புதிய பதிவுகள்
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 18:33

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 18:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 17:43

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 16:28

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 15:28

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:11

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 14:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:13

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 13:55

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:44

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09

» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_c10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_m10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_c10 
56 Posts - 45%
ayyasamy ram
விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_c10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_m10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_c10 
51 Posts - 41%
mohamed nizamudeen
விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_c10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_m10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_c10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_m10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Dr.S.Soundarapandian
விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_c10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_m10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_c10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_m10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai
விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_c10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_m10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_c10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_m10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_c10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_m10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_c10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_m10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_c10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_m10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_c10 
417 Posts - 48%
heezulia
விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_c10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_m10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_c10 
292 Posts - 34%
Dr.S.Soundarapandian
விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_c10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_m10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_c10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_m10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_c10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_m10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_c10 
28 Posts - 3%
prajai
விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_c10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_m10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_c10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_m10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_c10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_m10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_c10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_m10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_c10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_m10விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun 18 Sep 2016 - 0:20

First topic message reminder :

கண் டாக்டரிடம் சென்றால் , ஒவ்வொரு லென்ஸாக மாற்றிப்போட்டு , " இப்போ நல்லா தெரியுதா ? " என்று நம்மிடம் கேட்பார். எந்த லென்ஸில் நம்முடைய பார்வை நன்றாகத் தெரிறதோ , அந்த லென்ஸை வைத்து நமக்குக் கண்ணாடி செய்து கொடுப்பார்கள் . எந்த லென்ஸ் போட்டாலும் , பொருந்துகிற கண் யாருக்கும் இருக்காது .

ஆனால் அய்யன் வள்ளுவர் , எந்த வார்த்தை போட்டாலும் , பொருந்தி வருவதுபோல சில குறட்பாக்களை எழுதியிருக்கார் . அவற்றைப் பார்க்கலாமா ?

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் . ( குற்றங்கடிதல் - 435 )

இது ஓர் எளிய குறட்பா. உரையின்றியே புரிந்துகொள்ள முடியும் .

பொருள் :
========
குற்றம் வருவதற்கு முன்னரே , அது வராமல் காக்க வேண்டும்; அவ்வாறு காத்துக் கொள்ளாதவன் வாழ்க்கை , தீயின் முன்பாக வைக்கப்பட்ட வைக்கோற்போர் போல அழிந்துவிடும் .

இது அரசனுக்குச் சொல்லப்பட்ட நீதி என்றாலும் தனிமனித வாழ்க்கைக்கும் பொருந்தி வருகின்ற நீதியாகும் .
பொருட்பாலில் பெரும்பாலான குறட்பாக்கள் இவ்வாறே உள்ளன.

இப்போது இந்தக் குறட்பா , யார்யாருக்கெல்லாம் பொருந்தி வருகிறது என்று பார்க்கலாமா !

குடும்பஸ்தனுக்கு :
================
கடன்
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை , எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் .

வியாபாரிக்கு :
=============
நட்டம்
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை , எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் .

தனி மனிதனுக்கு :
================
நோய்
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் .

மாணவனுக்கு :
=============
தேர்வு
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் .

அரசுக்கு :
========
வெள்ளம்
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் .

சென்ற ஆண்டு மழைக்காலத்தில் அரசு , தகுந்த முன்னேற்பாடுகளை செய்யத் தவறிய காரணத்தால் , சென்னை மக்கள் பேரிழப்பை சந்திக்க நேரிட்டது .

வெள்ளம் வந்தாலும் இடர்தான் ; வராவிட்டாலும் இடர்தான் . காவிரியில் தமிழ்நாடு கேட்காமலேயே நீரைத் திறந்து விட்டிருந்தால் இன்றைய தினம்  கர்நாடகா பற்றி எரிந்திருக்காது .  வருமுன்னர்க் காத்திருந்தால் இந்த  அழிவு ஏற்பட்டிருக்காது .

மற்றவை பிறகு ...



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon 19 Sep 2016 - 12:59

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை. ( இல்வாழ்க்கை-41 )

பேராசிரியர் டாக்டர் மு.பெரி.மு.இராமசாமி அவர்கள்  பதவுரை .

இல்லறத்தில் வாழ்பவன் என்று சொல்லப்படுபவன் , இயற்கையான தொடர்புடைய  
பெற்றோர், மனைவி, மக்கள் என்ற முத்திறத்தாருக்கும் , அவர் செல்லும் நல்வழியில் ,நிலை பெற்ற துணையாவான் .

சுஜாதா அவர்களும் குறளுக்கு பதவுரை எழுதி உள்ளார் . அவர் எழுதிய விளக்கம் யாது என  தெரியுமா நம் உறவுகளுக்கு ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon 19 Sep 2016 - 13:50

அமுதத் தமிழின் அழகே பலபொருள் ஒரு மொழிதானே !

எடுப்பவர்க்கெல்லாம் இன்பம் தரும் மழலைச் செல்வம்போல்;
வந்தாரை வாழவைக்கும் நம் பாரதம் போல்;
வண்டமிழின் பொருள்வளத்திற்கு வற்றுதல் ஏது ஐயா!


நவில்தொறும் நூல்நயமாவதில் நம் நற்றமிழைப் பிந்தையதே பிற மொழிகள்.
நம் தமிழின் சொல்வளமும் பொருள்வளமும் அத்துணைத்து தானே.
ஆனந்தம் ;ஆனந்தம்; ஆனாந்தம் - உன்னால் அழகு மொழியே ! என் அம்மே!!



+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun 25 Sep 2016 - 7:49

அடுத்து நாம் காண இருக்கும் குறட்பா

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது. ( மக்கட்பேறு - 68 )

இக்குறட்பாவில் " தம்மின் " என்ற சொல் விரித்துப் பொருள் கொள்ள இடந்தருவது .

பொருள் : தம் அறிவினும் தம்மக்கள் மிக்க அறிவினராக இருத்தல் இவ்வுலகத்து உயிர்க்கெல்லாம் இன்பம்தரும்.

இக்குறளின் வார்த்தைகளை சற்று மாற்றியமைத்தால் வேறு பொருள் கிடைக்கும்.

தம்மக்கள் அறிவுடைமை தம்மின் மாநிலத்து மன்னுயிர்க்கெல்லாம் இனிது என்று மாற்றியமைப்போம் .

அதாவது

தான் பெற்ற குழந்தைகளின் அறிவு தனக்குப் பயன்படுவதைக் காட்டிலும் உலகத்திற்கே அதிகம் பயன்படும் என்பது மற்றொரு பொருள் .

"தந்தை அறிவு மகன் அறிவு " என்று சொல்வார்கள் .அதாவது தந்தை எவ்வளவு அறிவுடையவனாக இருக்கின்றானோ , அதே அளவு அறிவு மகனுக்கும் இருக்கும் என்பது கருத்து . இதை இக்காலத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது . அறிவியல் வானளாவ வளர்ந்த இன்று , மகனின் அறிவு தந்தையின் அறிவைக் காட்டிலும் பன்மடங்கு மேம்பட்டிருப்பதை பார்க்கலாம்.விதிவிலக்காக , தந்தையின் அறிவை எட்ட முடியாத மகன்களும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை .

தந்தையின் அறிவைக் காட்டிலும் மகனுடைய அறிவு மேம்பட்டிருந்தால் , அது உலகத்திற்கு நன்மை பயக்கும் என்று சொல்வதைக் காட்டிலும் ,

மகனுடைய அறிவாற்றல் தனக்குப் பயன்படுவதைக் காட்டிலும் , உலக மக்களுக்கு அதிக நன்மை பயக்கும் என்று கொள்வதே சாலச் சிறந்தது .

எடிசன் , நியூட்டன் , வள்ளுவர் போன்ற பெருமக்களது அறிவு , இன்றைய உலக இயக்கத்திற்கு பெருமளவு காரணமாக இருப்பதை யாரேனும் மறுக்க இயலுமா ?









இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun 25 Sep 2016 - 8:53

ஐயா!

"மகனுடைய அறிவாற்றல் தனக்குப் பயன்படுவதைக் காட்டிலும் , உலக மக்களுக்கு அதிக நன்மை பயக்கும் என்று கொள்வதே சாலச் சிறந்தது" என்னும் கருத்து உயர்ந்ததே.

ஆனால் அது  உலகோடு   தனக்கும்   பயன்படுமானால் இன்னும்  உயர்வும்  இன்பமும் ஆகும் அல்லவா!

முப்பாலில் முழுதும் இல்வாழ்வானுக்கான உபதேசமாகவே கருதமுடிவது. ஆ கையால் அது மகனைப்    பெற்ற பெற்றோருக்கும் இனிமை பயப்பதாய் இருப்பதே உயர்வாக இருக்கமுடியும்.

தான் சுகம் பெறாமல், பிறரைச் சுகம் பெற வைப்பது முழுமையாகாது. ஆத்மா சுயம்-பரம் என இருதரப்பிலும் சுகம் பெறுதலே உயர்வுவாக அமையும். பிறரது பசியை போக்கி, தான் பட்டினி இருந்து மகிழ்தல் என்பது இயலாத ஒன்று.  அது இயற்கைக்கு மாறானதாகவே அமையும்.

உண்மையில் முழுமையான சுகம் என்பது தன் உடம்பு, உயிர், மனம் இம் மூன்றையும் இன்புற வைத்தலே.

ஆகையால், இக்குறளை அடியவன் புரிந்து கொண்ட வகையில் இவ்வாறு இருக்கலாமா பாருங்கள்! இதில் பிழை காணப்பட்டாலும்  அடியனுக்கு ஏற்பே. தங்கள் கருத்தே சிறந்தது என்பதில் மாற்றில்லை.

குறளில் காணும் நிறை
அறத்துப்பால்
அதிகாரம் 7
இல்லறவியல்

மக்கட்பேறு  (புதல்வரைப் பெறுதல்)

68. தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
      மன்னுயிர்க் கெல்லாம் இனிது. 7-08

பொருளுரை:

   தன்னுடைய பிள்ளைகள்  தன்னைவிட மிகை ஞானம் உள்ளவர்களாக இருத்தல் இந்த உலகத்தில்  இருந்து வாழும் எல்லா  உயிர்  இனங்களுக்கும்  மகிழ்ச்சியைக் கொடுப்பதாகும். அவ்வாறே இல்வாழ்வானுக்கும் அந்நிலை இனிமையைத்தரும்.

பதவுரை :

தம்மின்  தம்மக்கள் அறிவுடைமை- தன்னுடைய பிள்ளைகள்  தன்னைவிட மிகை ஞானம் உள்ளவர்களாக இருத்தல் ;
மாநிலத்து - இந்த உலகத்தில்  ;
மன்னுயிர்க் கெல்லாம் இனிது- இருந்து வாழும் எல்லா  உயிர் இனங்களுக்கும்  மகிழ்ச்சியைக் கொடுப்பதாகும்.

விளக்கவுரை :

உலகில்  வாழும் எல்லா மனிதரும் தாம் பலவகையிலோ அல்லது ஏதேனும் ஒரு வகையிலோ மற்றவர்களைவிட சிறந்தவராக  இருக்கவேண்டும் என்று எண்ணுவது இயல்பு.

உண்மையில்  அவ்வாறுதான் இயற்கையில் உயிர்வாழ்வன எல்லாம் படைக்கப்பட்டுள்ளன. உயிரினங்கள் எவையும் பிற யாதொன்றிற்கும் சமமானவையோ பிறவற்றைவிட தாழ்வானவையோ அல்லது உயர்வானவையோ அல்ல. ஒவ்வொன்றும் தனித்தனி விதம் .மனிதரில்கூட  எவரும் எவர்க்கும் சமமானவரோ, எவரையும் விட உயர்வானவரோ அல்லது தாழ்வானவரோ இல்லை.

ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு தனிக்குணம் இயல்பாகவே உண்டு. இதனை அறிந்து வாழ்தல் நலம்.

வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான்
தேன் சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் - யாம்பெரிதும்
வல்லோமேஎன்று வலிமைசொல வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது  (ஔவையார் –தனிப்பாடல்)

வான்குருவியின் கூடு, கறையான் உண்டு பண்ணும் புற்று, தேனீக்களின் தேனடை(கூடு), சிலந்தி வலை ஆகியனவற்றை மனிதன் என்னதான் முயன்றாலும் அவனால் செய்ய முடியாததைப் போல உயர்திணை - அஃறிணை ; ஆண்-பெண் ; வறியவர் – செல்வந்தர்  ; சிறியோர்-பெரியோர்; இளைஞர்- முதியோர் என ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒருவகையில் தனித்துவம் இருப்பது கண்கூடு.

எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது - அவ்வாறே ஒவ்வொன்று கடினம்.  

ஆனாலும்  தான் இருக்கும் நிலையைவிடத் தம் பிள்ளை ஏதாகிலும் ஒருவகையில் உயர்வுடையவனாகவும் சிறப்புடையவனாகவும் இருக்கவேண்டும் என்று எண்ணுவது எல்லா மனிதருக்கும்  இருக்கக்கூடிய இயல்புக்குணம்.

இல்வாழ்வான்  தன் பிள்ளையின் மாட்டு தான் கொண்ட அன்பினால் தன்னைவிடவும் தன் பிள்ளை உயர்வானவனாக இருக்கவேண்டும் என்று விழைவது இயல்பு என்பது கருத்து.

தன் பிள்ளையின் அறிவு உலகிற்குப் பயன்படாமல் போனாலும் கூட தன்னைவிடவும் கூடுதலாக இருக்கும் தன் பிள்ளையின் அறிவால் பெற்றோருக்கு இன்பமே என்பது அடியவனின் கருத்து.

ஐயா ! இதனை மறுப்புரையாகவோ அல்லது மாற்றுரையாகவோ கொளல் வேண்டாம். அடியவனின் கருத்து என்றே கொண்டு குறைகாணின் புறந்தள்ளி, நிறைகாணின் ஏற்குமாறு வேண்டும் என்பது அடியனின் விண்ணப்பம்.



+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun 25 Sep 2016 - 9:19

ஐயா !

தங்களின் நீண்ட உரைக்கு மிக்க நன்றி ! இன்னும் முழுவதுமாகப் படிக்கவில்லை ; படித்துப் பிறகு பின்னூட்டமிடுகின்றேன் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun 25 Sep 2016 - 15:54

இக்குறளில் கூறப்பட்டுள்ள அறிவு , நாம் எல்லோரும் கொண்டிருக்கின்ற அறிவல்ல . சாதனை படைக்கும் அறிவைப்பற்றி வள்ளுவர் பேசுகிறார் .

நாம் கொண்டிருக்கும் அறிவு வயிற்றுக்குச் சோறிடும் அறிவு . அது நாம் இறந்தவுடன் நம்மோடு இறந்துவிடும் . ஆனால் சாதனை படைக்கும் அறிவு , பூதவுடல் நீத்தபின்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் . சாதனையாளர்கள் சாவதில்லை . முதலில் சாதனையாளனின் அறிவு குடும்பத்திற்குப் பயன்படவேண்டும் . அதில் மாற்றுக் கருத்தில்லை . ஆனால் அது கொஞ்ச காலம்தான் . நீடித்த பயன் தருவது உலக மக்களுக்கே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun 25 Sep 2016 - 22:36

அறிவு என்னும் சொல்லிற்கு:

ஞானம், தெளிவு,  விவேகம், ஆன்மா,மனம்,உணர்ச்சி, அன்பு, அருள்,காட்சி, பார்வை, வலி, தர்க்கம், ஒளி, சுயபுத்தி, உடம்பு, தைரியம், நுண்மை, விருப்பம், பெருமை, சம்பாத்தியம், பரம்பொருளைப் பற்றிய சிந்தனை, கல்வி, பொருள், கொள்கை, நிறம், ஆராய்ச்சி, உண்மை, செய்தொழில், இயல்பு, அழகு,புகழ் – இப்படி  அநேக பொருட்கள் இருக்கும்போது

ஞானம் என்பதை மட்டுமே பொருளாகக் கொள்வது சரியாகுமா ஐயா!

1. உடம்பு என்னும் பொருளில் :  தான் அழகு குறைவாக இருப்பதாக தாழ்வு மனப்பான்மையில் இருப்பவனுக்கு  தன் அழகான குழந்தை இனிது.

2. தைரியம் என்னும் பொருளில் : தான் கோழையாக இருப்பானாகில், தன் பிள்ளையிடம் தைரியத்தைக் காண்பது அவனுக்கு  இனிது.

3. தர்க்கம்  என்னும் பொருளில் : பிறர் சொல்வதை அப்படியே ஏற்கும் குணவானுக்கு தர்க்கம் செய்து உண்மையைச் சொல்லும் தன் பிள்ளை இனிது.

4. செய்தொழில் என்னும் பொருளில் ; அன்றாடம் வெய்யிலில் வேலை செய்யும் தகப்பனுக்கு தன் பிள்ளை ஒரு அலுவலகத்தில்  பணிசெய்தல் இனிது.

5. அருள் என்னும் பொருளில்:  தான் உண்டு தன் வீடு உண்டு என்று உலகிற்கு வெளிப்படாத சுயநலமியான தந்தைக்குத் தன் மகனை அருளாளனாகக் காண்பது இனிது.

6. இறைபக்தி என்னும் பொருளில் : தனக்கு இறைபக்தியே கொஞ்சமும் இல்லையே என்பவனுக்குத் தன் மகன் பரம்பொருளைப் பற்றிய சிந்தனையில் தினமும் கோவிலுக்குச் சென்று வருதல் இனிது.

7. தெளிவு என்னும் பொருளில் : எதிலும் எப்போதும் குழப்பத்தையே இயல்பாகக் கொண்டவனுக்கு தெளிவான புத்தியுள்ள பிள்ளை இனிது.

8. கல்வி என்னும் பொருளில் : பள்ளிக் கூடம் பக்கமே போகாதவனுக்குத் தன் பிள்ளை கல்வி கற்றல் இனிது.

9. ஆராய்தல் என்னும் பொருளில் : சோம்பேறியாய்  இருப்பவனுக்கு  எதையும் ஆய்ந்து அறியும் தன் பிள்ளை இனிது.

10. ஆன்மா என்னும் பொருளில் : தன் பெற்றோர்களுக்குத் தான் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்னும் வருத்தம் தீர தனக்கு ஒரு பெண் குழந்தையின் பிறப்பு மட்டுமே இனிது .

11. நுண்மை என்னும் பொருளில் : சுவர் தாண்டித் திருடும் திருடனுக்குத் தன் மகன் Pick pocket திருடனாக சுலபாகத் திருடுவ்து இனிது.

இப்படிப் பார்த்தால்  . . . . .

தன்னுடைய பிள்ளை  தன்னைவிட மிகை ஞானம்( அறிவு) உள்ளவர்களாக இருத்தல் , இந்த உலகத்தில்  இருந்து வாழும் எல்லா  உயிர்  இனங்களுக்கும்  மகிழ்ச்சியைக் கொடுப்பதாகும். அவ்வாறே இல்வாழ்வானுக்கும் அந்நிலை இனிமையைத்தரும்  என்பதும் ஏற்புடையதாகும் தானே !
அடியனின் கருத்தில் பிழை இருப்பின் பொறுத்தருளப் பிரார்த்திக்கின்றேன்.



+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue 27 Sep 2016 - 16:09

அடுத்து நாம் காண இருக்கும் குறட்பாவின் விளக்கத்தை , ஒரு வகுப்பறையில் நடக்கும் காட்சியாகப் பார்க்கலாம் .

அது பத்தாம் வகுப்பு . தமிழாசிரியர் வகுப்பறையினுள் நுழைகிறார் .

மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று , " வணக்கம் ஐயா ! " என்று கூறுகின்றனர்.

" வணக்கம் ! அமருங்கள் ! இன்று என்ன பாடம் ? "

" செய்யுள் பாடம் ஐயா ! திருக்குறள் ! "

" நல்லது ; எல்லோரும் பாட புத்தகத்தை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் ! இன்று நாம் காண இருக்கும் குறட்பா

குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு . ( நிலையாமை - 338 )

என்னும் குறளாகும் . இந்தக்குறள் துறவறவியல் என்னும் தொகுப்பில் நிலையாமை என்னும் அதிகாரத்தில் வந்துள்ளது .

" ஐயா ! " துறவறவியல் " என்றால் என்ன ? "

" தம்பி ! நல்லகேள்வி ! " துறவறவியல் " என்றால் துறவிகளுக்காக சொல்லப்பட்ட , துறவிகள் கடைபிடிக்கவேண்டிய அறங்கள் அடங்கிய  தொகுப்பு என்று பொருள் . துறவறவியலில் அருளுடைமை , புலால் மறுத்தல் , தவம் , கூடாவொழுக்கம் , கள்ளாமை , வாய்மை , வெகுளாமை , இன்னா செய்யாமை , கொல்லாமை , நிலையாமை , துறவு , மெய்யுணர்தல் , அவாவறுத்தல் ஆகிய அதிகாரங்களுள்ளன . இவற்றையெல்லாம் துறவிகள் கண்டிப்பாகக் கடைபிடிக்கவேண்டும் . இந்த அறங்களையெல்லாம் இல்லறத்தானும் கடைபிடிக்கலாம் ;ஆனால் மிகவும் கடினம் . அது அவரவர் விருப்பம் .

சரி ! இப்போது குறளைப் பார்ப்போமா ?

குடம்பை தனித்தொழிய புள்பறந் தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு

இந்தக் குறளிலே உடம்புக்கும் ,உயிருக்கும் உள்ள நட்பைப்பற்றிப் பேசுகிறார் . உடம்பு இல்லையேல் உயிரில்லை ; உயிரில்லையேல் உடம்பு இல்லை .

உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவுமாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.

என்பது திருமூலரின் வாக்கல்லவா !

" ஐயா ! நிலையாமை என்றால் என்ன ? "

" இந்த உள்ளத்தில் தோன்றிய அனைத்தும் ஒருநாள் மறைந்தே தீரும்; பிறப்புண்டேல் இறப்புண்டு ; எதுவுமே நிலைத்து நிற்காது . இதுதான் நிலையாமை எனப்படும் .

இந்தக் குறளிலே நிலையாமையை வலியுறுத்துவதற்கு வள்ளுவர் ஓர் அழகான உவமையைக் கையாளுகிறார் . முட்டையை உடைத்துக்கொண்டு பறவை பறப்பதுபோல , ஒருநாள் இந்த உடம்பைவிட்டு உயிரானது பறந்துபோய்விடும் என்று சொல்கிறார் . " குடம்பை " என்றால் முட்டை என்று பொருள்.'

" ஐயா ! ஒரு சந்தேகம் கேட்கலாமா ? "

" கேள் "

" இந்த தமிழ் கைடில் ( Tamil Guide ) குடம்பை என்பதற்கு " பறவையின் கூடு " என்று போட்டுள்ளதய்யா !"

" தம்பி ! Guide எல்லாம் வகுப்பறைக்குள் கொண்டுவரக்கூடாது .அதை வாங்குவதும் தவறு ; ஆசிரியர்கள் கூறுவதைக் குறிப்பெடுத்துக்கொண்டு படித்தாலே போதுமானது . வியாபார நோக்கத்தில் அவசர அவசரமாக எழுதப்பட்ட Guide - ல் தவறுகள் ஏற்பட வாய்ப்புண்டு . அதைப் படிக்கவேண்டாம் "

" சரி ஐயா ! "

இந்தக் குறட்பாவில் வந்துள்ள " குடம்பை " என்னும் சொல் விரிக்க இடம் தருவது . சில உரையாசிரியர்கள் குடம்பை என்னும் சொல்லுக்கு " பறவையின் கூடு " என்று பொருள் கொண்டனர்.

உயிர் , பறவைக்கும்
பறவைக்கூடு , உடம்புக்கும்

உவமையாக கூறியிருந்தால் ஒரு குழப்பம் ஏற்பட வாய்ப்புண்டு .

பிரிந்த உயிர் மீண்டும் உடம்புக்குத் திரும்பாது ; ஆனால்
கூட்டைவிட்டு சென்ற பறவை, இரைதேடிவிட்டு , மாலையில் கூட்டிற்கு திரும்பிவிடும் . ஆனால் குடம்பை என்னும் சொல்லுக்கு முட்டை என்று பொருள் கொண்டால் , முட்டையைத் தனியே விட்டுவிட்டுப் பறந்துசென்ற  பறவை , மீண்டும் முட்டைக்குத் திரும்ப வாய்ப்பில்லை ; ஆகவே குடம்பை என்னும் சொல்லுக்கு " முட்டை ' என்று பொருள் கொள்வதே பொருத்தமாகும் . " என்று முடித்தார் ஆசிரியர்.

மாணவர்கள் அனைவரும் கைதட்டி மகிழ்ந்தனர் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக