புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 I_vote_lcapதெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 I_voting_barதெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 I_vote_rcap 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 I_vote_lcapதெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 I_voting_barதெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 I_vote_rcap 
2 Posts - 6%
heezulia
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 I_vote_lcapதெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 I_voting_barதெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 I_vote_rcap 
2 Posts - 6%
mohamed nizamudeen
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 I_vote_lcapதெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 I_voting_barதெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிஞ்சதும் தெரியாததும்


   
   

Page 19 of 29 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 24 ... 29  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Dec 16, 2017 6:47 pm

First topic message reminder :

16.12.2017

'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.

சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார்.  அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?

எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?

உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.

Baby Heerajan  மீண்டும் சந்திப்போம்  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 30, 2018 6:33 am

தெய்வமகன்,தங்கசுரங்கம் சிவாஜிக்கு கிரீடம் தரித்த படங்கள் தெய்வமகனில் கடைசியானின் சுட்டிதனம், அந்த இடுப்பை ஒடித்த நடை அபாரம்.

சௌகார்ஜானகி அவர்கள் காவியத்தலைவில் அவரின் மிடுக்கான தோற்றம் நடிப்பு அபாரம்.
அதில் கலெக்டர் தோற்றம் என்று நினைக்கிறேன் அவர் கணவர் ஜெமினி இவரில்
கீழ் பணியாற்றுவார் ஒரே பாசபோராட்டம்.

துலாபாரம் ஏவிஎம் ராஜன் சாரதாவின் காதல் சோகத்தின் உச்சம்
ஒரே அழுகை தான் படம் முழுக்க.

நன்றி பேபி அரிய நல்ல கிடைக்கா பதிவுகள்.

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Jan 30, 2018 11:48 am

30.01.2018 

நன்றி முத்து சார். 

சௌகார் ஜானகியின் அந்த மிடுக்கான கலெக்டர் தோற்றம், காவியத்தலைவில இல்ல சார். இரு கோடுகள். ரெண்டுமே பாலசந்தரோடதுதான். ரெண்டிலேயும் ஜெமினி கணேசன். 

இரு கோடுகள் ரெண்டு பொண்டாட்டி கதை. சௌகார் ஜானகி & ஜெயந்தி.

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 KojDbdxPQEiAknDSu6O2+irukodugal

காவியத் தலைவில தப்பான புருஷன்காரன்ட்ட தப்பி, பாடகி & டான்ஸராக  வாழறா.
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 Q5HqHslQBKigQj3ndvcz+kaviyathalaivi 

இப்போ ஞாபகத்துக்கு வந்திருக்கணுமே. 

Heezulia

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 30, 2018 7:33 pm

heezulia wrote:30.01.2018 

நன்றி முத்து சார். 

சௌகார் ஜானகியின் அந்த மிடுக்கான கலெக்டர் தோற்றம், காவியத்தலைவில இல்ல சார். இரு கோடுகள். ரெண்டுமே பாலசந்தரோடதுதான். ரெண்டிலேயும் ஜெமினி கணேசன். 

இரு கோடுகள் ரெண்டு பொண்டாட்டி கதை. சௌகார் ஜானகி & ஜெயந்தி.

காவியத் தலைவில தப்பான புருஷன்காரன்ட்ட தப்பி, பாடகி & டான்ஸராக  வாழறா.

இப்போ ஞாபகத்துக்கு வந்திருக்கணுமே. 

Heezulia
மேற்கோள் செய்த பதிவு: 1258315
தெளிவுபடுத்தியமைக்கு நன்றி பேபி
இரண்டு படங்களும் குழப்பிக்கொண்டேன்.

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Feb 06, 2018 1:07 am

06.02.2018

இந்தப் படம் எடுக்கும்போது, கண்ணதாசன் ஒடம்பு சரியில்லாம ஆஸ்பத்திரீல இருந்தாராம். இந்தப் படத்துக்கு ஏற்கனவே கவிஞர் ரெண்டு பாட்டு எழுதிட்டாராம். இன்னும் ரெண்டு பாட்டு வேணுமேன்னு நெனச்சு, அவர் எப்போ ஆஸ்பத்திரில இருந்து வருவார்னு எல்லாரும் வெயிட் செஞ்சுட்டு இருந்தாங்களாம். 

ஆனா, கவிஞர் பாட்டு எழுதுற நிலைல இல்லையாம். ஏற்கனவே கம்பெனி சரியா ஓடாம, நஷ்டம் அடைற நிலையில இருந்துச்சாம். பாலசந்தர் வைரமுத்துவை கூப்பிட்டாராம், இந்தப் படத்துக்கு பாட்டெழுத. ஆனா இது MSV க்கு பிடிக்கலியாம். 

பாலசந்தர் வைரமுத்துட்ட இந்தப் பாட்டுக்கான சூழ்நிலையை சொன்னாராம். உள்ளூர் இளைஞர்கள் தண்ணீர் பஞ்சம் உள்ள அவங்க ஊர்ல, மலையிலிருந்து வருகின்ற  மழைத்தண்ணீரை கொண்டு வர்றாங்க. இந்த சமயத்தில ஒரு அசரீரி பாட்டு வரணும். இந்த மூணு நிமிஷ பாட்டுல, வாய்க்கால் வெட்டி முடிக்கணும். அந்த அளவுக்கும், ஸ்பீட்  & feelings வேணும் இந்தப் பாட்டுல. 

"சரி, ஒரு ட்யூன் போட்டு கொடுப்போம், அவர் பாட்டு எழுதுறாரான்னு பார்ப்போம்னு" ன்னு MSV சொன்னாராம். அவர் ட்யூனை கொடுத்துட்டு, வைரமுத்துவை திரும்பி பார்த்தார். ட்யூனை ரசித்தார் வைரமுத்து. "இன்னொரு தடவை வாசிங்க" இது வைரமுத்து. 

MSV care பண்ணலியாம். அரை மணி நேரமா வேற  என்னத்தையோ பேசிட்டு இருந்தார். அப்புறமா, சவால் படத்துக்கு ம்யூசிக் போட வேண்டியதிருக்கு. ஒரு வாரம் கழிச்சு பார்க்கலாம் ன்னு கெளம்பிட்டாராம். 

பாலசந்தர் விடல. "இப்ப எனக்கு பாட்டு வேணுமே. ஷூட்டிங் போகணும்".


MSV : கவிஞர் வந்து பாட்டு எழுதணுமே. 

இப்படி சொல்லிட்டு அவர் ஆர்மோனியத்தை மூடப் போனாராம்.

வைரமுத்து : நான் வேணும்னா பல்லவி சொல்லட்டுமா. உங்களை மாதிரி பாட வராது. நான் பாடறேனே. 

வைரமுத்து பாடி காட்டியிருக்கார். அடுத்தநாள் அந்தப்  பாட்டு ரெகார்ட் ஆகிருச்சு. 

தண்ணீர் தண்ணீர் படத்தில "ஒன்றுபட்ட மக்களுண்டு, இன்று என்ன சிக்கலுண்டு" பாடல்.

 
இதை வைரமுத்து ஒரு நிகழ்ச்சியில பேசினதில ஒரு பகுதி. 

இந்தப் படத்தில எனக்கு பிடிச்ச வசனங்கள் :

ரெண்டு பேர் பேசிட்டு போறாங்க. A  & B ன்னு வச்சுக்குவோமே.


A : தண்ணிக்கு இந்த ஊர்ல இவ்ள பஞ்சம்னா, நீங்க அரசாங்கத்துக்கு எழுதி போட்டிருக்கலாமே. 


B : போடாம என்ன, கோவில்பட்டிக்கு போயி மந்திரிய நேரவே பாத்து மகசர் கொடுத்தோம். அவர் அத வாங்கி PAட்ட குடுத்தாஹ. PA, அத கலெக்டர்ட்ட குடுத்தாஹ. கெலெக்டர் அத ப்ளாக் டெவலப்மெண்ட் ஆஃபீஸருக்கு அனுப்புனாஹ.  ப்ளாக் டெவலப்மெண்ட் ஆஃபீஸர் அத க்ராம சேவகத்துக்கு அனுப்பினாஹ.

A : க்ராம  சேவக் என்ன செய்தாரு?

B : க்ராம சேவக் இந்த ஊருக்கு வந்து பாத்துபுட்டு, 

"வாஸ்தவம், அந்த ஊர்ல தண்ணீ இல்லே" ன்னு ப்ளாக் டெவலப்மெண்ட் ஆஃபீஸருக்கு எழுதி போட்டாஹ.

ப்ளாக் டெவலப்மெண்ட் ஆஃபீஸரும்,  "வாஸ்தவம், அந்த ஊர்ல தண்ணீ இல்லே" ன்னு கலெக்டருக்கு எழுதி போட்டாஹ. 

கலெக்டரும், "வாஸ்தவம், அந்த ஊர்ல தண்ணீ இல்லே" ன்னு PA வுக்கு எழுதி போட்டாஹ. 

PA யும்,  "வாஸ்தவம், அந்த ஊர்ல தண்ணீ இல்லே" ன்னு மந்திரீக்கு நோட்டு எழுதி வச்சாஹ. 

மந்திரீயும்,  "வாஸ்தவம், அந்த ஊர்ல தண்ணீ இல்லே" ன்னு சட்டசபேல ஒத்துக்கிட்டாஹ.

கொஞ்சம் மௌனம். அப்புறமா,  


A : இந்த உண்மய கண்டுபிடிக்க அவுகளுக்கு அஞ்...........சு வருஷமாச்சு. 

B சத்தம் போ.........ட்டு சிரிச்சுட்டு : அந்த கோவத்திலதான் இந்த எலக் ஷன பாய்காட் பண்ணிட்டீங்களா?

A :[தலைய தடவிட்டே] எங்களால முடிஞ்சுது அவ்ளதான். 


Heezulia

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Feb 06, 2018 11:59 am

அணைத்து பதிவுகளும் படித்தேன் ரசித்தேன்



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Feb 07, 2018 5:40 pm

07.02.2018 

எல்.....................லாத்தையும் படிச்சிட்டீங்களா SK? சந்தோ.............ஷம்.

இன்னாங்கடா, இப்படி இவங்க விளையாடிட்டு இருந்தா, எனக்கு தெரியாததை நான் எப்ப, எப்படி தெரிஞ்சுக்கிறதுன்னு திட்டினீங்கல்ல? அதுதான் நான் நாக்கை கடிச்சுக்கிட்டேன். யார்றா நம்மளை திட்றதுன்னு யோசிச்சேன். இப்பல்ல தெரியுது, அது நீங்கதான்னு. இனிமே இப்படீல்லாம் திட்டாதீங்க. இதை படீங்க.

'Ten Little Niggers' இப்படி ஒரு நாவலாம்.  1939 ல வெளி வந்ததாம்.  யாருடையது?  அகதா கிறிஸ்டி இருக்கார்ல, அவரோடதாம்.  என்னடா, இத பத்தி எல்லாம் எதுக்கு சொல்றேன்னு கேக்குறீங்களா?  அது ஒண்ணுமில்லீங்க.  இந்த நாவலின் தழுவல்தான் இந்தப் படமாம். 

எந்தப் படம்னு சொல்லலியோ? ஆமாங்க சொல்லல. 

அதாங்க நடு இரவில், 1970.

எஸ்.பாலச்சந்தரே ஒரு முக்கியமான ரோல்ல நடிச்சிருந்தாராம்.  பொதுவா  படத்துக்குப் பின்னணி இசையை  தனியா அமைச்சு படத்தோடு சேர்ப்பாங்களாம்.  இந்தப் படத்தில பாலச்சந்தர் ஒரு புதுமையான முறையை கையாண்டிருந்தாராம்.  இந்தப் படத்துக்கு இசையமைக்கவே இல்லியாம்.  அப்புறம் எப்பூடி? 

அவர்கிட்டே இருந்த ரெகார்ட்களில் இருந்த வேற வேற இசையை எல்லாம் யூஸ் செஞ்சு படத்திலே போட்டுட்டாராமே.  சோகமான சீன், த்ரில்லர் சீன் என அந்தந்த சீனுக்கேத்த இசை அவர்கிட்டே இசைத்தட்டுகள் இருந்துச்சாம்.  அதுங்களை வச்சுதான் இசை போட்டு முடிச்சாராம்.  அதனால இந்தப் படத்துக்கு இசையமைப்பதுக்கான செலவு கொறச்சலாவே இருந்துச்சாம்.  படத்துல வர சீன்களுக்கெல்லாம் அந்த இசை பொருத்தமா இருந்ததால, அவருடைய இந்த முயற்சி பெருசா பேசப்பட்டுச்சாம். 

இம்புட்டு செஞ்சும் என்ன பிரயோஜனம்?  படம் 1965ல முடிஞ்சு, 1966ல தணிக்கையாச்சாம்.  படம் எடுத்து முடிந்து அஞ்..................சு வருஷம் ஆயிருச்சாம்.  ஆனா, யா................ரும் இந்தப் படத்தை வாங்கலியாம்.  

1970 ல அவருக்கு வெளிநாட்டில வீணை கச்சேரி நடத்த சான்ஸ் கெடச்சுதாம்.  பாலச்சந்தர் ஒரு முடிவுக்கு வந்து, கச்சேரியில கெடக்கிற பணத்துல அவரே இந்தப் படத்தை ரிலீஸ் செய்றதுக்கு தைரியம் வந்துருச்சாம்.  அவரோட அதிர்ஷ்டம், கச்சேரிக்குப் போறதுக்கு முன்னாலேயே பணம்  கெடச்சிருச்சாம்.   ஒடனே எல்லா ஏரியாவிலேயும் அவரே படத்தை ரிலீஸ் செஞ்சுட்டார்.  

ரெண்டு வாரந்தானாம் போங்க.  படம், ஆ........................ஹா,  ஓ.....................ஹோ.  ஹௌஸ் ஃபுல்............ ஹௌஸ்ஃபுல்லோ புல்....................தானாம். 

இந்தப் படத்தை வாங்கமாட்டேன்னு ஒத்.............த  கால்ல நின்னவங்கல்லாம், இன்னொரு காலையும் ஊனி படத்தை வாங்க போட்டி போட்டுட்டு ஓடி வந்து நின்னாங்களாம்.   

விநியோக உரிமையை ஏரியா வாரியா பிரிச்சு கொடுத்துட்டு சந்தோ............ஷமா, மன நிறைவோடு, வெளிநாட்டுக்குக் கச்சேரி நடத்த வெளிநாட்டுக்குப் போனாராம்.  படம் முடிஞ்ச உடனே,   ரசிகர்கள் எல்லாரும் எந்திரிச்சு நின்னு கை தட்டினாங்களாம்.  


Heezulia

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Feb 07, 2018 6:42 pm

07.02.2018

"விசிலடிச்சான்  குஞ்சுகளா குஞ்சுகளா" பாட்டு இருக்கே, மாணவன், 1970, படத்தில.  இந்தப் பாட்டின் மெட்டிலேயே, இருவ்..........வது  வருஷம் கழிச்சு ஒரு பாட்டுல வந்திருக்கே.  என்ன பாட்டுன்னு யோசிக்கிறீங்களா?  அதாங்க உலகநாதன், கா..............னா  உலகநாதன் பாடிய பாட்டு ஓஹோன்னு பிரபலமடஞ்சதுல்ல!  "வாள மீனுக்கும் விலங்கு  மீனுக்கும் கல்யாணம்."    


கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள்" அப்படீன்னு ஒரு பாட்டுக்கு கே.வி.எம். ட்யூன் போட்டாருல்ல, எங்க வீட்டுப்  பெண் படத்துல? அதுக்கப்புறம் அஞ்..............................சு வருஷத்துக்குப் பின்னால மாட்டுக்கார வேலன் படத்துல அதே ட்யூன்ல "பட்டிக்காடா பட்டணமா"  பாட்டு உருவாச்சு.  அந்த மெலடி பாட்டு ஹிட்டாகலியாம்.  ஆனா இந்த டப்பாங்குத்து பாட்டு, அதுதான் தெரியுமே.

சரி சரி ....................எனக்கு கேக்குது .......................இந்த ரெண்டு பாட்டையும்  நீங்க பாடி பாக்குறது.  ஹா ஹா ஹா ... நானும் இதை நெட்ல படிச்சப்போ, இப்டித்தான். 

Heezulia


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Feb 07, 2018 8:22 pm

07.02.2018

'சிவாஜி புரொடக் ஷன்ஸ்' தொடங்கப்பட்டு, முதல் தயாரிப்பு, வியட்நாம் வீடு, 1970.  இப்போதும் இந்த நிறுவனத்தாரின் எம்ப்ளம் காட்டும்போது 'வியட்நாம் வீடு' படத்தின் கிளாப் போர்ட் இருக்குதாம். 
 
கே.சுந்தரம் எழுதிய  வியட்நாம் வீடு கதை  மேடை நாடகமாச்சுதாம்.  அதிலேயும்  சிவாஜிதான்  நடிச்சாராம்.  அவருக்கு ஜோடியா ஜி. சகுந்தலா நடிச்சாராம்.  இவர் நடிப்பு, வியட்நாம் வீடு படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடிச்ச  பத்மினி நடிப்பை விட ரொம்ப நல்லா இருந்துச்சுன்னு சொல்ற அளவுக்கு ஜி.சகுந்தலா நடிச்சிருந்தாராம்.   அந்த நாடகம் ஜனங்களுக்கு பிடிச்சிருந்துச்சாம்.   அதனால அந்தக் கதை திரைப்படமாக எடுக்கப்பட்டுச்சாம். சிவாஜி அதுவரைக்கும் ஏற்று நடிக்கா.............த ஒரு ரோல்ல நடிச்சிருந்தாராம்.  இந்த வருடத்தின் சிறந்த படமென தமிழக அரசின் விருது கெடச்சுது.  

படத்துக்கு ஒரு சோகப் பாட்டு தேவைப்பட்டுச்சாம்.  கே.வி.எம். கண்ணதாசனைக் கூப்பிட்டு அனுப்பினாராம்.  இயக்குனர் கண்ணதாசன் கிட்டே காட்சியின் சிச்சுவேஷனை விவரமா சொன்னாராம்.  ஒடனே கண்ணதாசனுக்கு பாரதியார் பாட்டு ஞாபகம் வந்துச்சாம்.  அதாங்க "உன் கண்ணில் நீர் வழிந்தால்..............."  பாட்டு.  பாரதியாரின் இந்த வரியையே கண்ணதாசன் தனது பாட்டின் முதல் வரியாக்கி,  மத்த வரிகளை தன சொந்த வரிகளைப் போட்டாராம்.  பாட்டு சூப்பர் ஹிட்டாயிருச்சுல்ல!!!  

இந்தப் பாட்டுல ஒரு விசேஷம் என்னான்னா, இந்தப் படத்தின்  பாட்டு  புத்தகத்தில, "உன் கண்ணில் நீர் வழிந்தால்" பாட்டை இயற்றியவர் பாரதீன்னே போடச்சொல்லி கேட்டுகிட்டாராம், கண்ணதாசன்.  எம்புட்டு பெரீ...........................ய மனசு பாருங்க.  

படத்துக்கு நூறு நாள் ஓடிய பெருமை.



Heezulia

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Feb 08, 2018 11:18 am

வியட்நாம் வீடு

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 3838410834 தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 19 3838410834



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Feb 08, 2018 11:19 am

இந்தப் படத்தை வாங்கமாட்டேன்னு ஒத்.............த கால்ல நின்னவங்கல்லாம், இன்னொரு காலையும் ஊனி படத்தை வாங்க போட்டி போட்டுட்டு ஓடி வந்து நின்னாங்களாம்.

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



Sponsored content

PostSponsored content



Page 19 of 29 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 24 ... 29  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக