by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Pampu |
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
இலக்கியத் தேன் சொட்டு
Page 1 of 2 • 1, 2
கொம்புத்தேனாய் முந்துதமிழ் ஒழுக அதில் ஒவ்வொரு சொட்டாய்
நம்மால் முடிந்த வரை ரசிக்கவே இத்திரி.
கண்ணுதலோன் தனதுதிருக் கண்டத்திற் படிந்தகறை
விண்ணவரை யமுதூட்டி விளங்குகின்ற கறையென்பார்
மண்ணவரை யமுதூட்டி வானுலகங் காப்பதுவும்
எண்ணருஞ்சீர்ப் பெருக்காளர் எருதுசுவ லிடுகறையே
சிவபெருமான் கண்டத்தில் இருக்கும் கறையால் வானவர் (ஒருமுறை தான்) அமுதம் பெற்றனர். ஆனால், எங்கள் ஊர் உழவர்களின் எருதின் கண்டத்தில் ஏரை வைத்து உழுததால் அந்த எருதின் கழுத்தில் இருக்கும் கறையால் பூவுலகத்தில் இருக்கும் அனைவரும் தினமும் அமுதம் பெறுகின்றனர்.
அதனாலேயே யாகங்கள் எல்லாம் செய்ய முடிகின்றது. வானுலகமும் காக்கப்படுகின்றது. எனவே சிவபெருமானின் அந்தக் கறையை ஒத்தது இங்கே உழவர் தம் எருதின் கழுத்தில் இருக்கும் இக்கறை என்னும் பொருள்படும் படியான கம்பநாடரின் ஏரெழுபது என்னும் வேளாண் சிறப்புச் சொல்லும் 70 பாடல்களில் இது 15வது பாடல்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ஐந்திணை ஐம்பதிலிருந்து ஒரு பாடல்.
பாலை நிலத்துக்குரியது. பிரிதலும் பிரிதல் நிமித்தமுமான சோகக் காட்சியைக் கண்முன் கொண்டு வரும் திணைப்பாடல். மிகவும் பிரபலமானதும் கூட. பாடலைக் காண்போமா?
சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப்
பிணைமான் இனிதுண்ண வேண்டிக் - கலைமாத்தன்
கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர்
உள்ளம் படர்ந்த நெறி.
ஆண்மான், பெண்மான் இரண்டும் தாகத்தில் துடிக்க, ஒரு சிறுசுனையைக் கண்டறிகின்றன. இருக்கின்ற குறைவான நீரைப் பிணைமான் குடிக்கட்டும் என்று கலைமான் தான் குடிப்பது போல் பாசாங்கு காட்டுவது. காதலர் உள்ளத்தில் படர்ந்திருக்கும் அன்பின் உச்சத்தைக் காட்டுகின்றது.
பாடலை யாத்தவர் மாறன் பொறையனார்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
திருவிளையாடல் படத்தால் பிரபலமான, குறுந்தொகையின் மூன்றாவது பாடலைக் காணலாம்.
குறிஞ்சித் திணையில் தலைவன் கூற்றாக எந்த மொழிக்கும் இல்லாத தனிச்சிறப்பாக, இறைவனே தமிழ்மொழிப் புலவராய் வடிவெடுத்து, இறையனாராய் உருவாக்கிய இலக்கியப் பாடல்.
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே.
பூக்கள் தோறும் அலைந்து திரிந்து தேனெடுக்கும் தும்பியானது, என் அழகிய தலைவியின் கூந்தலில் இருக்கும் இயற்கையான மணத்தைப் போலத் தான் அறிந்திருக்கும் அனைத்துப் பூக்களிலும் மணத்தை என்றாவது கண்டிருக்குமோ! எனும் பொருள்பட அமைந்த நயமிக்க பாடல் இது.
பூக்களை தேர்ந்து ஆராய்ந்து தேன் உண்ணுதலையும், பூக்களிலே சிறையாதலயும் இயல்பாய் கொண்ட வண்டே..நீ சொல்வாயாக...நீ எனது நிலத்திலுள்ள வண்டு என்பதால் என்னுடைய விருப்பத்தை உரைக்காமல் நீ கண்கூடாக அறிந்த உண்மையைக் கூறுக...மயிலின் மெல்லிய இயல்பும்..செறிவான பற்களும்..எழு பிறப்பிலும் என்னுடன் நட்பும் பொருந்திய தலைவியின் கூந்தலை விடவும் மணம் பொருந்திய பூவும் இருக்கின்றதோ?
கூந்தலில் “பீரோமோன்ஸ்“(Pheromones) என்னும் வேதிப்பொருள் உள்ளது. இவை ஆண் பெண் அடையாளம் காட்டவும், பாலின மற்றும் நடத்தைகளைக் கட்டமைப்பு செய்யவும் உதவுகின்றன. இந்த சுரப்பிகளே கூந்தலில் மணம் தோன்றக் காரணமாகின்றன.
இயற்கையில் ஒவ்வொரு உயிர்களும் அழகான கட்டமைப்புப் பெற்றிருக்கின்றன. பெண் மீது ஆணுக்கும், ஆண் மீது பெண்ணுக்கும் கவர்ச்சி ஏற்பட இந்த வேதியியல் கூறுகள் பின்னின்று பணியாற்றுகின்றன. மேற்கண்ட கருத்துக்களின் வழியாகப் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயெ மணம் உண்டு என்னும் கருத்துப் புலனாகிறது.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.
இயல்பான இரக்கமும், என் மீது கொண்ட அபரிதமான அன்பையும் கூடத் துறந்து, என்னை மறந்து பொருளே பெரிதென்று அதை ஈட்டுவதற்காகச் செல்லப் போகின்றான் தலைவன் என்று உரைக்க வந்த தோழியே, அவ்வாறு அனைத்தையும் விடுத்துப் பொருள் தேடிச் செல்வோரே புத்திசாலிகளாய் இருப்பார்களேயானால் அவர்கள் புத்திசாலிகளாகவே இருந்துவிட்டுப் போகட்டும்! தலைவனைப் பிரிய முடியாமல் தவிக்கும் நான் அறிவிலியாகவே இருந்து விட்டுப் போகின்றேன்!
என்ன ஒரு நயமான கவிதை! இங்கு யார் தான் அறிவாளி, யார் தான் முட்டாள் என்று யோசித்துப் பார்க்க வைக்கும் கவிதை. |
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ஒரு புறநானூற்றுப் பாடல்.
இயன்மொழித்துறையில் பாடப்பட்டிருக்கின்றது. வஞ்சப்புகழ்ச்சி அணி என்றும் கூறலாம் என்று நினைக்கின்றேன்.
பாரியின் நண்பரும் புலவருமான கபிலர் பாடுகின்றார்:
பாரி பாரி என்றுபல ஏத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டுஈண்டு உலகுபுரப் பதுவே
பாரி பாரி என்று ஒருவனைப் போய் இந்தப் புலவர்கள் எல்லாம் புகழ்ந்து பாடுகின்றார்களே? இந்த உலகில் பாரி ஒருவன் மட்டும் தானா இருக்கின்றான்? ஏன்? இந்த மாரி இல்லை? என்று பாரியும் உலகை வாழ வைக்கும் மாரியும் ஒன்று என்று நயமாகப் பாடியிருக்கின்றார்.
இவர்களின் நட்பும், பாரியின் பெருமையும், கபிலரின் கவித்திறனும் ஒன்றிணைந்து காணக்கிடைக்கும் பொக்கிஷம் இப்பாடல். |
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
இப்பாடல், இல்லை... மந்திரம். அது போன்ற நல்வாழ்க்கை முறையை வலியுறுத்துகின்றது.
பாடலைக் காண்போம்.
கொல்லான்பொய் கூறான் களவிலான் எண்குணன்
நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய
வல்லான் பகுந்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லானியமத் திடையில்நின் றானே.
கொல்லார், பொய்கூறார், களவிலார், மறுத்தவைகளை உண்ணாதவர், அடக்கமுடையவர், நடுநிலை கொண்டிருப்பவர், பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புபவர், மனத்துக்கண் மாசிலாதவர், கள்ளுண்ணாதவர், காமத்தின் பால் விழாதவர் ஆகியோர் இயமத்தின் வழி நிற்பவர் ஆவார் என்கின்றார் திருமந்திரத்தில் திருமூலர்.
எண்குணன் என்னும் சொல்லுக்கு எள்கு உணன் - மறுக்கின்ற உணவை உண்ணாதவன் என்று பொருள்படும். எள் குதல் - மறுத்தல். ``உணன்`` என்பது, ``உண்`` என்னும் முதனிலைத் தொழிற் பெயர் அடியாகப் பிறந்த பெயர்.
அதுமட்டுமல்ல, வள்ளுவர் இந்தப் பத்து வழிமுறைகளையும் தன் குறளில் அதிகாரங்களாயும் பல குறள்களாகவும் நிரப்பி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
நன்னெறி நூலிலிருந்து ஒரு வெண்பாப் பாடல்:
இன்சொலால் அன்றி இருநீர் வியன்உலகம்
வன்சொலால் என்றும் மகிழாதே - பொன் செய்
அதிர் வளையாய்! பொங்காது அழல் கதிரால் தண்என்
கதிர் வரவால் பொங்கும் கடல்.
பாடலின் பொருள்:
பொன்னால் வார்க்கப்பட்ட அழகான வளையலை அணிந்துள்ள பெண்ணே! என்னதான் சூரியன் தகித்தாலும் கடல் நீர் பொங்குவதில்லை, ஆனால் குளிர்ந்த சந்திரன் வந்ததும் கடல் பொங்குவது போலக் கடல் (இருநீர்) போல் அகன்ற இவ்வுலகில் இன்சொல்லால் மட்டுமே மக்கள் மனமகிழ்வார்கள், வன்சொல்லால் என்றும் மகிழமாட்டார்கள்.
உவமை நயம் மற்றும் அறிவியலையும் கொண்டு இன்சொல் பேசவேண்டும் என்னும் நன்னெறி பரப்பும் துறைமங்கலம் சிவப்பிரகாசரது செந்தமிழ் வெண்பா மிகவும் இனிமையன்றோ?
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
இதுவும் மற்றுமொரு நன்னெறி வெண்பா.
நன்னெறியின் அனைத்துப் பாடல்களுமே தகுந்த உவமையுடன் இருப்பது மிகுந்த சிறப்பு.
கைம்மாறு உகவாமல் கற்று அறிந்தோர் மெய் வருந்தித்
தம்மால் இயல் உதவி தாம் செய்வர் - அம்மா
முளைக்கும் எயிறு முதிர் சுவை நாவிற்கு
விளைக்கும் வலியன தாம் மென்று.
உணவை மெல்லுவதால் எந்தக் கைம்மாறும் கிடைக்கப்போவதில்லை என்று தெரிந்தும் நாவிற்குச் சுவையளிப்பதற்காக வலிய உணவை மென்று தரும் பல்லைப் போன்றே, கற்றறிந்தவர்கள் கைம்மாறு கருதாமல் தங்கள் மெய்வருந்தி உதவி செய்வார்கள்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
இயற்றியவர் செம்புலப் பெயனீரார்,
குறிஞ்சி திணை – தலைவன் சொன்னது
யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னர் தலைவன் பிரிந்துவிடுவானோ என்று அஞ்சுகின்ற தலைவியின் குறிப்பினை அறிந்து கொண்டு, தலைவன் தலைவியிடம் கூறியது. ஊழ்வினையால் ஏற்பட்ட இந்தத் தொடர்பு என்றும் மாறாதது என்று கூறி, தலைவியின் அச்சத்தைப் போக்குகின்றான் தலைவன். அதுவே இப்பாடல்.
எதைச் சொல்லி, எப்படிச் சொல்லி தலைவியின் அச்சத்தைத் தெளிவிக்க என்று நினைத்த தலைவனுக்குக் கண் முன்னே தோன்றும் நீரும் நிலனுமே கைகொடுக்கிறது.இந்த நிலத்தோடு பிரிக்க முடியாதவாறு மழைநீர் சேர்ந்துவிட்டதல்லவா ? அது போன்றதுதான் நம் அன்பும் என்கிறான். விளக்கம் கேட்பதற்கு வாய்ப்பே கொடுக்காமல் சொல்லும் தலைவனின் அன்பு மொழிக்கு முன் தலைவியின் அச்சம் காணாமல் போவது இயல்பு தானே?
எவ்வாறு மழையினை செம்புலம் ஏற்றதோ அவ்வாறே தலைவனின் அன்பினையும் தலைவி ஏற்றாள். இங்கே நிலம்-தலைவி, நீர்- தலைவன் . பண்பும் அன்பும் போட்டியிடும் இப்பாடல் என்றும் நம் உள்ளத்திலும் செம்புலப்பெயல் நீராதல் இயல்புதானே?
கருத்துரை
– என் தாயும் உன் தாயும் எவ்வாறு உறவினர்? என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவானவர்கள்? நீயும் நானும் எந்த உறவின் வழியாக ஒருவரை ஒருவர் அறிந்துகொண்டோம்? செம்மண்ணில் பெய்த மழை நீர் எவ்வாறு அம்மண்ணோடு ஒன்று கலந்து பிரிக்கமுடியாதவாறு ஆகிவிடுகிறதோ அதைப்போல ஒன்றுபட்ட அன்பினால் நம் நெஞ்சங்களும் ஒன்று கலந்தன.(அதனால் நெஞ்சம் ஒன்று கலந்த நம் அன்பும் என்றும் பிரியாது. மண்ணோடு கலந்த நீரை எப்படி பிரிக்கமுடியாதோ அவ்வாறே நம்மையும் பிரிக்க முடியாது.)சொல்பொருள் விளக்கம்
– யாயும்-என் தாயும், ஞாயும்- உன் தாயும், யார் ஆகியரோ – யாருக்கு யார் உறவினர், எந்தையும்- என் தந்தையும், நுந்தையும் – உன் தந்தையும்,எம்முறை – எந்த முறையில், கேளிர்- உறவினர்,யானும் நீயும் –நானும் நீயும், எவ்வழி – எந்த உறவின் வழியாக, அறிதும்- அறிந்து கொண்டோம்? செம்புலப் பெயல் நீர் போல-செம்மண் நிலத்தில் பெய்த மழை நீர் போல, அன்புடை நெஞ்சம் – அன்பான நெஞ்சங்கள், தாம் – தாமாகவே (யாதொரு உறவுமின்றி), கலந்தனவே- கலந்துகொண்டனவே.[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
தெரிவனநூ லென்றுந் தெரியா தனவும்
வரிவளையார் தங்கள் மருங்கே - ஒருபொழுதும்
இல்லா தனவு மிரவே யிகழ்ந்தெவரும்
கல்லா தனவுங் கரவு.
அந்நாட்டு மக்களுக்குத் தெரிந்தது எல்லாம் கற்றறியும் நூற்களாம். தெரியாதது எல்லாம் வரிவரியாய் வளையல் அணிந்திருக்கும் மங்கையர் இடையாம். ஒரு பொழுதிலும் இல்லாதது இரந்து வாழும் பிச்சைக்காரர்களாம். இகழ்ந்து எவரும் கற்றுக் கொள்ளாதது களவாம்.
நான்கே வரிகளில் நல்லொழுக்கமும் அழகும் கவி நயமும், நாட்டுச் சிறப்பும் ஒருங்கமைந்திருக்கும் பழந்தமிழ்ப் பாடல் சிந்தித்து ரசிக்க வைக்கின்றது. |
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்