புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_c10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_m10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_c10 
32 Posts - 42%
heezulia
விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_c10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_m10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_c10 
32 Posts - 42%
prajai
விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_c10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_m10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_c10 
2 Posts - 3%
Manimegala
விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_c10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_m10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_c10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_m10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_c10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_m10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_c10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_m10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_c10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_m10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_c10 
1 Post - 1%
jothi64
விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_c10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_m10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_c10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_m10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_c10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_m10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_c10 
398 Posts - 49%
heezulia
விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_c10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_m10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_c10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_m10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_c10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_m10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_c10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_m10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_c10 
26 Posts - 3%
prajai
விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_c10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_m10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_c10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_m10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_c10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_m10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_c10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_m10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_c10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_m10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Sep 17, 2016 10:50 pm

கண் டாக்டரிடம் சென்றால் , ஒவ்வொரு லென்ஸாக மாற்றிப்போட்டு , " இப்போ நல்லா தெரியுதா ? " என்று நம்மிடம் கேட்பார். எந்த லென்ஸில் நம்முடைய பார்வை நன்றாகத் தெரிறதோ , அந்த லென்ஸை வைத்து நமக்குக் கண்ணாடி செய்து கொடுப்பார்கள் . எந்த லென்ஸ் போட்டாலும் , பொருந்துகிற கண் யாருக்கும் இருக்காது .

ஆனால் அய்யன் வள்ளுவர் , எந்த வார்த்தை போட்டாலும் , பொருந்தி வருவதுபோல சில குறட்பாக்களை எழுதியிருக்கார் . அவற்றைப் பார்க்கலாமா ?

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் . ( குற்றங்கடிதல் - 435 )

இது ஓர் எளிய குறட்பா. உரையின்றியே புரிந்துகொள்ள முடியும் .

பொருள் :
========
குற்றம் வருவதற்கு முன்னரே , அது வராமல் காக்க வேண்டும்; அவ்வாறு காத்துக் கொள்ளாதவன் வாழ்க்கை , தீயின் முன்பாக வைக்கப்பட்ட வைக்கோற்போர் போல அழிந்துவிடும் .

இது அரசனுக்குச் சொல்லப்பட்ட நீதி என்றாலும் தனிமனித வாழ்க்கைக்கும் பொருந்தி வருகின்ற நீதியாகும் .
பொருட்பாலில் பெரும்பாலான குறட்பாக்கள் இவ்வாறே உள்ளன.

இப்போது இந்தக் குறட்பா , யார்யாருக்கெல்லாம் பொருந்தி வருகிறது என்று பார்க்கலாமா !

குடும்பஸ்தனுக்கு :
================
கடன்
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை , எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் .

வியாபாரிக்கு :
=============
நட்டம்
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை , எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் .

தனி மனிதனுக்கு :
================
நோய்
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் .

மாணவனுக்கு :
=============
தேர்வு
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் .

அரசுக்கு :
========
வெள்ளம்
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் .

சென்ற ஆண்டு மழைக்காலத்தில் அரசு , தகுந்த முன்னேற்பாடுகளை செய்யத் தவறிய காரணத்தால் , சென்னை மக்கள் பேரிழப்பை சந்திக்க நேரிட்டது .

வெள்ளம் வந்தாலும் இடர்தான் ; வராவிட்டாலும் இடர்தான் . காவிரியில் தமிழ்நாடு கேட்காமலேயே நீரைத் திறந்து விட்டிருந்தால் இன்றைய தினம்  கர்நாடகா பற்றி எரிந்திருக்காது .  வருமுன்னர்க் காத்திருந்தால் இந்த  அழிவு ஏற்பட்டிருக்காது .

மற்றவை பிறகு ...



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 18, 2016 6:34 am

ஆம் அய்யா , நன்றாக கூறினீர்கள் .
நான் மேலும் ஒன்றை சேர்க்க விரும்புகிறேன் .

நம்பிக்கை
மற்றவர்கள் நம் மேலே , நம்பிக்கை வரும்படியாக நடந்துகொள்ளவேண்டும் .

"வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் ."

ஒருமுறை அவநம்பிக்கை வந்துவிட்டால் , அது எப்போதும் மாறவே மாறாது .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Sep 18, 2016 6:40 am

உண்மைதான். நாம் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு வேலைக்காரன் , நம் வீட்டில் திருடிவிட்டான் என்று வைத்துக்கொள்வோம் . அந்த நிகழ்வுக்குப் பிறகு அவன் எவ்வளவு விசுவாசமாக நடந்துகொண்டாலும் அவன்மீது நம்பிக்கை வராது . அவனது ஒவ்வொரு செய்கையையும் சந்தேகக் கண்கொண்டுதான் பார்ப்போம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 18, 2016 6:45 am

சூப்பருங்க சூப்பருங்க

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SRINIVASAN GOVINDASWAMY
SRINIVASAN GOVINDASWAMY
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 06/09/2016

PostSRINIVASAN GOVINDASWAMY Sun Sep 18, 2016 9:45 am

பயனுள்ள குறள் . தக்க சமயத்தில் எடுத்துரைத்தமைக்கு நன்றி .

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Sep 18, 2016 1:00 pm

அடுத்து நாம் காண இருப்பது

அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று . ( நன்றியில் செல்வம் - 1007 )

இந்தக் குறளை " அற்றார்க்கு " என்று தொடங்கியுள்ளார் . " என்ன அற்றார்க்கு " என்று கூறவில்லை . நாம் எதை வேண்டுமானாலும் போட்டுப் பார்த்துக் கொள்ளலாம் .

" அற்றார்க்கு " என்றால் இல்லாதவர்களுக்கு என்று பொருள் .

உண்ண உணவு அற்றார்க்கு ,
உடுக்க உடை அற்றார்க்கு ,
இருக்க இடம் அற்றார்க்கு ,
பிழைக்கத் தொழில் அற்றார்க்கு ,
இடம் கிடைத்தும் கல்லூரியில் சேர்வதற்குப் பணம் அற்றார்க்கு ...

என்று இப்படியே சொல்லிக்கொண்டு போகலாம் . அப்படி அற்றார்க்கு ஒரு பயனையும் அளிக்காதவனுடைய செல்வம் , நல்ல அழகும் அறிவும் உள்ள ஒரு பெண் , திருமணம் செய்துகொள்ளாமலேயே கிழவி ஆனதைப் போல என்கிறார் .

நாம் பெற்ற பெண் நமக்குச் சொந்தமல்ல . மற்றொருவனுக்கு மனைவி ஆகவேண்டியவள் . எனவேதான் வள்ளுவர் பெண்ணைப் " பிறன்பொருள் " என்று அழைப்பார் .

எங்கள் வானத்து வெண்ணிலவாம் - அவள்
இன்னொரு வீட்டுக்கு விளக்காவாள்.

என்றொரு திரைப்படப் பாடலும் உள்ளது .


ஆற்றல் இரண்டு வகைப்படும் . அவை

நிலை ஆற்றல் ( Potential Energy )
இயக்க ஆற்றல் ( Kinetic Energy )

ஆகும் .ஏரிகளிலும் , அணைகளிலும் தேக்கி வைக்கப்படுகின்ற நீர் நிலை ஆற்றலாகும் . அந்த நிலை ஆற்றல் இயங்கு ஆற்றலாக மாறும்போதுதான் பயனளிக்கிறது . அணைகளில் தேக்கி வைக்கப்படுகின்ற நீரானது இயங்கு ஆற்றலாக மாறும்போதுதான் அது விவசாயத்திற்கும் , மின்சாரம் தயாரிப்பதற்கும் பயன்படுகிறது . நிலை ஆற்றலாக இருக்கும்போது அது யாருக்கும் பயனளிப்பது இல்லை . எனவே அணைகளில் நீரைத் தேக்கி வைத்துக்கொண்டு " நான் யாருக்கும் தரமாட்டேன் " என்று செய்வது இயற்கை நியதிக்கு முரணானது .

பெண் என்பவள் நிலையாற்றல் . அவள் ஆணுடன் சேர்ந்து இல்லறம் நடத்துங்கால் , இயங்கு ஆற்றலாக மாறி குடும்ப விருத்திக்கு உதவுகிறாள் . எனவே பெண் பிறவி தாய்மையில்தான் பூர்த்தி அடைகிறது ; அதுவே ஒரு பெண்ணுக்குச் சிறப்பு .

செல்வமானது ஓரிடத்தில் நில்லாமல் எல்லோருக்கும் பயன்படவேண்டும் . " செல்வத்துப் பயனே ஈதல் " என்று புறநானூறு பேசும் .






இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Sep 18, 2016 4:42 pm

அடுத்து நாம் காண இருப்பது

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை. ( இல்வாழ்க்கை-41 )

என்னும் குறளாகும் .

இக்குறளிலே " இயல்புடைய மூவர் " என்னும் சொல் பலவாறு விரித்துப் பொருள்காண இடம் தருகிறது .

குடும்ப வாழ்க்கை நடத்துபவன் , தன்னுடன் தொடர்புகொண்ட மூன்றுபேருக்கு உற்ற துணையாக இருக்கவேண்டும் என்பது இக்குறளின் பொருள் .

இக்குறளில் இயல்புடைய மூவர் யார் என்பதைக் கூறாது விடுத்தார்.  " இயல்புடைய மூவர் " யார் என்பதில் உரை ஆசிரியர்களுக்கிடையே கருத்து மாறுபாடு நிலவுகிறது.

குடும்பத் தலைவன் என்பவன் தாய், தந்தை , தாரம் ஆகிய மூவருக்கும் துணையாக இருக்கவேண்டும் என்று சில உரை ஆசிரியர்கள் பொருள் கூறுவார். இன்னும் சிலர், குடும்பத் தலைவன் என்பவன், பிரம்மச்சாரி , வானப்பிரத்தன், சந்நியாசி ஆகிய மூவருக்கும் துணையாக இருக்கவேண்டும் என்று பொருள் கூறுவார். இன்னும் சிலரோ, குடும்பத் தலைவன் என்பவன் , தாய், தந்தை, குழந்தை ஆகிய மூவருக்கும் துணையாக இருக்கவேண்டும் என்று பொருள் கொள்வர்.

ஆக இயல்புடைய மூவர் என்னும் சொல் யாரைக் குறிக்கிறது என்பதை நூலைப் படிப்பவர் ஊகத்திற்கே வள்ளுவர் விட்டுவிடுகின்றார்.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun Sep 18, 2016 10:40 pm

ஐயா !

இக்குறட்பாவை இப்படியும் பார்க்கலாமே !

41. இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை. 5-1

பொருளுரை:  
குடும்ப வாழ்க்கைநெறியில் தன்னை இருத்திக்கொண்டவர்,   மனித வாழ்வின் மற்ற மூன்று நெறிகளாகும்  (i)குருகுல வாழ்வு நெறியில் இருப்பவர் , (ii)தனிமையில் வனத்தில் தவம் முயலுவோர், மற்றும் (iii) வாழ்வின் முற்றும் துறந்த துறவு நெறியைக் கைக்கொண்ட துறவி ஆகிய மூவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் அவர்களுடன் கூடியிருக்கும் ஒழுகலாற்றைக் கடைப்பிடித்துத் தன் குடும்பத்தை நடத்தவேண்டும்.
பதவுரை:
இல் - 1.வீடு  ; 2.இடம்.
வாழ்- 3.சீவித்தல்; 4.செழித்திருத்தல்.
இயல்பு- 5.ஒழுக்கம்.
மூவர் - மூவகை ஒழுக்கத்தில்னிருப்பவர்கள்  அதாவது - குருகுலத்தில் கல்விபயிலும் மாணாக்கர் ; முதுமையில் வனத்தில் வசிப்பவர்கள் ; துறவிகள்- இவர்கள் முறையே ப்ரம்மசாரி, வானப்ப்ரஸ்தர், சன்நியாசிகள் எனப்படுபவர்கள்.
ஆறு - பயன்.
துணை - கூட்டாயிருப்பவன்.

விளக்கவுரை :

இக்குறளில் நூலாசிரியர், தான்  வாழும் மனித சமுதாயத்தில் தனக்கு இருக்கும் கடமையையும் பொறுப்பையும் ஒரு குடும்பத்தலைவன்  அறிய வழிவகை  செய்கிறார். எவரொருவரும்  தம் வாழ்வின் நிமித்தமான எந்த ஒன்றையும் முதலில் புரிந்துகொண்டு அதற்கான நோக்கத்தை முன்வைத்து கடமையாற்றினால் அவரது வாழ்வில் வெற்றி, நிம்மதி, அமைதி , ஆனந்தம் ஆகியவற்றிற்குக் குறை இருக்காது. இந்த நோக்கத்திற்காகத்தான் பாயிரத்தில் பற்றின்மை எனும் பண்பின் மேன்மையும்  அப்பண்பைக் கடைப்பிடித்தலின் அவசியமும் வலியுறுத்தப்பட்டது. பற்றின்மையால் மட்டுமே “யாதும் ஓரே யாவரும் கேளிர்” என்ற  உயர் சிந்தனையும், “ யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்னும் உயர் நோக்கமும் ஒருவருக்கு அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.  பற்றற்றவனால் மட்டுமே தன்னில் உலகையும் உலகில் தன்னையும் பிறிவின்றிக் காண இயலும். அக்காட்சியால்  இயல்பாகவே அவன் பிற உயிர்களுக்குத் தீமை எண்ணாது  நன்மை பாராட்டுவான். இந்த தனிமனித ஒழுகலாறு அமைந்துவிடுமாயின்  ஒருவன் சிறந்த குடும்பத்தலைவன் என்ற தம் நிலையில்  தாமும்  ஆனந்தமாக இருந்துகொண்டு உலகில் வாழும் பிற எல்லா உயிரினங்களுக்கும் உற்ற துணையாயும் பயனாயும் இருப்பான்.

முற்காலத்தில்  நம் பாரதத்திருநாட்டில் மனித வாழ்வு நான்கு பருவங்களாக (நெறிகளாக)ப் பகுக்கப்பட்டு அவை முறையே  பிழையின்றி பின்பற்றப்பட்டன என நாம்  நம் முன்னோர்கள் செய்துவத்துள்ள   புராணங்கள், இதிகாசங்கள், காவியங்கள், கதைகள், ஞானநூல்கள், நீதிநூல்கள், பக்திநூல்கள், யோக நூல்கள்  போன்றவற்றால் அறியலாம்.

அந்நான்கு நெறிகளாவன:

1.குருகுலப் பருவம்  (8 வயது முதல் 24 வயது வரை):  

இது  ஒரு மனிதன் கல்வி கற்கும் காலம் .   ஒருவன் பிறந்தது முதல்   7வயதுவரைத் தன்   பெற்றோருடன் இருந்து, பின்   எட்டாவது வயதின்  துவக்கத்தில் கல்வி கற்பதற்காகக் குருதேவரிடம் கொண்டு விடப்படுவான்.    குருதேவரிடம் சிறுவனைக் கல்விகற்க   அனுப்பும்போது அச்சிறுவனுக்குத் தலைமுடி திருத்திக் குடுமி வைத்துக் குருதேவரால்   பூணூல் என்னும் முப்புரி நூல் அணிவிக்கப்பட்டு அவனைக் கல்வி கற்கும் பருவத்திலிருக்கும் மாணவன் (ப்ரம்மச்சாரி) என்று  அடையாளம்  இடுவார். குருகுலத்தில்  24 வயது வரை அவனுக்கு அனைத்துவிதமானக் கல்வியும் அவரவர் தேவைக்கும் கற்கும் திறனுக்கும் ஏற்ப கல்வி நிறைவாகக் கற்பிக்கப்படும். இக்காலத்தைக் கற்கும் பருவம் - ப்ரம்மச்சர்ய ஆஸ்ரமம் என்பர். அதுவரை அவன் குருதேவருடனேயே தங்கி இருக்கவேண்டும். பெற்றோர்கள்  வேண்டுமானால் குருகுலம் சென்று  பிள்ளையைப் பார்த்துவிட்டு வரலாம்
குருகுலத்தில் கல்வி கற்பித்தல் கற்றல் ஆகியவையே முழுநேரப் பணி. குருவிற்கும் மாணவர்களுக்கும் வேறு சமுதாயப் பணிகள் எதுவும் கிடையாது.  தலைக்குடுமி, பூணூலும் ஆகியவை  கல்வி கற்கும் மாணவனுக்கும் கற்பிக்கும்  ஆச்சாரியருக்கும் கொடுக்கப்பட்ட சமூக அடையாளங்கள். அதாவது  சமுதாயத்தில் அவர்களை மற்ற எந்த வேலையும் செய்ய வற்புறுத்தக் கூடாது என்பதற்கும்  அவர்களது  உணவு, உடை போன்ற தேவைகளை இல்லறத்தில் இருப்பவர்களும் அந்நாட்டுஅரசனும் பூர்த்திசெய்ய வேண்டும் என்பதற்கும் ஆகும் அடையாளங்கள் .  கற்றல், கற்பித்தலிலேயே அவர்களது முழு கவனமும்  இருக்கவேண்டும். கல்வி கற்கும் காலத்தில் அவர்களுக்குத் தேவையான உணவு, உடை போன்ற தேவைகளை இல்லறத்தில் இருப்பவர்களும் அந்நாட்டுஅரசனும் பூர்த்திசெய்ய வேண்டும் என்பது கட்டாயம்.

2.இல்வாழ்க்கைப் பருவம் ( 25 வயது முதல் 60 வயது வரை ) :
குருகுலக் கல்வி முடிந்து வீடுதிரும்பிய வாலிபன் தன்  தகுதிக்கேற்றவகையில் ஒரு பெண்ணைப் பெற்றோர்களால் பார்த்து மணமுடிக்க ஏற்பாடு செய்யப்பட்டோ அல்லது  காதலித்தோ வாழ்க்கைத்துணையாகக் கொள்ளவேண்டும். ஆவன் தன் 60 வயது வரை  அப் பெண்ணுடன் வாழ்ந்து சந்ததிகளைப்பெற்று  வாழ்வில்  ஒருமனிதனுக்குள்ள  எல்லா சமுதாயக் கடைமைகளையும் செய்துகொண்டு வாழ்ந்து வரவேண்டும்.தனக்கேற்ற ஒரு தொழிலை மேற்கொண்டு  வாழ்விற்குத் தேவையான பொருள்  சம்பாதித்துக் கொள்ளவேண்டும். அவனால் முடியாத அவர்களுடையத் தேவைகளை அந்நாட்டு அரசன் பூர்த்தி செய்து வைப்பான்.
இவ்வாறு வாழும் இல்லறத்தான்  தன் 60 வயது நிறைவு நாளன்று  தன்  குடும்பம், வீடு ஆகியனவற்றை விட்டு  வெளியேறி கானகத்திற்குத்  தனிமை வேண்டித் தன்மனைவியுடன் சென்று விட வேண்டும் . அவ்வாறு கானகம் போகும் போது  அவர்களை வழியனுப்பும் முறைதான்  சஷ்டியப்த பூர்த்தி என்னும் வழியனுப்பு உபச்சார விழா என்பதாகும்.
3. தவம் இயற்றும் பருவம் (61 வயதின் துவக்கம் முதல்  மரணம் வரை) :
கானகம்  சென்றவர்   தன் மனைவியுடன் தானும்  தம்  ஆன்ம முன்னேற்றத்திற்கான ஆன்மீக நெறிகளான  யோகாசனம் ,பிராணாயாமம் , தியானம் , சமாதிசாதகம் ஆகியவற்றில் எந்தவித தடைகளும் சமூக இடையூறுகள் எவையும் இல்லாமல் அமைதியாகவும் நிம்மதியாகவும் ஈடுபட்டுத் தம் வாழ்நாளைக் கழித்து வீடுபேற்றை அடைவர்.  இதற்கு வானப்ரஸ்த ஆஸ்ரமம் என்று பெயர்.
ஒவ்வொரு பவுர்ணமி நாளன்றும் அவர்களது குடும்பத்தாரும் அரசப்பிரிதிநிதிகளும் கானகத்திற்குச் சென்று அவர்களைப் பார்த்தும் அவர்களுடன் அளவளாவியும்  இருந்து அடுத்த பவுர்ணமி தினம் வரை அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, மருந்துப் பொருட்களுடன் மற்ற பிற தேவைகளையும் கொடுத்துவிட்டு அவ்விரவை அங்கேயே கழித்துவிட்டு மறுநாள் காலை  தத்தம் இல்லம் திரும்புவார்கள்.

4.துறவுப் பருவம்   :
இது ஒருமனிதன்  எந்த வயதிலும் அல்லது மேற்கூறிய எந்தப் பருவத்திலும் தான் விரும்பினால் உலக வாழ்வைத் துறக்க முற்பட்டு துறவறத்தை ஏற்று  வாழலாம். இதற்கு சந்நியாச ஆஸ்ரமம் என்று பெயர்.இதற்கு வயது நிர்ணயம் எதுவும் கிடையாது.  உலக இன்பதுன்ப வாழ்வில் நாட்டம் இல்லாத எந்த ஒருவரும் தன் பெற்றோர் அல்லது தன் மீது அக்கரையுள்ளவர்கள் ஆகியோரின் அனுமதியோடு  துறவு  மேற்கொள்ளலாம். இங்கு துறவு என்றால் பற்றற்ற மனத்தோடு உலகவாழ்வின் உடைமைகளையும் சுகதுக்கங்களையும் துறத்தல்.
துறவு மேற்கொண்டவர்கள், எந்த இடத்திலும்  ஒரு இரவிற்குமேல் நிலையாகத் தங்கக்கூடாது. அவர்களுக்கென்று இருப்பிடம், உடைமை என்று எதுவும் இருக்காது. பசிக்கு யாரிடமேனும் யாசகம் வேண்டி , கிடைத்ததை உண்பார்கள். பசிக்காக மட்டுமே உணவு. உணவில் சுவையைப் பார்க்கமாட்டர்கள். கிடைப்பதை உடுத்திக் கொள்வார்கள். சத் என்னும் மெய்ப்பொருளை எப்போதும் தேடிக்கொண்டே ( யாசித்துக் கொண்டே) இருப்பதால் இவர்கள் சத்+யாசி = சத்யாசி > சந்யாசி  எனப்பட்டனர்.
இவர்களைத் தேடிச்சென்றோ அல்லது இவர்கள் தம் இல்லம் நாடிவந்தாலோ அவர்களின் அன்றாட உணவு, உடை போன்றவற்றை வழங்கவேண்டியது இல்வாழ்வில் ஈடுபட்டவர்களின் கடமையாக அக்காலத்தில் வலியுறுத்தப்பட்டது.
இவை எல்லாமும் ஆண்களுக்குத் தானே தவிற பெண்களுக்கு இல்லை. பிறந்தது முதல்   திருமணகாலம்வரை ஒரு பெண் தன் தந்தையைச் சார்ந்தும், திருமணத்திற்குப் பின் தன் கணவனைச் சார்ந்தும், கணவனுக்குப் பின் தன் பிள்ளைகளைச் சார்ந்தும் இருக்கவேண்டும் என்பது  அக்கால பெண்தர்மம் என்னும்  நியதி.  ஒரு தாவரக் கொடி எப்போதும் ஒரு கொம்பைப் பற்றி அதனைச் சார்ந்தே இருப்பதைபோல் தம் வாழ்நாள் முழுவதும் தந்தை, கணவன் மற்றும் மகன் என்று எப்போதுமே  ஒரு ஆடவனையே   பெண் சார்ந்து இருந்ததால்தான் பெண்ணைக் கொடி என்று அழைத்தனர்.  
இல்வாழ்க்கை என்னும் பருவத்தில் ( 25 வயது தொடங்கி 60 வயது வரை) இருக்கும் குடும்பத்தலைவன் ,    மனித சமுதாயத்தில் அங்கமாக விளங்கும்  (i)குருகுல வாழ்வு நெறியில் இருப்பவர் , (ii)தனிமையில் வனத்தில் தவம் முயலுவோர், மற்றும் (iii) வாழ்வின் முற்றும் துறந்த துறவு நெறியைக் கைக்கொண்ட துறவி ஆகிய மூவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் அவர்களுடன் கூடியிருக்கும் ஒழுகலாற்றைக் கடைப்பிடித்துத் தன் குடும்பத்தை நடத்தவேண்டும் என்கிறது இக்குறள். மற்ற மூன்று நெறியாளர்களிடத்தே  பகைமை பாராட்டாமல் அவர்களுடன் கூடி இருந்து அவர்களுக்குப் பயனாகவும் இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில்  “நல்லாற்றின் நின்ற துணை” என்னும் சொல்லாட்சியின் மட்சிமை எண்ணி வியக்கவைக்கின்றதை யாவரும் உணரலாம்.



+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Sep 19, 2016 10:06 am

ஐயா !

தங்களுடைய நீண்ட விளக்கத்தை வாசித்தேன் . நன்றி .

இக்குறளுக்கு உரையாசிரியர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது .

"இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை. (குறள் 41)

கலைஞர் உரை: பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்.

மு.வ உரை: இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.

சாலமன் பாப்பையா உரை: மனைவியோடு வாழ்பவன்தான் பிள்ளைகள், பெற்றோர், உறவினர் என்னும் மூவர்க்கும் நல்ல வழியில் உதவுபவன்.

பரிமேலழகர் உரை: இல்லறத்தில் வாழ்பவன், பிரமச்சாரி, வானப்பிரஸ்தன், சந்நியாசி ஆகிய மூவர்க்கும் துணையாவான்.

மணக்குடவர் உரை: இல்வாழ்வானென்று சொல்லப்படுபவன் தவசி, பிரமச்சாரி, துறவியாகிய மூவர்.

எனவே அவரவர் விருப்பத்துக்கு ஏற்றவாறு பொருள் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon Sep 19, 2016 10:31 am

உண்மைதான் ஐயா !

விளக்கம் என்பது அவரவர் அறிவறிவு வகைவகையாவது என்பது நாம் அறிந்ததே.

இல்வாழ்க்கை என்பதே பெற்றோர், கணவன், மனைவி , மற்றும் பிள்ளைகளை உள்ளடக்கியது தானே.
அவ்வாறின்றி தனித்து வாழ்பவன் இல்வாழ்வானாகக் கருத இயலாது என்பதும் ஏற்புடையதே.

மேலும் இல்வாழ்க்கையில் உள்ளவர்களைக் காப்பது இல்வாழ்வானின் கடமை. கடமையாற்றுத்தலைத் துணையாகக் கொள்ள முடியாது என்பதும் நியாயமே.

ஆனால், தான் கடமையாற்ற வேண்டிய அவசியம் இல்லாதபோது , பிறருக்கு உதவுவது தானே துணை என்பதாகும்.

தம் பிள்ளையின் கையைப்பிடித்துக் கொண்டு பாதையைக் கடப்பிப்பது பெற்றோரின் கடமை. அதே சமயத்தில் பார்வையற்ற பிறிது ஒருவர் பாதையைக் கடக்க உதவுவது தானே துணை என்பதாகும்.

இக்குறளில் துணை என்னும் பதம் தன் குடும்பத்தைச் சார்ந்தவர்களும்தான் என்று கொண்டால் அதையும் ஏற்றுக் கொண்டு ஆனந்திப்போம்.

கருத்துக்கள் ஒத்துப்போகாவிட்டால் பாதகம் இல்லை. ஆனால் கருதிற்குக் காரணமான கரு எப்போதுமே மாறாதது தானே.

இல்வாழ்வானுக்குப் பிரம்மச்சாரி, வானப்ப்ரஸ்தன் மற்றும் சந்நியாசி என்போருக்கு ஆற்ற வேண்டிய கடமை ஏதும் கிடையாது என்பதால் அத்தகைய மூவகையினருக்கும் உதவியாய் இருப்பதே துணை என்னும் பதத்திற்குச் சாலப்பொருந்துவதாக அமையலாம்.

ஈகரை தமிழ்ப் பாலம் நமது கருத்துப் பரிவர்த்தனைக்கு இடமாவது நமக்குக் கிடைக்கப்பெற்ற
அரிய வாய்ப்போடு பெரிய வெகுமதியும் கூட.

அடியவனின் சிந்தனைக்கும் செவிசாய்த்த தங்கள் மாட்சிமைக்கு மிகு நன்றிகள் ஐயா!
வணக்கம் ஐயா!




+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக