புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10 
84 Posts - 45%
ayyasamy ram
ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10 
74 Posts - 39%
T.N.Balasubramanian
ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10 
5 Posts - 3%
prajai
ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10 
2 Posts - 1%
சிவா
ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10 
440 Posts - 47%
heezulia
ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10 
30 Posts - 3%
prajai
ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_m10ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜோதிடம் என்பது அறிவியலா?-

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 30, 2016 6:21 pm

First topic message reminder :

ஜோதிடம் என்பது அறிவியலா?

ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 4 Hts8kHLQTaw3pQZ5ul3O+thumbnail_shutters_3096189f

ஜோதிடம் என்பதை எந்த அளவிற்கு நம்பலாம்? அதன்படி எல்லாம் சரியாக நடக்கிறதா? இது அறிவியல் பூர்வமானதா என்பது குறித்து பலர் பலவிதமாக சொல்லி வருகிறார்கள். முதலில் ஜோதிடம் என்றால் என்ன என்பது பற்றி கொஞ்சம் தெளிந்து கொள்வோம்.

பண்டைய காலத்தில் மக்கள் இயற்கையைக் கடவுளாக வணங்கி வந்தனர். அதில் மிக முக்கியமாக வானில் வலம் வரும் சூரியன் மற்றும் சந்திரனை கடவுளாக கொண்டு வழிபாடு செய்துவந்தனர். தாம் வழிபடும் சூரியன் மற்றும் சந்திரன் இருவரின் ஒளியை திடீரென்று மங்க செய்யும் சூரிய மற்றும் சந்திர கிரகணங்களை கண்ட முன்னோர்கள். இவ்வாறு நிகழ என்ன காரணம் என ஆராய ஆரம்பித்தனர். இதுவே வானிவியல் ஆராய்ச்சிக்கு வித்திட்டது.

வானவியலே கிரகங்களின் பருமன் முதற்கொண்டு இயக்கத்தையும், பால்வெளியில் இருக்கும் நட்சத்திர கூட்டத்தையும் மற்றும் கிரகங்களின் கட்டமைப்பையும், நிறத்தையும் மேலும் பல முக்கிய பண்புகளை மிக துல்லியமாக அளவிட உதவியது. இப்படியாக வானவியலில் இருந்து அறியப்பட்ட கிரக இயக்கங்கள் பூமியில் இருக்கும் உயிரினங்களை எவ்வாறு பாதிக்கும் என்ற ஆராய்ச்சி தொடங்கப்பட்டது அதன் பெயரே ஜோதிஷம் எனும் ஜோதிடம்.

ஜோதிஷம் என்னும் சமஸ்கிருத வார்த்தையின் பொருள் கிரகங்கள் பிரதிபலிக்கும் ஒளி மூலம் மனித வாழ்வியலை ஆராய்ந்து அறிவது என்பதாகும். மனித வாழ்வியலின் வழிகாட்டி என்பதாலேயே ஜோதிடம் 'வேதத்தின் கண்' என்று அழைக்கப்படுகிறது.

சூரியன் மற்றும் சந்திரன் நகர்வுகளை கண்ணால் கண்டு ஆராய்ச்சி செய்து, கிரகங்களின் இயக்கம் நட்சத்திரங்கள் கொண்டு அளவிடப்பட்டு பஞ்சாங்கம் உருவாக்கப்பட்டது. பஞ்சாங்கம் என்பது வாரம், திதி, கரணம், நட்சத்திரம் மற்றும் யோகம் என்ற ஐந்து காரணிகள் ஆகும்.

புவி மைய கொள்கையை (Geo-Centric) அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது ஜோதிடக் கலையாகும். அதாவது பூமியை மையமாக வைத்து அதனைச் சுற்றி இருக்கும் கிரகங்களின் இயக்கம் எவ்வாறு உயிரினங்களின் இயக்கத்தையும் வாழ்வியலையும் பாதிக்கிறது என்பதை கூறுவதே இக்கலையின் நோக்கமாகும்.

கிரகமும் ராசியும்

கிரகம் என்ற சமஸ்கிருத வார்த்தையின் பொருள் பற்றுதல் அல்லது பற்றி இழுத்தல் என்பதாகும். பிரபஞ்சத்தில் பல நட்சத்திர கூட்டங்கள் இருந்தாலும், சூரியன் எனும் நட்சத்திரம் மட்டுமே நமது பூமியின் இயக்கத்தையும் மற்றம் ஒன்பது கிரகங்களையும் பெருமளவில் பாதிக்கிறது. அது போலவே நமது பூமியின் துணைக் கோளான சந்திரனின் இயக்கம் பூமியை மிக அதிக அளவில் பாதிப்பதால்தான் பூமியை சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிவரும் சந்திரன் முக்கிய கிரகமாக எடுத்து கொள்ளப்பட்டு இருக்கிறது.

நமது பூமி 23°1/2 பாகை சாய்ந்து, தன்னை தானே சுற்றி கொண்டு சூரியனை சுற்றி கொண்டு இருக்கிறது என்பதை வானியல் கணிதம் மூலம் உணர்ந்தனர். இந்த பூமியின் சுழற்சி மூலம் தட்பவெப்பநிலை மாற்றங்கள் உண்டாவதையும் உணர்ந்தனர். இத்தகைய புவியின் இயக்கம் சூரியனின் ஈர்ப்பு விசையாலும் மேலும் அதை சுற்றி இருக்கும் கோள்களின் பாதிப்பாலும் ஏற்படுகிறது.

தட்ப வெப்ப நிலை மாற்றங்கள் என்பவை நீர் நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்சபூதங்களில் மூலமே பூமியில் நிகழ்கிறது. இந்த பஞ்சபூதங்கள் மூலமே கிரகங்கள் மனிதர்களை இயங்குகின்றன. இரவு பகலாக கண்விழித்து பூமி சுற்றி வரும் பாதையில் இருக்கும் நட்சத்திர கூட்டங்களைக் கூறுகளாக்கி ராசி என்று பெயர் வைத்தனர்.மேலும் ராசிகளின் வடிவமைப்பைக் கொண்டு அதற்கு தகுந்த பெயரிட்டனர்.

ஜோதிடம் ஒரு அறிவியலா?

இவ்வாறாக வானவியலில் இருந்து ஜோதிடம் தோன்றியது. கிரக இயக்கங்களைப் பஞ்சாங்கம் கொண்டு கணித்து, மேலும் பல கணித சூத்திரங்கள் கொண்டு மனித வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளை சொல்வதால் ஜோதிடம் ஒரு அறிவியலே என்று கூறுகிறார்கள்.

இது எந்த அளவுக்கு உண்மை? மேலும் ஆராய்வோம்.

நன்றி மணிகண்டன் பாரதிதாசன் தமிழ் ஹிந்து    

தொடரும்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 07, 2017 4:21 am

ஜோதிடம் என்பது அறிவியலா?- 15: கால சர்ப்ப தோஷம்

தோஷம் என்றால் சமஸ்கிருத மொழியில் குறைபாடு அல்லது இழப்பு என்று பெயர். ஆதாவது ஜெனன கால
சக்கரத்தில் அனைத்து கிரகங்களும், ராகு மற்றும் கேது என்ற இரண்டு சர்பங்களின் பிடியில் மாட்டி கொள்வது
கால சர்ப்ப தோஷம் என்று ஜோதிடம் கூறுகிறது. இதன் சூட்சுமம் என்னவென்றால், ராகு மற்றும் கேது என்பது
நம் முன்னோர்கள் வழிவழியாய் தொடர்ந்து செய்து வரும் பாவங்களை குறிக்கும் ஒரு குறியீடு என்பதே.
ராகு என்பது அதிவேகமாக பரவி செல்வது அல்லது கட்டுபாடில்லா வேகம் என்றே சமஸ்கிருதத்தில் பொருள்.
அடக்கமுடியாத போகத்தின் உருவாக வரும் ராகு நம் முன்னோர்களின் ஆதாவது தந்தை வழி தந்தை செய்த
இயற்கைக்கு புறம்பான பாவங்களையும், கேது தாய் வழி முன்னோர்கள் செய்த இயற்கைக்கு புறம்பான
பாவங்களையும் காட்டுகிறது. இதில் இன்னொரு சூட்சுமம், கேது சந்திரனின் பிம்பம் என்பதால், தாய் வழி
பாவத்தை குறிக்கிறார். ராகு சூரியனை பாதிப்பதால், தந்தை வழி முன்னோர்களின் பாவங்கள் என்பதை
அறியலாம்.

தற்கால அறிவியல் படி கூறவேண்டுமென்றால், மனித ஜீனில் அடிப்படைகளாக இருக்கும் 46 குரோமோசோம்கள்
ராகு கேது கலவைகள் ஆகும். குரோமோசோம்கள் என்பவை ஒருவரின் உயரம், தோல், முடி, கண்விழி
ஆகியவற்றின் நிறம், அறிவுத்திறன், பேசும் விதம், முகத்தோற்றம், உடல்பருமன், பரம்பரைவியாதி இது
போன்ற அனைத்து குணங்களும் பதிவாகி உள்ளது.
அதாவது 23 குரோமோசோம்கள் தந்தை வழி குறிப்பவை (ராகு) மற்றும் 23 குரோமோசோம்கள் தாய் வழி குறிப்பவை (கேது). இதில் இருந்து நம் ஜோதிட ரிஷிகள் எந்த அளவு அறிவியல் திறன் பெற்றவர்கள் என அறியலாம். ராகுவும் கேதுவும்
வட மற்றும் தென் துருவங்கள் என்று ஜோதிடம் கூறுகிறது. இரண்டும் ஒன்றுகொன்று எதிரெதிர் குணங்களை
கொண்டவைகள்.
அவ்வாறு இரண்டு வெவ்வேறு குணாதிசயம் பெற்ற இரு உருவமற்ற சாயா கிரகங்களிடையே மாட்டும் மற்ற
கிரகங்களின் நிலைமை நாம் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. ராகு கருநாக பாம்பாகவும், கேது
செம்பாம்பாகவும் ஜோதிடம் கூறுகிறது. சுருங்க கூறினால் மனதின் (சந்திரன்) ஆசைகளை களையும் நிழல் கேது.

பரமாத்மாவை (சூரியனை) கெடுக்கும் நிழல் ராகு. இவ்வாறு, மனித உடலில் இருக்கும் ஜீன்களின் நம் பரம்பரை
தன்மை குறிப்பவை ராகு மற்றும் கேது ஆகும். பாவங்களை சுமக்கும் ராகு கேது என்னும் இரு சர்பங்கள் மத்தியில்
மாட்டும் அனைத்து கிரகங்களும் பலம் இழக்கிறது. அதனால், இவ்வளவு பெரிய யோகங்கள் ஜாதகத்தில் இருந்தாலும்
அந்த யோகம் தரும் கிரகங்களின் திசை புத்திகள் ஜாதகரின் வாழ்வில் பெரிய மாற்றத்தை கொடுப்பதில்லை.
தோஷ கால அளவு
=================
ஒரு ராசியில் 1.5 ஆண்டுகள் இருந்து, 12 ராசிகளை கடக்க (12 X 1.5 = 18) அவை 18 ஆண்டுகள். அவ்வாறு ராகு 18
ஆண்டுகள் மற்றும் கேது 18 ஆண்டுகள். ஜாதக கால சக்கரத்தை கடக்க 36 ஆண்டுகள் எடுத்து கொண்டு முழுமையாக
தன் சுற்றை முடித்து தோஷ நிவர்த்தி தருகிறது. 36 ஆண்டுகள் கழித்து, ஜாதகத்தில் உள்ள யோக பலன்களை தருகிறது. திருமண தடை, வேலையின்மை, நோய் எதிப்பு சக்தி குறைதல், அதிஷ்டம் இன்மை, குடும்பத்தில் குழப்பம்,
உறவினர்களுடன் ஒற்றுமை இன்மை என பல மன நிமைதியை இழக்கும் நிகழ்வுகளை தருகிறது.
எனவே ஜாதக பலன்களை தகுந்த நேரத்தில் தாராமல், சர்ப்பம் என்னும் ராகு கேதுக்களால் காலம் தாழ்த்தி தரபடுவதால்,
இது கால சர்ப்ப தோஷம் என்று பெயர் பெற்றது. ஆதாவது முன்னோர்கள் செய்த பாவங்களை ராகு என்னும் பாம்பின்
வாயின் பிடியில் சிக்கி வேதனை பட்டு 36 ஆண்டுகள் கழித்து, கேது என்னும் பாம்பின் பல அனுபவங்கள் பெற்று வால்
பகுதியில் தோஷ நிவர்த்தி கிடைக்கிறது.

நன்றி தி ஹிந்து

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 07, 2017 10:05 pm

ஈகரையில் இது சம்பந்த பழைய 2010 /2011 வருடத்திய பதிவுகள் பார்க்கமுடிந்தது.
அவைகளில் 30 /32 ஆண்டுகளுக்கு பிறகு
கால சர்ப்ப தோஷ நிவர்த்தி என பதிய கண்டுள்ளேன்.
36 ஆண்டுகள்தான் துல்லியமாக இருக்கும் என எண்ணுகிறேன்.நம்புகிறேன்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 02, 2017 8:08 am

ஜோதிடம் என்பது அறிவியலா?- 16: ராகுவின் அதிபதி - ஓர் ஆய்வு

இந்து மத புராணங்கள் முழுவதும் சில குறீயீடுகளை கொண்டே உருவாக்கப்பட்டு உள்ளது. ஆதாவது, முனிவர்களும் சித்தர்களும் சில விசயங்களை வெளிப்படையாக சொல்லாமல், சில குறியீடுகள் மூலமே குறிப்பிட்டுள்ளனர்.
மனிதன் புற உலகில் எதையெல்லாம் பார்த்து பயந்தானோ, அவற்றையே முனிவர்கள் மனிதனின் அக வாழ்வின் கொடிய விஷயங்களோடு தொடர்புபடுத்துகின்றனர். இதில் சாமுண்டி கீழ் இருக்கும் புலி, பரமசிவன் உடலில் உள்ள பாம்பு, மஹா விஷ்ணுவின் ஆதிசேச படுக்கை இவை சில உதாரணங்கள்.

தொடர்புடையவை
இதில் புலி மற்றும் புலித் தோல் - கட்டுக்கடங்கா காமத்தையும், ஒரு தலை நாகம் - விஷத்தையும். ஐந்து தலை நாகம் - குண்டலினி மூலம் பெற்ற ஞானத்தையும் குறிக்கும்.
புலித்தோல் மீது அமர்வது, காமத்தை அடக்கி, தன்னுள் உறையும் கடவுளை காணும் தத்துவம் அடங்கியுள்ளது. சாமுண்டி கீழ் இருக்கும் புலி, மனிதனின் காமத்தை அழித்து நன்மை செய்பவள் என்று பொருள் கொள்ளலாம். மஹாவிஷ்ணுவின் ஆதிசேச நாகம், யோக நிஷ்டை மூலம் ஒருவர் குண்டலினி சக்தியை பெற்று ஞானம் பெறலாம் என்ற கருத்தை கூறுகிறது. இதுவே பரமசிவன் என்று வரும் போது. அவர் உடலில் பல இடங்களில் பாம்பு இருக்கும், ஆனால் அவை கட்டப்பட்டிருக்கும். இதன் பொருள், தலையில் உள்ள நாகம் அகங்காரம் என்னும் மனிதனின் நஞ்சையும், இடுப்பில் இருக்கும் நாகம் காமவெறி என்னும் நஞ்சையும், கழுத்தில் இருக்கும் நாகம் தவறான சொற்கள் என்னும் நஞ்சையும் கட்டி, நாம் யோகம் (கர்ம யோகம், பக்தி யோகம், ராஜயோகம் (குண்டலினி எழுப்புதல்), ஞான யோகம்) செய்தால், மனிதன் சித்தநிலை அடையலாம் என்ற சிவதத்துவம் அடங்கியுள்ளது.
சூரியன் மற்றும் சந்திரன் பாதைகளின் புறவெட்டு 'ராகு'. எனவே, இவரின் காரகத்துவங்கள் மனிதனின் புற ஒழுக்கங்களை அதாவது வெளியில் தெரியக்கூடிய ஒழுக்கங்களை பாதிக்கின்றன. இதையே, ராகு என்பது காமத்தின் (நஞ்சு) குறீயீடு. அதாவது பற்றுதல், பிடித்தல், விழுங்குதல் மற்றும் பின்தொடர்தல் (புலனாய்வு, சோம்பல், அலட்சியம், வஞ்சகம், சூது, பொய், பெரும் திருட்டு, ஏமாற்றுதல், நடிப்பு, ஆடம்பரம், போதை) என்னும் குணம் கொண்டது. அதனால் தான் இவரை கட்டுப்படுத்தும் அதிபதியாய் தேவி சாமுண்டி (அ) துர்கா (துர் = கெட்ட சக்தியிடம் + கா = காத்தல்) துஷ்ட சக்திகளிடம் இருந்து காப்பாற்றுபவள் என்று பொருள்

நன்றி தி ஹிந்து

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 16, 2017 1:29 am

ஜோதிடம் என்பது அறிவியலா?-சூரியன் மற்றும் சந்திரன் பாதைகளின் அக வெட்டு 'கேது'. --ஒரு ஆய்வு - 17

சூரியன் மற்றும் சந்திரன் பாதைகளின் அக வெட்டு 'கேது'. எனவே, இவரின் காரகத்துவங்கள் மனிதனின் அக ஒழுக்கங்களான - அதாவது மனம் சார்ந்த ஒழுக்கங்களான (ஞானம், தியானம், தவம், மௌனம், வைராக்கியம், நிதானம், மனவெறுப்பு, விரக்தி, சந்நியாசம், ஆன்மீக உணர்வு, பிடிப்பு இல்லாமை, வேதாந்தம்) இவற்றின் குறீயீடாக கேது உள்ளது.
கேது என்பது மூலாதார அடித்தளத்தில் சுருண்டு கிடக்கும். இதுவே ஞானத்தின் ஆரம்பப் புள்ளி. அதனால் தான் இவரின் அதிபதி முழு முதற்கடவுள் 'விநாயகர்'. விநாயகர் ஞானத்தின் மூலப்பொருள் என்று இந்து மதம் விளக்குகிறது. இவரின் வாகனம் சிறிய எலி. அதாவது எலி என்பது நம் கட்டுக்குள் அகப்படாமல், ஓடியும் ஒளிந்தும் செல்லும் மனதின் குறீயீடு ஆகும். அதன் மீது அமர்ந்து, அதனை தான் வசம் வைத்து அடக்கி, ஞானத்தை கொடுப்பவர் 'ஸ்ரீ விநாயகர்'. இதனை அறிந்த நம் சித்த பெருமக்கள், கேதுவின் அதிபதியாக விநாயகரை வைத்துள்ளனர்.

மேலும், கேதுவின் இன்னொரு அதிபதி 'சித்திரகுப்தன்'. இவர் நம் பாவ புண்ணிய கணக்குகளை பதிவு செய்பவர். இதை, நம் உடல் செல்லின் மூலக்கூறு (DNA) என்று பொருள் கொள்ளலாம். அவ்வாறு நம் மூதாதையர் செய்த பதிவு பாவ புண்ணியங்கள் DNA வில் பதிவு செய்யப்பட்டு, நாம் வருங்கால சந்ததியினரை பாதிக்கும். எனவே தான், ராகு - தந்தை வழி பாட்டன், கேது - தாய் வழி பாட்டன் குறிக்கிறது.
மனதின் இருளை குறிக்கும் கேது, சந்திரனை பிரிக்கும் செந்நாகம் என்று அழைக்கப்படுகிறது. ஆதாவது மனதில் பல குழப்பங்களை உருவாக்கி பின் தெளிய வைப்பது கேதுவின் வேலை. எனவே கேது விரக்தி உருவாக்கும் கிரகம் என்று அழைக்கப்படுகிறது.
மனவிரக்தி அடைந்த மனிதன் முதலில் தான் ஏன் பிறந்திருக்கிறோம் என்றும் தனது பிறப்பின் நோக்கம் என்ன என்றுமே சிந்திக்க முயல்வார். மேலும் ஆன்மீக பற்றும் ஏற்படும். எனவே, கேது ஞானம் தரும் ஞானகாரகன் ஆவார்.
சனி கர்மகாரகன் என்பது நமக்குத் தெரியும். சனி யாரிடம் எல்லாம் சேருகிறாரோ, அவர் மூலம் நாம் முற்பிறவியில் பாதிக்கப்பட்டு இருப்போம். உதாரணமாக, சனி ராகுவுடன் பகை ராசியில் இருந்தால், தந்தை வழி பாட்டன் மூலம் ஏற்பட்ட பாவங்கள் நம்மை பாதிக்கும்.
சனி கேதுவுடன் இருந்தால், தாய் வழி பாட்டன் மூலம் ஏற்பட்ட பாவங்கள் நம்மை பாதிக்கும். சனி சூரியனுடன் இருந்தால், பித்ருக்கள் சாந்தி செய்யாத செய்த பாவத்தை குறிக்கும்.

நன்றி மணிகண்டன் தமிழ் ஹிந்து

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக