புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கார்ப்பரேட் கூட்டணி! Poll_c10கார்ப்பரேட் கூட்டணி! Poll_m10கார்ப்பரேட் கூட்டணி! Poll_c10 
7 Posts - 64%
heezulia
கார்ப்பரேட் கூட்டணி! Poll_c10கார்ப்பரேட் கூட்டணி! Poll_m10கார்ப்பரேட் கூட்டணி! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
கார்ப்பரேட் கூட்டணி! Poll_c10கார்ப்பரேட் கூட்டணி! Poll_m10கார்ப்பரேட் கூட்டணி! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கார்ப்பரேட் கூட்டணி! Poll_c10கார்ப்பரேட் கூட்டணி! Poll_m10கார்ப்பரேட் கூட்டணி! Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
கார்ப்பரேட் கூட்டணி! Poll_c10கார்ப்பரேட் கூட்டணி! Poll_m10கார்ப்பரேட் கூட்டணி! Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
கார்ப்பரேட் கூட்டணி! Poll_c10கார்ப்பரேட் கூட்டணி! Poll_m10கார்ப்பரேட் கூட்டணி! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கார்ப்பரேட் கூட்டணி! Poll_c10கார்ப்பரேட் கூட்டணி! Poll_m10கார்ப்பரேட் கூட்டணி! Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
கார்ப்பரேட் கூட்டணி! Poll_c10கார்ப்பரேட் கூட்டணி! Poll_m10கார்ப்பரேட் கூட்டணி! Poll_c10 
8 Posts - 2%
prajai
கார்ப்பரேட் கூட்டணி! Poll_c10கார்ப்பரேட் கூட்டணி! Poll_m10கார்ப்பரேட் கூட்டணி! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கார்ப்பரேட் கூட்டணி! Poll_c10கார்ப்பரேட் கூட்டணி! Poll_m10கார்ப்பரேட் கூட்டணி! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கார்ப்பரேட் கூட்டணி! Poll_c10கார்ப்பரேட் கூட்டணி! Poll_m10கார்ப்பரேட் கூட்டணி! Poll_c10 
4 Posts - 1%
mruthun
கார்ப்பரேட் கூட்டணி! Poll_c10கார்ப்பரேட் கூட்டணி! Poll_m10கார்ப்பரேட் கூட்டணி! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கார்ப்பரேட் கூட்டணி! Poll_c10கார்ப்பரேட் கூட்டணி! Poll_m10கார்ப்பரேட் கூட்டணி! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கார்ப்பரேட் கூட்டணி!


   
   
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Feb 01, 2017 1:26 pm

முன்னர் எல்லாம் ஒரு சிற்றூரில் வீட்டைச் சுற்றி மரங்கள், காய்கறிச் செடிகள், வளர்ப்பு விலங்குகள் சூழ வாழ்வதுதான் வாழ்க்கையாக இருந்தது. அன்றாட வாழ்வுக்குத் தேவையான பொருட்கள் விலையில்லாமல் கிடைத்தன. இந்த வீட்டில் இருந்து இளைஞர் ஒருவர் வேலைக்காக நகரத்துக்கு வரும்போதுதான், தன் முதல் அதிர்ச்சியைச் சந்திக்கிறார். தாகம் போக்கும் தண்ணீரை அவர் விலைக்கு வாங்க வேண்டியிருக்கிறது. அன்று கறந்த பாலில் தேநீர் அருந்தியவர், என்று கறந்தது என்றே தெரியாத பாக்கெட் பாலை வாங்குகிறார். நாட்டுக்கோழி தின்றவர் பிராய்லர் கோழி சாப்பிடத் தொடங்குகிறார். சுருக்கமாகச் சொன்னால், அவருடைய தற்சார்பு வாழ்க்கை அழியத் தொடங்குகிறது. தற்சார்பின் அழிவில்தான் கார்ப்பரேட் பிழைக்கிறது.

சிற்றூர்களின் தற்சார்பும் இன்று அழிவின் விளிம்பில் நிற்கிறது. பசுமைப் புரட்சி அறிமுகமானபோதே, உழவர்களின் தற்சார்பு வாழ்வு அழியத் தொடங்கியது. அந்தக் காலத்தில் மாடுகளை வளர்த்த நம் உழவர்களுக்கு, பால் என்பது முதன்மை உற்பத்திப்பொருள் அல்ல. அது, வேளாண்மையின் ஓர் உபரி உற்பத்தி. எனவே, பசுவைவிட உழவுக்கும் வண்டிப் போக்குவரத்துக்கும் பயன்பட்ட காளைகள்தான், தமிழக உழவர்களுக்கு முதன்மையாக இருந்தன.

மனிதர் தம் உணவுக்குப் பயன்படுத்தியது போக மிஞ்சிய பயிரின் பகுதியையும், மனிதர் உணவுக்குப் பயன்படாத தாவரங்களையும் தின்று வளர்ந்தவையே நமது மாடுகள். சுருக்கமாகச் சொன்னால், ஒருவரின் உணவை மற்றொருவர் உண்டு அவர் மேல் பட்டினியைத் திணித்துவிடாமல் வாழ்ந்து வந்தனர். பசுமைப் புரட்சியின் டிராக்டர் இதற்கு முற்றுப்புள்ளி வைத்தபோது, நமது காளைகள் உதவாக்கரை ஆகின.

கார்ப்பரேட் கூட்டணி! P60

மேற்கு உலக நாடுகளில் பால் உற்பத்தி தொழிலாக மாறியபோது, அங்கு இருந்த காளைக் கன்றுகளுக்கும் இதே கதி நேர்ந்தது. பால் கொடுக்கக்கூடிய பெண் கன்றுகளே பண்ணைகளுக்குத் தேவை. ஆண் கன்றுகள் தேவையற்றப் பொருளாகிவிட, அவற்றை தாயிடம் பால் குடிக்கக்கூட விடாமல் பட்டினியால் சாகடித்து, இறைச்சிக் கூடங்களுக்கு அனுப்பினர். ஆனால், தமிழக உழவர்கள் அப்படிக் கருணையற்றவர்கள் அல்ல. காளைகளை அவர்கள் கைவிட்டது இல்லை. சில தென்மாவட்டங்களில் முல்லைத் திணையின் எச்சமாக, அவை ஏறு தழுவுவதற்கு உரிய காளைகளாக மாற்றப்பட்டன. இது திணை வாழ்வின் தொடர்ச்சி மட்டும் அல்ல, காளைகளின் மீது கொண்ட காதலும் ஆகும். இதைத்தான் காளைகளின் மீது நிகழ்த்தப்படும் கொடுமை என்கிறது பீட்டா எனும் விலங்கு உரிமை அமைப்பு.  

விலங்கு உரிமைக்காகப் போராடுவதாகச் சொல்லிக்கொள்ளும் பீட்டா, அப்படி ஒன்றும் புத்தன் அல்ல. வளர்ப்பு விலங்குகளைக் காப்பதாகச் சொல்லிக்கொள்ளும் இந்த அமைப்பு தன் வசம் இருந்த 90 விழுக்காடு விலங்குகளைக் கொன்றுகுவித்திருக்கிறது. இந்தச் செயலுக்காக பீட்டாவின் பணியாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 1996-ம் ஆண்டு தொடங்கி கடந்த ஆண்டு வரை பீட்டா 23,640 விலங்குகளைக் கொன்றுள்ளதாக, அமெரிக்க அரசின் ஆவணங்கள் கூறுகின்றன. ஆண்டுக்கு 3.6 கோடி டாலர் வருமானம்கொண்ட இந்த அமைப்புக்குச் சொந்தமாக விலங்குகள் காப்பகம்கூட இல்லை. அப்படியானால் இந்த அமைப்பின் நிதி எங்கு செல்கிறது? விளம்பரங்கள், பரப்புரைகள், நிர்வாகச் செலவுகளைத் தாண்டி, அதிர்ச்சியூட்டும் இன்னொரு செலவும் அதற்கு உண்டு.  

மேற்கு உலக நாடுகளில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும், தீவிரவாத விலங்கு உரிமைக் குழுக்கள் இருக்கின்றன. பிரிட்டனின் பிரதமராக மார்கரெட் தாட்சர் இருந்தபோது, அவருடைய இல்லத்துக்குக் கடித வெடிகுண்டை அனுப்பி வெடிக்கச்செய்தபோதுதான் இந்தக் குழுக்களின் பயங்கரவாதம், உலகுக்குத் தெரிந்தது. தவிர, பல்கலைக்கழகங்களின் விலங்குகள் ஆய்வுக்கூடங்கள், விலங்குப் பொருட்களை விற்கும் கடைகள் போன்றவற்றின் மீது வெடிகுண்டுகளை வீசுவது, தீக்கிரையாக்குவது போன்ற பல குற்றச்செயல்களை அவை செய்கின்றன. இதுபோன்ற பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்களின் வழக்குச் செலவுகளுக்கு நிதி அளிக்கிறது பீட்டா.  

உண்மையில் பீட்டா ஒரு வணிக நிறுவனம் எனக் குற்றம் சாட்டப்படுகிறது. மாட்டு இறைச்சி விற்பனை, குதிரைப் பந்தயம் ஆகியவை பீட்டாவின் எதிர்ப்புகளில் சில. ஆனால், இவற்றுக்கு ஆதரவு அளிக்கும் ‘விசா கார்டு’ என்ற கார்ப்பரேட் நிறுவனத்துடன், பீட்டா வணிக உறவு கொண்டுள்ளது. வருமானம் கிடைப்பதால் மாட்டு இறைச்சி உணவுக்கு ஆதரவு அளிக்கும் ‘விசா’வின் கொள்கையை பீட்டா கண்டுகொள்வது இல்லை. பங்குச்சந்தை வணிகத்திலும் ஈடுபடுகிறது பீட்டா. அது வாங்கியிருக்கும் பங்குகளில், இறைச்சி உணவு விற்பனையில் ஈடுபட்டிருக்கும் பல சங்கிலித்தொடர் உணவகங்களின் பங்குகளும், இறைச்சியைச் சிப்பமிடும் நிறுவனங்களின் பங்குகளும் அடங்கும். அதேசமயம் கெ.எஃப்.சி போன்ற உணவகங்களுக்கு எதிரான போராட்டத்திலும் பீட்டா ஈடுபடும்.

இந்த இரட்டை வேடத்துக்கு அது கூறும் காரணம், இந்தப் பங்குகளை வாங்கினால்தான் அந்த நிறுவனங்களின் ஆண்டுக்கூட்டத்தில் கலந்துகொண்டு அந்த நிறுவனங்களின் கொள்கையைக் குறித்து, கேள்வி எழுப்ப முடியுமாம். கெ.எஃப்.சி நிறுவனம் இவர்களின் பேச்சைக் கேட்டு கோழி விற்பதை நிறுத்திவிட்டு கத்திரிக்காயா விற்கப்போகிறது? ஆனால், இந்தப் பங்குகள் மூலம் கிடைத்த லாபத்தை பீட்டா `வேண்டாம்’ எனக் கூறியதாகத் தகவல் இல்லை. ஆக, பணம் என வரும்போது பீட்டா ‘சைவம்’ அல்ல.

இதன் கண்மூடித்தனமான விலங்கு உரிமை வாதம் எதுவரை இட்டுச் செல்கிறது என்றால், வெளிநாடுகளில் வசிக்கும்  பார்வையற்றவர்கள், சாலைகளில் தம்மை வழிகாட்டி அழைத்துச் செல்வதற்காக வழிகாட்டி நாய்களைப் பயன்படுத்துவார்கள். இப்படி நாய்களைப் பயன்படுத்துவதற்கும் தடை கோருகிறது பீட்டா. இது எத்தகைய கருணை? தவிர, மீன் பிடித்தல், இறைச்சி உண்ணுதல், பால் அருந்துதல் போன்ற உணவுப்பழக்க உரிமைகளிலும், சேவல் சண்டை, நாய்ச் சண்டை, காளைச் சண்டை, ஏறுதழுவுதல் போன்ற பண்பாட்டு நடவடிக்கைகளிலும் அது தலையிடுகிறது. இது காலனிய மனப்போக்கின் எச்சம்.

உண்மையில் மேற்கத்திய விலங்கு உரிமை இயக்கங்களின் ஆர்வம், விலங்கு உரிமையைக் காப்பதைவிட தீவிர சைவ உணவுப்பழக்கத்தின் மீதுதான் குவிமையம்கொள்கிறது. விலங்கு, புரத வகையில் வருவதால், இவர்களுக்கு பால் என்பதுகூட அசைவ உணவுதான். இந்த அளவு தீவிரக் கொள்கையுடைய இவர்கள் ‘வீகன்’ (Vegan) என அழைக்கப் படுகிறார்கள். இந்தக் கொள்கைக்காக இவர்கள் தீவிரவாதத்தில் ஈடுபடுவதை ‘veganarchism’ என ஆங்கிலத்தில் குறிக்கிறார்கள். (‘சைவ உணவாளர்களின் அட்டூழியம்’ எனப் பொருள்கொள்ளலாம்). இத்தகைய கொள்கையின் மீது இந்துத்துவா ஆட்களுக்கு ஈர்ப்பு ஏற்பட்டதில் வியப்பு ஒன்றும் இல்லை. அதனாலேயே இவர்கள் பீட்டா உள்ளிட்ட விலங்கு உரிமை அமைப்புகளின் பொறுப்பில் இணைந்துள்ளனர்.  

இந்தியாவின் பீட்டா பிரிவு இந்துமயம் ஆக்கப்பட்டிருக்கிறது எனலாம். மேற்கு உலக பீட்டாவின் மாதிரியை அது முழுவதும் பின்பற்றுவது இல்லை. ஏனெனில், அங்கு முதன்மைச் செயற்பாடுகளில் ஒன்றாக பால் பண்ணைகளுக்கு எதிராகப் போராடுவதாக அமைகிறது. பால் உற்பத்தியைப் பெருக்குவதற்காக செயற்கை ஹார்மோன், செயற்கைக் கருத்தரிப்பு ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடுவதை, அது கடுமையாக எதிர்க்கிறது. ஆனால், பீட்டாவின் இந்தியப் பிரிவு, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படும் பண்பாட்டு நிகழ்வான ஏறு தழுவுதலுக்கு எதிராகக் காட்டும் தீவிரத்தை, தொழில்மயப்பட்ட பால் பண்ணைகளுக்கு எதிராகக் காட்டுவது இல்லை. காரணம், இந்துத்துவாவுக்கு பால் என்பது கோமாதாவின் பரிசு.

வெளிநாட்டு பீட்டா அமைப்பினர் ‘பசும்பால் குடித்தால் புற்றுநோய் வரும். எனவே, பால் உற்பத்தியைத் தடை செய்ய வேண்டும்’ எனப் போராடுகின்றனர். ஏக உணவுக்கொள்கையைத் தீர்மானிக்கத் துடிக்கும் இந்திய பீட்டா அமைப்பினர், அதை ஏன் இங்கு தீவிரமாகச் செய்வது இல்லை? உண்மையிலேயே இவர்களுக்குத் துணிவு இருந்தால், பாலில் இருந்து நெய் எடுத்து, ஆண்டுக்கு 400 கோடி ரூபாய் ‘சுதேசி நெய்’ விற்பனைசெய்யும் இந்துத்துவா குரு பாபா ராம்தேவிடம் வீரத்தைக் காட்ட வேண்டும். பால் மாவு, வெண்ணெய் எனத் தன் பால் வணிகத்தை விரிவாக்க, மேலும் நான்கு பண்ணைகள் அமைக்கப்போவதாக அண்மையில் அவர் அறிவித்திருக்கிறார். ஆனால், இவற்றை எல்லாம் விட்டுவிட்டு ஏறு தழுவுதல் காளைகளின் மேல் மட்டும் பீட்டா இவ்வளவு வீரத்தைக் காட்ட என்ன காரணம்?  

விடை மிக எளிது. இது இந்துத்துவா பீட்டா. தொடக்கத்தில் இருந்தே ஏக இந்தியப் பண்பாட்டுக்கு எதிராக, எதிர்ப்பைத் தெரிவித்து வரும் மாநிலம் தமிழ்நாடு. வட கிழக்கு மாநிலங்களே இந்துத்துவ ஆட்சியை ஏற்றுக்கொண்டுவிட்ட நிலையில், அதை இன்னமும் தன் `கறுப்பு நிலத்தில்’ கால் பதிய அனுமதிக்காத நிலம் தமிழ் நிலம். இதன் திமிரை முறித்துப்போடும் முயற்சிகளில் ஒன்றே ஏறு தழுவுதலுக்கான தடை.
இது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எனலாம். உச்ச நீதிமன்றத்தின் எத்தனை தீர்ப்புகளை மத்திய அரசு மதித்திருக்கிறது?

கார்ப்பரேட் கூட்டணி! P60a

ஏறு தழுவுதலுக்குத் தடையாக இருக்கும் 2011-ம் ஆண்டுக் காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்க, புதிய அறிவிக்கை ஒன்றை வெளியிட்டால் போதும். இவ்வாறு நீக்குவதற்குச் சட்டத் திருத்தம் எதுவும் தேவை இல்லை. ஒரு சட்டத்தை மாற்றி அமைக்கத்தான் சட்டத் திருத்தம் தேவை. திருத்தி அமைக்க அல்ல எனச் சட்ட வல்லுநர்கள் கூறும்போது, மோடி அரசு இதைச் செய்யத் தயங்குவதற்கு, `தமிழ் பண்பாட்டுக்கு எதிரான இந்துத்துவ வல்லாதிக்க முயற்சி’ என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்? பீட்டாவை இந்தியாவுக்குள் நுழைய அனுமதித்ததே, முந்தைய பா.ஜ.க அரசுதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பீட்டாவில் உள்ள இந்துத்துவச் சிந்தனையாளர்களுக்கு தமிழர்கள் என்றும் கீழானவர்களே. அதனால்தான் பாலியலோடு இந்தப் போராட்டத்தை இழிவுபடுத்திப் பேச அவர்களால் முடிகிறது. ஆனால், போராட்டக் களத்தில் இருக்கும் இளைஞர்கள் இந்துத்துவா – கார்ப்பரேட் கூட்டணியைத் தெளிவாகப் புரிந்துகொண்டு, அவற்றுக்கு எதிராகக் குரல் எழுப்பிவருவது பாராட்டுக்கு உரியது. இந்தக் குரலின் வலிமை, இத்தனை நாட்கள் கழித்து தமிழர் பண்பாட்டைத்தான் மதிப்பதாகக் கூறும் அளவுக்கு மோடியை இறங்கவைத்துள்ளது.

இது ஏறு தழுவுதல் தடைக்கு எதிரான போராட்டம் மட்டுமே அல்ல. உண்மையில் ஏறு தழுவுதலுக்குத் தடை விதித்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போது ஒரு சில மாவட்டங்களில் இருந்து மட்டுமே எழுந்த எதிர்ப்புக் குரல், இன்று தமிழகத்தையும் தாண்டி உலகம் எங்கும் உள்ள தமிழர்கள் அனைவரிடம் இருந்தும் எழக் காரணம் இருக்கிறது. இந்தப் போராட்டத்தை நிகழ்த்தும் இளைஞர்கள் உலகமயமாக்கல் காலத்து இளைஞர்கள். தம்முடைய தற்சார்பை அழித்த சந்தைப் பொருளாதாரத்தின் பாதிப்பை முழுவதும் அனுபவித்துவருபவர்கள். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கார்ப்பரேட்டும் மதவாதமும் கைகோத்து தமிழகத்தின் இயற்கை, பண்பாடு, மொழி, கல்வி உரிமை, பொருளாதாரம் போன்றவற்றின் மீது நடத்திவரும் வல்லாதிக்கத்தை அறிந்த இளைஞர்கள்.  

மொழியை சமற்கிருதத்துக்கும், பண்பாட்டை இந்துத்துவாவுக்கும், நிலத்தை கார்ப் பரேட்களுக்கும் காவுகொடுக்க முயற்சித்த, மதம் + கார்ப்பரேட் கூட்டணிக்கு இந்தப் போராட்டம் அதிர்ச்சியைத் தந்திருக்கிறது. இதோடு சாதியத்துக்கு எதிரான அரசியலையும் வலுப்பெறச் செய்தால்தான், இது தொடர் வெற்றியாக அமையும் என்பதை இளைஞர்கள் கருத்தில்கொள்ள வேண்டும். இது தொடக்கம்தான். பங்குச்சந்தைக் காளையின் சீற்றத்தைவிட நம் ஏறு தழுவும் காளைகள் இன்னும் வேகமாகச்  சீறட்டும். வாழ்த்துகள் இளைஞர்களே!

விகடன்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 01, 2017 11:45 pm

நல்ல பகிர்வு பாலாஜி.............அதிர்ச்சி பதிவு ! அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக