புதிய பதிவுகள்
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!  Poll_c10உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!  Poll_m10உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!  Poll_c10 
89 Posts - 77%
heezulia
உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!  Poll_c10உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!  Poll_m10உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!  Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!  Poll_c10உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!  Poll_m10உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!  Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!  Poll_c10உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!  Poll_m10உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!  Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!  Poll_c10உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!  Poll_m10உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!  Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!  Poll_c10உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!  Poll_m10உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!  Poll_c10உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!  Poll_m10உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!  Poll_c10 
254 Posts - 77%
heezulia
உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!  Poll_c10உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!  Poll_m10உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!  Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!  Poll_c10உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!  Poll_m10உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!  Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!  Poll_c10உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!  Poll_m10உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!  Poll_c10 
8 Posts - 2%
prajai
உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!  Poll_c10உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!  Poll_m10உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!  Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!  Poll_c10உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!  Poll_m10உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!  Poll_c10உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!  Poll_m10உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!  Poll_c10உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!  Poll_m10உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!  Poll_c10 
3 Posts - 1%
Barushree
உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!  Poll_c10உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!  Poll_m10உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!  Poll_c10உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!  Poll_m10உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 13, 2017 8:31 pm

உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!  Zby72hnRgeqZ0lTsSttO+Heart-1

லப்.. டப்.. லப்.. டப்.. சத்தம் உங்கள் இடது நெஞ்சில் இருந்து வருகிறதா? இதுதான் இதயத் துடிப்பின் அற்புத ஒலி.

உங்கள் உள்ளங்கைக்குள் அடங்கிவிடும் அளவுக்குத்தான் இதயம் இருக்கிறது. ஆனால், அதற்குள்தான் எத்தனை அதிசயங்கள்!

இதயம் ஒரு தசை வீடு. அதற்குள் எலும்புகளே இல்லை. இதயத்தின் மேலே இரண்டு அறைகள்; கீழே இரண்டு அறைகள். மேல் அறைகளுக்கு வலது ஏட்ரியம், இடது ஏட்ரியம், கீழ் அறைகளுக்கு வலது வென்ட்ரிக்கிள், இடது வென்ட்ரிக்கிள் என்று பெயர். மேல் அறைகளைவிட கீழ் அறைகளின் சுவர் கொஞ்சம் தடித்து இருக்கிறது.

நமக்கு மட்டுமில்லை, பறவைகளுக்கும் பாலூட்டிகளுக்கும் நான்கு அறைகள் கொண்ட இதயம்தான். ஆனால் ஆமை, தவளையின் இதயத்துக்கு மூன்று அறைகள்; ஒரு வென்ட்ரிக்கிள் குறைவு. மீன், ஆக்டோபஸுக்கு இரண்டு அறைகள் கொண்ட இதயம்; ஓர் ஏட்ரியம், ஒரு வென்ட்ரிக்கிள். பாம்பு, பல்லி, முதலை ஆகியவற்றுக்கு இரண்டு வென்ட்ரிக்கிள்கள் மட்டுமே! ஏட்ரியம் இல்லை. பூச்சிகளுக்கு குழாய் போன்று ஒரே ஓர் அறைதான்.

கிணற்றிலிருந்து தொட்டிக்குத் தண்ணீர் ஏற்றும் கம்ப்ரஸர் மோட்டாரைப் பார்த்திருப்பீர்கள். அதில் இரண்டு குழாய்கள் இருக்கும். ஒரு குழாயில் காற்று இருக்கும். அது தரும் அழுத்தத்தில் அடுத்த குழாய் தண்ணீரை மேலே தள்ளும். இந்த மோட்டார் மாதிரிதான் இதயமும் வேலை செய்கிறது.

நன்றி
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 13, 2017 8:33 pm

உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!  Q0QK6sLtSKyunK1khGkF+Heart-2col

இதயம் ஓர் இரட்டை மோட்டார். எப்படி? இதயத்தின் வலது பக்க மோட்டார் உடல் ரத்தத்தைப் பெற்றுக்கொள்கிறது. இடது பக்க மோட்டார் ரத்தத்தை உடலுக்கு அனுப்பி வைக்கிறது. இதைக் கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம்.

உடலின் கீழ் பாகத்திலிருந்து கீழ்பெருஞ்சிரை எனும் ரத்தக்குழாய் வழியாகவும், மேல் பாகத்திலிருந்து மேற்பெருஞ்சிரை வழியாகவும் வலது ஏட்ரியத்துக்கு ஆக்ஸிஜன் குறைந்த அசுத்த ரத்தம் வருகிறது.

வலது, இடது நுரையீரல்களிலிருந்து தலா இரண்டு நுரையீரல் சிரைகள் வழியாக ஆக்ஸிஜன் மிகுந்த சுத்த ரத்தம், இடது ஏட்ரியத்துக்கு வரும். இதயம் துடிக்கும்போது மேலறைகள் சுருங்கும்; கீழறைகள் விரியும். அப்போது வலது ஏட்ரியத்திலிருந்து வலது வென்ட்ரிக்கிளுக்கும், இடது ஏட்ரியத்திலிருந்து இடது வென்ட்ரிக்கிளுக்கும் ரத்தம் போகும். மோட்டார் குழாயில் காற்று வருவதுபோல், இதயத்துக்கு ரத்தம் வரும் வழி இது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 13, 2017 8:34 pm

உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!  1NtwgkiBTA2buP8oCFeg+Heart-4

இதயத்துடிப்பின் அடுத்த கட்டமாக, கீழறைகள் சுருங்கும்; மேலறைகள் விரியும். அப்போது வலது வென்ட்ரிக்கிள் ரத்தம் நுரையீரல் தமனி வழியாக நுரையீரல்களுக்குச் செல்லும். இடது வென்ட்ரிக்கிள் ரத்தம் மகாதமனி வழியாக உடலின் எல்லா பாகங்களுக்கும் செல்லும். மோட்டார் தண்ணீரைத் தொட்டிக்குள் தள்ளுகிற மாதிரி, இதயம் ரத்தத்தை உடலுக்குள் தள்ளுகிறது.

அது சரி, வென்ட்ரிக்கிள் ரத்தம் ஏட்ரியத்துக்குள் நுழைந்துவிடாதா? இங்கு இதயத்தின் அதிசயத்தை நீங்கள் பார்க்கலாம். இதயத்திலும் கதவுகள் இருக்கின்றன. அவற்றுக்கு ‘வால்வுகள்’ என்று பெயர். இவை ஒரு பக்கமாகவே திறக்கும் அதிசயக் கதவுகள்!

வலது ஏட்ரியத்துக்கும் வென்ட்ரிக்கிளுக்கும் நடுவில் ஒரு வால்வு இருக்கிறது. அதற்கு ‘மூவிதழ் வால்வு’ என்று பெயர். இடது ஏட்ரியத்துக்கும் வென்ட்ரிக்கிளுக்கும் நடுவில் ஒரு வால்வு இருக்கிறது. அதற்கு ‘ஈரிதழ் வால்வு’ என்று பெயர். இவை கீழ்நோக்கி மட்டுமே திறப்பதால், ஏட்ரியங்கள் சுருங்கும்போது, அவற்றிலிருந்து வென்ட்ரிக்கிள்களுக்கு ரத்தம் வரும். ஆனால், வென்ட்ரிக்கிள்கள் சுருங்கும்போது இவை மூடிக்கொள்வதால், ரத்தம் ஏட்ரியங்களுக்குச் செல்ல முடியாது.

வலது வென்ட்ரிக்கிளில் நுரையீரல் சிரை புறப்படும் இடத்திலும், இடது வென்ட்ரிக்கிளில் மகாதமனி புறப்படும் இடத்திலும் வால்வுகள் உள்ளன. இவற்றுக்குப் ‘பிறைச்சந்திர வால்வுகள்’ என்று பெயர். இவை மேல்நோக்கித் திறக்கும் வால்வுகள். அதனால், வென்ட்ரிக்கிள்கள் சுருங்கும்போது, வென்ட்ரிக்கிளிலிருந்து ரத்தம் மேல் நோக்கித் தள்ளப்படுகிறது. அப்போது நுரையீரல் தமனி வழியாக நுரையீரல்களுக்கும், மகாதமனி வழியாக உடலின் பல பகுதிகளுக்கும் ரத்தம் செல்கிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 13, 2017 8:38 pm

உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!  5sF37U1pT9S0yS3TqYAj+Heart-2col

தேவேளையில் ஏட்ரியங்கள் சுருங்கும்போது நுரையீரல் தமனி மற்றும் மகாதமனியிலிருந்து ரத்தம் வென்ட்ரிக்கிள்களுக்குத் திரும்பி வர முடியாது. இந்த வால்வுகள் பழைய நிலைக்கு வந்து மூடிக்கொள்வதுதான் அதற்குக் காரணம்.

இன்னோர் அதிசயமும் இதயத்தில் உண்டு. இரண்டு ஏட்ரியங்களுக்கு இடையேயும், இரண்டு வென்ட்ரிக்கிள்களுக்கு இடையேயும் சுவர் உண்டு. இதனால், இவற்றின் ரத்தம் ஒன்றுடன் மற்றொன்று கலந்துவிட முடியாது. இந்தச் சுவரில் துளை விழுந்தால் மட்டுமே கலக்கமுடியும். சிலருக்குப் பிறப்பிலேயே இதயத்தில் துளை இருப்பதாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது இந்தச் சுவரில் ஏற்படுவதுதான். இதை அறுவை சிகிச்சை செய்து சரிப்படுத்திவிடலாம்.

வலது ஏட்ரியம் – வலது வென்ட்ரிக்கிள் – நுரையீரல்கள். இந்தப் பாதைக்கு ‘நுரையீரல் ரத்த ஓட்டம்’ என்று பெயர். இடது ஏட்ரியம் – இடது வென்ட்ரிக்கிள் – உடல் பாகங்கள். இதற்கு ‘உடல் ரத்த ஓட்டம்’ என்று பெயர். எனவேதான் இதயத்தை ‘ஓர் இரட்டை மோட்டார்’ என்கிறோம்.

(இன்னும் அறிவோம்)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.

நன்றி
தி இந்து

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Dec 14, 2017 11:48 am

அருமையான பதிவு பயனுள்ள தகவல்

நன்றி ஐயா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 14, 2017 9:48 pm

SK wrote:அருமையான பதிவு பயனுள்ள தகவல்

நன்றி ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1253266
நன்றி நண்பரே

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக