புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இளைப்பாறல் - பகுதி-3 Poll_c10இளைப்பாறல் - பகுதி-3 Poll_m10இளைப்பாறல் - பகுதி-3 Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
இளைப்பாறல் - பகுதி-3 Poll_c10இளைப்பாறல் - பகுதி-3 Poll_m10இளைப்பாறல் - பகுதி-3 Poll_c10 
75 Posts - 37%
i6appar
இளைப்பாறல் - பகுதி-3 Poll_c10இளைப்பாறல் - பகுதி-3 Poll_m10இளைப்பாறல் - பகுதி-3 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
இளைப்பாறல் - பகுதி-3 Poll_c10இளைப்பாறல் - பகுதி-3 Poll_m10இளைப்பாறல் - பகுதி-3 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
இளைப்பாறல் - பகுதி-3 Poll_c10இளைப்பாறல் - பகுதி-3 Poll_m10இளைப்பாறல் - பகுதி-3 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
இளைப்பாறல் - பகுதி-3 Poll_c10இளைப்பாறல் - பகுதி-3 Poll_m10இளைப்பாறல் - பகுதி-3 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
இளைப்பாறல் - பகுதி-3 Poll_c10இளைப்பாறல் - பகுதி-3 Poll_m10இளைப்பாறல் - பகுதி-3 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இளைப்பாறல் - பகுதி-3 Poll_c10இளைப்பாறல் - பகுதி-3 Poll_m10இளைப்பாறல் - பகுதி-3 Poll_c10 
3 Posts - 1%
prajai
இளைப்பாறல் - பகுதி-3 Poll_c10இளைப்பாறல் - பகுதி-3 Poll_m10இளைப்பாறல் - பகுதி-3 Poll_c10 
1 Post - 0%
ஜாஹீதாபானு
இளைப்பாறல் - பகுதி-3 Poll_c10இளைப்பாறல் - பகுதி-3 Poll_m10இளைப்பாறல் - பகுதி-3 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இளைப்பாறல் - பகுதி-3 Poll_c10இளைப்பாறல் - பகுதி-3 Poll_m10இளைப்பாறல் - பகுதி-3 Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
இளைப்பாறல் - பகுதி-3 Poll_c10இளைப்பாறல் - பகுதி-3 Poll_m10இளைப்பாறல் - பகுதி-3 Poll_c10 
75 Posts - 37%
i6appar
இளைப்பாறல் - பகுதி-3 Poll_c10இளைப்பாறல் - பகுதி-3 Poll_m10இளைப்பாறல் - பகுதி-3 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
இளைப்பாறல் - பகுதி-3 Poll_c10இளைப்பாறல் - பகுதி-3 Poll_m10இளைப்பாறல் - பகுதி-3 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
இளைப்பாறல் - பகுதி-3 Poll_c10இளைப்பாறல் - பகுதி-3 Poll_m10இளைப்பாறல் - பகுதி-3 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
இளைப்பாறல் - பகுதி-3 Poll_c10இளைப்பாறல் - பகுதி-3 Poll_m10இளைப்பாறல் - பகுதி-3 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
இளைப்பாறல் - பகுதி-3 Poll_c10இளைப்பாறல் - பகுதி-3 Poll_m10இளைப்பாறல் - பகுதி-3 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இளைப்பாறல் - பகுதி-3 Poll_c10இளைப்பாறல் - பகுதி-3 Poll_m10இளைப்பாறல் - பகுதி-3 Poll_c10 
3 Posts - 1%
prajai
இளைப்பாறல் - பகுதி-3 Poll_c10இளைப்பாறல் - பகுதி-3 Poll_m10இளைப்பாறல் - பகுதி-3 Poll_c10 
1 Post - 0%
ஜாஹீதாபானு
இளைப்பாறல் - பகுதி-3 Poll_c10இளைப்பாறல் - பகுதி-3 Poll_m10இளைப்பாறல் - பகுதி-3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளைப்பாறல் - பகுதி-3


   
   
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Tue May 16, 2017 10:14 pm

இளைப்பாறல் - பா.வெ.

வயல்வெளி கடந்து ஊருக்குள் செல்கையில்
வரலாறு ஏந்திய கோவில்கள்
வரிசையாக தென்படும்!

ஓட்டுக்கட்டிடத்தில் வீற்றிருக்கும்
ஊர்ப்புற தெய்வங்கள்
ஊர் மக்கள் வேண்டுதல்களை
ஒன்றுவிடாமல் நிறைவேற்றும்!

கண்கண்ட தெய்வத்தின்
கோவில் சுவர்கள்
கரிய தேர்வு எண்களுடன்
காட்சியளிக்கும்!
கணநேரமும் குறையாத
வெள்ளந்தி நம்பிக்கைக்கு
சாட்சியளிக்கும்!

சுவர்களில் பதிந்த
சித்திர உருவங்கள்
விழியால் மெல்ல மிரட்டும்!
தீயவற்றை விரட்டும்!

எண்ணெய் குடித்த அகல் விளக்குகள்
ஏற்றி விடும் வாசனையை
எங்கும் தூற்றும் காற்று!

அருகில் உள்ள அல்லிக்குளத்தில்
அந்தக்கால பித்தளை குடத்தில்
அசராமல் நீர் கொண்டு வந்து
அபிஷேகம் நடைபெறும்!

ஆரம்பம் முதல் அணிவகுப்பாய்
அமர்ந்திருந்த கூட்டம்
அதுவரை பொறுத்திருந்து
அபிஷேகத்தை அலங்கரிக்கும்!

கோவில் மணி ஓசை கேட்டு
குதித்தோடிவரும் குழந்தைகள்
பூசாரி தரும் பொங்கலை
பூவரசு இலையில் வாங்கி
பொறுமையின்றி ஊதி உண்ணும்!

கோடி முறை செய்தாலும்
கோவில் பிரசாத ருசி
குன்றாது!

ஓட்டுக்கட்டிடம் தாங்கிய
ஊராட்சி ஒன்றிய பள்ளி ஒன்று
ஊர்புறத்தில் கல்வியை
ஊட்டி வளர்க்கும்!

ஆரம்ப கல்வியை
ஆரம்பிக்கும் குழந்தைகள்
ஆரஞ்சு மிட்டாய்களை
அனைவருக்கும் வழங்கி
மகிழும்!

கல்லு சிலேட்டும் தகர சிலேட்டும்
நாலு கோடு போட்ட நோட்டும்
ஆரம்ப வகுப்புகளை
ஆரம்பிக்கும்!

முக்காலித் தாங்கியில் கரும்பலகையும்
முழங்கால் மடிக்காத மர நாற்காலியும்
முக்காலமும் வாழும்
வகுப்பறை சின்னங்கள்!

மண்வாசம் நீங்காத மழலைகள் மீது
மரத்தடி நிழல் வகுப்பும்
மண் தரை இருக்கையும்
மாறாத நேசம் நீட்டும்!

தலைக்கு எண்ணெய்
தாராளமாய் தடவி
வாகு எடுத்து வழித்து சீவி
விபூதி பொட்டு நெற்றியில் இட்டு
பவுடர் பூக்க பாதி துடைத்து
பையில் புத்தகம் ஏந்தி
பள்ளி செல்லும் குழந்தைகள்
பார்க்கவே கொள்ளை அழகு!

பொதிசுமையற்ற போதுமான
புத்தகங்கள் திணிப்பின்றி
புகுந்திருக்கும் - ஜோல்னா பைகளில்!

புத்தக சித்திரங்களை உயிர்ப்பித்து
புது வாழ்வு வாழ்ந்த
புதிர் வாழ்க்கை அது!

அந்நாளில் அறவே குறையாத
ஆசிரியர் மீதான மரியாதை
அழகாய் தெரியும் –
அக்குள் தாண்டி கைகட்டும்
அழகிய கைகள் இரண்டில்!

ஆசிரியரோடு பாடம் சொல்ல
அனைத்து குழந்தைகளும்
அழகாய் ராகமிடும்!

வால்தனம் நீட்டிய
வழக்கமான புகார்களை
வகுப்பறைக்குள் சரிசெய்வது
வாத்தியார் கடமை!

ஆசிரியர் இடும் அரைக்குட்டும்
அதையும் மீறிய காது திருகலும்
அவ்வப்போது தோப்புக்கரணமும்
முன்னோர்கள் கண்ட
மூளைத்திறன் வளர் பயிற்சிகள்!

கால் அனாவும் அரை அனாவும்
கனமாய் தெரிந்த
காலம் அது!

கால்சட்டை ஓட்டை தொலைத்த
காசை கண்டெடுப்பது
கணநேர சொர்க்கம் அன்று...!

பத்து பைசா சேமிப்பில்
பத்தாயிரம் கனவுகளை
பதுக்கிய பருவம் அது!

தந்தையிடம் வாங்கிய பின்பு
தாத்தா மடியில் கிட்டும் காசு
தட்டையான தகர பெட்டியில்
தஞ்சம் புகும்!

குச்சி வாங்கி எழுதவும்
குச்சி மிட்டாய் தின்னவும்
தகர பெட்டிக்கு பற்களே
திறவுகோல்!

விரல் நுனிகளில் மறையும்வரை
விரைந்து எழுதிய குச்சிகள்
வீம்பாய் வெளிவராது –
சூட டப்பிகளில்!

பள்ளிகூட வாசலில்
பரப்பிய கோணியில்
கணிவாய் கடை நடத்துவாள் -
காது கனமாய் தொங்கும்
கிழவி ஒருத்தி!

கால் அனா லாபத்தை கூட
கடனாக விற்கும்
கனிந்த மனம் கிழவிக்கு!

மரத்தடியில் பாடம் மெல்ல நகர...
ஆசிரியர் கவனிக்காத போதும்
ஆசிரியரை கவனிக்காத போதும்
அங்குள்ள மண் திரட்டி
அரங்கேறும் கிச்சு கிச்சு தாம்பாலம்!

மண் தரை வகுப்புகள் நெய்த
மண்ணாடைகளை களைய
மதிய இடைவேளை மணியோசை
மறுப்பு சொல்லும்!

தண்டவாள இரும்பு போல்
தடித்திருக்கும் பள்ளி மணி!
மணி அடிக்க ஓடுவதும்
மணி அடித்தால் ஓடுவதும்
மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள்!

இறுதித்தேர்வு எழுதுகோலில்
எஞ்சிய மை தின்று
இரையாகும் சட்டைகளின் மத்தியில்
இன்னொரு முறை அவகாசம் கேட்கும்
இறுதிநாள் மகிழ்ச்சி!

பெற்றோர் கெளரவம் பிள்ளைகள்
பெற்ற மதிப்பெண்ணில் இல்லை;
பிஞ்சு மனதில் பதற்றம் இல்லை;
இயல்பான தேர்ச்சியில்
இடைஞ்சல் ஏதுமில்லை!

தபாலும் தந்தியும்
தடைகள் இன்றி
தழுவிய காலம் அது!

ஊதா நிற காகிதத்தில்
உள்ளத்தை அனுப்பிய
உலகம் அது!

காக்கி நிற உடையில்
கடிதம் சுமந்து வரும்
கண்கண்ட தெய்வம் -
தபால்காரர்!

வீட்டுக்கு அழையா
விருந்தாளியாய்...
வீட்டில் ஒருவராய்...
விரும்பியே கடிதத் தகவல்
விற்பவராய் ...
தபால்காரர்!

படிப்பற்ற பாமரனுக்கும்
பக்குவமாய் படித்துக்காட்டும்
பண்பும் பணிவும்
பாசத்தை பரிசாக்கும்!

கோடையிலும் குளிரிலும்
கொட்டும் மழையிலும்
கொணர்ந்த செய்தி
கொடுக்காமல் சென்றதில்லை
காக்கியாரின் கடமை !

மிதிவண்டி பயணம்
மிக தூரமெனினும்
கடிதம் காட்டும் முகவரியில்
மிதிவண்டி நிற்பது
கடமையின் உச்சம்!
கடிதமில்லை மிச்சம்!

பொங்கல் வாழ்த்தினை
பிரபலங்கள் பிம்பம் ஏந்திய
அட்டைகள் கூறும்!

பிறப்பின் எதிர்சொல்லை
பெரும்பாலும் உச்சரிப்பது
தந்திகள்!

வீட்டு மூலையில்
வளைந்த கம்பியில்
வரிசையாய் கோர்த்த
கடிதக் கற்றை
(“)அன்புள்ள(”) வார்த்தைகளை
சுமந்து நிற்கும்!

முகவரி கோடுகள் வரை
முந்தி நிற்கும் கடித வரிகள்
முழுமை பெற இடம் தேடி
மூச்சு திணறி ஒளியும்!

“நலம்.நலமறிய ஆவல்.” இல்
நனையும் மனது
“மற்றவை நேரில்...” கண்டு
மகிழ்ச்சியுறும்!

தபால்காரர் கண்ணில் பட தவறிய
தனிக்குடும்பம் ஏதும்
புதிதாய் ஊருக்குள்
புகுவதில்லை!

வாழையடி வாழையாய்
வாழ்ந்த வீடுகள்
வரிசையாய் நின்று தெரு போக
வழிவிடும்!

அனேக வீடுகள்
அரைவட்ட வாசலுடன்
வெயில் தாங்கும் ஓடுகளையும்
குளிர் வாங்கும் கூரைகளையும்
அணிந்து நிற்கும்!

சாணக் குளியல் போடும்
சகதியற்ற வாசல்களில்
காற்றில் திரியும்
கணக்கற்ற கிருமிகள் கூட
காணாமல் போகும்!

மக்களின் விருந்தோம்பலை
மாக்கோலம் தின்னும்
எறும்புகளும் எண்ணும்!

வாசலில் தொடங்கும்
விருந்தோம்பல்
கொல்லைப்புற காக்கை வரை
கொண்டுபோய் விடும்!

வாசலில் விசாலமாய் பூத்த
தெளிந்த புள்ளிகள் தழுவி
தெரிந்தே விழுந்த சிக்கல் -
அழகிய சிக்கு கோலங்கள்!

சிக்கல் விழுந்த கோலங்களில்
சிக்கித் தவிக்கும் வாசல்கள்
சிறிதும் வெளிவர துடிப்பதில்லை -
சிதையாத கோல அழகில்!

வாசலில் இறைத்த கோல அழகு
வரிசையாய் உயரும்
படிகளின் மீதும்
படிந்திருக்கும்!

வாசலில் பதித்த
வரைகலையை மதித்த விழிகள்
வழி தவறி மிதித்த
வரலாறு சிக்கியதில்லை
கோலங்களில்!

தெளிவாய் இழைத்த
தேக்கு மர தூண்கள்
திண்ணை தோறும்
திரண்டு நிற்கும்!

அக்கம் பக்கத்தினர்
அமர்ந்து பேச
அந்தி வேளைகளில்
அரட்டை நீள
அமர்களமாகும் அனேக
திண்ணைகள்!

கூரை முனையில் முளைத்த
கூடை சுமந்த குண்டு பல்பின்
கூசாத ஒளிக்கீற்று
இரவு பொழியும் இருள் மீது
இதமான மஞ்சள் பூசும்!
இரவெல்லாம் பகல் பேசும்!

விழாக்கால வழிபோக்கரும்
வேண்டுதல் நிறைவேற்ற
வெகுதூரம் நடக்கும் பக்தரும்
வேண்டிய நேரம் இளைப்பாற
வெகுநேரம் இடம் தரும்
திண்ணைகள்!

திண்ணை நிலை அருகில்
தெளிவாய் குடைந்த மாடங்கள்
அந்தி நேர தீபங்களை
அணையாமல் ஏந்தி நிற்கும்!

மின்கம்பம் நடாத
மின்சாரம் தொடாத
இரவு பயணங்களில்
மாட விளக்குகளின்
மங்கிய ஒளிகளில்
மீண்டன வழிகள்!

கனமாய் இழைத்த
கதவுகளின் காதுகளில்
கடின வளையங்கள்
கவனமாய் தாழிடும்!

வீட்டின் நடுவே
விளைந்த முற்றத்தில்
காற்றும் ஒளியும்
கடை போட மறுப்பதில்லை!

வெயிலும் மழையும்
வீட்டை தழுவ
முற்றத்தில் முயன்று
தோற்கும்!

இரவு வானம்
இறைத்த விண்மீன்களை
முற்றம் மெல்ல
அள்ள பார்க்கும்!

வடகம் தின்ற வெயிலை
விரட்ட தெரியாத
வெள்ளந்தி முற்றம்
வீட்டுக்குள் விட்டு விடும்!

அடுக்களை மேடையின் கீழ்
அடுக்கிய விறகு இடுக்கில்
அனுபவித்து உறங்கும்
அழகான பூனைக்குட்டி ஒன்று!

வெள்ளிதோறும் வீடு அலசி
விறகு நிறைத்த சாம்பல் நீக்கி
சாண மொழுகலும் கோலமும்
சூடிய அடுப்புக்கொண்டையில்
சுவையாக தொடங்கும்
பசியின் பொறுமை!

கோடை வீசும்
கொடூர க(கா)னல் மீது
குளிராடை போர்த்தும்
கொல்லைப்புற கிணற்று நீர்!

மா, பலா,வாழை,தென்னை,
கொய்யா,எலுமிச்சை என
கொல்லை கொஞ்சம்
கொழுத்திருக்கும்!

அடுத்த வீட்டு கீரை விதைப்பினை
அடுத்தடுத்து சரி பார்க்கும் கோழி
அடிவாங்காத குறையாய்
ஓடி வரும்!

நலமாய் பசு ஈன்ற
நாட்டு கன்றுக்குட்டி
துள்ளித் திரியும் அழகை
துரத்தித் திரியும்
தும்புக் கயிறு!

வீட்டுத்தேவை குடிக்காத பாலை
வீடு தேடி விரும்பிக் குடிக்கவே
பால்காரர் வண்டி கலன்
பெரும்பாலும் வாய் திறக்கும்!

காளையோடு இணை சேர
களைத்த வயலில் எரு சேர
கணக்கெடுத்து விடப்பட்ட
கிடைய மாட்டு மந்தையில்
நம் வீட்டு பசுவை தேடும் கண்களில்
நாளும் மகிழ்ச்சிதான்!

ஊர் சென்று வீடு திரும்பும்
உடையவரை கண்டு
உள்ளன்பில் வாலாட்டி அழும்
நாட்டு நாய்கள்...
பழைய சோற்றில் கூட
பசியாறும்!

“சிசேரியன்” என்ற வார்த்தை
சிறிதும் மனதை கீறாத
நாட்கள் அவை!

வீட்டு வேலைகளே
வீட்டில் தந்த
சுலபமான சுகப்பிரசவம் -
சுப ஜனனம்!

அழுதாலும் சிரித்தாலும்
அனைவரும் கூடும் அழகு
குழந்தையுடன் கூட வந்த
முதல் சொத்து!

காது குத்த மடி கொடுக்கவும்
காலத்தில் பருவமடைந்தால்
பச்சைக்கீற்று பின்னவும்
முதலும் கடைசியுமாய் –
தாய்மாமன்!

“தாய்”மாமன் - சிலநேரம்
முதலிரு எழுத்துகள் சேர்ந்து
குழந்தையை வளர்ப்பதும் உண்டு!

உறவுகள் கூடி வாழ்ந்த
உறைவிடத்தில்
இல்லுறை இறை கூட
மகிழ்வாய் உறையும்!

அப்பா, அம்மா,
தாத்தா , பாட்டி,
பெரியப்பா,பெரியம்மா,
சித்தப்பா,சித்தி,
அத்தை, மாமா,
அண்ணன்,தம்பி,
அக்காள்,தங்கை –
முழு நிறைவில் வீடு...
முழுமை பெறாத
குழந்தை அழுகை...!

பசி மறந்து சோறூட்டும் அன்னை,
பகல் இரவாய் பாடுபடும் தந்தை,
கடை செல்ல தோளில் சுமக்கும் தாத்தா,
காதோரம் கதை சொல்லும் பாட்டி,
கருவிலேயே மணமுடிக்கும் அத்தை-மாமா,
விளையாட்டில் சேர்த்துக்கொள்ள
வெளியில் சண்டையிடும் அண்ணன்,
வீம்பாய் பொம்மை பிடுங்கும் தம்பி,
அடிக்கடி பரிந்து பேசும் அக்காள்,
அன்போடு தின்பண்டம் பகிரும் தங்கை –
இவர்கள் மத்தியில் என்றும்
இன்னொரு முறை குழந்தையாய்...!

பள்ளி செல்கையில்
பத்திரமாய் சென்று வர
திருநீறு பூசிவிடும்
திகட்டாத அன்பில்
நெற்றியோடு நெஞ்சமும்
நிறையும்!

விடுமுறை நாட்களை
வெயிலோடு கழிக்க
விளையாட்டுகள் சேர்ந்து
வீடு தேடி வரும்!

கபடி, கண்ணாமூச்சி, கிட்டிப்புள்,
பம்பரம்,பகடை, பல்லாங்குழி,
பச்சைக்குதிரை, பாண்டி,பரமபதம்,
நண்டூருது நரியூருது, நாடுபிடித்தல்,
கொலகொலயா முந்திரிக்கா, கோலி,
சில்லுக்கோடு,சூட்டுக்காய்,பேபே,
டயர்வண்டி, நுங்குவண்டி... -
களைப்பறியா தேகத்தில்
கடல் சொட்டும்!
வெயில்கால மண்வாசம்
விளையாடித் தீர்த்த
உடலெங்கும் வீசும்!

நிறம் ஏறி போன ஆடையெல்லாம்
நிறம் மாறி நித்தம்
வீடு வரும்!

உணவைத் தின்ற
உன்னத விளையாட்டுகள்
உடல் வலுக்க
உதவிக்கரம் நீட்டும்!

மழைக்கால கப்பலில் பயணிக்க...
மழைத்துளியில் மொட்டுவிடும்
அரைவட்ட குமிழிகளோடு
அணிவகுப்பாய் செல்ல...

பனி துளிர்த்த மலரில் தேன் உரியும்
பட்டாம்பூச்சியிடம் கடன் கேட்க...
பஞ்சு மர காய்கள் பிளந்து
பிஞ்சிலேயே சாப்பிட...

முதிய வேடமிட்டு
முண்டாசு கட்ட...
மூஞ்செலியின் முணுமுணுப்பை
முடுக்குகளில் தினம் கேட்க...
முந்திரிப் பழ மூக்கையும் சாப்பிட...

தென்னை ஓலையில்
திரியில்லா ராக்கெட் விட...
தெப்பத் திருவிழாவிற்கு
தினமும் சென்று வர...
தெருவிளக்கு வெளிச்சத்தில்
தினம் தினம் விளையாட...

சாய்வு நாற்காலியில்
சரிந்து அமர...
சுவர் மீது சிறுநேர ஓவியமிட...
சுவர் கடிகார பெட்டியில்
சுற்றும் முள்ளோடு நகர...

கல்லெறிந்து கிடைத்த மாங்காயில்
காக்கா கடியை ஆடை ருசிக்க...
காக்கா முட்டையை
குயிலிடமிருந்து காப்பாற்ற...

மணல் தின்ற சங்கினுள் சென்று
மணல் முழுதும் மீட்டு வர...
மாங்காய் தோப்பில்
மதிய வேளைகளில்
மரக்கட்டில் படுக்கையில்
தாத்தாவுடன் தினமும் தூங்க...

கன்றுக்குட்டியின் கன்னத்தோடு
கன்னம் வைத்து விளையாட...
காக்கை கவ்வும் அழகு ரசிக்க
காலையில் தின்ற உணவு வீச...

கோழிக்குஞ்சுகளை பஞ்சாரத்துளை வழி
கொஞ்சலாய் ரசித்திட...
கோலி சோடா
கழுத்தில் சிக்கிய குண்டை
காப்பாற்றி விளையாட....

குளத்தில் கல் வீச...
குருவிக்கூச்சலில் குரல் சேர்க்க...
கொக்கோடு சேர்ந்து நிற்க...
கொசுவிற்கு மூட்டம் போட...

தட்டான் தூக்கும்
மண் துணுக்கில் வீடு கட்ட...
தவளையோடு தாவிக்குதிக்க..
தண்ணீரில் ஊறித் திளைக்க...
தண்ணீர் சுண்டிய குளத்தில்
தரை நீந்தும் பருந்தின் மீது ஏற...

தொட்டாச்சிணுங்கி வெட்கத்தை
தொட்டுப்பார்த்து அறிய...
தொடுவான எல்லையை
துரத்திப் பிடிக்க...
தொட்டி நீரில் சாதகம் செய்திட...

திருவிழா இராட்டினத்தில்
தினம் தினம் அமர...
திருவிழா கால மோர் குடிக்க...
தீபாவளி வெடிகள்
தீராமல் தினம் இருக்க...

தலையாட்டும் ஓணானின்
தலைக்கனம் குறைக்க...
தலையில் தேய்த்த காகிதத்தில்
தவறின்றி நகல் உருவம் பதிக்க...
தென்னை மீது தழுவி ஏற...

மிதிவண்டி விளக்கொளியில்
பூட்டிய வீட்டை இரவில் திறக்க...
மின்மினி வெளிச்சத்தில்
மிரட்டும் இருளில் நடை போட...
மீன் குழம்பை மறுநாள் சாப்பிட...

வாயால் ஊதிய
வண்ண முட்டைகளை
உடையாமல் கையில் ஏந்திட...
ஊஞ்சல் கம்பிகளுக்கிடையில்
உட்காராமல் ஓயாது ஆடிட...
ஊரோடு சேர்ந்து தேர் இழுக்க...
உப்பு மூட்டையில் ஊர் சுற்ற...

பொறுமையாய் வாரிய தலையில்
பேன் தேடி நசுக்க...
பொன்வண்டின் நிறம் கேட்க...
பெட்ருமாஸ் வெளிச்சத்தில் படிக்க...

பின்னக்கொட்டை உடைத்து
மை எடுத்து பூசிட...
பாசி படர்ந்த படிகளில்
பார்த்து பார்த்து
பாதம் வைக்க...

அம்மா முந்தானையில்
அடிக்கடி ஒளிய...
அப்பாவிடம் கேட்காமல்
அவர் சட்டையில் காசு தேட....
அணில் கடித்த கொய்யாவை
அப்படியே சாப்பிட...

கிணற்றை எட்டிப்பார்க்க...
கிள்ளு வடகம் காய்வதற்குள்
கிள்ளி கிள்ளி தின்ன...
கிளிமூக்கு மாங்காய் பறிக்க...

நீருருண்டை நித்தம் தின்ன...
நீருக்கடியில் சத்தமிட...
நீல வானில் சட்டை நனைக்க...
நிலாவில் பாட்டியிடம் வடை கேட்க...

ஐஸ்காரர் வண்டியில் ஏறி
தலையை விட்டு தேடி எடுத்த ஐஸ்
கரைவதற்குள் கடிக்காமல் ருசிக்க...
ஐயனார் மீசை கண்டு அச்சம் கொள்ளாதிருக்க...
அயிர மீனை ஆற்றில் தேட...

ஒலிச்சித்திரம் ஓயாமல் கேட்க...
ஒலி நுழையாத வெற்றிடத்தில்
ஒரு நாள் வாழ்ந்து பார்க்க...

விறகு அடுப்பில் மட்பாண்டம்
விதவிதமாய் சமைப்பதை ருசிக்க...
விடைத்தாளில் “வெரி குட்” வாங்க...என
ஆசைக்கு அளவில்லை
அந்நாளில்!

பதினைந்துகளில் பெருத்த மீசையில்
பருவமும் உருவமும்
பருத்திருக்கும்!

பருவம் சுரந்த காதலை
பருகத் துடிக்கும் இதயங்களை
பயம் மெல்ல பிடித்து இழுக்கும்!

மனதில் பூத்த காதலை
மறுகணம் பறிக்க வழியின்றி
மனதை பிசையும் தயக்கம்!

தயக்கம் மீறிய மயக்கத்தில்
துளிர்விட்ட காதலை
தூதுவிட துணிவு
துளிர்ப்பதில்லை!

காதலை சொல்ல
கண்கள் நிமிர
கணநேரமும் கனியாத
காலம் அது!

கண்களில் வழிந்த காதலை
காலத்திற்கும் பதுக்க வழியில்லை;
பதுக்கினாலும் பார்க்க
ஆளில்லை!

கன்னியரிடம் காதல் சொல்லும்
கண்ணியக் கடிதங்களை
கண்கள் வாசிக்கும் முன்பே
காணாமல் போகும் காளையரின்
வெள்ளந்தி மனம் கன்னியரை
வெகுவாக கவரும்!

திருவிழாவைத் தேடுவோர் மத்தியில்
திருவிழாவில் தேடும் கண்கள் நான்கில்
திகட்டாத இன்பம் திளைக்கும்!

கடைவிழிப் பார்வையில்
கனிந்த காதல் கரைசேர்வது
காலத்தின் கையில்!

மனதில் புதையாத காதல்
மண்ணில் புதைந்தும்
மனங்களைச் சேர்க்கும்!

வேளாண் பிரதானம்
வீடுதோறும் வருமானத்தை
விளைத்தது!

இயற்கையோடு இணைந்து பணியாற்ற
இல்லம்தோரும் பணித்தது
இயற்கை விவசாயம்!

சொந்த வீடு, மனை,
சொகுசு வாழ்க்கை என
கட்டாய திணிப்புகளை
காலம் திணிக்கவில்லை!
கண்ணில் போராட்டமும் இல்லை!

இயல்பான இதய துடிப்பில்
நிம்மதி ராகம் நிரம்பிட
நித்தம் நிறைவில் தொடங்கியது
நித்திரை!

வீட்டிலும் வயலிலும்
விளையாத பொருட்களே
விலைகளில் விளைந்தன –
வீதிமுனைக் கடைகளில்!

சொந்த விளைபொருட்கள்
சொற்ப லாபத்தில்
அந்நிய விலைபொருட்கள்
ஆவதும் உண்டு!

கால் கட்டு போட
கால நேரம் கனிந்து வர
காத்திருந்த பொறுமையில்
கனவுகள் கூச்சலிடும்!

பத்து பொருத்தம் பார்த்து
பத்து இடத்தில் கேட்டு
பெண் பார்த்து பிடித்தபின்
பதில் கடிதம் போட்டு
பரபரப்பின்றி பதிவாகும்
பரஸ்பரம் மனதில்!

தாம்பூலம் மாற்ற
தேதி குறிக்க
தரகர் தலையிட
தடல்புடலாய் துவங்கும்
திருமண நிச்சயம்!

பெயர் விடுபடாமல்
பத்திரிக்கை அச்சடித்து
பெயர் எழுதி மதிப்பு கோர்த்து
பலருக்கும் நேரில் வைக்க
பாதி நாள் உருண்டோடும் ...!

“அப்பா கொடுத்து வர சொன்னார்கள்” சாக்கில்
அடிக்கடி பெண் வீடு செல்லும் மணமகனின்
அவசரம் அப்பட்டமாய் தெரியும் –
அடுக்களை நோக்கிய அவரது கண்களில்!

திரண்டு வந்த உறவினர் உதவியில்
திருமண ஏற்பாடுகள் தினம் தினம்
திருவிழாக்கோலம் பூணும்!
ஆனந்த கண்ணீர் மத்தியில்
அந்த நாளும் அரங்கேறும்!

புகுந்த வீட்டில் மணப்பெண்
புதியவர்களை அனுசரிப்பது
புண்ணியம் தந்த வரம்!

குலம் தழைக்க
குழந்தை பிறக்க...
குடும்பமே கூத்தாடும்
குதூகலத்தில்!

பேரக்குழந்தையை
பார்த்த நிறைவில்
பெரியவர்களின் ஆயுள்
பெருமூச்சு விடும்!

நிறைவாய் வாழ்ந்த
நிம்மதி நிழலில்
இளைப்பாறும்
இலையுதிர் மனது!

கடமை முடிந்த கர்வத்தில்
காலனை அழைத்து
காத்திருக்கும் கண்கள்!

கடமை தவறாத காலனும்
காலத்தோடு கணக்கு முடிக்க
கணக்காய் இதோ வந்துவிட்டான்!

முதிர்ச்சியின் விசாலத்தில் மனம்
மழலையின் விலாசத்தை தேடுகிறது...!
உறவினர் அருகாமை,
உள்ளப் பதற்றம்,
உளறல் மொழிகள்,
உவகை இல்லாத ஓரக்கண்ணீர்,
உடனே பிரியாத உயிர் –
ஒரு நாள் அவகாசம் கேட்கிறது
ஓய்ந்து போன மனம்...!

“ஆயுள் முழுக்க
அவகாசம் தருகிறேன்” என்கிறது
அடுத்த பிறவி!

காலனின் உண்ணாவிரத போராட்டம்
கணநேரத்தில் உயிர் குடித்து
கடமையை முடித்தது –
கண்ணீரின் மத்தியில்!

நாள் முழுதும் ஒலிக்கும் ஒப்பாரியும்,
நடுவில் முளைக்கும்
“நல்ல மனுஷன்” புகழாரமும்,
நாலு மைல் தொலைவானாலும்
நாலு பேர் சுமக்க போட்டியிடுவதும்...
நல்ல உள்ளம் நம்மை விட்டு பிரிந்ததை
நாளும் உணர்த்தும்!!!




எண்ணம் போல் வாழ்வு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 22, 2017 12:26 am

அந்த காலத்தின் analog நடப்புகளை,
இந்த காலத்தில் digital முறையில்
காணுகின்ற உணர்வு பா வெ.
நன்றி. ரசித்தேன்.
ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Mon May 22, 2017 9:19 am

மிக்க நன்றி ஐயா!
இயற்கை வளர்த்த காற்று
இனிக்கும் நல்ல குடிநீர்
செயற்கை சேராத உணவு
செலவில்லாத ஆரோக்கியம்
விடியல் மறந்த உறக்கம்
விளைந்து நின்ற பூமி
வற்றாத நீர்நிலைகள்
வரவில் வாரா உறவுகள்
அன்பு விளைந்த கூட்டுக்குடும்பம்
அண்டை அயலார் நேசம்
விரைவில் மாறாத
வெள்ளந்தி மனம் ... –
எல்லாம் மறைந்தன அவரோடு...
இங்கே வாழ வழியின்றி...




எண்ணம் போல் வாழ்வு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக