புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_c10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_m10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_c10 
54 Posts - 44%
ayyasamy ram
பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_c10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_m10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_c10 
51 Posts - 42%
mohamed nizamudeen
பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_c10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_m10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_c10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_m10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_c10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_m10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_c10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_m10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_c10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_m10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_c10 
2 Posts - 2%
prajai
பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_c10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_m10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_c10 
2 Posts - 2%
Manimegala
பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_c10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_m10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_c10 
2 Posts - 2%
Saravananj
பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_c10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_m10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_c10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_m10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_c10 
417 Posts - 48%
heezulia
பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_c10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_m10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_c10 
290 Posts - 34%
Dr.S.Soundarapandian
பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_c10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_m10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_c10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_m10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_c10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_m10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_c10 
28 Posts - 3%
prajai
பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_c10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_m10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_c10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_m10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_c10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_m10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_c10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_m10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_c10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_m10பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 07, 2017 3:50 pm

[size=37]பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை[/size]
பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை Ld4613054429
[size=35]2017-12-04 15:09:55[/size]
[size=37]நன்றி குங்குமம் தோழி 

இந்தியாவின் மற்ற பெருநகரங்களுடன்  ஒப்பிடுகையில் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் சென்னையில் மிகவும் குறைவு. டெல்லியில் நிகழ்த்தப்பட்டது போல் ஓடும் பேருந்தில் ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் சென்னையில் நடந்ததில்லை. அதற்கான சாத்தியங்களும் மிகக்குறைவே. நள்ளிரவிலும் கூட சுதந்திரமாக வெளியில் உலவும் பெண்களை சென்னையில் பார்க்க முடியும். சென்னையைப் போல் வேறெந்த நகரத்திலும் தங்களுக்கு இப்படியொரு பாதுகாப்பு உணர்வு கிடைத்ததில்லை என பல பெண்கள் தங்கள் வாழ்வு அனுபவத்தில் இருந்து கூறுகின்றனர். பல்வேறான மக்கள் கூடியுள்ள நகரமாக இருந்தாலும் எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் பண்பு சென்னைக்கு இருக்கிறது. ஆகவே இங்கு குற்றங்கள் மிகக்குறைவு. நம் தமிழ் பண்பாட்டு மதிப்பீடுகளும் இதற்கு வலு சேர்க்கிறது. சென்னையை பாதுகாப்பான நகரமாக உணர்கிறீர்களா என பல்வேறு தரப்பட்டபெண்களிடம் கேட்டேன்.

கொச்சினைச் சேர்ந்த ஊடகவியலாளர் நயன்தாராவிடம் பேசியபோது, “2008ம் ஆண்டிலிருந்து 2015ம் ஆண்டு வரை பணிநிமித்தமாக சென்னையில் வசித்தேன். கேரளாவில் கிடைக்காத பாதுகாப்புணர்வு எனக்கு சென்னையில் கிடைத்தது. இரவு 10 மணிக்குக் கடற்கரைக்குப் போயிருக்கிறேன். 11 மணிக்கு மேல் நகரில் உலாவிஇருக்கிறேன். எந்தப் பிரச்னையையும் எதிர்கொள்ளவில்லை. ஆனால் கொச்சினில் இரவு நேரங்களில் அப்படி சுதந்திரமாக உலாவ முடியாது. இரவு 7 மணிக்கு மேல் கடற்கரையில் அனுமதி கிடையாது. பாலியல்ரீதியிலான வன்முறைக்கான வாய்ப்புகள் கேரளாவில் அதிகம் என்பதால் இரவு நேரங்களில் வெளியே வருவதற்கு தயங்க வேண்டியிருக்கும். சென்னையில் செயின் பறிப்பு போன்ற குற்றங்கள்  நிகழ்த்தப்பட்டாலும் பாலியல்ரீதியிலான குற்றங்கள் நிகழாது. மாடர்ன் ட்ரெஸ் அணிந்து சென்றாலும் அதை இயல்பாகவே பார்ப்பார்கள். ஆனால் கேரளாவில் அந்தப் பார்வை male gaze என்று சொல்லப்படும் வக்கிரப் பார்வையாக இருக்கும். பெண்களை உயர்வாகக் கருதுவது தமிழ் பண்பாட்டிலேயே இருக்கிறது. ஆனால் கேரளாவில் அப்படியொரு பண்பாடு இல்லை. இந்த வேறுபாட்டை நாம் இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் ஒரு பெண் முதலமைச்சர் ஆனது போல் கேரளாவில் ஆனதில்லை. அரசியல் மற்றும் பொதுத்தளத்தில் பெண்களுக்கான இடம் மிகவும் குறைவாகவே இருக்கிறது. ஆகவே பெண்கள் மீதான அடக்குமுறைகளும் அதிகமாக இருக்கிறது. இந்நிலையை மாற்றியமைப்பதற்கான செயல்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலை முழுவதுமாக மாற நிறைய காலம் ஆகும் எனத் தோன்றுகிறது” என்கிறார். [/size]
[size=37]நன்றி[/size]
[size=37]தினகரன்[/size]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 07, 2017 3:52 pm

[size=39]தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மேகலா, “எனக்கு சொந்த ஊர் மதுரை. சென்னைக்கு வந்து நாலு ஆண்டுகள் ஆச்சு. நான் உணர்ந்த வகையில சென்னை ரொம்பவும் பாதுகாப்பான நகரம். என் வீடு கொளத்தூர்லயும் அலுவலகம் கிண்டிலயும் இருக்கு. தினமும் அலுவலகம் முடிஞ்சதும் ரேஸ் கோர்ஸ் வழியா நடந்து போய்தான் பஸ் ஏறுவேன். அலுவலகம் முடிய சில நாட்கள்ல 9 மணிக்கு மேல கூட ஆகும். எத்தனை மணியானாலும் பயமே இல்லாம போவேன். பஸ்ல போகும் போதும் அப்படித்தான். பெரும்பாலானவங்க ரொம்ப இயல்பா பார்ப்பாங்க. சிலருடைய பார்வை வேற மாதிரி இருக்குமே தவிர அதைத்தாண்டி எதுவுமில்லை. வேணும்னே இடிக்கிறது, உரசுறதையெல்லாம் நான் பார்த்ததில்லை. மதுரையில நான் எப்படி இருந்தேனோ சென்னையிலும் நான் அப்படியே இருக்கேன்” என்கிறார். ‘‘சென்னை ரொம்பவுமே பாதுகாப்பான நகரம்னு சொல்ல முடியாது. ஆனால் மற்ற நகரங்களோட ஒப்பிடறப்போ பாதுகாப்பானதுதான். பஸ், ரயில்ல போறப்ப உரசுறது மாதிரியான விசயங்கள் சென்னையில நடக்கவே செய்யுது. கிண்டல் பண்றது வெளிப்படையாகவே நடக்குது. இந்த நிலையிலதான் இருக்கே தவிர இதுக்கும் அடுத்த நிலைக்கெல்லாம் போகலை. ஜல்லிக்கட்டுப் போராட்டத்துல நானும் கலந்துகிட்டேன். இரவும் பகலுமா நடந்த போராட்டத்துல பெண்கள் எந்த வித கிண்டலுக்கும், பாலியல் சீண்டலுக்கும் ஆளாகலை. அந்த கண்ணியம் இந்த நகரத்துல இருக்கு. ஐடி துறையில் பெண்களுக்கு எதிரான விசயங்கள் இருக்குன்னாலும் அதை ரொம்ப வெளிப்படையா பண்ண முடியாத அளவுக்கு விதிமுறைகள் இருக்கு. சென்னையில எந்த பயமும் இல்லாம வாழ முடியும்கிறது உறுதி” என்கிறார் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் டாலி.[/size]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 07, 2017 3:53 pm

[size=39]பாடகியான சோஃபியா அஷ்ரஃப்பிடம் சென்னை குறித்து கேட்டபோது, “நான் சென்னை, மும்பை இரண்டு நகரங்கள்லயும் வாழ்ந்திருக்கேன். அந்த அனுபவத்தின்படி மும்பையைவிட சென்னை பெண்களுக்குப் பாதுகாப்பான நகரம்னு சொல்லலாம். மும்பையுமே கூட பெண்களுக்கு அச்சுறுத்தலான நகரம்னு சொல்லிட முடியாது. இரண்டு நகரங்களுக்கு நிறைய வேறுபாடுகள் இருக்கு. சென்னையில் ஒரு பிரச்னைன்னா போலீஸ்ல புகார் கொடுத்தால் உடனே நடவடிக்கை எடுப்பாங்க. ஆனால் மும்பையில அப்படியில்லை. சென்னையில ரொம்ப மாடர்னா ட்ரெஸ் பண்ண முடியாது. ஏன்னா உறுத்துற மாதிரியான பார்வை இருக்கும். ஆனா மும்பையில நமக்குப் பிடிச்சபடி ட்ரெஸ் பண்ணலாம். யாரும் அதை பெருசா பொருட்படுத்த மாட்டாங்க. சென்னையில் உதவி பண்ற மனப்பான்மை அதிகமா இருக்கு. மும்பையில் அதைப் பார்க்க முடியாது. ஆனால் பெண்களை கேலி செய்வது மும்பையை விட சென்னையிலதான் அதிகம்” என்கிறார். என்றாலும் ஒப்பீட்டளவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சென்னையில் குறைவுதான். சென்னை நகரத்தின் பண்பு எப்படிப் பட்டது? பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் இந்நகரில் பெருகாததற்கான காரணம் என்ன? என்பது போன்ற கேள்விகளை சமூக ஆர்வலர் மோகனிடம் முன் வைத்தேன்.[/size]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 07, 2017 3:55 pm

[size=39]சென்னையைப் பற்றி பேசுவதற்கு முன் நாம் டெல்லி, மும்பை என இந்த இரண்டு நகரங்கள் குறித்து பேசியாக வேண்டும். டெல்லியைக் காட்டிலும் மும்பை பெரிய நகரம் என்பதோடு பல மடங்கு அதிக பணக்காரர்களைக் கொண்ட நகரம். அப்படி இருந்தும் மும்பையை விட டெல்லியில் பெண்கள் மீதான குற்றச்செயல்கள் அதிகம் நிகழ்த்தப்படுவது ஏன்? பணமும், அதிகாரமும் எந்த நகரத்தில் இருக்கிறதோ அங்கு பெண்கள் ஒரு பொருளாகவே பார்க்கப்படுவார்கள் என்பதுதான் உலக விதி. டெல்லி அரசியல் தலைநகராய் இருப்பது தான் இதற்கான முதன்மை காரணம். மும்பை, சென்னை போன்ற நகரங்களுக்கு வருகிறவர்கள் நிரந்தரமாக அந்நகரில் வாழும் நோக்கோடுதான் வருவார்கள். ஆனால் டெல்லிக்கு வருகிறவர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல. அரசியல்ரீதியிலானவர்கள், தொழில் நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் என அந்நியர்கள் அதிகமாக வந்து போகும் நகரமாக டெல்லி இருக்கிறது. அப்படி வருகிறவர்களின் கண்ணோட்டம் அந்நகரை சிற்றின்பத்துக்கான நகரமாகப் பார்க்கிறது. அது பொதுக்கண்ணோட்டமாக மாறி டெல்லிக்குச் செல்கிற எல்லோருக்குள்ளும் அதற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. சொந்த ஊருக்கோ, உறவினரின் ஊருக்கோ செல்பவர்கள் அங்கு அழகான பெண்கள் இருப்பார்களா? அவர்களை உறவுக்கு இணங்க வைக்க முடியுமா? என்கிற எதிர்பார்ப்போடு போக மாட்டார்கள். ஆனால் பெரு நகரங்களின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கும் பிம்பம் அந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. [/size]

[size=39]டெல்லியில் பல அடுக்குகள் இருக்கின்றன. ஓர் அடுக்குக்கும் இன்னோர் அடுக்குக்கும் தொடர்பே இருக்காது என்பதால் அங்கு உரையாடல் சாத்தியமில்லை. சுலபமாக அதிக அளவில் பணம் புழங்குவதற்கான வாய்ப்புகள் அங்கு அதிகம். அப்படிக் கிடைக்கும் பணத்தை இன்பத்துக்காக செலவு செய்யவே நினைப்பார்கள். மதுவும், பெண்களும்தான் அவர்களுக்கான இன்பம். ஆனால் மும்பையிலோ சென்னையிலோ சுலபமாகவெல்லாம் பணம் கிடைத்து விடாது. அதற்கென உழைப்பை செலுத்த வேண்டும். பாலியல் தொழிலாளிக்குக் கொடுப்பதானாலும் யோசனை செய்துதான் கொடுப்பார்கள். டெல்லி மீதான கண்ணோட்டம் எப்படி இருக்கிறதோ நியூயார்க், லண்டன், பாரிஸ், பேங்காக் ஆகிய நகரங்கள் மீதான கண்ணோட்டங்களும் அப்படித்தான் இருக்கிறது. இவை எல்லாம் பணமும், அதிகாரமும் உள்ள நகரங்கள் என்பது குறிப்பிட வேண்டியது. [/size]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 07, 2017 3:57 pm

[size=39]பெண்ணை பொருளாகப் பார்க்கும் பார்வை அங்கு இருப்பதால் ஆண்- பெண் உறவு சிக்கல் நிறைந்ததாக இருக்கிறது. ஆண் - பெண் இருபாலினருக்குள்ளும் உரையாடல் இல்லாத நகரத்தில் பாலியல் வன்முறை இருக்கவே செய்யும்.[/size]

[size=39]நகரங்களின் தன்மையை நாம் homogeneous, heterogeneous என இரண்டாகப் பிரிக்கலாம். பல இனக்குழுக்களைச் சார்ந்தவர்கள் ஒரே சிந்தனையுடன் வாழும் நகரத்தை homogeneous எனலாம். சென்னைதான் இதற்கு சிறந்த உதாரணம். ஒரு மனித மன அமைப்புக்கும் இன்னொரு மனித மன அமைப்புக்கும் தொடர்பே இல்லாத இனக்குழுக்கள் வாழும் நகரம் heterogeneous. பேங்காக் இதற்கு சிறந்த உதாரணம். இந்தியாவில் டெல்லி மற்றும் பெங்களூரை இதற்கு உதாரணமாகக் கூறலாம். சென்னையிலிருந்து பெங்களூருக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்புணர்வு இருப்பதில்லை. ஆனால் பெங்களூரிலிருந்து சென்னைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்புணர்வு இருக்கும். காரணம் பெங்களூர் ஹெட்ரோஜீனஸ் நகரமாகவும், சென்னை ஹோமோஜீனஸ் நகரமாகவும் இருப்பதே. சென்னையில் தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் மற்றும் வட இந்தியர்கள் என பலதரப்பட்ட மக்கள் இருந்தாலும் இந்நகரின் மன நிலையைத் தீர்மானிக்கும் பெரும்பான்மை மக்கள் ஹோமோஜீனஸ் சிந்தனை கொண்டவர்கள். ஆண் - பெண்ணுக்கான உரையாடல் இங்கு சாத்தியம். அந்நியர்களையும் அரவணைக்கும் பண்பு இங்குள்ள மக்களுக்கு இருக்கிறது. ஆகவே இங்கு பாலியல் வன்முறைக்கான வாய்ப்புகள் குறைவு. தமிழ்நாட்டில் ஹோமோஜீனஸ் நகரத்துக்கு ஆகச்சிறந்த உதாரணம் மதுரை. அந்நகரில் பாலியல் வன்முறைக்கான சாத்தியங்கள் மிகமிகக் குறைவு.[/size]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 07, 2017 4:00 pm

[size=39]சென்னையில் போர்னோ சி.டி விற்பனை அதிகமாக இருக்கிறது. போர்னோ படங்களைப் பார்ப்பது என்பது மன அளவிலான வன்முறை. அதைத்தாண்டிய நிலைக்கு சென்னை நகரவில்லை. உளவியல்ரீதியிலான பல அடுக்குகள் உருவாகும் நிலையில் அந்த நிலைக்குப் போக வாய்ப்பிருக்கிறது. பொருளாதார அடுக்குகள் ஆண் - பெண் உறவைத் தீர்மானிப்பதில்லை. சென்னையில் ஒரு பெண்ணும் ஆணும் பேசிப் பழகுவதற்கு பொருளாதாரம் காரணமாக இருப்பதில்லை. அதுவே டெல்லி, பெங்களூர் போன்ற நகரங்களில் இது வேறுபட்டிருக்கும். சென்னை போன்ற நகரங்களில் அந்நியரிடம் பேசும்போது ‘அண்ணா’, ‘தம்பி’ என அழைப்பது இயல்பானது. ஆனால் டெல்லி போன்ற நகரங்களில் அப்படி அழைக்க மாட்டார்கள். எனவே அங்கு இயல்பான உரையாடல் சாத்தியம் இல்லாமற்போகிறது. உரையாடல் சாத்தியமற்ற இடத்தில் வன்முறை துளிர்விடுகிறது. சென்னை போன்று பாகுபாடு இல்லாத நகரங்களில் பெண்கள் மீதான வன்முறைகள் குறைவாக இருப்பதற்கு காரணம் இதுதான். சென்னையின் இந்த பண்புக்கு தமிழ் பண்பாட்டு மதிப்பீடுகளும் முக்கியக் காரணமாக இருக்கிறது. ஒரு நகரத்தின் பண்புகள்தான் அந்நகரவாசிகளை தீர்மானிக்கும். சென்னைக்கு வரும் வட இந்தியர்கள் சென்னையை விட்டுப் போக விரும்புவதில்லை. ஏனென்றால் இந்நகரம் அவர்களை அரவணைக்கிறது. சாமானியப்  பெண்கள் அவர்களுடன் இயல்பாகப் பேசுகிறார்கள். அவர்களுக்கு ஒரு பிரச்னை என வரும்போது துணை நிற்கிறார்கள். இது மற்ற நகரங்களில் சாத்தியம் இல்லை. அந்நியரை அரவணைக்கும் பண்பும் பாலியல் வன்முறைக்கான சாத்தியங்களைக் குறைக்கிறது. தமிழ் பெண்களுக்கு அந்தப் பண்பு இயல்பிலேயே இருக்கிறது. ஆகவே இந்நகரம் எவரையும் அரவணைக்கிற நகரமாக இருப்பதால் இங்கு குற்றங்கள் குறைந்து காணப் படுகிறது” என்கிறார் மோகன்.[/size]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 07, 2017 4:01 pm

[size=39]பேருந்தில் நின்று வருகிற பெண்ணை காமத்தோடு பார்க்கிற ஆணுமே கூட, அப்பெண் பக்கத்து இருக்கையில் அமரும்போது தீண்ட வேண்டும் என நினைக்க மாட்டான். ஏனென்றால் தன்னை நம்பி அமர்ந்திருக்கிற பெண்ணுக்குச் செலுத்த வேண்டிய மரியாதையை அவன் கொடுப்பான். நமது பண்பாடு நமக்கு இதைத்தான் கற்றுக் கொடுத்திருக்கிறது. தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் பல்லாயிரம் மக்கள் வந்து குழுமியிருப்பதால் சென்னையில் தமிழ் பண்பாட்டின் எதிரொலி இருக்கும். ஒப்பீட்டளவில் பெண்களுக்கு பாதுகாப்பான பெருநகரமாக சென்னை இருப்பது நாம் பெருமைப்பட வேண்டிய ஒன்று.[/size]

[size=39]இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் நடைபெறும் முதன்மையான பத்து நகரங்கள்[/size]
[size=39]டெல்லி[/size]
[size=39]மும்பை[/size]
[size=39]கொல்கத்தா[/size]
[size=39]பெங்களூர்[/size]
[size=39]குர்கான்[/size]
[size=39]துர்க்-பீளை நகர்[/size]
[size=39]நாக்பூர்[/size]
[size=39]போபால்[/size]
[size=39]குவாலியர்[/size]
[size=39]ஜோத்பூர்[/size]
[size=39]இந்நகரங்களில் கடந்த ஆண்டு இந்தி[/size]
[size=39]யாவிலேயே அதிக அளவில் ஜோத்பூரில்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. இந்த ஆண்டு குர்கானில் அதிக அளவிலான குற்றங்கள் பதிவாகியிருக்கின்றன.[/size]

[size=39]‘‘பல இனக்குழுக்களைச்[/size]
[size=39]சார்ந்தவர்கள் ஒரே சிந்தனையுடன் வாழும் நகரத்தை homogeneous எனலாம். சென்னைதான் இதற்கு சிறந்த உதாரணம். ஒரு மனித மன அமைப்புக்கும் இன்னொரு மனித மன அமைப்புக்கும் தொடர்பே இல்லாத இனக்குழுக்கள் வாழும் நகரம் heterogeneous. பேங்காக் இதற்கு சிறந்த உதாரணம்.''[/size]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 07, 2017 4:03 pm

[size=39]சென்னையில் செயின் பறிப்பு போன்ற குற்றங்கள்  நிகழ்த்தப்பட்டாலும் பாலியல் ரீதியிலான குற்றங்கள் நிகழாது. மாடர்ன் ட்ரெஸ் அணிந்து சென்றாலும் அதை இயல்பாகவே பார்ப்பார்கள். ஆனால் கேரளாவில் அந்தப் பார்வை male gaze என்று சொல்லப்படும் வக்கிரப் பார்வையாக இருக்கும். பெண்களை உயர்வாகக் கருதுவது தமிழ் பண்பாட்டிலேயே இருக்கிறது. ஆனால் கேரளாவில் அப்படியொரு பண்பாடு இல்லை.''[/size]

- கி.ச.திலீபன்

நன்றி
தினகரன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக