புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடல் வலி ஏற்பட வாயு காரணமா? - Page 2 Poll_c10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? - Page 2 Poll_m10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? - Page 2 Poll_c10 
56 Posts - 74%
heezulia
உடல் வலி ஏற்பட வாயு காரணமா? - Page 2 Poll_c10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? - Page 2 Poll_m10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? - Page 2 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
உடல் வலி ஏற்பட வாயு காரணமா? - Page 2 Poll_c10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? - Page 2 Poll_m10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? - Page 2 Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
உடல் வலி ஏற்பட வாயு காரணமா? - Page 2 Poll_c10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? - Page 2 Poll_m10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? - Page 2 Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடல் வலி ஏற்பட வாயு காரணமா? - Page 2 Poll_c10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? - Page 2 Poll_m10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? - Page 2 Poll_c10 
221 Posts - 75%
heezulia
உடல் வலி ஏற்பட வாயு காரணமா? - Page 2 Poll_c10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? - Page 2 Poll_m10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? - Page 2 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
உடல் வலி ஏற்பட வாயு காரணமா? - Page 2 Poll_c10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? - Page 2 Poll_m10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? - Page 2 Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
உடல் வலி ஏற்பட வாயு காரணமா? - Page 2 Poll_c10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? - Page 2 Poll_m10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
உடல் வலி ஏற்பட வாயு காரணமா? - Page 2 Poll_c10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? - Page 2 Poll_m10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
உடல் வலி ஏற்பட வாயு காரணமா? - Page 2 Poll_c10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? - Page 2 Poll_m10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உடல் வலி ஏற்பட வாயு காரணமா? - Page 2 Poll_c10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? - Page 2 Poll_m10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
உடல் வலி ஏற்பட வாயு காரணமா? - Page 2 Poll_c10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? - Page 2 Poll_m10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
உடல் வலி ஏற்பட வாயு காரணமா? - Page 2 Poll_c10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? - Page 2 Poll_m10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
உடல் வலி ஏற்பட வாயு காரணமா? - Page 2 Poll_c10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? - Page 2 Poll_m10உடல் வலி ஏற்பட வாயு காரணமா? - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் வலி ஏற்பட வாயு காரணமா?


   
   

Page 2 of 2 Previous  1, 2

prajai
prajai
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 664
இணைந்தது : 19/06/2016

Postprajai Sun Sep 25, 2016 11:28 pm

First topic message reminder :

பொதுநல மருத்துவர் டாக்டர் கு.கணேசன் தமிழ் ஹிந்துவில் எழுதிய கட்டுரை.

வயிற்று வலி, நெஞ்சு வலி, தசை வலி என எல்லா உடல் வலிகளுக்கும் வாயுக் கோளாறு ஒரு காரணம் என்கிறார்கள். இது சரியா?

சரியில்லை.

இந்த இடத்தில் பொருத்தமான ஓர் உண்மைச் சம்பவத்தைப் பார்ப்போம். என் நண்பரின் தந்தைக்குத் திடீரென நெஞ்சில் வலி வந்தது. அவரோ, அது ‘கேஸ் டிரபி’ளாக இருக்கும் என நினைத்துக் கவனிக்காமல் விட்டுவிட்டார். நாளாக ஆக வலி அதிகரித்தது, நண்பர் வலுக்கட்டாயமாக என்னிடம் அவரை அழைத்துவந்தார். பரிசோதித்துப் பார்த்தபோது, அவருக்கு இதயத் தமனிகளில் மூன்று அடைப்புகள் இருந்தன. தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு, உடல்நலம் தேறிவிட்டார். வாயுக் கோளாறு என இன்னும் சிறிது காலம் அவர் அலட்சியமாக இருந்திருந்தால், அவருடைய உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கும்.

உடலில் வலி ஏற்படுவதற்கும் வாயுக்கும் தொடர்பில்லை என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ளலாம்.

அஜீரணம், அடிக்கடி ஏப்பம் வருதல், வாயு பிரிதல், வயிற்று இரைச்சல், வயிற்று உப்புசம் ஆகிய அறிகுறிகளுடன் காணப்படும் பிரச்சினையை ‘வாயுத் தொல்லை’ (Flatulence) என்கிறோம். இது வயிற்றில் மட்டுமே ஏற்படக்கூடிய பிரச்சினை. ஆனால், பொதுவாக வாயுவுக்குத் துளியும் தொடர்பில்லாத நெஞ்சு வலி, முதுகு வலி, முழங்கால் மூட்டு வலி, விலா வலி, இடுப்பு வலி, தோள்பட்டை வலி என உடலில் உண்டாகும் பலதரப்பட்ட வலிகளுக்கும் வாயுதான் காரணம் என்று முடிவு செய்துகொள்கிறார்கள்.

வாயு எப்படி உற்பத்தியாகிறது எனும் அறிவியலைத் தெரிந்துகொண்டால் இதன் உண்மை புரியும். நம் உடற்கூறு அமைப்பின்படி, சுவாசப் பாதையிலும் உணவுப் பாதையிலும் மட்டுமே வாயு இருக்க முடியும். பலரும் நினைத்துக்கொண்டிருப்பது போலத் தலை முதல் பாதம்வரை வாயு சுற்றிக்கொண்டிருப்பது இல்லை. அப்படிச் சுற்றினால், அது உயிருக்கே ஆபத்து.

நாம் அவசரமாகச் சாப்பிடும்போது, பேசிக்கொண்டே சாப்பிடும்போது, காபி, டீ மற்றும் புட்டிப்பானங்களை உறிஞ்சிக் குடிக்கும்போது நம்மை அறியாமலேயே காற்றையும் சேர்த்து விழுங்கிவிடுகிறோம். இந்தக் காற்றில் 80 சதவீதம் இரைப்பையில் இருந்து ஏப்பமாக வெளியேறிவிடுகிறது. மீதி குடலுக்குச் சென்று ஆசனவாய் வழியாக வெளியேறுகிறது.

குடலில் உணவு செரிக்கும்போது அங்குள்ள தோழமை பாக்டீரியாக்கள் நொதித்தல் மூலம் பல வேதிமாற்றங்களை ஏற்படுத்துவதால், ஹைட்ரஜன், கார்பன்-டை-ஆக்சைடு, நைட்ரஜன், ஆக்சிஜன், மீத்தேன் எனப் பலதரப்பட்ட வாயுக்கள் உற்பத்தியாகின்றன. இப்படி நாள்தோறும் சுமார் ஏழு லிட்டர்வரை வாயு உற்பத்தியாகிறது. இது அப்படியே வெளியேறினால் சுற்றுச்சூழல் கெட்டுவிடும். எனவே, ரத்தத்தில் இது உறிஞ்சப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, சுவாசப் பாதை வழியாக வெளியேறுகிறது. சாதாரணமாகக் குடலில் 600 மி.லி. வாயு இருக்கக்கூடும். இது வெளியேறுவது உடலுக்கு நல்லதுதான்.

சாதாரணமாக மேலே சொன்ன வாயுக்கள் பிரியும்போது துர்நாற்றம் இருக்காது. ஆனால், குடலில் சில என்சைம்கள் பற்றாக்குறை ஏற்படும்போது, புரத உணவு சரியாகச் செரிக்கப்படுவதில்லை. அப்போது அமோனியா, ஹைட்ரஜன் சல்ஃபைடு, மெர்க்காப்டான் போன்ற வாயுக்கள் உற்பத்தியாகி ஆசனவாய் வழியாகக் கெட்ட வாடையுடன் வெளியேறும்.

புரத உணவுகள், கிழங்குகள், வெங்காயம், முட்டைக்கோஸ், பீன்ஸ், காலிஃபிளவர் போன்ற காய்களை அதிகமாகச் சாப்பிடுவதாலும், மலச்சிக்கல், அமீபியாசிஸ், குடல் காசநோய், புற்றுநோய் போன்றவற்றாலும் வாயு அதிகமாகலாம்.


prajai
prajai
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 664
இணைந்தது : 19/06/2016

Postprajai Wed Sep 28, 2016 12:22 am

மிக்க நன்றி ஐயா! நேரில் சென்று யோகா கற்று ஆரோக்கியமாக வாழப் பத்தில் ஒன்பதுபேர்க்கு இயலாது. அவர்களுக்காக, லங்காபுரி என்ற தளத்தில் 24.09.2016 அன்று பதியப்பட்ட கட்டுரை.

வாயுத்தொல்லையில் இருந்து விடுபட மிகச் சிறந்த மருத்துவம்!


திடீரென வயிற்று வலி, வாய்வு, வீக்கம் உப்புசம், நெஞ்செரிச்சல் என பல தருணங்களில் ஜீரண சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மருத்துவர்களுக்கு வராதா? அவர்களும் மனிதர்கள்தானே என நமக்கு சந்தேகம் தோன்றும்.

மருத்துவர்கள் இந்த மாதிரியான விஷயங்களில் மிகவும் முன்னெச்செரிக்கையுடன்தான் இருக்கிறார்கள்.

காரணம் இரவு பகல் பாராமல் அவர்கள் சேவை செய்தாகும் தங்களின் ஆரோக்கிய விஷயத்தில் முன்னெச்சரிக்கையுடனே இருக்கிறார்கள் என்பதற்கான ஆதரங்களை தொடர்ந்து படியுங்கள்

பச்சை காய் வகைகளின் சாறு
“தினமும் ஆப்பிள், எலுமிச்சை சாறு, செலரி, பார்ஸ்லி,பசலை, காலே போன்ற பச்சை நிற கீரை அல்லது காய் வகைகளின் சாறுகளை குடிக்கிறேன். இவை மிகச் சிறந்த எரிபொருளாக நமது ஜீரண மண்டலத்திற்கு விளங்குகிறது.

வாரம் ஒரு நாள் விரதம் :
வாரம் ஒரு நாள் உணாமல் விரதம் இருக்கிறேன். இரவு மட்டுமே லைட்டாக எடுத்துக் கொள்கிறேன்.

இதனால் கல்லீரலுக்கு போதிய ஓய்வுகள் கொடுத்து, நச்சுக்களை வெளியேற்ற ஏதுவாகிறது. அன்று நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவே இருக்கிறேன் ” என ராபின் சட்கான் என்ற MD மருத்துவர் கூறுகிறார்.

கார்பனேட்டட் பானங்கள் :
“நான் கார்பனேட்டட் குளிர்பானங்களை தொட மாட்டேன். சிக்கரி கலந்த எந்த உணவுப் பொருட்களையும் சாப்பிடுவதில்லை, குடிப்பதில்லை.

இவையே அஜீரணத்திற்கு அதிக காரணம். நார்சத்து உணவுகளை விருப்பமாக சாப்பிடுவேன்” என லாங்க் பீச் என்ற மருத்துவமனையின் MD பாவேஷ் ஷா என்ற மருத்துவர் கூறுகிறார்.

சாப்பாடு,உடற்பயிற்சி :
“நான் யோகார்டை தினமும் சாப்பிடுகிறேன். அது நல்ல பேக்டீரியாக்களை உற்பத்தி செய்கிறது. அதேபோல் நீர் நிறைய அருந்துவேன். உடலின் பாதி பிரச்சனைகளுக்கு நீர் போதிய அளவில் அருந்தாமல் இருப்பதுதான். ஜீரண பாதிப்புகள் வராமலிருக்க நீர் அருந்தினாலே போதும்.

தூக்கம் :
அதேபோல் தினமும் நடக்கிறேன். இதனால் நன்றாக பசியெடுக்கிறது. ஜீரண நொதிகள் சுரந்து ஜீரண ஸ்க்தியை தருகிறது. அதேபோல் 6-8 மணி நேரம் தூங்குவேன். இதனால் மன, உடல் இரண்டுமே புத்துணர்வாகிறது ” என கேத்தரின் என்ற இரைப்பை குடலியல் மருத்துவர் கூறுகிறார்.

உணவு லேபிளில் கவனம் :
“உணவுப் பொருட்களில் நான் கவனமுடன் பார்ப்பேன். “ஆல் ” என வரும் சார்பிடால், மானிடால், லாக்டிடால் ஆகியவை செயற்கை இனிப்புகள்.

இவை வயிற்று உப்புசத்தை கொடுத்துவிடும். உடலுக்கும் நல்லதல்ல. கேண்டி வகை இனிப்புகள், கேக், குக்கி ஆகியவைகளை நான் சாப்பிடுவதில்லை.

உடலுக்கு தீங்கு தரும் இவற்றை ஏன் தேடி உண்ண வேண்டும்” என்று நிதின் குமார் என்ற மருத்துவர் கூறுகிறார்.

வாய்வு உண்டாக்கும் உணவுகளை தவிருங்கள் :
“சில உணவுகள் நமக்கு வாய்வை தரும். புருக்கோலி, முட்டைகோஸ் லெட்யூஸ் ஆகியவற்றை நாம் உண்ண மாட்டேன்.

வெளியூர் செல்லும்போது பிரட், கிழங்கு சம்பந்தமான உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்த்தல் நல்லது. அவை அஜீரணத்தை உண்டாக்கி, வயிறு சம்பந்த பிரச்சனைகளை உண்டுபண்ணும்” என ஷில்பா மெஹ்ரா என்ற குடலியல் மருத்துவர் கூறுகிறார்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Sep 28, 2016 6:26 am

நல்ல பதிவுகள். தெரிந்து கொள்ள வேண்டியவை தான்.

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Wed Sep 28, 2016 7:38 am

இவ்வளவையும் கருத்தில் வைத்து தினமும் செயல்படுதல் என்பது எவ்வளவு மனச்சுமை- பணச்சுமை.

அருகில் இருக்கும் யோகா மையத்தில் யோகாகனங்கள் கற்று பத்து நிமிடம் பழகினால், மேற்சொன்ன இரு சுமைகளும் ஓடியே போகும். உண்ணத் தகுந்த எதையும் தடையின்றி உண்ணலாம். பூரண உடல் ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாகவும் தெளிந்த சிந்தனையோடும் வாழலாம்.

இன்னொமொன்று – யோகா என்பது ஆத்மவித்யா – இதனைப் பயிலவும் பழகவும் பூர்வ ஜென்ம பதிவு வேண்டும். கீதையில் க்ருஷ்ணன் யோகாவை கீழ்க்குறிப்பிட்டவாறு சொல்கிறார்.

“ மானுடராகப் பிறந்த பல்லாயிரக் கணக்கானோரில் யாரோ ஒருவன் என்னை உள்ளபடி அறிகிறான் :
அவ்வாறு அறிந்து கொண்ட ஆயிரக்கணக்கானோரில் ஒருவன் என்னை அடைகிறான்”

இதில் அறிதலும் . அடைதலும் இராஜயோகம். அறியவே புண்ணியம் வேண்டுமாம். பின் அடைதல் அதனினும் கடினம் தானே ! க்ருஷ்ணன் நான் , என்னை என்று கீதையில் குறிப்பிடுவது இராஜயோகம் என்னும் அஷ்டாங்க யோகத்தைத்தான் என்பார் என் ஸ்ரீகுருதேவர். அடியனும் அவ்வாறே ஏற்ற கருத்தே இது ஐயா.




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Sep 28, 2016 7:50 am

சூப்பர் தகவல் ஐயா, மிக்க நன்றி.

prajai
prajai
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 664
இணைந்தது : 19/06/2016

Postprajai Wed Sep 28, 2016 11:38 am

Ramalingam K wrote:
க்ருஷ்ணன் நான் , என்னை என்று கீதையில் குறிப்பிடுவது  இராஜயோகம் என்னும் அஷ்டாங்க யோகத்தைத்தான்
மேற்கோள் செய்த பதிவு: 1222936

இதைப் படித்தபோது ஐயமாக இருந்தது. இணையத்தில்

“இராஜயோகம்” தன்னகத்தே கீழ்க்கானும் எட்டு படிகளைக் கொண்டுள்ளது.

1. இமயம்
2. நியமம்
3. ஆசனம்(அ)இருக்கை
4. பிரணாயாமம்(அ)பிராணணைக்கட்டுப்படுத்தல்
5. பிரத்தியாஹாரம்(அ)புலன் ஒடுக்கம்
6. தாரணை
7. தியானம்(அ)ஆழ்ந்து சிந்தித்தல்
8. சமாதி(அ)மெய்மறந்த உயர் நினைவு நிலை "

என்று கண்டபோது அப்படியும் இருக்கலாம் என்று தோன்றுகிறது. மிக்க நன்றி ஐயா!

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக