புதிய பதிவுகள்
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 13 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 13 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 13 Poll_c10 
56 Posts - 64%
heezulia
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 13 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 13 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 13 Poll_c10 
17 Posts - 19%
dhilipdsp
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 13 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 13 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 13 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 13 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 13 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 13 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 13 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 13 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 13 Poll_c10 
3 Posts - 3%
Guna.D
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 13 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 13 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 13 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 13 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 13 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 13 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 13 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 13 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 13 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 13 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 13 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 13 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 13 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 13 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 13 Poll_c10 
55 Posts - 65%
heezulia
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 13 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 13 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 13 Poll_c10 
15 Posts - 18%
dhilipdsp
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 13 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 13 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 13 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 13 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 13 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 13 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 13 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 13 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 13 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 13 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 13 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 13 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 13 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 13 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 13 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 13 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 13 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 13 Poll_c10 
1 Post - 1%
Guna.D
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 13 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 13 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 13 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய தமிழ் திரைப்படங்கள்


   
   

Page 13 of 17 Previous  1 ... 8 ... 12, 13, 14, 15, 16, 17  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Dec 03, 2017 5:13 pm

First topic message reminder :

தமிழ்  சினிமாவை  பற்றியும், பாட்டுக்களை பற்றியும் எழுதலாமா? எங்கிட்ட நிறைய நிறைய விஷயங்கள்  இருக்கு. அனுப்பலாமா?

நன்றி Baby Heerajan  மீண்டும் சந்திப்போம்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Mar 05, 2018 1:09 pm

05.03.2018

பழைய திரைப்படம் 

27. பக்தி 1938

லட்சுமிபாய், கமலாபாய், PR மங்களம், MS சரோஜா, KR சாரதாம்பாள், R நாகேந்திர ராவ், MV சுப்பையா நாயுடு, 
PG வெங்கடேசன், K ஹிரனையா, MK கோபால அய்யங்கார், MS சுப்பண்ணா, H ராமச்சந்திர சாஸ்த்திரி, V கிருஷ்ணப்பா, N ராமசாமி பிள்ளை, K ராமகிருஷ்ண ராவ், R அனந்தராமையா

டைரக்டர் : முருகதாஸா
ஒளிப்பதிவு : K ராம்நாத்
கலை இயக்குனர் : AK சேகர்


=========================================

முத்துசாமி அய்யர் என்ற முருகதாஸா, K ராம்நாத், AK சேகர். அப்போ  இவங்க சினிமாவில திறமையாக புதுமைகள் செஞ்சவங்க. இவங்க மூணு பேரும் எப்டி ஒண்ணா சேந்தாங்கன்னு தெரியுமா? எனக்கு மட்டும் எப்டி தெரியும்? படிச்சதை எழுதுறேன். படிங்க படிங்க.

அந்த காலத்தில இங்ளிஷ்காரங்களுக்கு சொந்தமான ஒரு பிரபல பத்திரிக்கை ‘The மெயில்’. இந்த பத்திரிகையில முருகதாஸா சினிமா விமர்சனம் எழுதி தன் வாழ்க்கையை ஆரம்பிச்சார். ‘Sound and Shadow’ ன்னு ஒரு மாத இதழ். இதை முருகதாஸாதான் ஆரம்பிச்சார். இதில சினிமா & மற்ற கலைகளை பற்றிய  தகவல்கள், செய்திகள்கள் வந்துட்டு இருந்துச்சு.

சேகர் ஒரு கலை இயக்குனர்.  அதனால, தான் ஆரம்பிச்ச இந்தப் பத்திரிக்கையை வடிவமைக்கிறது, எப்படி அமைப்பது இதுங்களில உதவி செய்றதுக்கு, சேகரை தன்னோடு சேத்துகிட்டார், முருகதாஸா.  

திருவனந்தபுரத்தில ஒருத்தர், போட்டா எடுக்கிறதுல ஆர்வமா இருந்தார். எப்டி சினிமாவில நுழையலாம்னு நேரம் பாத்துட்டு இருந்தார், ஜோசியர்ட்ட கேக்காமலேயே. முருகதாஸா பத்திரிக்கை நடத்துவது தெரிஞ்சு, இவர் அந்த பத்திரிகைக்கு ஒளிப்பதிவு பற்றிய ஒரு கட்டுரையை அனுப்பி வச்சார். அவ்ளோதான், முருகதாஸா அவரையும் உள்ளே இழுத்துகிட்டார்.  யாரைனுதான் தெரியுமே. ஏற்கனவே ரெண்டு பேர் சேர்ந்துட்டாங்க. மிச்சம் இருக்கிறது ராம்நாத் மட்டும்தானே.

இப்படியாக மூ...........ணு பேரும் சேர்ந்துட்டாங்க.

இந்தப் படம் பிரபல புராண கதை. இதுக்கு இன்னொரு பேரும் இருந்துச்சு, ‘அம்பரிஷன் சரித்திரம்’.

என்ன, மாணிக் பாஷா ஞாபகம் வந்சுருச்சா? ஏன்னா எனக்கு வந்துச்சே.

“உனக்கு ஞாபகம் வந்தா, எங்களுக்கும் வரணுமா? டா................மிட்”

கேக்.............குது, எனக்கு கேக்குது.

‘பக்தி’ படத்ல ராம்நாத் ஒரு அதிசயத்தை செஞ்சாராம். படத்தை பாத்தவங்க ஸ்டன்................னாகி, அதுதான், அசந்த்................போய் பாத்துட்டு உக்காந்திருந்தாங்க. தென்னிந்தய சினிமாவில இதுதான் முதல் தடவயாமே.

ரொம்............பத்தான் பில்டப் கொடுக்காத, விஷயத்துக்கு வா.  வர்றேன்ல.

ராஜா அம்பரிஷா சம்பந்தப்பட்ட புராண கதைங்க நிறைய இருக்காமே. ‘பக்தி’ படம் என்ன கதைனா..............., அம்பரீஷ் ராஜாவின் தனிப்பட்ட வாழ்க்கை, இவருடைய யதார்த்தவாதி சகோதரர், ராணி, ஆ ஊன்னா கோவிச்சுக்கிற துர்வாச முனிவரை சந்திக்கிறது, இது சம்பந்தமான கதைதானாம்.

அம்பரிஷ்னு ஒருத்தன் ராஜாவாக இருந்தான். ராஜா துர்வாச முனிவரை சந்திக்கிறான். முனிவர் ராஜாட்ட ஒரு கேள்வி கேக்குறார்.

“தவம் பெருசா, பக்தி பெருசா?”

இதுக்கு ராஜா ஒடனே ஒரு பதில் சொல்றான். “பக்திதான் பெருசு”.

வந்துச்சே.................... முனிவருக்கு கோவமான கோவம். டென்..........ஷனாயிட்டார், மனுஷன். கோவம் வந்துச்சுன்னா முனிவருங்க என்ன செய்வாங்கன்னுதான் தெரியுமே.

“பிடி சாபம்” தான்.

“உன் நாட்ல பஞ்சம் தலை விரிச்சுட்டு தையா......... தக்கான்னு ஆடும். அதனால உன் நாட்டு ஜனங்க பசியால அழிஞ்சு போவாங்க.” துர்வாச முனிவர் இப்டி உட்டார் சாபம். அவர் சாபம்படியே  அவன் ஊர்ல பஞ்சம். பூமியெல்லாம் வறண்டு போய் கெடக்குது. இப்டி வறண்டு போய் கிடக்கிற பூமியில எதுவுமே மொளக்காதே. நம் நாட்டு ஜனங்களை எப்டி காப்பாத்றதுனு அம்பரிஷ் யோசிச்சான்.

சாபம் உட்டா, பாதிக்கப்பட்டவங்க அதுக்கு பரிகாரம் தேடுவாங்கல்ல. அதுமாதிரிதான் அம்பரீஷ் ராஜா செஞ்சான். விஷ்ணுட்ட நடந்ததை சொல்றான். ராஜா சொன்னதையெல்லாம் விஷ்ணு கேட்டுட்டு மனசு இளகினார். அப்பதாங்க அந்த அதிசயம், மாய மந்திரம் நடந்துச்சு. வேறென்ன, அந்த வறண்ட பூமில நெல்லு மழ பேஞ்சுது. என்ன மழ?  நெல்லு மழங்க............. நெல்லு மழ.  நாட்டில இருக்கிற பஞ்சத்தை போக்கணுமே.

இத்தாங்க நான் மொதல்ல  சொன்னேனே, அந்த  பில்டப் மழ.

அந்த நாட்டு மக்களுக்கு நெல்லு மழ பெய்றதை பார்த்து ஒரே............... குஷிதான். பின்ன இருக்காதா? பஞ்சத்தில அடிபட்டு, நொந்து நூலாகி போனவங்களுக்கு, நெல்லு மழை பொழிஞ்சா சந்தோ..........சமாத்தானே இருக்கும். அம்பரீஷ் ராஜாவோட நாட்டில, துர்வாச முனிவரின் சாபம் போயி, விஷ்ணுவின் வரம் கெடச்சிருச்சு.  

மழை மாதிரி நெல்லு கொட்டுச்சுதுன்னா எப்டி இருக்கும்னு பாருங்க. இதை அந்த படத்தை பாத்தவங்க, ஏதோ தெய்வ செயல் நடப்பதாக நெனச்சு, த்யேட்டர்லியே ஸ்க்ரீனுக்கு முன்னால கற்பூரம் ஏத்தி சாமி கும்பிட்டாங்களாம். எப்படி இந்த ஸீன் எடுத்தாங்கன்னு ஆச்.................சரியப்பட்டு போனாங்களாம்.

தண்ணி மழ, இது காமன். ஐஸ் மழை, இதை எத்தனை பேர் பார்த்திருப்போம்னு தெரியல. நான் பாக்கலப்பா. ஆனா நெல்லு மழை பார்த்திருக்கீங்களா? நாம யா.............ரும் பாக்கல. ஆனா ‘பக்தி’ படம் பாத்தவங்க நெல்லு மழை பெய்யிறதை பாத்திருக்காங்களே. எப்டீ........?

ராம்நாத் இந்த ஸீன்ல, நுண்ணிய புகைப்பட கலையை யூஸ் செஞ்சிருந்தார், அம்புட்டுதான். இந்த முறையை, தமிழ் சினிமாவில முதல் முறையாக ராம்நாத் செயல்படுத்தியிருந்தார். 

MT ராஜன்னு ஒருத்தர் இந்த படத்தை தயாரிச்சிருந்தார்.

‘Empty’ ராஜன் இல்ல. Emptyயா இருந்தா எப்டி படத்த தயாரிக்க முடியும், இல்ல?

இந்த MT ராஜன், ஆரம்பத்தில ஒப்பந்த முறையில், மின் இணைப்பு வேலையை செஞ்சுட்டு இருந்தார். அப்புறமா படிப்படியா உயர்ந்தார். விநியோகஸ்தர், த்யேட்டர் & ஸ்டூடியோ சொந்தக்காரர். அப்புறமா இப்போ, தயாரிப்பாளர்.

இந்தப் படத்தில நடிச்சவங்க நிறைய பேர் கன்னட நடிகை, நடிகருங்க. இவங்க தமிழ்ல்ல பேசி நடிச்சாங்களாம். இந்தப் படத்தின் தயாரிப்பாளர், சில தமிழ் கலைஞர்களையும் நடிக்க வச்சார், KR சாரதாம்பாள், MS சரோஜா, PR மங்களம், பாடகர் PG வெங்கடேசன் போன்ற தமிழ் கலைஞர்கள். தமிழ் கலைஞர்களை இந்தப் படத்தில நடிக்க வச்சதுக்கு, காரணம் இருக்காம். படத்தை பாக்கிறவங்களுக்கு, டப்பிங் படம்னு உணர்வு வந்துறகூடாதாம், அதுக்காகத்தான்.

சேகரும், ராம்நாத்தும் 1930கள்ல, நிறைய மறக்கமுடியாத படங்கள் எடுத்திருக்காங்க. இவங்க எடுத்த அந்த படங்கள்ல, advanced டெக்னிக்கல் சமாச்சாரங்களை ராம்நாத் செஞ்சார். அவர் புகைப்பட கலைஞராச்சே. அதெல்லாம் பாக்குறதுக்கு, ஜனங்களுக்கு புதுமையாவும், அதிசயமாவும் இருந்துச்சாம். இப்படிப்பட்ட படங்களில ஒண்ணுதான் ‘பக்தி’ படம்.

இந்த படத்தின் கதைக்காகவும், நெல்லு மழை ஸீனுக்காகவுமே ஜனங்க இந்த படத்தை போயி................ போயி பாத்தாங்களாம்.

எல்டாம்ஸ் ரோட்ல, அரண்........மன மாதிரி ஒரு பங்க்ளா, பீதாம்பரம் மகாராஜாவுக்கு சொந்தமானது. இந்த பங்க்ளால ‘வேல் பிக்சர்ஸ் ஸ்டூடியோ’வை ராம்நாத் நடத்தி வந்தார். இந்த ஸ்டூடியோவுக்கு பின்னால, கொஞ்சம் காலியிடம், கொஞ்சம் மரங்கள் இருந்துச்சாம். இந்த இடத்திலதான், அநேகமாக வெளிப்புற படக்காட்சில்லாம் எடுப்பாங்களாம். 

போகப் போக, ராம்நாத்தின் ஸ்டூடியோவில நிறைய வேலை நடக்க ஆரம்பிச்சுட்டதால, ஸ்டூடியோவை நடத்த இடம் பத்தாம போச்சாம். அதனால, சென்னை கிண்டீக்கு ஸ்டூடியோவை shiftடிட்டாங்க. அங்க அந்த ஸ்டூடியோ நல்லாத்தான் நடந்துச்சு. என்ன காரணமோ, நரசூஸ் காஃபியின் சொந்தக்காரர், VL நரசு இந்தப் ஸ்டூடியோவ வாங்கி, ‘நரசு ஸ்டூடியோ’ன்னு பேர் வச்சுட்டார். இந்த ஸ்டூடியோல, ஹிந்தி உள்பட, பல மொழிகளில படம் தயாரிச்சார். அப்புறமா நஷ்டமடஞ்ச இந்த ஸ்டூடியோவ கம்ப்பா கோலா குளிர்பான கம்பெனி வாங்கிருச்சு.

அந்த ஸ்டூடியோவின் தலையெழுத்தை பாருங்க. அத்தனை கை மாறியும், உருப்படாம போச்சு.

R நாகேந்திர ராவ் & MV சுப்பையா நாயுடு. இவங்க ரெண்டு பேரும், கன்னட நாடகங்கள், கன்னட சினிமா பிரபலங்களாம். லட்சுமிபாய், கமலாபாய், இவங்க ரெண்டு பேரும் சகோதரிகள். R நாகேந்திர ராவ் & MV சுப்பையா நாயுடு இவங்கள கண்ணாலம் கட்டிகினாங்களாம். இவங்க கல்யாணத்துக்கு உதவி செஞ்சவர், காமெடி நடிகர் ஹிரனையா.

நாகேந்திர ராவும், சுப்பையா நாயுடுவும் மைசூர்ல ‘ஸ்ரீ சங்கீத சாகித்ய நாடக மண்டலி’னு பிரபல நாடக கம்பெனியை ஆரம்பிச்சாங்க. ‘பக்தி’ படம் வர்றதுக்கு முன்னால, இந்த கம்பெனில நாடகமாக நடத்தினாங்க. தமிழ்ல இல்ல, கன்னடத்தில. மைசூர்ல கன்னடமாச்சே.


- ஹிந்து

Heezulia

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Mar 06, 2018 1:32 pm

சூப்பருங்க சூப்பருங்க



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Mar 07, 2018 11:31 pm

07.03.2018


வித்தியாசமான படம் 


11. நெஞ்சில் ஓர் ஆலயம் 1961


“கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்” இப்டி ஒரு பழமொழி இருக்கிறது எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். இந்த காலத்துக்கு இது சரிபட்டு வருமா?

கல்லாவது, புல்லாவது. அந்த காலத்திலேயே இந்த பழமொழிக்கு சவால் விட்ட படம் நெஞ்சில் ஓர் ஆலயம். எல்லாருக்கு தெரிஞ்ச கதைதான்.

முக்கோண காதல். கணவனுக்கு புற்று நோய். இந்த வ்யாதியில அவன் இறந்துவிடுவான்னு அவனுக்கு கலக்கம். ஆனாலும் தைரியமாகத்தான் இருந்தான். மனைவி பல புற்று நோய் டாக்டர்கிட்ட அவனை கூட்டிட்டு போய் காட்றா.

எங்கேயும் திருப்தியான பதில் வரல. கடைசில ஒரு ஆஸ்பத்திரிக்கு வர்றா. அங்க இருந்த டாக்டர் புற்று நோய்க்கு நல்ல சிகிச்சை கொடுக்குரார்னு கேள்விப்பட்டிருக்கா. டாக்டர் ரூமுக்குள்ள போறா. தெகச்சுன்னுன்னா தெகச்சு, அப்டி நிக்கிறா. டாக்டரும் அவளை பார்த்து அசந்.......................து உக்காந்திருக்கார். படிக்கும்போது ரெண்டு பேரும் லவ்விர்காங்க. அந்த ஞாபகம். அதுக்காண்டிதான் அந்த தெகச்சு, அசந்...................து.

ஒரு கட்டத்ல, தன் மனைவியும், டாக்டரும் காதலர்கள்னு கணவனுக்கு தெரிய வருது. ஏற்கனவே அவன் செத்து போயிர்வான்னு நெனச்சுட்டு இருக்கானா? தன் மனைவி விதவையா இருக்க கூடாது, இன்னொரு கல்யாணம் செஞ்சுக்கணும்னு  கணவனுக்கு விபரீதமான ஒரு ஆசை.  மாப்பிள்ளையை அங்க இங்க தேட வேணாம்ல. டாக்டர்தான் இருக்காரே.

கணவன் இந்த விஷயத்தை, மனைவிட்டயும், டாக்டர்ட்டயும் சொல்றான். அவங்க ரெண்டு பேருக்கும் மறுபடியும் ஷாக். ஆனா டாக்டர், கணவனை காப்பாத்துறதா நம்பிக்கையோடு சொல்றார். ராத்திரி பகலாய் கணவன் நோயை எப்படி சரி செய்றதுன்னு யோசிக்கிறார். காப்பாத்தியும் விடறார். சரியான சாப்பாடு தண்ணி இல்லாம ஆராய்ச்சி செஞ்சதால, ஆப்பரேஷன் முடிஞ்ச பிறகு டாக்டர் இறந்து போறார். நல்ல வேளை, ஆப்பரேஷன் முடிஞ்சிருச்சு. 

இந்தப் படத்தை பற்றி பரபரப்பான விமர்சனங்கள் வந்துச்சாம். கணவனே மனைவிக்கு கல்யாணம் செஞ்சு வைக்க நெனச்சா, அப்படித்தான் விமர்சனம் வரும். கொஞ்சம் சாரதா படம் மாதிரி இல்ல? ஆனாலும் படம் அமோக வெற்றி. ஸ்ரீதர் படத்தை முடிச்ச விதம் அப்டி.

காமெடிக்கு நாகேஷ். கல்யாணகுமார், முத்துராமன், தேவிகா, குட்டி பத்மினி நடிச்சிருந்தாங்க. விச்சுவும், ராமுவும் ம்யூசிக். கதை, வசனம், டைரக் ஷன் ஸ்ரீதர்.

14 நாளில் எடுக்கப்பட்ட படம். தான் இறக்கிறதுக்கு முன்னால, மனைவியை மணப்பெண் கோலத்தில பார்க்கணும்னு, கணவனுக்கு இன்னொரு விபரீதமான ஆசை வந்துச்சு. மனைவியும் கல்லும், புல்லுமாய் இருக்கிற கணவன் சொல்லிட்டானேன்னு, மணப்பெண்ணாய் வர்றார். அப்பதான், “என்னை இப்டி இக்கட்டான நிலைக்கு கொண்டுவந்துட்டியே, நீ இப்டீல்லாம் சொல்லலாமா”ங்கற அர்த்தத்தில, “சொன்னது நீதானா?”னு பாட்ற பாட்டு, பாக்கிறவங்களை கலங்க வச்சுது.

இந்தப் பாட்டுக்கு பின்னால ஒரு சமாச்சாரம் இருக்கு. கண்ணதாசன் இந்தப் படத்துக்கு பாட்டு எழுத சரியா கோஆப்பரேட் செய்யலியாம். அதனால, MSV கோவிச்சுகிட்டார். கண்ணதாசன்கூட வேலை செய்ய முடியாதுன்னு MSV சொல்லியிருக்கார். இதை தெரிஞ்சுகிட்ட கவிஞர், MSVயை கேள்வி கேட்கிற மாதிரி, “அப்டி சொன்னது நீதானா”ன்னு பாட்டு எழுதினார்.

“எங்கிருந்தாலும் வாழ்க”, “நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்”,”முத்தான முத்தல்லவோ”, “ஒருவர் வாழும் ஆலயம்” ன்னு எல்லா பாட்டுமே மறக்க முடியாதவை.

இந்தப் படத்தில கல்யாணகுமார் காலர் இல்லாத சட்டை போடுவாராம். எனக்கு மறந்துபோச்சு. அது அப்போ fashionஆக ஆயிருச்சாம். தமிழ்ல ஓ...........ஹோன்னு ஓடின படம், ஹிந்தியிலும் உருவாச்சு. அங்கேயும் ஓ.........ஹொ.

“கள்ளானாலும் கணவன் ஃபுல்...............லானும் புருஷன்”  



- ரமணி


Heezulia

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Mar 08, 2018 9:31 am

“கள்ளானாலும் கணவன் ஃபுல்...............லானும் புருஷன்”

சியர்ஸ் சியர்ஸ்



avatar
Guest
Guest

PostGuest Thu Mar 08, 2018 12:26 pm

“உன் கணவன் மனது கல்லானாலும், அவன் உனக்கக்கணவனே; சம்பாதிக்க முடியாத சக்தியற்ற கோழையாக ஊருக்குப் புன்மையானவனாக, வெறும் புல்லைப் போல இருந்தாலும், அவன் உனக்குப் புருஷனே” என்பது அதன்பொருள். -கண்ணதாசன்.

ஆமா பெங்களுருவில் டாஸ்மார்க்/கள் உண்டா?

ஆந்திராவில் டாஸ்மார்க்/கள் உண்டா SK ?அனந்தப்பூர் பகுதியில்?

கேலிக்காக அல்ல தெரிந்துகொள்ளக் கேட்டேன் .

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Mar 08, 2018 12:59 pm

மூர்த்தி wrote:“உன் கணவன் மனது கல்லானாலும், அவன் உனக்கக்கணவனே; சம்பாதிக்க முடியாத சக்தியற்ற கோழையாக ஊருக்குப் புன்மையானவனாக, வெறும் புல்லைப் போல இருந்தாலும், அவன் உனக்குப் புருஷனே” என்பது அதன்பொருள். -கண்ணதாசன்.

ஆமா பெங்களுருவில் டாஸ்மார்க்/கள் உண்டா?

ஆந்திராவில் டாஸ்மார்க்/கள் உண்டா SK ?அனந்தப்பூர் பகுதியில்?

கேலிக்காக அல்ல தெரிந்துகொள்ளக் கேட்டேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1261666

தமிழ்நாட்டை தவிர வேறு எங்கும் டாஸ்மார்க் இல்லை



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Mar 08, 2018 1:43 pm

08.03.2018
SK wrote:சியர்ஸ் சியர்ஸ் 
மேற்கோள் செய்த பதிவு: 1261648

இந்தப் பழக்கம் உங்களுக்கு எத்தன நாளா? ஃபுல்..............லா அடிக்கிறீங்க போல.

Cheers  சொல்லிட்டே இருக்கீங்க, எப்பதான் குடிப்பீங்க?  அப்புறம்  பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 13 676261 இப்டி ஆயிர்வீங்க.  கூடாது கூடாது கூடாது

அது யார், கூட தொணக்கி? நான்னு சொல்லிறாதீங்க. ஒங்கள யாரன்னே எனக்கு தெரியாது. கேள்விப்பட்டதே இல்ல. 

Heezulia  

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Mar 08, 2018 1:49 pm

பெண்கள் தினத்தில் பொய் சொல்ல கூடாது அந்த ஸ்மைலி இல் கிழே விழறதே நீங்க தானமே நேத்து பிபிசி செய்தில சொன்னாங்க



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Mar 08, 2018 2:50 pm

08.03.2018

கண்ணதாசன் சொல்லித்தான் அந்த பழமொழிக்கு அர்த்தம் தெரியணும்ங்கிறது இல்ல. அது "உள்ளங்கை நெல்லிக்கனி".

பெங்களூரில் டாஸ்மார்க்கா? இல்............லியே....... அது அங்க எப்டீ இருக்கும்? ச்சா..............ன்ஸே இல்ல. ஆந்திராவிலுமா? அதுவும் இருக்காதே................ இதுல வே..................ற அனந்தபூராம். அனந்தபுரின்னுதான் கேள்விப்பட்டிருக்கேன். ரெண்டும் ஒண்ணா? 

ஏன்னா, டாஸ்மார்க்குன்னா எனக்கு தெரியாது. அது டாஸ்மாக். [Tamilnadu State Marketing Corporation] 
கேலிக்காக அல்ல தெரிந்துகொள்ளக் கேட்டேன். 
அது சரி..................., இது எதுக்.............................காக கேட்டீங்கங்கறேன்? உள்ளூர்ல நல்லதா கெடக்கமாட்டேங்குதா? ப்ரெண்ட்ஸோட அங்கல்லாம்  போப்போறீங்களா? உங்க betterhalf phone நம்பர் குடுங்க. பத் .............த வைக்கிறேன். அவ்ளோதான்.  உடுட்டுக்கட்டை அடி வ  மண்டையில் அடி அப்புறம் ஒங்க நிலைமை?  பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 13 433338962  என்ன கொடுமை சார் இது  அப்புறம் நாந்தான்  ஆறுதல் சொல்லோணும்.

Heezulia 

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Mar 08, 2018 3:07 pm

heezulia wrote:08.03.2018

கண்ணதாசன் சொல்லித்தான் அந்த பழமொழிக்கு அர்த்தம் தெரியணும்ங்கிறது இல்ல. அது "உள்ளங்கை நெல்லிக்கனி".

பெங்களூரில் டாஸ்மார்க்கா? இல்............லியே....... அது அங்க எப்டீ இருக்கும்? ச்சா..............ன்ஸே இல்ல. ஆந்திராவிலுமா? அதுவும் இருக்காதே................ இதுல வே..................ற அனந்தபூராம். அனந்தபுரின்னுதான் கேள்விப்பட்டிருக்கேன். ரெண்டும் ஒண்ணா? 

ஏன்னா, டாஸ்மார்க்குன்னா எனக்கு தெரியாது. அது டாஸ்மாக். [Tamilnadu State Marketing Corporation] 
கேலிக்காக அல்ல தெரிந்துகொள்ளக் கேட்டேன். 
அது சரி..................., இது எதுக்.............................காக கேட்டீங்கங்கறேன்? உள்ளூர்ல நல்லதா கெடக்கமாட்டேங்குதா? ப்ரெண்ட்ஸோட அங்கல்லாம்  போப்போறீங்களா? உங்க betterhalf phone நம்பர் குடுங்க. பத் .............த வைக்கிறேன். அவ்ளோதான்.  உடுட்டுக்கட்டை அடி வ  மண்டையில் அடி அப்புறம் ஒங்க நிலைமை?  பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 13 433338962  என்ன கொடுமை சார் இது  அப்புறம் நாந்தான்  ஆறுதல் சொல்லோணும்.

Heezulia 
மேற்கோள் செய்த பதிவு: 1261684

இதை தான் நான் சொன்னேன்

SK wrote:தமிழ்நாட்டை தவிர வேறு எங்கும் டாஸ்மார்க் இல்லை




Sponsored content

PostSponsored content



Page 13 of 17 Previous  1 ... 8 ... 12, 13, 14, 15, 16, 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக