புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோணங்கள் எதிரெதிராய்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
'வாத்தியார் உத்தியோகத்தில், 'அதை சாதிச்சேன்; இதை சாதிச்சேன்'னு தம்பட்டமடிக்க என்ன இருக்குது... 'அவன், என்கிட்ட படிச்சான்; இவன் முளைக்கும் போதே, பகாசூரனாக விளங்க போறான்னு எனக்கு தெரியும்...' இப்படி அசட்டு பெருமை வேண்டுமானால் பேசிக்கலாம்...' என்று அடிக்கடி அலுத்துக் கொள்வார், வாத்தியார், கல்யாணம்.
வேண்டாததை கழித்து, குப்பையில் கொட்டுவது போன்றதுதான், 'ரிடையர்மென்ட்' என்பதை, பணி ஓய்வுக்கு பின், புரிந்து கொண்ட கல்யாணம், 'பென்ஷன் போதவில்லை; பொழுதும் போகவில்லை...' என்று தான், கல்யாண தரகர் வேலையை ஆரம்பித்தார்.
ஆனால், அதற்குபின், பல சமயங்களில், இத்தொழிலில் இருக்கும், 'த்ரில்'லை நினைத்து, 'அடடடா... இந்த தொழில் தான் எத்தனை சுவாரசியங்கள்... சில நிமிடங்களுக்கு முன் வரை, இவனுக்கு இவள் தான்னு நிச்சயித்து வைத்திருக்கும் பெண்ணை, சதுரங்கக்காயை நகர்த்துவது போல், அடுத்த சில நிமிடங்களில், இன்னொருத்தனுக்கு பொண்டாட்டியாக மாறி விடும் சுவாரசியம் தான் என்ன...
'கமிஷனுக்கு தான் என்றாலும் சின்னாளம்பட்டி பெண்ணை, ஷில்லாங் மாப்பிள்ளைக்கு பேசி முடிச்சுப் போடும் போது, கடவுள், 'ராங்க்' கிட்டியது போல், ரகசிய பெருமை உண்டாகிறதே... அதோடு, எந்த எழுத்தாளரும், கற்பனை செய்ய முடியாத திடீர் திருப்பங்கள், அரசியல்வாதிகளையும் மிஞ்சும் கட்சி மாறல்கள் போன்ற விஷயங்களை எதிர்கொள்ளும் வாய்ப்பு இந்த தொழில்ல தானே இருக்கு. இது முன்கூட்டியே தெரிந்திருந்தா, ஆசிரியர் உத்தியோகத்தில, காலத்தை வீணாக்கியிருக்க மாட்டோமே...' என்று ஆதங்கப்படுவார், கல்யாணம்.
சில சமயங்களில், அவரிடம் படித்த மாணவர்களுக்கே, திருமண முடிச்சு போடும் போது, மகிழ்ச்சி இரட்டிப்பாகும்; அதில், அந்த ஆதங்கம் மறைந்துவிடும்.
காலை காபிக்கு மனசு ஏங்க, 'எப்போதாடா மனைவி காபி தருவாள்...' என காத்திருந்தார், கல்யாணம். அப்போது, மளிகை கடை நாராயணமூர்த்தி, தம் பெரிய உடம்பை தூக்கியவாறு, வீட்டிற்குள் நுழைந்தார். சாட்சாத் கடவுள் நாராயணமூர்த்தியே வீட்டிற்கு வந்துவிட்டது போல், பதறி, எழுந்து நின்றார், கல்யாணம். காரணம், நாராயணமூர்த்தி, தன் மளிகைக் கடையில் கல்யாணத்திற்கு அக்கவுண்டில், மளிகை பொருள் கொடுப்பவர்.
''வாங்க... என்ன அபூர்வமாயிருக்கு... சொல்லியனுப்பியிருந்தா ஓடி வந்திருக்க மாட்டேனா... இவ்வளவு தூரம் நீங்களே வரணுமா... உட்காருங்க,'' என்றார்.
''நீங்க உட்காருங்க,'' என்று, கல்யாணத்தின் தோளை அழுத்தி, அமர வைத்து, அவரை ரட்சிப்பது போல், புன்முறுவலை தவழ விட்டவாறு, நாற்காலியில் உட்கார்ந்தார், நாராயணமூர்த்தி.
''பக்கத்து தெருவில, ஒரு கல்யாணத்திற்கு வந்தேன்; உம்மை பாக்கணும் போல் தோணிச்சு. கல்யாணம்... உம்மால ஒரு காரியம் ஆகணுமே...''
''சொல்லுங்க,'' என்று, இரண்டு கைகளையும் கூப்பி, 'அடியேன் சித்தம்...' என்ற பாவனையில் இருந்தார் கல்யாணம்.
தொடரும்.......

''நம்ப பொண்ணு ஜாதகத்துக்கு, நாலஞ்சு, 'ஆபர்' வந்திருக்கு; இந்த ஆவணியில எப்படியும் முடிச்சுரலாம்ன்னு நினைக்கிறேன்,'' என்றார்.
''வாஸ்தவம்,'' என்று, ஒத்து ஊதினார், கல்யாணம். மனதிற்குள், 'இதில் கிடைக்கிற கமிஷனில், தான் கொடுக்க வேண்டிய மளிகை கடன், தள்ளுபடியாகி விடும்...' என்ற சந்தோஷம் எழுந்தது.
''ஒரு வரனை பத்தி, எல்லாரும் நல்ல அபிப்பிராயம் சொல்றாங்க; பையன், 'ஹையர் செகண்டரி ஸ்கூல்'ல வாத்தியாரா இருக்கானாம். பையன நீங்க நேர்ல போய் பாத்துட்டு வரணும். நான் போனா, 'செலவாகாத சரக்கை, தள்ளி விட வந்தோம்'ன்னு கோபுரத்தில ஏறி உட்காந்துக்குவாங்க,'' என்றார்.
மளிகை கடை வியாபாரியல்லவா... தன் பிசினஸ், 'டெக்னிக்'கை இதிலும் காட்டுகிறார்.
''அதற்கென்ன பேஷா போயிட்டு வர்றேன்,'' என்றவர், மனதுக்குள், 'நாமாக கொண்டு போகாத ஐட்டம் என்பதால், கமிஷன் அவ்வளவு தேறாது...' என்று, உற்சாகம் மட்டுப்பட்டது.
''வெளியே கார் நிக்குது... நீங்க, கார்ல போய், பையன பள்ளிக் கூடத்துலயே பாத்துட்டு வந்துடுங்க,'' என்றார்.
மணி, 9:00 ஆகியும் இன்னும் காபி குடிக்காத ஏக்கத்தோடு, சட்டையை மாட்டி, வெளியே வந்தார், கல்யாணம்.
''சார்... உங்கள பாத்து எவ்வளவு நாளாச்சு,'' என்று கூறி, கை கூப்பி வணங்கினான், சுந்தரம்.
கதர் வேட்டி, கதர் ஜிப்பாவில் இருந்த சுந்தரம், சராசரிக்கும் கூடுதலான உயரம்; நல்ல நிறம்; கண்களில் தீட்சண்யம்; முகத்தில் கம்பீரத்தோடு காணப்பட்டான்.
எங்கோ பார்த்தது போல் தோன்ற, யோசனையோடு நின்றார், கல்யாணம்.
''சார்... என்னை தெரியலயா... நான், உங்க பழைய ஸ்டூடண்ட். உங்ககிட்ட எட்டாவது படிச்சேன்; சுந்து... சுந்துன்னு கூப்பிடுவீங்களே...'' என்று ஞாபகப்படுத்தினான்.
'பளிச்'சென்று ஞாபகம் வர, ''ஏய் சுந்தரம்... நீ தானா அது... பெரிய கலெக்டரா வருவேன்னுல எதிர்பாத்தேன்; பி.ஏ.,விலே, 'யூனிவர்சிட்டி ரேங்க்' வாங்கினதா கேள்விப்பட்டேனே... அவ்வளவு, 'பிரைட்டா' இருந்துட்டு, ஏம்பா இந்த தரித்திரம் பிடிச்ச உத்யோகத்தில நுழைஞ்சே...'' என்றார்.
''என்ன சார் இப்படி சொல்றீங்க... இது என்ன தரித்திர உத்தியோகமா...
ஒரு ஞான தீபம், நூறு ஞான தீபங்களை ஏத்தி வைக்கணும்ன்னு, அன்னிக்கு நீங்க சொன்ன ஒரு சொல் தான், பசு மரத்தாணி போல, நெஞ்சுல பதிஞ்சிருக்கு...'' என்றதும், 'என்ன பிள்ளையாண்டான் இப்படி அசடாட்டம் இருக்கான்...' என்று, அவனையே, கவலையோடு பார்த்தவர், ''நான், அந்த அர்த்ததில்ல சொல்லல...'' என்று அசடு வழிந்தார்.
''எங்கப்பாவோட தொந்தரவு தாங்க முடியாமத் தான், எம்.ஏ., முடிச்சதும், 'குரூப் ஒன்' தேர்வு எழுதினேன். பாசாகி,
'செலக் ஷன் ஆர்டர்' எதிர்பாத்திருக்கையில தான், வாத்தியார் வேலைக்கான, 'ஆர்டர்' வந்துச்சு. உடனே, வாத்தியார் வேலைக்கு வந்துட்டேன். அன்னிக்கு, நீங்க என் மனசில விதைத்த லட்சியங்கள, இன்னிக்கு, நான், இங்கே விதைச்சுக்கிட்டிருக்கிறேன்,'' என்றான்.
அவன் பேசப் பேச கொட்டாவி வந்தது; சிரமப்பட்டு அடக்கினார், கல்யாணம். நல்ல காலம், பள்ளிக்கூட பியூன், டபராவில் காபி கொண்டு வந்தான். அதை வாங்கி, ஆசிரியருக்காக, ஆற்ற துவங்கினான், சுந்தரம்.
''அப்பழுக்கற்ற, தனி மனிதர்களை உருவாக்குவது தான், சுதந்திர இந்தியாவின் இன்றிமையாத கடமைன்னு அன்னிக்கு நீங்க சொன்னது, இன்னும் என் மனசில, 'தக தக'ன்னு எரிஞ்சுகிட்டிருக்கு,'' என்றான்.
தொடரும்...............

கல்யாணமோ, 'பயப்படுகிற அளவுக்கு, காபி பாடாவதியாக இருக்குமோ...' என்று, யோசனையோடு, டபராவை கவனித்தார்.
''உங்கள மாதிரி ஒரு ஆசிரியர் எனக்கு வாய்க்கலேன்னா, நானும், எல்லாரையும் போல, வெந்ததை தின்னு, வேளை வரும் போது சாகும், சாமான்ய மனிதர்களை போல் மாறிருப்பேன் சார்,'' என்றான், உணர்ச்சியுடன்!
காபியை குடிக்க ஆரம்பித்த கல்யாணத்தின் மனமோ, 'ஏ ஒன்...' என்று சிலாகித்தது.
''உங்க மாணவர்கள்ல, எத்தனையோ பேர்...'' என்று பேச்சை சுந்தரம் தொடர்ந்த போது, ''உனக்கு, 'லெஷர்' பீரியடா,'' என்று, அவனை தக்க இடத்தில் கத்தரித்தார், கல்யாணம்.
''இல்ல... ஏன் சார்?''
''அப்போ, அரை நாள் லீவு போட்டு என்னோட வர முடியுமா... இங்கே, ரங்கநாதர் கோவிலும், ரெண்டு கையிலும், வெண்ணை உருண்டை வச்சிட்டு நிக்கற கண்ணன் சிலையும் ரொம்ப அழகுன்னு கேள்விப் பட்டிருக்கேன்... பாக்கணும், கார் கொண்டு வந்திருக்கேன்,'' என்றார்.
''ஆகட்டும் சார்...'' என்றவன், லீவு சொல்ல, தலைமையாசிரியர் அறைக்கு சென்றான்.
ரங்கநாதர் கோவிலை, கார் நெருங்கிய போது, எதிரே வந்த, 'ஆடி' காரை பார்த்து, ''சார்... கொஞ்சம் காரை நிறுத்தச் சொல்லுங்க,'' என்றான் சுந்தரம்.
''ஏம்பா?''
''எதிர்ல வர்ற கார்ல கோபு வர்றான் சார்.''
''கோபுவா... எந்த கோபு?''
''அவன் தான் சார்... ஜகதலப்பிரதாபன்னு நீங்க கிண்டல் செய்வீங்களே... நாங்க கூட, 'புளுகு மூட்டை கோபு'ன்னு கலாட்டா செய்வோமே...'' என்று ஞாபகப்படுத்தியவாறு, காரிலிருந்து இறங்கி, கையை அசைக்க, அருகில் வந்து நின்றது, கார்.
கதவை திறந்து, கீழே இறங்கிய கோபு, பேன்ட், சர்ட், கூலிங்கிளாஸ், தங்க செயின் மாட்டிய டிஜிட்டல் வாட்ச், வைர மோதிரம் என, பகட்டாக இருந்தான். கோபுவை பார்த்ததுமே கல்யாணத்திற்கு பிடித்து விட்டது.
''டேய் சுந்தரம்... எப்படி இருக்க?'' என்று ஆர்வமாக கேட்டு, அவன் கைகளை பிடித்தான், கோபு.
''நான் நல்லா இருக்கேன்; நீ எப்படி இருக்க...'' என்றான், சுந்தரம்.
''இருக்கேம்பா... உங்க ஸ்கூல் இலக்கிய மன்ற பத்திரிக்கை கிடைச்சுது. சாரி சுந்தரம்... என்னால வரமுடியாது; தொழிற்சாலையில இரண்டாவது தளத்துல வேலை நடந்துட்டு இருக்கு; வேலை விஷயமாக ஓய்வு ஒழிச்சல் இல்லாமல், மிஷின் மாதிரி அலைய வேண்டியிருக்கு,'' என்றான்.
''கோபு... சாரை தெரியுதா...''
அப்போது தான், வாத்தியார் கல்யாணத்தை திரும்பிப் பார்த்தான்.
'' ஓ... நம்ப கல்யாணம் வாத்தியார்... வணக்கம் சார்; சவுக்கியமா இருக்கீங்களா?''
''இருக்கேம்பா.''
''உங்க பேச்சை கேட்டு உருப்பட்டிருந்தா, சுந்தரம் மாதிரி, வாழ்க்கை அமைதியா இருந்திருக்கும்; அடிக்கடி உங்கள நினைச்சுக்குவேன் சார்... என் தலையில தான் படிப்பு நுழையலியே... நீங்க, எவ்வளவு கஷ்டப்பட்டீங்க...''
கல்யாணம் வாத்தியாரோ, காரியத்திலேயே கண்ணாக இருந்தார்.
''கல்யாணமாயிடுச்சா கோபு?''
''இல்லே சார்... பாத்துக்கிட்டிருங்காங்க.''
''என்ன தொழில் செய்றே?''
''கெமிக்கல் தொழிற்சாலையில, 'மேனேஜிங் பார்ட்னரா' இருக்கேன்; ஒருநாள் வீட்டுக்கு வாங்க சார்.''
''வர்றேம்பா... வீடு எங்க இருக்கு?'' என்று கேட்டார்.
விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டினான் கோபு.
''அவசியம் வரணும் சார்... வெறும், உபசார வார்த்தையா நினைக்கப்படாது,'' என்று கூறி, விடைபெற்றான்.
கார் கிளம்பியதும், சுந்தரத்திடம், ''எப்படி இவன் இவ்வளவு முன்னுக்கு வந்தான்?'' என்று கேட்டார், கல்யாணம்.
தொடரும்.........

'ஜகஜால புரட்டு தான் சார்... முதல்ல சீட்டு கம்பெனி தான் ஆரம்பிச்சான்; அதிலே, ஏகப்பட்ட கோல்மால்... அப்புறமா, தவணையில, 'வெள்ளி பாத்திரமும், பட்டு புடவையும் கொடுக்கறே'ன்னு கிளம்பினான்... கணிசமா பணம் சேர்த்தான்; இன்டஸ்ட்ரீஸ்ல போட்டான். நீங்க, எதெல்லாம் பாவம்ன்னு சொல்வீங்களோ, அதில, ஒண்ணு பாக்கி வைக்கல,'' என்றான்.
''இருந்தாலும், ரொம்ப சாமர்த்தியசாலியா இருக்கானே!''
''இதுவா சார் சாமர்த்தியம்...'' அருவருப்போடு கேட்டான் சுந்தரம். அவன் குரலில், பள்ளிக்கூடத்து பழைய அசட்டுத்தனம் தெரிந்தது, கல்யாணத்திற்கு!
''மாப்பிள்ளை பையன் எப்படியிருக்கான்?'' என்று ஆர்வத்துடன் விசாரித்தார், நாராயணமூர்த்தி.
''நல்லவன் தான்... யோக்கியமானவன்; ஆனா, அசடு. பொழைக்கிற வழியோ, சாமர்த்தியமோ தெரியாதவன்.
அதைவிட, நல்ல வரன் ஒண்ணு வழியிலே மாட்டுச்சு; 'டைமண்ட்' கெமிக்கல் தொழிற்சாலையில பார்ட்னர். பையன் எங்கிட்ட படிச்சவன்; ஆள், வாட்ட சாட்டமா, நல்லா இருப்பான்; அசகாய சூரன். இப்போ, பிரமாதமா ஷைனாகி இருக்கான்,'' என்று விலாவாரியாக விவரித்தார்.
உள்ளுக்குள், தன் சொல்லைக் கேட்டு, கெட்டுப் போன சுந்தரத்தின் மீது, வருத்தம் ஏற்பட்டாலும், 'அதற்கென்ன செய்ய... அவனவனுக்கு, சொந்த புத்தி வேண்டாமோ...' என்று, சமாதானப்படுத்திக் கொண்டார்.
இரு நாட்களுக்கு பின், தன்னைத் தேடி வந்த நாராயண மூர்த்தியிடம், ''என்ன நாராயண மூர்த்தி... அந்த இன்டஸ்ட்ரி பையன போய் பாத்துட்டு வந்துடுவோமா,'' என்று, கேட்டார், கல்யாணம்.
''அதை பத்தி தான் பேச வந்தேன்... நாம, அந்த வாத்தியார் பையனையே பாத்துடுவோம்...''
''என்ன திடீர் மாற்றம்?''
''என் பொண்ணு தான், 'பணம், பதவிங்கிற மயக்கம் இல்லாம, நேர் வழியில போறவன் தான், கடைசி வரை, எந்த ஊழல் மோசடியிலும் சிக்காம, நிலைச்சு நிப்பான்'னு சொல்லிட்டா...'' என்றார், நாராயணமூர்த்தி.
மனித மனங்களில் விசித்திரங்களை உணர்ந்திருந்த வாத்தியாருக்கு, பெரிய அதிர்ச்சி ஏற்படவில்லை.
பெண், புத்திசாலி என்பதை மட்டும் புரிந்து கொண்டார்.
சுதந்திரப்பிரியா

- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|