ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» மும்பை அடுக்குமாடி குடியிருப்பு மக்களுக்குபோலி கொரோனா தடுப்பூசிபோட்ட புகாரில் 4 பேர் கைது
by T.N.Balasubramanian Today at 6:28 pm

» முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் காலமானார்: பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
by T.N.Balasubramanian Today at 6:24 pm

» 3வது அலை தவிர்க்க முடியாதது: எய்ம்ஸ் இயக்குநர்
by T.N.Balasubramanian Today at 6:23 pm

» சாதனையாளர்கள் வாழ்வில்...
by T.N.Balasubramanian Today at 5:54 pm

» கால்நடை வளர்ப்பில் டெக்சாஸ் மாநிலம் (அமெரிக்கா)
by ayyasamy ram Today at 5:49 pm

» கமல்ஹாசன் பகிர்ந்த 10 வேட அனுபவம்
by T.N.Balasubramanian Today at 5:49 pm

» அமெரிக்காவில் கல்விப் புரட்சி (1954)
by ayyasamy ram Today at 5:48 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 5:20 pm

» மீன்களில் எது ருசியானது… தெரிஞ்சுக்கலாம்,வாங்க..
by மாணிக்கம் நடேசன் Today at 3:27 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம் (541)
by Dr.S.Soundarapandian Today at 11:42 am

» கொரோனாவை ஒழிக்க சிலைக்கு மாஸ்க்! – விநோதம் செய்யும் ஜப்பானியர்கள்!
by ayyasamy ram Today at 7:18 am

» திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு நாளை முதல் 10 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மீண்டும் இயக்கம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:32 am

» கல்வி தொலைக்காட்சி மூலம் இன்று முதல் நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள் - மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்
by ayyasamy ram Today at 6:27 am

» மீம்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» கடமையில் உறுதியாக இருங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» இணையே என் உயிர் துணையே...!
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» குலம் தழைக்க பெரியவா சொன்ன பரிகாரம்
by T.N.Balasubramanian Yesterday at 8:55 pm

» புதிய நாவல்கள் தேவை
by rukman1304 Yesterday at 8:52 pm

» டிரைவிங் ஸ்கூல்ல ஆன்லைன் கிளாஸ்…!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» சில்வண்டு சாக்லேட்
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஒரு குட்டிக் கதை!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» களை- மலையாளப் படம்
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» லூட்கேஸ் – இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» இயற்கையை காதலிக்கும் தனிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» பியூட்டி ஏஞ்சல் எமி ஜாக்சன்!
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» இசைப்புயலின் ஹைடெக் மாஸ்க்!
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» சீனாவிடம் வாங்கிய கடன்களை சுமக்கும் பாகிஸ்தான் கழுதைகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:42 pm

» கருவி இல்லா சமையல் வேண்டுவோர் பெண் இனத்திற்கு எதிரானவர்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:38 pm

» தலைமறைவாக இருந்த பப்ஜி மதன் கைது
by T.N.Balasubramanian Yesterday at 4:12 pm

» கேரளா புட்டும் கடலைக் கறியும்:
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» ராமர்,சீதை,ராவண தேசங்களும் பெட்ரோல் விலையும்!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» ஜீ தமிழ் சீரியல் வில்லி நடிகை மகன் திடீர் மரணம்: சோகத்தில் குடும்பம்
by ayyasamy ram Yesterday at 3:40 pm

» பணத்தால் மனத்தூய்மை குறைகிறது
by ayyasamy ram Yesterday at 3:36 pm

» கோபத்தை அறிவால் அடக்குங்கள்!
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» போரில் இறந்த மகனுக்கு தாயார் நாட்டிய நடுகல்
by ayyasamy ram Yesterday at 3:34 pm

» `துர்காதேவி சரணம்’ - பாக்கியம் அருளும் பட்டீஸ்வரம் துர்கை மகிமைகள்!
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இருக்கும் நிலைக்கு நீயே பொறுப்பு - விவேகானந்தர்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» ப்ரொட்டோகால் என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:17 pm

» இளமையை காக்கும் வால்நட்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:13 pm

» முல்லாவிடம்,தளபதியின் சமரசம்…!!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:12 pm

» எவ்வளவு ஆழம் வெட்டணும்..!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:09 pm

» எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே..
by aanmeegam Yesterday at 11:43 am

» உனக்கு என வரம் வேண்டும்...!
by aanmeegam Yesterday at 11:38 am

» இதற்கு இது பதில் இல்லையே!
by aanmeegam Yesterday at 11:36 am

» முனைவர் செளந்தரபாண்டியன் அய்யா அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by aanmeegam Yesterday at 11:35 am

» நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பெற…
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 am

» கோவிட் 3வது அலையை சமாளிக்க தயாராகும் டில்லி: 5,000 இளைஞர்களுக்கு செவிலியர் பயிற்சி
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 am

» இந்திய பெண் அமெரிக்காவில் நீதிபதி ஆகிறார் - ஜோ பைடன் பரிந்துரை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 am

» ’பஞ்ச்’சோதி பராக்!
by T.N.Balasubramanian Thu Jun 17, 2021 9:21 pm

» எப்பவுமே கணவன்மார்களுக்கு அவசரம் தான்…!
by aanmeegam Thu Jun 17, 2021 5:05 pm

Admins Online

ஆரோக்கிய ரகசியம் - டாக்டர் வெங்கடேஸ்வரன்

Go down

ஆரோக்கிய ரகசியம் - டாக்டர் வெங்கடேஸ்வரன் Empty ஆரோக்கிய ரகசியம் - டாக்டர் வெங்கடேஸ்வரன்

Post by ayyasamy ram Thu May 11, 2017 1:39 pm

-ஆரோக்கிய ரகசியம் - டாக்டர் வெங்கடேஸ்வரன் 5l4ZK8eORoqDqBK4zSez+ht4451400


‘தேடுவதிலும் புரிந்துகொள்வதில் உள்ள மகிழ்ச்சியே
இயற்கையின் சிறந்த பரிசு’
- ஆல்பர்ட் ஐன்ஸ்டின்.

நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என பஞ்சபூதங்களை
கொண்டு உருவானது இயற்கை. இந்த பஞ்சபூதங்கள்
இல்லாமல் நாம் உயிர் வாழ்வது சாத்தியமில்லை.

இந்த பஞ்சபூதங்கள் தனிமனித ஆரோக்கியத்திலும் அதீத
செல்வாக்கு செலுத்துகிறது.

பஞ்சபூதங்களும் நம் உடலும்எலும்பு, தசை, நகம், முடி
போன்றவை நிலமாகவும், ரத்தம், நிணநீர், சிறுநீர், வேர்வை
போன்றவை நீராகவும், பார்வைத்திறன், செரிமானத்துக்கு
உதவும் அமிலங்கள் போன்றவை நெருப்பாகவும், சுவாசம்
காற்றாகவும், மடலிடைக் குழிவாக ஆகாயமும் நம்
உடலில் அமைந்திருக்கிறது.

இயற்கையின் அமைதி குலைவே இயற்கையின் சீற்றத்துக்குக்
காரணம். இதேபோல் நாம் இயற்கை விதிகளை மீறும்போது
நமக்கு நோய் உண்டாகிறது.இயற்கை தன்னைத்தானே
மீட்டெடுக்கும் தன்மை கொண்டது. அதேபோல் நம் உடம்பும்
இயற்கையாக குணமடையும் தன்மை உள்ளதால் நாம் இயற்கை
உணவு, உண்ணா நோன்பு போன்ற முறைகளை கைகொண்டு
இயற்கை விதிகளை பின்பற்றி வந்தால் நம் உடலும், மனமும்
ஆரோக்கியம் பெறும்.
-
-----------------------------------------


Last edited by ayyasamy ram on Thu May 11, 2017 1:47 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 68803
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13114

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆரோக்கிய ரகசியம் - டாக்டர் வெங்கடேஸ்வரன் Empty Re: ஆரோக்கிய ரகசியம் - டாக்டர் வெங்கடேஸ்வரன்

Post by ayyasamy ram Thu May 11, 2017 1:40 pm

ஆரோக்கிய ரகசியம் - டாக்டர் வெங்கடேஸ்வரன் PxdggkzLTYyCRdbGCLXA+53cedecb4ae02730a48a9587809979fa

-
சில ஆய்வுகள்
-
இயற்கை மனதை அமைதிப்படுத்துவதற்கு மட்டுமில்லாமல்
பலவகை நோய்களையும் குணப்படுத்தவல்லது. இதற்கு ஒரு
நல்ல உதாரணம் சமீபத்தில் வெளிவந்த பென்சில்வேனியா
பல்கலைக்கழக ஆய்வு.

மரங்களிடையே வாழும் மக்களுக்கு சாதாரண அறையில்
வாழும் மக்களை விட நோய் பாதிக்கும் தன்மை குறைவாக
உள்ளதாகவும், அவர்களுக்கு குறைவான வலி நிவாரண
மாத்திரைகள் செலவிடுவதாகவும், மருத்துவமனைகளில்
சென்று அடையும் தன்மை குறைவதாகவும் கண்டு
பிடித்துள்ளனர்.

இதேபோல் ஸ்வீடன் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் இயற்கை
சுற்றுச்சூழலில் ஓட்டம் மற்றும் உடற்பயிற்சி செய்பவர்களே,
அடுக்குமாடி கட்டிடங்களில் உடற்பயிற்சி செய்பவரைக்
காட்டிலும், அதிக மகிழ்ச்சியாகவும், குறைந்தளவு
கோபப்படுபவராகவும், மன அழுத்தம் குறைவாக உள்ளவராகவும்
இருப்பதாகக் கண்டுபிடித்துள்ளனர்.

இயற்கையான சூழலில் இருத்தல்அழகிய, பச்சை பசுமையுடன்
காணப்படும் சுற்றுச்சுழலில் நாம் நடைப்பயிற்சியை மேற்
கொள்ளும்பொழுது நமக்கு புத்துணர்ச்சி தரும் தூய்மையான
ஆக்ஸிஜன் சுவாசிக்க கிடைக்கிறது.

இதனால் நம் ரத்த ஓட்டமும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகும்.
ஆனால், நாம் இவ்வாறு செய்யாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்
கிடக்கிறோம்.
-
----------------------------------


Last edited by ayyasamy ram on Thu May 11, 2017 1:49 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 68803
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13114

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆரோக்கிய ரகசியம் - டாக்டர் வெங்கடேஸ்வரன் Empty Re: ஆரோக்கிய ரகசியம் - டாக்டர் வெங்கடேஸ்வரன்

Post by ayyasamy ram Thu May 11, 2017 1:43 pm

ஆரோக்கிய ரகசியம் - டாக்டர் வெங்கடேஸ்வரன் TlmkXkJTS2vOvUuxFAjU+images(2)

-
அவ்வப்போது இவ்வாறு இயற்கை சூழலில் நண்பர்களுடனும்,
உறவினர்களுடனும் பேசிக்கொண்டே செல்லும் நடைபயிற்சி
மிகவும் ஆரோக்கியம் அளிக்கக்கூடிய ஒன்று. உடல்
ஆரோக்கியம் மட்டுமல்லாமல் அவர்களிடையே புது பிணைப்பும்
அளவற்ற மகிழ்ச்சியும் ஏற்படும்.தொல்லை தரும் தொழில்நுட்பக்
கருவிகள் இன்றைய காலகட்டத்தில் கணினி, இணையதளம்,
கைபேசிகள், தொலைக்காட்சி இவையின்றி நம்மால் வாழ
முடியவில்லை.நம் மூளையும் இவையின்றி இயங்கத்
தயங்குகிறது.

இது ஒருவகையான நோய் போலத்தான்! இளைஞர்களிடையே
அதிகம் பாதித்துக் கொண்டிருந்த இத்தகைய தொழில்நுட்பம்,
இப்போது குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும்
பாதிக்கும் ஒன்றாக மாறிவருகிறது.

தொழில்நுட்பம் மற்றும் திரைகள் சூழ்ந்த உலகில் நாம் இன்று
வாழ்ந்து வருவதால் நம்முடைய அன்றாட பழக்க வழக்கங்கள்
நிறைவற்றதாக மாறுகிறது. மேலும், இயற்கை விதிகளை
மீறுவதால் நம் உடலில் தேவையற்ற கழிவுகள் சேர்ந்து நோய்கள்
உண்டாக முக்கிய காரணமாக அமைகிறது.

நாம் இயற்கையோடு இணைந்து வாழும்போது நம் மனித உடலில்
நோய்கள் அண்டாமல் காத்துக் கொள்ளலாம்.

மற்றவர்கள் உலகின் எந்தப் பக்கம் இருந்தாலும் நம் அருகில்
இருப்பதைப் போன்ற உணர்வைத் தரும் பல வசதிகளை கொண்ட
(மெசேஜ், இ-மெயில், அழைப்பு, வீடியோ அழைப்பு)கைபேசியினால்,
நம் அருகில் இருப்பவர்களிடம் இருந்து விலகி இருக்கிறோம்.

இந்தத் தொழில்நுட்பத்தின் சொகுசு வாழ்க்கையினால் நாம்
சோம்பேறித்தனம் மற்றும் தனிமையை நோக்கி செல்கிறோம்.

இன்றைய வாழ்க்கைக்கு இந்தத் தொழில்நுட்ப கருவிகள்
அவசியமானது என்றாலும், இந்தத் தொழில்நுட்ப கருவிகள்
காரணமாக ஏற்படும் பாதிப்பு களைக் குறைக்க நாம் முயற்சி
எடுக்க வேண்டும்.

இதற்கு நல்ல தீர்வு நாம் எவ்வாறு எத்தனை முறை, எப்படி
இயற்கையோடு இணைந்து வாழ்கிறோம் என்பதே ஆகும்.இத்தகைய
சாதனங்களிடம் நாம் செலவிடும் நேரத்தைக் குறைத்துக் கொண்டு,
இயற்கையோடு அதிக நேரம் செலுத்தி நாம் நோய்களின்றி
வாழலாம்.

மக்களிடையே இந்த விழிப்புணர்வு அதிகரித்து வருவது
மகிழ்ச்சிக்குரியது.  மக்களிடம் தெரியும் மாற்றம்பழங்காலத்தில்
மக்கள் பச்சை காய்கறிகளையும், பழங்களையுமே உட்கொண்டிருந்தனர்.
நாளடைவில் அது மாறி நாம் நம் நாகரிக வளர்ச்சியாக எண்ணி,
அயல்நாட்டு உணவுகளான பீட்சா, பர்கர், பிரெட் போன்றவையினை
உட்கொள்கிறோம்.

அதுவே நம் உடலில் நோயினையும், அழிவினையும் தரவல்லது.


Last edited by ayyasamy ram on Thu May 11, 2017 1:50 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 68803
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13114

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆரோக்கிய ரகசியம் - டாக்டர் வெங்கடேஸ்வரன் Empty Re: ஆரோக்கிய ரகசியம் - டாக்டர் வெங்கடேஸ்வரன்

Post by ayyasamy ram Thu May 11, 2017 1:45 pm

ஆரோக்கிய ரகசியம் - டாக்டர் வெங்கடேஸ்வரன் P7saL7LCQUGlj04930ed+Bakery
-
சிலர் இதை உணர்ந்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையினைக்
கடைப் பிடிக்க வேண்டும் என்று எண்ணி பச்சை காய்கறிகளையும்,
பலவகை பழச்சாறுகளையும் தங்கள் உணவுப்பழக்கத்தில் சேர்த்துக்
கொள்கிறார்கள்.

பாக்ெகட் செய்யப்பட்ட பாலை விட்டுவிட்டு, இயற்கையான
மாட்டின் பாலையே விரும்புகின்றனர். மக்கள் இயற்கை உணவுகளைத்
தேடிச் செல்ல ஆரம்பித்துவிட்டார்கள் என்பதற்கான உதாரணமாகவே
இதை எடுத்துக் கொள்ளலாம்.

ஆமாம்... இயற்கை இறைவன் அளித்த வரப்பிரசாதம். அதனால்தான்
நம் மக்கள் அனைவரும் இயற்கையை ரசித்து நேரத்தை கழித்து மன
அழுத்தத்தைக் குறைக்க விரும்புவது அதிகரித்து வருகிறது.

இயற்கைக்குத் திரும்பும் பாதையே ஆரோக்கியமான, அழகான
பாதையும் கூட!
-
--------------------------------------
நன்றி குங்குமம் டாக்டர்
நன்றி- தினகரன்
படம்- இணையம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 68803
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13114

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆரோக்கிய ரகசியம் - டாக்டர் வெங்கடேஸ்வரன் Empty Re: ஆரோக்கிய ரகசியம் - டாக்டர் வெங்கடேஸ்வரன்

Post by Dr.S.Soundarapandian Thu May 11, 2017 6:41 pm

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6016
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3168

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

ஆரோக்கிய ரகசியம் - டாக்டர் வெங்கடேஸ்வரன் Empty Re: ஆரோக்கிய ரகசியம் - டாக்டர் வெங்கடேஸ்வரன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum