புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளக்கம் தேவை.?  - Page 2 I_vote_lcapவிளக்கம் தேவை.?  - Page 2 I_voting_barவிளக்கம் தேவை.?  - Page 2 I_vote_rcap 
108 Posts - 74%
heezulia
விளக்கம் தேவை.?  - Page 2 I_vote_lcapவிளக்கம் தேவை.?  - Page 2 I_voting_barவிளக்கம் தேவை.?  - Page 2 I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
விளக்கம் தேவை.?  - Page 2 I_vote_lcapவிளக்கம் தேவை.?  - Page 2 I_voting_barவிளக்கம் தேவை.?  - Page 2 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
விளக்கம் தேவை.?  - Page 2 I_vote_lcapவிளக்கம் தேவை.?  - Page 2 I_voting_barவிளக்கம் தேவை.?  - Page 2 I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
விளக்கம் தேவை.?  - Page 2 I_vote_lcapவிளக்கம் தேவை.?  - Page 2 I_voting_barவிளக்கம் தேவை.?  - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
விளக்கம் தேவை.?  - Page 2 I_vote_lcapவிளக்கம் தேவை.?  - Page 2 I_voting_barவிளக்கம் தேவை.?  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
விளக்கம் தேவை.?  - Page 2 I_vote_lcapவிளக்கம் தேவை.?  - Page 2 I_voting_barவிளக்கம் தேவை.?  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளக்கம் தேவை.?  - Page 2 I_vote_lcapவிளக்கம் தேவை.?  - Page 2 I_voting_barவிளக்கம் தேவை.?  - Page 2 I_vote_rcap 
273 Posts - 76%
heezulia
விளக்கம் தேவை.?  - Page 2 I_vote_lcapவிளக்கம் தேவை.?  - Page 2 I_voting_barவிளக்கம் தேவை.?  - Page 2 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
விளக்கம் தேவை.?  - Page 2 I_vote_lcapவிளக்கம் தேவை.?  - Page 2 I_voting_barவிளக்கம் தேவை.?  - Page 2 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
விளக்கம் தேவை.?  - Page 2 I_vote_lcapவிளக்கம் தேவை.?  - Page 2 I_voting_barவிளக்கம் தேவை.?  - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
விளக்கம் தேவை.?  - Page 2 I_vote_lcapவிளக்கம் தேவை.?  - Page 2 I_voting_barவிளக்கம் தேவை.?  - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
விளக்கம் தேவை.?  - Page 2 I_vote_lcapவிளக்கம் தேவை.?  - Page 2 I_voting_barவிளக்கம் தேவை.?  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
விளக்கம் தேவை.?  - Page 2 I_vote_lcapவிளக்கம் தேவை.?  - Page 2 I_voting_barவிளக்கம் தேவை.?  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
விளக்கம் தேவை.?  - Page 2 I_vote_lcapவிளக்கம் தேவை.?  - Page 2 I_voting_barவிளக்கம் தேவை.?  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விளக்கம் தேவை.?  - Page 2 I_vote_lcapவிளக்கம் தேவை.?  - Page 2 I_voting_barவிளக்கம் தேவை.?  - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
விளக்கம் தேவை.?  - Page 2 I_vote_lcapவிளக்கம் தேவை.?  - Page 2 I_voting_barவிளக்கம் தேவை.?  - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விளக்கம் தேவை.?


   
   

Page 2 of 2 Previous  1, 2

திகோ இனியவன்
திகோ இனியவன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 25/09/2016

Postதிகோ இனியவன் Tue Sep 27, 2016 7:06 am

First topic message reminder :

புதிய ஆத்திசூடி என்கிற பாரதியார் கவிதை தொகுப்பில் "ரௌத்ரம் பழகு" என்ற வார்த்தையின் உண்மையான விளக்கம் என்ன.?

நான் இணையத்தில் தேடிய வரை அவ்வார்த்தை பாரதியாரை தவிர வேறுயாரும் பயன்படுத்தியதாக தெரியவில்லை.??

அவ்வார்த்தையை முதன்முதலில் உபயோகித்தது மகாகவி தானோ.??


avatar
Guest
Guest

PostGuest Fri Sep 30, 2016 9:09 pm

இராமகிருஷ்னர் சொன்ன கதையில்,..................

சாதுவின் உபதேசத்தை கேட்டு அமைதியான ஒரு பாம்பு,ஒரு நாள் சிறுவர்கள் அதன் வாலைப் பிடித்து சுழற்றி எறிந்த போதும்,அது அமைதியாக இருந்தது.அதை அறிந்த சாது, நான் உன்னை மற்றவர்களை கடிக்க வேண்டாம், துன்புறுத்த வேண்டாம்னு தானே சொன்னேன். உன்னை பிறர் துன்புறுத்தும் போது சீற வேண்டாம்னு சொல்லலையே? இவ்வளவு முட்டாளா இருக்கியே! இதுதான் ரௌத்திரம் பழகு.

பாரதி குழந்தைகளுக்காக சொன்னது,கோபப்படப் பழகு,ஆனால் கோபப்படாதே.

கோபப்படப் பழகு- ஒன்று நிஜமாகவே கோபமா இருக்கும் போது, அதை எப்படி கையாள்றதுன்னு தெரியனும். இரண்டு கோபம் இல்லாத போது கூட சில சமயம் கோபமா இருக்கற மாதிரி காட்டிக்கணும்.

மேலே ஜெகதீசன் அவர்கள் குறிப்பிட்டது போல் ,தீயன கண்டு சினந்து எழப் பழகு.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Oct 01, 2016 12:23 pm

T.N.Balasubramanian wrote:எளிமையாக கூறவேண்டுமாயின் ,
"அவசியம் ஏற்படும்போது கோபப்படவும் " என்று கொள்ளலாமா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1223004

அவசியம் ஏற்படும்போது கோபப்படலாமா

என்று கேட்பதும்

அவசியம் ஏற்படும்போது தற்கொலை செய்துகொள்ளலாமா

என்று கேட்பதும் ஒன்றுதான் .

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம் .

என்பது ஐயனின் வாக்கு.




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 01, 2016 12:32 pm

அவசியம் காரணமாக தற்கொலை செய்துகொண்டோர் உண்டே .
(3/4 நாட்களுக்கு முன் )

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SRINIVASAN GOVINDASWAMY
SRINIVASAN GOVINDASWAMY
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 06/09/2016

PostSRINIVASAN GOVINDASWAMY Sun Oct 02, 2016 12:18 pm

M.Jagadeesan wrote:ரௌத்திரம் பழகு என்றால் " தீயன கண்டு சினந்து எழப் பழகு " என்று பொருள் .
மேற்கோள் செய்த பதிவு: 1222831

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:எளிமையாக கூறவேண்டுமாயின் ,
"அவசியம் ஏற்படும்போது கோபப்படவும் " என்று கொள்ளலாமா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1223004

அவசியம் ஏற்படும்போது கோபப்படலாமா

என்று கேட்பதும்

அவசியம் ஏற்படும்போது தற்கொலை செய்துகொள்ளலாமா

என்று கேட்பதும் ஒன்றுதான் .

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம் .

என்பது ஐயனின் வாக்கு.
மேற்கோள் செய்த பதிவு: 1223235

அனைவருக்கும் காலை வணக்கம்

"ரௌத்திரம் பழகு"  என்றால்  "தீயன கண்டு சினந்து எழப் பழகு"   என்பதை வேறு கோணத்தில் பார்க்கலாம்

சினம்  -  என்பது ஒரு  வினை
சினந்து எழப் பழகு  - என்பது  ஒரு கிளர்ச்சி  வெளிப்பட்ட நிலையின் செயல் பாடு.

சினம் பழகு  என்பதை விட   சினம் கொண்டு "எழ" பழகு  என்பது வீரியம் மிக்கது (விளைவுகள் அதிகம்).

மேலும் "தீயன" என்பதை அறுதியிட்டு கூற முடியாது. ஆளுக்கு ஆள் , இடத்திக்கு இடம் மேலும் வயதிற்கும் & சூழ்நிலைக்கும் ஏற்றாற்போல் மாறுபடும். அது தீயன எனக் கருத்துபவரின் மன நிலையை பொறுத்தது.

சினம் பழகு மற்றும் சினம் கொண்டு "எழ" பழகு என்பது  ஓட்டுநர் உரிமம் பெற்றவருக்கும் , ஓட்டுனருக்கும் உள்ள வித்தியாசம்

மேலும் பாரதி கூறியது

"ரௌத்திரம் பழகு"  என்று  கூறினான்   மாறாக  "ரௌத்திரம் கைக்கொள்"  (அல்லது) "ரௌத்திரம்  படி"   என கூறவில்லை.

ரௌத்திரம்  பழகியவர்கள்  ராமனும் , பாண்டவர்களும் -   இறுதியில்  அனைத்தையும் வென்றார்கள்.

ரௌத்திரம்  படித்தவர்கள்  அஸ்வத்தாமனும் , சிசுபாலனும்  -  பழகாமல் படித்ததினால் வந்த அகந்தையாலும் ,  தான்தோன்றி தனத்தாலும்    தன்னையே இழந்தார்கள். (ப்ரம்மாஸ்திரத்தை பழகாமல் அரை குறையாக படித்ததன் விளைவு   தன்னையே அழித்துக்கொண்டான் அஸ்வத்தாம)

ரௌத்திரம்  பழகி  அதை அகங்காரத்தால்  கைகொண்ட மகா பெரியவர்கள்   -  பரசுராமரும் , விஷ்வாமித்திரரும் முறையே ராமனிடமும் , வஷிஷ்டராலும் சக்தியை இழந்தவர்கள்.

சினம்  பழகுதல் என்பது என்ன?  எனது சிறிய விளக்கம்

சினம் பழகுதல் என்பது  அதன் தன்மையை கற்றுணர்வது,  மேலும்  எப்படி? , எப்போது? , ஏன்?  சினம் கொள்ள வேண்டும் என நெளிவு சுளிவுகளை ஆராய்ந்து அதை பற்றிய அறிவை பழக வேண்டும்.

நாம் ஒரு செயலை திரும்பத் திரும்ப செய்யும் போது, அதுவும் நம் மனமறிந்து   செய்யும் போது, அது பழக்கமா மாறிடுது. அப்படி பழக்கமாக மாறும் அந்த செயல் நமக்கு ரொம்ப நல்லா தெரிஞ்ச ஒரு செயலாகவும் ஆகுது. அதை  எப்படி ஆரம்பிப்பது  அதனோட முடிவு என்ன, நடுவில் அது  எவ்வாறு செயல்படும் என்பதை நன்குணர்ந்த நிலையே பழகுதல்.

அதே போலத்தான் கோபமும். கோபம் வரும்போதே, நமக்கு கோபம் வருது என்ற உணர்வும், கோபமா இருக்கும் போது, நாம் கோபமா இருக்கோம், அப்படிங்கிற உணர்வும், அந்த சமயத்தில் நாம என்ன செய்யறோம், என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது, என்கிற உணர்வும் இருந்துட்டா போதும், கோபம் ஓரளவு நம்ம பழக்கத்துக்கு வர ஆரம்பிச்சிருச்சுன்னு தெரிஞ்சுக்கலாம். தன்னைத்தானே வேடிக்கை பார்க்கத் தெரிஞ்சவங்களுக்கு இது ரொம்ப சுலபம்.

சினம் என்பது ஒரு ஆயுதம் , அது  ஒரு குறிப்பிட்ட  "காரியத்திற்காக  புத்தியில்" தோன்றி  காரியம் முடிந்தவுடன்  சூரியன் கண்ட பனிபோல விலக வேண்டும். (தற்காலிக  கோபம்)

அது  "காரணத்திற்காக மனதில்" தோன்றி  த்வேஷமாக மாறி  புத்தியால் செயல்படுத்த கூடாது. பிறகு துரியனின் நிலைதான்  கோபத்தை கைகொண்டவர்களுக்கும்.

சிறுசிறு விஷயங்களுக்கு கோபப்பட்டு பிறரை மிரட்டி நல்வழி படுத்தலாம். அற்ப விஷயங்களுக்கு பலமாக கோபப்பட்டால்  கூட  விளைவுகள் (அல்லது) தாக்கங்கள் பெரிதாக இருக்காது. யாரையும் பாதிப்பதில்லை.

பெரிய  பெரிய விஷயங்களை,  முன் திட்டமிட்டு, கண்ணும் கருத்துமாக செயல்படுத்தவேண்டும். காரியங்களை யார் செய்தலும், நாம் சம்பந்தப்பட்ட  (அல்லது) தலைமை தாங்குகின்ற விஷயங்களுக்கு நமே பொறுப்பு. நமது பொறுப்பற்ற தன்மையினாலும் , இயலாமையினாலும் , எதிர்பாராத தோல்வியினாலும் , நமது  அனுபவமின்மையாலும் ஏற்படும் கோபம் சுயநலம் மிக்கது.  அது சொந்தபந்தங்களை , நட்பு வட்டாரத்தை சிறிய தயவுமின்றி காயப்படுத்தி அறுத்தெறிந்துவிடும்.  

கோவப்படுவது போல் திறமையாக  நடிக்க வேண்டும், யாரும் அதை கண்டுபிடிக்காதாபடி. கண்டுபிடிக்கப்பட்டால்  நாம் காமெடியனாகிவிடுவோம்.  பிறகு ஒரு விஷயத்திலும் நம்மால் சாதிக்க முடியாது. பாம்பு போல் சீற வேண்டும், சில நேரங்களில் ஆனால் யாரையும் கடிக்க, மனதால் கூட எண்ணக்கூடாது.

இப்படி செய்தல் எப்போதும் மனது மகிழ்ச்சியாக இருக்கும் , நன்றாக தூக்கம் வரும் , குற்ற உணர்வு இருக்காது மற்றும் நமது வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.

இதுவே மேலாண்மையின் அடிப்படை தத்துவம்.குடும்ப வாழ்க்கைக்கும் பொருந்தும்.

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun Oct 02, 2016 1:06 pm

நீண்ட நெடிய விளக்கம் நன்று.

ஆனால், நம் பாரதி கோபத்தையும் நவரசங்களுள் பிற எட்டு குணங்களைப்போல் ஒரு நற்குணமாகக் கொள்ளச் சொல்கிறார் என்றால் நமக்கு மன அழுத்தம், மனஇறுக்கமும் இருக்காது.

கோபம் என்பது வெறுக்கத்தக்கதல்ல. தேவைப்படும்போது வேண்டத்தக்கது.
தற்போதைய நமது surgical strike போல.

இன்றைய தகவல் தீவிர வாதிகள் POK விலிருந்து தம் Camp பை காலிசெய்து விட்டார்களாம்.
இந்த surgical strike நம் நிதானித்த கோபத்தின் வெளிப்பாடு.

சினம் சேர்ந்தாரைக் கொல்லி என்பது மட்டுமே அல்ல அது நிதானித்து செயலாக்கப்படால் ஆக்கமும் சீர்மையும் கூட தரும் என்பது கண்கூடு.





+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 02, 2016 1:33 pm

Srinivasan Govindhaswamy wrote:"தீயன கண்டு சினந்து எழப் பழகு"

நல்ல விளக்கம் அன்பு மலர் அன்பு மலர்

"ப்ரம்மாஸ்திரத்தை பழகாமல் அரை குறையாக படித்ததன் விளைவு" அஸ்வத்தாமன்   தன்னையே அழித்துக் கொண்டான் .....மேலும் விளக்க முடியுமா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun Oct 02, 2016 3:28 pm

ஐயா!

அஸ்வத்தாமனின் பிடிவாதத்தால், குரு த்ரோணர் தகுதியற்ற அந்த மூடனுக்குத் தான் தந்தையும் ஆகியதால்

தன் துணைவி க்ருபியின் வற்புறுத்தலுக்கும் இணங்கி

விருப்பமின்றியே ப்ரம்மாஸ்த்திர ஏவுதலை மட்டுமே கற்பித்தாராம் –
அவ்வஸ்த்திரத்தைத் திரும்பப்பெற கற்பிக்க வில்லையாம்.

திரும்பப்பெறுதல் என்ற வித்தை என்று ஒன்று இருப்பதே அந்த மூடனுக்குத் தெரியாது.

அவனது தந்தையேயானாலும் குரு த்ரோணர் அவன் தகுதியற்றவன் – பிற்காலத்தில் சீர்குலையப் போகிறவன் என்பதால் அவனுக்கு அவரேயும் அந்த அற்புத்ததைக் கற்பிக்க முன்வரவில்லையாம்.

ஆனால் தன் அபிமான சீடன் அர்ச்சுனனுக்கு இருமுறைகளையும் கற்பித்தாராம்.

இதுதான் குருவோ ! விதியோ!




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
SRINIVASAN GOVINDASWAMY
SRINIVASAN GOVINDASWAMY
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 06/09/2016

PostSRINIVASAN GOVINDASWAMY Sun Oct 02, 2016 8:40 pm

T.N.Balasubramanian wrote:
Srinivasan Govindhaswamy wrote:"தீயன கண்டு சினந்து எழப் பழகு"

நல்ல விளக்கம் அன்பு மலர் அன்பு மலர்

"ப்ரம்மாஸ்திரத்தை பழகாமல் அரை குறையாக படித்ததன்  விளைவு" அஸ்வத்தாமன்   தன்னையே அழித்துக் கொண்டான் .....மேலும் விளக்க முடியுமா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1223348

அனைவருக்கும் மாலை வணக்கம்

தலைசிறந்த  திவ்ய அஸ்திரங்கள் (பிரம்மாஸ்திரம், நாராயணாஸ்திரம், பாசுபதாஸ்திரம்)

அஸ்திரங்களில்  பிரம்மாஸ்திரம், நாராயணாஸ்திரம், பாசுபதாஸ்திரம்  ஆகிய மூன்றும் தலைசிறந்த திவ்ய அஸ்திரங்கள்.முக்கடவுளின் சக்தியால், நமது பக்தியால் காரண காரியங்களுக்காக கிடைக்கபெறும்.

நாராயணாஸ்திரம் - பீஷ்மரால் அர்ஜுனன் மீது  ஒன்பதாவது நாள் சண்டையில்  தொடுக்கப்பட்டது.

நீ அடிப்பது போல் அடி , நான் அழுவதுபோல் அழுகிறேன் என தெரிந்தே நாராயணாஸ்திரத்தை அர்ஜுனன் மேல்  பிரயோகிக்கிறார்.. நாராயணாஸ்திரத்தின் ரகசியம் அறிந்த கபடதாரி கண்ணன் அர்ஜுனனுடன் இருக்கிறான். தன் மைத்துனனை எப்படியும்  காப்பான் என்ற நம்பிக்கையில் நாராயணாஸ்திரத்தை பிரயோகித்து  அர்ஜுனனின்  கோபத்தை தூண்டுகிறார் பீஷ்மர்.

அந்த அஸ்திரம் எதிர்ப்போரை அழித்து விடும். சரணடைவோரை ஒன்றும் செய்யாது என்ற உண்மையறிந்த மாயவன், அர்ச்சுணனிடம் இது நாராயண அஸ்திரம் இதை வணங்கு எனச் சொல்ல.. கையில் இருந்த அனைத்து ஆயுதங்களையும் தவற விட்டு அர்ச்சுணன் அதை வணங்குகிறான்.. அதே சமயம் கையில் சாட்டையுடன் இருந்ததால் அஸ்திரம் கண்ணன் மார்பில் பாய்கிறது. பகவான் போலவே அவர் அஸ்திரமும் சில நியதிகளுக்கு கட்டுப்பட்டு அவருடன் கலந்து விடுகிறது.

இதைக்கண்ட அர்ச்சுணன்  பயந்து  சோர்ந்து விடுகிறான்.. கண்ணன் எவ்வளவோ சொல்லியும் போர்புரிய மறுக்க, கையில் சுதர்சனத்துடன், நீ அழிக்கா விட்டால் நான் என் சத்தியத்தை உடைத்து ஆயுதமேந்தி பீஷ்மரை அழிப்பேன் என் தேரை விட்டிறங்க.. பீஷ்மர் நகைக்க, அந்த கோபத்தில்  அர்ச்சுனன் காண்டீபம் கையிலெடுத்து மீண்டும் போர் புரியத்தொடங்குகிறான்.அர்ச்சுணன்  மகாபாரதப் போரிலே சாவின் விளிம்பிற்குச் சென்று வந்த குறைந்த பட்ச மூன்று தருணங்களில் இதுவும் ஒன்று.

   1. பீஷ்மர் நாராயண அஸ்திரம் எய்த பொழுது..
   2. ஜெயத்ரதனை அணுக இயலாமல் சூரியன் மறையும் தருணம்
   3. கர்ணனால் நாகாஸ்திரம் பிரயோகிக்கப் பட்ட போது..

பகவான் மட்டும் இல்லையென்றால் பாரதப்போரில் பாண்டவர்கள் மாய்வதற்கு  கர்ணன் ஒருவனே  போதும்.  நாகாஸ்திரத்தின்  தன்மையும் & கர்ணனை அவன் வாழ்நாளில் படிப்படியாக  கொல்லும் 7 வழிமுறைகளை அறிந்து செயல்படுத்தியவன் கண்ணன் ஒருவனே. கர்ணனின் இறப்பிற்கு காரணம் அவன் தீயவருக்கு துணை நின்றதால் மட்டுமே.

பாண்டவர்கள் வென்றதிற்கு காரணம் அவர்களில் பக்கம் இருந்த ஞாயாமும்  & தர்மசீலரான  பகவான்   நின்றதால்  மட்டுமே. தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும் ஆனால் தர்மமே வெல்லும் என உலக மக்களுக்கு உணர்த்த  பகவான் நடத்திய நாடகமே மஹாபாரதம். சூதாட்ட மண்டபத்திற்கு தன்னை (கண்ணன்) வரக்கூடாது என தர்மன் வேண்டும்போதே பாரதப்போரின் அஸ்திவாரம் தோண்டப்படுகிறது. தர்மன் உட்பட பாண்டவர்கள் அனைவரும்  முட்டாள்கள் என பகவான் அறிந்த விஷயம் பாஞ்சாலிக்கு முன்னமே அறிந்திருந்தால் பாரதப்போருக்கு வேலையேது.நம்பி  வந்தவளை நட்டாற்றில்  விட்ட "ரொம்ப" நல்லவர்கள். பாஞ்சாலி சபதத்தில்   பாரதியின் (பாஞ்சாலியின்)  குமுறல்  எல்லையின்  உச்சம்.  அவரின் இந்த நாடகம்    இந்திய சுதந்திர போரிலும் எதிரொலித்தது.  

பாசுபதாஸ்திரம் - அர்ச்சுனன்  மட்டுமே பிரயோகிக்கும் ஞானம் பெற்றவன். தர்மர் சிவனிடமிருந்து பாசுபதாஸ்திரத்தைப் பெற்று வந்த அர்ஜுனனிடம் பாசுபத அஸ்திரத்தை தமக்குக் காட்டுமாறு கேட்ட போது அதை விளையாட்டாகக் கூடப் பிரயோகிக்கக் கூடாது என்று கட்டளை வருவதால் அதன் மஹிமையை  நாம் உணரலாம்.அதன் வலிமை பாரத போரில் வெளிப்படுத்தப்படவில்லை.

பிரம்மாஸ்திரம் - பீஷ்மர், துரோணர், அஸ்வத்தாமன், அர்ச்சுனன், கர்ணன் (கர்ணன்-குரு பரசுராமரின் சாபத்தால் குருக்ஷேத்ர போரின் தக்க சமயத்தில் மறந்துவிடுவான். அதனால் கர்ணனை கணக்கில் கொள்ள முடியாது).

இந்த மூன்று அஸ்திரங்களின் சூட்சமம் அறிந்தவன் மகாபாரத சூத்திரதாரி கண்ணன் மட்டுமே.
நாராயணாஸ்திரமும், பிரம்மாஸ்திமும் அறிந்த ஒரே  மகாரதன்,  தான் விரும்பும் போது இறக்கும் வரப்பெற்ற தலைமகன் பீஷ்மர் மட்டுமே.

பிரம்மாஸ்திரம் - பிரம்மனின் சக்தியால் பிறந்தது , பலமுறை பிரயோகிக்க முடியும் , பல இலக்குகளை ஒரே சமயத்தில் நிர்ணயிக்க முடியும் , பிரயோகித்த சக்தி அஸ்திரத்தை நிறுத்தி திரும்ப பெறமுடியும். அதன் விளைவுகள் பயங்கரமானவை  பல ஆயிரம் அணுகுண்டுகள் வெடித்தால் எப்படி இருக்குமோ அப்படி இருப்பதை ஒத்திருக்கும்.

பிரம்மாஸ்திரம் தொடுக்கப்பட்டபோது முப்பத்து முக்கோடி தேவர்களும் அதன் விளைவை எண்ணி பயந்தார்கள். வியாசரும் நாரதரும் ஆலோசனை கூட்டத்தை கூட்டி இறுதியில் பகவானின் பாதம் பணிந்தனர் உலகை காக்குப்படி. வரமளிக்கும் பிராமனுக்கே சாத்தியமில்லை அதை கட்டுப்படுத்த. பிரம்மன் போலவே நல்லது கெட்டது பார்க்காமல், நிர்ணயித்த இலக்குகளை துல்லியமாக அழிக்கக்கூடியது பிரம்மாஸ்திரம்.ஆண்ட சராசரங்கள் நடு நடுங்கின. அக்னி ஜ்வாலையால் சூழப்பட்ட மழை பொழிவது போன்ற சரங்கள் நெருக்கமாக வானில் ோன்றியது.கொள்ளிக்கட்டைகள் ஆகாயத்திலிருந்து விழுந்தன. திக்குகள் பிரகாசிக்கவில்லை. பயங்கர இருளானது.. காற்றும் உஷ்ணமாக வீசியது.உலகம் கோரமான அந்த ஆயுதத்தால் என்ன பாடுபட்டது என்பதை வியாஸர் விரிவாக விளக்குகிறார் துரோண பர்வத்தில்.படிக்கும் போதே பயமாக இருக்கும்.

குறிப்பு :  துரோண பர்வதமும்  & மதனின் "வந்தார்கள் வென்றார்கள்" புத்தகமும்  நாம்  படிக்கும் போதே பயமாக இருக்கும்.

அஸ்வத்தாமனின் குணநலன்களும் & அவன் செய்த தவறும் அடுத்த பதிவில்....

நன்றி.

ஸ்ரீனி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 04, 2016 11:21 am

அருமையான விளக்கம், நன்றி ஸ்ரீனி .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக