புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மடக்கொடி இல்லா மனை .
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நெற்றி நிறைய திருமண் இட்டுக்கொண்டு வரதராஜன் , நடராஜன் வீட்டுக்குள் நுழைந்தார் .
"வாப்பா ! வரது ! ஒரு வாரமா ஆளையே காணோமே ; என்ன விஷயம் ? "
"அதிருக்கட்டும் நட்டு ! உன் பெண்சாதி வீட்டில் இல்லையா ? "
" ஆமாம் வரது ! அவளோட அப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லி ஊருக்குப் போயிருக்கா ! போய் ஒரு வாரம் ஆவுது . ஆமாம் என் பொண்டாட்டி வீட்டில் இல்லைன்னு எப்படிக் கண்டுபிடிச்சே ? "
" இதென்ன கேள்வி ! வீடெல்லாம் ஒரே குப்பைக் கூளமா இருக்குது ; வாசல்ல கோலம் போடல ; அதனாலதான் கேட்டேன் . ஆமாம் உன் பொண்டாட்டி இல்லையே ! உனக்குக் கஷ்டமா இல்லையா ? "
" அவ இருந்தாலும் கஷ்டம் ; இல்லாட்டியும் கஷ்டம் ! "
" என்ன சொல்றே நீ ? "
" அவ இருந்தா சதா சர்வகாலம் சீரியல் பாத்துகிட்டு இருப்பா ; நாம ஒரு ஆத்திரம் அவசரத்துக்கு நியூஸ் கேட்கணும்னா முடியாது ; பேப்பர் படிச்சி தெரிஞ்சிக்கோங்கன்னு சொல்லுவா ! அவ இல்லாட்டி என்ன கஷ்டம்னா , சாப்பாடு கஷ்டம்தான் ! ஒருவாரமா ஹோட்டல் சாப்பாடுதான் ! "
"என்ன மனுஷனய்யா நீ ! ஒரு ரசம் வச்சி அப்பளம் பொரிக்க தெரியாதா உனக்கு ? கடையிலதான் அரைச்ச மாவு விக்கிறான் ; அத வாங்கி தோசை சுட்டு , மிளகாய்ப்பொடி வச்சிகிட்டு காலையில டிபனை முடிச்சிக்கலாமே ! தண்டத்துக்கு ஹோட்டல்ல போய் செலவு பண்றியே ! உடம்புக்கு ஒத்துக்குமா? "
' சமையல் வேலையெல்லாம் நமக்கு ஒத்து வராதப்பா ! அதெல்லாம் பொம்பிளைங்க சமாச்சாரம் ! ஒளவையார் சொன்னது சரியாத்தான் இருக்கு !
" அப்பிடி அவங்க என்ன சொன்னாங்க ? "
நீரில்லா நெற்றிபாழ் , நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக்கு அழகுபாழ் - மாறில்
உடன்பிறப்பு இல்லா உடம்புபாழ் பாழே
மடக்கொடி இல்லா மனை .
அப்பிடின்னு பாடியிருக்காங்க ! அதாவது வீட்டுல பொண்டாட்டி இல்லைன்னா , அந்த வீடே நாசம்னு பாடியிருக்காங்க !
" நட்டு ! அவங்க சொன்னது சரிதான் ! ஆம்பிளைங்க வீட்ல இருந்தாலும் ,இல்லாட்டாலும் ஒன்னும் தெரியாது ; ஆனா பொம்பிளைங்க இல்லைன்னா அது பளிச்சுன்னு தெரிஞ்சிடும் . அப்புறம் " நீரில்லா நெற்றி பாழ்ன்னு " சொல்லியிருக்காங்களே அதுவும் வாஸ்தவம்தான் . ஒருநாளைக்கு நெற்றியில நாமம் இட்டுக்கலைன்னா எனக்கு சோறு தண்ணியே இறங்காது ! "
" சிலபேருக்கு மத்தவங்களுக்கு நாமம் போடலைன்னா சோறு தண்ணியே இறங்காது ! "
" என்ன நட்டு ! கிண்டல் பண்றியா ? "
' இல்ல வரது ; உலகத்துல நடக்குறதைத்தான் சொன்னேன் ; தப்பா நினைச்சுக்காதே ! ஒளவையார் சைவ சமயி ; சிவனை கும்பிடறவங்க ; அதனாலதான் " நீரில்லா நெற்றி பாழ் " அப்பிடின்னு பாடியிருக்காங்க ! "
" நட்டு ! நெய்யில்லா உண்டி பாழ்ன்னு சொல்றாங்க ; நெய் விக்கிற விலையில தினமும் நெய் ஊத்தி சாப்பிட முடியுமா ? "
" வரது ! விதையிலிருந்து எடுக்குற எல்லாத்துக்கும் நெய்யின்னுதான் பேரு ; நீ ஏன் பசுமாட்டு நெய்ய நினைச்சுக்குறே ; பசுமாட்டு நெய் விலை ஜாஸ்தியாய் இருந்தா நல்லெண்ணெய் ஊத்தி சாப்பிடு ! "
" நட்டு ! ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்ன்னு பாடியிருக்காங்க ; உண்மைதான் ! காவேரிக் கரையோரமா குடியிருக்குறவங்க எல்லாமே கொடுத்து வச்சவங்க ! தினமும் துணி துவைச்சுட்டு ஆசைதீரக் குளிச்ச்சிட்டு வரலாம் . "
" வரது ! அதெல்லாம் இனிமே முடியாது ; அவன் காவேரியில தண்ணி விட்டாதானே நீ ஆசை தீரக் குளிப்பே ! '
" ஆமாம்பா ! எல்லாம் கனவா போயிடுச்சி ; மெட்ராசுல சுமார் நூறு வருஷத்துக்கு முன்னாடி ஜனங்க கூவத்துல குளிப்பாங்களாம் ; அங்கேயே துணியும் துவைப்பாங்களாம் ! இப்பத்தான் கூவம் சாக்கடையா மாறிடுச்சி "
வரது ! இன்னொன்னு சொல்லியிருக்காங்களே பாத்தியா !
" உடன்பிறப்பு இல்லா உடம்பு பாழ் "
இந்தக் காலத்துல ஒன்னே ஒன்னு ; கண்ணே கண்ணுன்னு பெத்துக்கிறாங்களே , அது தப்புன்னு அந்தக் காலத்திலேயே பாட்டி சொல்லியிருக்காங்க ! உடன் பிறப்புன்னு ஒன்னு இல்லைன்னா , குழந்தைகளுக்கு பாசம்னா என்னன்னு தெரியாமலேயே போயிடும் ; என்ன நான் சொல்றது சரிதானே ? '
" சரிதான் நட்டு ! வள்ளுவர் கூட " தம்மக்கள் மழலைச்சொல் கேளாதவர் " அப்பிடின்னு பன்மையிலதான் பாடியிருக்கார் ! சரி நட்டு ! நான் போயிட்டு வரேன் ! நேரமாயிடுச்சி ! "
" போயிட்டு வாப்பா ! "

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1224820M.Jagadeesan wrote:
ஆறில்லா ஊருக்கு அழகுபாழ்
"
வணக்கம் ஐயா !
இங்கு ஆறு என்றால் 'நதி' என்பதற்குப் பதிலாக " வழி" என்ற பொருள் நன்கு பொருந்துவதாக அமையலாம் என்பது அடியனது கருத்து.
ஒரு ஊரில் என்னென்ன அழகும் அற்புதங்களும் இந்துதான் என்ன பயன்!
அவற்றைக் காணவும், கண்டு ரசிக்கவும் , அவற்றால் பயன் பெறவும் அந்த ஊருக்குப் போக்குவரத்துப் பாதை இருந்தால்தானே அவ்வழகுகளால் அந்த ஊருக்கும் பிற இடங்களிலிருந்து அங்கு வருபவருக்கும் பயன் இருக்க முடியும் !
அவ்வாறு நல்ல பாதை இல்லாவிட்டால் , அந்த ஊரும் அதன் அழகும் எவருக்கும் பயன்படாமல் பாழாகிவிடும் அல்லவா.
"ஆறில்லா ஊருக்கு அழகுபாழ்" என்றால் நல்ல போக்குவரத்துப் பாதை இல்லாத ஊருக்கு அதன் அழகினால் எப்பயனும் இல்லை என்பது கொஞ்சம் மேம்பட்ட பொருளாகலாம் .
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
" ஆறு " என்றால் " வழி " என்று ஒரு பொருள் உண்டு என்றாலும் , இந்தப் பாடலைப் பொருத்த அளவில்
" ஆறு " என்றால் நதி என்று கொள்வதே பொருத்தமாகும் .
நல்லா றெனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று .
நல்லாறெனினும் = நல்ல + ஆறு + எனினும்
இங்கு வந்துள்ள ஆறு , வழியைக் குறிக்கும் .
" ஆறு " என்றால் நதி என்று கொள்வதே பொருத்தமாகும் .
நல்லா றெனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று .
நல்லாறெனினும் = நல்ல + ஆறு + எனினும்
இங்கு வந்துள்ள ஆறு , வழியைக் குறிக்கும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1224823M.Jagadeesan wrote:" ஆறு " என்றால் " வழி " என்று ஒரு பொருள் உண்டு என்றாலும் , இந்தப் பாடலைப் பொருத்த அளவில்
" ஆறு " என்றால் நதி என்று கொள்வதே பொருத்தமாகும் .
.
அப்படியாகில் , இப்பாவின் தற்போது நிலவும் பொருள் மறுபரிசீலனைக்கு எடுத்தாகவேண்டும்.
எல்லா ஊர்களிலும் ஆறுகள் ஓடுவதில்லை.
ஆறுதான் ஒர் ஊருக்கு அழகு என்றால், ஊரில் பொதுவாக விளங்கும் மற்ற அற்புதங்கள் எல்லாம் பாழ் என்று பொருளாகிவிடும்.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
" ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் " என்பது பழமொழி .
ஆறு எல்லா ஊர்களிலும் ஓடுவதில்லை என்ற காரணத்தினால் இப்பழமொழி பொய்யாகிவிடாது .
"ஆலும் வேலும் பல்லுக்குறுதி ; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி " என்பது பழமொழி . இப்பொழுது எல்லோருமே Brush & Paste தான் பயன்படுத்துகிறோம்; அதனால் இப்பழமொழி பொய்யென்று ஆகிவிடுமா ?
ஆறு எல்லா ஊர்களிலும் ஓடுவதில்லை என்ற காரணத்தினால் இப்பழமொழி பொய்யாகிவிடாது .
"ஆலும் வேலும் பல்லுக்குறுதி ; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி " என்பது பழமொழி . இப்பொழுது எல்லோருமே Brush & Paste தான் பயன்படுத்துகிறோம்; அதனால் இப்பழமொழி பொய்யென்று ஆகிவிடுமா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1224876M.Jagadeesan wrote:" ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் " என்பது பழமொழி .
மன்னிக்கவேண்டும் ஐயா !
அது பழமொழி அல்லவே -
நம் ஔவையின் பாடல் வரிதானே-
பாடல் வரியைப் பழமொழியாக்கினால் அது நம் பிழை என்பது அடியன் கருத்து.
இக்கருத்து நம் எண்ணத்தின் வெளிப்பாடே தவிற விவாதப் பொருள் அல்ல.
ஆறும் ஒரு ஊருக்கு அழகாகலாம். அதற்காக ஆறு மட்டுமேதான் அழகு என்பது எங்கோ இடிப்பதுபோல் தோற்றமளிக்கிறது என்பது அடியனின் எண்ணம்.
எப்படியாவது இருக்கட்டும். ஆனால் ஆறு என்பதனை வழி என்று பொருள் கொண்டால் ஔவையின் பாடல் மேலும் மலர்ந்து மணக்கும் என்பதில் கருத்து வேறுபாடு கொள்ளுதலில் நியாயம் இருக்க முடியாது.
நவில்தொறும் நூல் நயம் என்றும் இதனைக் கொள்ளலாம்-
வேண்டாம் என்றால் தவிர்த்தும் விடலாம்.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
தங்களுடைய வாதம் " விதண்டாவாதம் " என்பது என் கருத்து .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ஆறு = நீரோடும் ஆறுதான் !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1