புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றுப் பார்வை Poll_c10வரலாற்றுப் பார்வை Poll_m10வரலாற்றுப் பார்வை Poll_c10 
157 Posts - 79%
heezulia
வரலாற்றுப் பார்வை Poll_c10வரலாற்றுப் பார்வை Poll_m10வரலாற்றுப் பார்வை Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
வரலாற்றுப் பார்வை Poll_c10வரலாற்றுப் பார்வை Poll_m10வரலாற்றுப் பார்வை Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
வரலாற்றுப் பார்வை Poll_c10வரலாற்றுப் பார்வை Poll_m10வரலாற்றுப் பார்வை Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
வரலாற்றுப் பார்வை Poll_c10வரலாற்றுப் பார்வை Poll_m10வரலாற்றுப் பார்வை Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
வரலாற்றுப் பார்வை Poll_c10வரலாற்றுப் பார்வை Poll_m10வரலாற்றுப் பார்வை Poll_c10 
3 Posts - 2%
Pampu
வரலாற்றுப் பார்வை Poll_c10வரலாற்றுப் பார்வை Poll_m10வரலாற்றுப் பார்வை Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வரலாற்றுப் பார்வை Poll_c10வரலாற்றுப் பார்வை Poll_m10வரலாற்றுப் பார்வை Poll_c10 
1 Post - 1%
prajai
வரலாற்றுப் பார்வை Poll_c10வரலாற்றுப் பார்வை Poll_m10வரலாற்றுப் பார்வை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றுப் பார்வை Poll_c10வரலாற்றுப் பார்வை Poll_m10வரலாற்றுப் பார்வை Poll_c10 
322 Posts - 78%
heezulia
வரலாற்றுப் பார்வை Poll_c10வரலாற்றுப் பார்வை Poll_m10வரலாற்றுப் பார்வை Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
வரலாற்றுப் பார்வை Poll_c10வரலாற்றுப் பார்வை Poll_m10வரலாற்றுப் பார்வை Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
வரலாற்றுப் பார்வை Poll_c10வரலாற்றுப் பார்வை Poll_m10வரலாற்றுப் பார்வை Poll_c10 
8 Posts - 2%
prajai
வரலாற்றுப் பார்வை Poll_c10வரலாற்றுப் பார்வை Poll_m10வரலாற்றுப் பார்வை Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
வரலாற்றுப் பார்வை Poll_c10வரலாற்றுப் பார்வை Poll_m10வரலாற்றுப் பார்வை Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
வரலாற்றுப் பார்வை Poll_c10வரலாற்றுப் பார்வை Poll_m10வரலாற்றுப் பார்வை Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
வரலாற்றுப் பார்வை Poll_c10வரலாற்றுப் பார்வை Poll_m10வரலாற்றுப் பார்வை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வரலாற்றுப் பார்வை Poll_c10வரலாற்றுப் பார்வை Poll_m10வரலாற்றுப் பார்வை Poll_c10 
3 Posts - 1%
Barushree
வரலாற்றுப் பார்வை Poll_c10வரலாற்றுப் பார்வை Poll_m10வரலாற்றுப் பார்வை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றுப் பார்வை


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Wed Jan 25, 2017 7:02 pm

வரலாற்றுப் பார்வை -1


திருலோக்கியும் கங்கைகொண்ட சோழபுரமும்

                                                         -அண்ணாமலை சுகுமாரன்



அண்மையில் முனைவர் திருமதி பத்மாவதி அவர்கள் கங்கைகொண்ட சோழபுரத்தில் நீண்ட வருடங்களுக்குப்பின் நடையேற இருக்கும்  குடமுழுக்குப்பற்றி ஒரு கட்டுரை , தமிழ் ஹிந்துவில் வெளிவந்த  செய்தியுடன்முக நூல் பக்கத்தில்  எழுதியிருந்தார் .

அதில் கங்கையில் இருந்து புனித  நீர் குடங்களில் திருலோக்கி எனும் ஊருக்கு வந்து விட்டதாகக் குறிப்பிட்டிருந்தார் .
கங்கையில் இருந்துகொண்டுவந்த புனித நீர் குடமுழுக்கு நடைபெற இருக்கும் கங்கைகொண்ட சோழபுரம் தானே செல்லவேண்டும் ஏன் திருலோக்கி க்கு எடுத்துவரப்பட்டது ? எனும் கேள்விக்கு  தக்க வரலாற்று  பின் புலம் இருக்கிறது .

ஏனெனில் கங்கை கொண்ட சோழர் எனப்படும் ராஜேந்திர சோழன் கங்கை போரில் வெற்றி பெற்று,முதலில்  கங்கை நதிநீரைக்கொண்டுவந்ததும்  இதே திருலோக்கிக்குத்தான் .
 
தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளிலிருந்து ஆடுதுறை செல்லும்  சாலையில் உள்ள இவ்வூரில் கயிலாசநாதர் திருக்கோயில் என்றும்  சுந்தரேஸ்வரர் திருக்கோயில் என்றும் அழைக்கப்பெறுகின்ற இரு சிவாலயங்கள்  உள்ளன.


 திரைலோக்கி என்றும் திரைலோக்கிய  மகாதேவி சதுர்வேதி மங்கலம்  என்றும், திரைலோக்கி என்னும் விருதராஜ பயங்கர சதுர்வேதி மங்கலம்  என்றும் சோழப் பேரரசர்கள் காலத்தில்  அழைக்கப் பெற்ற இவ்வூர், இப்போது  திருலோக்கி என அழைக்கப்படுகிறது .

 ஒன்பதாம் திருமுறையில் திருவிசைப்பா பாடிய கருவூர்த்தேவர் “சீரோங்கும் பொழிற்கோடைத் திருலோக்கிய சுந்தரனே” என அழைத்து பதினொரு  பாடல்களில் திரைலோக்கி என்னும் ஊரில் கோயில் கொண்டுள்ள இறைவனைப்  போற்றிப் பாடியுள்ளார்
இராஜேந்திர சோழன் காலம் தொடங்கி (கி.பி.1012-1014) மூன்றாம் இராஜராஜ சோழன் காலம் (கி.பி.1236) வரை வெட்டுவிக்கப்பெற்ற பல கல்வெ ட்டுச் சாசனங்கள் இங்கு  காணப்படுகின்றன .

திருலோக்கி கைலாச நாதர் கோயிலில் காணப்படும் முதலாம் இராஜேந்திர  சோழனின் கல்வெட்டு  ஒன்று "இராஜேந்திர சோழ தேவர் கங்கை கொண்டு எழுந்தருளு கின்ற இடத்து திருவடி தொழுது” -எனக்  குறிப்பிடுகின்றது.
இக் கல்வெட்டு வரி, மிகப் பெரும் வரலாற்றுச் சாதனை ஒன்றை குறிப்பிடுவதாகும்.

இராஜேந்திர சோழன் தஞ்சையை விடுத்து கொள்ளிடத்தின் வடகரையில் ஒரு புதிய தலைநகரத்தைத் தோற்றுவித்தார் . அந்நகரத்தையும்  அங்கு கோயிலின் மூலவரான   பெரிய லிங்கத்தையும் அந்நகருக்கென ஏற்படுத்திய  பேரேரியையும்,  கங்கை நீரால் புனிதப்படு த்த விரும்பினார் .

கூடவே  வடபுலத்து நாடுகளை வெற்றிகொள்ளவும் விரும்பினார் . தன்  மைந்தன் ஆகிய முதலாம் இராஜாதிராஜ சோழனையும்,  விக்கிரம சோழச் சோழிய வரையனான இராஜராஜன் என்னும் தலைமைச் சேனாதிபதியையும் சோழ நாட்டுப் பெரும்படையுடன் அனுப்பி கங்கை  நதி பிரதேசத்து  நாடுகளை வெற்றி கொள்ள அனுப்பினார் .

அப்பெரும்படை ஒடிசா, பீகார், மேற்கு வங்காளம், கிழக்கு வங்காளம் வரை சென்று பல  நாடுகளை வெற்றி கொண்டது.

வங்காளத்து அரசன் மகிபாலன் என்பவனை வென்று பொற்குடங்களில் கங்கை நீரை நிரப்பி  சோழ நாட்டுக்கு எடுத்து வந்தனர்.
வெற்றிக் களிப்புடன்  திரும்பிய சோழர் சேனையை இராஜேந்திர சோழன் கோதாவரியாறு வரை சென்று எதிர்கொண்டழைத்து கங்கை நீர்க் குடங்களுடன் சோழ  நாட்டிற்குத் திரும்பினார் .
அவ்வாறு  திரும்பியபோது அவர்  நேரே தன் புதிய தலை நகரத்துக்குச் செல்லவில்லை.
முதலில் கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் உள்ள ஏமநல்லூர் என்று அழைக்கப்பட்ட திருலோக்கி என்ற ஊரில் உள்ள கைலாசநாதர் கோயிலுக்கு கங்கை நீர்தாங்கியக்குடங்களளுடன் வந்து அங்கு உள்ள இறைவனை வழிபட்டுள்ளார்.
அதன் பின்னரே, கொள்ளிடம் ஆற்றின் வடக்கு கரையில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்துக்குச் சென்று , குடமுழுக்கு செய்ததாக  வரலாறுகள் தெரிவிக்கின்றன.
திருலோக்கி சிவாலயத்திற்கு கங்கை நீர்க்குடங்களுடன் வந்து அங்குள்ள இறைவனைத்தான்  முதலில் தொழுது  வணங்கினான்.
இதனைத் தான் திருலோக்கி சிவாலயத்துக் கல்வெட்டு எடுத்துக் கூறுகின்றது. அதன் பின்பே இராஜேந்திர சோழன் தான் எடுத்து வந்த கங்கைப் நதிப் புனித நீரால் புதிய தலைநகரை சுத்தப்படுத்தி, தான் எடுத்த புதிய சிவாலயத் திற்கு  திருக்குட நீராட்டு  செய்வித்தார்  . புதிய ஏரியில் கங்கை நீரைக் கொட்டி புனிதப் படுத்தினானர் . பிறகு, புதிய தலை நகரத்துக்கு “கங்கை கொண்ட சோழபுரம் என்றும்,  கோயிலுக்கு கங்கை கொண்ட சோழீச்சரம் என்றும் பேரேரிக்கு சோழகங்கம் என்றும் பெயர்களைச் சூட்டியதோடு தன்னை கங்கை கொண்ட  சோழன் என்றும் அழைத்துக்கொண்டார் .

இதற்கு ஆதாரமாக திரு லோக்கி கைலாசநாதர் கோயிலில் கல்வெட்டுகள் பொறிக்கப் பட்டுள்ளன. இந்த கல்வெட்டுகளின் அடிப்படையில்தான் கங்கை கொண்ட சோழபுரத்தின் வரலாறு உலகுக்குத் தெரியவந்தது.  கங்கை கொண்ட சோழனின் கல்வெட்டு ஒன்றுகூட  கங்கைகொண்ட சோழபுரத்தில்  தற்பொழுது காண்பதற்கில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குள்ள சிங்கமுகக்கேணியின் மீதுள்ள கல்வெட்டு அதை உடையார்பாளையம் ஜமீன்தான்  கட்டியதாக சமீபத்திய வரலாற்றைக் கூறுகிறது .
தந்தையை போலவே இத்தனைபேரிய கோவில் எழுப்பிய ராஜேந்திர சோழன் தனது தந்தையைப் போலவே நிறைய செய்திகளுடன்கூடிய கல்வெட்டுகளைப்பொறிக்காமலா இருந்திருப்பார் ? அவைகள் எங்கே போகியிருக்கும் என்ற ஆராய்ந்தால் ,அதன் பின்பே ஒரு சோக வரலாறு கிடைக்கிறது
சோழமன்னர்கல்  பலமுறை பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து அவர்களின் தலைநகரான மதுரையை அழித்தனர். இதனால் மனம் குமுறிய  பாண்டியர்கள் , சோழர்களைப் பழிவாங்கக் காத்திருந்தனர்.
மூன்றாம் குலோத்துங்கன் மறைவுக்குப்  பின்பு, சோபிழ நாடு வலுவிழந்த போது பாண்டியர் சோழ நாட்டின் மீது படையெடுத்து தங்கள் வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்ளலாயினர்.

முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் சோழநாட்டை வென்று தன் பேரரசுடன் இணைத்துக் கொண்டார் .மிகப்பெரிய அழிவுகளை சோழநாட்டில் ஏற்படுத்தினார்

அக்காலத்தேதான் கங்கைகொண்ட சோழபுரம் பெருத்த அழிவிற்கு ஆளாயிருத்தல் வேண்டும். மாளிகைகள் தரைமட்டமாக்கப்பட்டன. சோழர்குலம் கி.பி. 1279ல் முடிவுறவே அரண்மனைகள் உட்பட நகரில் இடிந்த கட்டிடங்களின்கிடைத்த  செங்கற்களை ஊர்மக்கள் எடுத்துப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.
மேலும் சென்ற நூற்றாண்டில் மற்றொரு நிகழ்ச்சி ஏற்பட்டது. அதாவது, லோயர் அணைக்கட்டில் கொள்ளிடத்திற்குப் பாலம் கட்டியபொழுது அரசாங்க அதிகாரிகள் கருங்கல்லால் பாலம் கட்டினால் வலுவாக அமையுமெனக் கருதி, அருகே கருங்கல் கிடைக்காத நிலையில், கங்கைகொண்ட சோழபுரக்கோயிலில் இடிந்து கிடந்த கற்களை எடுத்துச் சென்றதுடன் மதிலையும்   இடித்துக் கற்களை எடுத்தனர். ஊர் மக்கள் அதனை எதிர்த்ததும், வேறு செங்கல் மதிலைக் கட்டித் தருவதாக அதிகாரிகள் வாக்களித்தனர். ஆனால் பிறகு எதுவும் நிகழவில்லை.
கோயிலில் இருந்து அகற்றப்பட்ட கருங்கற்களில் பல கல்வெட்டுக்கள் இருந்துள்ளன. அவையாவும் இவ்வாறு அழிந்துவிட்டன.
கோயிலில் எஞ்சி உள்ள கல்வெட்டுக்கள் சிலவே. அவற்றிலும் சில மிகவும் சிதைந்துள்ளன.
கங்கை கொண்ட சோழனின் கல்வெட்டு ஒன்றுகூட அங்குத் தற்பொழுது காண்பதற்கில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



இவ்வாறு இராஜேந்திர சோழன் வடஇந்தியாவில் கங்கை வரை போர் தொடுத்து வெற்றி பெற்றதற்கு ஆதாரமாக விளங்குவது   திருலோக்கி கல்வெட்டுகள், மட்டும் தான்
போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய இந்த கல்வெட்டுகள், அண்மையில் நடைபெற்ற இக்கோயில் கும்பாபிஷேகத் தின்போது முழுவதும் வர்ணம் பூசி அழிக்கப்பட்டுள்ளன என்பது வரலாற்று ஆர்வலர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
கோயில் கும்பாபிஷேகத்தின்போது வர்ணம் பூசி அழிக்கப்பட்டுள்ளதால் வரலாற்று ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர்

திருலோக்கி கைலாசநாதர் கோயிலில் 1932-ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே இந்த கல்வெட்டுகளை படி எடுத்துள்ளனர். ஆனால், அவை வெளியிடப்படவில்லை.
இருந்தாலும் கோயிலில் இருந்த கல்வெட்டு பாதுகாக்கப்படாமல் அழிக்கப்பட் டுள்ளது வேதனையைத் தருகிறது.
இதுபோன்ற பல கோயில்களிலும் திருப்பணிகளின் போது பல கல்வெட்டுகள் சிதைக்கப்படுகின்றன.  
நமது வரலாற்றின் மீது இருக்கும் அக்கறையின்மை வேதனை அளிக்கிறது .
நமது கலாச்சாரமும் பண்பாட்டையும் மீட்டெடுக்க நமது வரலாறு காக்கப்படவேண்டும் .
அண்ணாமலை சுகுமாரன்
25/1/17

துணை நின்றவை
தமிழ் இந்து செய்தி
முதலாம் ராஜேந்திர சோழனின் பெருமையைக் கூறும் திருலோக்கி கல்வெட்டுகள் வர்ணம் பூசி அழிப்பு: வரலாற்று ஆர்வலர்கள் வேதனை
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியனின்
கல்வெட்டு சொல்லும் கோயில்கதைகள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 25, 2017 8:38 pm

இவ்வளவு தகவல்களா ? 
நல்லது ,நன்றி .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Thu Jan 26, 2017 8:51 am

T.N.Balasubramanian wrote:இவ்வளவு தகவல்களா ? 
நல்லது ,நன்றி .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1232329
படித்துப் பாராட்டியதற்கு நன்றி நண்பரே ,
அண்ணாமலை சுகுமாரன்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jan 26, 2017 11:15 am

வரலாற்றுப் பார்வை 3838410834 வரலாற்றுப் பார்வை 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Thu Jan 26, 2017 10:37 pm


வரலாற்றுப் பார்வை -2

கல்லிலும் செப்பிலும் கங்கை
-அண்ணாமலை சுகுமாரன்





நேற்றைய கட்டுரை சற்றுப் பெரிதாக்கப்போனதால் , கங்கைப் பற்றிய சில செய்திகளைமுழுவதும் சொல்லாமல் பின் தனியே கூறலாம் என்று எண்ணி விட்டுவிட்டேன் .

கங்கையை வெற்றி கொண்டதன் ஒரு குறியீடாக ராஜேந்திரன் சோழ கங்கம் எனும் ஏரியைகங்கைகொண்ட சோழபுரத்தில் வெட்டிவித்தார்

பொதுவாக மன்னர்கள் வெற்றிபெற்ற இடங்களில்தான் வெற்றிச் சின்னங்களை நிறுவுவது வழக்கம். ஆனால் , ராஜேந்திர சோழன், தனது தலை நகரமான கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்து அங்கே ஒரு ஜல ஸ்தூபியை நிறுவியிருக்கிறார்.
இவ்வாறு அவர் வெட்டுவித்த
சோழ கங்கம் பற்றி அதையே ஒரு ஜல ஸ்தூபி என செப்பேடுகளில் குறிப்பிடுகிறார் .
அதுமட்டுமல்ல அந்த காலக்கட்டடகத்திலேயே சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பேயே கங்கையைப் பற்றிய பல புராண செய்திகள் தமிழ் நாட்டில் பிரசித்தி பெற்றிருந்த தகவலையும் அவர் விடுவித்த செப்பேட்டில் குறிப்பிடுவைகளின் மூலம் அறியமுடிகிறது . .


திருவாலங்காட்டுச் செப்பேடு “பகீரதன் தனது சகோதரர்களுக்கும் தந்தைக்கும் மோட்சம் கொடுப்பதற்காகப் புனித கங்கையைப் பூமிக்குக் கொண்டுவந்தான். அதை ராஜேந்திரன் தனது பராக்கிரமத்தால் இங்கு கொண்டுவந்தான் என்கிறது” என்கிறது
கபில முனியின் சாபத்தால் சாம்பலாகிப் போன அறுபதாயிரம் முன்னோர் களின் ஆன்மா கங்கை நீரால் நற்பேறு பெறும் பொருட்டு அவர்களின் குலத் துதித்த பகீரதன் கடுந்தவம் புரிந்து விண்ணக கங்கையை மண்ணகம் நோக்கி அழைத்தான்.
சினமுற்ற கங்கை ஆயிரமுகங்களோடு ஆவேசமாக மண்ணகம் நோக்கி வேகமாகஇறங்கினாள்.
ஊழிப்பெரு வெள்ளத்தால் உலகம் அழிந்துவிடும் என சிவன் தன் ஒற்றைச் சடையில் கங்கையை ஏந்தி முடிந்தார்.
நில்லாத நீரை தன் சடைமுடியில் நிற்க வைத்தார்.
இது நிகழவில்லை என்றால் இந்த பூவுலகிற்கு யாது நிகழ்ந்திருக்கும் என்பதை மணிவாசகப்பெருமானார்,
மலைமகளை ஒருபாகம் வைத்தாலுமே மற்றொருத்தி
சலமுகத்தாள் அவள் சடையில் பாயுமது என்னேடி?
சலமுகத்தாள் அவன் சடையில் பாய்ந்திலளேல் தரணி எல்லாம் பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாஞ் சாழலோ

என்று கூறி சிவனது பெருங்கருணையை விவரித்துள்ளார்.

கங்கையின் ஆற்றலை அடக்கியசிவன் பின்னர் மீண்டும் பகீரதனின் வேண்டுகோளுக்காகக் கங்கையை தனது சடையில் இருந்து விடுவித்தார். பூலோகத்தில் நதியாக பாய்ந்த கங்கை பாதாளலோகம் சென்றாள். அந்நீர் கொண்டு பகீரதன் தன் முன்னோர்களுக்கு நீர்க்கடன் செய்தான் என்று புராணங்கள் கூறுகின்றன

திருவாலங்காட்டுச் செப்பேடுகள் இராஜேந்திரனின் கங்கை நோக்கிய படையெடுப்பு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் நீடித்தன என்று சொல்கின்றன. இந்த இரண்டு ஆண்டுக் காலத்தில், வட இந்தியாவின் பல அரசுகள் சோழர்களின் பெரும்படைக்கு முன் தோல்வியுற்றன; இராஜேந்திரனின் படைகள், சக்கரக்கோட்டம், தண்டபுக்தி மற்றும் மகிபாலனை தோற்கடித்தது இவ்வாறு கொண்டுவரப்பட்ட கங்கையின் புனித நீரை பகிரதன் கங்கையை பூவுலகத்துக்கு கொண்டுவந்த புராண நிகழ்வைஒப்பிட்டு தனது செப்பேட்டில் வெளியிட்டதன் மூலம் அந்தக்காலத்தில் புராணங்கள் அனைவராலும் அறியப்பட்டதை அறிந்துகொள்ளலாம் .
ராஜேந்திரனுக்கு மட்டுமா அவரது பெருமைமிக்கதந்தையும் மாமன்னர் ராஜராஜன் அவர்களும் ,அவர் எடுப்பித்த தஞ்சைப் பெரியகோயிலில் கங்கை பூவுலகத்திற்கு வந்த புராணக் கதையை அழகுமிக்க சிற்பங்களாக அமைத்திருக்கிறார் .
ஒருவேளை இத்தகைய சிற்பங்களை தந்தையுடன் உடனிருந்து பார்த்திருந்த காரணத்தினால் தான் கங்கையை தமிழ் நாட்டுக்கு கொண்டுவரும் எண்ணம்ஆகிவருக்குப் பிறந்திருக்குமோ என்னவோ !
தனது திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் தன்னை பகிரதனுடன் ஒப்பிட்டு கங்கையை கொண்டுவந்த சாதனையை பொறிக்கச் செய்தாரோ என்று எண்ணத்தோன்றுகிறது

கங்காபட்டாரகியைத்( கங்கை ) தன் சடைமேல் சிவன் ஏந்தும் அற்புத சிற்பக் காட்சியினை மாமன்னன் ராஜராஜன் தஞ்சைக் கோயில் ஸ்ரீவிமானத்தின் வடதிசை கோஷ்டம் ஒன்றில் இடம் பெறுமாறு செய்துள்ளார்

கோஷ்டத்தின் ஒருபுறம் பகீரதன் ஒற்றைக் காலில் நின்ற வண்ணம் தவம் மேற்கொள்ளும் காட்சி இடம் பெற்றுள்ளது. எதிர்புறம் நாய் ஒன்று வானம் நோக்கி பார்த்தவாறு ஊளையிடுகின்றது. பேரழிவின் வருகையை முன்கூட்டியே உணரும் ஆற்றல் நாய்களுக்கு உண்டு என்பதைக் காட்டுவதே இக்காட்சிபோலும் . ஆக்ரோஷமான ஊழிப் பெருவெள்ளம் விண்ணகத் திலிருந்து வரப்போகிறது என்பதை இக்காட்சி நமக்கு உணர்த்துகின்றது.
கோஷ்டத்தின் நடுவே நிற்கும் சிவன் தன் பின்னிரு கரங்களால் மான், மழு ஆகியவற்றை ஏந்தியவாறும், முன் இடக்கரத்தை தொடை மீது இறுத்தியவாறும் முன் வலக்கரத்தைத் தலைக்கு மேல் உயர்த்தித் தன் சடை ஒன்றினை ஏந்திப் பிடித்தபடியும் காட்சி தருகிறார்.

விண்ணிலிருந்து கூப்பிய கரங்களுடன் பாதிவுடல் பெண்ணாகவும், இடுப்புக் கீழே நீர்த்திரள £கவும் உருக்கொண்டு இறங்கும் கங்கா பட்டாரகி பெருமானாரின் ஏந்திய சடைமீது இறங்குகிறாள். இக்காட்சி சிற்பத்தினை கங்காதரமூர்த்தி என்பர்.

இவ்வாறு கங்கையை தமிழ் நாட்டுக்கு கொண்டுவருவதில் மாமன்னர் ரராஜராஜர் மற்றும் கங்கை கொண்ட ராஜேந்திரருக்கும் இருந்த ஆவலை செப்பேடுகள் மூலமும் ,சிற்பங்களின் மூலம் உணர்த்தி உள்ளனர் .

கங்கையையும் காவிரியையும் இணைக்கும் திட்டம் தமிழர் அனைவருக்கும் கனவாகவே இருந்துவருகிறது .
இப்போது நமது அரசுக்கு பணம் ஒரு பிரச்சனை இல்லை
இணைப்பதற்கு தேவையான கட்டமைப்புக்கு குறை இல்லை
தேவை எல்லாம் மனம் மட்டுமே !
அண்ணாமலை சுகுமாரன்
26/1/17

-- நண்பர் ்முனைவர் காளை ராஜன் அவர்கள் கங்கை என்னும் விண்ணீர் வியனுலகு எனும் தலைப்பில் கங்கையைப் பற்றிய செய்தியை ஒரு குழுவில் வெளியிட்டு வருகிறார் .

இந்தக்கட்டுரைக்கு துணை

முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்
கல்வெட்டு சொல்லும் கோயில் கதைகள்
மற்றும் இணையம்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jan 27, 2017 12:02 pm

சோழர்களைப்பற்றி நிறைய செய்திகள் இதுவரையில் நான் அறியாதவை . மிக்க நன்றி . தங்கள் ஆய்வுக் கட்டுரைகளைத் தொடர்ந்து படிக்கக் காத்திருக்கிறோம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Mon Apr 24, 2017 8:50 pm


வரலாற்றுப் பார்வை -3
--அண்ணாமலை சுகுமாரன்
கி- பி 1700 இல் தமிழ் நாடு - பிரான்ச்சுவா மர்த்தேன் பார்வையில்


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழர், அரேபியருடனும், கிரேக்கருடனும், ரோம ருடனும், மற்ற அயல் நாட்டினருடனும் பண்டயத் தமிழர்கள் வணிகத்தொடர்பு கொண்டிருந்தனர் என்று கூறப்படுகிறது . இதை எடுத்துக்காட்டும் வகையில் சில நூலாசிரியர்கள் பிளினி (கி.பி. 75), தாலமி (கி.பி. முதல் நூற்றாண்டு) மற் றும் செங்கடற்பயணம் ஆய்வுக்குறிப்புக்கள் (Periplus Maris Erithrerien) எரித்திரையன் இந்துமாக் கடல் போன்ற நூல்களில் கூறியிருக்கிறார்கள்
இவ்வாறு தமிழக வரலாற்றை அறிய சீன பயணிகள் பாகியான் ,யுவான்சுவாங் மற்றும் பிற அயல் நாட்டவரின் பயணக்குறிப்புகள் துணையாக இருக்கின்றன

இத்தகைய ஒரு வரலாற்றுடன் தொடர்புடைய ஒரு நல்லப் புத்தகத்தை
திருச்சியில் ஒரு பழைய புத்தகக் கடையில் வாங்கியதாக வரலாற்று
ஆர்வம் கொண்ட ஒரு தொழில் அதிபர் ,நண்பர் தியாகராஜன் நேற்று என்னிடம் கொடுத்தார் .
அது திரு அ செபஸ்தியான் எனும் புதுச்சேரி ஒய்வு பெற்ற அரசு பணியாளர் தனது தீவிர முயற்சியில் எழுதிய ,"பிரான்ச்சுவா மர்த்தேன்
வாழ்க்கை வரலாறு 1634- 1706 எனும் நூல் ஆகும் .அது ,
"பிரான்ச்சுவா மர்த்தேன் புதுச்சேரியின் முதல் ஆளுநர் ஆக இருந்தவர் .
வரலாற்று ஆர்வமும் சமூக அக்கறையும் கொண்ட "பிரான்ச்சுவா மர்த்தேன் தனது நினைவுகளை ஒரு நீண்ட குறிப்புகளாக எழுதிய வந்திருக்கிறார் .
அவை 1931 இல் ஒரு புத்தகமாகத் தொகுக்கப்பட்டு மூன்று பகுதியாக
வெளிவந்ததாக திரு அ செபஸ்தியான் கூறுகிறார் .
அவைகளை இதுவரை தமிழிலோ , பிரெஞ்சு மொழியிலோ யாரும் தொகுத்து வெளியிட்டதில்லை என முன்னுரையில் கூறுகிறார் .
இந்தப் புத்தகத்தை சென்னை சேகர் பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது .
அவர்கள் ஒரு நல்ல புத்தகங்களை வெளியிடும் பதிப்பகத்தார் .
அதன் அதிபர் வெள்ளையாம் பட்டு சுந்தரமும் நல்ல ஆய்வாளர் .
நான் இன்று காலை அவருக்கு போன் செய்து 2000 இல் வெளியிடப்பட்டிருக்கும் அந்தப்புத்தகத்தின் பிரதிகள்அவர்களிடம் இருக்கிறதா என்று வினவினேன் ,மேலும் அடுத்த இரண்டு பகுதி வெளியிடப்பட்டிருக்கிறதா ?என்றும் கேட்டேன் .
அவர் பிரதிகளும் இல்லை என்றும் தொடர்ந்து அதன் இதர பகுதியும் வெளிவரவில்லை என வருத்தமுடன் தெரிவித்தார்
கிடைத்த வரை நாள் வாய்ப்பு என்று ,எனக்குக்கிடைத்த இந்தப்புத்தகத்தின் சில சுவையான பகுதிகளை நண்பர்களுடன்
பகிர நினைக்கிறேன் .

செப்டெம்பர் 1699 முதல் டிசம்பர் 1706 வரை பிரான்ச்சுவா மர்த்தேன்
புதுச்சேரியில் பணிபுரிந்திருக்கிறார் .
அந்தக்காலக்ட்டத்தில் அவர் இந்தியாவெங்கும் தரைவழியே பயணம் செய்திருக்கிறார் .பூம்புகார் ,நாகப்பட்டினம் மரக்காணம் பற்றி பல சுவையான அந்தக்கால தமிழக நிலைப்பற்றிக்கூறியிருக்கிறார்
நாளை முதல் சில பகுதியைகளைப் பகிர்கிறேன் .
அண்ணாமலை சுகுமாரன்
23/4/17

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக