்சதாலதான், அவர் பொழப்பு ஓடுச்சாம். 

இவர் வாங்கிய விருதுகள் : 
சாகித்திய அகாடமி விருது 
தினத்தந்தியின் சி.பா.ஆதித்தனார் விருது 
- மாலைமலர் 

Heezulia 

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jan 19, 2018 2:49 pm

சூப்பருங்க



Sponsored content

PostSponsored content



Page 3 of 12 Previous  1, 2, 3, 4 ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக