புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
துன்ப காலங்களில்  கடவுள் Poll_c10துன்ப காலங்களில்  கடவுள் Poll_m10துன்ப காலங்களில்  கடவுள் Poll_c10 
60 Posts - 47%
ayyasamy ram
துன்ப காலங்களில்  கடவுள் Poll_c10துன்ப காலங்களில்  கடவுள் Poll_m10துன்ப காலங்களில்  கடவுள் Poll_c10 
52 Posts - 40%
mohamed nizamudeen
துன்ப காலங்களில்  கடவுள் Poll_c10துன்ப காலங்களில்  கடவுள் Poll_m10துன்ப காலங்களில்  கடவுள் Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
துன்ப காலங்களில்  கடவுள் Poll_c10துன்ப காலங்களில்  கடவுள் Poll_m10துன்ப காலங்களில்  கடவுள் Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
துன்ப காலங்களில்  கடவுள் Poll_c10துன்ப காலங்களில்  கடவுள் Poll_m10துன்ப காலங்களில்  கடவுள் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
துன்ப காலங்களில்  கடவுள் Poll_c10துன்ப காலங்களில்  கடவுள் Poll_m10துன்ப காலங்களில்  கடவுள் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
துன்ப காலங்களில்  கடவுள் Poll_c10துன்ப காலங்களில்  கடவுள் Poll_m10துன்ப காலங்களில்  கடவுள் Poll_c10 
2 Posts - 2%
prajai
துன்ப காலங்களில்  கடவுள் Poll_c10துன்ப காலங்களில்  கடவுள் Poll_m10துன்ப காலங்களில்  கடவுள் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
துன்ப காலங்களில்  கடவுள் Poll_c10துன்ப காலங்களில்  கடவுள் Poll_m10துன்ப காலங்களில்  கடவுள் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
துன்ப காலங்களில்  கடவுள் Poll_c10துன்ப காலங்களில்  கடவுள் Poll_m10துன்ப காலங்களில்  கடவுள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துன்ப காலங்களில்  கடவுள் Poll_c10துன்ப காலங்களில்  கடவுள் Poll_m10துன்ப காலங்களில்  கடவுள் Poll_c10 
418 Posts - 48%
heezulia
துன்ப காலங்களில்  கடவுள் Poll_c10துன்ப காலங்களில்  கடவுள் Poll_m10துன்ப காலங்களில்  கடவுள் Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
துன்ப காலங்களில்  கடவுள் Poll_c10துன்ப காலங்களில்  கடவுள் Poll_m10துன்ப காலங்களில்  கடவுள் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
துன்ப காலங்களில்  கடவுள் Poll_c10துன்ப காலங்களில்  கடவுள் Poll_m10துன்ப காலங்களில்  கடவுள் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
துன்ப காலங்களில்  கடவுள் Poll_c10துன்ப காலங்களில்  கடவுள் Poll_m10துன்ப காலங்களில்  கடவுள் Poll_c10 
28 Posts - 3%
prajai
துன்ப காலங்களில்  கடவுள் Poll_c10துன்ப காலங்களில்  கடவுள் Poll_m10துன்ப காலங்களில்  கடவுள் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
துன்ப காலங்களில்  கடவுள் Poll_c10துன்ப காலங்களில்  கடவுள் Poll_m10துன்ப காலங்களில்  கடவுள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
துன்ப காலங்களில்  கடவுள் Poll_c10துன்ப காலங்களில்  கடவுள் Poll_m10துன்ப காலங்களில்  கடவுள் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
துன்ப காலங்களில்  கடவுள் Poll_c10துன்ப காலங்களில்  கடவுள் Poll_m10துன்ப காலங்களில்  கடவுள் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
துன்ப காலங்களில்  கடவுள் Poll_c10துன்ப காலங்களில்  கடவுள் Poll_m10துன்ப காலங்களில்  கடவுள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துன்ப காலங்களில் கடவுள்


   
   
SARATHI NEGAMAM
SARATHI NEGAMAM
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 15/09/2015

PostSARATHI NEGAMAM Thu Jun 22, 2017 10:25 pm

துன்ப காலங்களில்  கடவுள்

ஒரு  மனிதன் ஒரு நெடும்பயணம் மேற்கொண்டிருந்தான்.

அது அவன் வாழ்க்கைப் பயணம்.

நீண்ட தூரம் சென்றபின் தான் கவனித்தான். அவனுடைய கால் தடங்கள் அருகே இன்னொரு ஜோடி கால் தடங்கள். அவனுக்கு ஆச்சரியம்.

சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் தெரியவில்லை.  சத்தமாகக் கேட்டான்.

"என்னுடன் வருவது யார்?"

"நான் கடவுள்" என்று அசரீரியாகப் பதில் வந்தது.

அவனுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி.

'கடவுள் என்னுடன் பயணம் செய்து வருகிறார்'. பயணம் தொடர்ந்தது. அவன் அந்தக் கால் தடங்களைக் கவனிப்பதை நாளாவட்டத்தில் மறந்தான்.

சுகமாகப் போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் பிரச்சினைகள் தலையெடுக்க ஆரம்பித்தன.

சிறிய பிரச்சினைகள் பெரிதாயின. துன்பமும் துக்கமும் அதிகமாயின.  

ஒரு கட்டத்தில் அவன் சமாளிக்க முடியாமல் தவித்த போது தான் அந்தக் கால் தடங்கள் நினைவு மறுபடி வந்தது.

'கூட கடவுள் இருக்கும் போதே இவ்வளவு துன்பமா' என்று தனக்குள் கேட்டுக் கொண்டவன் கால் தடங்களைக் கவனித்தான்.

அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அந்தப் பாதையில் ஒரே ஒரு ஜோடி கால் தடங்கள் மட்டுமே தெரிந்தன.  

அவன் சுற்றி பின்னோக்கிப் பார்த்தான். அவன் கஷ்டகாலம் ஆரம்பித்த கணத்திலிருந்து

ஒரே ஒரு ஜோடிக் கால் தடம் மட்டுமே தெரிந்தது. அவனுக்கு அழுகையாய் வந்தது.

கண்ணுக்குத் தெரியாத அந்தக் கடவுளை அழுகையினூடே கேட்டான்.  

"கடவுளே என் இன்ப காலத்தில் உடன் வந்து கொண்டிருந்தீர்கள்,
துன்ப காலத்தில் என்னைக் கைவிட்டுக் காணாமல் போய் விட்டீர்களே இது நியாயமா?"
கடவுளிடமிருந்து பதில் வந்தது. "மகனே, நான் உன்னைக் கைவிடவில்லை.

உன் துன்ப காலத்தில் நீ பார்த்த காலடிச்சுவடுகள் உன்னுடையவை அல்ல. என்னுடையவை.

இந்தக் கடின யாத்திரையில் நடக்க முடியாத உன்னைத் தூக்கிக் கொண்டு நான் தான் நிறைய தூரம் வந்துள்ளேன்.

அதனால் தான் நீ உன்னுடைய காலடி சுவடுகளைக் காண முடியவில்லை...."  

அந்த மனிதன் கண்களில் நன்றியுடன் வழிந்த கண்ணீர் நிற்க நிறைய நேரம் ஆயிற்று.

குற்றம் காண்பதில் மனிதன் சமர்த்தன். அவனுக்கு அதற்கு நிறைய நேரம் தேவைப் படுவதில்லை.

கஷ்ட காலங்களில் உறவும் நட்பும் காணாமல் போவது போல

கடவுளின் அருளும் காணாமல் போவதாக அவன் என்ணுவதில் வியப்பில்லை.

சுமைகள் கூடும் போது, இறக்கி வைக்க வழி தெரியாத போது இருக்கவே இருக்கிறார் கடவுள்,
அவனிடம் வசவுகள் வாங்கிக் கொள்ள.

வந்த கஷ்டங்கள் நமக்குத் தெரியும். எத்தனையோ கஷ்டங்கள் வரவிருந்து,

அவை இறையருளால் வராமல் தவிர்க்கப் பட்டிருக்கலாம்.

அவை நம் கவனத்திற்கு வராமலேயே போய் விடுகிறது.

கடவுள் கணக்கு சொல்வதில்லை.

எனவே எத்தனையோ உண்மைகள் நமக்குத் தெரியாமலேயே போய் விடுகின்றன.

துன்பங்களும், சோதனைக் காலங்களும் வரும் போது நாம் ஒரு பெரிய உண்மையை மறந்து விடக் கூடாது.

எதுவுமே காரணம் இல்லாமல் நம்மிடம் வருவதில்லை.

அவற்றில் சில நாம் சம்பாதித்தவை.

நம் முந்தைய செயல்களின் விளைவுகள். நாமே வர வழைத்தவற்றை நாம் சந்தித்தே ஆக வேண்டியுள்ளது.

மறுப்பதும் எதிர்ப்பதும் நியாயமல்ல. மற்றவை நாம் வளர, பக்குவப்படத் தேவையான அனுபவங்கள்.

நாம் கற்க வேண்டிய பாடங்கள். அவற்றைக் கற்றறிந்த பின்னரே,
அந்த சோதனைத் தீயில் பட்ட பின்னரே
நாம் புடம் போட்ட தங்கமாய் மிளிரப் போகிறோம்.

அவை நம் வாழ்வில் வரா விட்டால் நாம் சோபிப்பதுமில்லை.

கையால் மென்மையாக தடவிக் கொடுத்தே கல்லை சிலையாக முடியாது.

இன்பங்கள் மட்டுமே வந்து கொண்டிருந்தால் நாம் பக்குவம் அடைவதும் சாத்தியமல்ல.  

உளிக்கு கல்லின் மீது பகையில்லை. உளியடிகளைத் தாங்காத கல் அழகிய சிலையாவதில்லை.

கடவுள் என்ற சிற்பி நம்மைச் செதுக்கும் போது அழகிய சிலையாகப் போகிறோம் என்ற உணர்வுடன் தாங்கிக் கொண்டால், இது அர்த்தமில்லாததல்ல என்று புரிந்து கொண்டால் அந்த அடிகளும் நமக்கு ஆனந்தமே.

இன்னொரு விதமாகவும் சொல்லலாம். மருந்து கசக்கிறது என்று குழந்தை கதறியழுதால் தாய் விட்டு விட மாட்டாள்.

குழந்தை குணமாக வேண்டும் என்று அக்கறை அவளுக்கு அதிகமுண்டு. பலவந்தமாக மருந்தை குழந்தை வாயில் திணிக்கையில்

குழந்தை தாயை ஒரு கொடுமைக்காரியாகக் கூட நினைக்கலாம்.

குழந்தை என்ன நினைக்கிறது என்பது தாயிற்கு முக்கியமல்ல.

குழந்தை குணமாக வேண்டும் என்பதே தாயிற்கு முக்கியம்.

குழந்தைக்கு எது நல்லது என்பதை குழந்தையை விடத் தாய் நன்றாக அறிவாள்.  

கடவுளும் அந்தத் தாயைப் போல் தான்.

இனி கஷ்ட காலங்கள் வரும் போது
கடவுளை திட்டாதீர்கள்.

அவற்றைத் தாங்கும் சக்தியையும் அவற்றிலிருந்து கற்கும் புத்தியையும் மட்டுமே கடவுளிடம் வேண்டுங்கள்.  

கஷ்ட காலங்களில் தைரியத்தையும் இழக்காதீர்கள்.

உங்களுக்கு நடக்க முடியாத போது சுமக்கத் தயாராய் கடவுள்

உங்களுடனேயே இருக்கிறார் என்பதை நினைவில் வைத்துக் கொண்டால் வாழ்க்கைப் பயணம் சுலபமாகும்.
முடிவு கண்டிப்பாக இனிமையாகும் ,,,



அன்புடன்
சாரதி சுப்பிரமணியம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 23, 2017 1:45 am

ஜனவரி மாதம் 12 ம் நாள் 2013 அன்று ஈகரையில்
நான் பதிவிட்ட கவிதைதனை சிறிது பாரும்.
எமை தாங்கிய சுமைதாங்கி .

நான் பதிவிட்ட கவிதையின் கருத்துக்கள்  உங்கள் பதிவு  --ஒற்றுமை காணீர்.
ரமணியன்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

எமை தாங்கிய சுமைதாங்கி 


கனவொன்று காண்கிறேன் 
கையோடு கை கோர்த்து 
கடவுளுடன் நடக்கிறேன்,
கடற்கரை தனிலே..
துன்ப காலங்களில்  கடவுள் Sgdz2cV6RaODwePY76dQ+images
இன்ப துன்பத்தில் 
இணைந்திருக்கும் 
இறைவனுடன் நடக்கிறேன்,
ஈர மணல்தனிலே  
 
வானத்து மீதொரு 
 காணொளி  காண்கிறேன்
வாழ்வில் நடந்தவை யாவும் 
 வண்ணக்காட்சி  ஆக,    

.நிகழ்வு ஒன்று  நடக்க, 
பதிந்த பாத சுவடுகள் ,
இரு ஜோடி  --- ஈர மண்ணில்.   

துன்ப காலங்களில்  கடவுள் YpKMS0wThu4lSWG915xM+footprints-456732_960_720
ஒரு ஜோடி இறைவனது  
 மறு ஜோடி எனது.


 மகிழ்ச்சி  காலங்களும் உண்டு: 
நெகிழ்ச்சி  காலங்களும் உண்டு. 

நிகழ்ந்த நிகழ்வுகள் பலப்பல, 
பதிந்த ஜோடி சுவடுகளும், 
பற்பல பற்பல. 

நடக்க நடக்க, 
கடந்த காலங்கள், 
காலடி சுவடென 
பதிய கண்டேன்.

கடைசி காட்சியும்,
வானிலே மறைய,
காலடிகளை நோக்க 
கண்களும் பின்னோக்கின .

இரு ஜோடி காலடிகள் 
ஈர மண்ணில் தெரிந்தாலும்,
ஒரு சில இடங்களில்,
ஒரு ஜோடி காலடிகளே ,
யோசிக்க வைத்தது என்னை!


கஷ்டப்பட்ட காலங்கள்,
கவலை பட்ட காலங்கள்,
கடவுளே காப்பாற்றுங்கள் என 
கதறிய காலங்கள் 
தனியாக தவித்த 
காலங்களன்றோ,  
ஒரு ஜோடி காலடிகள் 
காட்டும் காலங்கள்,



துன்ப காலங்களில்  கடவுள் JrNzzv3iTASdyZF9Z04Q+footprints-in-the-sand-163312


கை கொடுக்கா கடவுளா?
கூட வராக் கடவுளா? 
கூடவே வராதவரா ?
கூடுகிறதே குழப்பம் ?
கேட்போமா? 
கேட்டிட வாயை 
திறக்..........கு ....முன்னரே .......

கணீரென்ற குரல்,
கனிவான குரல்,
குழந்தாய் ...
செல்வமே --------
குழம்பாதே --------
கஷ்டகாலத்திலும் 
கவலை பட்டக் காலத்திலும் 
கதறிய காலத்திலும் 
 ஆறுதல் காட்டவே ..
தோளில் உன்னை சுமந்ததால் 
ஒரு ஜோடி காலடி சுவடுகளே.
உன் கண்ணில் படுகிறது.

---------------------------------------------------------------------------------------------------------------------------------

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 23, 2017 12:34 pm

இருவர் சிந்தனையும் ஒன்றுபோல இருக்கிறது .

இதனால்தான் " Great Men think alike " என்ற பழமொழி வந்ததோ ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 23, 2017 6:55 pm

நன்றி Jagadeesan .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக