புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாரடைப்பு Poll_c10மாரடைப்பு Poll_m10மாரடைப்பு Poll_c10 
69 Posts - 40%
heezulia
மாரடைப்பு Poll_c10மாரடைப்பு Poll_m10மாரடைப்பு Poll_c10 
51 Posts - 30%
Dr.S.Soundarapandian
மாரடைப்பு Poll_c10மாரடைப்பு Poll_m10மாரடைப்பு Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
மாரடைப்பு Poll_c10மாரடைப்பு Poll_m10மாரடைப்பு Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மாரடைப்பு Poll_c10மாரடைப்பு Poll_m10மாரடைப்பு Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
மாரடைப்பு Poll_c10மாரடைப்பு Poll_m10மாரடைப்பு Poll_c10 
3 Posts - 2%
manikavi
மாரடைப்பு Poll_c10மாரடைப்பு Poll_m10மாரடைப்பு Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
மாரடைப்பு Poll_c10மாரடைப்பு Poll_m10மாரடைப்பு Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மாரடைப்பு Poll_c10மாரடைப்பு Poll_m10மாரடைப்பு Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
மாரடைப்பு Poll_c10மாரடைப்பு Poll_m10மாரடைப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாரடைப்பு Poll_c10மாரடைப்பு Poll_m10மாரடைப்பு Poll_c10 
320 Posts - 50%
heezulia
மாரடைப்பு Poll_c10மாரடைப்பு Poll_m10மாரடைப்பு Poll_c10 
198 Posts - 31%
Dr.S.Soundarapandian
மாரடைப்பு Poll_c10மாரடைப்பு Poll_m10மாரடைப்பு Poll_c10 
61 Posts - 9%
T.N.Balasubramanian
மாரடைப்பு Poll_c10மாரடைப்பு Poll_m10மாரடைப்பு Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
மாரடைப்பு Poll_c10மாரடைப்பு Poll_m10மாரடைப்பு Poll_c10 
22 Posts - 3%
prajai
மாரடைப்பு Poll_c10மாரடைப்பு Poll_m10மாரடைப்பு Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
மாரடைப்பு Poll_c10மாரடைப்பு Poll_m10மாரடைப்பு Poll_c10 
3 Posts - 0%
Barushree
மாரடைப்பு Poll_c10மாரடைப்பு Poll_m10மாரடைப்பு Poll_c10 
2 Posts - 0%
Guna.D
மாரடைப்பு Poll_c10மாரடைப்பு Poll_m10மாரடைப்பு Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மாரடைப்பு Poll_c10மாரடைப்பு Poll_m10மாரடைப்பு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாரடைப்பு


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Nov 24, 2009 1:13 pm

இருதயம் என்பது என்ன ?

இருதயம் என்பது சுமார் கைமுட்டி அளவில் உள்ளதான ஒரு வலுவான தசை உறுப்பு. இது, மார்பின் நடுவில் அமைந்துள்ளது. ஒரு உடல் நலமுள்ள ஒய்வில் உள்ள வயது வந்தவரின் இருதயம் நிமிடத்திற்கு 72 தடவை துடிக்கும். இருதயத்தின் வேலை, தமனிகள் மற்றும் சிரைகள் எனப்படும் இரத்தக் குழாய்களின் (மெல்லிய நீண்டு சுருங்கும் தன்மையுடைய குழாய்கள்) வழியாக உடலின் எல்லா பாகங்களுக்கும் இரத்தத்தினைச் செலுத்துவதாகும். தமனிகள், உயர்வளி மற்றும் பிற உடலுக்கான ஊட்டச் சத்துகள் நிரப்பப்பட்ட இரத்தத்தை எடுத்துச் செல்கின்றன. சிரைகள், "படன்படுத்தப்பட்ட" இரத்தத்தினை இருதயத்திற்கு எடுத்துச் செல்கின்றன.

மாரடைப்பு என்பது என்ன ?

அளவுமீறிய அல்லது அளவகடந்த இதய தசை வீக்கம் என்பது (இதய தசை வீக்கமே) சதாரண மக்களின் (அ) பாமர மக்களின் மொழியில் இதய அடைப்பு (ஆ) மாரடைப்பு எனப்படுகிறது. இரத்த உறைவினாலும் கொழுப்பு இயத்தின் ஒரு பகுதிக்குச் செல்லும் இரத்த ஒட்டத்தில் முற்றிலுமாக தடை ஏற்படும்போது இந்த இதய அடைப்பு ஏற்படுகிறது.

இதயத்தின் தசை அழிவுற்றதைப் போல (அ) அழிவுறுவதால் இதய அடைப்பு ஏற்படும் போது ஒரு மனிதன் கடுமையான வலியை உணர்வான்
மாரடைப்பின் காரனிகளைக் கொண்டவர்கள் யார்?


பின்வரும் இன்னல் காரனிகளைக் (ஸிவீsளீ திணீநீtஷீக்ஷீs) கொண்டவர்கள் மாரடைப்பினை வளர்ப்பதற்குச் சார்புடையவர்கள்.


  • இரத்தத்தில் உயர்ந்த அளவு கொழுப்புப்பொருள்:
    இருதயம், குறுக்கப்பட்ட இரத்தக்குழாய்கள் வழியாக இரத்தத்தினைத் தள்ளுவதற்கு மிகவேகமாகவும், கடினமாகவும் பாய்ச்சவேண்டும். இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் உயர் மட்டம் மற்றும் தெவிட்டிய கொழுப்புகள் குறுக்கப்பட்ட இரத்தக் குழாய்களுக்குக் காரணமாகின்றன.
  • உயர் இரத்த அழுத்தம் :
    இரத்த அழுத்தம் என்பது இரத்தக்குழாய்களின் சுவர்களின் மீது இரத்தத்தின் விசையாகும். உயர் இரத்த அழுத்தம் விசையை மிகுதிப்படுத்தி இரத்தக்குழாய்களின் மென்மையான உட்புற உறையைச் சேதப்படுத்தும். கொலஸ்ட்ராலும் கொழுப்பும் சிதைக்கப்பட்ட சுவர்களினூடே சேர்ந்து வளர்ந்து
    உள்ளுறுப்பைத் தடைசெய்யும். விளைவாக, குறுக்கப்பட்ட குழாய்கள் வழியாக இரத்தத்தினைப் பாய்ச்ச கடினமாக பம்ப் செய்ய வேண்டும்.
  • சிகரெட்டுபுகை பிடித்தல்
    சிகரெட்டுகளில் உள்ள கார்பன்மானாக்ஸைடும்,நிகோடினும் உயிரணுக்கள் உயர்வளி பெறுவதைப் பாழாக்குகின்றன. உயிரணுக்களுக்கு ஆக்ஸிஜன் அளிப்பினைச் செய்வதற்காக இருதயம் மிகவும் கடினமாக உழைக்க வேண்டிவரும். புகைபிடித்தல் இரத்தக் குழாய்களுக்குள் தட்டு (ஜீறீணீஹீuமீ) சேகரிப்புகளை ஊக்குவிக்கும். உறைந்த கட்டி உருவாகும் இன்னைல மிகுதிப்படுத்தும்.
  • உடற்பயிற்சி இன்மை :
    உடற்பயிற்சி இன்மையால் உடல் தொங்கலாகிறது. உங்கள் இருதயம் தகுதியிழந்து விட்டால், உடல் நலமும் தகுதியும் கொன்ட ஒருவரை ஒப்பிட நீங்கள் மாரடைப்பை எதிர்கொள்வது இருமடங்காகிவிடும்.
  • அளவு மீறிய எடை :
    அளவு மீறிய எடை கொண்டவரின் எடை காரணமாகக் கடினமாக பம்ப் செய்தல் வேண்டியிருக்கும், செயல்பாட்டிற்கு அதிகமான உயர்வளி தேவைப்படும்.
  • அழுத்தம்:
    குண்டிக்காய்ச் சுரப்பியிலிருந்து ஊறும் இயக்குநீரை அதிகமாக உற்பத்தி செய்வதின் மூலம் நம் உடல் அழுத்தத்தை எதிர்கொள்கிறது.இது இதயத்தை மிகக் கடினமாகவும் வேகமாகவும் செயலாற்றுமாறு செய்கிறது.இந்த அதிக இறைப்பால் ரத்தக்குழாய் இறுகி குறுகிவிட காரணமாகிறது.
  • நீரிழிவு நோய் (சர்க்கரை வியாதி)
    இரத்தத்தில் சர்க்கரையின் உயர்மட்டம், இரத்தக் குழாய்கள் குறுக்க மடைவதனையும், தடிப்பாவதையும் விரைவுப்படுத்துகிறது. இது, இருதயத்திற்கு இரத்தம் பாய்வதைக் குறைப்பதற்குக் காரணமாகின்றது.
  • பால் (நிமீஸீபீமீக்ஷீ)
    ஆண்களில் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
  • வயது
    இரத்தக்குழாய்கள் வயதினோடு குறுக்க மடைவதால் வயது முதிர்வு,மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை மிகுதிப்படுத்துகிறது.
  • மரபு
    உங்கள் குடும்பத்து உறுப்பினர் ஒருவர் இருதய நோய் வரலாறு உடையவர் என்றால், நீங்கள் மாரடைப்பு அடைவதற்குரிய வாய்ப்பு அதிகமாயிருக்கும்.

(இடர்) எச்சரிக்கை

பின்வரும் ஏதேனுமொரு அறிகுறியை நீங்கள் உணர்ந்தால் உங்களுக்கு மாரடைப்பு இருக்கலாம்.


  • ஒரு சில நிமிடங்களுக்குமேல், உங்கள் மார்பின் மையத்தில் வலியும் அழுத்தமும்; வலி அல்லது அழுத்தம் இருந்தாலும் வலி மறைந்து மீண்டும் வந்தாலும்.
  • தோள்கள், கழுத்து, தாடை, கைகள் ஆகியவற்றிற்கு வலி சென்றடைந்தால்.
  • மயக்கமாக உணர்தல் அல்லது மூச்சின் சுகுக்கத்தன்மை.
  • இது உங்கள் வயிற்றில் குமட்டலும் (அ) குமட்டலையும் சோர்வுணர்வையும்
  • நிரம்ப வியர்த்தல்.

உங்களுக்கு மார்படைப்பு இருந்தால் செய்ய வேண்டுவது என்ன ?



  • ஒரு ஆம்புலன்ஸ§க்காக 995யைக் கூப்பிடுக.
  • வண்டி ஒட்டாதீர்கள். அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு உங்களுடன் இருக்கும் ஒருவரை வண்டியை ஒட்டி அழைத்துச் செல்லும்படிச் செய்யுங்கள்.

மார்படைப்புக்கான சிகிச்சை என்ன ?

மார்படைப்பின் அளவிற்கேற்ப மருத்துவ மனையில் ஒருவாரம் தங்க வேண்டியிருக்கும்.
உங்களுக்குப்பின் வரும் சிகிச்சைகளுள் ஒன்றோ பலவோ செய்யப்படும்.

1. கட்டியைக் கரையவைக்கும் மருத்துவங்கள் :
உங்களுக்கான சிகிச்சையின் ஒரு பகுதியாக, கட்டியைக் கரைய வைக்கும் (tலீக்ஷீஷீனீதீஷீறீஹ்றீவீநீ) மருத்துவம் செய்யப்படும். மாரடைப்பு நுணுகி ஆராயப்பட்டு உறுதி செய்யப்பட்ட உடனேயே ஜிலீக்ஷீஷீனீதீஷீறீஹ்tவீநீதரப்பட வேண்டும்.

2. இருதய அங்கியோ பிளாஸ்டி (
Coronory Angioplasty):
அடைப்பின் அளவினைப் பார்வையிட இருதயத்துள் (
Coronory) ஒரு குழாய் செலுத்தப்படும். இருதய அங்கியோகிராமின் (Coronory Angioplasty) கண்டுபிடிப்புகளைப் பொறுத்து நீங்கள் ஸிங்கப்பூர் பெ £து மருத்தமனையில்(Singapore General Hospital)மேலும் சிக்ச்சை பெறுவதற்காகப் பரிந்துரைக்கப் படுவீர்கள். (மேலும் விவரங்களுக்கு All about Cardiac Catherisationன்னும் நூலைப் பார்க்க).

மருத்துவ மனையில் என்ன நிகழ்கிறது

உங்களுக்கான கவனிப்புத்திட்டத்தின் (
Care Plan) சுருக்கம் பின்வருமாறு.


நாள் 1

சிகிச்சை

  • நீங்கள் மருத்துவத் தீவிரக்கவனிப்புப்பகுதியில் (MICU) கண்கானிப்பு மற்றும் சிகிச்சைக்காக சேர்க்கப்படுவீர்கள்.
  • உங்கள் இருதயத்தின் துடிப்பு வீதம் மற்றும் சந்தத்தினை (Rhythm) கண்காணிக்க உங்கள் மார்பில் மின்முனைகள் வைக்கப்படும்.
  • மார்பு எக்ஸ்-கதிர் ஒன்றும்,எலெக்ட்ரோ கார்டியோ க்ராம்( ECG) ஒன்றும் இயற்றப்படும். இரத்தம் பகுப்பாய்வுக்காக எடுக்கப்படும்.
  • உங்கள் மூச்சிவிடுவதனை எளிதாக்குவதற்கான ஆக்சிஜன் தரப்படும். நீங்கள் மார்புவலியை உணர்ந்தால் செவிலிக்கு அறிவியுங்கள். உங்கள் வலியை நீக்க மருத்துவம் செய்யப்படும்.
  • நள்ளிரவிலிருந்து உணவு அல்லது குடிநீர் உட்கொள்வது தவிர்க்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுவீர்கள்.

செயற்பாடு :
படுக்கையில் ஒய்வாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுவீர்கள்.
ஊட்டமூட்டுதல் :
உங்களுக்கு உணவு தரப்படும்.


நாள் 2

சிகிச்சை


  • காலையில் ஒரு எலெக்ட்ரோ கார்டியோ க்ராம்(ECG) எடுக்கப்படும்.
  • உங்கள் இரத்த கொலஸ்ட்ராலினை கணித்த பின்னர் காலைச் சிற்றுண்டி தரப்படும்.
  • இருதய மறுச்சீரமைப்புத்திட்டக் (CRP) குழுவின் உறுப்பினர்களான, ஒரு உடற்பயிற்சியால் சிகிச்சை அளிப்பவர் (Physiotherapist), ஒரு உணவு அறிவர் (Dietician) மற்றும் ஒரு உடல் மற்றும் மனத்தின் செயல்பாட்டால் நோய் தீர்ப்பவர் (Occupational Therapist) நீங்கள் சுகமாகவும் வலியில்லாமலும் இருக்கும்போது முறையாக அறிவுரை தருவர்.

செயற்பாடு :
படுக்கையில் ஒய்வாக இருக்கும்படி நீங்கள் அறிவுறுத்தப்படுவீர்கள்.

ஊட்ட மூட்டுதல் :
சிற்றுண்டி உங்களுக்குத் தரப்படும்.

நோயாளி பற்றிய செய்தி :
மாரடைப்பு, செயற்பாடு, மருந்து, அனுமதிக்கப்படும் உணவு வகைகள் மற்றும் சோதனைகள் செயல் முறைகள் ஆகியவைபற்றி நீங்கள் இருதய மறுசீரமைப்புத் திட்டக்குழுவின் உறுப்பினர்களிடமிருந்து தெரிந்துகொள்வீர்கள்.



நாள் 3

சிகிச்சை

  • ஒரு எலெக்ட்ரோ கார்டியோ க்ராம்(ECG) காலையில் எடுக்கப்படும்.
  • மருத்துவத் தீவிரக் கண்காணிப்புப் பகுதியில் (MICU) நீங்கள் கண்காணிக்கப்பட வேண்டியதில்லை என்றால் உங்களை பொது சிகிச்சை அறைக்கு மாற்றுவார்கள்.
  • ஒரு இருதயக் கண்காணிப்பானால் (Cardiac Monitor) உங்கள் இருதய துடிப்பு வீதம் மற்றும் சந்தம் கண்காணிக்கப்படும்.
  • மார்புவலியிருந்தால் செவிலிக்கு அறிவிக்கவும்.

செயற்பாடு :
நீங்கள் படுக்கையில் ஒய்வாக இருக்கவேண்டும் என அறிவுறுத்தப்படுவீர்கள்.

ஊட்டமூட்டல் :
ஒரு சிறிது உணவு உங்களுக்குத் தரப்படும்.

நோயாளி பற்றிய செய்தி :
மாரடைப்பு, செயற்பாடு, மருந்து, அனுமதிக்கப்படும் உணவுவகைகள் மற்றும் சோதனைகள் செயல்முறைகள் ஆகியவைபற்றி நீங்கள் இருதய மறு சீரமைப்புத் திட்டக் குழுவின் உறுப்பினர்களிடமிருந்து தெரிந்து கொள்வீர்கள்.



நாள் 4-6

சிகிச்சை
இருதயக் கண்காணிப்பான் நீக்கப்படும். மார்புவலியை நீங்கள் உணர்ந்தால் செவிலிக்கு அறிவித்தால், ஒரு எலெக்ட்ரோ கார்டியோ க்ராம்(ECG) எடுக்கலாம் மற்றும் வலிநீக்கும் மருத்துவம் செய்யப்படலாம்.
உங்கள் இருதயத்தின் செயற்பாடுகளை மதிப்பிட ஒரு தேர்வான எதிரெ £லிகார்டியோ க்ராம் செய்யப்படும்.
செயற்பாடு :
உங்களால் எழுந்திருக்க முடியும் (மலங்கழிக்கக்) குடலை அசைக்கும்போது கஷ்டப்பட வேண்டாம். அவ்வாறு செய்வதில் கஷ்டமிகுந்தால் செவிலிக்குச் சொல்லவும். மலத்தினை இளகச் செய்ய மருந்து தரப்படும்.

ஊட்ட மூட்டுதல் :
உங்கள் விருப்பப்படி உணவு உண்ணுவதற்கு முடியும்.

நோயாளி பற்றிய செய்தி :
உங்களுக்குத் தரப்படும் சிகிச்சை பற்றித் தொடர்ந்து விவரங்கள் தெரிவிக்கப்படும். நீங்கள் தெரிந்து கொள்வதற்காக, இருதயச் சீரமைப்புத்திட்டம் பற்றிய ஒரு கையேடு உங்களுக்குத் தரப்படும்.



நாள் 7

சிகிச்சை
உங்கள் உடல் நலமீட்பு நிறைவாக இருந்தால் இன்று நீங்கள் உங்கள் வீட்டிற்குத் திரும்பலாம்.
செயற்பாடு :
நீங்களாகவே நடப்பதற்கு முடியவேண்டும். நாளும் வாழ்க்கைச் செயற்பாடுகளை அதாவது குளிப்பது மற்றும் உண்பது ஆகியவற்றை மிகச்சிறு உதவியுடன் செய்யுங்கள்.

ஊட்டமூட்டல் :
உங்கள் விருப்பப்படி உங்களால் உணவு உண்ண முடியும்

நோயாளி பற்றிய செய்தி :
எழுத்தாலான செய்தியைத் தாங்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்ல அலுவலர் தருவார். உங்களுக்கு புறநோயாளி சந்திக்கும் முன்னேற்பாடு தரப்படும்.

மாரடைப்பிற்குப் பின்னர் என்ன செய்வது ?
உங்களுடய ஒழுங்கான வாழ்க்கைமுறையை மெல்லமெல்ல மீண்டும் தொடங்குவதற்கு உங்கள் மருத்தவர், ஒரு இருதய மறுச்சீரமைப்புத் திட்டம், உணவுக்கட்டுப்பாடு, மற்றும் மருந்து உட்கொள்ளுதல் ஆகியவற்றிற்குப் பரிந்துரை செய்வார்.
இருதய மறுச்சீரமைப்புத் திட்டம் :
இந்தத் திட்டம் பின் வருவனற்றிற்கு உதவும் வகையில் சில ஒழுங்கான உடற்பயிற்சிகளைக் கற்பிக்கிறது.

a.உங்களுடைய தாங்குகின்ற அளவினை அதிகமாக்குதல்.
b.தாழ்ந்த இரத்த அழுத்தம் மற்றும் இரத்த கொழுப்புப்பொருள்.
c.இறுக்கத்தை விடுவிப்பது.
d.உங்கள் எடையைக் கட்டுப்படுத்த.
e, இருதயத்தின் செயற்பாடுகளை மேம்படுத்தல்.

நீங்கள் ஒரு உள்ளக நோயாளி அல்லது புறநோயாளி இருதய மறுச்சீரமைப்புத் திட்டம் வாயிலாகப் பயிற்சி செய்யலாம். பயிற்சிகளின்போது உடல் நலம் பேணும் தொழில் வல்லுநர்கள் உங்களைக் கண்காணிப்பார். புறநோயாளி மறுச்சீரமைப்புத் திட்டத்தை நீங்கள் முடித்து விட்டபோதும் நீங்கள் வீட்டில் பயிற்சிகளைத் தொடர வேண்டும். எடுத்துக்காட்டு : நடத்தல். பாதுகாப்புடன் நீங்கள் செய்யக்கூடிய பயிற்சிகளை நீங்கள் மருத்தவரிடம் கலந்தாலோசித்துத் தெரிந்து கொள்ளலாம்.
உணவுப்பட்டியல் சீர்திருத்தங்கள் :
நீங்கள், பின்னர் குறிப்பிடப்பட்டவை போன்ற உயர்ந்த கொழுப்புப்பொருள் கொண்ட உணவையும், தெவிட்டிய கொழுப்புகள் கொண்ட உணவையும் தவிர்க்க வேண்டும். முழுமையான பாலாலான பொருட்கள், முட்டைகள், கறி, தேங்காய் எண்ணெய் மற்றும் பனை எண்ணெய்.
இவற்றிற்குப் பதிலாக சனோலா எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துங்கள். உங்கள் உணவினை வேகவையுங்கள், சுடுங்கள், அல்லது ஆவியூட்டுங்கள்.
உங்கள் மருத்துவங்களை மேற்கொள்ளுங்கள் :
அ. இரத்த அழுத்தத்தைக் குறையுங்கள்.
ஆ. மார்பு வலியைத் தணியுங்கள்.
இ. ஒரு சீரான இதயத்துடிப்பினைக் காப்பாத்துங்கள்.
ஈ. இருதயத்தின் இரத்தக் குழாய்கள் வழியாக இரத்தம் பாய்வதை உயர்த்துங்கள்.
உ. உங்கள் கொலஸ்ட்ராலைக் குறையுங்கள்.
மருத்தவர் குறிப்பிட்ட வண்ணம் மருத்துவ உணவு, உடற்பயிற்சி ஒழுங்குகளைப் பின்பற்ற வேண்டும்.
(நீங்கள் புகைபிடிப்பவராயிருந்தால்) புகைபிடிப்பதை நிறுத்துங்கள்
உங்கள் குடும்பத்தார் மற்றும் நண்பர்களின் உதவியால் புகை பிடிப்பதை நிறுத்துங்கள். அல்லது ஒரு புகைபிடிப்பு நிறுத்தல் மருத்துவச் சாலையில் சேரவும்.
நெகிழ விடுதற்கு (ஸிமீறீணீஜ்) க் கற்றுக் கொள்ளுங்கள்.
பின்வரும் திறன்களைப் பயன்படுத்தி நெகிழவிடுதலைக் கற்றுக்கொள்ளலாம்.
அ. ஆழமாக மூச்சு விடுதல் :
உங்கள் வயிற்றின் மீது கைகளுடன் உட்காருங்கள் அல்லது நில்லுங்கள். உங்கள் மூக்கு வழியாக மெதுவாக உள்ளாக மூச்சுவிட்டு உங்கள் வயிறு விரிவதை உணருங்கள். உங்கள் சுருங்கச் செய்யப்பட்ட உதடுகள் மூலம் மெல்ல மூச்சை வெளிவிடுங்கள். பலதடவை திரும்பத் திரும்பச் செய்யுங்கள்.
ஆ. தசை நெகிழவிடல் :
உங்களுடைய பாதங்களிலிருந்து உங்களுடைய முகம் வரை செயலிட்டு ஒரு வேளையில் ஒரு தசைக்குழுவினை இறுக்கச் செய்து பின்னர் நெகிழவிடுங்கள். உங்கள் தசை இலேசாவதை நீங்கள் பார்க்கலாம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1. நான் நடக்கலாமா ? படி ஏறலாமா ?

உங்களின் மாரடைப்பிற்குப் பின்னர், நீங்கள் தேவையான அளவு ஒய்விலிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுவீர்கள். மாரடைப்பிற்குப் பின்னர் மூன்றாவது வாரத்தில் நீங்கள் தட்டையான நிலத்தில் ஒழுங்கான நடத்தலைத் தொடங்கலாம். நான்காவது வாரத்தில் மாடிப்படி ஏறுதல், மலை ஏறி நடத்தல் ஆகியவற்றைத் தொடங்கலாம். ஆறு எட்டு வாரங்களில் ஒழுங்கனை செயற்பாடுகளை மீண்டும் செய்யத் தொடங்கலாம். நடக்கும் போது மார்புவலி மற்றும் மூச்சுமுட்டல் ஆகியவற்றை உணர்ந்தால் மெதுவாக நடந்து நடப்பதை நிறுத்துங்கள். உங்கள் அடையாளங்களை மருத்தவரிடம் கூறுங்கள்.

2. வேலைக்கு எப்போது திரும்பலாம் ?

இது உங்கள் வேலையின் தன்மையைப் பொறுத்தது. உங்கள் வேலை கடின உடலுழைப்பில்லாதது என்றால் சில வாரங்களில் மீண்டும் வேலைக்குச் செல்லலாம். உடலுழைப்புடன் கூடிய வேலையாய் இருந்தால் சுமார் மூன்று மாதங்களில் வேலையைத் திரும்ப மேற்கொள்ளலாம்.

3. நான் ஒழுங்கான செயற்பாடுகளுக்கும் விளையாட்டுகளுக்கு எப்போது திரும்பலாம் ?

எந்தச் சிக்கலும் இல்லாதிருந்தால் மூன்று மாதங்களில் ஒழுங்கான செயற்பாடுகளை மீண்டும் மேற்கொள்ளலாம்.


4. மீண்டும் நான் எப்போது ஊர்தியை ஒட்டலாம் ?

மாரடைப்பிற்குப் பின்னர் மூன்றிலிருந்து நான்கு வாரங்களில் உங்களால் ஊர்தியை ஒட்ட இயலும்.
தொடக்கத்தில் யாராவது ஒருவர் உம்முடன் வருவது நல்லது.

5. நான் பால்வினையில் ஈடுபடலாமா ?
பெரும்பாலானோர், மாரடைப்பிற்குப் பின்னர் நான்கிலிருந்து ஆறு வாரங்களில் பால்வினையில் (sமீஜ்) ஈடுபடத்தொடங்குகின்றனர். நீங்கள் மார்பு வலியை உணர்ந்தால் உடன் நிறுத்தி ஒய்வு கொள்ளுதல் வேண்டும்.


நன்றி -- இது சிங்கப்பூரில் மருத்துவ மனையில் கிடைத்த தகவல்...

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Nov 24, 2009 1:16 pm

வார்ஃபரின்


வார்ஃபரின் - ஏன் இந்த மருந்து பரிந்துரை செய்யப்படுகிறது?

வார்ஃபரின் ரத்த உறைவுகள் ஏற்படுவதை முன்பே உள்ள உறைவுகள் பெரிதாக வளர்வதையும் தடுக்கப் பயன்படுகிறது. இது பெரும்பாலும் சில வகை இதயத் துடிப்பு ஒழுங்கின்மையைக் கொண்ட நோயளிகளுக்கு மற்றும்/அல்லது மாரடைப்பிற்கு அல்லது இதயத் தமனி மாற்று அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு பரிந்துரை செய்யப்படுகிறது. வார்ஃபரின் இரத்த உறைவுகளுக்குக் காரணமான பொருட்கள் உருவாகாமல் தடுக்கிறது.
இந்த மருந்து சில சமயங்களில் பிற பயன்பாடுகளுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது; மேலும் தகவல் அறிய உங்கள் மருத்துவரிடமோ மருந்தகரிடமோ ஆலோசனை பெறுங்கள்.
எப்படி இந்த மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும்?

மருந்தின் தகவல் அட்டையில் உள்ள செய்முறைக் குறிப்புகளைப் பின்பற்றுங்கள். உங்கள் மாத்திரையை தினமும் ஒரே நேரத்தில் நாளுக்கு ஒன்று எடுத்துக்கொள்ளுங்கள். வார்ஃபரினில் பல பிராண்டுகள் கிடைக்கின்றன (எ.கா.: Marevan®️, Coumadin®️). அவை வெவ்வேறஉ விதமான செயல்திறன் உள்ளவை என்பதால் ஒன்றிலிருந்து இன்னொன்றிற்கு மாறாதீர்கள். கீழ்க்கண்ட அட்டவணை இந்த மாத்திரைகளின் வலுவையும் தோற்றத்தையும் காட்டுகிறது:















வலு
வண்ணம்
மாத்திரையின் முன்பக்கத் தோற்றம்
மாத்திரையின் பின்பக்கத் தோற்றம்
1 மி.கி.
பழுப்பு
மாரடைப்பு Pill
மாரடைப்பு Pillback
3 மி.கி.
நீலம்
மாரடைப்பு Pill2
மாரடைப்பு Pillback2
5 மி.கி.
இளஞ்சிவப்பு
மாரடைப்பு Pill3
மாரடைப்பு Pillback3
உங்கள் மருத்துவரைக் கேட்காமல் வார்ஃபரின் உட்கொள்வதை நிறுத்தாதீர்கள்.
நான் ஒரு வேளை மாத்திரை எடுத்துக்கொள்ள மறந்துவிட்டால் என்ன செய்வது?

தவறவிட்ட அந்த ஒரு வேளை மாத்திரையை நினைவுக்கு வந்ததும் எடுத்துக்கொள்ளுங்கள், அதாவது நீங்கள் வழக்கமாக மாத்திரை எடுத்துக்கொள்ளும் நேரத்திலிருந்து 8 மணி நேரத்திற்குள் என்றால், 8 மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டால் வழக்கமான நேரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். உட்கொள்ளும் அளவை இரண்டு மடங்காக்காதீர்கள். அப்படிச் செய்தால் ரத்தக் கசிவு ஏற்படலாம். மாத்திரை எடுத்துக்கொள்ளாமல் விட்ட சேதியைக் குறித்து வைத்துக்கொண்டு, அடுத்த முறை உங்கள் மருத்துவரிடம் செல்லும்போது அவருக்குத் தெயிப்படுத்துங்கள்.
மேற்கொள்ள வேண்டிய சிறப்பு முன்னெச்சரிக்கைகள் யாவை?

மருந்துகள்:

  • பல மருந்துகள் வார்ஃபரினின் செயல்திறனில் குறுக்கிடுகின்றன. நீங்கள் பரிந்துரைச் சீட்டு இல்லாமல், பாரம்பரிய, மூலிகை மருந்துகள் உட்படப் பிற மருந்துகளையும் எடுத்துக்கொள்கிறீர்கள் என்றால் அது குறித்த உங்கள் மருத்துவருக்கோ, மருந்தகருக்கோ தெரியப்படுத்துவது முக்கியம். இம்மருந்துகளில் பின்வருவனவும் அடக்கம்:

    • அமிலக் குறைப்பு மருந்துகள் (ஆன்டசிட்கள்)
    • இருமல் அல்லது ஜலதோஷ மருந்துகள்
    • காஸ்ட்ரிக் அல்சர் மருந்துகள்
    • மலமிளக்கிகள்
    • வலி நிவாரணிகள் (எ.கா. ஆஸ்பிரின் மற்றும் பிற என்எஸ்எய்ட்கள்)
    • கூடுதல் விட்டமின் உள்ள உணவுகள் (விட்டமின் கே)
    • கூடுதல் ஜிங்க்கோ பிலோபா உள்ள உணவுகள்

  • ஜமு, சீன அல்லது ஆயுர்வேத மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது. ஏனெனில் அவை வார்ஃபரினை எப்படி பாதிக்கின்றன என்று சொல்ல முடியாது.

கர்ப்பம்:

  • வார்ஃபரின் பிறவிக் கோளாறுகளை ஏற்படுத்தக் கூடும். நீங்கல் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்றால் அல்லது கர்ப்பமாக விரும்புகிறீர்கள் என்றால் உங்கள் மருத்துவருக்கோ, மருந்தகருக்கோ தெரியப்படுத்துங்கள்

அறுவைச் சிகிச்சை:

  • நீங்கள் அறுவைச் சிகிச்சை செய்துகொள்ளவிருக்கிறீர்கள் என்றால் (பல் அறுவைச் சிகிச்சை உட்பட) நீங்கள் வார்ஃபரின் எடுத்துக்கொள்வதை டாக்டருக்கோ மருத்துவருக்கோ தெரியப்படுத்துங்கள். மிக அதிக ரத்தக் கசிவு ஏற்படுவதைத் தவிர்க்க அறுவைச் சிகிச்சைக்கு முன் சில நாட்களுக்கு வார்ஃபரினை நிறுத்திவைக்கும்படி உங்கள் மருத்துவர் சொல்லக் கூடும்.

மது அருந்துதல்:

  • அளவுக்கு அதிகமாக மது அருந்துவதைத் தவிருங்கள். ஒர வாரத்திற்கு 5 கேன் பீர் அல்லது 1 புட்டி திராட்சை மதுவிற்கு மேல் குடிக்காமல் இருப்பது நல்லது.

அன்றாட நடவடிக்கைகள்:

  • ரேசர்கள் மற்றும் பிற கூர்மையான பொருட்களை கவனமாகப் பயன்படுத்துங்கள்.
  • உடல் தொட்டு விளையாடும் ஆட்டங்களை (எ.கா.: கால்பந்தாட்டம், ரக்பி, தற்காப்பு சண்டைக் கலைகள்) அல்லது உங்களுக்கு காயம் ஏற்படுத்தக் கூடிய நடவடிக்கைகளைத் தவிருங்கள்.

காயங்கள்:

  • உங்களுக்குச் சிறிய காயம் ஏற்பட்டால் அதைக் கழுவிவிட்டு, ரத்தக் கசிவு நிற்கும் வரை (இதற்கு 10 நிமிடங்கள் ஆகலாம்) அந்த இடத்தில் அழுத்துங்கள். காயம் பட்ட இடத்தில் நிற்காமல் ரத்தம் கசிந்தாலோ உங்களுக்குத் தலையில் அடிபட்டிருந்தாலோ உடனடியாக மருத்துவப் பராமரிப்பை நாடுங்கள். உதவிக்காகக் காத்திருக்கும்போது ரத்தம் கசியும் இடத்தைத் தொடர்ந்து அழுத்தி வைத்திருங்கள்.

இந்த மருந்தால் என்ன பக்க விளைவுகள் ஏற்படக் கூடும்?

ரத்தக் கசிவு, வார்ஃபரின் மிகப் பொதுவான பக்க விளைவு, பின்வரும் பக்க விளைவுகள் எவையேனும் உங்களுக்கு ஏற்பட்டால் தயவுசெய்து உங்கள் மருத்துவருக்குத் தெரியப்படுத்துங்கள்.

சதைதல்:
நீங்கள் கீழே விழுந்தாலோ எதன் மீதாவது மோதிக்கொண்டாலோ அடிபட்ட இடம் சட்டென்று சதைந்துபோய்விடலாம். பாதிக்கப்பட்ட இடத்தைத் தேய்யக்கவோ மசாஜ் செய்யவோ கூடாது. சதைந்த இடம் பெரிதானால் அல்லது குறையாவிட்டால் அல்லது காரணம் இல்லாமல் சதைந்துபோனால் மருத்துவப் பராமரிப்பை நாடுங்கள்.
ரத்தக் கசிவு:
உங்களுக்குப் பின்வரும் அறிகுறிகள் தோன்றினால் தயவுசெய்து மருத்துவப் பராமரிப்பை நாடுங்கள்:

  • காதுகள், மூக்கு, ஈறுகளில் ரத்தம் கசிதல் (மென்மையான டூத்பிரஷ்ஷையே பயன்படுத்துங்கள்)
  • ரத்த வாந்தி (அரைத்த காபி போலவே ரத்தம் போலவே இருக்கலாம்)
  • காரணம் சொல்ல முடியாத கடும் அடிவயிற்று வலி
  • சருமத்தில் சிவப்புப் புள்ளிகள்
  • அசாதாரண வலி அல்லது வீக்கம் (எ.கா., மூட்டுகளில்)
  • சிறுநீரில் ரத்தம்
  • கடும் மாதவிடாய் ரத்தப் போக்கு
  • குதத்தில் ரத்தக் கசிவு
  • கருமையான பசை போன்ற மலம்

உணவு தொடர்பாக நான் என்ன சிறப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்?

நீங்கள் உண்ண வேண்டிய உணவு குறித்து உங்கள் மருத்துவரிடம் பேசுஙகள். கல்லீரல், கீரை, புரோக்கொலி போன்ற விட்டமின் கே உள்ள உணவுகளை உட்கொள்வதில் பெரிய மாற்றங்கள் எதையும் செய்யாதீர்கள். ஏனெனில் அந்த மாற்றங்கள் வார்ஃபரினின் விளைவுகளை மாற்றக் கூடும்.

பொதுவான உணவுப் பொருட்களில் விட்டமின் கே







































குறைவுஓரளவுஅதிகம்
பழங்கள்ஆப்பிள், வாழைப்பழம், ஆரஞ்சு, பேரிக்காய்--
கொழுப்புகளும் எண்ணெய்களும்சோள எண்ணெய்
நல்லெண்ணெய்
சூரியகாந்தி எண்ணெய்
-கனோலா எண்ணெய்
(15கி - 1 கரண்டி)
சோயா எண்ணெய்
(15கி - 1 கரண்டி)
இறைச்சி மற்றும் இறைச்சி தயாரிப்புகள்பன்றி முதுகு, விலா இறைச்சி
மாட்டு இறைச்சி, பன்றி இறைச்சி
சிக்ன் (மார்பு)
சிக்கன் கல்லீரல் (100 கி)
பன்றி கல்லீரல் (100 கி)
மாட்டு இறைச்சி கல்லீரல் (100 கி)
முட்டைக் கரு
பால் மற்றும் பால் தயாரிப்புகள்வெண்ணெய், பாலாடைக் கட்டி,
பால்
--
கஞ்சிகள் மற்றும் தானியத் தயாரிப்புகள்பிரெட் (4 துண்டுகள்)
கஞ்சிகள்
அரிசி (1/2 கோப்பை)
--
பானங்கள்
(வேறு அளவு குறிப்பிடப்படாத பட்தத்தில் 1/2 கோப்பை)
காபி, கோலா, தேனீர், பழரம்பச்சைத் தேயிலை
(2 தேனீர்ப் பைகள்)
-
காய்கறிகள்
(வேறு அளவு குறிப்பிடப்படாத பட்தத்தில் 1/2 கோப்பை)
காரட்
செலரி
சோளம்
காளான்
உருளைக் கிழங்கு
தக்காளி
அஸ்பரகஸ்
கோஸ்
காலிஃப்ளவர்
சாலட் கீரை
புரேக்கொலி
முளைவிட்ட பாசிப் பயறு
சைனீஸ் கய் லான்/கேல்
பார்ஸ்லி
கடல்பாசி
பசலைக் கீரை
பயறுகள்சோயா பால் பீன்ஸ்
சோயா பீன்ஸ்
(2 டெஸர்ட் ஸ்பூன்கள்)
கொண்டைக் கடலை
(2 டெஸர்ட் ஸ்பூன்கள்)
மொசைக் கொட்டை
(2 டெஸர்ட் ஸ்பூன்கள்)
டோஃபு
கூடுதல் உணவுகள்-மீன் எண்ணெய் (15கி - 1 கரண்டி)
விட்டமின் கே உள்ள
மல்டிவிட்டமின்கள்
(1 மாத்திரை)

இந்த மருந்தை எப்படிப்பட்ட இடத்தில் வைத்திருக்க வேண்டும்?

இதைக் குளிர்ச்சியான, உலர்ந்த, வெளிச்சம் படாத இடத்தில் வையுங்கள். குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வையுங்கள்.

நான் வேறென்ன தெரிந்துகெகாள்ள வேண்டும்?

நீங்கள் வேறொரு மருத்துவர் அல்லது பல் மருத்துவர் அல்லது மருந்தகரிடம் ஆலோசனை பெறுகிறீர்கள் என்றால் நீங்கள் வார்ஃபரின் எடுத்துக்கொள்வதை எப்போதுமே அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

நீங்கள் வார்ஃபரின் எடுத்துக்கொள்வதால் நீங்கள் காலம் தவறாமல் ரத்தப் பரிசோதனைகளுக்கு வர வேண்டும். ஒவ்வொரு முறை உங்கள் மருத்துவரிடம் வரும்போது உங்கள் சர்வதேச சாதாரணமாக்கப்பட்ட விகிதத்தை (ஐஎன்ஆர்) சோதிக்க ரத்தப் பரிசோதனை செய்யப்படும். ஐஎன்ஆர் ரத்த உறைவுத் தடுப்பின் தீவிரத்தைப் பிரதிபலிக்கிறது. எனவே நீங்கள் வார்ஃபரின் சரியான அளவுகளில் உட்கொள்வதை உறுதிப்படுத்த ஒவ்வொரு சந்திப்பிற்கும் தவறாமல் வருவது முக்கியம். எப்போதுமே ஒரு சந்திப்பைத் தவற விட்டால் வேறொரு சந்திப்பிற்கு தேதி, நேரம் குறியுங்கள்.
நீங்கள் வார்ஃபரின் உட்கொள்வதைச் சுட்டிக்காட்ட ஒரு அடையாள அட்டையை () எடுத்துச் செல்வது பற்றி சிந்திக்க வேண்டும். இது குறிப்பாக அவசர சூழ்நிலையின்போது அல்லது நீங்கள் சுயநினைவின்றி இருக்கிறீர்கள் என்றால் முக்கியமானது. இந்த அட்டையை எப்படிப் பெறுவது என்பது குறித்து உங்கள் மருந்தகரையோ மருத்துவரையோ கேளுங்கள்.



நன்றி -- இது சிங்கப்பூரில் மருத்துவ மனையில் கிடைத்த தகவல்...


avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Tue Nov 24, 2009 4:36 pm

மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Nov 24, 2009 4:57 pm

மாரடைப்பு 678642 மாரடைப்பு 678642

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 24, 2009 5:10 pm

மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196 மாரடைப்பு 677196ஒரு மருத்துவ தகவல் என்றால் இப்படி இருக்கணும் ,
என்ன நமக்கு தெரியனுமோ அத்தனையும் தந்து அசத்தி இருக்கிறது இந்த பதிவு ,
நமக்கும் படிக்க தந்த இந்த பதிவுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிகள்.
பாராட்டுக்கள் தாமு ,அசத்தலான கட்டுரை , மாரடைப்பு 154550 மாரடைப்பு 154550 மாரடைப்பு 154550 மாரடைப்பு 154550



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Nov 25, 2009 5:31 am

நன்றி மீனு மாரடைப்பு 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக