ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» காவல் தெய்வம்- குறும்பட விமர்சனம்
by T.N.Balasubramanian Yesterday at 8:52 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm

» டோக்கியோ ஒலிம்பிக் 2020
by T.N.Balasubramanian Yesterday at 6:39 pm

» திரைத்துளிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அஜீத்தின் வலிமை படத்தின் “நாங்க வேற மாதிரி” பாடல் எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» அசோக மரத்தின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 3:05 pm

» யூ டியூப் ஸ்டார்
by ayyasamy ram Yesterday at 3:04 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 2:50 pm

» சப்பாத்தி மீந்து விட்டால்..
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» ஒரு புதிய ஏற்பாடு
by T.N.Balasubramanian Yesterday at 2:01 pm

» அழிவின் விளிம்பில் உள்ள தேவாங்கு விலங்கை காப்பாற்ற வேண்டும்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:54 am

» செய்தி துளிகள் -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாலடியார் பாடல் 148 - விளக்கம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா!
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by aanmeegam Tue Aug 03, 2021 9:23 pm

» பரம(ன்) இரகசியம் அமானுஷ்யன் நாவல்கள்
by shivi Tue Aug 03, 2021 6:49 pm

» கணவன் கையில் காப்பு கட்டப்படுவது…
by T.N.Balasubramanian Tue Aug 03, 2021 4:37 pm

» அறிவு ஆறு அல்ல, பத்து (திருமூலர் அற்புத பாடல்)
by T.N.Balasubramanian Tue Aug 03, 2021 4:22 pm

» சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்!
by T.N.Balasubramanian Tue Aug 03, 2021 4:17 pm

» மலேசிய செய்திகள்
by T.N.Balasubramanian Tue Aug 03, 2021 4:02 pm

» கடைசியில் இவ்வளவு தானா?
by T.N.Balasubramanian Tue Aug 03, 2021 3:49 pm

» உங்கள் உடல் தோஷத்தைக் கண்டறிந்து கமெண்ட் செய்யுங்கள் ..
by curesure4u Tue Aug 03, 2021 8:41 am

» என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை
by ayyasamy ram Tue Aug 03, 2021 7:52 am

» இனிப்பான தேங்காய் போளி செய்வது எப்படி
by பழ.முத்துராமலிங்கம் Tue Aug 03, 2021 7:24 am

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Mon Aug 02, 2021 10:14 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Mon Aug 02, 2021 10:13 pm

» சிவகங்கை மாவட்டச் செய்திகள்
by சிவா Mon Aug 02, 2021 10:11 pm

» மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது?
by சிவா Mon Aug 02, 2021 9:19 pm

» நட்பு – கவிதை
by T.N.Balasubramanian Mon Aug 02, 2021 5:20 pm

Admins Online


அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ்

அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ் Empty அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ்

Post by ayyasamy ram Sat Dec 24, 2016 3:46 pm

அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ் JWl76PhATaungRpjixd7+v5
-
சின்னஞ்சிறு பாலனாய் பிறந்த இயேசு உலகுக்கு கொண்டு
வர நினைத்தது சமாதானம், அன்பு மற்றும் மகிழ்ச்சி!
இடையர்களுக்கு கிறிஸ்து பிறப்பின் செய்தியை அறிவிக்க
வந்த ஆண்டவரின் தூதர்களுடன் விண்ணகத் தூதர் பேரணியும்
சேர்ந்து பாடிய பாடலும் இதையே வலியுறுத்துகிறது.

“உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக. உலகில்
அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக’ என்பதே
வானதூதர்களின் வாழ்த்துப் பாடலாகும்.

கிறிஸ்து இவ்வுலகில் வந்து ஒரு குழந்தையாகப் பிறக்க தேர்ந்து
கொண்டது ஓர் எளிய தச்சுக் குடும்பத்தையல்லவா? பிறந்ததும்
ஓர் வசதியற்ற மாட்டுக் கொட்டிலில் அல்லவா? தாம் இவ்வுலகில்
வந்து பிறந்ததன் நோக்கம் என்ன என்பதை அசாயா
இறைவாக்கினர் வழியாக இவ்வாறு கூறுகிறார் இயேசு,

“ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கவும்; உள்ளம் உடைந்தோரைக்
குணப்படுத்தவும்; சிறைபட்டோருக்கு விடுதலையை பறை
சாற்றவும்; கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும்; துயருற்று
அழுவோருக்கு ஆறுதல் அளிக்கவும்; புலம்பலுக்குப் பதிலாக
மகிழ்ச்சித் தைரியத்தை வழங்கவும் என்னை அனுப்பியுள்ளார் (61:1-3).

கிறிஸ்துமஸ் விழாவை அர்த்தமுள்ளதாகக் கொண்டாட நாம் என்ன
செய்ய வேண்டும்? நம் சிறுவர்களின் உள்ளத்தில் இதற்கான
விதைகளை விதைப்பது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கடமை
அல்லவா? கிறிஸ்து பிறப்பின் மகத்தான நற்செய்தி முதலில்
அறிவிக்கப்பட்டது எளியோராகிய இடையர்களுக்குத் தானே?

இதனை மனத்தில் கொண்டு, ஆடம்பர ஆர்பாட்டங்களைத் தவிர்த்து,
பகிர்தலில் உள்ள நிஜமான மகிழ்ச்சி பற்றி சிறுவர்களுக்கு
எடுத்துரைக்க வேண்டும். பிஞ்சு நெஞ்சங்களில் வித்திடப்படும் நல்ல
எண்ணங்களே பிற்காலத்தில் நற்கனிகளைத் தரும் மரங்களாக
மாறிவிடும் என்பதை நாம் மறக்கக்கூடாது.

நம் அருகில் வாழும் வசதியில்லாத எளியோருக்கு உதவி செய்து
அவர்களது மகிழ்ச்சியில் பங்கு கொள்வதுதான் இயேசு பாலனுக்கு
நாம் கொடுக்கப்போகும் தகுந்த கிறிஸ்துமஸ் பரிசு என்பதை
அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

எனவே வானதூதர்கள் அறிவித்த சமாதானமும் மகிழ்ச்சியும் உலகம்
எங்கும் தழைத்தோங்க நம்மால் இயலும் சிறுசிறு முயற்சிகளைச்
செய்வதே உண்மையான கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்
மையமாகத் திகழ வேண்டும்.

எனவே, பகிர்ந்து வாழ்வோம்; பரிவினைக் காட்டுவோம்.
அன்பினைப் பொழிவோம்; ஆடம்பரம் தவிர்ப்போம்; தன்னலம்
ஒழிப்போம்; பிறர் நலம் பேணுவோம். அமைதியும் மகிழ்வும் நிலவ
அந்த அருட்பெரும் சோதியை வேண்டுவோம்.

——————————————-
– பிலோமினா சத்தியநாதன்
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 69513
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13133

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை