புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2 I_vote_lcapவிளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2 I_voting_barவிளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2 I_vote_rcap 
102 Posts - 74%
heezulia
விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2 I_vote_lcapவிளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2 I_voting_barவிளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2 I_vote_rcap 
19 Posts - 14%
Dr.S.Soundarapandian
விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2 I_vote_lcapவிளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2 I_voting_barவிளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2 I_vote_lcapவிளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2 I_voting_barவிளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2 I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2 I_vote_lcapவிளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2 I_voting_barவிளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2 I_vote_lcapவிளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2 I_voting_barவிளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2 I_vote_lcapவிளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2 I_voting_barவிளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2 I_vote_rcap 
267 Posts - 76%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai
விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2 I_vote_lcapவிளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2 I_voting_barவிளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2 I_vote_rcap 
5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree
விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2 I_vote_lcapவிளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2 I_voting_barவிளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 03, 2017 7:20 pm

வெகுஜன சந்தைக்குப் பின்னால் இருக்கும் அரசியல், வெற்றிகரமான இயற்கை விவசாயச் சந்தைகள் மற்றும் மாற்றுச் சந்தைகளுக்கான வாய்ப்புகள் குறித்து அலசும் தொடர் இது...

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் இயற்கை விளைபொருள்களின் விற்பனை ஆண்டுக்கு 30 சதவிகிதம் வரை அதிகரித்து வருகிறது. தற்போது இந்தியாவில், இயற்கை விளைபொருள்கள் 3,000 கோடி ரூபாயிலிருந்து 5,000 கோடி ரூபாய் வரை விற்பனையாகி வருவதாகச் சொல்லப்படுகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த விற்பனை இரு மடங்காகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2 MUwZHWFsQzqiHjEdsTx1+p38a
ஆனால், உலகின் மொத்த சாகுபடிப் பரப்பில் 1% பரப்பில்தான், அதாவது 10 கோடியே 75 லட்சம் ஏக்கர் பரப்பில்தான் இயற்கை வேளாண்மை மேற்கொள்ளப்படுகிறது. இயற்கை வேளாண்மையில் முதல் மூன்று இடங்களைப் பிடித்திருக்கும் நாடுகள்... ஆஸ்திரேலியா (1 கோடியே 72 லட்சம் ஹெக்டேர்), அர்ஜென்டினா (32 லட்சம் ஹெக்டேர்) மற்றும் அமெரிக்கா (22 லட்சம் ஹெக்டேர்) ஆகியவைதாம்.

உலகில் 11 நாடுகள் தங்கள் மொத்த விளைநிலத்தில், 10% அதிகமான நிலத்தை இயற்கை வேளாண்மையின் கீழ் கொண்டுவந்துள்ளன. விவசாயிகளின் எண்ணிக்கையை எடுத்துக்கொண்டால் உலகிலேயே இந்தியாவில்தான் அதிகமான இயற்கை விவசாயிகள் உள்ளனர். உலக அளவில் உள்ள 20 லட்சம் இயற்கை விவசாயிகளில், ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் இந்தியாவில்தான் உள்ளனர்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 03, 2017 7:20 pm

2002-ம் ஆண்டிலிலிருந்து 2011-ம் ஆண்டுக்குள் 170% இயற்கைச் சந்தை வளர்ச்சியடைந்திருக்கிறது. 2013-ம் ஆண்டில் உலகின் மொத்த இயற்கைச் சந்தையின் மதிப்பு 7,200 கோடி அமெரிக்க டாலர். இன்னும்
வளர்ந்துகொண்டேதான் இருக்கிறது. மேற்கத்திய நாடுகளில், ரசாயனத்தால் விளைவிக்கப்பட்ட பொருள்களோடு ஒப்பிடும்போது, இயற்கை விளைபொருள்கள் சராசரியாக 30% அளவு அதிக விலை வைத்து விற்பனை செய்யப்படுகின்றன. நுகர்வோர் பெருகினால், இயற்கை விளைபொருள்களின் விலை குறையும். இது, நம் நாட்டுக்கும் பொருந்தும்.

விவசாயிகள் விளைவிக்கும் பொருள்களுக்கு நியாயமான விலை கொடுக்கப்படுவதாலும் தேவையைவிட உற்பத்தி குறைவாக இருப்பதாலும் இயற்கை விளைபொருள்கள் அதிக விலையில் விற்கப்படுவதைப் போன்று தோன்றலாம். ஆனால், உண்மை அதுவல்ல. விஷமற்ற இந்த உணவுப் பொருள்கள், மருத்துவக் காப்பீட்டையும் உள்ளடக்கியவை. அதாவது, இப்பொருள்களை உண்பவர்கள் மருத்துவமனைகளில் போய் நின்று மருத்துவருக்கும் மருந்துக்கும் அடிக்கடி
செலவு செய்ய வேண்டியிருக்காது. இயற்கை விளைபொருள்களில் உயிர்ச்சத்து நிறைந்திருப்பதால் பல நன்மைகள் உண்டு. தனி மனித உற்பத்தித்திறன் அதிகரிக்கும். அதனால், பணமும் நேரமும் மிச்சப்படும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 03, 2017 7:21 pm

நஞ்சில்லாமல் விளைவிக்கப்படும் பொருள்களுக்கு, நியாயமான விலை கொடுப்பது சரிதான். ஆனால், ‘இயற்கை விளைபொருள்கள் என்று சந்தைக்கு வரும் அனைத்தும், உண்மையிலேயே இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டவைதானா... அவற்றுக்கு நியாயமான விலை எது’ என்ற கேள்விகள், அனைவரிடத்திலும் உண்டு.

பண்டைய வாணிப முறையில் நல்லுறவு நிறைந்த, பேராசை இல்லாத, சிறு வணிகம் இருந்தது. சில பல ஆண்டுகளுக்கு முன்புகூட, நம் தெருக்கோடியிலிருக்கும் மளிகைக் கடையில், ‘என்ன அண்ணாச்சி, எண்ணெய் இருக்கா’ என்று கேட்டால்... ‘செக்கு வெச்சிருக்குற செட்டியார் வீட்டுல கல்யாணம். எண்ணெய் கிடைக்க ரெண்டு, மூணு நாள் ஆகும்’ என்ற பதிலைச் சொல்வார். அதாவது உற்பத்தியாளர், விற்பனையாளர், நுகர்வோர் என மூவருக்குமே பல வகைகளில் தொடர்புகள் இருந்தன. அதனால், முறைகேடுகள் நடக்கவில்லை. பெரிய அளவில் ஏய்ப்புகள் இல்லை. விற்பனையாளருக்கு என்று பொறுப்புகளும் இருந்தன. ஆனால், தற்போது நிலைமை தலைகீழ்.
விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2 G5Kzekv2QqGfSQHXNIOV+p38c

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 03, 2017 7:22 pm

இன்றைய சூழ்நிலையில் மருத்துவம், கல்வி... என அனைத்துமே வணிகமயமாகிவிட்டதால், ஏய்ப்புகள், முறைகேடுகள் எல்லா இடங்களிலுமே இருக்கின்றன. அதே நிலைதான், இயற்கை அங்காடிகளிலும். நாம்தான் நல்ல அங்காடிகளைத் தேடிப்பிடிக்க வேண்டும். இந்தியாவில் பெரும்பாலான இயற்கை விவசாயிகள் தங்களுக்குச் சந்தை வாய்ப்புகள் இல்லை என்றுதான் சொல்கிறார்கள். அதே நேரத்தில் இயற்கைச் சந்தை, லாபவெறி கொண்ட கார்ப்ரேட்டுகள் கைகளுக்குச் சென்றுவிடுமோ என்ற பயமும் உண்டு.

நமது பாரம்பர்ய சிறு வியாபாரம், அண்மைப் பொருளாதாரம், ஊரக வளர்ச்சி இவை எல்லாவற்றையும் விட்டுவிட்டோம். நாம் என்ன உண்ண வேண்டும் என்பதை விளம்பரங்களும் கம்பெனிகளும்தாம் தீர்மானிக்கின்றன. அவற்றின் பின்தான் நாமும் சென்று கொண்டிருக்கிறோம். இவற்றையெல்லாம் மாற்ற வேண்டு மென்றால் விவசாயிகள் ஒன்றிணைந்து முயற்சி எடுக்க வேண்டும். சீரமைக்கப்பட்ட கூட்டு முயற்சிகள், சரியான ஆட்கள், நேர்மையான முயற்சிகள் என இயங்கினால் மட்டுமே தீர்வை நோக்கி நாம் பயணிக்க முடியும். கூட்டு முயற்சிதான், இன்றைய சந்தைப் பொருளாதாரத்தின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரே வழி. இப்படிக் கூட்டு முயற்சியால் வென்று, சிறப்பாக இயங்கிவரும் உதாரணங்கள், உலகம் முழுவதும் உண்டு. அவற்றைப் பார்க்கும் முன்பாக உழவன் முதலில் தன்னை உணரவேண்டும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 03, 2017 7:23 pm

தற்சார்பு’ என்பது, உழவன் தனக்கு வேண்டியவற்றைத் தானே உற்பத்தி செய்வதில்தான் உள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அப்படிப் புரிந்துகொண்டு, நடைமுறையில் தனக்கும், தன்னுடைய குடும்பத்துக்கும் தேவையானவற்றை உற்பத்தி செய்தால், பெரும் சேமிப்பு உண்டாகும்.

தனக்குப் போக மீதிதான் சந்தைக்கு என்று நம் உழவர்கள் செயல்பட்டாலே பெரிய மாற்றம் வரும். பிறகு, தன் சுற்றமும் அண்மைத் தெருக்களுமே முதல் சந்தையாகும். அப்போது உற்பத்தியாளருக்கும் நுகர்வோருக்கும் உள்ள இடைவெளி மிகவும் குறைவாகிவிடும். இருவருக்கும் லாபம் கிடைக்க ஆரம்பிக்கும். அதைவிட தரமான நல்ல பொருள்கள் நுகர்வோரைச் சென்றடையும். அதையெல்லாம் தாண்டிதான் நெடுந்தூர நகரச் சந்தைக்கு நகர வேண்டும். இதில் சிரமங்கள் இருக்கத்தான் செய்யும். அதற்காக விவசாயிகள் எந்த நகரச் சுகங்களையும் அனுபவிக்கக்கூடாது என்று சொல்லவில்லை. அளவோடு இருந்தால் போதுமானது.

- விரிவடையும்

நன்றி
விகடன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக