புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எவ்வாறு சமாளித்திருப்பார் ? Poll_c10எவ்வாறு சமாளித்திருப்பார் ? Poll_m10எவ்வாறு சமாளித்திருப்பார் ? Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
எவ்வாறு சமாளித்திருப்பார் ? Poll_c10எவ்வாறு சமாளித்திருப்பார் ? Poll_m10எவ்வாறு சமாளித்திருப்பார் ? Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
எவ்வாறு சமாளித்திருப்பார் ? Poll_c10எவ்வாறு சமாளித்திருப்பார் ? Poll_m10எவ்வாறு சமாளித்திருப்பார் ? Poll_c10 
3 Posts - 6%
Baarushree
எவ்வாறு சமாளித்திருப்பார் ? Poll_c10எவ்வாறு சமாளித்திருப்பார் ? Poll_m10எவ்வாறு சமாளித்திருப்பார் ? Poll_c10 
2 Posts - 4%
prajai
எவ்வாறு சமாளித்திருப்பார் ? Poll_c10எவ்வாறு சமாளித்திருப்பார் ? Poll_m10எவ்வாறு சமாளித்திருப்பார் ? Poll_c10 
2 Posts - 4%
Rutu
எவ்வாறு சமாளித்திருப்பார் ? Poll_c10எவ்வாறு சமாளித்திருப்பார் ? Poll_m10எவ்வாறு சமாளித்திருப்பார் ? Poll_c10 
1 Post - 2%
சிவா
எவ்வாறு சமாளித்திருப்பார் ? Poll_c10எவ்வாறு சமாளித்திருப்பார் ? Poll_m10எவ்வாறு சமாளித்திருப்பார் ? Poll_c10 
1 Post - 2%
viyasan
எவ்வாறு சமாளித்திருப்பார் ? Poll_c10எவ்வாறு சமாளித்திருப்பார் ? Poll_m10எவ்வாறு சமாளித்திருப்பார் ? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எவ்வாறு சமாளித்திருப்பார் ? Poll_c10எவ்வாறு சமாளித்திருப்பார் ? Poll_m10எவ்வாறு சமாளித்திருப்பார் ? Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
எவ்வாறு சமாளித்திருப்பார் ? Poll_c10எவ்வாறு சமாளித்திருப்பார் ? Poll_m10எவ்வாறு சமாளித்திருப்பார் ? Poll_c10 
2 Posts - 15%
Rutu
எவ்வாறு சமாளித்திருப்பார் ? Poll_c10எவ்வாறு சமாளித்திருப்பார் ? Poll_m10எவ்வாறு சமாளித்திருப்பார் ? Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எவ்வாறு சமாளித்திருப்பார் ?


   
   

Page 1 of 2 1, 2  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jan 24, 2017 11:21 am

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் உயிரோடு இருந்திருந்தால் , நடந்துமுடிந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை எவ்வாறு எதிர்கொண்டிருப்பார் ?

ஜல்லிக்கட்டுக்கான அவசரச்சட்டம் நிறைவேறி இருக்குமா ?

போராட்டத்தின் இறுதியில் நடந்த வன்முறை நிகழ்வுகளை நடக்கவிட்டிருப்பாரா ?


ஈகரை அன்பர்கள் ஆரோக்கியமாக அலசவும் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 24, 2017 1:10 pm

ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஆரம்பித்திலேயே
தடுத்திருப்பார்-
-
போராட்டம் நடக்க விட்டிருக்க மாட்டார்
-
அவருக்கு இந்தி சரளமா பேச வரும், அதனால் மத்தியில்
மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து, நிலைமையே
எடுத்துரைத்து ஆவன செய்திருப்பார்....
-
மாணவர்கள் போராட்டத்தால்தான், அவசர சட்டம்
அமுலுக்கு வந்தது என்ற மாயை ஏற்பட்டிருக்காது...!!
-
நிர்வாகத் திறமை மிக்கவர்...
கட்சியினர் மீது பிறர் சொல்லும் அவதூறுகளை சட்டென
நம்பி விடும் போக்கு ஒன்றுதான் குறையானது
-



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 24, 2017 2:32 pm

நல்ல தலைப்பு .

திண்ணைப் பேச்சு பகுதிக்கு மாற்றப்படுகிறது .அங்கே தொடரலாம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jan 24, 2017 10:24 pm

போராட்டம் நடக்க விட்டிருக்க மாட்டார்

மாணவர்கள் போராட்டத்தால்தான், அவசர சட்டம்
அமுலுக்கு வந்தது என்ற மாயை ஏற்பட்டிருக்காது...!!
- இது தான் நடந்திருக்கும்.

மத்தியில்
மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து, நிலைமையே
எடுத்துரைத்து ஆவன செய்திருப்பார்....
- இது நடந்திருக்காது.



எவ்வாறு சமாளித்திருப்பார் ? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎவ்வாறு சமாளித்திருப்பார் ? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எவ்வாறு சமாளித்திருப்பார் ? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 24, 2017 11:14 pm

M.Jagadeesan wrote:முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் உயிரோடு இருந்திருந்தால் , நடந்துமுடிந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை எவ்வாறு எதிர்கொண்டிருப்பார் ?

ஜல்லிக்கட்டுக்கான அவசரச்சட்டம் நிறைவேறி இருக்குமா ?

போராட்டத்தின் இறுதியில் நடந்த வன்முறை நிகழ்வுகளை நடக்கவிட்டிருப்பாரா ?

ஈகரை அன்பர்கள் ஆரோக்கியமாக அலசவும் !

இரண்டு முயன்று நாட்களாக நானும் கிருஷ்ணா அப்பாவும் இதைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம் ஐயா, இன்று பார்க்கிறேன், நீங்கள் இங்கு பதிவு போட்டுள்ளீயிர்கள் .....நானும் ஆவலாக இருக்கிறேன் நம் உறவுகளின் கருத்துகளை அறிய புன்னகை .............. ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 24, 2017 11:15 pm

ayyasamy ram wrote:ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஆரம்பித்திலேயே
தடுத்திருப்பார்-
-
போராட்டம் நடக்க விட்டிருக்க மாட்டார்
-
அவருக்கு இந்தி சரளமா பேச வரும், அதனால் மத்தியில்
மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து, நிலைமையே
எடுத்துரைத்து ஆவன செய்திருப்பார்....
-
மாணவர்கள் போராட்டத்தால்தான், அவசர சட்டம்
அமுலுக்கு வந்தது என்ற மாயை ஏற்பட்டிருக்காது...!!
-
நிர்வாகத் திறமை மிக்கவர்...
கட்சியினர் மீது பிறர் சொல்லும் அவதூறுகளை சட்டென
நம்பி விடும் போக்கு ஒன்றுதான் குறையானது.-


சரியாக சொன்னிர்கள்  ராம் அண்ணா........... எவ்வாறு சமாளித்திருப்பார் ? 3838410834 எவ்வாறு சமாளித்திருப்பார் ? 3838410834 எவ்வாறு சமாளித்திருப்பார் ? 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி வி . பொ .பா அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 25, 2017 6:59 pm

2016 இல் அலங்காநல்லூர் போட்டி நடந்த மாதிரி நினைவு.
அனுமதி கிடைத்ததா அல்லது நடத்தப்பட்டு , நடக்கவே இல்லை என 
போலீஸ் தகவல் தந்ததாக நினைவு.


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 25, 2017 8:33 pm

ஜெயலலிதா அவர்களின் வேண்டுதலுக்கு இணங்க சில கண்டிஷன்களுடன் ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதி மன்றம் அனுமதி கொடுத்தது .ஜல்லிக்கட்டு போன ஆண்டு நடந்தது.
அதை முன்னுதாரணமாக காட்டி இந்த ஆண்டும் வாங்கி இருப்பார் உயிருடன் இருந்திருந்தால். 
அவருடைய சாமர்த்தியம் எவருக்கும் இல்லை .வரவும் வராது .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jan 26, 2017 10:41 am

T.N.Balasubramanian wrote:ஜெயலலிதா அவர்களின் வேண்டுதலுக்கு இணங்க சில கண்டிஷன்களுடன் ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதி மன்றம் அனுமதி கொடுத்தது .ஜல்லிக்கட்டு போன ஆண்டு நடந்தது.
அதை முன்னுதாரணமாக காட்டி இந்த ஆண்டும் வாங்கி இருப்பார் உயிருடன் இருந்திருந்தால். 
அவருடைய சாமர்த்தியம் எவருக்கும் இல்லை .வரவும் வராது .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1232328

ஜல்லிக்கட்டு சென்ற ஆண்டு நடக்கவில்லை .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jan 26, 2017 5:37 pm

16-01-2017 அன்று மாணவர்கள்போராட்டம் ஆரம்பித்தது .மாணவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மெரீனாவில் கூட ஆரம்பித்தனர் .26-01-2017  அன்று குடியரசு தினம் கொண்டாட உள்ள நிலையில் , அதுவும் மெரீனா கடற்கரையில் நடக்கவுள்ள நிலையில் , இவ்வளவு பெரிய கூட்டத்தை சேர அனுமதிப்பது தவறு என்ற உண்மை இன்றைய அரசுக்குத் தெரியாமல் போனது விந்தையே ! ஜெயலலிதா இருந்திருந்தால் இந்தக் கூட்டம் கூடாமல் முளையிலேயே கிள்ளி எறிந்திருப்பார் .

" இளைதாக முள்மரம் கொல்க " என்பது ஐயனின் வாக்கு .

அதாவது முள்செடியை துளிர்விடும்போதே கிள்ளி எறிந்துவிடவேண்டும் ; வளரவிட்டால் ஆபத்து . அந்த ஆபத்துதான்  போராட்டத்தின் இறுதியில் நடந்தது .மாணவர்கள் போராட்டத்தில் சமூக விரோதிகள் சிலர் கலந்துகொண்டு வன்முறை நிகழ்த்தினர் .

அடுத்து ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் ஜல்லிக்கட்டு அவசரச்சட்டம் நிறைவேறியிருக்குமா என்பது கேள்வி .

நிச்சயமாக அவசரச்சட்டம் வந்திருக்காது .

போராட்டம் தீவிரம் அடைந்த உடன் , முதல்வர் பன்னீர்செல்வம் ,பிரதமர் மோடியை சந்திக்க முடிவுசெய்கிறார் . பிரதமர் மோடி அவர்கள் , வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் இருப்பதால் , மத்திய அரசால் அவசரச் சட்டம் கொண்டுவர இயலாது என்று தெரிவிக்கிறார் . அதே சமயத்தில் தமிழக அரசு அவசரச்சட்டம் கொண்டுவந்தால் , மத்தியஅரசு அதை ஆதரிக்கும் என்று கூறுகிறார் . ஒருநாள் தங்கியிருந்து அவசரச்சட்டத்திற்கு ஒப்புதல் பெற்றுச் செல்லும்படி கூறுகிறார் . OPS அவர்களும் உடன்படுகிறார் . வேலைகள் எல்லாம் மின்னல் வேகத்தில் நடைபெறுகின்றன .
.
தமிழக அரசால் இயற்றப்பட்ட இந்த அவசரச் சட்டம்  மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகம், அதை  சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தது. தொடர்ந்து சுற்றுச்சூழல், கலாசாரத்துறை அமைச்சகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த அமைச்சர்களும் உடனடியாக தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்து உள்துறை அமைச்சகத்துக்கு திருப்பி அனுப்பி வைத்துவிட்டனர்.

இதற்காக அந்த மத்திய அமைச்சர்களை தலைநகரிலேயே தங்கியிருக்குமாறு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது. அதனாலேயே உள்துறை, கலாசாரம், சட்டம், சுற்றுச்சூழல் ஆகிய துறைகளின் அனுமதி விரைவாக கிடைத்துள்ளது. இவை அனைத்தும் ஒரே நாளிலேயே நடந்து முடிந்துவிட்டன.

இதைத் தொடர்ந்து உள்துறை அமைச்சகம் சார்பில் சில நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. அதன்பின், அவசரச் சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே, குடியரசுத் தலைவருக்கு பதிலாக மத்திய உள்துறை அமைச்சகமே அவசரச் சட்டம் குறித்து முடிவு எடுக்கலாம் எனத் தெரிய வந்தது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அவசரச் சட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுத்து சென்னை தலைமையகத்துக்கு அனுப்பி வைத்தார். பின்னர் அவசரச்சட்டம் சட்டசபையின் ஒப்புதல் பெற்று ஆளுநரின் கையெழுத்திட்டு சட்டமாக்கப்பட்டது .

ஜெயலலிதா இருந்தால் என்ன செய்திருப்பார் ?

நிச்சயமாக பிரதமர் மோடியை சந்தித்திருக்கமாட்டார் . 2015 ஆம் ஆண்டு டிசம்பர் பெருவெள்ளத்தின்போது , மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறாத ஒரு முதல்வர் , ஜல்லிக்கட்டுக்காக பிரதமர் மோடியை சந்தித்து இருப்பார் என்றுஎண்ணுவது பேதைமை .
மிஞ்சி மிஞ்சிப் போனால் , நாடாளுமன்ற MP -க்களை விட்டு மோடியை சந்திக்கச் சொல்லியிருப்பார் .வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் என்னால் எதுவும் செய்ய இயலாது என்று மோடியும் கையை விரித்திருப்பார் . அத்தோடு பிரச்சினையை முடித்திருப்பார் . மேற்கொண்டு எந்த ஆலோசனையும் வழங்கியிருக்கமாட்டார் .

OPS அவர்களுக்குக் கிடைத்த வெற்றி அவர் பிரச்சினையை நேரடியாக அணுகியதுதான் .
ஆந்திர முதல்வரை நேரடியாக சந்தித்து கிருஷ்ணாநதி நீரைப் பெறுவதற்கு வழிவகை செய்தார் . ஆனால் ஜெயலலிதா அவர்கள் எதிலும் கௌரவம் பார்க்கக் கூடியவர் . சந்திரபாபு நாயுடுவைப் பார்த்துப் பேச அவருடைய EGO இடம் கொடுக்காது .

" காரியம் பெரிதா ? வீரியம் பெரிதா ? என்றால் காரியமே பெரிது என்று நினைப்பவர் OPS .
வார்தா புயலின்போது தான் ஒரு முதல்வர் என்பதையும் மறந்து , வரிந்துகட்டிக்கொண்டு வேலைசெய்தார் .

ஆனால் ஜெயலலிதா எதிலும் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பவர் . அது எப்போதும் சரிவராது .பணிந்துபோக வேண்டிய இடத்தில் பணிந்துதான் போகவேண்டும் . துணிந்து நிற்கவேண்டிய இடத்தில் துணிந்து நிற்கவேண்டும் .

" அஞ்சுவது  அஞ்சாமை பேதைமை " என்பது ஐயனின் வாக்கு .

ஆகவே ஜெயலலிதா இருந்திருந்தால் சென்ற ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடக்காமல் போயிருக்கும் .

ஜெயலலிதாவுக்கு இந்திமொழி சரளமாகப் பேச வரும் . எனவே அவர் மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து ஆவன செய்திருப்பார் என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது .

அப்படியென்றால் இந்திமொழி தெரியாத முதல்வர்களுக்கு மத்திய அரசு செவிசாய்க்காதா ?
ஆங்கிலம் பேசத் தெரிந்தாலே போதுமானது . காரியங்கள் சாதிப்பதற்கு மொழி ஒரு தடையல்ல . முயற்சி இருந்தாலே போதுமானது . அதைத்தான் OPS செய்திருக்கார் .

வாராதுபோல் வந்த மாமணியாக , காட்சிக்கு  எளியனாக OPS அவர்கள் இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையல்ல !

அவரிடம் குணங்கள் இருப்பதுபோலவே , சில குற்றங்களும் இருக்கலாம் . ஆனால்

" மிகைநாடி மிக்க கொளல் " என்ற வள்ளுவனின் கருத்துக்கு ஏற்ப அவரிடம் மிகுதியாக இருக்கின்ற நல்ல பண்புகளையே நாம் கருத்தில் கொள்ளவேண்டும் .

பொதுமக்களை அலங்கா நல்லூரில் நேரில் சந்தித்துப் பேசுகிறார்; மேடையில் அனைவருடனும் அமர்கின்றார் ; எதிர்கடசி தலைவர் இசுடாலினுடன் சந்தித்துப் பேசுகிறார் . குடியரசு தினக் கொண்டாட்டங்களில் இசுடாலினும் , தி .மு .க . வினரும் கலந்து கொள்கின்றனர் .  இதெல்லாம் ஜெயலலிதா ஆடசியில் கனவிலும் நடக்காத காரியங்கள் .

மொத்தத்தில் இவரை ஆளவிட்டால் , ஒரு பொற்கால ஆடசிக்கு வித்திடுவார் என்று நம்பலாம் .


இறுதியாக போராட்டத்தின் கடைசியில் நடந்த வன்முறைக்கு வருவோம் . அதில் ஒன்றை நிச்சயமாகச் சொல்லலாம் . அது மாணவர்கள் நடத்திய வன்முறை அல்ல . OPS அவர்களுக்குக் கெட்டபெயரை உருவாக்கவேண்டும் என்பதற்காக சில சமூக விரோதிகள் செய்த செயல் அது . அதற்குக் காவல்துறையும் துணைபோனதுதான் கொடூரம் . அது கடசிக்குள் நடந்த உள்குத்தா அல்லது வெளிக்குத்தா என்பது இனிமேல் தெரிய வரலாம் அல்லது தெரியாமலே கூடப் போகலாம் . எப்படி இருந்தாலும் இனி OPS அவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய காலம் இது .

ஜெயலலிதா அவர்கள் இருந்திருந்தால் இந்த வன்முறைக்குத் தேவையே இல்லாமல் போயிருக்கும் ; ஏனெனில் வன்முறையாளர்களின் நோக்கமே OPS அவர்களுக்குக் கெட்ட பெயரை உண்டாக்கவேண்டும் என்பதுதான் .    

" கேட்டினும் உண்டோர் உறுதி " என்பதுபோல இந்தத் தீமையிலும் ஒரு நன்மை விளைந்திருக்கிறது . தன் எதிரிகள் யார் என்பதை OPS அவர்கள் தெரிந்துகொண்டு விட்டார் .

இதுவரையில் மக்களால் வாழ்ந்த ஒரு முதல்வரின் சகாப்தம் முடிந்துவிட்டது ; இனிமேல் மக்களுக்காக வாழப்போகும் ஒரு முதல்வரின் சகாப்தம் தொடங்கிவிட்டது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக