புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடன் என்னும் கத்தி! Poll_c10கடன் என்னும் கத்தி! Poll_m10கடன் என்னும் கத்தி! Poll_c10 
113 Posts - 75%
heezulia
கடன் என்னும் கத்தி! Poll_c10கடன் என்னும் கத்தி! Poll_m10கடன் என்னும் கத்தி! Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
கடன் என்னும் கத்தி! Poll_c10கடன் என்னும் கத்தி! Poll_m10கடன் என்னும் கத்தி! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
கடன் என்னும் கத்தி! Poll_c10கடன் என்னும் கத்தி! Poll_m10கடன் என்னும் கத்தி! Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
கடன் என்னும் கத்தி! Poll_c10கடன் என்னும் கத்தி! Poll_m10கடன் என்னும் கத்தி! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கடன் என்னும் கத்தி! Poll_c10கடன் என்னும் கத்தி! Poll_m10கடன் என்னும் கத்தி! Poll_c10 
1 Post - 1%
Pampu
கடன் என்னும் கத்தி! Poll_c10கடன் என்னும் கத்தி! Poll_m10கடன் என்னும் கத்தி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடன் என்னும் கத்தி! Poll_c10கடன் என்னும் கத்தி! Poll_m10கடன் என்னும் கத்தி! Poll_c10 
278 Posts - 76%
heezulia
கடன் என்னும் கத்தி! Poll_c10கடன் என்னும் கத்தி! Poll_m10கடன் என்னும் கத்தி! Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
கடன் என்னும் கத்தி! Poll_c10கடன் என்னும் கத்தி! Poll_m10கடன் என்னும் கத்தி! Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கடன் என்னும் கத்தி! Poll_c10கடன் என்னும் கத்தி! Poll_m10கடன் என்னும் கத்தி! Poll_c10 
8 Posts - 2%
prajai
கடன் என்னும் கத்தி! Poll_c10கடன் என்னும் கத்தி! Poll_m10கடன் என்னும் கத்தி! Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
கடன் என்னும் கத்தி! Poll_c10கடன் என்னும் கத்தி! Poll_m10கடன் என்னும் கத்தி! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கடன் என்னும் கத்தி! Poll_c10கடன் என்னும் கத்தி! Poll_m10கடன் என்னும் கத்தி! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கடன் என்னும் கத்தி! Poll_c10கடன் என்னும் கத்தி! Poll_m10கடன் என்னும் கத்தி! Poll_c10 
3 Posts - 1%
Barushree
கடன் என்னும் கத்தி! Poll_c10கடன் என்னும் கத்தி! Poll_m10கடன் என்னும் கத்தி! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கடன் என்னும் கத்தி! Poll_c10கடன் என்னும் கத்தி! Poll_m10கடன் என்னும் கத்தி! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடன் என்னும் கத்தி!


   
   
ksikkuh
ksikkuh
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 30/11/2017

Postksikkuh Sun Dec 03, 2017 4:16 pm



சேமிக்காமல் இருப்பது கூடப் பெரிய தவறில்லை. கடன் வாங்கினால், அதுவும் எக்கச்சக்க மாக வாங்கினால், நமக்கு நாமே சமாதி கட்டிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. இதற்குச் சரியான உதாரணம் பரசுராமன்.
அரசு அலுவலகத்தில் கடைநிலை ஊழியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றபோது கணிசமான அளவில் அவரிடம் கையிருப்பு இருந்தது. அவரின் மகன் ரகு, தனியார் கம்பெனி ஒன்றில் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்து வந்தான். ஓய்வுபெற்றதன் மூலம் கிடைத்த பணம், சேர்த்து வைத்திருந்த பணம் என எல்லாவற்றையும் போட்டு ஒரு கிரவுண்டு வீட்டு மனையை வாங்கி, வீட்டுக் கடன் மூலம் 600 சதுர அடியில் வீட்டைக் கட்டினார். வீட்டிலிருந்தபடியே கார வகைகள், ஊறுகாய் தயாரித்துக் கடைகளுக்குச் சப்ளை செய்ய ஆரம்பித்தார். தொழில் சூடுபிடிக்கவே நல்ல வருமானம் வர ஆரம்பித்தது.

ஒழுங்காகப் போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் ரகுவின் நண்பன் வடிவில் கஷ்டம் வந்தது. ரகுவின் நண்பன் ஹோட்டல் தொழிலில் தேர்ச்சி பெற்றவன். அவன் கொடுத்த ஐடியாவின்படி, ஹோட்டல் ஒன்றை ஆரம்பிக்கப் போவதாகச் சொன்னான் ரகு.மகனின் பிசினஸ் ஆர்வத்தை பரசுராமன் தடுக்க வில்லை. தன்னிடமிருந்த பணத்தைக் கொடுத்தார். ஹோட்டல் ஜோராகச் செயல்படத் தொடங்கியது.
திடீரென ஒருநாள் ரகுவின் நண்பன் வெளி நாட்டுக்குப் போகவிருப்பதாகவும், பார்ட்னர்ஷிப் பிலிருந்து விலகிக்கொள்வதாகவும் சொன்னான். “அனுபவம் இல்லாமல் தொழிலைத் தனியாக உன்னால் சிறப்பாக நடத்த முடியாது. பேசாமல் ஹோட்டலை விற்றுவிடு’’ என்று பரசுராமன் சொன்னதை ரகு கேட்கவில்லை.
வேறுவழியில்லாமல் வட்டிக்குக் கடன் வாங்கி ஹோட்டலை ரகுவுக்கு சொந்தமாக்கிக் கொடுத்தார். ஹோட்டல் மொத்தமாக தன் பொறுப்பில் வந்ததும் ரகுவுக்கு, வெகுசீக்கிரத்தில் அம்பானி ஆகிவிட வேண்டும் என்ற ஆசை வரத்தொடங்கியது. அப்பாவை நச்சரித்து மீண்டும் பெரிய தொகையை வட்டிக்கு வாங்கி ஹோட்டலை அழகுபடுத்தினான். கேட்டரிங் சர்வீஸுக்கு வாகனங்களை வாங்கினான். பந்தாவுக்காகத் தனக்கென ஒரு கார் வாங்கினான். பணக்காரத் தோற்றம் வந்த அந்தச் சமயத்தில் ரகுவுக்குப் பெண் பார்த்துவந்தார் பரசுராமன். “வசதியான வீட்டிலிருந்து வரன் வருகிறது. ஆனால், உங்கள் வீடுதான் வசதி போதாது என்கிறார்கள்” எனத் தரகர் சொல்லவே, உடனே டாப் அப் லோன் போட்டு மேல்தளத்தில் விசாலமான வீட்டைக் கட்டினார் பரசுராமன். ஆடம்பரமாகத் திருமணமும் முடிந்தது.
ஆனால், அனுபவம், தொழில் நுணுக்கங்கள் தெரியாததால் ரகுவினால் ஹோட்டலைத் திறப்பட நிர்வகிக்க முடியவில்லை. ஹோட்டல் மூலம் போதிய வருமானம் கிடைக்காததால், கடனைச் சரியாகக் கட்ட முடிய வில்லை. வங்கி அதிகாரிகள் வீட்டு வாசலுக்கு வர ஆரம்பித்தார்கள். வட்டிக்குக் கடன் தந்தவர்கள் கூட்டமாக வந்து அசிங்கப்படுத் தினார்கள். இதனால், ரகுவுக்கும் அவனது மனைவிக்கும் பிரச்னை வந்து விவாகரத்தில் முடிந்தது. இதனால் விரக்தியான ரகு, ஹோட்டலை விற்று பாதிக் கடன் வரை அடைத்தான். வேறு வழியில்லாமல் பரசுராமன், பார்த்துப் பார்த்து கட்டிய வீட்டையும் விற்று மீதிக் கடனை அடைத்தார்.

பரசுராமன் என்ன செய்தி ருந்தால் இந்த நிலையைத் தவிர்த்திருக்க முடியும்..? இனி அவர் என்ன செய்ய வேண்டும்..?
நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி விளக்கமாக எடுத்துச் சொன்னார்…

“கடன் வாங்குவதில் தவறேயில்லை. வாங்கிய தொகையை எதற்காகப் பயன் படுத்துவது, எப்படிப் பயன் படுத்துவது எனத் தெரியாமல் கண்மூடித்தனமாகச் செலவு செய்வதுதான் பெரும்பாலான வர்களிடம் உள்ள பெரிய தவறு.
பரசுராமனைப் பொறுத்த வரை, அவருடைய பிரச்னை இப்போது ஏற்பட்டதில்லை. அவர் ஓய்வுபெற்றதிலிருந்தே அவர் செய்த தவறுகள்தான் இன்றைய நிலைக்குக் காரணம். ஓய்வுக்காலத்தில் கிடைத்த பணத்தைக்கொண்டு அவர் வீடு வாங்கியதே தவறு.
அனுபவம் இல்லாத தொழிலில் அடுத்தவர் தயவை நம்பி பிசினஸில் இறங்க மகன் ஆசைப்பட்டபோது, அவனு டைய பிசினஸ் பிளான் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ளாமல் பிசினஸில் இறங்க அனுமதித்தது அடுத்த தவறு.
பிசினஸ் ஆரம்பித்த பிறகாவது, ஒரு பணியாளராக இருந்து ரகு தொழிலைக் கற்றுக்கொண்டிருக்க வேண்டும். முதலாளி மனோ பாவத்துடன் இருந்து தொழிலைக் கற்றுக் கொள்ளா தது தவறு. இத்தனை சிக்கல் இருக்க, மகனுக்கு பணக்கார இடத் தில் வரன் கிடைக்க வேண்டும் என்பதற்காக மாடியில் இன்னொரு போர்ஷனைக் கடன் வாங்கிக் கட்டியது கல்லைக் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்ததற்குச் சமம்.
இனி என்ன செய்யலாம்..? மீண்டும் ஜீரோவிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். ரகு நல்ல வேலையைத் தேடிக் கொள்வதுதான் இப் போதைக்கு ஒரே வழி. சுருக்கமாகச் சொன்னால், கடன் ஒரு கத்தியைப் போன்றது. லாகவமாகப் பிடித்தால் நமக்கானவற்றைக் கூர்மையாக்கிக் கொள்ளலாம். எசகுபிசகாகப் பிடித்தால் கையைப் பதம்பார்த்துவிடும்.”
குறிப்பு : கட்டுரையில் இடம்பெற்றவரின் பெயர், ஊர் மாற்றப்பட்டுள்ளது.
Suresh Parthasarathy (myassetsconsolidation.com) is SEBI Registered Investment advisor – Reg.no – INA200000878

கடன் வாங்கும் முன்..!
கடன் வாங்கும்முன் பல விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்றாலும், அடிப்படையான மூன்று விஷயங்களைக் கண்டிப்பாக கவனிப்பது அவசியம் என்கிறார் சுரேஷ் பார்த்தசாரதி. அவை என்னென்ன..?
* கடன் வாங்கியாக வேண்டும் என நீங்கள் முடிவு செய்தபிறகு, கடன் ஏன், எதற்கு வாங்க வேண்டும் என்பதற்கான காரணங்களை ஆராய்ந்து பார்ப்பதுடன், கடனுக்கான தேவை அதிமுக்கியமானதா என நூறு முறை யோசித்து முடிவெடுக்க வேண்டும்.
* கடன் வாங்கிவிட்ட பிறகு, அதைத் திரும்பக் கட்டும் தகுதி நமக்கு இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். வாங்கும் மாதச் சம்பளத்தில் 50 சதவிகிதத்துக்குமேல் இ.எம்.ஐ செலுத்தும் வகை யில் கடன் வாங்கினால் சிக்கல்தான்.

* மிகமிக அவசர காலத்தில் மட்டுமே அதிக வட்டிக்குக் கடன் வாங்க வேண்டும். மிகமிக அவசரம் உள்ளதா, மிதமான அவசரம் உள்ளதா, கடனைத் தவிர்த் தாலும் சமாளிக்க முடியுமா என்றெல்லாம் யோசிப்பது அவசியம்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக