புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகத்சிங் நினைவுதின சிறப்புப் பகிர்வு ! Poll_c10பகத்சிங் நினைவுதின சிறப்புப் பகிர்வு ! Poll_m10பகத்சிங் நினைவுதின சிறப்புப் பகிர்வு ! Poll_c10 
14 Posts - 70%
heezulia
பகத்சிங் நினைவுதின சிறப்புப் பகிர்வு ! Poll_c10பகத்சிங் நினைவுதின சிறப்புப் பகிர்வு ! Poll_m10பகத்சிங் நினைவுதின சிறப்புப் பகிர்வு ! Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
பகத்சிங் நினைவுதின சிறப்புப் பகிர்வு ! Poll_c10பகத்சிங் நினைவுதின சிறப்புப் பகிர்வு ! Poll_m10பகத்சிங் நினைவுதின சிறப்புப் பகிர்வு ! Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
பகத்சிங் நினைவுதின சிறப்புப் பகிர்வு ! Poll_c10பகத்சிங் நினைவுதின சிறப்புப் பகிர்வு ! Poll_m10பகத்சிங் நினைவுதின சிறப்புப் பகிர்வு ! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பகத்சிங் நினைவுதின சிறப்புப் பகிர்வு ! Poll_c10பகத்சிங் நினைவுதின சிறப்புப் பகிர்வு ! Poll_m10பகத்சிங் நினைவுதின சிறப்புப் பகிர்வு ! Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
பகத்சிங் நினைவுதின சிறப்புப் பகிர்வு ! Poll_c10பகத்சிங் நினைவுதின சிறப்புப் பகிர்வு ! Poll_m10பகத்சிங் நினைவுதின சிறப்புப் பகிர்வு ! Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
பகத்சிங் நினைவுதின சிறப்புப் பகிர்வு ! Poll_c10பகத்சிங் நினைவுதின சிறப்புப் பகிர்வு ! Poll_m10பகத்சிங் நினைவுதின சிறப்புப் பகிர்வு ! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பகத்சிங் நினைவுதின சிறப்புப் பகிர்வு ! Poll_c10பகத்சிங் நினைவுதின சிறப்புப் பகிர்வு ! Poll_m10பகத்சிங் நினைவுதின சிறப்புப் பகிர்வு ! Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
பகத்சிங் நினைவுதின சிறப்புப் பகிர்வு ! Poll_c10பகத்சிங் நினைவுதின சிறப்புப் பகிர்வு ! Poll_m10பகத்சிங் நினைவுதின சிறப்புப் பகிர்வு ! Poll_c10 
8 Posts - 2%
prajai
பகத்சிங் நினைவுதின சிறப்புப் பகிர்வு ! Poll_c10பகத்சிங் நினைவுதின சிறப்புப் பகிர்வு ! Poll_m10பகத்சிங் நினைவுதின சிறப்புப் பகிர்வு ! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பகத்சிங் நினைவுதின சிறப்புப் பகிர்வு ! Poll_c10பகத்சிங் நினைவுதின சிறப்புப் பகிர்வு ! Poll_m10பகத்சிங் நினைவுதின சிறப்புப் பகிர்வு ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel
பகத்சிங் நினைவுதின சிறப்புப் பகிர்வு ! Poll_c10பகத்சிங் நினைவுதின சிறப்புப் பகிர்வு ! Poll_m10பகத்சிங் நினைவுதின சிறப்புப் பகிர்வு ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகத்சிங் நினைவுதின சிறப்புப் பகிர்வு !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 23, 2017 11:19 am

முட்டாளாகச் சாக விருப்பமில்லாத புரட்சியாளன்! பகத்சிங் நினைவுதின சிறப்புப் பகிர்வு !!

பகத்சிங் நினைவுதின சிறப்புப் பகிர்வு ! NoFXHaocTSrjSqJkMD21+bhagat-singh_2qmc_18559

“நான் இறந்தால், என் பிணத்தை வாங்காதே... அப்படி வாங்கினால், நீ அழுவாய்; அதனால், புரட்சிக் கனலும் தாக்கமும் குறைந்துவிடும். எனவே, என் உடலை வாங்காதே” என்று தன் தாயிடம் சொன்னவர், இந்திய விடுதலைக்காகப் போராடிய பகத்சிங். அவருடைய நினைவு தினம் இன்று.

இந்தியாவில் சுதந்திர வேட்கை 1857-ல் இருந்து கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. பிரிட்டிஷ் ஆட்சிக்கும் அவர்கள் நம்மிடம் நடந்துகொண்ட விதத்தையும் எதிர்த்து ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்த காலம். பல உயிர்களை இந்தியா தியாகம் செய்துவந்தது. பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிராகப் பல போராட்ட வீரர்கள் களத்தில் இறங்கி, தங்கள் நாட்டுக்காகத் தங்கள் பங்களிப்பை அளித்து வந்தனர்.

ஆனால், போராட்டம் நமக்குச் சாதகமாக அமையும் என்றும், சுதந்திரம் கிடைத்துவிடும் என்றும் இந்திய மக்கள் நம்பினர். மகாத்மா காந்தி வருகைக்குமுன்... வருகைக்குப்பின் என்ற நிலை இந்திய வரலாற்றில் அமைந்தது என்றால், அது மிகையாகாது. காந்திஜியின் அஹிம்சை வழிப் போராட்டங்களில் ஒன்றான ஒத்துழையாமை இயக்கத்தில் இந்தியா முழுதும் பலர் பங்குபெற்றனர்.

அதில் ஈர்க்கப்பட்ட ஒரு 13 வயது சிறுவன்தான் பகத்சிங். ஆனால், சௌரிசௌரா நிகழ்வுக்குப் பிறகு, அஹிம்சை வழியில் போராடினால் சுதந்திரம் கிடைக்காது, வேறு வகையானப் போராட்டத்தினால் மட்டுமே சாதிக்க முடியும் என்று எண்ணிய பகத்சிங், மார்க்சீசியக் கொள்கைகளோடும் கம்யூனிசக் கொள்கைகளோடும் மீசையை முறுக்கி களத்தில் நின்றார்.

1926-ம் ஆண்டு தன் நண்பர்களாகிய ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோரோடு எழுச்சிப் பெற்று புரட்சி நாயகர்களாக உருவெடுத்து உயர்ந்து நின்றார். 1928, சைமன் கமிஷனில் சட்டவரையரைகள் கொண்டு வரப்பட்டபோது, அதனை எதிர்த்து நாடு முழுதும் காங்கிரஸ் தலைவர்கள் போராடினர். அதில், பிரிட்டிஷ் போலீஸார் கடுமையாகத் தடியடி நடத்த ஆணையிட... அந்தச் சம்பவத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் லாலா லஜபதிராய் உயிரிழந்தார்.

தொடரும்.............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 23, 2017 11:21 am

இதனால் கடும்கோபத்துக்கு ஆளான இந்தப் புரட்சியாளர்கள், சாண்டர்ஸ் என்னும் ஆங்கிலேயரைச் சுட்டுக்கொன்றுவிட்டுத் தலைமறைவாயினர். அதே வருடம், ஏப்ரல் 8-ம் தேதி தொழிலாளர்களுக்கு எதிராகப் பல சட்டத்திட்டங்களை அமல்படுத்தியது பிரிட்டிஷ் அரசாங்கம். அதில், இந்த மூன்று நாயகர்களும் குண்டுகளை வீசினர்.

இதில், யாருக்கும் உயிர்ச்சேதம் இல்லை. காரணம், புரட்சி என்பது மக்களைக் கொல்வதிலோ, துன்புறுத்துவதிலோ இல்லை என்ற நிலையான நாட்டுப்பற்றைக் கொண்டிருந்தனர். இந்தக் குண்டுவீச்சு நடந்து முடிந்தபிறகு, மூவரும் சரணடைந்தனர். சாண்டர்ஸை கொலை செய்ததற்கும் குண்டுவீச்சில் ஈடுபட்டதற்கும் பிரிட்டிஷ் அரசு இவர்களுக்கு மார்ச் 24-ம் தேதி தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

ஆனால், சில காரணங்களுக்காக முதல் நாளே தூக்கிலிடப்போவதாக தகவல் வந்தது. அந்தச் சமயத்தில் பிரிட்டிஷ் அரசு ஓர் ஒப்பந்தத்தைக் கொண்டுவந்தது. அதன் பெயர்தான் காந்தி - இர்வின் ஒப்பந்தம். இதன் தலையாய காரணமே பகத்சிங் மற்றும் அவரது நண்பர்களை தூக்கில் போடலாமா, வேண்டாமா என்பதை முடிவு செய்வதற்குத்தான். ஆனால், இந்த ஆலோசனையில் காந்திஜிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

அதற்காகத்தான், 'இர்வின் – காந்தி ஒப்பந்தம் என்றுவைக்காமல் காந்தி – இர்வின் ஒப்பந்தம் என்று வைத்தனர்' என வரலாறு கூறுகிறது. ஆனால், காந்தியோ “உங்கள் சட்டம் என்ன சொல்கிறதோ, அதைச் செய்யுங்கள்..” என்றார். தூக்குத் தண்டனை முடிவான பிறகு, பகத்சிங்கின் தந்தை கிஷான் சிங், ஆங்கிலேய அரசுக்கு ஒரு மன்னிப்புக் கடிதத்தை அனுப்பினார்.

இதனை அறிந்த பகத்சிங், “நீங்கள் செய்த செயல் இந்த நாட்டையும் என் தாத்தா அர்ஜுன் சிங்கையும் இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. இனி, நான் உங்களைத் தந்தை என்று எண்ணமாட்டேன். நீங்கள் செய்த காரியத்துக்கு இந்திய மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள்” என்று கடிதம் அனுப்பினார்.

அவர் சிறையில் இருந்தபோது, சுரண்டலற்ற சமநீதி கிடைக்கும் சமுதாயம் அமைய வேண்டும், மத வன்முறைகளை எதிர்ப்பதற்கும், மதவாதங்களை ஒழிப்பதற்கும் மக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும் என எப்போதும் சிந்தித்துக்கொண்டிருந்தார்.

அத்துடன் அங்கு, தினமும் டைரி எழுதும் பழக்கமுடைய பகத்சிங், 404 பக்கங்களை எழுதியிருந்தாராம். பகத்சிங் ஒரு புத்தகப் பிரியர். எப்போதும் கையில் ஏதேனும் ஒரு புத்தகத்தை வைத்திருப்பார். சிறையில் இருந்த காலத்தில், வசதிகள் இல்லை; தினமும் செய்தித் தாள் வேண்டும்; உணவு சரியில்லை என அனைத்துக்கும் உண்ணாநோன்பு இருந்து அதில் வெற்றியும் கண்டார்

“சாகப்போகிறோம் என்றாகிவிட்டது.. இந்த நேரத்தில் புத்தகம் எதற்கு” என்று ராஜ்குரு கேட்ட கேள்விக்கு,  “சாகும்போது முட்டாளாகச் சாக எனக்கு விருப்பமில்லை. எதையோ கற்றுக்கொண்டோம் என்ற திருப்தி இருக்க வேண்டும்.” என்று புன்னகைத்துக்கொண்டே பதிலளித்தார் புரட்சி நாயகன் பகத்சிங்.

தூக்குத் தண்டனைக்காக... தூக்கு மேடையை நோக்கிவந்த மூவரில், பகத்சிங்... “எனக்கு ஒரு 10 நிமிடம் கால அவகாசம் கொடுங்கள்” என்றார். எதற்கு என்றதற்கு, “ஒரு புரட்சியாளன், இன்னொரு புரட்சியாளனிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்” என்றார். எதுவும் புரியாமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தவர்கள் பிறகுதான் அவர் கையை உற்றுநோக்கினர். ஆம், அவரது கையில்.. லெனினின் 'அரசும் புரட்சியும்' என்ற புத்தகம் இருந்தது.

இறுதியாக, அங்கிருந்த ஆங்கிலேயரைப் பார்த்து, “இந்த உலகில் நீதான் அதிர்ஷ்டக்காரன்.. ஏன் தெரியுமா? ஒரு 23 வயது இளைஞன், தன் நாட்டுக்காக மரணத்தை முத்தமிட்டு வரவேற்கும் காட்சியைப் பார்க்க, உனக்கு பாக்யம் இருந்திருக்கிறது” என்றார் புன்சிரிப்புடன். பின், தூக்கிலடப்பட்டார் அந்தப் புரட்சிவீரன. 23 வயது இளைஞனான பகத்சிங்கின் செயல்களும் தியாகங்களும் அவர் பெயரை என்றும் வரலாறு பேசும்படி செய்துவிட்டது.

நன்றி விகடன் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக