புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துதிபாடும் மன்றமான சட்டப்பேரவை: ஸ்டாலின் விமர்சனம் Poll_c10துதிபாடும் மன்றமான சட்டப்பேரவை: ஸ்டாலின் விமர்சனம் Poll_m10துதிபாடும் மன்றமான சட்டப்பேரவை: ஸ்டாலின் விமர்சனம் Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
துதிபாடும் மன்றமான சட்டப்பேரவை: ஸ்டாலின் விமர்சனம் Poll_c10துதிபாடும் மன்றமான சட்டப்பேரவை: ஸ்டாலின் விமர்சனம் Poll_m10துதிபாடும் மன்றமான சட்டப்பேரவை: ஸ்டாலின் விமர்சனம் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துதிபாடும் மன்றமான சட்டப்பேரவை: ஸ்டாலின் விமர்சனம் Poll_c10துதிபாடும் மன்றமான சட்டப்பேரவை: ஸ்டாலின் விமர்சனம் Poll_m10துதிபாடும் மன்றமான சட்டப்பேரவை: ஸ்டாலின் விமர்சனம் Poll_c10 
181 Posts - 77%
heezulia
துதிபாடும் மன்றமான சட்டப்பேரவை: ஸ்டாலின் விமர்சனம் Poll_c10துதிபாடும் மன்றமான சட்டப்பேரவை: ஸ்டாலின் விமர்சனம் Poll_m10துதிபாடும் மன்றமான சட்டப்பேரவை: ஸ்டாலின் விமர்சனம் Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
துதிபாடும் மன்றமான சட்டப்பேரவை: ஸ்டாலின் விமர்சனம் Poll_c10துதிபாடும் மன்றமான சட்டப்பேரவை: ஸ்டாலின் விமர்சனம் Poll_m10துதிபாடும் மன்றமான சட்டப்பேரவை: ஸ்டாலின் விமர்சனம் Poll_c10 
10 Posts - 4%
prajai
துதிபாடும் மன்றமான சட்டப்பேரவை: ஸ்டாலின் விமர்சனம் Poll_c10துதிபாடும் மன்றமான சட்டப்பேரவை: ஸ்டாலின் விமர்சனம் Poll_m10துதிபாடும் மன்றமான சட்டப்பேரவை: ஸ்டாலின் விமர்சனம் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
துதிபாடும் மன்றமான சட்டப்பேரவை: ஸ்டாலின் விமர்சனம் Poll_c10துதிபாடும் மன்றமான சட்டப்பேரவை: ஸ்டாலின் விமர்சனம் Poll_m10துதிபாடும் மன்றமான சட்டப்பேரவை: ஸ்டாலின் விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
துதிபாடும் மன்றமான சட்டப்பேரவை: ஸ்டாலின் விமர்சனம் Poll_c10துதிபாடும் மன்றமான சட்டப்பேரவை: ஸ்டாலின் விமர்சனம் Poll_m10துதிபாடும் மன்றமான சட்டப்பேரவை: ஸ்டாலின் விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
துதிபாடும் மன்றமான சட்டப்பேரவை: ஸ்டாலின் விமர்சனம் Poll_c10துதிபாடும் மன்றமான சட்டப்பேரவை: ஸ்டாலின் விமர்சனம் Poll_m10துதிபாடும் மன்றமான சட்டப்பேரவை: ஸ்டாலின் விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
துதிபாடும் மன்றமான சட்டப்பேரவை: ஸ்டாலின் விமர்சனம் Poll_c10துதிபாடும் மன்றமான சட்டப்பேரவை: ஸ்டாலின் விமர்சனம் Poll_m10துதிபாடும் மன்றமான சட்டப்பேரவை: ஸ்டாலின் விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
nahoor
துதிபாடும் மன்றமான சட்டப்பேரவை: ஸ்டாலின் விமர்சனம் Poll_c10துதிபாடும் மன்றமான சட்டப்பேரவை: ஸ்டாலின் விமர்சனம் Poll_m10துதிபாடும் மன்றமான சட்டப்பேரவை: ஸ்டாலின் விமர்சனம் Poll_c10 
1 Post - 0%
Tamilmozhi09
துதிபாடும் மன்றமான சட்டப்பேரவை: ஸ்டாலின் விமர்சனம் Poll_c10துதிபாடும் மன்றமான சட்டப்பேரவை: ஸ்டாலின் விமர்சனம் Poll_m10துதிபாடும் மன்றமான சட்டப்பேரவை: ஸ்டாலின் விமர்சனம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துதிபாடும் மன்றமான சட்டப்பேரவை: ஸ்டாலின் விமர்சனம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 03, 2017 3:48 pm

துதிபாடும் மன்றமான சட்டப்பேரவை: ஸ்டாலின் விமர்சனம்
-
ஆளுங்கட்சியின் அமைச்சர்கள், வரலாற்றுப் பெருமைமிக்க
தமிழக சட்டப்பேரவையை துதிபாடும் மன்றமாக மாற்றி,
இந்தக் கூட்டத் தொடரை நிறைவு செய்துள்ளனர் என தமிழக
எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல்தலைவருமான
மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

அதேவேளையில், திமுக எப்போதும் ஜனநாயக மரபுகளை
மதித்து சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படும் என அவர்
கூறியிருக்கிறார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து விமர்சித்து
திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.
அதில், அவர் இவ்வாறெல்லாம் குறிப்பிட்டிருக்கிறார்.

கடிதம் விவரம்:
-
"23-01-2017 அன்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டமன்றக்
கூட்டத் தொடரில் பொறுப்புள்ள ஜனநாயக ரீதியிலான எதிர்க்
கட்சியாக திமுக தனது செயல்பாடுகளை முன்வைத்தது.

ஜல்லிக்கட்டு அனுமதிக்கான தமிழக அரசின் சட்டம், நீட்
தேர்விலிருந்து விலக்களிக்க வகை செய்யும் மசோதா எனத் தமிழக
நலன்களையும் உரிமைகளையும் பாதுகாப்பதற்காக ஆட்சியாளர்கள்
எடுத்த முயற்சிகள் முழுமையானதா உளப்பூர்வமானதா என்பதைக்
கடந்து, மாநிலத்தின் நலன் கருதி தி.மு.கழகம் அவற்றை முழுமனதாக
ஆதரித்து, இந்த இயக்கம் எப்போதும் தமிழர்களின் பக்கம் இருந்து
பாதுகாக்கும் என்பதை உணர்த்தும்.
-
அதேநேரத்தில், ஆளுங்கட்சியின் குறைபாடுகளை, நிறைவேற்றாத
வாக்குறுதிகளை, மக்கள் விரோத, ஜனநாயகத்திற்கு எதிரான
நடவடிக்கைகளை எடுத்துக்கூறவும் தயங்கவில்லை.

ஆனால், அதற்கு சட்டப்பேரவைத் தலைவர் முழுமையான வாய்ப்புகளை
வழங்காமல், ஆளுங்கட்சியினரின் துதிபாடும் பேச்சுகளுக்கே அதிக
நேரத்தை ஒதுக்கித் தந்தார். அதிலும் ஆளுங்கட்சியினருக்கு வழங்கப்படும்
உரிமைகள் எதிர்க்கட்சியினருக்கு மறுக்கப்பட்டன.

முன்பு ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அவரும் அவரது
அமைச்சரவையினரும் ஆளுங்கட்சி உறுப்பினர்களும் தமிழகத்தை
அதிக காலம் ஆட்சி செய்த முதல்வரான கருணாநிதியின் பெயர்
சொல்லி பல முறை பேசியிருக்கிறார்.

முன்னாள் முதல்வர்கள் பலர் இருப்பதால் இப்படிப் பெயர் சொல்லிக்
குறிப்பிடலாம் என சபாநாயகரும் அதற்கு அனுமதியளித்தார்.

இப்போது அதே வழியில், முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவின்
பெயரை நமது கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டபோது,
அதற்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

முன்னர் கடைப்பிடித்த நடைமுறைகளை நாம் சுட்டிக்காட்டிய போதும்
பேரவைத் தலைவர் சமாதானமடையவில்லை. நாளுக்கொரு விதி
ஆளுக்கொரு விதி முன்னாள் முதல்வர் கொடுத்த வாக்குறுதிகள்,
அறிவித்த திட்டங்கள், நடத்திய உலக முதலீட்டாளர் மாநாடு
உள்ளிட்டவை எந்தளவில் செயல்பாட்டில் உள்ளன என்பதையும்
மக்களுக்கு என்ன பலன் கிடைத்தது என்பதையும் தான் கழகத்தினர்
கேள்விகளாக எழுப்பினர்.

இந்தக் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்க முடியாத ஆளுங்கட்சியின்
அமைச்சர்கள், வரலாற்றுப் பெருமைமிக்க தமிழக சட்டமன்றத்தை
துதிபாடும் மன்றமாக மாற்றி, இந்தக் கூட்டத் தொடரை நிறைவு
செய்துள்ளனர்.

வர்தா புயலால் சென்னை மாநகரம் கடும் பாதிப்புக்குள்ளான நிலையில்,
அப்போது வீழ்ந்த மரங்களின் கழிவுகளை மாநகராட்சியின் பூங்காக்கள்-
விளையாட்டு திடல்கள் ஆகியவற்றில் கொட்டி வைத்திருப்பதை எப்போது
அகற்றி, மக்களுக்கும் இளைஞர்களுக்கும் அந்த இடங்கள் பயன்படும்படி
செய்யப் போகிறீர்கள் என்ற கேள்வியை எதிர்க்கட்சித் தலைவர் என்ற
முறையில் சட்டமன்றத்தில் எழுப்பினேன்.

அதற்கு யார் பதிலளிப்பது, என்ன பதிலளிப்பது எனப் புரியாமல்
கல்வி அமைச்சரும் உள்ளாட்சித் துறை அமைச்சரும் திண்டாடிய
செய்தியை ஊடகங்கள் வாயிலாக உங்களில் பலரும் அறிந்திருக்கக்
கூடும்.

மக்களுக்கானத் திட்டங்கள் குறித்த ஆக்கப்பூர்வமான விவாதங்கள்
நடக்க வேண்டிய சட்டப்பேரவையை, அவையில் இல்லாதவர்களைப்
பற்றிப் புகழ்பாடும் மன்றமாக மாற்றிய விதிமீறல்களே நடந்து முடிந்த
கூட்டத் தொடரின் ‘பெருமை’களாக இருந்தன.

சின்னம்மா..சின்னம்மா என்கிற வார்த்தைகள் தான் ஆளுங்கட்சித்
தரப்பில் அதிகளவில் உச்சரிக்கப்பட்டன. மக்களின் அங்கீகாரம்
பெறாத-மக்களின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்படாத -
மக்களின் மன்றமான சட்டப்பேரவையில் இல்லாத ஒருவரைப் பற்றிப்
பேசலாமா என அவையின் மரபுகளையும் விதிகளையும் சுட்டிக்காட்டி
பேரவைத் தலைவரிடம் கழகத்தினர் கேள்வி எழுப்பிய போது,

"ஆளுங்கட்சியினர் தங்கள் கட்சியின் தலைமையைப் புகழ்ந்து
பேசுகிறார்கள். நீங்களும் வேண்டுமானால் உங்கள் தலைமையைப்
புகழ்ந்து கொள்ளுங்கள்" என்று புதிய 'துதிச் சலுகை' அறிவிப்பு
செய்கிறார் பேரவைத் தலைவர்.

நமது உயிருக்கு நிகரானத் தலைவரை எப்போதும் நம் நெஞ்சில் வைத்து
போற்றுகிறோம். பாராட்டுகிறோம். அந்தப் பாராட்டுகள், மக்கள் நலன்
பற்றிப் பேசக்கூடிய அவையின் நடவடிக்கைகளைத் திசை மாற்றுவதாக
இருக்கக் கூடாது.

அதனை, தோல்வியே காணாமல் 13 முறை சட்டமன்றத்திற்குத்
தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனையாளரான கருணாநிதியும் விரும்ப
மாட்டார்கள். அவருடைய வழிகாட்டுதலிலே உருவான நாம் ஒருபோதும்
இத்தகைய செயல்களில் ஈடுபட ஆர்வம் காட்ட மாட்டோம்.
அவருடைய சாதனைகளைப் பாராட்டிப் பேசியிருப்போமே தவிர, மக்கள்
பிரச்சினைகளைப் பேச வேண்டிய நேரத்தில் ஆலாபனை செய்து
கொண்டிருக்க மாட்டோம். இதை நான் பேரவையிலே சுட்டிக்காட்டிய
போதும் பயனில்லாமல் போய்விட்டது.

இன்னும் சொல்லப் போனால் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும்
தலைவர் கருணாநிதியையோ, என்னையோ புகழ வேண்டாம் என்று
கேட்டுக் கொண்டேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். அப்படி மீறி பேசிய
ஒரு சில கழக சட்டமன்ற உறுப்பினர்களேயே "நேரடியாக கேள்வியை
கேளுங்கள்" என்று நான் கடிந்து கொண்டதும் பத்திரிக்கைகளில்
செய்திகளாக வந்தது. அதையும் நீங்கள் படித்திருப்பீர்கள்.

தி.மு.க. இப்படித்தான் இந்த கூட்டத்தொடரில் மட்டுமல்ல எந்த கூட்டத்
தொடரிலும் சட்டமன்ற ஜனநாயகத்தை போற்றிப் பாதுகாத்து
வந்திருக்கிறது. கருணாநிதியின் வழிகாட்டுதலில் இனிமேலும் திமுக
ஆக்கப்பூர்வமாக ஜனநாயக மரபுகளைப் பின்பற்றிச் செயல்படும்"
இவ்வாறு ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்.
--
----------------தி இந்து

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக