புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திடீர் அதிர்ஷ்டம்.. தேடிவந்த விருது.. Poll_c10திடீர் அதிர்ஷ்டம்.. தேடிவந்த விருது.. Poll_m10திடீர் அதிர்ஷ்டம்.. தேடிவந்த விருது.. Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
திடீர் அதிர்ஷ்டம்.. தேடிவந்த விருது.. Poll_c10திடீர் அதிர்ஷ்டம்.. தேடிவந்த விருது.. Poll_m10திடீர் அதிர்ஷ்டம்.. தேடிவந்த விருது.. Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திடீர் அதிர்ஷ்டம்.. தேடிவந்த விருது.. Poll_c10திடீர் அதிர்ஷ்டம்.. தேடிவந்த விருது.. Poll_m10திடீர் அதிர்ஷ்டம்.. தேடிவந்த விருது.. Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
திடீர் அதிர்ஷ்டம்.. தேடிவந்த விருது.. Poll_c10திடீர் அதிர்ஷ்டம்.. தேடிவந்த விருது.. Poll_m10திடீர் அதிர்ஷ்டம்.. தேடிவந்த விருது.. Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திடீர் அதிர்ஷ்டம்.. தேடிவந்த விருது..


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 26, 2017 10:00 am

திடீர் அதிர்ஷ்டம்.. தேடிவந்த விருது.. 201709241254087385_Sudden-luck-Searching-The-Award-_SECVPF


செப்டம்பர் 24, 2017, 12:54 PM
“எனது பெயரை அறிவித்து, மேடைக்கு அழைத்தபோது முதலில் என்னால் நம்பமுடியவில்லை. என்னை நானே கிள்ளிப்பார்த்துக்கொண்டு, மேடைக்கு சென்று விருதினை பெற்றுவந்தேன்” என்று தனு குரியன், மான்ட்ரீட் சர்வதேச திரைப்பட விழாவில் முழுநீள சினிமா வரிசை யிலான ஆங்கில பட பிரிவில் சிறந்த நடிகைக்கான விருதினை பெற்ற அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறார். 


ஷோம் சுக்லாதாஸ் என்பவர் இயக்கிய ‘ஒயிட் பீ’ என்ற சினிமாவில் நடித்ததற்காக தனுவுக்கு இந்த விருது கிடைத்திருக்கிறது. இவரது பூர்வீகம் கேரளா என்றாலும் இங்கிலாந்தில் வசிக்கிறார்.

“பள்ளியில் நாடகங்களில் நான் நடித்திருக்கிறேன். 

அதை தவிர்த்து நடிப்பு சார்ந்த அனுபவம் எதுவும் எனக்கு கிடையாது. சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற ஆசையும் எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை. ஆனால் என் வாழ்க்கையில் எதிர்பாராத சம்பவங்கள்தான் வழக்கமாக நடந்துகொண்டிருக்கின்றன.


 பெங்களூருவில் பிரபலமான பத்திரிகை ஒன்றில் உதவி மேலாளராக வேலை பார்த்தேன். அங்கே பரத்தை சந்தித்தேன். இரண்டு பேரும் ஒரே நிறுவனத்தில் வேலைபார்த்தோம். எங்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டது. திருமணம் செய்துகொண்டோம். திருமணத்திற்கு பிறகு அவர் ஐரோப்பிய நாடுகளுக்கான பிரிவுக்கு தலைமை அதிகாரியாக மாற்றம் செய்யப்பட்டார். 


அதனால் நாங்கள் பெங்களூருவில் இருந்து லண்டனில் குடியேறினோம்.
சினிமா துறையில் எனக்கு நிறைய நண்பர்கள் இருந்தாலும், அந்த துறைசார்ந்த விவாதங்களில்கூட நான் கலந்துகொண்டதில்லை. எனது சகோதரி லதாவும், அவரது கணவர் ராஜீவ்குமாரும் சினிமா துறையில் இருக்கிறார்கள். 



அவர்கள் சினிமாவில் தேசிய அளவிலான விருதுகளை பெற்றிருந்தாலும், எனக்கு சினிமா மீது மோகம் உருவானதில்லை. நான் நல்ல வேலைக்காகவும், அதன் மூலம் என் திறமையை வளர்த்துக்கொள்வதற்காகவுமே லண்டன் சென்றேன். ஆனால் விதி என்னை சினிமாவை நோக்கித்தான் இழுத்துச்சென்றது.

‘ஒயிட் பீ’ சினிமாவின் இயக்குனர் சுக்லாவுடன் எனக்கு சில மாத பழக்கம்தான். அவரது ஐந்தாவது படம் இது. அவர் சினிமா மீது வைத் திருந்த பற்று என்னை வியக்கவைத்தது. ஆனாலும் அவரது துறை பற்றி நான் ஒருமுறைகூட கருத்து தெரிவித்ததில்லை. 



அதற்கான அவசியம் எதுவும் எனக்கு ஏற்படவில்லை. ஒருநாள் திடீரென்று அவரிடமிருந்து எனக்கு போன் வந்தது. முகநூலில் நான் பதிவு செய்திருந்த எனது போட்டோ அவரை கவர்ந்திருக்கிறது. ‘எனது சினிமாவின் நாயகிக்கு உங்கள் முகம்தான்..’ என்று கூறிவிட்டு தொடர்பை துண்டித்துவிட்டார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 26, 2017 10:03 am

00
போனில் அவர் சொன்ன தகவல் எனக்கு ஒருவிதத்தில் 
அதிர்ச்சியைதான் தந்தது. ஏன்என்றால் அவர் இயக்கும் 
சினிமாக்கள் ஆழமான கதையம்சம் கொண்டவை. 


கடினமாக உழைத்து அந்த சினிமாவை தூக்கி நிறுத்த
வேண்டியவள் அந்த கதையின் நாயகிதான். அதனால் 
நான் உடனே சம்மதம் தெரிவிக்கவில்லை. 

நான் சம்மதம் தெரிவிக்காததற்கான காரணங்களை 
சொன்னபோது, அதற்கெல்லாம் விளக்கமாக அவர் 
பதிலளித்தார். அப்போதுதான் அவர் என்னை 
கதாநாயகியாக அங்கீகரித்திருந்ததை நான் உணர்ந்தேன். 

அந்த நேரத்தில் நான் பார்த்துக்கொண்டிருந்த வேலையும் 
எனக்கு ஒருவிதத்தில் மனஅழுத்தத்தை தந்திருந்தது.
 அதில் இருந்து விடுபடவேண்டும் என்றும் நான் விரும்பினேன்.

நான் சினிமாவில் நடிப்பதற்கு குடும்பத்தில் உள்ள 
அனைவரும் ஒத்துழைப்பு தந்தார்கள். ‘தெரியாத தொழிலிலும் 
தைரியமாக சிலர் இறங்கிவிடுவார்கள். அவர்களில் ஒருவராக 
நீ இருக்கவேண்டும்’ என்று பரத் சொன்னார்.

 அதை தொடர்ந்து 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்த 
சினிமாவில் நடிப்பதற்கான உடன்பாட்டில் கையெழுத்திட்டேன்.

அந்த படத்தின் கதாநாயகன் சுமந்தோ சட்டோபாத்தியாவும், 
சுக்லாவும் மும்பையில் இருந்து திருவனந்தபுரம் வந்தார்கள். 
நான் லண்டனில் இருந்து அங்கு போய் சேர்ந்தேன். முதல் 
மாதம் நடிப்பு பயிற்சிக்காக ஒதுக்கப்பட்டது. 

அப்போது நிறைய சினிமாக்கள் பார்த்தேன். பலரிடம் பேசினேன். 
நான் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தை முழுமையாக 
உள்வாங்கி உணர்ந்தேன். இயக்குனருக்கு திருப்தி ஏற்பட்ட 
பின்பே படப்பிடிப்பை தொடங்கினார்.

‘நீங்கள் நடிப்பதுபோல் ஒருபோதும் உணரவேண்டாம். 
அந்த கதாபாத்திரத்தை உள்வாங்கிக்கொண்டு அதுவாக 
கடந்துபோனால்போதும்’ என்று எங்களுக்கு 
சொல்லியிருந்தார்கள். 

எங்கள் இஷ்டம்போல் நடிக்கவும், பேசவும் அனுமதி 
கொடுத்தார்கள். அதனால் நடிப்பது போன்ற உணர்வே 
எங்களுக்கு தோன்றவில்லை.

காதலித்து திருமணம் செய்துகொண்ட இருவருக்கு இடையே 
ஏற்படும் அதிருப்திகளும், பிரச்சினைகளும் எப்படி 
அவர்களை விவாகரத்தை நோக்கி கொண்டு செல்கிறது 
என்பதுதான் ‘ஒயிட் பீ’யின் கதை. 

எப்படி எல்லாம் பிரச்சினைகள் ஏற்படுகிறது என்பதை 
அவர்கள் தெளிவாக புரிந்துகொள்ள ஒரு வருடம் திருமண 
பந்தத்தில் இருந்து விலகி வாழ்வார்கள். அப்போது அவர்கள்
 வாழ்க்கையில் என்னென்ன நடக்கிறது என்பதை சினிமா 
விளக்குகிறது.

மான்ட்ரீட் உலக படவிழாவில் சிறந்த நடிகை விருது 
மட்டுமின்றி, மேலும் கூடுதலாக மூன்று விருதுகளையும் 
ஒயிட் பீ பெற்றிருக்கிறது. சிறந்த நடிகை விருது மூலம் எ
னக்கு பெரும் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது” என்கிறார், 
தனு.

இங்கிலாந்து நடிகையான லில்லி கோலின் மற்றும் ஐரிஷ் 
நடிகை பியோனா ஆகியோர் பெயர் களும் சிறந்த 
நடிகைக்கான தேர்வு பட்டியலில் இருந்தது. அவர்களை 
பின்னுக்கு தள்ளிவிட்டு திறமை மூலம் முன்னேறி விருதை 
தட்டிச்சென்ற தனுவுக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் 
இருக்கின்றன.

தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக