புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிள்ளைத் தமிழ் Poll_c10பிள்ளைத் தமிழ் Poll_m10பிள்ளைத் தமிழ் Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
பிள்ளைத் தமிழ் Poll_c10பிள்ளைத் தமிழ் Poll_m10பிள்ளைத் தமிழ் Poll_c10 
3 Posts - 8%
heezulia
பிள்ளைத் தமிழ் Poll_c10பிள்ளைத் தமிழ் Poll_m10பிள்ளைத் தமிழ் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
பிள்ளைத் தமிழ் Poll_c10பிள்ளைத் தமிழ் Poll_m10பிள்ளைத் தமிழ் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
பிள்ளைத் தமிழ் Poll_c10பிள்ளைத் தமிழ் Poll_m10பிள்ளைத் தமிழ் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பிள்ளைத் தமிழ்


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Mar 04, 2017 4:45 pm

தமிழில் சிற்றிலக்கியங்கள் எண்ணற்றவை இருந்தாலும் அதனை 96 என வகைப்படுத்தி உரைப்பது மரபாகும். அவற்றுள் பிள்ளைத்தமிழ் இலக்கியம் குறிப்பிடத்தகுந்தது. "பிள்ளைப்பாட்டு" எனவும் “பிள்ளைக்கவி” என்றும் இவ்விலக்கியத்தை அழைப்பர். இறைவனையோ மனிதர்களையோ குழந்தையாக எண்ணிப் பாடப்படுவதே பிள்ளைத்தமிழாகும்.

இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இரண்டு பால்களிலும் பாடப்படுவதுண்டு. மூன்று மாதம் முதல் இருபத்தொரு மாதம் வரையான குழந்தையின் வாழ்க்கைக் காலத்தைப் பத்துப் பருவங்களாகப் பிரித்துக் காண்பர். ஒவ்வொரு பருவத்துக்கும் பத்துப் பாடல்கள் என அமைத்துப் பாடப்படுவது வழக்கமாகும்.

ஆண்பாற் பிள்ளைத்தமிழ் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் எனும் பத்துப் பருவங்களையுடையது. பெண்பாற் பிள்ளைத்தமிழில் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, நீராடல், அம்மானை, ஊசல் எனும் பருவங்களைக் கொண்டது.

• மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர்
• முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர்
• திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர்
• சேக்கிழார் பிள்ளைத்தமிழ் - திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை

ஆகியன சிறப்புடைய பிள்ளைத்தமிழ் நூல்களாகும்.

தொல்காப்பியத்தில் இடம்பெறும் “குழவி மருங்கினும் கிழவதாகும்” என்ற புறத்திணையியல் நூற்பாவே இவ்விலக்கியத்தின் தோற்றுவாய். பெரியாழ்வாரின் தாலாட்டுப்பாடல்கள் பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் முன்னோடியாகக் கொள்ளலாம்.கண்ணனைத் தாலாட்டி, செங்கீரையாட்டி, சப்பாணி கொட்டி, தளர்நடை இடுதலை எழிலுறப் பாடியுள்ளார்.

ஒட்டக்கூத்தர் இயற்றிய “இரண்டாம் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் ” முதல் பிள்ளைத்தமிழ் இலக்கியமாகும்.

பத்துப் பருவங்களுக்கான விளக்கம்

இரு பாலாருக்குமான பொதுவான பருவங்கள்

காப்பு - குழந்தையை இறைவன் காக்க வேண்டுமென வேண்டிப்பாடுவது.
செங்கீரை - கீரை காற்றில் அசைவது போன்ற மென்மையான பருவத்தைப் பாடுவது.
தால் - குழந்தையைத் தாலாட்டுவதாக அமைவது.
முத்தம் - குழந்தையிடம் - முத்தம் வேண்டுவதாகப் பாடுவது.
வருகை - குழந்தை எழுந்து நடந்து வருவதைப் பாடுவது.
அம்புலி - குழந்தைக்கு நிலவைக் காட்டுதல்.

ஆண்களுக்கான சிறப்புமிக்க மூன்று பருவங்கள்

சிற்றில் சிதைத்தல் - சிறுபெண்கள் கட்டிய மணல் வீட்டை ஆண்குழந்தை சிதைக்கும் நிலையைப் பாடுவது
சிறுதேர் உருட்டல் - ஆண்குழந்தை சிறிய தேரை உருட்டி விளையாடுவதைப் பாடுவது.
சிறுபறை கொட்டல் - ஆண்குழந்தை சிறிய தோலாலான பறையைக் கொட்டுவது.

பெண்களுக்கான மூன்று பருவங்கள்.

நீராடல் - நீர்நிலையில் விளையாடுதல்.
அம்மானை - காய்களைத் தூக்கிப்போட்டு விளையாடுதல்
ஊசல் - ஊஞ்சலாடுதலைப் பாடுவது.

நன்றி-முனைவர் இரா.குணசீலன்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Mar 05, 2017 12:17 pm

பெரியாழ்வார் பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் முன்னோடி என்று சொல்வார்கள் . எனக்குப் பிடித்த பாடல் இது .

பாலொடு நெய் தயிர் ஒண் சாந்தொடு சண்பகமும்
      பங்கயம் நல்ல கருப்பூரமும் நாறி வர
கோல நறும்பவளச் செந்துவர் வாயினிடைக்
      கோமள வெள்ளிமுளை போல் சில பல் இலக
நீல நிறத்து அழகார் ஐம்படையின் நடுவே
      நின் கனிவாய் அமுதம் இற்று முறிந்து விழ
ஏலும் மறைப்பொருளே ஆடுக செங்கீரை
      ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே   

கண்ணனின் வாயில் ஜொள்ளு ஊறுகிறதாம் ; அது கம்பிபோல வாயிலிருந்து நீளுகிறது ; திடீரென்று அது முறிந்து கண்ணன் அணிந்திருக்கக்கூடிய    ஐம்படைத்தாலி என்ற ஆபரணத்தை மீது விழுந்ததாம் !

என்னே பெரியாழ்வாரின் கற்பனை !       

 
 



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 05, 2017 12:58 pm

M.Jagadeesan wrote:பெரியாழ்வார் பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் முன்னோடி என்று சொல்வார்கள் . எனக்குப் பிடித்த பாடல் இது .

பாலொடு நெய் தயிர் ஒண் சாந்தொடு சண்பகமும்
      பங்கயம் நல்ல கருப்பூரமும் நாறி வர
கோல நறும்பவளச் செந்துவர் வாயினிடைக்
      கோமள வெள்ளிமுளை போல் சில பல் இலக
நீல நிறத்து அழகார் ஐம்படையின் நடுவே
      நின் கனிவாய் அமுதம் இற்று முறிந்து விழ
ஏலும் மறைப்பொருளே ஆடுக செங்கீரை
      ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே   

கண்ணனின் வாயில் ஜொள்ளு ஊறுகிறதாம் ; அது கம்பிபோல வாயிலிருந்து நீளுகிறது ; திடீரென்று அது முறிந்து கண்ணன்  அணிந்திருக்கக்கூடிய    ஐம்படைத்தாலி என்ற ஆபரணத்தை மீது விழுந்ததாம் !

என்னே பெரியாழ்வாரின் கற்பனை !       
 
 

பிள்ளைத் தமிழ் UHSRYzoRWGLrTw7ysMbs+646cde969c2721aaf9ca82fefa45fb8c

உண்மை ஐயா.............. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Mar 12, 2017 10:31 am

‘தமிழில் பிள்ளைத்தமிழ் இலக்கியம்’ - இது நான் மிகவும் இரசித்து எழுதிய நூல் - தகவலுக்காக!
‘தாமரை நூலகம்’ - பதிப்பகம்.



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Mar 13, 2017 1:48 pm

Dr.S.Soundarapandian wrote: ‘தமிழில் பிள்ளைத்தமிழ் இலக்கியம்’ - இது நான் மிகவும் இரசித்து எழுதிய நூல் - தகவலுக்காக!
‘தாமரை நூலகம்’ - பதிப்பகம்.
மேற்கோள் செய்த பதிவு: 1235921

தங்களின் இலக்கிய படைப்புகளை ஈகரையில் கொஞ்சம் கொஞ்சமாக வெளியிடலாமே ! இலக்கிய ஆசிரியராக தங்களின் படைப்புகளை படிக்க விரும்புகிறேன் .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 16, 2017 12:00 am

Dr.S.Soundarapandian wrote: ‘தமிழில் பிள்ளைத்தமிழ் இலக்கியம்’ - இது நான் மிகவும் இரசித்து எழுதிய நூல் - தகவலுக்காக!
‘தாமரை நூலகம்’ - பதிப்பகம்.
மேற்கோள் செய்த பதிவு: 1235921

ஓ..........அப்படியா ஐயா, மிகவும் சந்தோஷம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக