புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காமம் எதனால் உண்டாகிறது? - Page 2 Poll_c10காமம் எதனால் உண்டாகிறது? - Page 2 Poll_m10காமம் எதனால் உண்டாகிறது? - Page 2 Poll_c10 
42 Posts - 63%
heezulia
காமம் எதனால் உண்டாகிறது? - Page 2 Poll_c10காமம் எதனால் உண்டாகிறது? - Page 2 Poll_m10காமம் எதனால் உண்டாகிறது? - Page 2 Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
காமம் எதனால் உண்டாகிறது? - Page 2 Poll_c10காமம் எதனால் உண்டாகிறது? - Page 2 Poll_m10காமம் எதனால் உண்டாகிறது? - Page 2 Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
காமம் எதனால் உண்டாகிறது? - Page 2 Poll_c10காமம் எதனால் உண்டாகிறது? - Page 2 Poll_m10காமம் எதனால் உண்டாகிறது? - Page 2 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காமம் எதனால் உண்டாகிறது?


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
Guest
Guest

PostGuest Sun Oct 23, 2016 7:00 pm

First topic message reminder :

ஒருவன் வண்டியை திறந்த வெளியில் அல்லது தனது வீட்டில் எப்படியெல்லாமோ ஓட்டி மகிழ்கிறான். விபத்து ஏற்பட்டாலும் அவனுடன் முடிகிறது. அதுவே வீதிக்கு வந்தால் எத்தனை அப்பாவி உயிர்கள் பாதிக்கப்படும்.

அதே போல் காதல் காமம் ஒரு உயிரினத்தின் உன்னதமான உணர்வாகும். காமம் அவனளவில்-அவளளவில் இருந்து விட்டால் அது இன்பம்,உன்னதமான உணர்வுமாகும்.

காமம் பற்றி வள்ளுவன் சொல்கிறான்.........

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.

மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.

அது அவனை மீறி வெறியாகி வெளியே சென்று விட்டாலோ? இன்றைய நாளில் உலகெங்கும் குழந்தை முதல் முதியவர் வரை பாதிப்புக்குள்ளாகி கொலை,கடத்தல், ஆசிட் வீச்சு, இணையங்களில் பரவும் கொடூரங்கள் என பயங்கர ஆயுதமாகி அழித்து விடும்.இப்படி அழித்துக் கொண்டிருப்பதை நாம் தினமும் காண்கிறோம்.

பாலியல்வன்புணர்வு,பாலியல் முறைகேடுகள், காம வெறி உலகையே ஆட்டிக் கொண்டிருக்கிறது. பாதிக்கப்படும் ஆண்களும் பெண்களும் குடும்பங்களும் சமூகமும்  இந்த அரக்கப் பிடியில் இருந்து தப்ப முடியாமல் தவிக்கிறது.

தற்போதய அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் எல்லா பிரச்சனைகளையும் விட  பாலியல் குற்றச்சாட்டுகள் முக்கிய விடயமாக இருந்து வருகிறது. பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் சுமத்தும் பாலியல் குற்றச்சாட்டுகள் ஒருபுறம் இருக்க, நான் பாதிக்கப்பட்டேன் என்று பிரச்சாரத்தில் குரல் கொடுக்கும் பெண்களின் எண்ணிக்கை இன்னொருபுறமாக அதிகமாகி வருகிறது.

காதலைப் போல் காமமும் ஒரு உன்னதமான மென்மையான உணர்வு.ஒருவர் விரும்பினால் மட்டுமே காதலும் காமமும் ஏற்புடையது என்கிறார் வள்ளுவர்.

தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி.

பொதுவாக, காமம் என்ற சொல் உடலின்பத்தையோ வெறியையோ உணர்த்தும் வகையில் புரிந்து கொள்ளப்படுகிறது. இதனால்தான் காமத்துப்பால் எனக் கேட்டவுடனே சிலர் மருட்சி அடைகின்றனர். ஊடல் காமத்திற்கு இன்பம்.வள்ளுவன் என்ன சொல்கிறான்.............

உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.

இந்தக் காமம் ஒருவனது உள்மனதில் தோன்றும் விகாரங்களால் ஏற்படுகிறது என்பது புத்தர் கொள்கை. எனவே காமத்திற்குக் காரணம் மனம்தான் என்கிறது பௌத்தம்.

காமத்திற்குக் காரணம் மனம் இல்லை. அதற்குக் காரணம் வெளியில் இருந்து மனதைப் பாதிக்கும் புறப்பொருட்கள்தான் என்கிறது, ஆசீவகம்.

தமிழகத்தில் எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்து விட்டன,இனி எதுவுமே இல்லை என தொலைக்காட்சிகள், ரெமோ நாயகன் அழுததற்காக விவாதம் நடத்துகிறது.  
பிரச்சனைகள் தீர்ந்து விட்டது என்கிறீர்களா? இல்லை என்கிறீர்களா?

இன்று நடந்து வரும் காமத்திற்கு(காமவெறிக்கு) ஆளாகி உயிரைப் பறி கொடுப்போர்,பாலியல் கொடுமைகளை அனுபவிப்போர்,இவர்களை எண்ணிப் பார்த்து,இதற்கு என்ன காரணம்?  
மனமா,புறச்சூழலா அல்லது வேறு காரணங்களா?  நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?


avatar
Guest
Guest

PostGuest Sat Mar 11, 2017 11:58 pm

இது  செமினார் முடிவில் நடக்கும் ஒரு மாணவர் கருத்தரங்கு மட்டுமே. ஒவ்வொருவரும் பொதுவான பிரச்சனைகள் பற்றிய ஒரு தலைப்பை தெரிவு செய்வார்கள். அதிக வாக்குகள் பெறும் (intranet )தலைப்பு கருத்தரங்கில் பேசப்படும். முடிவை அவரவர்கள் கையிலே விட்டு விடுவோம்.இந்த செமினாரில் நான் கொடுத்த தலைப்பு பலரின் வாக்குகள் பெற்று தெரிவு செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டது. (Lust and Love)

திருக்குறள் சொன்ன காமம் பற்றி எடுத்துச் சொல்லி விளங்க வைக்கும் அறிவு எனக்கில்லாததால் Lust and Love என்ற தலைப்புக் கொடுத்தேன்.அதே சமயம் இங்கு வாழும் சூழ் நிலை கலாச்சாரம் போன்றவற்றின் பாதிப்பும் கருத்துகளில்  இருக்கும் என்பதும் நமது கலாச்சாரம்,சமூகச் சூழல் போன்றவற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது என்பதையும் கருத்தில் கொண்டு  பொதுவாக வைக்கப்படும் கருத்துகளையே
எடுத்துக் கொள்ள வேண்டி இருந்தது.

அப்படிச்  சொல்லப்படட கருத்துக்கள் சில......

சிலரின் வாதம் அறிவியல் பக்கமாக சென்றது. dopamine , serotonin, testosterone அளவுகளின் பாதிப்புகளால் தூண்டப்பட்டு காமத்தின் பக்கம் செல்கிறார்கள் என்ற வாதமும், அதனால் தவிர்ப்பது சிரமம் என்ற கருத்தும் வைக்கப்பட்டது.ஆண்கள் 20 வயதளவில் testosterone அளவு 10 மடங்கு அதிகமாவதால்  அவர்களின் ஆசைகள் அதிகம் எனவும்,அதே சமயம் பெண்களின் நிலை 20-30 வயதுகளில் ஆசைகள் அதிகரித்து பின்னர் குறைவடைய ஆரம்பிக்கிறது என்றும் இதனால் பலாத்காரம் அதிகரிப்பதாகவும் கருத்துகள் வைக்கப்பட்டன.

ஆனால் அப்படி வைத்தவர்கள் தலையில் கொட்டுவது போல் பதிலடி கொடுத்தார்கள் சிலர். அந்த தூண்டுதலை தடுக்க முடியாதவன் மனிதனாக இருக்க முடியாது. மிருகமாக கருதப்படலாம் என்றும் சில முதியவர்கள் கூட  தவறு  செய்வதை காண முடிகிறது என்றும் சொல்லப்பட்டது.இதற்கு என்ன காரணம் என்றும் கேள்வி எழுப்பினார்கள்.(சமீப காலத்தில் வயதில் கூடிய பிரபலங்கள் சிறுவயதுப் பெண்களை மணம் முடித்தது செய்திகளாக வந்திருந்தது) ஹாலிவுட் பிரபலங்கள் பில் கொச்பி,ஜாக்சன் போன்றவர்கள் வயதில் மிக்க கூடியவர்கள் இக்குற்றச்  சாட்டுகளுக்கு ஆளானவர்கள்.

பெண்களின் அலங்காரம்,உடை போன்றவை காரணமாக பாலியல் துன்புறுத்தல் அதிகமாகிறது என்ற வாதம் எடுபடவில்லை.சினிமா,தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் காமத்திற்கு தூண்டுதலாக இருக்கின்றது என்ற வாதமும் வைக்கப்பட்டது.ஏனோ பலர் அதை முற்றிலுமாக ஏற்றுக் கொண்டதாக தெரியவில்லை. சிலர் திருமணத்தின் பின் ஏற்பட்ட நிறைவேறாத ஆசைகளின் பிரதிபலிப்பாகக் கூட இருக்கலாம் என்றனர். ஏன் பேசித் தீர்த்துக் கொள்ள முடியாதா/பிரிந்து வேறு மணம் முடிப்பது/மருத்துவரை நாடுவது இப்படி பல வழிகள் இருக்கிறதே என்ற கேள்விகளை சிலர் எழுப்பினர்.

காமம் அதைத் தொடர்ந்து வரும் விபச்சாரம்,பாலியல் துன்புறுத்தல் பற்றி வைக்கப்பட்ட கருத்தில், 25% ஆண்களும்,15% பெண்களும் இவற்றில் அதிக ஈடுபாடுடையவர்களாக இருக்கின்றனர்(இங்குள்ள நிலை). அதனால் காமம் இருவருக்கும் பொதுவானது என்றும், இருவருமே தப்பான வழியில் செல்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டது. (ஒரு பெண் ஆணை பலாத்காரப்படுத்திய வழக்கொன்றை சுட்டிக் காட்டினார் ஒருவர்.)

சுவையான கேள்வி ஒன்றை ஒருவர் வைத்தார். உடலுறவு காரணமாக ஏற்படும் ஆர்வம்/ஆசை காமமா அல்லது பலாத்காரம் செய்வது காமமா? (lust and sex  -assault). (காமம் என்ற உணர்வை எப்படி எல்லாம் புரிந்து வைத்திருக்கிறார்கள்?) காமம் வேறு,காமவெறியினால் ஏற்படும் தாக்குதல்கள் வேறு என்று விளக்கம் கூறினர் சிலர்.

சமீப காலங்களில் பள்ளிகளில் வேலை செய்யும் இடங்களில் அதிக தாக்குதல்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன என்ற அறிக்கையை சுட்டிக் காட்டினர் சிலர்.(sexual abuse, sexual assault.,Sexual harassment, -in schools,colleges, working palces,millitary)

ஒவ்வொரு 98 வினாடிகளுக்கு ஒரு பாலியல் தாக்குதல் அமெரிக்காவில் நடைபெறுகிறது.எட்டு நிமிடத்துக்கு ஒரு குழந்தை(16 க்கு குறைந்த) தாக்குதலுக்கு உள்ளாகிறது.அதே சமயம் ஆயிரத்தில் ஆறு பேர் மட்டுமே தண்டனைக்கு உள்ளாகிறார்கள்.ஐந்து பெண்களில் ஒரு பெண்ணும்,20 ஆண்களில் ஒரு ஆணும் பாலியல் தாக்குதலுக்கு(rape) ஆளாகிறார்கள்  எனவும்,  பலர் சில காரணங்களுக்காக வெளியிடுவதில்லை எனவும்,இது ஒரு கொடிய தொற்று நோய் எனவும் அதை நம்மால் தடுக்க முடியவில்லை எனவும் -முன்னாள் சனாதிபதி ஒபாமா தனது பதவிக்கால இறுதியில் வருத்தத்துடன் தெரிவித்த கருத்தாகும்.

இதனால் கிராமப்புற பெண் குழந்தைகளை கல்லூரிகளுக்கு அனுப்ப பெற்றோர் அச்சமடைவதாகவும் தெரிவிக்கின்றனர்.இப்படியான குற்ற வழக்குகள் நீதிமன்றங்களுக்கு வருவது மிகக் குறைவாகவும்,பலர் சில மாதங்களிலேயே தண்டனை முடிந்து வெளியே வந்து விடுவதையும் காண முடிகிறது.

avatar
Guest
Guest

PostGuest Sun Mar 12, 2017 12:05 am

ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலை மாறி, தப்புச் செய்யும் ஆண்-பெண் ஒருபுறம், காம வெறியுடன் பலாத்காரம்,ஆசிட் வீச்சு,கொலை,கடத்தல்  என செல்வது இன்னொருபுறம்.ஒன்று காமவெறி(Adultery) ,மற்றது மிருக குணம். இந்தக் கருத்து வைக்கப்பட்ட போது இப்படி சிந்திப்பவர்களும் இங்கே இருக்கிறார்கள் என்ற வியப்பு ஏற்பட்டது.

Love - infatuation (காதல்-ஈர்ப்பு) இரண்டிற்கும் வேறுபாடு தெரியாமல் ஆசையை வளர்த்துக் கொள்வதால் காமவேறி-பலாத்காரம் (காமம் அல்ல) ஏற்படுகிறது என்றும்,இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை தவறாகப் புரிந்து கொள்வதால் ,பெண் தன்னை விரும்புகிறாள் என்று ஆசையை வளர்த்துக் கொள்வதும்,அது கிடைக்காமல் போவதால்/தவறாகி விடுவதால் பலாத்காரம் ஏற்படுகிறது என்ற கருத்தும் எண்ணிப் பார்க்க வைத்தது. உண்மையாகவும் பட்டது. டிஸ்கொ,பார்களுக்கு வருவோரில் பலர் இப்படி தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

(சமீப கால தமிழ் நாட்டில் நடந்த சம்பவங்கள் இதற்கு எடுத்துக்காட்டாக  உள்ளது. காதலிக்க மறுத்த மாணவி ஆசிட் வீச்சுக்கு உள்ளானாள் போன்ற சம்பவங்கள். தொட்டுப் பேசினால்,சிரித்தால்,நெருங்கிப் பழகினால் உடனே தவறாகப் புரிந்து கொண்டு பின்னால் துரத்துவது…..இதற்கு சினிமாவும்/தொலைக்காட்சியும் காரணமாக இருக்கலாமா?.)

Love -Lust ஆங்கிலத்தில் சற்றே மாறுபட்டிருந்தாலும்,தமிழில் காதல் - காமம் ஒன்றல்ல.ஆனால் இரண்டும் ஒன்றுடன் ஒன்று செர்ந்திருக்க வேண்டியவை.இரண்டும் இயற்கையான மனித உணர்வுகள்.காமம் குறுகிய கால இன்பம்,காதல் நீண்டகால இன்பம்.காதலினால் காமம் ஏற்பட வேண்டும். காமத்திற்காக காதல் ஏற்படக் கூடாது.இப்படியான கருத்துகளை பலரும் வரவேற்றார்கள்.

இப்படி பல கருத்துக்கள் வைக்கப்படடாலும் மாணவர்கள் என்பதால் அவற்றை தடுக்கும் வழிகளை அவர்களால் வைக்க முடியவில்லை.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 12, 2017 9:19 pm

நன்று நல்ல  பகிர்வு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக