புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேடுவனாய் வந்த வேதநாயகன் Poll_c10வேடுவனாய் வந்த வேதநாயகன் Poll_m10வேடுவனாய் வந்த வேதநாயகன் Poll_c10 
6 Posts - 60%
heezulia
வேடுவனாய் வந்த வேதநாயகன் Poll_c10வேடுவனாய் வந்த வேதநாயகன் Poll_m10வேடுவனாய் வந்த வேதநாயகன் Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
வேடுவனாய் வந்த வேதநாயகன் Poll_c10வேடுவனாய் வந்த வேதநாயகன் Poll_m10வேடுவனாய் வந்த வேதநாயகன் Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வேடுவனாய் வந்த வேதநாயகன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 13, 2017 6:23 am

வேடுவனாய் வந்த வேதநாயகன் KMm4fO6xSFO7R7agtS6m+E_1482309600
-
பகவத் ராமானுஜர் காஞ்சியில் இருந்த சமயம்,
அருகிலுள்ள திருப்புட்குழியில் வாழ்ந்து வந்த யாதவப் பிரகாசர்
என்பவரிடம் தன் குருகுல வாழ்க்கையைத் தொடங்கினார்.

அவருடன் கோவிந்த பட்டர் என்பாரும் இருந்தார். இவர் ராமானுஜருக்கு
தம்பிமுறை ஆவார். (சித்தியின் மகன்)

குருகுல வாசத்தில் வேதாந்த பாடங்களில் ராமானுஜருக்கும்,
யாதவப் பிரகாசருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் தோன்றியது.
அதனால் ராமானுஜரின் மேல் யாதவப் பிராகாசருக்கு கசப்பு மனப்
பான்மை உண்டாயிற்று.

அச்சமயத்தில் அந்நாட்டு மன்னனின் மகளுக்கு பேய் பிடித்திருந்தது.
மன்னனின் வேண்டுகோளின்படி யாதவப் பிராகாசர், தான் அந்தப்
பேயை விரட்டி மகளுக்கு நன்மை செய்வதாகக் கூறி, தன் சீடர்களுடன்
அரண்மனை சென்றார். உடன் ராமானுஜரும் சென்றார்.

யாதவப் பிராகாசரைக் கண்ட அரசனின் மகள், அவரை அவமானப்
படுத்தினாள். யாதவப் பிரகாசரால் அவளிடமிருந்து பேயை விரட்ட
முடியவில்லை. அதே சமயம் அவருடன் வந்திருந்த ராமானுஜர், தான்
அப்பெண்ணைப் பீடித்திருக்கும் பேயிலிருந்து காப்பாற்றி நல்ல நிலைக்குக்
கொண்டு வருகிறேன் என்று கூறி சில மந்திரங்களை உச்சரிக்க, அந்தப்
பெண்ணை விட்டு பேய் பிரிந்து சென்றது.

தன் மகளுக்கு நல்ல நிலைமை ஏற்பட்டதைக் கண்ட மன்னன் அவரை
வெகுவாகப் பாராட்டி மகிழ்ந்தான். இதனால் யாதவப் பிராகாசருக்கு ராமானுஜர்
மேல் மனக்கசப்பு மேலும் அதிகரித்தது.அவரை எப்படியாவது தீர்த்துக் கட்ட
முடிவு செய்தார். தன் சீடர்களுடன் (கோவிந்தப் பட்டரை தவிர்த்து) ஆலோசனை
செய்து ஓர் திட்டம் வகுத்தார்.

சீடர்களுடன் காசியாத்திரை செல்வதும், அங்கு ராமானுஜரை கங்கையில் தள்ளிக்
கொன்று விடவும் முடிவு செய்யப்பட்டது. காசியாத்திரை தொடங்கியது. குழுவில்
நடந்த விஷயங்கள் எப்படியோ கோவிந்தப் பட்டருக்குத் தெரிந்துவிட்டது.

குழுவினருக்குத் தெரியாமல் மேற்சொன்ன விவரத்தை ராமானுஜருக்கு
ரகசியமாய் தெரிவித்து, அவரை எப்படியாவது தப்பித்துச் செல்லுமாறு கேட்டுக்
கொண்டார். அதன்படியே ராமானுஜரும் அங்கிருந்து தப்பித்து காஞ்சியை நோக்கி
தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

காட்டு வழிகளில் நடந்து சென்றபோது இரவு வந்துவிட்டது. மிகவும் களைத்துப்
போன அவர் வழியில் ஒரு மரத்தடியில் ஓய்வெடுக்க நினைத்தபோது, அவ்வழி
வந்த ஓர் வேடனும் வேடுவச்சியும் ராமானுஜரைக் கண்டு விவரம் அறிந்து,
காஞ்சி செல்ல அவருக்கு உதவுவதாகக் கூறி, அவருக்கத் துணையாக அங்கேயே
தங்கினார்கள்.

பொழுது விடிந்தது. வேடுவச்சி தனக்கு தாகம் எடுப்பதாகவும், அருகில் உள்ள நீர்
நிலையிலிருந்து நீர் எடுத்து வருமாறும் கேட்டுக் கொண்டாள். அதன்படி ராமானுஜர்
நீர் கொண்டு வரச் சென்று திரும்பியபோது வேடனையும், வேடுவச்சியையும் காணாது
திகைத்தார்.

'தனக்கு காஞ்சி செல்ல வழிகாட்டுவதாகக் கூறியவர்களைக் காணவில்லையே.
என்ன செய்வது?' என்று காஞ்சி வரதனை மனதில் நினைத்தபடியே நடக்கலானார்
ராமானுஜர்.

அப்போது சூரிய உதயம் ஆகிவிட்டது. ஜனநடமாட்டம் கண்ணில் பட்டது.
ஆனாலும் தான் எங்கிருக்கிறோம் என்பது அவருக்குத் தெரியவில்லை. எனவே
அங்கு சென்றவர்களிடம் விசாரித்தார். அவர்கள் தூரத்தில் காஞ்சி வரதர் கோயில்
ராஜகோபுரம் தெரிவதை சுட்டிக் காட்டி, 'தாங்கள் காஞ்சியில்தான் இருக்கிறீர்கள்'
என்றனர்.

வரதராஜப் பெருமாள் கோயிலின் ராஜகோபுரத்தைக் கண்டவுடன் அவருக்குப்
புரிந்துவிட்டது. பெருந்தேவித் தாயாரும், பேரருளாளனுமே வேடன் வேடுவச்சியாய்
வந்து தன்னை காஞ்சியில் கொண்டு விட்டிருக்கிறார்கள் என்று மகிழ்ந்து வரம்
தரும் மாமணிவண்ணன் வரதராஜனின் கோயிலை நோக்கிச் சென்றார்.
-
-------------------------------------

ராமானுஜர் வாழ்வில் நடந்த இந்தச் சம்பவத்தின் நினைவாக இன்றும் பிரதி
வருடமும் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் இவ்வைபவம் நடந்து வருகிறது.
இவ்வருடம் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி 10ம் நாள் இராப்பத்து சாற்றுமறை
நடக்கும். வைகுண்ட ஏகாதசிக்கு முன்பாக பத்து நாளும், வைகுண்ட ஏகாதசியைத்
தொடர்ந்து 10 நாட்களும் பகல்பத்து இராப்பத்து உற்சவங்களும் நடக்கும்.
-
அதன் நிறைவு நாளில், 'ஆழ்வார் திருவடி தொழில்' என்ற வைபவம் நடக்கும்.
அதற்கு அடுத்த நாள் 'இயற்பா சாற்றுமறை' என்ற வைபவம் நடக்கும். அதற்கு
அடுத்த நாள் (19.1.2017) அனுஷ்டான குள உத்ஸவம் என்ற பெயரில் கடைப்பிடிக்கும்
வைபவமே ராமானுஜர் வாழ்வில் மேற்சொன்ன சம்பவத்தின் நினைவாக
நடத்தப்படுகிறது.
-
ராமானுஜர் காசியிலிருந்து திரும்பியது முதல் காஞ்சியில் வசித்து அருளாளனின்
ஆராதனைக்காக வேடுவச்சியால் குறிப்பிட்டுச் சொன்ன நீர் நிலையிலிருந்து
தினமும் நீர் கொண்டு வருவாராம். மேலும் அங்கு தன் அனுஷ்டானங்களை
(பூஜைகளை) செய்து வந்தமையால் அந்த நீர் நிலைக்கு அனுஷ்டானக் குளம்
என்ற பெயர் ஏற்பட்டது.

அந்த இடமான காஞ்சியிலிருந்து வந்தவாசிப் பாதையில் அமைந்துள்ள
செவிலிமேடு கிராமத்தில் உள்ளது. இன்றும் அந்தக் குளத்தையும் (சாலைக் கிணறு
என்றும் பெயர்) ராமானுஜர் சன்னதியையும் அங்கு தரிசிக்கலாம்.

மேற்படி திருவிழா நாளில் ராமானுஜரும் வரதராஜப் பெருமாளும் காலை
காஞ்சியிலிருந்து புறப்பட்டு மதியம் அங்கு வந்து சேர்வார்கள். பின்னர் அங்குள்ள
மண்டபத்தில் இருவருக்கும் திருமஞ்சனம், நைவேத்யம் நடந்து அன்று
மாலையிலேயே காஞசிபுரம் வந்தடைவார்கள்.

திரும்பும்போது வரதராஜப் பெருமாள் வேடனாய் அல்கரிக்கப்பட்டிருப்பார்.
வழியில் அமைந்துள்ள தூப்புல் (ஸ்வாமி தேசிகனின் அவதார தலமும்,
தீபப் பிராகாசர் திருக்கோயிலும் அமைந்துள்ளது) சன்னதியிலிருந்து ஸ்வாமி
தேசிகன் வரதராஜப் பெருமாளையும் ராமானுஜரையும் எதிர்கொண்டழைத்து
மரியாதை செய்வார்.

பின்பு வரதராஜப் பெருமாளும், ராமானுஜரும் வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு
திரும்புவார்.

ராமானுஜர், சாலைக கிணற்றிலிருந்து வரதராஜப் பெருமாளின் நித்ய
ஆராதனைக்கு நீர் கொண்டு வந்ததன் நினைவாக இன்றும் சாலைக் கிணற்று நீர்
நித்தமும் கொண்டு வரப்படுகிறது. மேலும் சாலைக் கிணறு, அனுஷ்டானக்
குளப் பகுதியில் அமைந்திரக்கும் ராமானுஜருக்கு பிரதி மாத திருவாதிரை
நட்சத்திர நாளில் விசேஷ வைபவமாக கொண்டாடி வருகிறார்கள்.

தற்போது செவிலிமேட்டில் அமைந்துள்ள ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் திருக்கோயிலில்
அனுஷ்டான குள உற்சவம் நடைபெற்று வருகிறது.

நீங்களும் ஒரு முறையாவது இவ்வைபவத்திற்குச் சென்று வரம் தரும் வரதனின்
இன்னருளுக்கு பாத்திரமாகலாம்.
-
-------------------------------------------

- எம்.என். ஸ்ரீநிவாசன்
குமுதம் பக்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக