புதிய பதிவுகள்
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இராஜராஜேச்சரம் Poll_c10இராஜராஜேச்சரம் Poll_m10இராஜராஜேச்சரம் Poll_c10 
6 Posts - 86%
cordiac
இராஜராஜேச்சரம் Poll_c10இராஜராஜேச்சரம் Poll_m10இராஜராஜேச்சரம் Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இராஜராஜேச்சரம் Poll_c10இராஜராஜேச்சரம் Poll_m10இராஜராஜேச்சரம் Poll_c10 
251 Posts - 52%
heezulia
இராஜராஜேச்சரம் Poll_c10இராஜராஜேச்சரம் Poll_m10இராஜராஜேச்சரம் Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
இராஜராஜேச்சரம் Poll_c10இராஜராஜேச்சரம் Poll_m10இராஜராஜேச்சரம் Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
இராஜராஜேச்சரம் Poll_c10இராஜராஜேச்சரம் Poll_m10இராஜராஜேச்சரம் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
இராஜராஜேச்சரம் Poll_c10இராஜராஜேச்சரம் Poll_m10இராஜராஜேச்சரம் Poll_c10 
18 Posts - 4%
prajai
இராஜராஜேச்சரம் Poll_c10இராஜராஜேச்சரம் Poll_m10இராஜராஜேச்சரம் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
இராஜராஜேச்சரம் Poll_c10இராஜராஜேச்சரம் Poll_m10இராஜராஜேச்சரம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இராஜராஜேச்சரம் Poll_c10இராஜராஜேச்சரம் Poll_m10இராஜராஜேச்சரம் Poll_c10 
2 Posts - 0%
Barushree
இராஜராஜேச்சரம் Poll_c10இராஜராஜேச்சரம் Poll_m10இராஜராஜேச்சரம் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இராஜராஜேச்சரம் Poll_c10இராஜராஜேச்சரம் Poll_m10இராஜராஜேச்சரம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இராஜராஜேச்சரம்


   
   

Page 1 of 2 1, 2  Next

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Wed Jul 12, 2017 8:11 pm

இராஜராஜேச்சரம் CnGZtV9OR8amyzKfHyVD+tan1


இராஜராஜேச்சரம் UdPzsNuESM2bIRszyRcr+tan2
கோயில்என்றால் சைவர்களுக்குசிதம்பரந்தான்
வைணவர்களுக்கு கோயில்என்றால் திருவரங்ம்
அதேப்போல் பெரிய கோயில்’ என்றால்பொது மக்களுக்கு அது தஞ்சை இராஜராஜேச்சரமே மட்டுமே ஆகும்.”

அது 214 அடி உயரமுள்ள விமானத்தாலா ?
13 அடி உயரமுள்ள மிகப்பெரிய சிவலிங்கத்தாலா ?
12 அடி உயர நந்தியாலா?
81 டன் எடையுள்ள உச்சி வட்டம் காரணமா ?

எப்படியோ பெரிய கோயில், ‘ப்ருஹத் ஈஸ்வரம்’ எனும் வடமொழிப் பெயரால் ‘பிரஹதீஸ்வரம்’ என்று தற்போது அழைக்கப்படுகிறது , பெரிய லிங்கத்திருமேனி இடம் பெற்றுள்ளது என்பதால் ‘பிரஹதீஸ்வரர் ஆலயம்’ எனவும் அழைக்கப்படலாயிற்று.
இராஜராஜேச்சரம் என்னுமபெயர்சோழர்கள்தஞ்சையை
விட்டு விலகியவுடன் சிறுக சிறுக மறையலாயிற்று
எப்போது ‘பிரஹதீஸ்வரர் ஆலயம் என்று பெயர்பெற்றது ஆராயப்படவேண்டும்

இக்கோயிலின் விமானம் தக்ஷிணமேரு எனப்பெயர் பெற்றுத் திகழ்கிறது. இந்த விமானத்தை முழுவதும் பொன்னால் மூடப்பட்டு மேரு மலை போல் ஒளிவிட்டதாக ஒரு சிதைந்த கல்வெட்டு தெரிவிக்கிறது .
சென்ற நூற்றாண்டில் இத்திருக்கோயிலின் வரலாறு மக்களால் தெளிவாக அறியப்பட்டிருக்கவில்லை.
பலராலும் அது கரிகாலன் எனும் சோழன் கட்டியதாக அறியப்பட்டிருந்ததாக தெரிகிறது
சைவர்களால் திருவிசைப்பா அப்போது படிக்கப்பட்டு வந்தபோதும், அதிலுள்ள இராஜராஜேச்சுரம் என்னும் தொடர் வரலாற்று உணர்வோடு புரிந்து கொள்ளப்படவில்லை.

இச்சிவாலயத்தைப் பற்றிப் பலவகையான கற்பனைக் கதைகள் , நாட்டிலும் வழங்கி வந்தன.
இக்கோயிலைக் கட்டியவர் என்று பலருடைய பெயர்கள் தவறாகப் பரவியிருந்தன.
1892இல் வெளியான ‘தென்னிந்திய கல்வெட்டுக்கள்’ என்னும் நூலில், “பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீஸ்வரம்” எனும் தொடரால்தான் இது மாமன்னன் ராஜராஜன் கட்டிய செய்தி உறுதி செய்யப்பட்டது.
இதுதவிர இந்தக் கோயிலைப் பற்றிய வேறு பல செய்திகளும் தவறாகவே சொல்லப்பட்டு வந்திருக்கின்றன. நிழல் கீழே விழாத கோபுரம்;
வளர்ந்து வருகின்ற நந்தி,
சாரப்பள்ளம் எனும் கிராமத்திலிருந்து சாரம் கட்டி கோபுர உச்சிக்கு 80 டன் எடையுள்ள பிரமரந்திரக்கல் ஏற்றப்பட்டது என்பது போன்ற பல செய்திகள் தவறானது .
நான் மாணவனாக இருந்தவரை அப்படித்தான் எனக்கு சொல்லப்பட்டது .நல்லவேளைஇப்போது அவைகள் தவறு என்று விளங்கியது .
இவ்வாலயத்தின் நுழைவு வாயிலாகத் திகழ்வது ‘கேரளாந்தகன் திருவாயில்’ எனப்படும் மாமன்னன் இராஜராஜன் தான் முடிசூடிய நான்காம் ஆண்டில் ‘காந்தளூர்ச்சாலை கலமருத்தருளிய கோஇராஜகேசரிவர்மன் என்று பெயர்பெற்றார்
கேரளத்தில் திருவனந்தபுரம் அருகிலுள்ள காந்தளூர்ச்சாலையை வென்று இப்பட்டப்பெயர் பெற்றார்
நுழைவு வாயில் இதனாலேயே ‘கேரளாந்தகன் திருவாயில்’
எனப்பட்டது .

அண்ணாமலை சுகுமாரன்
12/7/17

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 13, 2017 6:59 am

நல்ல தகவல்கள் சுகுமாரன் !

சாரப்பள்ளம் எனும் கிராமத்திலிருந்து சாரம் கட்டி கோபுர உச்சிக்கு 80 டன் எடையுள்ள பிரமரந்திரக்கல் ஏற்றப்பட்டது என்பது போன்ற பல செய்திகள் தவறானது

தவறானது என்றால் சரியானது எது என்று சொல்லமுடியுமா?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jul 13, 2017 12:04 pm

சாரம் கட்டாமல் 80 டன் எடையுள்ள கல்லை கோபுர உச்சியில் எப்படி ஏற்றினார்கள் ? அந்தக் காலத்தில் கிரேன் வசதி இல்லையே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Fri Jul 14, 2017 6:49 pm

படித்துப்பாராட்டியமைக்கு நன்றி ,

உண்மையில் அந்த பிரமரந்திரக்கல்( உச்சிக்கல) 80 டன் எடையுள்ளது ,ஒரேக்கல்லால் ஆனது அல்ல என பல வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள் .
4 துண்டுகளால் ஆனதை ஒரு கல் போல் கச்சிதமாக பொருத்தி இருக்கிறார்கள் .
அதை எப்படி உயரே பொருத்தினார்கள் என்பதை திரு பாலகுமாரன் தனது உடையார் நாவலில் அருமையாக விளக்கி இருக்கிறார் .
நானும் அதுவே சாத்தியமானது என நம்புகிறேன் அதாவது
கோவில் எழும்பும் போதே அதைச் சுற்றி ஒரு பெரிய மண் மேடு அமைத்து ,கோயில் வளர வளர மண் மேட்டையும் உயர்த்திக்கொண்டு போயிருக்கிறார்கள் ,அது பாறைகளை மேலே ஏற்றவும் , மனிதர்கள் இருந்து வேலை செய்யவும் அவர்களுக்குஅது வசதியாக இருந்திருக்கிறது .
கோயில் முழுவதும் முடிந்ததும் மண்மேடு அகற்றப்பட்டிருக்கலாம் ,
அந்த மண் மேட்டுக்கு அமைக்க தேவையான பெரிய அளவிலான மண் கோயிலை சுற்றி அமைத்திருக்கும் அகழியில் இருந்து கிடைத்திருக்கலாம் என நினைக்கிறேன் .
அண்ணாமலை சுகுமாரன்
14/7/17

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 14, 2017 7:33 pm

அப்பிடியா? தகவலுக்கு நன்றி அண்ணாமலை சுகுமாரன் !
பாலகுமாரன் அவர்களின் "உடையார் " நான் படிக்கவில்லை.
பிரம்மந்திர கல் --நாலு துண்டுகள் என்பது அவரது அனுமானமா ?
வேறு தகவல்களின் ஆதாரமா?

அந்த காலத்திய இந்திய சிற்பிகளின் கலை ஞானத்திற்கும்
கைவண்ணத்திற்கும் ஈடு இணை கிடையாது என்பது எந்தன்
உயர்ந்த அபிப்பிராயம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jul 14, 2017 8:42 pm

தஞ்சை கோவிலை பற்றி நிறைய மனிதர்கள் தேவையான அளவு எழுதி உள்ளனர். எனினும் இன்றைய இயந்திர வாழ்கையில் நாம் இறக்கும் முன்பு எழுதிய அனைத்தையும் படித்து முடிக்கமுடியுமா என்று தெரியவில்லை. எனினும் இந்த கோவிலை பற்றி பல சந்தேகங்கள் எழுவதுண்டு. அதில் ஒன்றுதான் விமானத்தின் உச்சியில் அமர்ந்திருக்கும் கல்லை பற்றியது.

இந்த கோவிலே அதிசயம் தான் என்றாலும் இந்த கல் மற்றுமொரு அதிசயம். இந்த கோவில் முழுவதும் ”GRANITE” எனப்படும் கருங்கல்லால் கட்டப்பட்டது. மேலுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ள கல் சுமார் 80 டன் எடை உள்ளது.

முதல் சந்தேகம் இந்த கல்லானது ஒரே கல்லா அல்லது இரு அரை வட்ட கற்களை (2 semi-circles) உள்ளடக்கியதா என்பது. இதற்கு பல விதமான வாதங்களும் பிரதிவாதங்களும் நடந்துள்ளன. சிலர் ஒரே கல் என்றும் சிலர் இரு அரை வட்ட கற்கள் சேர்ந்தது என்றும் கூறுகின்றனர். என்னை போல் 8 மணி நேரம்  கம்ப்யூட்டர் முன் செலவிடும் இளைஞர்களால் நீலகண்ட சாஸ்த்ரிகளையும் சதாசிவ பண்டரத்தாரையும் படித்து தெளிவடைய முடியாது.  Google  தான் எங்களை போன்ற கோடானு கோடி மக்களுக்கு உற்ற துணைவன்.
Google செய்த போதும் சரியான தகவல் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் சில பல புத்தகங்களை படிக்கவைத்து விடுவார்களோ என்ற பயம் எழுந்தது. அனைவரும் ஒன்று போல்,விமானம் 216 உயரம். இந்த உச்சிக்கல் 80 டன் எடை. இது இன்றளவும் ஒரு மர்மமும் ஆச்சர்யமும் கலந்ததாக உள்ளது என்று கூறி முடிக்கின்றனர். வேறு எதுவும் புதியதாக கூறவில்லை.

எனினும் ஒரு குத்து மதிப்பாக இது ஒரே கல் என்ற முடிவுக்கு பெரும்பாலனோர் வருகின்றனர். ஊருடன் ஒத்து வாழ்  என்ற மொழிகேர்ப்ப நாமும் அந்த முடிவையே எடுக்க வேண்டியுள்ளது. ஓரளவிற்கு மேல் தேடுவதில் பயனில்லை என்பதாலும் அதை விட இந்த மாதிரியான விஷயங்களுக்கு தேவையான பொறுமை நேரம் செல்ல செல்ல குறைகிறது என்பதே இந்த முடிவிற்கு காரணம்.  


அடுத்த மர்மம் இவ்வளவு பெரிய கல்  விமானத்தின் உச்சியில் எப்படி ஏற்றப்பட்டது என்பது தான். சற்றே சிந்திதோமானால் இரு வழிகள்  நமக்கு தோன்றும்.

முதல் வழி விமானம் கட்டப்பட கட்டப்பட சுருள் வழி பாதை (spiral route) போட்டிருக்க வேண்டும். ஆனால் அப்பாதை மற்ற கற்களை வேண்டுமானால் எடுத்து செல்ல உதவியிருக்கலாமே ஒழிந்து இந்த உச்சிக்கல்லை அல்ல. ஏனென்றால் இவ்வளவு எடையுள்ள கல் மேலே எடுத்து செல்லப்படவேண்டும் என்றால் மிகவும் எச்சரிக்கை அவசியம். எடுத்து செல்லும் பொழுது சிறு தவறு நேர்ந்தாலும் உயிர்ச்சேதம் மிக அதிகமாக இருக்கும். எனவே இந்த வழி வேலைக்கு ஆகாது.

ஆனால் பாலகுமாரன் உடையாரில் இறுதி வரை இந்த கல்லை பற்றியோ அல்லது இவ்விமானத்தின் நிழல் தரையில் விழாதவாறு கட்டப்பட்டதை பற்றி கூறவில்லை என்பது ஒரு குறையே.

அடுத்த வழி மிகவும் உசிதமான வழி. விமானத்தின் உயரத்திற்கு சரிவு பாதை அமைத்து பாதையின் இரு பக்கங்களையும் அடைத்து யானைகளை வைத்து உருட்டி கொண்டே வந்திருக்க வேண்டும். இந்த வழியிலும் மேற்கூறிய ஆபத்து இருந்தாலும் வழி பெரியதாக போடப்பட்டிருந்தால் கல்லை மிக மிக பொறுமையாக நகர்த்தி உச்சிக்கு கொண்டு வந்துவிடலாம். Discovery channel இல் காட்டிய அதே வழிமுறைதான் ஒத்து வருகிறது.

இறுதியாக விமானத்தின் நிழல் அதன் மேல் விழுவதன் காரணம் மிக சுலபமானது. ஆம். விமானம் செவ்வக வடிவிலான பலகைகளை கொண்டு எழுப்பப்பட்டது. அதாவது கீழிருக்கும் பலகை அதன் மேல் இருக்கும் பலகையை விட அகலமானதாக இருக்கும். இதனால் மேல் இருக்கும் பலகையின் நிழல் அதன் கீழிருக்கும் பலகையிலே விழுந்து விடும். இதனால் நிழல் பூமியில் விழாது. அவ்ளோதான்.

நன்றி : இணையம்



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
Guest
Guest

PostGuest Sat Jul 15, 2017 11:11 am

ஒரே கல்லிலானது அல்ல என்பது உடையார் புதினத்தின் தகவல் அல்ல. முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் ஆய்வு தகவல். அவரின் நீண்ட ஆய்வு விரிவுரைகள் காணொளிகளாகவும் ஆய்வு நூல்களாகவும் வெளியிடப்பட்டுள்ளன.
கல்வெட்டுகள் மற்றும் உண்மையான தகவல்களை வைத்துஅவரின் ஆய்வுகள், சார அமைப்பு, பயன்படுத்தப்பட்ட சோழர்களின் அள்வுகோல் அனைத்துத் தகவல்களும் இணையத்தில் நீண்ட கட்டுரைகளாக வந்துள்ளன.
…………………………...
பல மாடிக் கட்டிடங்களில் வாகனங்களை நிறுத்த வட்டமாக பாதை அமைத்து மேலே கொண்டு சென்று நிறுத்துகிறார்கள். உ+ம். 10ம் மாடிக் கட்டிடத்தில் 10 வது மாடியின் மேலே வாகனங்களை நிறுத்துகிறார்கள். வட்டமாக சுற்றி மேலே செல்லும் போது புவிஈர்ப்பின் தாக்கம் குறைவாக சுலபமாக செல்ல முடிகிறது. அதே போல் சுற்று வட்டமாக யானைகளைக் கொண்டு கற்களை மேலே கொண்டு சென்றிருக் கிறார்கள்.
கோயில் கட்ட வெளி நாட்டவர்களும் உதவியதாக சொல்லப்படுகிறது. அவர்களின் நினைவாக கோபுரத்தில் சிலைகள் செதுக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.
நன்றி -Lost Temples

(பி.கு.: ஈகரை விதிகள் மட்டுமே எழுதியவர்களுக்கும், இணையப் பக்கங்கள்/வலைப்பதிவுகளுக்கும் நன்றி தெரிவுக்கும்படி சொல்கிறது. ராஜேஷ்வரம் கட்டிய ஏற்றுக்கொள்ளக் கூடிய தகவல்களுடன் நீண்ட கட்டுரைகள் இணையத்தில் நான் பார்த்தபடி,பத்துக்கு மேற்பட்ட இணையப் பக்கங்கள்/முக நூல் பக்கங்களில் பதிவிடப்பட்டு இருந்தாலும்,அவை யாரால் எழுதப்பட்டன முதல் பதிவு எந்த இணையப் பக்கத்தில் வந்தது போன்ற தகவல்கள் எதுவும் இல்லாததால் இங்கு பதிவிடப்படவில்லை.ஈகரையை அனைவரும் பின்பற்றினால் எழுதியவர் பற்றிய தவல்களை அறிய முடியும்.சாதாரண பதிவாக இருந்தால் விட்டு விடலாம். வரலாற்று ஆய்வுக் கட்டுரைகளை பல நாட்கள் செலவு செய்து ஆய்வுகளை மேற்கொண்டவர்களுக்கு நன்றி சொல்லாது,எதுவித தகவல்களும் இல்லாமல் வெளியிடுவது என்பது….???)

ஒரு கல்வெட்டு இது.........
இராஜராஜேச்சரம் Ins

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82560
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 15, 2017 1:49 pm

இராஜராஜேச்சரம் 103459460

-
இராஜராஜேச்சரம் J8ecwITTQOucLS7oANRu+bxp261628

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jul 15, 2017 2:09 pm

பெரியகோவில் கோபுரம் நான்கு புறமும் சமமாக பட்டையாக அச்சுவெல்லம் போல உள்ளது . இதுபோல வேறு கோவில் கோபுரங்கள் தமிழ்நாட்டில் உள்ளதா ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
Guest
Guest

PostGuest Sat Jul 15, 2017 10:25 pm

சில வரலாற்றுத்  தகவல்கள்…..
ராஜராஜன் பிறந்தது ஆடித் திருவாதிரை, ராஜேந்திரசோழன் பிறந்தது ஐப்பசி சதய நாள்
முதலில் செங்கற்கோயிலாக இருந்ததை கற்கோயிலாக மாற்றப்பட்ட்து. (திருவொற்றியூர் கல்வெட்டு.)

கங்கையில் இருந்து கொண்டு வந்த நீரை கொட்டிய -சோழகங்கம் ஏரி - தற்போதய பொன்னேரி

அன்றைய கோயிலின் அரைவாசிப் (50%) பகுதியே இன்றுள்ள கோயிலாகும்.முதல் அழிவு அமர்குஷ்-1311 இல் ,1756 இல் பிரன்ஸ் படைகளால்,1765 இல் ஆற்காட்டு நவாப் ,1801 இல் ஆங்கிலேயரால் ,1836 இல் அணை கட்டுவதற்காக (கீழணை-கொல்லம்) மதில்,சுற்று மண்டபங்கள் அழிக்கப்பட்டு(உச்சகட்ட அழிப்பு) கற்களை பயன்படுத்தினார்கள். இதன்பொது பல கல்வெட்டுக் கற்கள் கொண்டு செல்லப்பட்டதால் கல்வெட்டுகள் இழப்பு ஏற்பட்டது.
படைகள் தங்கவும்,பாதுகாப்புக்காகவும் கோயிலை பயன்படுத்தினார்கள்.

இதைவிட கடந்த 10 ஆண்டுகளுக்குள் பல மாற்றங்கள் செய்யப் போய் தூண்கள் கல்வெட்டுகள் அழிக்கப்பட்டுள்ளன.(ஆந்திர காண்ட்ராக்டர் களினால் அழிவுக்கு உள்ளாகியது. குரங்கு கையில் பூமாலை)

இன்றைய கோயிலைக் கண்டு வியக்கும் இந்த உலகம் முழுக் கோயிலையும் கண்டால்………………….???
நன்றி- Tamil History/முனைவர். குடவாசல் பாலசுப்ரமணியம்

பாண்டியர்களாலும் அன்னியப் படைகளாலும் அழிக்கப்பட்ட கங்கை கொண்ட சோழ்புரம் அரண்மனை.



நன்றி-Dr.சுபாஷினி -THF

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக