புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!
Page 18 of 40 •
Page 18 of 40 • 1 ... 10 ... 17, 18, 19 ... 29 ... 40
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே!

மேற்கோள் செய்த பதிவு: 1208345krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா?
சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது.
அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான பொருட்செலவை, பெருமளவு தவிர்க்கலாம் என்று தோன்றியது.
தற்போது, பெரும்பாலான மக்கள் மொபைல் போன் மற்றும் ஆதார் கார்டு வைத்துள்ளனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில், இவை இல்லாதவர்களே கிடையாது எனும் நிலை வரும்.
தற்போது, தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, மொபைல் போன் மூலம், ஆன்லைன் காஸ், 'புக்கிங்' செய்கிறோம். சூப்பர் சிங்கர் போன்ற, 'டிவி' நிகழ்ச்சிகளில், போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம், வீட்டில் அமர்ந்தபடியே ஓட்டளிக்கிறோம். இதுபோல, பொதுத்தேர்தலிலும் ஓட்டளிக்கலாம். வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அதற்கேற்ற, 'சர்வர்'கள் இருந்தால் போதும்.
முதலில், நம் ஆதார் கார்டு நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலுடன், நம் மொபைல் போன் நம்பரை தேர்தல் கமிஷனிடம் தந்து, பதிவு செய்ய வேண்டும். 'ஒன் டைம் பின்' எனப்படும், சங்கேத குறியீடு எண்ணை, கமிஷனின் கணிப்பொறி உருவாக்கும்; நாம், அதை மறக்காமல், மெமரியில், 'ஸ்டோர்' செய்ய வேண்டும்.
தேர்தல் தினத்தன்று எங்கு இருந்தாலும், மொபைல்போன் எஸ்.எம்.எஸ்., மூலம் அல்லது கணிப்பொறி மூலம், 'ஒன் டைம் பாஸ்வேர்டை' பயன்படுத்தி ஓட்டளிக்கலாம். நம் ஓட்டு, தேர்தல் கமிஷன் சர்வரில் சேர்ந்து விடும். இதை, உறுதி செய்யும் வண்ணம், நமக்கு குறுந்தகவல் வரும்.
சிக்னல் பிரச்னை இருக்கலாம் என்பதால், இரண்டு, மூன்று நாட்களுக்கு தேர்தல் கமிஷனின், 'சர்வர்' திறந்தே இருக்கும்.
இதனால், ஓட்டிங் மிஷன், பூத், அதிகாரிகள், நீண்ட வரிசை, பாதுகாப்பு, கலவரம், அடிதடி மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.
ஓட்டளிக்கும் போது, 'ஒன் டைம் பாஸ்வேர்ட்' மட்டுமே, கமிஷனின் கணிப்பொறியில் தோன்றும் வண்ணம், 'புரோகிராமிங்' செய்தால், ரகசியம் காக்கப்படும்.
மென் பொருள் பணியாளர் கூறிய இந்த தேர்தல் சீர்திருத்தத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஏற்று, ஒத்துழைப்பு கொடுத்தால், தேர்தல் பொருட்செலவை பெருமளவு குறைக்கலாம்.
ஆர்.ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மனைவியை மதியுங்கள்!
என் அலுவலக தோழி, கணவர் மற்றும் குழந்தைகளை, கண் போல் காப்பாள். அவர்கள் விருப்பப்பட்டு கேட்கும் உணவு வகைகளை செய்து கொடுத்து விட்டு தான், அலுவலகத்துக்கு கிளம்புவாள். கணவர், பணி ஓய்வு பெற்ற போது, வீடு வரை வந்து, விட்டுச் சென்ற அலுவலக ஊழியர்களை அன்புடன் உபசரித்து, வீட்டில் பெரிய விருந்து வைத்து, அவரை சந்தோஷப்படுத்தினாள். அத்துடன், மன சோர்வு அடையாமல், கணவரை அனுசரித்து நடந்தாள்.
ஆனால், சமீபத்தில் அவள் பணி ஓய்வு பெற்று, உடன் பணிபுரிந்த ஊழியர்கள், அவளை வீடு வரை கொண்டு வந்த போது, ஒப்புக்கு கூட, அவர்களை, 'வாங்க...' என்று அழைக்கவில்லை, அவள் கணவர். மாறாக, ஹாலில், அமர்ந்து, 'டிவி' பார்த்துக் கொண்டிருந்தார். தோழியே உடன் வந்தவர்களை வரவேற்று, டீ, டிபன் கொடுத்து உபசரித்து அனுப்பினாள். இதைக் கண்ணுற்ற எனக்கு, துக்கம் தொண்டையை அடைத்தது.
ஐயா கணவன்மார்களே... நீங்கள் ஓய்வு பெறும் நாளில், உங்களுக்கு எப்படிப்பட்ட உணர்வு இருக்குமோ, அப்படித்தான், உங்கள் மனைவிமார்களுக்கும் இருக்கும். ஓடி ஓடி உழைத்தவள், ஓய்வு பெறும் நாளில், நீங்களும் உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள்; அவளையும் சக மனுஷியாக நினைத்து, மற்றவர் முன்னிலையில் மரியாதையுடன் நடத்துங்கள். அந்த ஒரு நாளிலாவது, அவள் சந்தோஷப்படும்படி நடந்து கொள்ளுங்கள்!
— இந்திராணி தங்கவேல், சென்னை.

சுத்தத்தை, பணத்தால் வாங்க முடியுமா?
வங்கியில் லோன் வாங்கி, சென்னையில் வீடு கட்டியிருந்தார், என் உறவினர் ஒருவர். அவ்வீட்டை, வாடகைக்கு விட உள்ளதாக என்னிடம் தெரிவித்தார். அச்சமயம், என் நெருங்கிய நண்பர் ஒருவர் வாடகைக்கு வீடு தேடிக் கொண்டிருந்தார். ஆன்மிகவாதியான அவர், அனைவரையும் வசீகரிக்க கூடிய பேச்சாற்றல் உள்ளவர். அதனால், புது வீட்டுக்கு சிபாரிசு செய்து, குடியமர்த்தினேன்.
இரண்டு ஆண்டு முடிந்து, வீட்டை காலி செய்தார், நண்பர். வீட்டை பார்ப்பதற்கு போனபோது, சமையலறை எண்ணெய் பிசுக்காகவும், கழிப்பறை கறை பிடித்தும், அசிங்கமாக காட்சி அளித்தது.
நண்பரிடம், 'இவ்வளவு அசுத்தமாக வைத்துள்ளீர்களே...' என்றதற்கு, 'நேரம் இல்ல... நானே, என் குழந்தைகளின் படிப்புக்காகத் தான் வந்துள்ளேன்; வீட்டை சுத்தம் செய்வதற்கு அல்ல...' என்று சொன்னதுடன், 'இதற்காக, முன் பணத்தை வேண்டுமானாலும் கழித்துக் கொள்ளட்டும்; பணம் ஒரு பொருட்டல்ல...' என்றார். எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. சுத்தத்தை பணம் கொடுத்து வாங்க முடியுமா?
வாடகைக்கு குடி வருபவர்களே... வாடகைக்கு வீடு விடுவோரும், கடன் வாங்கி, வீடு கட்டி தான் வாடகைக்கு விடுகின்றனர் என்பதை புரிந்து, சொந்த வீடு போல் நினைத்து சுத்தமாக வைத்துக் கொள்ள முயலுங்கள்!
—சங்கர நாராயணன், மாடம்பாக்கம்,சென்னை.

மிலிட்டரி அலெர்ட்!
பள்ளி இறுதித் தேர்வு முடிவுகள் வந்திருந்த நேரம்... பக்கத்து கிராம திருவிழாவுக்கு சென்றிருந்தேன். விழாவில், பள்ளி மாணவ, மாணவியர், முதியவர் ஒருவருக்கு மாலை, சால்வை அணிவித்து, கவுரவித்தனர். கூடவே, அவரது காலில் விழுந்து, ஆசி பெற்றனர். அதில் ஒரு மாணவி பேசும் போது, 'அதிகாலை, 4:00 மணிக்கு வீட்டுல இவர் மணியடிச்சு, சாமி கும்பிடுவார்; அந்நேரம் சரியா எழுந்து, தேர்வுக்கு படிக்க ஆரம்பிப்போம். தேர்வு நாட்களை குறித்துவெச்சு, எங்களுக்கு ஞாபகப்படுத்துவார்.
'யாருக்காவது தேர்வு மையங்களுக்கு போறதுல சிக்கல் இருந்தா, உடனே, டவுன்ல இருந்து ஆட்டோ வரவழைச்சு, அனுப்பி வைப்பார். தேர்வு முடியுற வரைக்கும், அக்கறை காட்டி விசாரிச்சு, ஊக்கமளித்தமைக்கு நன்றி தாத்தா...' என்றாள்.
அகமகிழ்ந்து அதை ஏற்ற அம்முதியவர், எழுந்து, 'நீங்க எல்லாரும் என் பேரப் புள்ளைங்க; உங்களுக்கு உதவுறதுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. அன்று, நாட்டுக்காக ராணுவத்துல உழைச்சேன்; இன்று, நம்ம கிராமத்துக்காக உழைக்கிறேன். ஆண்டவன் ஆயுளை கொடுத்தான்னா, இன்னும் உதவ காத்திருக்கேன்...' என்றார் சுருக்கமாக!
திரண்டிருந்த மக்கள், நெகிழ்ச்சியுடன் கை தட்டி உற்சாகப்படுத்தினர்.
வயதாகி விட்டால், வீண் கதை பேசி, அண்டை அயலாரை வம்புக்கிழுத்து நேரம் போக்கும் ஒரு சில முதியோர்களுக்கு மத்தியில், இம்முதியவர், சிறந்த முன்னுதாரணம்!
—பொன்.குமரவேல், ராஜபாளையம்.

'டி.வி' தொடர் தயாரிப்பாளர்களே...
சமீபத்தில், ஒரு தனியார் தொலைக்காட்சி, குழந்தைகளுக்கான, 'இரு மின்மினி பூச்சிகளின் கதை' என்ற தலைப்பில், குழந்தைகளின் சுட்டித்தனங்களை, ஒலிபரப்புகிறது. இத்தொடரை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஆர்வமாக பார்க்கின்றனர்.
இத்தொடரில், குழந்தை கதாபாத்திரம் ஒன்று, பள்ளி செல்ல பிடிக்காமல், விடுமுறை எடுப்பதற்காக, வயிற்று வலி மற்றும் தலைவலி போன்ற பல காரணங்களை சொல்லியும், பெற்றோர் விடுப்பு எடுக்க சம்மதிக்காததால், மின்சார, 'பியூஸ்' கட்டையை பிடுங்கி ஒளித்து வைத்து விட்டு, 'தண்ணீர் வரவில்லை; குளிக்க முடியவில்லை... அதனால், பள்ளிக்கு செல்லவில்லை...' என்று கூற, குழந்தையின் அம்மாவும், 'சரி... விடுப்பு எடுத்துக் கொள்...' என சம்மதிக்கிறாள்; குழந்தையும், மகிழ்ச்சியாக பள்ளி செல்லாமல், வீட்டில் விளையாடுகிறது.
இத்தொடரை பார்த்த என் உறவினர் வீட்டுக்குழந்தை, விடுப்பு எடுப்பதற்காக, மின்சார, 'ப்யூஸ்' கட்டையை பிடுங்கி, கையில் வைத்திருந்ததைக் கண்ட பெற்றோர், அதிர்ச்சி அடைந்து, குழந்தையிடம் இருந்த கட்டையை வாங்கி, அறிவுரை வழங்கினர்.
குழந்தைகள் மூலமாக என்ன கருத்துகளை கூறினாலும், மற்ற குழந்தைகளுக்கு, விரைவில் சென்றடையும். இக்காலத்தில், பெரியவர்களை விட, குழந்தைகள் மிக கூர்மையாக இருப்பதால், சீக்கிரம் அந்த செயல்களை செயல்படுத்தி பார்ப்பர்; இது, பல இன்னல்களை ஏற்படுத்தும்.
இதுபோன்ற தேவையற்றவைகளை தவிர்த்து, பயனுள்ள தொடர்களை தயாரிக்குமாறு, பெற்றோராகிய நாங்கள் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
சி.கே.மரகதம், பீளமேடு.

குறிப்பறிந்து உதவுங்கள்!
என் தோழிக்கு, நான்கு பெண் குழந்தைகள்; கணவனை இழந்த அவள், மூன்று பெண்களுக்கு எப்படியோ கஷ்டப்பட்டு திருமணத்தை நடத்தி முடித்தாள். நான்காவது மகளுக்கு திருமணம் செய்ய போதுமான நிதி இல்லாததால், திருமணம் தள்ளிக் கொண்டே சென்றது.
இந்நிலையில், தன் பெண்ணுக்கு நல்ல வரன் வரவே, திருமணம் நிச்சயித்து இருந்தாள்; ஆனால், பெரிய அளவில் சீர் செய்ய முடியாத நிலையில், திணறிக் கொண்டிருந்தாள்.
அவளின் கஷ்டத்தை அறிந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடி, 'எப்படி இருந்தாலும், திருமண பரிசு கொடுக்கத் தான் போகிறோம்; அது, தோழிக்கு உதவும் வகையில் இருக்கட்டுமே...'என்று தீர்மானித்து, நாங்களே பாத்திரங்களில் இருந்து, பர்னிச்சர் வரை, மணப்பெண், குடும்பம் நடத்த தேவையான அனைத்து பொருட்களையும், வாங்கினோம்.
மண்டபத்தில், அந்த சீர்வரிசை அடுக்கப்பட்டிருந்த போது, சந்தோஷத்தில் என் தோழிக்கு வார்த்தைகளே வரவில்லை.அனைவருக்கும், கண்ணீர் மல்க, கைகூப்பி நன்றி தெரிவித்தாள்.
இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு, பரிசுப் பொருட்களை வழங்க இருப்போர், குறிப்பறிந்து கூடிப்பேசி உதவலாமே!
— இந்திராணி தங்கவேல், மாடம்பாக்கம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வார்த்தை விளையாட்டு!
சமீபத்தில், ஒரு விடுமுறை நாளில், என் தோழியின் வீட்டுக்கு சென்றிருந்தேன். அவளது பிள்ளைகள் இருவரும் வீட்டு வராண்டாவில் அமர்ந்து, 'யானை பூனையா... தேரு வருதே... மாலா போலாமா... மாவடு போடுவமா...' என்றெல்லாம் மாற்றி மாற்றி சொல்லியும், எழுதியும் விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்ததும், ஒன்றும் புரியாமல் விழித்தேன்.
அவர்களிடம் இதுபற்றி கேட்டதற்கு, 'இது, 'பேலின் ட்ரோம்' விளையாட்டு...' என்றனர். நான், அப்படி ஒரு விளையாட்டை கேள்விப்பட்டதே இல்லை. பின், தோழி தான் சொல்லி, புரிய வைத்தாள்.
மற்ற பாடங்களில், பிள்ளைகள், நல்ல மதிப்பெண்கள் எடுத்தாலும், தமிழில் மட்டும் பின்தங்கி விடுகின்றனராம். மொழி பாடத்தில், ஆர்வம் ஏற்படுத்த தான், இந்த விளையாட்டை சொல்லிக் கொடுத்தாளாம்.
நேராக வாசித்தாலும், பின்னே இருந்து வாசித்தாலும், ஒரே மாதிரி வரும் சொற்களை, ஆங்கிலத்தில், 'பேலின் ட்ரோம்' என்பர். தமிழிலும், அது போன்று, 'விகடகவி' போன்ற சொற்கள் உண்டு.
அம்மாதிரி சொற்களை கண்டுபிடித்து சொன்னால், ஒவ்வொரு சொல்லுக்கும், ஒரு சாக்லேட் வாங்கித் தருவதாக உறுதி கூறியிருக்கிறாள். பிள்ளைகளும், இனிப்புக்கு ஆசைப்பட்டு, வீடியோ கேம் விளையாடுவதை குறைத்து, பாட புத்தகத்தை புரட்டி, வார்த்தைகளை தேட ஆரம்பித்து விட்டனர்.
மொழி பாடத்தில், விளையாட்டை கலந்து கொடுத்து, குழந்தைகளுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் தோழியின் புத்திசாலித்தனத்தை கண்டு வியந்தேன்.
சும்மாவா சொன்னார்கள்... 'எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவதாவதும், தீயவதாவதும் அன்னை வளர்ப்பதிலே...' என்று!
— எஸ்.ரீனு, சென்னை.

இப்படித்தான் செய்யணும்!
கடந்த ஆண்டு, பள்ளி கோடை விடுமுறையின் போது, என் மைத்துனர் பையனை, என் வீட்டுக்கு அழைத்து வரச் சென்றிருந்தேன்.
மைத்துனரிடம் விடை பெற்று கிளம்பும் போது, அவர் என்னிடம் ஒரு துண்டு பேப்பரை கொடுத்தார். அதில், பையனுக்கு என்னென்ன உணவுகள் பிடிக்கும், எந்தெந்த உணவுகள் ஒத்துக் கொள்ளாது, தலைவலி, காய்ச்சல் போன்றவற்றிற்கு அலர்ஜியை ஏற்படுத்தும் மருந்து மாத்திரைகள் எவை என்று, எல்லாமே தெளிவாக எழுதப்பட்டிருந்தது.
பத்து, பதினைந்து நாள் தங்கப் போகும் தன் மகன், எந்தச் சிரமத்துக்கும் ஆளாகக் கூடாது என்ற கரிசனம், அச்சீட்டைப் படித்த போது புரிந்தது.
விடுமுறைக்கு, குழந்தைகளை உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைப்போர், என் மைத்துனரின் இச்செயலை பின்பற்றினால், நன்றாக இருக்குமல்லவா!
மருத.வடுகநாதன், வேதாரண்யம்.

மேற்கோள் செய்த பதிவு: 1243393krishnaamma wrote:இப்படித்தான் செய்யணும்!

இது ஒரு சேவையா?
வெளிநாட்டில் பணிபுரியும் என் தம்பிக்கு, வரன் தேடி, தனியார் திருமண தகவல் மையம் ஒன்றிற்கு சில வாரங்களுக்கு முன் சென்றிருந்தோம். அங்கே, எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு, 'சிறப்பு' கவனம் செலுத்துவதாகவும், பதிவுக் கட்டணம் குறைவு என்றும் கூறியிருந்தனர்.
எங்களுக்கு தகுந்த சில வரன்களை தேர்வு செய்து, அப்பெண்களின் விவரம் கேட்ட போது, 'நீங்க, வெளிநாட்டுல வேலைன்னு சொல்ல வேணாம்; சொந்த வீடு, சுயதொழில் என்று சொல்லுங்க; பையனின் புகைப்படத்தை, 'கிராபிக்ஸ்' செய்து, இன்னும் அழகாக, இளமையாக கொண்டு வாங்க...' என்று, பல தந்திர யுக்திகளை எங்களிடம் கூறினர்.
நம்மிடம் கூறுவது போல தானே பெண் வீட்டாரிடமும் கூறியிருப்பர் என்று எண்ணி அதிர்ச்சியடைந்தோம். மேலும், அருகில் இருந்த மற்றொருவர், இன்னொருவரிடம் பேசியதும் காதில் விழுந்தது...
'மனசுக்கு பிடிக்கலன்னா, கெட்ட கனவா நினைச்சு, பிரிஞ்சிட சொல்லுங்க; உங்க பொண்ணுக்கு வேற இடம் அமையாமலா போயிடும். நமக்கு தெரிந்த பெரும்புள்ளியை வைச்சு, நகைய நாங்க மீட்டுத் தர்றோம்...' என்று, கட்டப்பஞ்சாயத்து செய்ததைக் கண்டு, மிரண்டு போனோம்!
கிடைக்கும் கமிஷனுக்காக, எதையும் செய்யத் துணியும், இதுபோன்ற திருமண தகவல் மையங்கள் மீது கவனமாக இருங்கள்!
— பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.

இதுவல்லவோ பொறுப்புணர்ச்சி!
சமீபத்தில், உறவினரின் வீட்டுக்கு செல்லும் போது, ஒரு பள்ளியின் அருகில், சிறு வேனில், தர்பூசணி பழங்கள் விற்றுக் கொண்டிருந்தனர். பழம் வாங்கலாம் என நினைத்து, அருகில் சென்ற போது, பள்ளி மாணவர்கள் போல் இரண்டு சிறுவர்கள் பழங்கள் விற்பதை கண்டு ஆச்சரியமடைந்து, அவர்களைப் பற்றி விசாரித்தேன். அவர்கள் சொன்ன பதில், என் மனதை, மிகவும் நெகிழச் செய்தது.
அவர்கள் இருவரும் அருகிலுள்ள அரசு பள்ளியில் படிக்கும் சகோதரர்கள்; அப்பா, கட்டட வேலை மற்றும் 'பெயின்ட்' அடிக்கும் தொழிலாளி; அம்மா வீட்டு வேலை செய்பவர். வாரம் முழுவதும், உழைத்து சம்பாதித்து, மகன்களை காப்பாற்றி, படிக்க வைக்கும் தங்கள் பெற்றோருக்கு ஒரு நாளாவது ஓய்வு கொடுக்கலாம் என்று, இந்த சகோதரர்கள், விடுமுறை நாட்களில், இது போன்று வியாபாரம் செய்வதாக கூறினர்.
அவர்களது உயர்ந்த நோக்கத்தை தெரிந்து கொண்ட கட்டட கான்ட்ராக்டர் ஒருவர், குறைந்த வாடகைக்கு, இவர்களுக்கு வேன் கொடுத்து உதவுகிறார். இதுபோன்ற பிள்ளைகள் இருந்து விட்டால், முதியோர், பிச்சைக்காரர்களாக மாற மாட்டார்கள்.
கே.சசிகுமார், சென்னை.

- Sponsored content
Page 18 of 40 • 1 ... 10 ... 17, 18, 19 ... 29 ... 40
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 18 of 40