புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_c10அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_m10அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_c10 
21 Posts - 66%
heezulia
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_c10அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_m10அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_c10அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_m10அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_c10 
63 Posts - 64%
heezulia
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_c10அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_m10அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_c10அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_m10அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_c10அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_m10அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Oct 17, 2016 6:17 pm

எங்கோ பிறந்தவராம் எங்கோ வளர்ந்தவராம்
எப்படியோ என்மனதைக் கவர்ந்தவராம் ....

என்ற பாடல் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்தது . 1964 ம் ஆண்டு S . பாலசந்தர் இயக்கத்தில் உருவான பொம்மை படத்தில் இடம்பெற்ற பாடல் இது . சஹானா இராகத்தில் P .சுசீலா பாடிய இப்பாடலுக்கு நாட்டிய தாரகை L . விஜயலடசுமி நடனம் ஆடியிருப்பார். நாட்டியப் பேரொளி பத்மினியை மிஞ்சும் அளவுக்கு அற்புதமான அபிநயம் ! பரத நாட்டியம் கற்றுக்கொள்ள விரும்புபவர்கள் அவசியம் பார்க்கவேண்டிய நாட்டியம் !

இந்தப் பாடல் முடிந்தவுடனேயே பாகப்பிரிவினை படத்தில் இடம்பெற்ற தாழையாம் பூமுடிச்சி தடம் பாத்து நடை நடந்து என்ற பாடல் ஒளிபரப்பானது . அந்தப் பாடல் கண்ணதாசன் இயற்றியது . அந்தப் பாடலின் இடையில் இந்த வரிகள் வருகின்றன.

மண் பார்த்து விளைவதில்லை
மரம் பார்த்து படர்வதில்லை
கன்னியரும் பூங்கொடியும் கண்ணையா
கண்ணிலே களங்கம் உண்டோ சொல்லையா?

பூங்கொடி ஒன்று வளர்கிறது . இந்த மண்ணிலே நாம் வளரவேண்டும் ; இந்த மண்ணிலே நாம் வளரக்கூடாது என்று நினைப்பதில்லை . அதேபோல இந்த மரத்திலே நாம் படரவேண்டும் ; இந்த மரத்திலே படரக்கூடாது என்று அது நினைப்பதில்லை . கன்னிப்பெண்களும் இதுபோலத்தான் . காதல் என்று வந்துவிட்டால் எதையும் பார்க்கமாட்டார்கள் ; ஜாதிமதம் , பணக்காரன் ஏழை என்ற பாகுபாடு காதலுக்கு இல்லை .

இந்த இரண்டு பாடல்களையும் கேட்ட மாத்திரத்தில்


யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.

என்ற குறுந்தொகை வரிகள் நினைவுக்கு வந்தன .

நம் தமிழினத்தின் நாகரிகத்தினைப் படம்பிடித்துக் காட்டும் பாடலிது. இது குறுந்தொகையில் 40 ஆவது பாடல், தலைவனும் தலைவியும் எதிர்பாராமல் சந்திக்கின்றனர்.காதலிக்கின்றனர், அங்கே சாதி, மத வேறுபாடில்லை. ஆனால், தலைவிக்கு தலைவன்மேல் ஒரு சந்தேகம் வருகிறது. இவன் நம்மைப் பிரிந்துவிடுவானோ என்பதுதான் அது!   அவளின் இந்த உள்ளக் குறிப்பைக்கூட, அவள் கூறாமலே உணர்ந்து கொள்கின்றான் தலைவன். அவர்கள் கண்ணெதிரே, மழை நீர் மண்ணோடு கலந்து ஓடுகிறது. தலைவியின் அச்சத்தை, எதைச் சொல்லி, எப்படிச் சொல்லித் தெளிவிப்பது? என்று நினைத்தத் தலைவனுக்குக் கண் முன்னே தோன்றும் நீரும் நிலனுமே கைகொடுக்கிறது. “இந்த நிலத்தோடு பிரிக்க முடியாதவாறு மழைநீர் சேர்ந்துவிட்டதல்லவா? அதைப் போன்றதுதான் நம் அன்பும்” என்கிறான் தலைவன். தலைவனின் அன்பு மொழிக்கு முன் தலைவியின் அச்சம் காணாமல் போவது இயல்பு தானே? மீண்டும் பாடலைப் பார்ப்போமா !

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 17, 2016 8:54 pm

சரியான உத்தி .
இலக்கியத்தை புரிய வைக்க கருத்துமிக்க சினிமா பாடல்கள் .

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.

இதுவே அருமையாக உள்ளது .

பொம்மை படத்தில் பாடல்கள் எல்லாமே நன்றாக இருக்கும் .
இசையும் பின்னணி இசையும் வீணை வித்வான் s  பாலசந்தர் .
பின்னணி இசைக்கு இவர் பியானோ வை மாத்திரமே உபயோகித்து இருப்பார் .
பியானோவில் அவருக்கு வித்வத்வம் உண்டு .
KJ ஜேசுதாஸ் பாடகர்  தமிழுக்கு  அறிமுகமானது இதில்தான் "நீயும் பொம்மை நானும் பொம்மை " என்று மந்த கதியில் பாடும் பாடல்
இந்த படத்தில் என்னை கவர்ந்த வேறொரு பாடலும் /நடனமும் ஒன்றுண்டு

வட்டமிட்ட பொட்டழகன்
கட்டழகன் கந்தசாமி
இட்டபடி எந்தன்
மணாளன் தானடி .....
என்று தொடரும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Oct 17, 2016 8:59 pm

ஜேசுதாஸ் அறிமுகம் பொம்மை படத்தில்தான் என்ற செய்தி , இதுவரை நான் அறியாத ஒன்று .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 17, 2016 9:11 pm

அதுவரை அவர் மலையாளத்தில் மட்டுமே அறியப்பட்டு இருந்த பாடகர் .
அந்தப் படத்தை பார்த்துள்ளேன் . க்ரைம் த்ரில்லர் .

பொம்மையில் குண்டு வைத்து சிங்கப்பூர் விமானப் பயணம் .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Oct 18, 2016 6:02 am

மானுட உடம்பு உண்மையில் ஒரு பொம்மைதானே.

பொய் + மெய் =பொய்மெய் > பொம்மை

ஆத்மா(சத்) என்னும் மெய் + மாயை ( அசத்) என்னும் பொய்- இரண்டும் சேர்ந்ததே உடம்பு.

தன் உடம்பு மனிதனுக்கு மெய் - சித்தனுக்குப் பொய்.

நாம் எல்லாரும் பொதுவில் பொம்மைதான்.



+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக