ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...
by krishnaamma Today at 6:18 pm

» அவசியம் படித்து சிரியுங்கள் .....
by krishnaamma Today at 6:15 pm

» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு
by krishnaamma Today at 6:12 pm

» மொபைல் கடை - Dealers?
by krishnaamma Today at 6:11 pm

» கரோனா தேவிக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு விரதம் விடாமல் செய்ஞ்சுட்டேன்
by ayyasamy ram Today at 5:55 pm

» இணைந்து இசையமைத்த கடைசிப் படம்; ஏழு பாட்டும் ஏழு விதம்; அசத்திய மெல்லிசை மன்னர்கள்!
by ayyasamy ram Today at 5:43 pm

» நடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன?
by ayyasamy ram Today at 5:14 pm

» தாமரைக் குளத்தின் அழகிய சலனங்கள் –
by ayyasamy ram Today at 5:13 pm

» காரணம்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 5:11 pm

» நிகழ்ச்சி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 5:10 pm

» ‘தலைவர் என் ரொம்ப டென்ஷனா இருக்கார்..?’’
by ayyasamy ram Today at 5:09 pm

» ரான்ஹாசன் ஜூனியர் 2 - ஆளவந்தான்
by ranhasan Today at 4:51 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:31 pm

» தமிழே! அழகு மொழியே!!
by krishnaamma Today at 4:02 pm

» நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
by ranhasan Today at 3:26 pm

» புத்தகம் தேவை
by Kadirmarun Today at 3:11 pm

» சேரர் கோட்டை - கோகுல் சேஷாத்ரி
by BookzTamil Today at 2:46 pm

» ‘வளர்த்த கடா ‘பார்’ல பாயுது தலைவரே..!’’
by ayyasamy ram Today at 2:18 pm

» நகைச்சுவை படமாக உருவாகிறது ‘முருங்கைக்காய் சிப்ஸ்’
by ayyasamy ram Today at 2:13 pm

» கேட்க கேட்க இனிமை தரும் P.சுசீலா பாடல்கள்
by ayyasamy ram Today at 2:08 pm

» உடலின் மொழி
by ayyasamy ram Today at 1:09 pm

» உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை
by ayyasamy ram Today at 12:24 pm

» கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன?
by ayyasamy ram Today at 12:22 pm

» தமிழில் பதிவிடல்
by T.N.Balasubramanian Today at 11:58 am

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by saskar Today at 9:58 am

» மாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு!
by ayyasamy ram Today at 8:48 am

» ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை
by ayyasamy ram Today at 8:42 am

» வேலன்:-வீடியோ ஆடியோ டாக்குமெண்ட்டுக்கள் மற்றும்இமேஜ் பைல்களை சுலபமாக பார்வையிட - Xlident.
by velang Today at 8:23 am

» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by velang Today at 8:20 am

» பாட்டி வைத்தியம் - கஷாயம்!
by krishnaamma Yesterday at 10:22 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by krishnaamma Yesterday at 10:18 pm

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by T.N.Balasubramanian Yesterday at 10:15 pm

» அப்படியா! தெளிஞ்சதும் வர்றேன்!!
by T.N.Balasubramanian Yesterday at 10:05 pm

» நமக்குள்ளே எது நடந்தாலும் வெளியே தெரியக்கூடாது!
by T.N.Balasubramanian Yesterday at 9:38 pm

» ரான்ஹாசன் ஜூனியர் 1
by T.N.Balasubramanian Yesterday at 8:55 pm

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by krishnaamma Yesterday at 6:20 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Yesterday at 6:18 pm

» அனுமனுக்கு உதவிய கருடனும் பல்லியும் பெற்ற சாபம்
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது - மாற்றுத்திறனாளிக்காக பேருந்தை விரட்டிச்சென்ற பெண்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
by ayyasamy ram Yesterday at 6:02 pm

» அரிதிலும் அரிதான புகைப்படங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 5:50 pm

» இதெல்லாம் பிசினஸ் காலா அல்லது ஸ்கேமா
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by T.N.Balasubramanian Yesterday at 5:30 pm

» கிருஷ்ணா முகுந்தா………...அன்றும் இன்றும்
by krishnaamma Yesterday at 5:21 pm

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by T.N.Balasubramanian Yesterday at 5:21 pm

» இஞ்சி முரப்பா !
by krishnaamma Yesterday at 5:16 pm

» ‘பாப் கட்டிங்’ செங்கமலம் யானை
by krishnaamma Yesterday at 4:36 pm

» 'அமெரிக்கா வேண்டாம்... கடவுளின் தேசமே போதும்': நீதிமன்றத்தை நாடிய சுற்றுலா பயணி
by krishnaamma Yesterday at 4:10 pm

» சிரி…சிரி…
by krishnaamma Yesterday at 4:08 pm

» திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
by krishnaamma Yesterday at 4:05 pm

Admins Online

மஞ்சள் காமாலை சீக்ரெட்ஸ் அறிவோம்

Go down

மஞ்சள் காமாலை சீக்ரெட்ஸ் அறிவோம் Empty மஞ்சள் காமாலை சீக்ரெட்ஸ் அறிவோம்

Post by ksikkuh on Thu Nov 30, 2017 4:18 pm

‘மஞ்சள் காமாலைக்கு நாட்டுமருந்துதான் பெஸ்ட். அலோபதியில் மருந்தே இல்லையாம்’ என, பத்தியச் சாப்பாட்டையும் கீழாநெல்லியையும் எடுத்துக்கொள்பவர்கள்தான் பெரும்பாலானோர். ஆங்கில மருத்துவம் மஞ்சள் காமாலையை ஒரு நோயாகவே கருதுவது இல்லை, ‘நோயின் அறிகுறி’ என்கிறது. எதன் காரணமாக மஞ்சள் காமாலை வருகிறது எனக் கண்டறிந்து, அதற்குச் சிகிச்சை எடுப்பதன் மூலம், மஞ்சள் காமாலையைக் குணப்படுத்த முடியும்.

மஞ்சள் காமாலை என்பது ரத்தத்தில் பிளிருபின் அளவு அதிகமாக இருப்பதே. இதற்கு முக்கியமாக ஏழு காரணங்கள் உள்ளன. அவை என்னென்ன, மஞ்சள் காமாலையிலிருந்து எப்படி விடுபட, வராமல் தடுப்பது எப்படி…

பிளிருபின் (Bilirubin)

நம் உடலில் உள்ள ரத்த சிவப்பு அணுக்களின் ஆயுள் சுமார் 120 நாட்கள். அதன் ஆயுள் முடியும்போது மண்ணீரலில் சிதைக்கப்படும். அப்போது சிவப்பணுவில் உள்ள ஹீமோகுளோபின், ஹீம் மற்றும் குளோபின் எனத் தனித்தனியாகப் பிரிக்கப்படுகின்றன. ஹீமில் உள்ள இரும்புச் சத்து உடலுக்குள்ளே மறுசுழற்சிக்கு எடுத்துக்கொள்ளப்படும். மீதம் உள்ள கழிவு (பிளிருபின்)வெளியேற வேண்டும்.

மண்ணீரலில் இருந்து இந்த பிளிருபின் கல்லீரலுக்கு செல்லும். இந்த பிளிருபின் நீரில் கரையாத தன்மையில் (Unconjugated/ Indirect) இருக்கும். இதை கல்லீரல் உள்வாங்கி, கரையும் (Conjugated) தன்மையுள்ளதாக மாற்றி, பித்தநீர் வழியாக பித்தப்பையில் சேகரிக்கும். உணவு செரிமானத்தின்போது, பித்தப்பையில் இருந்து, பித்தநீரோடு பிளிருபின் சிறுகுடல் வழியாக வெளியே சென்றுவிடும்.

பிளிருபின் ஓர் கழிவு மட்டுமே என்பதால், அது மலம் வழியாக வெளியேறும். சிறிதளவு பிளிருபின் உறிஞ்சப்பட்டு மறுசுழற்சியில் சிறுநீர் வழியாகவும் வெளியேறும்.

பிளிருபின் உடலில் இருந்து வெளியேறுவதில் ஏதாவது பிரச்னை ஏற்படும்போது , அது நம் உடலில் தேங்கிவிடும், பிளிருபின் மஞ்சள் நிறமி என்பதால், நம் உடலில் மஞ்சள் காமாலை ஏற்படுகிறது..

சுகாதாரச் சீர்கேடு

சுகாதாரமற்ற உணவுகளைச் உட்கொள்ளும்போது, ஹெபடைட்டிஸ் ஏ, இ போன்ற வைரஸ்கள் உடலுக்குள் சென்று கல்லீரலைப் பாதித்து, மஞ்சள் காமாலையை ஏற்படுத்துகின்றன.

ஃபீகல் (Fecal) ஓரல் வைரஸ் மூலமாக ஹெபடைட்டிஸ் ஏ வைரஸ் பரவும். ஒருவர் மலம் கழித்துவிட்டு, கையைச் சரியாகக் கழுவாமல் உணவைத் தொடும்போது, உணவு வழியாக இந்த வைரஸ் பரவும்.

பொதுவாக, சுகாதாரமற்ற இடத்தில் சாப்பிடுபவர்களுக்கு இந்த வகை மஞ்சள் காமாலை வரும் வாய்ப்பு அதிகம்.

ஹெபடைட்டிஸ் ஏ வைரஸுக்குத் தடுப்பூசி உள்ளது. ஹெபடைட்டிஸ் இ-க்கு தடுப்பூசி இல்லை.

ஹெபடைட்டிஸ் ஏ, இ வைரஸ் காரணமாக மஞ்சள் காமாலை வருபவர்களுக்கு, பசி குறையும், உணவைப் பார்த்தாலே வெறுப்பு ஏற்பட்டு, குமட்டல் வரும். கண்கள் மஞ்சளாக இருக்கும், சிறுநீர் மஞ்சளாகப் பிரியும், ரத்தப் பரிசோதனை செய்தால் எந்த வைரஸ் தொற்று என்பதைக் கண்டுபிடிக்கலாம்.

சூடு வைப்பது, பச்சிலைவைத்துக் கட்டுவது போன்றவற்றால் நோய் சரியாகிவிடும் எனும் தவறான நம்பிக்கைகள் உள்ளன. இதனால், நோயின் வீரியம் அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளதே தவிர, குணமாகாது.

மஞ்சள் காமாலை நான்கைந்து நாட்கள் முதல் ஓரிரு வாரம் உடலில் இருந்துவிட்டு பின்னர் போய்விடும். இவர்கள் எளிதில் செரிமானமாகும் உணவைச் சாப்பிட்டு, மருத்துவர் சொல்லும் அறிவுரைகளைக் கடைப்பிடித்தால் போதும், குணமாகிவிடும்.

ஹெபடைட்டிஸ் பி, சி வைரஸ்

ஹெபடைட்டிஸ் பி, சி வைரஸ் ரத்தம் மூலமாகப் பரவும். சுகாதாரமற்ற ஊசிகளைக்கொண்டு பச்சை குத்துதல், காதுகுத்துதல், ஒருவர் பயன்படுத்திய ஊசி, பிரஷ், ஷேவிங் பிளேடு போன்ற வற்றை மற்றவர்கள் பயன்படுத்துதல் போன்றவற்றால் இந்த வைரஸ் பரவும்.ஹெபடைட்டிஸ் பி-யைத் தடுக்க இப்போது தடுப்பூசி இருக்கிறது. ஆனால், சி வைரஸுக்கு தடுப்பூசி இல்லை. இந்த வைரஸ் காரணமாக வரும் மஞ்சள் காமாலையை நவீன உயர் சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும்.

மருந்து

நாம் உட்கொள்ளும் உணவு, மருந்து என அனைத்தும் செரிமானம் ஆகி, கிரகிக்கப்பட்டு கல்லீரலுக்குத்தான் செல்லும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருள் ஒவ்வாமையாக இருக்கும்.

சாதாரணமாக, சளிக்குச் சாப்பிடும் மருந்துகள் முதல் உயர் சிகிச்சை மருந்துகள், உணவுகள், மூலிகைகள் என எதன் காரணமாக வேண்டுமானாலும் ஒவ்வாமை ஏற்பட்டு, மஞ்சள் காமாலை ஏற்படலாம். புதிதாய் ஏதாவது ஒன்றைச் சாப்பிட்ட பின்னர், மஞ்சள் காமாலை வந்தால், எந்த உணவு அல்லது மருந்து என்பதைக் கண்டுபிடித்து அதை நிறுத்தினாலே, மஞ்சள் காமாலை குணமாகிவிடும்.

குறிப்பிட்ட மருந்து சாப்பிட்டே ஆகவேண்டிய நிலையில் இருப்பவர்கள் மருத்துவர் பரிந்துரைப்படி மருந்தை மாற்றிக்கொள்ளலாம்.

ஆல்கஹால்

மதுவின் காரணமாக மஞ்சள் காமாலை ஏற்பட்டு மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

ஆல்கஹால் காரணமாக கல்லீரல் பாதிக்கப்படுவது ஆரம்பத்தில் தெரியாது. கல்லீரல் 80 சதவிகிதம் பாதிக்கப்பட்ட பின்னர்தான் அறிகுறிகளே தெரியும். கல்லீரல் சுருக்க நோய் வந்த பின்னர் பிளிருபின் சரியாக வெளியேற்றப்படாமல் மஞ்சள் காமாலை வந்தால், காப்பாற்றுவது கடினம். கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை தீர்வு என்றாலும்கூட கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைக்கான செலவு, அதன்பிறகு எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்தின் பக்கவிளைவு மிக அதிகம். எனவே, மதுவை அறவே நிறுத்துவதுதான் ஒரே சிறந்த தீர்வு.

கில்பர்ட் சிண்ட்ரோம்

வீடுகளில் குப்பையைத் தினந்தோறும் அகற்றிவிடுவோம். ஒரு சிலர், நான்கைந்து நாட்கள் சேர்த்துவைத்து, பின்னர் வெளியேற்றுவார்கள். அதுபோல வெகுசிலருக்கு கல்லீரல் சோம்பலாகச் செயல்படுவதைத்தான் ‘கில்பர்ட் சிண்ட்ரோம்’ என்கிறோம். நம் நாட்டில் ஆண்களில் 100-ல் 3 பேருக்கும், பெண்களில் இரண்டு பேருக்கும் இந்தப் பிரச்னை இருக்கிறது. இவர்களுக்கு ரத்தத்தில் பிளிருபின் கொஞ்சம் அதிகமாக இருக்கும். ஆனால், கல்லீரல் பரிசோதனை செய்யும்போது கரையும் பிளிருபின் வகை குறைவாகவும், கரையாத பிளிருபின் வகை அதிகமாகவும் இருக்கும்.

சளி, காய்ச்சல் என ஏதாவது நோய் இருக்கும் சமயங்களில் மட்டும் மஞ்சள் காமாலை ஓரிரு நாட்கள் அதிகமாக இருக்கும், பின்னர் தானாகவே சரியாகிவிடும்.

கில்பர்ட் சிண்ட்ரோம் இருப்பின் மஞ்சள் காமாலையால் உடல் பாதிக்கப்படுமோ என அஞ்ச வேண்டாம். இவர்களுக்கு எந்த வித சிகிச்சையும் தேவைப்படாது. உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

பித்தக்குழாய் அடைப்பு (Obstructive Jaundice)

பித்தப்பையில் உருவாகும் கற்கள் சிலநேரம் உருண்டு இறங்கி பித்த நாளத்தில் அடைப்பை ஏற்படுத்தினால், மஞ்சள் காமாலை ஏற்படும்.இவர்களுக்குக் குளிர் காய்ச்சல் வரும், வாந்தி வரும், வயிறு வலிக்கும். ரத்தத்தில் பிளிருபின் அளவு மிக அதிகமாக இருக்கும். சிறப்பு எண்டோஸ்கோப்பி (E.R.C.P) சிகிச்சை மூலம் பித்தக்குழாயில் இருக்கும் கற்களை அகற்றினால், மஞ்சள் காமாலை மறைந்துவிடும்.

பித்தக்குழாய் சிறுகுடலில் சேரும் இடத்தில் கணையம் இருக்கிறது. கணையத்தின் தலைப்பகுதியில் அழற்சி, கட்டிகள் உருவானாலும் பித்தக்குழாயில் இருந்து பிளிருபின் வெளியேற்றம் பாதிக்கப்பட்டு மஞ்சள் காமாலை வரும்.

இவர்களுக்கு ஆரம்பத்தில் வலி இருக்காது, உடல் எடை குறையும், பசியின்மை இருக்கும். உடனடியாகக் கல்லீரல் பரிசோதனை செய்து கணைய நோயைக் கவனித்து, பித்த நாளத்தை பைபாஸ் செய்வதன் மூலம் பாதிப்பில் இருந்து தப்பலாம்.

அதீத சிவப்பணு அழிவு (Increased Hemolysis)

ஒரு நாளைக்குக் குறிப்பிட்ட அளவு சிவப்பணுக்கள் மட்டுமே உடைய வேண்டும். மாறாக, அளவுக்கு மீறி சிவப்பணுக்கள் உடைந்தால், ரத்தத்தில் பிளிருபின் அளவு அதிகரித்துவிடும். இதனால் மஞ்சள் காமாலை வரக்கூடும். இந்த பிளிருபின் கரையாத வகையாகும். ரத்த சோகை உள்ளவர்கள் அதற்குரிய சிகிச்சை கொடுத்தால் தானாகவே மஞ்சள் காமாலை போய்விடும்.

இவை தவிர, உடலில் இரும்பு, தாமிரச்சத்து அதிகமாக இருப்பவர்கள், நோய் எதிர்ப்புச் சக்தி பிறழ்வு (Autoimmune Hepatitis) உள்ளவர்களுக்கு அரிதாக மஞ்சள் காமாலை ஏற்படலாம்.

என்ன பரிசோதனை?

சிலர், பிளிருபின் பரிசோதனை மட்டும் செய்துகொண்டு சுய சிகிச்சை எடுக்கிறார்கள். இது தவறு. கல்லீரல் செயல்பாட்டுக்கான முழுப் பரிசோதனை (LFT) செய்ய வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை மாஸ்டர் ஹெல்த் செக் அப் செய்யும்போது, கல்லீரல் முழுமையாகச் சோதனை செய்யப்படும். இதனால், பாதிப்புகளை ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த முடியும்.

மஞ்சள் காமாலை வந்தால் மரணமா?

மஞ்சள் காமாலை வந்தால் மரணம்தான் என முடிவுகட்ட வேண்டியது இல்லை. எதனால் மஞ்சள் காமாலை வருகிறது என்பதை அறிந்து, அதற்குரிய சிகிச்சை அளித்தால், கண்டிப்பாகக் குணப்படுத்த முடியும். முன்னெச்சரிக்கை, முறையான பரிசோதனை, முழுமையான சிகிச்சை இவை மூன்றும் இருந்தால், மஞ்சள் காமாலை நோயை விரட்ட முடியும்.

அறிகுறிகள்

மஞ்சள் காமாலை முதலில் கண்ணில்தான் வெளிப்படுகிறது. கண்களில் மிகவும் மெல்லிய வெள்ளை நிறப் பகுதி ஸ்க்லீரா. பிளிருபின் அதிகமாக இருந்தால் ஸ்க்லீரா பாதிக்கப்பட்டு மஞ்சள் நிறத்துக்கு மாறும்.

கண்ணில் மஞ்சள் காமாலை வந்திருப்பதைக் கண்டறிய பாதிக்கப்பட்டவரை இயற்கை வெளிச்சத்தில் வைத்துப் பரிசோதிப்பதே சிறந்த முறை. செயற்கை விளக்கொளியில் கண்டறிவதில் தாமதம் ஏற்படும்.

நாக்கு, மேல் அன்னம், உள் உதடு, கைகள் போன்றவற்றில் மஞ்சள் நிறப் புள்ளிகள் தோன்றும். பித்தநீர் சரியாக வெளியேறாது. எனவே, பித்த உப்பு உடலில் தங்கிவிடும். பிளிருபின், பித்த உப்புடன் சேர்ந்தால், தோலில் அரிப்பு ஏற்படும்.

பசியின்மை, உணவைப் பார்த்தாலோ, உணவு வாசனையை நுகர்ந்தாலோகூட குமட்டல் உணர்வு இருக்கும். இந்த அறிகுறிகள் தென்பட்டால், மஞ்சள் காமாலை இருக்கலாம்.

மஞ்சள் காமாலையைத் தடுக்க ஈஸி டிப்ஸ்

மது அருந்துவதை நிறுத்த வேண்டும்.

எந்த ஓர் உணவுப் பொருளைச் சாப்பிடுவதற்கு முன்பாகவும் சாப்பிட்ட பின்னரும் கண்டிப்பாகச் சுத்தமாகக் கை கழுவ வேண்டும்.

சாலை ஓரங்கள், சாக்கடை ஓரங்களில் உள்ள கடைகளில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

காய்கறி, பழங்கள் போன்ற எதையும் சுத்தமாகக் கழுவிய பிறகுதான் வெட்ட வேண்டும்.

கழிவறைக்கு அருகில் சமையல் பொருட்களை வைக்கக் கூடாது, சமைக்கவும் கூடாது. கழிவறையை அவ்வப்போது சுத்தம் செய்வது அவசியம்.

கழிவறையைப் பயன்படுத்திய பின், சிறுநீர் கழித்த பின், கைகளை நன்றாக கிருமி நாசினி பயன்படுத்தி கழுவ வேண்டும்.

நகம் வளர்க்கக் கூடாது. நகம் கடிக்கக் கூடாது.

நேரத்துக்குச் சாப்பிட வேண்டும். குறிப்பாக, காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.

நண்பர்கள், உறவினர்கள் என யாருடைய பிரஷ், ஷேவிங் செட் போன்றவற்றையும் பயன்படுத்தக் கூடாது.

ஒருமுறை பயன்படுத்தக்கூடிய ஊசியையே பயன்படுத்த வேண்டும்.
ksikkuh
ksikkuh
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 30/11/2017
மதிப்பீடுகள் : 34

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum