புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலை வழியே பண்பாட்டு மாற்றம் நிகழும்! Poll_c10கலை வழியே பண்பாட்டு மாற்றம் நிகழும்! Poll_m10கலை வழியே பண்பாட்டு மாற்றம் நிகழும்! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
கலை வழியே பண்பாட்டு மாற்றம் நிகழும்! Poll_c10கலை வழியே பண்பாட்டு மாற்றம் நிகழும்! Poll_m10கலை வழியே பண்பாட்டு மாற்றம் நிகழும்! Poll_c10 
77 Posts - 36%
i6appar
கலை வழியே பண்பாட்டு மாற்றம் நிகழும்! Poll_c10கலை வழியே பண்பாட்டு மாற்றம் நிகழும்! Poll_m10கலை வழியே பண்பாட்டு மாற்றம் நிகழும்! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கலை வழியே பண்பாட்டு மாற்றம் நிகழும்! Poll_c10கலை வழியே பண்பாட்டு மாற்றம் நிகழும்! Poll_m10கலை வழியே பண்பாட்டு மாற்றம் நிகழும்! Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
கலை வழியே பண்பாட்டு மாற்றம் நிகழும்! Poll_c10கலை வழியே பண்பாட்டு மாற்றம் நிகழும்! Poll_m10கலை வழியே பண்பாட்டு மாற்றம் நிகழும்! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
கலை வழியே பண்பாட்டு மாற்றம் நிகழும்! Poll_c10கலை வழியே பண்பாட்டு மாற்றம் நிகழும்! Poll_m10கலை வழியே பண்பாட்டு மாற்றம் நிகழும்! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கலை வழியே பண்பாட்டு மாற்றம் நிகழும்! Poll_c10கலை வழியே பண்பாட்டு மாற்றம் நிகழும்! Poll_m10கலை வழியே பண்பாட்டு மாற்றம் நிகழும்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கலை வழியே பண்பாட்டு மாற்றம் நிகழும்! Poll_c10கலை வழியே பண்பாட்டு மாற்றம் நிகழும்! Poll_m10கலை வழியே பண்பாட்டு மாற்றம் நிகழும்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கலை வழியே பண்பாட்டு மாற்றம் நிகழும்! Poll_c10கலை வழியே பண்பாட்டு மாற்றம் நிகழும்! Poll_m10கலை வழியே பண்பாட்டு மாற்றம் நிகழும்! Poll_c10 
2 Posts - 1%
prajai
கலை வழியே பண்பாட்டு மாற்றம் நிகழும்! Poll_c10கலை வழியே பண்பாட்டு மாற்றம் நிகழும்! Poll_m10கலை வழியே பண்பாட்டு மாற்றம் நிகழும்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலை வழியே பண்பாட்டு மாற்றம் நிகழும்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 04, 2016 6:12 pm

கலை வழியே பண்பாட்டு மாற்றம் நிகழும்! QzlrzTBjQCu6R0lEtUfH+E_1479610608
-
நர்த்தகி நடராஜ், மேடையில் பரதம் நிகழ்த்த துவங்கிய பின் தான்,
‘திருநங்கை’ என்ற சொல், தமிழகத்தில் அறிமுகமானது.

பள்ளி படிப்பை தாண்டாத இவர், இன்று, உலகம் முழுவதும் பரதம்
தொடர்பாக வகுப்பெடுத்து வருகிறார். ஒவ்வொரு மாதமும், ஏதாவது
விருது வழங்கிய வண்ணம் இருப்பார்.

அந்தளவுக்கு அவருடைய துறையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
சமூகத்தில் திருநங்கையர் கண்ணியமாக நடத்துவதற்கு பாடுபட்ட
முன்னோடிகளில், இவர் முக்கியமானவர்.

சமீபத்தில், தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம்,
இவருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.
அவரின் சலங்கை கட்டிய ஒவ்வொரு சொற்களும், ‘நாயகி’க்காக…
-
நீங்கள் பெண்மையை உணர்ந்ததால் பரதம் கற்றீர்களா?
பரதம் கற்றதால் பெண்மையை உணர்ந்தீர்களா?

--
இது ரெட்டை ஜடை மாதிரி, ஒன்றோடு ஒன்று பிணைந்தது.
பெண்மையை வெளிப்படுத்துவதற்கான ஊடகமாக பரதம்
இருந்தது. பரதத்தில் ஊறித் திளைத்த போது, பெண்மை
புதிதாக பிறந்தது.

பரதத்தில், பெண்மையை வெளிப்படுத்தும் நொடி இருக்கிறதே,
அது வார்த்தைகளில் சொல்ல முடியாத உணர்வு.
-
நதியலையில் விழுந்த இலை போல, காற்றில் பறக்கும் இறகு போல,
மனம் அதன் போக்கில் செல்லும். எல்லா கட்டுக்களையும் உடைத்தெறிந்த
நிம்மதி,
-
அந்த வினாடியில் கிடைக்கும். ஒரு வகை ஆழ்ந்த மயக்கம். கனவுலகின்
சஞ்சாரம்; பற்றி எரிகிற நெருப்பு. வெறும் நெருப்பல்ல; யாக நெருப்பு
பாரதி சொன்ன மாதிரியான புனிதத் தீ. அந்த வினாடி, உலகத்தையே மறந்து
பறந்து கொண்டிருப்பேன்.
--

கலை வடிவத்தை தேர்ந்தெடுத்த பின், என்ன மாதிரியான
பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது?

-
சராசரி திருநங்கையரை விட, ஐந்து மடங்கு பிரச்னைகளை
எதிர்கொள்ள வேண்டிய சூழல் இருந்தது.

நானும், தோழி சக்தி பாஸ்கரும் வீட்டை விட்டு வெளியேறும் போது,
கையில், ஒரு பைசா இல்லை. நாங்கள் இருவரும் வசதியான
குடும்பங்களில் பிறந்து வளர்ந்தவர்கள்; வறுமை என்றால்
என்னவென்று அறிந்திராதவர்கள்.
-
வைஜெயந்திமாலாவின் குரு, தஞ்சை கிட்டப்பாவிடம் தவமிருந்து,
போராடி, ஓர் ஆண்டு தொடர் முயற்சிக்கு பின், பரதம் கற்றோம்.
-
எந்த சூழ்நிலையிலும், அடுத்தவரிடம் இரந்து வாழக் கூடாது;
சுயமரியாதையை இழக்கக் கூடாது; வளைந்து கொடுக்கக் கூடாது
என, உறுதி எடுத்தோம். மீரா அம்மா, ரேவதி சங்கரன்,
எங்கள் குரு மற்றும் பல அன்பு நெஞ்சங்கள் வழிகாட்டிய
சுயமரியாதை தான், இந்த அளவுக்கு முன்னேறியதற்கு காரணம்.
--

உங்களைப் போன்ற திருநங்கையர் எதிர்கொள்ளும் பிரச்னைகள்
குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய நீங்கள்,
பரதம் ஆடிக் கொண்டிருக்கிறீர்களே?

-
நான் தமிழச்சி என்பதில் தாழாத பெருமை.
இவ்வளவு தொன்மை வாய்ந்த தமிழ் மரபில், திருநங்கையருக்கான
இடம் என்ன என்பதை அறிய நினைத்தேன். அதுவே இலக்கியம் பக்கம்
என்னை தள்ளியது. சங்க இலக்கியத்தில் இருந்து, சிற்றிலக்கிய காலம்
வரை ஆழ்ந்து படித்தேன். இன்று மட்டுமல்ல, எல்லா காலக்கட்டத்திலும்
திருநங்கையர் இருந்திருக்கின்றனர்.

தொல்காப்பியத்திலும் அதற்கான சான்று இருக்கிறது.
-
சிலப்பதிகாரத்தில், 11 வகையான ஆடற்கலைகள் உள்ளன.
அதிலும், ‘வேளிர் ஆடல்’ முக்கியமானது. நம் கலையை நாம் ஆடவில்லை
என்றால், வேறு யார் ஆடுவது. அதனால் தான், பரதம் பக்கம் திரும்பினேன்.

மற்றபடி, இதுவும் ஒரு வகை விழிப்புணர்வு ஆயுதம் தான்.
திருநங்கையர் மரியாதையுடன் நடத்தப்படுவதற்கு, இதுவும் ஒரு காரணம்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 04, 2016 6:17 pm

உலகமயமாக்கலுக்குப் பின், தமிழகத்தில் பண்பாட்டு
மாற்றம் நடத்திருப்பதை மறுக்க முடியாது. காப்பியம்,
புராண கதைகளை மையமாக வைத்து நீங்கள் பரதம்
நிகழ்த்துகிறீர். இதன் மூலம், இழந்த பண்பாட்டை
மீட்க முடியும் என, நீங்கள் நினைக்கிறீரா?

-
உபரி பட்ஜெட் போடும் நாடு என சொல்லக்கூடிய,
அமெரிக்காவே, 350 ஆண்டு பழமை தான். ஆனால், நம் மரபு,
‘கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த
குடி’ என்பது, கிடைத்த சான்றுகளின் வழி நிரூபிக்கப்பட்டது.
-
அதன் சமீபத்திய உதாரணம், மதுரை கீழடி. நமக்கென்று பெரிய
பண்பாட்டு மரபு இருக்கிறது; வாழ்வாங்கு வாழ்ந்தவர் நாம்.
நம் வேர்களை நாம் புறக்கணிக்கக் கூடாது. இன்னும்,
50 ஆண்டுகளுக்கு பின், நம் பிள்ளைகள், ‘இது நம்முடைய
பண்பாடு இல்லை… ஏன் இப்படியான சூழலில் என்னை
வளர்த்தீர்கள்…’ என, கேள்வி எழுப்புவர்.
-
எப்படி எனில், வரலாறு அவர்களுக்கு நிச்சயம் வழிகாட்டும்.
ஆனால், மற்றவர்களுக்கு அப்படி இல்லை.
-
ஐரோப்பிய பண்பாட்டில் ஊறித் திளைத்திருக்கும் நார்வேயில்,
நிகழ்ச்சி நடத்தும் போது, திருக்குறளை மையமாக வைத்தே
இளைஞிகளுக்கு பயிற்சி கொடுத்தேன். அந்த வினாடியில்
இருந்து திருக்குறளை ஆர்வமாக படித்தனர்;
அது பற்றி அனைத்து தகவல்களையும், விரல் நுனிக்கு கொண்டு
வந்தனர்.
-
‘அடுத்த ஜென்மத்தில் நான் தமிழனாக பிறந்து, திருக்குறள்
படிக்க வேண்டும்’ என்ற காந்தியின் ஆசையை, வரலாற்றில்
இருந்து தோண்டி எடுத்திருந்தனர்.
கலையின் வழியாக, பண்பாட்டு மாற்றங்கள் நிகழ்ந்தே தீரும்;
இது நிச்சயம்.
-

வெகுஜன மக்களின் நேரடித் தொடர்பில் இல்லாத கலை
வடிவத்தை நிகழ்த்துகிறோம் என்ற எண்ணம் உங்களுக்கு
எப்போதாவது வந்ததுண்டா?
-
பரத நாட்டியத்தை, வெகுஜன மக்களின் கலை இல்லை என்பதை
நான் முற்றிலும் வெறுக்கிறேன். பரதம் என்ற சொல்லுக்கு வெறும்
, 70 வயது தான். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். பரத நாட்டியம்
நிகழ்த்துபவர்களை ஒதுக்கி விட்டு, அவர்களை ஒரு சாரர் என
குறுக்கி வைத்தது, நம்முடைய தவறு.

இதில், ஜாதி, மதத்தை ஏன் கொண்டு வருகிறீர்… கலையை
எல்லாரும் நுகர வேண்டும்.

அட்லாண்டாவிலும், ஆண்டிப்பட்டியிலும் ஒரே மாதிரி தான்
பரதம் நிகழ்த்துகிறேன்; மக்களும் அதை சரியாக வாங்கிக்
கொள்கின்றனர். என்னிடம் உங்களுக்கு என்ன வயது என்று
யாராவது கேட்டால், ‘நான் நித்ய கல்யாணி; வயது 16’ என்பேன்.
அதுபோல தான் பரதத்துக்கும். அது என்றும் இளமையானது.
-

பரத நாட்டியம் தமிழர்களின் கலை வடிவமா?

-
அதில் என்ன சந்தேகம்; அது நம் கலை சொத்து.
அவ்வை நடராஜன், கி.ஆ.பெ.விஸ்வநாதன், ம.பொ.சி., போன்ற
தமிழ் அறிஞர்கள் எல்லாம் அதை தக்க ஆதாரங்களுடன் நிறுவி
உள்ளனர்.

இதற்கு பல்வேறு வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. இனிமேலாவது,
தமிழர் கலையான பரதத்தை எல்லா இடங்களிலும் பரப்புவோம்.
-
---------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 04, 2016 6:19 pm

உங்கள் அபிநயத்தில் வெளிப்படும் நுட்பமான முத்திரைகளை,
மக்கள் சரியான முறையில் உள்வாங்கிக் கொள்கின்றனரா…

சமீபத்தில், ஜப்பான் அசாகா சென்றிருந்த போது, திருவாசகம்,
தேவார பண்ணிசை பாடல்களை, பரதமாக நிகழ்த்தினேன்.
அங்கு தமிழர்களும் இல்லை; இந்தியர்களும் இல்லை. முழுக்க
ஜப்பானியர்கள்.

அவர்களுக்கு பரதம், தேவாரம், திருவாசகம் எதுவும் தெரியாது.
ஆனால், அந்த அபிநயத்தில் கண்கலங்கி, அங்கு நிலவிய
மவுனமும், பின் எழுந்த கரகோஷமும் அவர்கள் எந்தளவுக்கு
பரதத்தை முழுமையாக உள்வாங்கினர் என்பதை புரிய
வைத்தது.

கடந்த, 40 ஆண்டுகளாக, உங்கள் நிழல் போல் தொடரும்
உங்கள் தோழி சக்தி பற்றி?


இருவரும், ஐந்து வயதிலிருந்து நெருங்கிய தோழியர்;
நாணயத்தின் இருபக்கங்கள் மாதிரி. நான் கனவுகளில் வாழ்பவள்;
அவள் எதார்த்தவாதி. எதிலும் நேர்த்தியாக இருக்க வேண்டும் என,
நினைப்பாள். என் முன்னேற்றத்தை, தன் முன்னேற்றமாக
கருதுகிறாள்.

சக்தி பாஸ்கர் மட்டும் இல்லை என்றால், இந்தளவுக்கு
வளர்ந்திருக்க முடியாது. நான் அவளுக்கு வாழ்நாள்
கடன்பட்டிருக்கிறேன்.
-
---------------------------------

தினமலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக